Sunday, August 19, 2012

Resume - வேண்டா பத்து


சமீபத்தில் நண்பர் ஒருவர் "அண்ணே, ஸ்டீவ் ஜாப்ஸ் போயிட்டார்ண்ணே, அந்த வேலைக்கு என்னிய ரெக்கெமெண்டு பண்ணுங்கங்கண்ணேன்னு, ஆபிஸ்லயே ipadலாம் குடுக்கிறாய்ங்களாம்ன்னு ரொம்ப நச்சரித்துக்கொண்டிருந்தார்.சரி உங்க ரெஸ்யூமேவ அனுப்புங்கனுன்னு சொல்லி வைத்தேன். அவர் அனுப்பிய டாக்குமெண்டை திறந்து பார்த்தால் ஒரு சின்னப் பையனின் படம் ஒட்டி இருந்தது. கூப்பிட்டுக் கேட்டதில்,"ஹீ..ஹீ அது நாந்தாண்ணே..காலேஜ்ல படிக்கும் போது எடுத்தது, கைவசம் வேற பாஸ்போர்ட் சைஸ் இல்லை அதான்" என்றார். பல சந்தர்பங்களில் எனக்கு வரும் ரெஸுயுமேக்களில் நான் பார்க்கும் தவறுகள் இந்த ரகத்தில் தான் இருக்கின்றன. அவை தான் இந்த பதிவின் தூண்டுதலே. மொதல்ல ரெஸ்யூமேவில் வேண்டாத பத்தைப் பார்ப்போம்

 1. Resume. ரெஸ்யூமேவில் தேவையில்லாத முதல் விசயம் ரெஸ்யூமே. என்னடா இவன் குழப்பறானேன்னு பாக்கறீங்களா, நான் சொல்ல வந்தது Resume / Bio Data / Curriculam Vitae போன்ற தலைப்புகள். இது வேண்டாம் என்பதற்கு இரண்டு காரணங்கள். Resume க்கும் Curriculam Vitae க்கும் வித்தியாசம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இது பத்தி ஒரு தனி இடுகை எழுதலாம் - இந்த வித்தியாசம் தெரியாமல் தவறான தலைப்பு வைப்பதை விட வைக்காமலே இருக்கலாம். இரண்டாவது காரணம் - . லெட்டர் ஹெட் போன்று வடிவமைப்பதே தற்போதைய Trend. முதல் வரியில் முழுப் பெயரையும் அடுத்த வரியில் தொலைபேசி எண்ணையும் மின் மடல் முகவரியையும் குறிப்பிடுங்க, மறக்காம செண்டர் பண்ணிக்கோங்க. வீட்டின் முகவரியை போடுவது personal choice. இவற்றிற்கு கீழே ஒரு கோடு போடுங்க - இப்ப உங்க ரெஸ்யூமே ஒரு நிறுவனத்தின் லெட்டர் ஹெட் போன்று இருக்கும். முக்கியமா பெயர் முழுவதையும் Capital letterஇல் அடிக்காதீங்க.

 2. Objective : உலக அளவில் ரெஸ்யூமேக்களில் அதிக அளவில் காப்பி பேஸ்ட் செய்யப்படுவது அப்ஜெக்டிவ்தான். இது பெரும்பாலான நேரங்களில் ரெஸ்யூமேவின் சொந்தக் காரருக்கு செய்யும் உதவியை விட தொந்தரவே அதிகம். hard working, challenging environment, growth oriented, competitive enviorment போன்ற வெகு சில வார்த்தைகளை குலுக்கிப் போட்டு ஒரு வாக்கியத்தை உருவாக்கி அதுக்கு அப்ஜெக்டிவ்னு பேர் வச்சிடறாங்க.

  To work on future projects in a World-Class environment this nourishes the hard working and leadership qualities, and goal achievement in me.-

இது ஒரு ரெஸ்யூமேவில் நான் கண்ட அப்ஜெக்டிவ்.

இது மாதிரி ரெஸ்யூமேக்களைப் பார்க்கும் போது என் இண்டர்வியூவை இங்கிருந்தே ஆரம்பிப்பேன்

  World-Class environment வேணும்னு சொல்லியிருக்கீங்க, எங்களோடது ஒரு medium sized company இங்க அதெல்லாம் இருக்காது, இங்க எப்படி வேலை செய்வீங்க

 நீங்க hard working என்று சொல்லியிருக்கீங்க, எதன் அடிப்படையில் அப்படி சொன்னீங்க, விளக்குங்க

 உங்களோட leadership qualities க்கு practical examples சொல்லுங்க என்றெல்லாம் கேட்டால் ஒரு பதிலும் வராது. இப்படியெல்ல்லாம் அப்ஜெக்டிவ் எழுதறதுக்கு எழுதாமலே இருப்பது நலம்.

 விண்ணப்பிக்கும் வேலைக்கு மிகப் பொருத்தமான குறிக்கோள் உங்களுக்கு இருப்பின், அதை அழகாக விளக் Experience கலாம், உதாரணத்துக்கு Colgate Palmolive நிறுவனத்தில் Area sales Manager வேலைக்கு விண்ணப்பம் அனுப்பறீங்கன்னு வச்சிக்கலாம். எனது குறிக்கோள் FMCG சேல்ஸில் உயர்ந்த நிலையை அடைவது. குறிக்கோளை அடைய முதல் படியாக அதற்கான கல்வித்தகுதி பெற்றேன். பட்டப் படிப்புக்கு பின் MBA in Sales and Marketing முடித்தேன். களப்பணியாக XYZ என்ற சிறு நிறுவனத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக Senior sales representative ஆக பணிபுரிந்து வருகிறேன். இப்பொழுது உங்கள் நிறுவனத்தில் இந்த வேலையைப் பெற நான் என்னை முழுமையாக தயார் என நம்புகிறேன் என எழுதலாம். இதையும் Covering Letter இல் எழுதி ரெஸ்யூமேவை ரத்தினச் சுருக்கமாக வைக்கலாம்.

 3. Your Photo : ரெஸ்யூமேவில் Photo மாடல்களுக்கும் நடிகர்களுக்குமே உகந்தது  மற்றோருக்கு இல்லை. 
Your appearance has nothing to do with your ability to do the job, Your photo in resume comes across as naive and unprofessional.

4. Fancy Resume : போட்டோக்கள் மாடல்களுக்கு தேவைப்படுகிற மாதிரி Fancy Resume Designerகளுக்கு மட்டுமே தேவை. மற்றவர்கள் பொதுவான Format தான் உபயோகிக்கணும். Production Manager வேலைக்கு Artistic ரெஸ்யூமேவும் மருத்துவர் வேலைக்கு பல்வேறு நிறங்கள் கொண்ட ரெஸ்யூமேவும் அவர்களுடைய வாய்ப்பைக் குறைக்கும். ரெஸ்யூமேவில் உங்க படிப்பு, தகுதி,இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்க அழகிற்கு அல்ல.

 5. Subjective descriptions: Your resume is for experience and accomplishments only. It's not the place for subjective traits, like "great leadership skills" or "creative innovator." Smart employers ignore anything subjective that applicants write about themselves because self-assessments are wildly inaccurate, so your resume should stick to objective facts.

 6. Send a Resume and not a Novel : ரெஸ்யூமே என்பது 4-5 பக்கங்களில் எழுதப்படவேண்டியது. பக்கத்துக்கு ரெண்டு மார்க் போட்டாலும் 18 பக்கங்களுக்கு 36 மார்க் ஆச்சு, நிச்சயம் பாஸ் என்கிற எலிமெண்டரி ஸ்கூல் நினைப்பு இங்கு உதவாது. உண்மைத் தமிழனோட இடுகைகள் மாதிரி உங்க ரெஸ்யூமே இருந்தா அவர் வணங்கும் முருகன்தான் இறங்கி வந்து உங்களுக்கு வேலை கொடுக்கணும். சொல்ல வேண்டியதை சின்னதா சிறப்பா சொல்லுங்க. எந்த ரெஸ்யூமேவும் மூன்றாவது பக்கத்துக்கு மேல் படிக்கப் படுவதில்லை என்பதை நினைவில் கொள்க.

 உங்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருந்து உங்க ரெஸ்யூமே 5 பக்கங்களுக்கு மேல் போனால் ஐந்தாம் பக்கத்தின் இறுதியில் ”Past projects have been removed for brevity. Details available on request" என்று எழுதி ரெஸ்யூமேவை முடிச்சிடுங்க.

 7. Personal Information : இன்னமும் ரெஸ்யூமேக்களில் Father's name, Sex, Marital status, Present address, Permanent address, Date of Birth, Passport Number என்றெல்லாம் போட்டு அரை பக்கத்தை நிரப்புவதைக் காண்கிறேன். இவற்றின் தேவை நான் முதல் ரெஸ்யூமே எழுதத் தொடங்கும் முன்பே வழக்கொழிந்து விட்டது. இவற்றில் எதுவும் ஒரு Prospective Employer உங்களை Shortlist செய்ய உதவப் போவதில்லை, அதற்கு உதவாத எதுவும் ரெஸ்யூமேவில் இருக்கத் தேவையில்லை

 8. Hobbies : இதுவும் மேலே சொன்ன கேட்டகரியில்தான் வரும். உங்களுக்கு உதவாத எதுவும் ரெஸ்யூமேவில் இருக்கத் தேவையில்லை. Hobby க்கும் Pastimeக்கும் வித்தியாசம் தெரியாமல் watching TV, Listening to music, Playing Criket என்று ரொம்பவே மொக்கையா ஹாபிக்களை எழுவது எப்பத்தான் மாறுமோ தெரியல. மேலும் தற்போது பெரும்பான்மையோரின் பொழுது போக்கு, முழுநேர வேலை எல்லாமே Face Book, Twitter, Google Plus இன்ன பிற social networking site களில் மொக்கை போடுவதே - இதை எழுதினால் சத்தியமா வேலை கிடைக்காது


 9. References: வேலை தேடும் போது நூற்றுக்கணகான இடங்களுக்கு நம்ம ரெஸ்யூமேவை அனுப்பி வைப்போம், எல்லா இடங்களுக்கும் உங்க referenceகளின் தகவல்களை அனுப்பாதீங்க

 அ. வெகு சில நிறுவனங்கள் தவிர பெரும்பான்மையான நிறுவனங்கள் Selection Process இல் ஒரு சில கட்டங்கள் தாண்டும் வரை reference கேட்பதில்லை

ஆ. reference கொடுக்க சம்மதித்தவர்களும் தினமும் பத்து போன்கால் வந்தா கடுப்பாகிடுவாங்க

இ. HR placment agencies க்கு தேவையில்லாமல் reference அனுப்பாதீங்க, அவங்க உங்க referenceகளை கூப்பிட்டு வேலைமாற விரும்பறீங்களான்னு தொந்தரவு பண்ணுவாங்க

  "References are available upon request." 
You don't need to say that you'll provide references if asked, it goes without saying. You're not causing any harm by including an out-of-fashion statement, but it takes up space you could use for something else. 

10. Declaration Statement : இன்னொரு very outdated விசயம் கடைசியில் கொடுக்கும் வாக்குமூலம்.

All stated above are true to my knowledgeனு சொல்ல இது நீதிமன்றத்தில் கொடுக்கும் வாக்குமூலமல்ல.

இவை எல்லாத்தையும் எடுத்துட்டா ரெஸ்யூமேல என்னதான் எழுதறதுன்னு கேக்கறீங்களா? ரெஸ்யூமேவில் இருக்க வேண்டிய பத்து ஓரிரு நாட்களில்....

Sunday, February 19, 2012

தப்புத் தப்பாய் ஒரு தலையங்கம் - அமெரிக்க NRI களின் மீது தினமணியின் கொலவெறி...

ஜெயலலிதா சசிகலா நட்பு, ஸ்டாலின் - அழகிரி ஊடல், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் இதெல்லாம் தமிழக அச்சுத் துறை ஊடகங்களின் Ever Green Subjects. என்னவோ இவர்களின் நிருபர்கள் கூடவே இருந்து பாத்தா மாதிரி எழுதுவாங்க. இந்த வகையறாவில் இன்னொரு சப்ஜெக்ட் அமெரிக்கா. விரும்பினாலும் வெறுத்தாலும் கருணாநிதியை தவிர்த்து விட்டு தமிழக அரசியல் குறித்து பேச முடியாது, அதே மாதிரி அமெரிக்காவைப் பற்றி குறிப்பிடாமல் சமகால உலக அரசியல் / பொருளாதாரம் குறித்து பேச முடியாது. அமெரிக்கா பலருக்கு கனவு தேசம், நம் கைக்கு எட்டாத அந்த பழம் புளிக்கும் என்று சொல்வதில் ஊடகங்களுக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி.

Ground Reality பத்தி எதுவுமே தெரிந்து கொள்ளாமல், மேம்போக்காக எழுதப் பட்ட கட்டுரைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். அமெரிக்காவில் பாதி பேர் வீடு கடனில் மூழ்கிப் போய் கார்களில் வாழ்வதாகவும், கார் கடனை கட்ட

முடியாமல் காரை நடுரோட்டில் விட்டுச் செல்வதாகவும் எழுதி கிட்டத்தட்ட அந்நாட்டை Write Off செய்து வருகின்றன இந்திய குறிப்பாக தமிழக ஊடகங்கள்.

இது போன்ற ஒரு கட்டுரையை தினமணி போன்ற பொறுப்புள்ள பத்திரிக்கை அதுவும் தன் தலையங்கத்திலேயே வெளியிட்டு இருக்கிறது.

மிக மிக மேம்போக்காக எழுதிய அக்கட்டுரையை இங்கு காணலாம்.


இக்கட்டுரையில் மிக அதிக அளவில் பேசப் பட்டவை அமெரிக்காவில் வேலை வாய்ப்பு நிலவரம், H1B விசா மற்றும் அமெரிக்காவில் வேலை செய்து வரும் இந்தியர்களின் நிலைமை. இவற்றைப் பற்றி விரிவாக எழுதினால்
ஒரு நெடுந்தொடர் அளவுக்கு வந்துவிடும் என்பதால் ஒரு சில விவரங்களை மட்டும் சொல்லிவிட்டு கட்டுரையை Point -by - Point அலசலாம்.

1. அமெரிக்கா பொருளாதார மந்த நிலையிலிருந்து மெள்ள மீண்டு வந்து கொண்டு இருக்கிறது. வேலையில்லாதோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நிலையாக நின்று பின்னர் படிப்படியாகக் குறைந்து சனவரி 2012ல் 8.3% ஆக இருக்கிறது. கடைசியாக இதே அளவு இருந்தது Feb 2009ல். அதாவது போக வேண்டிய தூரம் இன்னும் இருந்தாலும் மூன்றாண்டுகளில் குறைந்த பட்ச வேலையில்லாத்திண்டாட்டம் இன்று -
இதுதான் உண்மையான நிலைமை. இதற்கான தரவு

2. அமெரிக்காவை Write off செய்யும் அளவுக்கு மோசமாக இருந்த பொருளாதார மந்த நிலையிலும் ஒவ்வொரு வருசமும் (2009, 2010, 2011) H1B Quota முழுவதுமாக வழங்கப் பட்டது.

3. கட்டுரையில் சொல்லியதற்கு நேர் மாறாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் க்ரீன் கார்ட் கடந்த ஆறு மாதங்களாக மிக வேகமாக நகர்ந்து வருகிறது. செப்டெம்பர் 2011 ல் ஏப்ரல் 2007 இல் நின்ற EB2 க்யூ இன்று மே 2010ல் நிற்கிறது. க்ரீன் கார்ட், EB1, 2, 3 பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சா தினமணியின் ஒரு நாள் பேப்பர் நிரம்பும் அளவுக்கு பேசலாம். விசாவில் இருக்கும் இந்தியர்களை துரத்தும் எண்ணமெல்லாம் இல்லை, அப்படி இருந்திருந்தால் 6 மாசத்தில் 3 வருட க்யூவை காலி செய்திருக்க மாட்டார்கள்.


இப்போ கட்டுரையில் சொல்லியிருப்பவற்றை பாக்கலாம்

1. //இந்தியப் பொருளாதார மேதையும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென்னுக்கு அமெரிக்க விருது வழங்கிப் பாராட்டிப் பேசும்போது மண்ணின் மைந்தருக்கு முன்னுரிமை என்பதை மீண்டும் தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்.//

நானறிந்தவரையில் ஒபாமா அன்று அவ்வாறு கூறவில்லை. கட்டுரை ஆசிரியருக்கு அமெரிக்க நிலவரம்தான் தெரியாது, அடிப்படை ஆங்கிலம் கூடவா தெரியாது? இதோ அந்நிகழ்ச்சியில் ஒபாமா பேசியது இதுதான் - இதைப் படித்து விட்டு சொல்லுங்கப்பூ, அப்படி ஏதாவது அர்த்தம் வருதான்னு

///You create new possibilities for all of us. And that's a special trait. And it assigns you a special task. Because in moments of calm, as in

moments of crisis; in times of triumph, as in times of tragedy: you help guide our growth as a people. The true power of the arts and the

humanities is that you speak to everyone. There is not one of us here who hasn’t had their beliefs challenged by a writer’s eloquence; or their

knowledge deepened by a historian’s insights; or their sagging spirits lifted by a singer’s voice. Those are some of the most endearing and memorable moments in our lives. Equal to the impact you have on each of us every day as individuals is the impact you have on us as a society. And we are told we're divided as a

people, and then suddenly the arts have this power to bring us together and speak to our common condition.////

நான் தினமணி தலையங்கக் கட்டுரை ஆசிரியர் மாதிரி போகிற போக்கில் அடிச்சிவிட்டதாக நீங்க நினைக்கக் கூடாதில்லையா, இதோ வெள்ளை மாளிகையின் அதிகாரப் பூர்வ செய்தி

http://www.whitehouse.gov/blog/2012/02/13/president-obama-awards-2011-national-medals-arts-and-humanities-white-house

2. //அமெரிக்காவில், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதலீட்டுச் சிக்கலில் உள்ள நிறுவனங்களை மீட்கும் திட்டம் கொண்டு வந்துள்ள ஒபாமா, இதை ஒரு நிபந்தனையாகவே அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசின் நிதியுதவி, சலுகையைப் பெறும் நிறுவனங்கள் அமெரிக்க மண்ணில் அன்னியர்களுக்கு வழங்கப்படும் "தாற்காலிகப் பணி அனுமதி'யான எச்-1பி விசா பெற்றவர்களைப் பணிநியமனம் செய்யக்கூடாது என்பது நிபந்தனை. //

இந்த வரிகள் என்னை இக்கட்டுரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்டு கிடப்பில் போடப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது. ஏனெனில்
Fannie Mae & Freddie mac நிறுவனங்களுக்கென தனியே வந்த பெயில் அவுட் 183 பில்லியன் டாலர். இவை இரண்டும் வீட்டுக் கடன் கொடுத்துவிட்டு சிக்கலில் இருப்பவை, இவை இதுவரை 30 பில்லியன் டாலரை
திருப்பித் தந்துள்ளன

924 இதர நிறுவனங்களுக்கென வழங்கப் பட்ட பெயில் அவுட் தொகை 413 பில்லியன்
288 நிறுவனங்கள் வாங்கிய தொகையை திருப்பி தந்து விட்டன. 31 நிறுவனங்கள் முழுமையாக திருப்பா விட்டாலும் ஓரளுக்கு திருப்பித் தந்து விட்டன
இதுவரை 279 பில்லியன் டாலர் அளவுக்கு அசலும் 40 பில்லியன் டாலர் அளவுக்கு வட்டியும் (Divident, Interest, warrant etc) திருப்பித் தரப்பட்டுள்ளது.

இவ்வளவு நடந்தபின்னர், என்னவோ இப்பத்தான் ஒபாமா பணம் கொடுத்தா மாதிரியும் இன்னமும் இந்நிறுவனங்கள் ஒபாமாவின் கட்டுப் பாட்டில் இருப்பதுபோலவும் தேவையில்லாத பில்டப் எதுக்கு???

பணம் கொடுத்த போது ஒபாமா நிபந்தனைகள் விதித்தது உண்மைதான். வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10% ஆக இருக்க்கும் போது அவர் அப்படித்தான் பேச வேண்டும். அமெரிக்கரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அந்த இடத்துக்கு ஒரு H1B visaவில் இருப்பவரை வைக்கக் கூடாது, H1B visaவில் இருப்பவரை பணியில் அமர்த்தக் கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப் பட்டன. இதுவரைதான் உலகுக்குத் தெரியும். உண்மை நிலவரம் என்ன தெரியுமா?

முதல் நிபந்தனைக்குக் காரணம் அதிக சம்பள அமெரிக்கரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு குறைவான சம்பளம் கொடுக்க ஆசைப்பட்டு விசாவில் இருப்பரை அமர்த்தக் கூடாதென்பதே. இது பெரும்பாலும் இந்தியர்களுக்குப் பொருந்தாது - ஏனெனில் ஒரு வேலைக்கு அமெரிக்கர் கேட்கும் சம்பளத்தை விட நம்மாள் கேட்கும் சம்பளம் அதிகம்

ரெண்டாவது - இந்த நிபந்தனை பணியமர்த்தல் அதாவது Employment க்குத்தான் பொருந்தும். இந்தியர்கள் பெரும்பாலும் Contracting அடிப்படையில்தான் இந்நிறுவனங்களில் வேலை செய்வார்கள், அவர்களுக்கு
பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படவில்லை (நெறய Contract கள் Terminate செய்யப் பட்டன - அவர்களில் பலருக்கு வேறு Contract கிடைத்தது). மேலும் ஒபாமா உதவி பெறும் நிறுவனங்கள் அங்கே இருந்த H1B மக்களை அனுப்பிவிட்டு அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்கச் சொல்லவில்லை. 10% அமெரிக்கர்கள் வேலையின்றி தவித்த போதும் பெரும்பாலான இந்தியர்கள் வேலையில் இருந்தார்கள்.

Bank of America உதவி பெற்ற ஒரு நிறுவனம். இங்கு வேலையை இழந்த ஒரு அமெரிக்கரையும் எனக்குத் தெரியும், கடந்த நான்காண்டுகளாக Contracting இல் இருந்து வரும் ஒரு H1B இந்தியரையும் எனக்குத் தெரியும்.

பணத்தைக் கொடுத்து விட்டு அரசாங்கம் கம்பெனியை தன் இஷ்டப் படி நடத்த விரும்புகிறது என்று குறை கூறியே பெரும்பாலான நிறுவனங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்தன.

3. //இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1.95 லட்சமாக இருந்தது. இப்போது, வெறும் 65,000 பேருக்கு மட்டுமே தாற்காலிகப் பணி அனுமதி என்று மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது//

கொய்யால.... இது பரணிலிருந்து தூசி தட்டி எடுத்த கட்டுரைதான் போலிருக்கு. 1,95,000 H1B விசா கடேசியா கொடுத்தது 2003ல்.
1990 முதல் 1998 வரை இருந்த quota 65,000 ஆயிரம்தான்
1999 & 2000 ஆம் ஆண்டுகளில் 115000 விசாக்களும் 2001 முதல் 2003 வரை 1,95,000 விசாக்களும் வழங்கப்பட்டன, வேலைகளுக்கு ஆட்கள் தேவைப் பட்ட காரணத்தால் AC21 ( American Competitiveness in the Twenty-first century act ) என்ற விசேஷ சட்டம் இயற்றப் பட்டு அதிக விசாக்கள் வழங்கப் பட்டன. 2004 முதல் மறுபடியும் பழைய எண்ணிக்கையான 65,000 க்கு விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப் பட்டன.

H1B தவிர ஆயிரக்கணக்கான இந்தியர்கள் L Visa (Intra company transfer - Ex: Infosys India to Infosys US), F Visa (Students Visa) , Nurse களுக்கான விசா, R visa (கோவில் அர்ச்சகர்கள் - Religious workers) என்று பல விசாக்களில் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். மேலும் பலர் ஒவ்வொரு வருடமும் வந்து கொண்டிருக்கின்றனர்

வருசத்துக்கு 20,000 H1B விசாக்கள் அமெரிக்காவில் மேல் படிப்பு படிக்க வந்தவர்களுக்கென தனியே வழங்கப் படுகிறது, அதுலயும் அதிகம் ஆட்டையைப் போடுவது நம்மாட்கள்தான்

உண்மை இப்படி இருக்கையில், தினமணியின் கட்டுரை ஒபாமா இந்தியர்களை விரட்டியடிக்க விசாக்களின் எண்ணிக்கையை குறைத்தது போல படம் போட்டிருப்பது எதுக்காகன்னு தெரியல.

4. // ஒரு லட்சம் பேர் மாணவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்தவும், வாழ்க்கைச் செலவுக்காகவும் பணியாற்றுகிறார்கள். தற்போது அமெரிக்கா இந்தப் புதிய சட்டத்தின் மூலம், அந்த வாய்ப்புக்குத்

தடை போட்டுள்ளது. ஆகவே, இனி அமெரிக்காவுக்குப் போய், வேலை செய்துகொண்டே படிக்கலாம் என்பவர்களின் கனவு இனி பகல்கனவுதான்.
புதிதாக மாணவர்கள் அங்கே செல்வது குறையும் என்றாலும், ஏற்கெனவே இத்தகைய பகுதிநேர வேலையை நம்பி அங்கே சென்ற மாணவர்களின் கதி என்னவாகும்? அதனால், ஏற்கெனவே அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும்

மாணவர்களுக்கு மட்டுமாவது அவர்கள் தமது படிப்பை முடிக்கும் வரை, பணியாற்றவும், பணி வழங்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்குக் கோரிக்கை வைக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது.//

கட்டுரையில் இருப்பவற்றில் மிகத் தவறான தகவல் இதுதான். மேலே சொன்னவற்றில் பல விசயங்கள் மேம்போக்காகவும், திரித்துக் கூறப் பட்டவை, இந்த பாயிண்ட் அடிப்படையிலேயே தவறு.

M.S அல்லது வேறு மேல் படிப்பு படிக்க வரும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மட்டுமே வாரத்துக்கு 20 மணி நேரம் வேலை செய்யலாம். கடுமையான சட்டதிட்டத்துக்கு உட்பட்டு வெகு அரிதாக சிலர் வெளியில் வேலை பார்க்கலாம்.
அந்த கண்டிஷன்கள் இங்கு தேவையில்லை என நினைக்கிறேன். மேலதிக தகவல் வேண்டுவோம் இங்கு தெரிந்து கொள்ளலாம்

அமெரிக்காவில் மேல் படிப்பு படித்த வெளி நாட்டவரை அமெரிக்காவிலேயே (அமெரிக்காவுக்கே என்று பொருள் கொள்க) வேலை செய்ய வைக்க அந்நாடு விரும்புகிறது. ஒபாமா ஆட்சியில்தான் M.S முடித்த மாணவர்களுகான OPT (Optional Practical Training)12 மாதங்களிலிருந்து 29 மாசமாக உயர்த்தப்பட்டது. இதிலும் அதிகம் பயனடைவது இந்தியர்களே. பெரும்பாலான மாணவர்கள் OPT யில் வேலை தேடிக்கொண்டு பின்னர் H1B விசா வாங்கி இங்கேயே செட்டில் ஆகின்றனர். ஒபாமா ஆட்சியில் இப்படியாக சலுகைகள் அறிவிக்கப் பட்டனவே தவிர மாணவர்களுக்கு(ம்) எந்த வித புதிய தடையும் விதிக்கப் படவில்லை.

இங்கு முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயம், மாணவர்களுக்கு Work Visa கிடையவே கிடையாது, நம்மூர் மாணவர்கள் வெளியில் இந்தியர்களில் நிறுவனங்களிலும் உணவகங்களிலும் Cash Job செய்கின்றனர்.இதில் எதுவும் மாறி விடவில்லை. கொய்யால சுத்தமா அடிப்படை அறிவு / ஞானம் இல்லாமல் கட்டுரை எழுதிவிட்டு பயபுள்ள இந்திய அரசுக்குள்ள கடமையைப் பத்தியெல்லாம் பேசுது!!!

கவிதைக்குப் பொய் அழகு என்றார் வைரமுத்து, அது கட்டுரைக்கும் பொருந்தும் என தினமணி நினைக்கிறது போல இருக்கு.

அமெரிக்கா உலகில் வாழத்தக்க இடங்களில் முதன்மையானதல்ல, சொல்லப் போனால் முதல் பத்து நாடுகளில் அமெரிக்கா இருக்குமா என்பதே சந்தேகம்தான். அமெரிக்காவின் மீது வைக்க விமர்சனங்கள பலவுண்டு, என் போன்றோரைக் கேட்டால் நாங்க எழுதிக் கொடுத்துட்டுப் போறோம், அதை விட்டுட்டு தினமணிக்கு இந்த பொழப்பு தேவைதானா?

Wednesday, February 8, 2012

நான் சின்னப் பையனாக இருந்த போது

நண்பர் ஈரோடு கதிர் எழுதிய இந்த இடுகையே என் இடுகைக்கு இன்ஸ்பிரேஷன்

1. போன் மணி அடிச்சா பேச வெளியிலிருந்து உள்ளே ஓடுவார்கள், இப்போ சிக்னல் கிடைக்கலேன்னு போனை எடுத்துக்கிட்டு வெளியே ஓடி வர்றாங்க

2. போன் வாங்க, போன் கனெக்‌ஷன் வாங்க ஆபீஸுக்கு நடையா நடக்கணும், கீரைக் கட்டு ஃப்ரெஷா வீட்டுக்கு வந்து தருவாங்க, இப்ப போனையும் போன் கனெக்‌ஷனையும் தெருவில் வைத்து விக்கறாங்க, கீரைக் கட்டை ஏசி வச்ச கடைக்குப் போயி வாங்கறாங்க

3. (தரமான) கல்வி இலவசம், கால்குலேட்டர் விலையே எங்க லெவலுக்கு அதிகம், இன்னிக்கு கம்ப்யூட்டர் கொள்ளை மலிவு, கல்விக் கட்டணமோ உச்சாணிக் கொம்பில்

4. பள்ளிகள் குழந்தைகளுக்கு ABCD சொல்லித்தருவது தங்களின் கடமை என நம்பின

5. அப்பாக்கள் யாரும் ஜிம்முக்கு போனதில்லை, இருப்பினும் குண்டாக இருந்ததில்லை

6. அலுவலகம் / பள்ளியிலிருந்து வந்த பின் டி வி பார்க்க நெறய நேரமிருந்தது, ஆனா பாக்க ரெண்டே ரெண்டு சானல்கள்தான் இருந்தன

7. Star Birthday வுக்கு கோவிலில் அர்ச்சனையும் English Birth Day வுக்கு வகுப்புத் தோழர்களுக்கு 50 காசு Eclairs உம் தான் அதிக பட்ச பிறந்த நாள் கொண்டாட்டம்

8. தீபாவளிக்கு சட்டைப் பையில் காசெடுத்துப் போயி பை நிறைய பட்டாசு வாங்கி வருவோம்

9. ஆங்கிலத்தில் அதிகம் உபயோகிக்கப் பட்ட எழுத்தாக E இருந்தது

10. Apple உம் Mouse உம் முறையே பழம் மற்றும் ஒரு உயிரினமாக அறியப் பட்டிருந்தன

11. இன்சூரன்ஸ் பாலிசிகள் முதலீடுகள் என்ற பெயரில் ஏமாற்றி விற்கப் படவில்லை

12. கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுக்கும் “துப்பார்க்கு துப்பாய” குறள் சொல்லத் தெரிந்திருந்தது

13. ரெண்டு ரூபாய் ஐம்பது காசுகளுக்கு RMS பந்தும் 25 ரூபாய்க்கு Vishwas பேட்டும் தான் விலை மதிப்பு மிக்க விளையாட்டுப் பொருட்கள்

14. டபுள் கேசட் டேப் ரெக்கார்டர்தான் Most Sophisticated Audio device

15. நண்பர்கள் வீட்டுக்கு போவதற்கு முன் போன் பண்ணி நீ ஃப்ரியா இருக்கியா இப்போ வரலாமான்னு கேட்டதேயில்லை

Monday, October 17, 2011

கலைச் சேவை

2010ம் ஆண்டின் வசந்த காலத்தில் ஒரு அழகிய மாலைப் பொழுது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்து முகம் கழுவி ஜிம்முக்கு செல்ல எத்தனித்த போது அலறியது அலைபேசி. எடுத்துப் பேசிக் கொண்டே ஜிம்மை நோக்கி நடந்தேன். நான் நியூ ஜெர்சியிலிருந்து இளா பேசறேங்க, "சீமாச்சு" வாசன் நம்பர் குடுத்தார் என்றது அந்தப் பக்கக் குரல். சிலரை முதல் முறை பார்க்கும் போதே காரணம் ஏதுமின்றி பிடித்துப் போகும், இளாவுடன் முதல் முறை பேசினாலே
அவரைப் பிடித்துப் போகும் - அப்படிப்பட்ட நட்பான பேச்சு அவருடையது. நட்பு கொள்ளத் தூண்டியது நண்பர்களானோம்.

நான் வேலை செய்யும் நிறுவனத்தில் அவர் சேர்ந்ததும்,அதுக்காக பாஸ்டன் மாநகருக்கு மாறி வந்ததும்,பின்னர் நாங்களிருவரும் ஒரே குடியிருப்பில் இருப்பதும்,எங்களுக்கு குழந்தை பிறந்த போது Support சிஸ்டத்தில் அவர் முக்கியமானவராக இருந்ததும் வரலாறு.

அன்று மட்டும் அந்த போன் கால் வராமல் இருந்திருந்தால், தமிழ்த் திரையுலகம் ஒரு நல்ல கலைஞனை அடையாளம் காணாமலே போயிருக்கும் - இது எனக்கே ரொம்ப ஓவரா இருக்கு, எனவே நேர மேட்டருக்குப் போயிடுவோம்.


ஒரு நாள் இளா போன் பண்ணி ஷார்ட் ஃபிலிம் ஒண்ணு பண்றோம் நடிக்கிறீங்களா என்றார். என்ன விளையாடறீங்களா இளா, எனக்கு நடிக்கவெல்லாம் வராது என்றேன். விடாக் கண்டனாக அவரோ யார் யாரோ நடிக்கறாங்க, நீங்க ஏன் நடிக்கக் கூடாது மேலும் நீங்க பண்ணப் போறது "சார் போஸ்ட்" அளவுக்கு சின்ன ரோல்தான் என்றெல்லாம் சொல்லி சம்மதிக்க வைத்து விட்டார்.

ஒன் லைனை மெருகேத்தினா திரைக் கதை வரணும், எங்க விசயத்தில் வேற கதை வந்தது. மொதல்ல நாங்க பேசின சப்ஜெக்ட்டை விட இது கேட்சியா இருந்ததால் இதையே முடிவு பண்ணோம். எங்களுக்குள் இருந்த புரிந்துணர்வு ரொம்ப உதவியா இருந்தது. இந்த டயலாக் நல்லா இல்லை நான் பேசமாட்டேனெல்லாம் எங்க டைரடக்கர்கிட்ட சொல்லலாம் - அவ்ளோ நல்லவர் அவர்.

இந்த குறும்படம் எங்களுக்கு முதலிரவு மாதிரி - பங்கேற்று இருக்கும் மூவருக்கும் (இளா, நான் மற்றும் ஜெயவேலன்) இதுதான் முதல் அனுபவம். எனவே பிழைகளை பொருத்தருள்க, அடுத்த படத்தில் பிழைகள் வெளியில தெரியாத மாதிரி பாத்துக்கறோம்.

படம் எடுக்க முடிவு பண்ண நாளிலிருந்து ஊண் உறக்கம் இல்லாமல் படத்தைப் பத்தியே யோசித்து, பேசி,கதா பாத்திரமாகவே மாறி, படம் முடிவதற்குள் பத்து கிலோ உடல் எடை குறைந்து - இப்படியெல்லாம் சொல்லணும்னு ஆசைதான் ஆனா விளையாட்டா பேசி, விளையாட்டா எடுத்த படம் இதோ உங்க பார்வைக்கு.




படத்தைப் பார்த்தாச்சா? பாராட்ட நினைப்பவர்கள் எல்லாம் பின்னூட்டத்தில் பாராட்டலாம், திட்டணும்னு நெனச்சா என்னையும் இளாவையும் கோத்து விட்ட "சீமாச்சு" வாசனையோ என்னையெல்லாம் நடிக்க வைக்கலாம்னு நெனச்சஇளாவையோ தாராளமா எவ்வளவு வேணா திட்டலாம். ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க தப்பாவே எடுத்துக்க மாட்டாங்க. இதெல்லாம் போதாது காரி துப்பியே ஆகணும்னு நெனைக்கறவங்க வசதிக்காக:



வேறு எந்த பேனரிலும் ஒரு வருஷத்துக்கு நடிக்கக் கூடாதுன்னு டைரடக்கர் கட்டளை. எனவே காலேஜ் சப்ஜெக்ட் ஹீரோ, அமெரிக்க மாப்பிள்ளை போன்ற எந்த ரோல்களையும் ஒத்துக் கொள்ள முடியாத கையறு நிலையில் இருக்கேன். நாந்தான் நடிக்கணும் இல்லைனா படமே எடுக்க மாட்டேன்னு யாரும் அடம் பிடிக்க வேண்டாம், என்னால தமிழ்த் திரையுலகம் ஒரு வருடம் ஸ்தம்பித்துப் போவதை நான் அனுமதிக்க முடியாது.. நீங்க கல்லை எடுக்கறதுக்கு முன்ன நான் அடுத்த ஷூட்டிங்குக்கு ஜூட்...

Sunday, August 21, 2011

தாய்மை தானம்

வியாழக் கிழமை சாயந்திரம் நாலு மணிக்கு அலுவலகத்தில் மும்முமராய் வேலை செஞ்சிக்கிட்டு இருந்த போது (சொன்னா நம்பணும், சிரிக்கப் படாது), ”Wife Calling" என்றது கைப்பேசி. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவியா? கட் ஆஃப் டையத்துக்கு முன்னாடி கொரியர் அனுப்பனும், நாளைக்குள்ள போய்ச் சேரலேன்னா சனி ஞாயிறு கொரியர் ஆபீஸ்ல தங்கிடும். யாருக்கும் உபயோகம் இல்லாமல் போயிடும், பட்ட கஷ்டம் வீண் என்று பாடம் நடத்தப் பட்டது.

ஆபிஸ்லேருந்து வீட்டுக்குப் போக பத்து நிமிஷம், பார்சல் எடுத்துக்க ஒரு அஞ்சு நிமிஷம் வீட்லேருந்து ஒரு கொரியர் ஆபிஸ் ஒரு அஞ்சு நிமிஷம் எப்படியும் ஒரு இருபது நிமிசத்தில் போயிடலாம் இன்னும் நெறய நேரமிருக்குன்னு கணக்கு போட்டது கார் டிரைவர் மனசு.மவனே இதுல ஏதாச்சும் மிஸ் ஆகி பல்பு வாங்கினா ஆப்பு பலமா இருக்கும்டி என்று எச்சரித்தது “ப்ராக்டிகல் புருஷன்” மனசு. ரெண்டாவது மனசு ஜெயித்ததுன்னு தனியா வேற சொல்லணுமாக்கும். உடனே Fedex ஆபீஸுக்கு போன் பண்ணி cut off time என்னன்னு கேட்டேன், ஆறரை மணி என்றது அந்த முனையில் இருந்த வெள்ளையம்மா. சீக்கிரமா கொண்டாந்தா சீக்கிரமா அனுப்பிடுவீங்களான்னு கேணத்தனமா கேட்டேன். முழு கண்டெய்னர் அளவுக்கு பொருள் இருந்தாத்தான் தனி ஷிப்மெண்ட்னு நக்கலா விளக்கமான்னு புரிஞ்சிக்க முடியாத ஒரு தொனியில் பதில் வந்தது. “நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு”ன்னு சொல்லிட்டு ஆபிஸ் வேலைகளை முடிச்சு அஞ்சு மணிக்கு கெளம்பி வீட்டுக்குப் போனா பார்சல் தயாராகலை. ஏன்னு கேட்டதுக்கு தங்கமணி, உன்னைய நம்பி நான் பேக் பண்ணி வச்சிட்டு உக்காந்திருந்தா நீ அன்னிக்குத்தான் ஆணி அதிகம்னு சீன் போட்டு லேட்டா வருவ , என்னிக்கு நான் தயாரா இல்லையோ அன்னிக்குத்தான் நீ சரியான நேரத்துக்கு வருவ, அதனாலதான் அதை ஃபிரீசர்லேந்து எடுக்கலன்னு சொன்னா. அரக்க பறக்க ஃப்ரீசர் பேக்கை எடுத்து பேக் பண்ணி, பிரிபெய்டு லேபில் ஒட்டி பார்சலை எடுத்துக்கிட்டு ஓடினேன்.

Fedex ஆபிஸ் போன பொது மணி ஆறு. கவுண்டரில் இருந்த உயர்ந்த மனிதனிடம் இந்த பார்சல் நாளைக்கு கண்டிப்பா போயிடுமா அதில் உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா இப்பவே சொல்லிடு, இப்ப போயிட்டு திங்கக் கிழமை திரும்ப வர்றேன்னு சொன்னேன். Over Night Shipping கண்டிப்பா நாளைக்குப் போயிடும், ஆமா எதுக்கு இவ்வளவு கேக்கறே, அப்படி அதுல என்னதான் இருக்கு தங்கம் அல்லது ஏதாவது விலை உயர்ந்த பொருள் அனுப்பறியான்னு கேட்டான். அதுக்கு நான் இதுக்குள்ள இருப்பதுக்கு விலையே நிர்ணயம் பண்ண முடியாது, தங்ககத்தை விலை கொடுத்து வாங்கிக்கலாம் இதுக்குள்ள இருப்பதை நீயோ நானோ என்ன பண்ணாலும் உருவாக்க முடியாது என்றேன். Hmm, what is so precious 'bout it என்று என்று கேட்டுக்கொண்டே பார்சலின் மீது இருந்த National Milk Bank பேரைப் பார்த்த அவர் ஒ உள்ளே தாய்ப்பால் இருக்கா? இப்ப புரியுது உன் அக்கரைக்குக் காரணம் என்றார். உன் மனைவிக்குத்தான் எவ்வளவு தாராள குணம் அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெறித்துவிடு, தாய்ப்பாலை தானம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை, கிடைப்பவர்கள் எல்லோரும் தானம் செய்வதில்லை என்றார்.

அதுவரை இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டாத எனக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் பெருமை பிடிபடலை. ஆம் அந்த பார்சலில் இருந்தது 250 Ounce கிட்டத்தட்ட 7.5 லிட்டர் தாய்ப்பால். அது ஒரு பிறந்த குழந்தைக்கு இரண்டு வாரங்களுக்கான உணவு. தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி இம்சை அரசி இங்கே எழுதியிருக்கிறார்.பிறந்து ஆறு மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பெறுகின்றன என பல மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. குழந்தை பெற்ற தாய்மார்களில் பலருக்கு தேவையான அளவுக்கு பால் சுரப்பதில்லை, அதில் ஒரு சில குழந்தைகளின் பசியை என் மனைவி போக்கியிருக்கிறாள், அதை கொண்டு சேர்த்த புண்ணியத்தை நான் கட்டிகொண்டேன். பகிர்ந்தளிக்கும் அளவுக்கு வழங்கிய கடவுளுக்கு நன்றியையும, பகிர்ந்த என் மனைவிக்குப் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இது கண்டிப்பா தம்பட்டம் அடிக்க அல்ல. ரத்த தானம், கண்தானம், உறுப்பு தானம் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும், பலர் செய்தும் வருகிறோம். தாய்ப்பால் தானம் பற்றிய அறிதல் மிகக் குறைவு, அதற்காகவே இப்பதிவு. இதைப் படிக்கும் யாரேனும் ஒருவர் இன்னொரு தாய் தன்னிடம் உபரியாக இருக்கும் தாய்ப்பாலை தானம் செய்யத் தூண்டினால் அதுவே போதும்.

இதுக்காக என் மனைவி, National Milk Bank இடம் கேட்டது எங்க மகள் பெயரில் ஒரு ThankYou Note. தனக்கு மட்டுமே உரித்தான சொத்தை அவள் சக குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறாள், இது அவளுக்கு இன்று புரியாது. விவரம் புரியும் போது விளக்கி இந்த ThankYou Note காட்ட எண்ணம். "சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப் படுத்திப் பாக்கறதுதான்" இதை எங்க மகளின் மனதில் விதைக்க எண்ணியுள்ளோம்,
நீ பிறந்ததிலிருந்தே உனக்கானதை பகிர்ந்தவள் என்று சொல்லி புரியவைக்க இது உதவியா இருக்கும்.

அமெரிக்காவில் இதை National Milk Bank என்ற சேவை நிறுவனம் செய்து வருகிறது (www.nationalmilkbank.org). நீங்க தயாரா இருந்தாலும் அவர்கள் உடனே பெற்றுக் கொள்வதில்லை, முதலில் தாயின் ரத்தத்தைப் பரிசோதனை செய்து பாக்கறாங்க, பின்னர் தாயின் மருத்துவரிடமும் குழந்தையின் மருத்துவரிடமும் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று அவங்களுக்கு அனுப்பனும். அப்புறம்தான் ஃப்ரீசர் பேக்கை அனுப்புவாங்க. குறிப்பிட்ட அளவு பால் சேர்ந்ததும் அவங்க செலவில் கொரியர் அனுப்பிடலாம். யாரிடமிருந்து பெறப்பட்டது யார் யாருக்கு வழங்கப் பட்டது போன்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப் படுகின்றன.

வாய்ப்பும், விருப்பமும் இருப்பவர்கள் உபரி தாய்ப்பாலை தானமாக வழங்கலாம், வாய்ப்பில்லாதவர்கள் இந்நிறுவனத்துக்குப் பொருளதவி வழங்கலாமே !!!

Saturday, July 2, 2011

அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சு?

நண்பர் இளா கொசுத்தொல்லைன்னு ஒரு இடுகை போட்டிருந்தார். அதில் NRI மக்களை இந்தியா பார்க்கும் விதத்தில் இருக்கும் மாற்றங்களை சொல்லியிருந்தார். அதே மாதிரி அமெரிக்க வாழ் NRI மக்கள் எப்படி மாறிப் போகிறார்கள் என்று ஓர் இடுகை.

மொச பிடிக்கிற நாயை மூஞ்சை பார்த்தா தெரியும்னு சொல்றது மாதிரி NRI மக்களின் செய்கைகளை வச்சு அவங்க அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு
சொல்லிடலாம்.

ஆங்கிலம் : அமெரிக்கா வந்து இறங்கியதும் முதல் ஷாக் இவங்களோட உச்சரிப்பு. இங்கிலிபீசில நான் சேக்ஸ்பியர் லெவல்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவனுக்கு அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பு கிர்ர்ரட்டிக்கும் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு அத்தோட நிக்காமல் அமெரிக்கா நுனி நாக்கு ஆங்கிலம் பேச முயன்று கேவலமா தோத்துப் போவாங்க. (அமேரிக்க அக்சென்ட் வெகு சிலருக்கே வரும், இங்கே பிறந்த / வளரும் குழந்தைகள் அட்டகாசமா பேசும்).

சரி நமக்கு உச்சரிப்புதான் வாய்க்கலை, அவர்கள் உபயோகிக்கும் பதங்களை உபயோகிக்க ஆரம்பிப்பது அடுத்த லெவல்.

யாராவது How Are you ன்னு கேட்டா I am fineன்னு சொல்லியே பழக்கப்பட்ட நாம I am Good என்று சொல்ல ஆரம்பிப்போம். ஏதாவது ஒரு விசயத்துக்கு தயாரான்னு கேட்டா I am Ready என்று சொல்லாமல் I am all set என்றே சொல்லுவோம்.

நண்பர்களை டேய் என்று அழைக்காமல் DUDE என்று அழைக்கத் தொடங்கும்போதும் இந்தியாவில் இருப்பவரிடம் தொலை பேசும்போது Sounds Good என்று சொல்லி மறு முனையில் இருப்பவர் நம்ம குரல் அவ்ளோ நல்லாவா இருக்குன்னு குழம்பி அவரை சுத்தலில் விடும்போது பார்ட்டி அமெரிக்கா வந்து சில பல வருஷங்கள் ஆச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.

சாப்பாடு : அரிசியும் கோதுமையுமே மனுஷன் சாப்பிட உகந்தவை. சாலட் என்பது இலையும் தழையும், அது ஆடு மாடு சாப்பிடும் வஸ்து, மேலும் வெஜிடபிள் சாலட் என்பது முழு சாப்பாட்டுக்கு முன் சாப்பிடுவது, பர்கர் என்பது
இரண்டு முழு சாப்பாடுகளுக்கு இடையில் பொழுது போக சாப்பிடுவது - இதெல்லாம் ஊருக்கு வந்த புதுசில் அடிக்கும் கமெண்டுகள்.

தினமும் ஆபிஸுக்கு வீட்டு சாப்பாடு எடுத்துப் போக முடியல, பக்கத்தில இந்தியன் ரெஸ்டாரண்ட் எதுவும் கிடையாது- சூப், சாண்ட்விச், பர்கர், சாலட் இதுல ஏதாவது சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்றேன் - இது வந்து ஓரிரு வருஷங்கள் ஆன நிலை.

விடுமுறை நாட்களிலும், நண்பர்கள் வீட்டுக்குப் போனாலும் - I eat only Salad and Soup for Lunch and Dinner, Rice and Wheat are full of Carbs you know!!!இப்போ ஐயா அமெரிக்கன் ஆகிட்டாருன்னு அர்த்தம்.


பண விஷயம்:

சில்லரைக் காசு அமெரிக்கா வந்த புதுசில் குழம்ப வைக்கும் இன்னொரு விசயம் - நாணயங்கள்.

ஊருக்குப் புதுசு : ஐந்து செண்டுக்கும் பத்து செண்டுக்கும் வித்தியாசம் தெரியாத நிலை, அதிலும் முக்கியமா ஐந்து செண்ட் பத்தை விட பெரிசா இருப்பது இன்னும் குழப்பும்.

ஓரிரு வருஷங்கள் ஆன பின்: அமெரிக்க நாணயங்களின் ஷேப்பும் மதிப்பும் நல்லாவே பழக்கமாகியிருக்கும், அத்துடன் பென்னியும் நிக்கலும் டைமும் நாலணா எட்டணா போல பழகியிருக்கும்.

அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சு : தெருமுனைக் கடைகளில் தரும் மீதப் பணத்தில் ஒரு செண்ட்களை எடுக்காமல் விட்டு விட்டு வர ஆரம்பிக்கும் போது அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.

$ to ரூபாய் :

ஊருக்குப் புதுசு : எல்லாப் பொருட்களின் விலையையும் ரூபாயில் கன்வெர்ஷன் செய்து கவலைப் படுவது அமெரிக்கா வந்ததும் வரும் ஹாபி. ஒரு ப்ளேட் இட்லி 250 ரூபாயா? ஒரு தோசயின் விலை 500 ரூபாயா என்று சரியா சாப்பிடதா பலருண்டு இங்க.

ஒரிரு வருஷங்கள் ஆச்சு : கன்வெர்ஷன் மோகம் போயாச்சு. Your home is where you live என்பதை நம்பத்தொடங்கி பொருட்களை சகஜமாக வாங்கத் தொடங்கியிருப்போம்.

செட்டில்ட் இன் அமெரிக்கா : இவங்களை இந்திய விசிட்டின் போது தெரிஞ்சிக்கலாம் - அங்கு துணிமணி வாங்கும் போதோ, கலைப் பொருள் வாங்கும் போதோ - ஆயிரம் ருபாய் அப்படினா கிட்டத்தட்ட இருபது டாலர் அப்படின்னு சொன்னா பார்ட்டி அமெரிக்க செட்டில்ட்னு தெரிஞ்சிக்கணும்.


வீடு தேடும் படலம்:

அமெரிக்கா வந்திறங்கியது தேடும் அப்பார்ட்மெண்டில் நாம் எதிர்பார்க்கும் விசயங்கள் : வாடகை கம்மியாகவும் இந்தியர்கள் நிறையவும் இருக்கும் குடியிருப்பு, ட்ரெயினுக்குப் பக்கத்தில் இருக்கணும் (அப்பத்தான் கார் இல்லாம காலத்தை ஓட்ட முடியும்), இந்தியக் கடை மற்றும் வால்மார்ட் அருகில் இருப்பது அவசியம்.

வாடகை அதிகமானாலும் பரவாயில்லை- நல்ல தரமான அப்பார்ட்மெண்ட் வேணும், காரில் ஆபிஸ் போய் வர வசதியா இருக்கணும், தேசிக்கள் அதிகமா இல்லாம இருக்கணும் (ஒரே பாலிடிக்ஸ் யூ நோ!!)- இப்படியெல்லாம் டிமாண்ட் வச்சா அமெரிக்கா வந்து ஓரிரு வருஷங்கள் ஆச்சுன்னு அர்த்தம்.

ரியல் எஸ்டேட் ப்ரோக்கரிடம் மூணு நாலு லட்ச டாலர் விலைக்கு நல்ல வீடு பார்க்கச் சொல்லி - நல்ல டவுனா இருக்கணும், Excellent School District, க்ரைம் ரேட் கம்மியா இருக்கணும், Unemployment, diversity அப்படின்னு பெரிய Requirement லிஸ்ட் கொடுத்தால் அமெரிக்காவில் மொத்தமா செட்டில் ஆயாச்சுன்னு அர்த்தம்.

விசா: வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு இந்தியர்களும் அமெரிக்கக் குடியுரிமையும் சிறந்த உதாரணம்.

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான பொட்டி தட்டும் மக்களின் கனவு H1B Visa. அமெரிக்கா வந்திறங்கியதும், ஷார்ட் டெர்ம் விசிட்டை லாங் டெர்ம் ஆக்குவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படும்

விசாவும் நீண்ட நாள் தங்கும் ஆசையும் நிறைவேறியதும் அடுத்த இலக்கு பச்சை அட்டை (Green Card) மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் இணைந்து இதற்காக பலவருடங்கள் காத்திருப்பது இடைப்பட்ட நிலை.

பச்சை அட்டை கிடைத்து ஐந்தாண்டுகளில் அமெரிக்கக் குடியுரிமை அடுத்த இலக்கு. அமெரிக்கா வந்து பத்தி பதினைந்து ஆண்டுகள் விசாவையும், பச்சை அட்டையையும், குடியுரிமையும் துரத்தி கடேசில எல்லாம் கிடைச்சப்புறம், செட்டிலானபின், I am going back to India for Good என்பது உச்சகட்டக் கொடுமை.

நான் இப்போது பெரும்பான்மையான விசயங்களில் ரெண்டாவது கேட்டகரியில் இருக்கிறேன்.


இவை தவிர நீங்க நினைக்கும் மத்த விசயங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்

Thursday, March 17, 2011

என் வாழ்வில் இன்னுமொரு பெண்

காத்து காத்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாயென !! பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைத்தேன் நீ வருவாயென!!
வந்தாயடி என் வாழ்வின் வசந்தமாக.. வாழ்வாயடி நீ வளமனைத்தும் பெற்றவளாக..
மூன்றாவது முக்கியப் பெண்ணடி நீ என் வாழ்வில்.. மூன்றுமே முத்துக்களடி என்னளவில்..
பத்து மாதம் தாய் பொருத்தாள் உன் பாரம், இனி நீதானடி என் வாழ்வின் ஆதாரம்..
இத்தனை நாள் பொறுமை காத்தோமடி உன்னைக் காண.. இனி நீண்ட நாள் வேண்டாமடி உன் பெருமைகள் காண.
என் மாதிரி உன் மாதிரி நீ ஆக ஆசையில்லை கண்ணே- நீ ஆக வேண்டியது உலகுக்கே முன் மாதிரி..
ஆசையோடு உனக்கிட்ட பேர் ஸ்ரீஹிதா, சந்தோஷங்களை இனி நீ அள்ளித்தா..


சோழர் பரம்பரையில் மற்றுமொரு MLA. முதல் குழந்தையாக பெண்ணைப் பெற்ற நீண்ட பதிவர்கள் வரிசையில் இன்று நான். நானும் என் மனைவியும் எங்க முதல் குழந்தையை எதிர் பார்த்திருந்தது உங்களில் சிலருக்குத் தெரியும். இன்று உதயமானது எங்கள் சொர்க்கம்.
பெண் குழந்தைக்கு ஸ்ரீஹிதா ஸ்ரீராம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஸ்ரீஹிதாவின் முதல் புகைப் படம் உங்கள் பார்வைக்கு..



ஹிதா வரும் காலத்தில் என்னவாக வேண்டுமானாலும் ஆகட்டும். நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களோடு நேர்மையான,நல்ல மனுஷியாக அவளை வளர்ப்போம்.

Saturday, December 11, 2010

நன்றி நண்பர்களே:

கடந்த ஏழு நாட்களாக என்னை தமிழ்மண முகப்பில் பொறுத்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த தமிழ் மண நிர்வாகிகளுக்கும் முக்கியமாக சங்கர பாண்டி ஐயாவுக்கும் மிக்க நன்றி.

டிசம்பர் 12 - தமிழ் நாட்டின் இரண்டாம் தீபாவளி - ரஜினியின் பிறந்த நாள். கமல் ரசிகனான எனக்கு இத்தினம் வேறு வகையில் முக்கியமானது. இன்று எங்களுடைய பதினோறாவது
ஆண்டு மணநாள்.

ஒரே ஒரு வாரம் என் மூஞ்சியை பொறுத்துக் கொள்ளுவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை உங்கள் மூலமாக உணர்ந்தபின், பதினைந்து வருடமாய் பின் தூங்கி முன் எழுந்து சகித்துக் கொண்டிருக்கும் என் சகதர்மினிக்கு இந்த பதிவில் நன்றி சொல்வது என் தலயாய கடமையாய் உணர்கிறேன். ஒரு வார கஷ்டத்தை அனுபவித்த நீங்களும் ஆட்சேபனை ஏதும் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். (நஞ்சப்பா...கடேசி பெஞ்சுல ஒராள் ஆட்சேபணையா புருவத்த சுருக்கறான் பாரு..அமுக்கிப் போடேய்)

சகதர்மினி, அவர், இவர், நன்றி என்றெல்லாம் கூவுவது எனக்கே ரொம்ப அன்னியப்பட்டாலும், மைக் பிடித்தால் கடமை தவறா மோகன் பரம்பரை என்ற வகையில்...பாஸ்டன் கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்... (அவர் இவர்ன்னு கூப்பிட்டா அடுத்த வூட்டு அம்மணியைக் கூப்பிடுற மாதிரி இருக்கு என்பதால் அவள் இவள்ன்னே செல்லமாய் கூப்பிடுக்கிறேன். பெண்ணியவாதிகள் ஓரமா குந்திகினு ஜோடா குடிங்கப்பா ப்ளீஸ்)

முதல் நன்றி பதினஞ்சு வருசத்துக்கு முன்ன சொன்ன காதலை ஏத்துக்கிட்டு, சரித்திரத்தில் நானும் ரவுடி என்று பதிவு செய்ய உதவியதற்காக.

அடுத்த நன்றி அடுத்த நாலு வருசத்தில் போட்ட சண்டைகளில் விட்டுக் குடுத்த மாதிரி நடித்து நான் பெரிய தாதா என்று அதே சரித்திரத்தை திருத்தி எழுதியதற்காக.

அப்பாலிக்கா கல்யாணத்துக்கும், அதுக்கும் மேல பதினோரு வருசமா என்னைப் பொறுத்துக் கொண்டதுக்கும், சென்னையை விட்டு வெளியே போக மாட்டேன் என கிணற்றுத் தவளையாக
இருந்த என்னை தில்லி ஆஃபரை எடுத்துக்கச் சொன்னதுக்கும்,என்னை அமெரிக்கா அழைத்து வந்ததுக்கும் அப்படின்னு ஒவ்வொண்ணுக்கா அவளுக்கு நன்றி சொல்லணும்னா, இன்னும்
ஒரு மூனு வாரம் நான் மட்டுமே தமிழ்மண ஸ்டாராக ஓட்டவேண்டியிருக்கும். (சங்கர பாண்டி ஐய்யா அப்பிடியே ஓடிப் போயிடுன்னு சொல்லிட்டார் அவ்வ்வ்வ்)

நான் இதுவரை எடுத்த முடிவுகளிலேயே மிகச்சிறந்த முடிவுகள் இரண்டு, ஒன்று என் இன்றைய மனைவியை 15 வருஷத்துக்கு முன்னர் காதலியாக்கிக் கொண்டது மற்றது 2002 இல் புதுதில்லிக்கு சென்றது. 'comfort zone'-ஐ விட்டு வெளியே வந்தால் தான் உலகம் எவ்வளவு பெரிசுன்னு தெரியும். "A ship is safe in harbor, but that's not what ships are for"ன்னு சும்மாவா சோக்கா சொன்னாங்க? நானும் என்னுடைய 'comfort zone'-ஐ விட்டு வந்தப்புறம்தான் என்னுள் பலப்பல மாற்றங்கள். நான் அன்று தயங்கிய போது என் மனைவி மட்டும் "போய்த்தான் பாக்கலாமே"ன்னு சொல்லாமல் இருந்திருந்தா இன்று நாங்கள் பல விசயங்களை அடைந்திருக்கவே முடியாது.

புதுதில்லியில் இருக்கும் போது ஒரு நாள் நான் திடீரென்று "வேலையை விட்டு விட்டு பிசினஸ் செய்யப்போறே"ன்னு சொன்ன போது அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. சில
மாதங்களுக்குப் பிறகு "Business is not my cup of tea, I am getting back to work"ன்னு சொன்னபோதும் ஒன்றும் சொல்லலை. வேறொருவராய் இருந்தால் "நான் அன்னிக்கே சொன்னேனே கேட்டானா பாவி மனுஷன் "- பாட்டு ஆரம்பமாகியிருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள சில ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு பண உதவி செய்யவேண்டும் என்பது என் கனவு. அது பற்றி சொன்ன போது "எவ்வளவு பணம் குடுக்கப் போற?...எப்படி..?"
என்றெல்லாம் மருந்துக்கு கூட கேட்கவில்லை. இப்போதும் நான் என் குடும்பத்தாருக்கு பணமோ / கிப்ஃடோ குடுக்கும் போது "இவ்வளவுதான் குடுக்கப் போறியா, அவங்களுக்கு இது
போதுமான்னு கேட்டியா - வேணும்னா இன்னும் கொஞ்சம் கொடுக்கலாமே" என்பதைத் தவிர வேறு தர்க்கம் ஏதுவும் அவர் செய்து கேட்டறியேன். எத்தனை பேர் மாமியாருக்கும்
நாத்தனாருக்கும் கணவன் பணம் கொடுக்கும் போது இப்படி சொல்வார்கள் என்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். நண்பர்களுக்கு பல தடவை பண உதவி செய்து சில சமயம் நஷ்டப்
பட்ட போதும் கூட இன்றளவில் நான் செய்யும் உதவிகளை அவர் ஆட்சேபித்து ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.

இதற்கெல்லாம் மேல் அவருக்கு அமெரிக்காவிற்கு ட்ரான்ஸ்பர் ஆகிய போது, நானும் எல்2 விசாவில் அவர் கூடவே வந்து இங்கு வேலை தேடிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.
வந்த அடுத்த மாதமே எனக்கு வேலை கிட்டியதென்றாலும், அந்த முப்பது நாளும் நான் சம்பாதிக்கவில்லையே என்று கவலைப் பட்டுவிடக்கூடாதே என்று அவர் கையில் இருந்த பணம் எல்லாவற்றையும் என் கையில் குடுத்து, வங்கிக் கணக்கின் ஆன்லைன் ஆப்ரேஷனையும் என்வசம் ஒப்படைத்து, அவர் செலவுக்குக் கூட என்னிடம் பணம் வாங்கிச்சென்ற அவரின் அன்பையும், பாசத்தையும் நினைத்து நெகிழ்ச்சியோடு ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

என்னுலகத்தில் அவள் ஒரு முக்கிய அங்கம், அவளுக்கு உலகமே நான் தான். இப்பேற்பட்ட பெருமையை அளித்த அவளுக்கு இந்நன்னாளில் என் வாழ்த்துகளும் நன்றியும்.

இந்த நட்சத்திர வாரம் என் மணநாளில் முடியுமாறு வாய்ப்பை வழங்கிய தமிழ் மண நிர்வாகிகளுக்கும், ஊக்கமளித்த உங்களுக்கும் நன்றி..

அடுத்து வரும் தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி உங்களிடமிருந்து "என்றும் அன்புடன்" விடை பெறுகிறேன் நண்பர்களே...

மழை - சிறுகதை

நாலு நாளா பெஞ்ச மழையில சென்னை ஒரே வெள்ளக் காடா இருந்தது. எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது.

"அதெல்லாம் இல்ல மல்லிகா! நம்ம ரோட்டில அவ்வளவா தண்ணி நிக்கல.. வீட்ல எல்லாம் போட்டது போட்ட படி கிடக்கு. இன்னிக்கு லீவ் போடாம வந்துட்டு போயிடு!"

".."

"என்ன சின்னக் குழந்தையா? பெரியவன் சரவணனுக்கு லீவ் தானே! அவன ரெண்டு மணிநேரம் பாத்துக்கச் சொல்லிட்டு வந்துரு மல்லிகா. அத்தனை பாத்திரம் கிடக்கு! துணி தோய்க்கணும், வெள்ளிக்கிழமை வீட்டையும் கண்டிப்பா தொடைக்கணும். என்னை கூட லீவு போடாம ஆபிஸ் வரச் சொல்லிட்டாங்க. சீக்கிரமா வந்துரு மல்லிகா.. "

".."

"இதுக்குத்தான் செல்போன் வச்சிருக்குற வேலைக்காரியெல்லாம் வேணாம்னு சொன்னேன், நீங்கதான் ஹாஸ்பிட்டல்ல வேலை செய்யுற ப்யூனின் சம்சாரம்னு சொல்லி வேலைக்கு வச்சீங்க!!" என்று புலம்பிய படியே செல்போனை கீழே வைத்தாள் அனுசுயா. டாக்டர் கேசவன் பிறந்ததே ஹிந்து பேப்பர் படிக்கத்தான் என்பது போல அதில் மூழ்கி இருந்தார்.

"ஏதாவது காதில வாங்கினாத்தானே" என்றவாறே புலம்பலைத் தொடர்ந்தாள்.. " குடிசை ஒழுகுது, குழந்தைக்கு உடம்பு சரியில்ல,பெரிய பையனுக்கு லீவுன்னு மட்டம் போடறதுக்கு எக்கச்சக்க சாக்கு!! கண்டிப்பா சொல்லிட்டேன் வேலைக்கு வந்தே ஆகணும்னு!" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். கம்புயூட்டர் கேம்ஸில் ஆழ்ந்திருந்த வைகுந்த் ஆச்சர்யமாய் அம்மாவைப் பார்த்துக் கேட்டான்.

"இப்போ தானேம்மா ஆபிஸுக்கு போன் பண்ணி லீவ் சொன்னே அதுக்குள்ள மல்லிகா ஆண்டிகிட்ட வேலைக்குப் போகணும்னு சொல்றியே என்ன ஆச்சுமா?"

"அதெல்லாம் உனக்குப் புரியாது வைகுந்த்! வேலைக்காரிக்கெல்லாம் ரொம்ப இடம் கொடுக்கக் கூடாது, இரு உனக்கு காம்ப்ளான் கொண்டு வர்றேன், குடிச்சிட்டு கம்புயூட்டர் கேம்ஸ் விளையாடு" என்று சொல்லிக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். அங்க பாத்தா வைகுந்த் கேமை மூடி வச்சிட்டு ரெயின் கோட்டை மாட்டிக் கொண்டு இருந்தான்.

"எங்கடா கிளம்புற? வெளியில தண்ணி வெள்ளமா ஓடுது! அதுல போனா ஜுரம் வந்திடும் ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே விளையாடு."

"இதே மழையும் தண்ணியும் மல்லிகா ஆண்டிக்கும் அவங்க பசங்களுக்கும் உண்டு தானேம்மா? நீ வேற சின்ன பாப்பாவையும் சரவணனையும் வீட்ல தனியா விட்டுட்டு ஆண்டியை வேலைக்கு வரச் சொல்லிட்ட! சரவணனுக்கும் என் வயசு தானேம்மா ஆகுது? அவன் மட்டும் எப்படிம்மா தனியா சின்ன பாப்பாவைப் பாத்துப்பான், நான் போயி ஆண்டிய இங்க அனுப்பறேன். அவங்க வேலை செஞ்சு முடிச்சு வர்ற வரைக்கும் நானும் சரவணனும் சின்ன பாப்பாவோட விளையாடிக்கிட்டு இருக்கோம், போற வழியில் பாப்பாவுக்கு ஒரு சிரப் பாட்டிலும் வாங்கிட்டு போறேன். நீதானம்மா பொய் சொன்னா உம்மாச்சி கண்ணைக் குத்திடும்னு சொல்லித் தந்திருக்க. இப்ப நீயே பொய் சொல்லியிருக்க, நான் போயி சரவணனுக்கு ஹெல்ப் பண்ணா சாமி உன் கண்ணை குத்தாதில்ல..?"

ஒரு கணத்தில் பத்தே வயதான வைகுந்த் அனுசுயாவுக்கு ஞானியாகத் தெரிந்தான். அடுத்த நிமிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாள் அனுசுயா.

"ஆமாம் மல்லிகா நாந்தான் பேசறேன், இல்ல இல்ல ஆபிஸுக்கு மறுபடியும் போன் பண்ணி லீவ் சொல்லிட்டேன், நீ ஏதாவது
வண்டி பிடிச்சு சரவணனையும், சின்ன பாப்பாவையும் கூட்டிக்கிட்டு இங்க வந்திடு, ஐயா டாக்டர்தானே பாப்பாவை அவரிடம் இங்கேயே காட்டி மருந்து கொடுத்திடலாம்! நீ வேலையெல்லாம் முடிக்கறதுக்குள்ள நான் சமையலை முடிச்சிடறேன். நீங்க இங்கேயே சாப்பிட்டுக்கலாம், நீ பாவம் ஒழுகுற குடிசையில என்ன சமைக்க முடியும்? வைகுந்தும்,சரவணனும் சாயங்காலம்
வரைக்கும் விளையாடிக்கிட்டு இருக்கட்டும், அப்புறமா நிங்க வீட்டுக்குப் போய்க்கலாம்.."

மறுமுனையில் மாற்றத்துக்கு காரணம் புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள் மல்லிகா.


டிஸ்கி : மொதோ முறையா கதை மாதிரி ஒண்ணு எழுத முயன்றிருக்கிறேன்.கேவலமா இருக்கா ரொம்பக் கேவலமா இருக்கான்னு சொன்னீங்கன்னா அடுத்த முறை ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

Friday, December 10, 2010

கம்பெனியை காதலிக்கணுமா? ஒரு விவாதம்

பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ அமெரிக்கவில் பிடிக்காத பத்து இடுகையில் ஒரு கருத்தைச் சொன்னார். இதோ அந்தப் பின்னூட்டம்

//எவ்வளவுதான் சம்பளம், சலுகைகள் கொடுத்தாலும் ஊழியர்களுக்கு தங்கள் நிறுவனம் மீது ஒரு பந்தம், பாசம் இருக்காது.நம் ஊரில் மாதம் 5000 சம்பளம் வாங்கும் ஊழியர் கூட முதலில் தன நிறுவன நலனை பார்ப்பார் பின்பே தன சுய நலம் கருதுவார். ஆனால் அமெரிக்காவில் நேர் எதிர் போக்கு//

இதுக்கு அப்பதிவிலேயே பதில் சொல்ல ஆரம்பிச்சேன். அப்புறம் இதுபத்தி கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதாலும் இது குறித்தான பிறரின் கருத்துகக்ளையும்
அறிய வேண்டும் என்பதாலும் ஒரு தனி இடுகையா எழுதறேன். பல நேரங்களில் இது பத்தி விவாதிக்க வேணும்னு நினைப்பேன்.இப்பத்தான் நேரம் கூடி வந்திருக்கு.

வேலை செய்யும் நிறுவனத்தின் மீது பந்தம் பாசம் எல்லாம் தேவையா? இது நீயா நானாவில் விவாதிக்க நல்ல தலைப்பு. சின்ன லெவலில் என் தளத்தில் விவாதிக்கலாம்.

நான் பார்த்த வரையில் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்து அதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். கம்பெனிக்காக என் உயிரையே கொடுப்பேன் என்றெல்லாம் சொல்வார்கள். பலவருஷம் வேலை செய்வதையும் பிணைப்பையும் இணைத்துப் பேசுவார்கள். என்னைப் பொருத்த மட்டில் இதெல்லாம் தேவையில்லை.

என்னோட கருத்துக்களை முன் வைக்கிறேன், உங்க கருத்துக்களை எதிர் பார்க்கிறேன். முக்கியமா, இனியவன் உலக்ஸ் அவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன். நான் அறிந்த அளவில் அவர் வேலை செய்யும் கம்பெனியோடு ரொம்ப அட்டாச்டு. வேற ரொம்ப நல்ல Opportunity வந்த போதும் நிறுவனத்தை விட்டு விலகாதவர், திடீரென்று போன் பண்ணி மலேசியாவிலிருந்து இந்தியா வாங்கன்னு டீ குடிக்க கூப்பிடறா மாதிரி கூப்பிட்டாலும் வீட்டுக்கே போகாமல் நேரா சென்னை வரும் அளவுக்கு கம்பெனியை காதலிப்பவர். அவர் கருத்தை அறிய ஆவல்.

My Views about Job and its importance in your life:



வேலை செய்யும் கம்பெனிக்கு உண்மையா, நேர்மையா இருக்கணும் அதுக்காக கம்பெனியை காதலிப்பதோ அல்லது குடும்பத்துக்கு முன்னர் வேலையை வைப்பது சரியல்ல. நெறய இந்தியர்கள் குடும்பத்தைக் கவனிக்க நேரமில்லாமல் வேலையோடு ஒன்றியிருப்பதைக் காண்கிறேன். ஒரு மேனேஜர் என்ற வகையிலும் நான் எதிர்பார்த்தது எதிர்பார்ப்பது திறமையான, நேர்மையான,கம்பெனியின் பணத்தைக் களவாடாத, கம்பெனிக்கு வர வேண்டிய லாபத்தை தனதாக்கிக் கொள்ளாத Employee தானே தவிர கம்பெனியைக் காதலிப்பவரை அல்ல. என் டீமில் வேலை செய்த நண்பர்களுக்கு வேறு நல்ல வாய்ப்புகள் கிடைத்த போது சந்தோஷமாக அனுப்பி வைத்தேன். அவங்க இன்னிக்கும் சென்னையிலிருந்தும் மும்பையிலிருந்தும் துபாயிலிருந்தும் Career Guidance கேட்டுத் தொடர்பு கொள்கிறார்கள். என் டீமில் தில்லியில் வேலை செய்த ஒருவருக்கு விப்ரோ மும்பையில் வேலை கிடைத்த போது சேருமாறு அறிவுருத்தி அனுப்பிவைத்தேன். நான் அவரின் Reporting Manager ஆக இருந்தாலும் நான் Rational ஆக
முடிவெடுப்பேன் என்ற நம்பிக்கையில் என்னிடம் அறிவுரை கேட்டார். அதே நண்பர் பின்னர் ஒருநாள் விப்ரோவிலிருந்து வேறொரு கம்பெனிக்கு மாறட்டுமா என்று கேட்ட போது
வேண்டாமெனத் தடுத்தேன். ரெண்டு நிகழ்விலும் SWOT Analysis தான் முடிவு செய்ததே தவிர கம்பெனி மீதான காதல் அல்ல.


An Organization is any day bigger than an Individual.If Dhirubai Ambani is replaceable in Reliance and if Narayanamurthy is replaceable in Infosys, No one is indispensible in any organization. But Anil and Mukesh can never replace their father.

என்னைப் பொருத்தவரையில் ஒருவர் நல்லா வேலை செய்யும் வரையில் கம்பெனி அவரை வைத்துக் கொள்ளும். வேலை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டாலோ, கம்பெனியின் நிதி
நிலைமை சரியா இல்லாமல் போனாலோ அவ்வளவு ஏன் கம்பெனியின் நிர்வாகம் மாறினாலும் அவரை வேலையை விட்டு அனுப்ப ஒரு கணம் கூட தயங்காது. அப்படி இருக்கையில்
Employee மட்டும் ஏன் நிறுவனத்தின் மீது காதல் கொள்ள வேண்டும்?

"Love your profession but never fall in love with your company" இது நாராயண மூர்த்தி அவர்கள் சொன்னதாக வெளிவந்தது. அவர் என்ன அர்த்ததில் இதைச் சொன்னாரெனத் தெரியாது. என்னளவில் இதுக்கு அர்த்தம் - Job Satisfaction மற்றும் சம்பளம் ரெண்டும் சரி விகிததில் இருக்கும் வரை வேலை செய். இது மாறும் போது வேறு வேலை தேடு. சில வேலைகளில் சந்தோஷம் அதிகமாகவும் சம்பளம் குறைவாகவும் சில வேலைகளில் இது மாறியும் இருக்கும், Trade-off நீங்கதான் முடிவு செய்யணும். உங்கள் மீதும் செய்யும் வேலையின் மீதும் (Profession) காதல் கொள்ளுங்கள். நிறுவனத்தின் மீதல்ல. எண்ணங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் வேவ்வேறாக இருந்தால் (Yours and company's) வேறு வேலை தேடுவது நலம்.


“It is not the employer who pays the wages. Employers only handle the money. It is the customer who pays the wages.”
இது ஹென்றி ஃபோர்ட் சொன்னது. நெறய பேர் முதலாளி சம்பளம் கொடுப்பதாக நினைக்கிறார்கள். கஸ்டமர்கள் வாங்குவது குறைந்து பண வரவு குறைந்தால் முதலாளி
சொந்தப் பணத்தில் இருந்து எடுத்துக் கொடுக்க மாட்டர், ஆட்குறைப்புதான் செய்வார். நிலைமை இப்படி இருக்கையில் நாம் மட்டும் ஏன் வேலையைக் காதலித்து நல்ல வாய்ப்புகளை விட வேண்டும்?

அதே போல பணத்தின் பின்னால் ஓவரா அலைந்து வாழ்க்கையை அனுபவிக்காமல் விடுதலும் தவறே. There is no point in being the richest man in the grave yard, you cannot do any business from there - இது புரிஞ்சா போதும். Work - Family Balance தன்னால வரும்.

அம்புட்டுதேன் நம்ம கருத்து, ஒரு நல்ல விவாதத்தைத் துவக்கி வைத்த நண்பர் ராம்ஜி யாஹூ வுக்கு நன்றி.

Thursday, December 9, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை : பகுதி 8

முந்தைய பகுதிகள்

ஒரு நல்ல சேதி மற்றும் ஒரு எச்சரிக்கை

தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நீங்க எல்லாரும் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி.


கனவு தேசம் தொடரின் இப்பகுதியில் தற்போதைய நிலையில் இருக்கு ஒரு நல்ல விசயத்தையும் ஒரு பிரச்சனைக்குறிய விசயத்தையும் பாக்கலாம்

மொதல்ல நல்ல விசயம். அமெரிக்காவில் IT Contracting Job Market இப்போ ரொம்ப நல்லா இருக்கு. கடந்த அஞ்சு ஆறு மாசமாகவே நெறய காண்ட்ராக்டிங் வேலை வாய்ப்புகள் அதிகமாகிக்கிட்டு இருந்து வருது. Recession க்கு அப்புறம் பொதுவா கம்பெனிகள் Full Time ஆட்களை வேலைக்கு எடுப்பதை விட Temporary Staffing
என்று சொல்லப்படும் Contracting Resources களை வேலைக்கு அமர்த்துவது வழக்கமே.

2010ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன்) முன்னேற்றத்தின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. மூன்றாம் காலாண்டில் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்)
அதிக அளவில் வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. 2009ம் மூன்றாம் காலாண்டை விட 2010ன் மூன்றாம் காலாண்டில் 15 சதவீதம் அதிக வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. அதிக அளவில் டெக்னாலஜி கம்பெனிகள் அமைந்துள்ள கலிபோர்னியாவில் அதிக அளவு Recruitment நடந்திருக்கு.

இடங்களைப் பொருத்த வரையில் இதில் டாப் டென் இடங்களைப் பெற்ற இடங்கள் - கலிஃபோரினியா, நியூ ஜெர்ஸி, நியூ யார்க், டெக்ஸாஸ், இல்லினாய்ஸ், பென்சில்வேனியா,
வர்ஜினியா, ஜார்ஜியா, Massachusetts (அதாங்க எங்க ஊரு -இத தமிழ்ல எழுதுறது ரொம்ம்ப கஷ்டம்), மற்றும் ஃப்ளோரிடா.


டெக்னாலஜியைப் பொருத்த முறை, ஜாவா Requirements அதிக அளவில் வந்திருக்கு - 14 சதவீதம், அடுத்த ஹாட் டெக்னாலஜி Dotnet - 10%. SAP க்கும் System Admin க்கும் இதே அளவில் (10%) வேலை வாய்ப்புகள் வந்திருக்கு. QA - 8%, Data Warehousing / ETL - 7%, Oracle Apps- 5%, ப்ராஜக்ட் மேனேஜர் - 5%, Reporting Tools - 5%, Database Developers - 5%, Business Analysts - 4%, DBA = 4%, Web / Internet - 3%, People Soft - 3%, Siebel - 2%, Mainframe - 1%, Middleware - 1%, C and C++ - 1%, Mobile Applications - 1% மற்றும் Unix - 1% என்கிற விகிதங்களில் Requirement வந்துள்ளன.

ஒரு விசயம் ரொம்பத் தெளிவாத் தெரியுது. ஜாவா, Dotnet, Oracle போன்ற டெவலப்மென்ட் டெக்னாலஜிக்கும் சிஸ்டம் அட்மின்களுக்கும் இப்போதைய மார்க்கெட் நிலவரத்தில் அதிக டிமாண்ட் இருக்கு. இந்த டெக்னாலஜியில இருக்கும் IT மக்கள், ப்ராஜக்ட் மாற்ற நினைத்திருந்தால் அதுக்கு இது உகந்த நேரம்.

தற்போதைய நிலை ப்ராஜக்ட் மாத்துறதுக்குக்கு உகந்ததாக இருந்தாலும் H1B ல இருக்கும் மக்கள் இந்தியா செல்வதற்கு இது உகந்த நேரமல்ல.

H1B visa stamping செய்வதில் தற்போது சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவருகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து எம்பஸிகளிலும் கோவில் பிரசாதம் போல H1B stamping செய்ய செல்லும் அனைவருக்கும் Blue Paper என்றழைக்கப்படும் Form 221G (Request for More documents) வழங்கப் படுகிறது. பல பேருக்கு Visa Rejection கூட நடக்கிறது. ஸ்டாம்பிங் தேவைப்படுவோர் தற்போது இந்தியா செல்வதைத் தவிர்ப்பது நலம். ஸ்டாம்பிங் இருந்தாலும் Port of Entry யிலும் பல கேள்விகள் கேட்டு
Deport செய்வதும் நடந்து வருகிறது. ஏதொரு முக்கிய காரணமும் இல்லாமல் இந்திய விடுமுறை ப்ளான் பண்ணியிருக்கும் நண்பர்கள் பயணத்தைக் கொஞ்சம் ஒத்திப் போடுங்க.
மேலதிக விவரம் தேவைன்னா தனி மடல் அனுப்புங்க, கூப்பிடறேன். நிலைமை சகஜமானதும் அப்டேட் பண்றேன்.

தத்துபித்துவங்கள் இருபது

நேத்து பிடிக்காத பத்து அதுக்கு முன்னாடி பிடிச்ச பத்து, இன்னிக்கு தத்து பித்துவங்கள் இருபது. ரெண்டு நாளா கொஞ்சம் சீரியஸா டிஸ்கஷன் போச்சு, அடுத்ததும் அமெரிக்க
காண்ட்ராக்ட் வேலை நிலவரம் பத்தி சீரியஸா வருது. எனவே நடுவுல ஒரு கெக்கே பிக்கே காமடி.பொருத்தருள்க.

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

6. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

7. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

8. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

9. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

10. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

11. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

12. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

13. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

14. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

15. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

16. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

17. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

18. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

19. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

20. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது

தத்துபித்துவங்கள் கண்டெடுத்தது இணையத்தில், மூழ்கி முத்தெடுத்தவர் : “என்றும் அன்புடன்” பாஸ்டன் ஸ்ரீராம்

Wednesday, December 8, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை பகுதி 7

பத்து பத்து - நேற்றைய இடுகையின் தொடர்ச்சி பிடிக்காத பத்து


1. அம்மாவும் அப்பாவும் அக்காளும் அண்ணனுமே Distant Relatives ஆகிப் போன சோகம். என்னதான் 2 செண்ட்ல இந்தியாவுக்கு பேச முடியுமென்றாலும், வார இறுதியில் வெப்கேம் துணையோடு உரையாடினாலும் அருகாமைன்னு ஒண்ணு இருக்கே அது கிடைக்காது.

2. வாழ்க்கை முறை : அமெரிக்கர்களின் வாழ்க்கை முறை எனக்குப் பிடிக்காத ஒன்று. “கட்டற்ற சுதந்திரம்” இங்குள்ளவர்களைக் கெடுத்து வச்சிருக்கு. பதின்ம வயதிலேயே
எல்லாப் பழக்கங்களும் வந்திடுது. அளவுக்கு மீறிய Individuality இங்கு அதிக அளவில் விவாகரத்துகள் நடக்கக் காரணம். விளைவு நெறய் குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரோடும் வாழக் கொடுப்பினை இல்லை. பல பேருக்குத் தனிமையே துணை. வார இறுதியில் பப்புக்கும் பார்ட்டிகளுக்கும் துணை தேடி நெடும் பயணம்.

3. சேமிப்பு இல்லாமை: பணத்தைப் பொருத்த வரையில் நான் ஒரு Conservative. Saving Economy இல் அதிலும் ஒரு சாதாரண Indian Lower Middle Class சூழ்நிலையில்
வளர்ந்த எனக்கு அமெரிக்கச் சூழல் பெரும் வியப்பே. பெரும்பாலான அமெரிக்கர்கள் நாளை என்ற ஒன்றைப் பற்றியே கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அமெரிக்கர்களின் Combined Personal Debt 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகம் (சராசரியாக ஒரு குடும்பத்தின் கடன் 1.2 லட்சம் டாலர்கள்). இங்கிலாந்தின் மொத்த GDP யே அவ்வளவுதான். அறுபதிகளில் அமெரிக்கர்களின் சேமிப்பு சம்பளத்தில் 11 சதவிகிதம், அதுவே தொண்ணூறுகளில் 5 சதவிகிதம். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2003ல் அது 2.3 %. பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மக்கள் கொஞ்சம் விழித்துக் கொண்டு 5 முதல் 7 % வரை சேமிப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.

இந்த படம் பல நூறு கதைகள் சொல்லும்



4. உப்பு சப்பில்லாத உணவு : இந்தியாவிலிருந்து வந்த புதிதில் எல்லாரும் கடினமாக உண்ரும் விசயம் இது. நல்ல காரசாரமாக சாப்பிட்டுப் பழகிய நமக்கு இங்கு கிடைக்கும் உணவு வாயில் வைக்க வழங்காது. போகப் போக பழகினாலும் நாக்கு இந்திய உணவங்களைத் தேடி அலைவதைத் தவிர்க்க இயலாது.

5. Too many choices : நான் பிடிச்ச பத்தில் சொல்லியிருந்த ஒண்ணு - ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் Customer is King feeling. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு சொல்றா மாதிரி அமெரிக்காவில இருக்கும் அளவுக்கு அதிகமான சாய்ஸ் நம்மளை ஒரு பொருளை வாங்குவதற்கு பல மணி நேரம் செலவிட வைக்கும்.
Big Ticket Purchase எதுவானாலும் முக்கியமாக எலக்ட்ரானிக் பொருட்கள் (உதாரணமாக LCD TV or camera or Laptop) வாங்க முடிவெடுத்தால், மொதோ பிரச்சனை என்ன பிராண்டு / Specification வாங்குவது? ஒரு பொருளுக்கு நூத்துக் கணக்கான சாய்ஸ். கம்பெனியோட சைட்ல விவரங்களைப் பாக்கணும், அப்புறம் Cnet ல Expert review பாக்கணும், Marketplace தளங்களில் Compare பண்ணனும், Yelp, Amazon மாதிரி தளங்களில் User Review படிக்கணும். ஒரு வழியா பல மணி நேரங்கள் செலவழிச்சு ஒரு குறிப்பிட்ட மாடலை செலக்ட் பண்ணி முடிச்சு அப்பாடான்னு மூச்சு விட்டா அடுத்த யுத்தம் ஆரம்பிக்கும். அப்பொருளுக்கு நூறு சைட்ல நூறு விலை போட்டிருப்ப்பான்.
நமக்கோ நாம வாங்கின விலையை விட யாராவது குறைவா வாங்கிட்டாங்கன்னு தெரிஞ்சாத் தலையே வெடிச்சிடும். நாந்தான் கம்மி விலையில வாங்கியிருக்கேன்னு காட்டுவதற்காக
பல மணி நேரம் ஆன்லைன்ல செலவிடுவோம். Amazon பாத்தியா Ebay பாத்தியான்னு வேற எக்ஸ்பர்ட் ஒப்பீனியன் வேற பல திசைகள்லேருந்து வரும். இதுக்கெல்லாம் மீறி ஒரு விசயம் இருக்கு. நவம்பர் மாசத்துக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்குன்னு பாக்கணும், ஏன்னா Black Friday க்கு நாம் நெனச்ச பொருள் டீலில் வருமான்னு பாக்கணும். இதுவாவது பரவாயில்ல Big Ticket Purchase ல 100 -200 $ மிச்சமாகும். Macys போன்ற துணிக்கடைகளுக்கு போகும் போது நடக்கும் Coupon கூத்து இருக்கே சொல்லி மாளாது... Vivek & Co வுக்கோ Vasanth & Co வுக்கோ போனோமா நாலு TV பாத்தோமா ஒண்ணை பேரம் பேசி வாங்கி வீட்ல டெலிவர் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு கூல வர்ற சுகம் இருக்கே ... ஹூம்... அது ஒரு கனாக் காலம்..


6. போர் தொடுப்பது / மூக்கை நுழைப்பது : வேறெந்த நாட்டினுடைய ஒரு அடி நிலத்தைக் கூட இதுவரை அபகரிக்காத (காஷ்மீரை குள்ளநரித்தனமாக நம்மோடு சேர்த்திருந்தாலும்)
நாட்டைச் சேர்ந்த எனக்கு அமெரிக்காவின் தேவையற்ற போர்கள் வெறுப்படைய வைக்கின்றன. நாடு பிடிக்கும் எண்ணம், உலக எண்ணெய் வளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் என பல காரணங்கள் இருக்கும் இவர்களுக்கு உலக அமைதிக்கு ஒரு காரணம் கூட தோன்றாதது வியப்பே.

7. Expensive Medicare : இந்த ஊரில் மருத்துவமனைகளும் மெடிக்கல் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சேர்ந்து அடிக்கும் கூட்டுக் கொள்ளை ஒரு Daylight Robbery.
ஊருக்கு ஊர் இலவசமா நூலகம் கட்டி அதில் இலவசமா சினிமா பட டிவிடி கொடுக்கும் அரசாங்கம் இலவச பொது மருத்துவமனை கட்டாது. இவனுங்க வாங்கற வருமான வரிக்கு
இலவசமாகவே மருத்துவ சேவை பண்ணலாம். உலகிலேயே அதிகமா Medicare க்கு செலவு செய்வது அமெரிக்காதான். GDPல 15 சதவிகிதம் இதுக்கு போகுது. ஆஸ்திரேலியா 9%, மிகச் சிற்ந்த சேவை உள்ள ஜப்பான் GDP ல 8% Medicare க்கு செலவு பண்ணுது. DHS மூலம் சிறப்பான சேவை வழங்கும் இங்கிலாந்தின் செலவு 7.5%. தரமான இலவச மருத்துவ வசதி கொண்ட கனடா கூட 10% க்கு மேல செலவு பண்ணுவது கிடையாது. அமெரிக்காவில் இத்தனை பணம் என்னாகுது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இதுக்கும் மீறி
ஆஸ்திரேலியாவில் annual cost of health care per capita is $2,886. In Canada it is $2,998 in UK it is $2317 the same in USA is
$5711,
இதுக்கும் மேல மருத்துவமனைக்குப் போகும் போதும் பணம் கேட்டால் கோவம் வருமா வராதா?

8. ஆட்டோ : அண்ணன் தம்பியை மிஸ் பண்றேனோ இல்லயோ நான் ஆட்டோவை அமெரிக்காவில் ரொம்பவே மிஸ் பண்றேன். எவ்வளவுதான் ஏமாத்தறாங்கன்னு பொலம்பினாலும் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் கையைக் காட்டி நிறுத்தி ஆட்டோவில் ஏறிப் போவதில் இருக்கு சவுகரியம் அமெரிக்காவில் கிடையாது. Public Transport வசதி ரொம்ப கம்மி, டாக்ஸி வாடகை அதிகம், அதையும் போன் பண்ணிக் கூப்பிடனும். நெனச்ச நேரத்துக்கு நெனச்ச இடத்தில் கிடைக்கும், தெருக்குத்தெரு ஆட்டோ ஸ்டாண்ட் - இந்த வசதியை மிஸ் பண்ணும் போதுதான் இதன் அருமை தெரியும்.

9. குடியுரிமைச் சட்டம் : Modern America முழுக்க முழுக்க வந்தேரிகளால் நிரம்பியது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் Permanent Residence Process எவ்வளவு இலகுவாக இருக்க வேண்டும்? இந்நாட்டுக்கு வேலை செய்ய வந்து PR விண்ணப்பம் செய்வதில் முக்கியமானவர்கள் இந்தியர்கள். அவங்களுக்கு PR கிடைக்க பல வருடங்கள் ஆகுது.
வேலை உரிமை விசா (work visa) வழங்க கெடுபிடி செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு வேலை செய்யத் தெரிவாகி வந்து வேலை செய்பவருக்கு PR கொடுப்பதில் இருக்கும் தாமதம் எரிச்சல் தருது.

10. பிளாஸ்டிக் உபயோகம் : சுற்றுச் சூழலை பாதுகாக்க உலக நாடுகள் ஒத்துழைக்கணும், ஓசோன் ஓட்டையை அடைக்க உலக நாடுகள் எல்லாம் சேந்து ரப்பர் உருக்கலாமுன்னு
சொல்லிக்கிட்டே அமெரிக்கா உபயோகிப்பது வருசத்துக்கு 100 பில்லியன் பிளாஸ்டிக் பைகள், இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர்கள். இதுபத்தி இங்கு யாருமே கவலைப் படுவதாகத்
தெரியவில்லை. ஏதோ என்னால முடிஞ்சது ஊரிலிருந்து 4-5 துணிப்பைகள் எடுத்து வந்து யார் என்ன நெனச்சாலும் கவலை இல்லைன்னு துணிப்பைகளில் காய்கறி, பழங்கள்
வாங்கி வருவருகிறேன்.

நேத்தும் இன்னிக்கும் நான் சொன்னது நான் கண்டவரையில் அமெரிக்காவில் எனக்குப் பிடித்த மற்றும் பிடிக்காத பத்து விசயங்கள். உங்களுக்கு பிடிச்ச / பிடிக்காத விசயங்களைப்
பின்னூட்டத்தில சொல்லுங்களேன்.

Tuesday, December 7, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை பகுதி 6

பத்து பத்து
முந்தைய பகுதிகள்

இந்தத் தொடரில் இதுவரை H1B விசா மற்றும் இடங்கள் / விலைவாசி பத்தி மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்தப் பதிவில் கொஞ்சம் வித்தியாசமா எனக்கு அமெரிக்காவில் பிடிச்ச /
பிடிக்காத பத்து விசயங்களைப் பத்திச் சொல்றேன். நீங்களும் உங்களுக்கு பிடிச்ச / பிடிக்காத விசயங்களைப் பத்தி பின்னூட்டத்தில சொல்லுங்களேன். நான் இங்கு சொல்லியிருப்பது
அனைத்தும் நான் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அனுபவித்து உணர்ந்தவை - இவை என்னோட பர்சனல் ஒப்பீனியன் மட்டுமே.


பிடித்த பத்து

1. Very Systematic : இந்த நாட்டில் இருக்கும் ஒழுங்கு முறை எனக்கு ரொம்பப் பிடிக்கும். போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதாகட்டும், பாதசாரிகளுக்கு வழி விடுவதாகட்டும் எங்கு சென்றாலும் வரிசையை கடை பிடிப்பதாகட்டும், அமெரிக்காவில் இருக்கும் ஒழுங்கு அனைவரும் பின்பற்ற வேண்டியது

2. Roads : நாட்டின் உள்கட்டமைப்பின் உயிர்நாடி அமெரிக்காவின் சாலைகள். ரொம்ப க்ளியரா Town Roads / Highways என்று பிரித்து சாலைகளை அமைத்து இருக்காங்க.
ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு செல்ல முதலில் Town Road இல் பயணித்து Highways இல் இணைந்து விட்டால் போக வேண்டிய Town வரை ஹைவேஸில் சிக்னல், பாதசாரிகள், எதிர் வரும் வாகனங்கள்னு எந்த தொந்தரவும் இல்லாம பயணிக்கலாம். சாலைகளின் தரமும் மிகவும் உயர்வு.

3. Ecommerce / Online Shopping : எனக்கு பர்சனலா ரொம்பப் பிடிச்ச இன்னொரு விசயம். ஒரு பொருளை வாங்க பல கடைகள் ஏறி இறங்க வேண்டாம். இருந்த இடத்திலிருந்தே பல வெப்சைட்களில் பொருளின் விவரம், விலை, Customer Feedback எல்லாம் படிச்சிட்டு ஆன்லைன்லயே வாங்கலாம். Amazon போன்ற தளங்களில் பயமில்லாமல் கடன் அட்டையை உபயோகித்து பொருட்களை வாங்கலாம். வங்கிக் கணக்கைக் கூட ஆன்லைனில் உபயோகிப்பது எளிது. இந்தியாவில் ICICI மற்றும் HDFC தளங்களை உபயோகித்திருக்கிறேன், இங்கு Bank of America வின் தளம் அவற்றை விட உபயோகிக்க எளிதாக உள்ளது. என்னளவில் Safe கூட.

4. லஞ்சம் இல்லை : அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக லஞ்சம் இல்லை என நான் Blanket Statement கூறவில்லை. ஆனால் கண்டிப்பாக என்னைப் போன்ற Common Man
வாழ லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை எனக் கூற முடியும். கடந்த நாலு வருசத்தில் மூணு கார் வாங்கி ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறேன், ஓட்டுனர் உரிமம் வாங்கியிருக்கிறேன்,
Electricity Connection, Phone Connection, Gas Connection வாங்கியிருக்கிறேன். இவ்வளவு ஏன், நாலு முறை Traffic police இடம் பிடிபட்டு ஒரு முறை டிக்கெட் வாங்கி, கோர்ட்டுக்குப் போய் அபராத்தை பாதியாக குறைத்திருக்கிறேன் - எதுக்கும் ஒரு பைசா லஞ்சம் கேட்டதுமில்லை, கொடுத்ததுமில்லை. மில்லியன் டாலர் காண்ட்ராக்ட்
தேவைப்படுவோர் லஞ்சம் கொடுப்பதாக இருக்கல்லாம், ஆனால் மிடில் க்ளாஸ் மக்கள் அமெரிக்காவில் வாழ லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை.

5. Customer is King : அமெரிக்கா வந்து போன எல்லாரும் இதனை ஒத்துக் கொள்வார்கள். இங்குள்ள பெரும்பாலான கடைகளில் கஸ்டமர் சர்வீஸ் மிகச் சிறப்பா இருக்கும். வால்மார்ட் போன்ற பெரிய கடைகளில் பொருட்களின் விவரங்களைப் பற்றி சொல்ல நெறய பேர் இல்லாம இருக்கலாம், ஆனா அக்கடைகளின் வெப்சைட்களில் எல்லா விவரங்களும் கிடைக்கும். ஒரு பொருள் உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அக்கடையின் கிளையில் இருக்கா இல்லயான்னு பாக்கலாம். கடைகளில் ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் Price Check
உபகரணங்களில் வாங்கும் பொருளின் விலையை அறியலாம். வாங்கிய பொருளை 30 நாட்களுக்குள் (பிடிக்கலைன்னா) திரும்பக் கொடுத்து பணம் பெறலாம். நீங்க மற்றொருவருக்கு வழங்கும் அன்பளிப்புகளுக்கு Gift Receipt கொடுப்பாங்க. அதுல விலை குறிப்பிடப் பட்டிருக்காது. அன்பளிப்பை வாங்கியவருக்கு அப்பொருள் பிடிக்காமல் போனாலோ, அப்பொருள் வேலை செய்யாமல் போனாலோ அல்லது ஒரே மாதிரி 2-3 பொருள் அன்பளிப்பா வந்துவிட்டாலோ (அஜந்தா வால்கிளாக் நியாபகம் வருதா?) அவர் Gift Receipt ஐ எடுத்துச் சென்று வேறு பொருள் வாங்கிக் கொண்டு வரலாம்.

6. Snow : அமெரிக்காவில் இருக்கும் நெறய இந்தியர்களுக்குப் பிடிக்காத விசயம், ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம். பாஸ்டனில் டிசம்பர் தொடங்கி மார்ச் மாசம் வரை பனிப் பொழிவு இருக்கும். வாரம் ஒருமுறை இருக்கும் பனிப்பொழிவு ஓரிரு முறை Snow Storm ஆக அடித்துத் தள்ளும். அப்பொழுதெல்லாம் ஊரே வெள்ளையா பாக்க ரொம்ப அழகா இருக்கும். காரின் மீது இருக்க்கும் Snow வை சுத்தப் படுத்தும் பணி தவிர Snow Season ல எனக்கு எல்லாமே பிடிக்கும்.

7. NO Sir Culture : நான் கேள்விப்பட்ட ஒரு விவரம் : வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியை அங்கு சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளி பாக்கும் போது கூழைக் கும்பிடெல்லாம் போடாமல் சொல்வது : Good Morning Mr. President - அவ்வளவுதான் அவ்வளவேதான். இந்தியாவில் இருந்து இங்கு வந்த போது எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. என் டீமில் உள்ளவர்களை நான் ஒருபோதும் என்னை Sir என்று அழைக்க விட்டதில்லை எனவே எனக்கு இது பெரிய மாற்றமாக இருக்கவில்லை, நான் யாரையும் Sir போட்டு அழைக்க வேண்டாமென்று ஆகிய போது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் எவரையும் Hi Peter (அ) Hi Ramesh என்று பெயரிட்டுத்தான் அழைக்கணும்,யாரும் இங்கு சார் இல்லை.
இதுல ஒண்ணு கேட்டா இன்னும் ஆச்சர்யப் படுவீர்கள் : என்னை இங்கு இதுவரை Sir போட்டு விளித்தவர்கள் யார் தெரியுமா ? என்னை சாலையில் பிடித்த காவலர்கள் மட்டுமே.

8. 911 போன் : போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி, Domestic violence இன்ன பிற எல்லாத்துக்கும் அமெரிக்காவில் ஒரே நம்பர் 911. ஆபத்துக் காலங்களில் இந்த எண்ணுக்கு போன் பண்ணதும் சில நிமிடங்களில் நமக்குத் தேவையான உதவி வந்து சேரும். மிகச் சிறப்பாக செயல்படும் இச்சேவை ஒரு இலவச ஆபத்பாந்தவன். நான் இங்கு வந்த புதிதில் ஒரு முறை அலுவலகத்தில் இருக்கும் Fire Alarm அழுத்தி விட்டேன். உடன் வேலை செய்யும் நண்பரிடம் சொல்ல அவர் உடனே 911 க்கு போன் பண்ணினார். நான் தவறாக இழுத்து 2-3 நிமிடங்கள்தான் ஆகியிருக்கும் அதுக்குள் 2 தீயணைப்பு வண்டிகள் நிலையத்தை விட்டு கிளம்பி விட்டதாகவும் அடுத்த சில நிமிடங்களில் எங்க அலுவலகத்தில்
இருப்பாங்கன்னும் அடுத்த முனையில் இருந்த பெண்மணி சொன்னார், அவ்வளவு வேகம்.

9. பெண்ணுரிமை : நான் கண்ட வரையில் ஆணுக்குப் பெண் சமம் என்பது அமெரிக்காவில் முழுமையாக நடைமுறையில் இருக்கு. இன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கு
அளவுக்கு அதிகமாகவே சுதந்திரம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக இருக்கிறார்கள். சொல்லப் போனால்
அமெரிக்காவில் எந்தப் பெண்ணும் நானும் ஆணுக்குச் சமம் எனக்கும் உரிமை இருக்குன்னு சொல்வது கூட கிடையாது, அவர்கள் தங்களை கொஞ்சம் கூட ஆண்களுக்குக் குறைவாகக்
கருதுவதில்லை.

10. நகரம் / கிராமம் : அமெரிக்காவின் கட்டமைப்பில் இருக்கும் இன்னொரு முக்கிய விசயம் - நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் கட்டமைப்பில் அதிக வித்தியாசம் இல்லை.
பாஸ்டன் நகரில் இருக்கும் அதே மாதிரியான நல்ல குடிநீர், உணவு, சாலை வசதிகள், மருத்துவ, பள்ளி வசதிகள், மின்சாரம், இணையம் எல்லா வசதிகளும் நாட்டின் கடை கோடியில் இருக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். இந்தியாவில் இன்று இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை நகரங்களில் இருக்கும் வசதிகள் கிராமப் புறங்களில் இல்லை.இது மாறினால் நகரங்களில் பெருகும் ஜனத்தொகை பெருக்கப் பிரச்சனையை பெருமளவு தீர்க்கலாம்.

ஏற்கெனவே இடுகை ரொம்ப பெரிசா போயிடுச்சு, எனவே பிடிக்காத பத்து நாளைக்குச் சொல்றேன்.

Monday, December 6, 2010

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க: பகுதி 7

ரொம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னர் எழுதின இத்தொடரின் சில இடுகைகள்:

தமிழ்மண நட்சத்திர வாரத்தில ஏழு இடுகைகள் எழுதணுமாமே, நேனெங்கே போறது அத்தனை இடுகைகள் வெரைட்டியா எழுத. இதில வேற கேபிள் சங்கர் மாதிரி எண்டர் கவிதைகள் எழுத மாட்டேன்னு கமிட் பண்ணிட்டேன், இல்லன்னா மண்டபத்திலயாவது வாங்கி வந்து ஒப்பேத்தலாம். ஒடனே அ ஆ தொடரை தூசி தட்டி எடுத்து அடுத்த பகுதி இதோ:

வழக்கம் போல நாம பேசுற ஆங்கிலத்தில் இருக்கும் தவறுகளை உணர்ந்து அவற்றைத் திருத்திக் கொண்டாலே ஓரளவுக்கு சரியா பேசலாம். இந்த பகுதியில் தொலைபேசியில் பேசும் போது நம்மில் பலர் வழக்கமா செய்யுற தவறுகளையும் திருத்தங்களையும் பாக்கலாம்.


தொலைபேசியில் பேசுறதுன்னு சொன்னதும் நாலு முக்கிய விசயங்கள் ஞாபகத்துக்கு வருது, அவை

1. ஒருவரை கைப்பேசியில் கூப்பிடுவதற்கு முன்னர் Land Line ல கூப்பிடணும், அதில் அவருடன் பேச முடியாத பட்சத்தில் கைப்பேசியில் கூப்பிடலாம்.

2. நீங்க ஒருவரை அவரின் கைப்பேசியில் கூப்பிடும் போது அவர் பிஸியாக இருக்கலாம், முதலில் - இன்னார் பேசறேன், இந்த விசயத்துக்காக கூப்பிட்டேன், ரெண்டு நிமிஷம் பேசலாமா என்று கேட்டு விட்டுத் தொடரவும்.

3. ஒருத்தருக்கு போன் பண்ணிட்டு “யார் பேசறதுன்னு கண்டுபிடி பாக்கலாம்” என்று எரிச்சலைக் கிளப்பாதீர்கள், குரலைக் கேட்டவுடன் கண்டுபிடிக்க நீங்க எம் ஜி யாரோ கருணாநிதியோ அல்ல.

4. வீட்ல போன் எடுக்குறதை விட அலுவலகத்தில் போன் எடுக்கும் போது அதிக கவனமா இருக்கணும். You are the face of your organization for the caller. நீங்க போன் அட்டெண்ட் செய்யுற விதத்தை வைத்துத்தான் நீங்க வேலை செய்யும் நிறுவனத்தையே அடுத்த முனையில் இருப்பவர் எடை போடுவார் எனபதை நினைவில் வைக்கவும். Official Greeting பல விதமா செய்யலாம், பல சரியான வாக்கியங்களில் இதுவும் ஒன்று, இதை சரியான tone இல் சொன்னால் போதும்

Good morning, Thank you for calling Kokran Mekran company, My name is Sriram, How can I help you today?

Telephone Etiquette சம்பந்தமா நாலு விசயங்களைத் தொடர்ந்து தொலைபேசியில் தவிர்க்க வேண்டிய ஆங்கிலத் தவறுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

This is Sriram this side என்று சொல்வதைத் தவிர்க்கலாம் My name is Sriram என்று சொல்வதே அழகா இருக்கும்

What is your good name - தவறு May I have your name? - இதுவே சரி

You will get it today itself / I will do that today itself என்று சொல்வதை விடுத்து You'll get it by the end of the day today என்று சொல்லலாம்

I will just come to your room எல்லாத்துக்கும் ஜஸ்ட் உபயோகப்படுத்துவதை விட்டு I will be with you in minute என்று சொல்வதே சரி.

Hold on மிக அதிக அளவில் தவறாக உபயோகப் படுத்தப்படும் ஒரு பதம் - இதுக்கு அர்த்தம் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்குறதைத் தொடர்ந்து செய்யுங்க என்பதே ஆகும். அடுத்த முனையில் பேசுபவரை இதைச் சொல்வது தவறு, இதுக்கு பதிலா Please be on the line or phone, I will check that for you or I will check if Mr. X is available at office என்று சொல்லலாம்.


I will just be back என்று சொல்வதை விட I will be back in just a minute or few minutes என்று சொல்லுங்க, அழகா இருக்கும்.

Revert back ரிவெர்ட்டுக்கு அடுத்து Back அவசியமில்லை Revert என்பதே போதுமானது.

Mr. X is out of station now, do you want to say something for him? என்று கூறாமல் Mr. X is not in town, he will be back on .., would you like to leave a message for him? என்று சொல்லலாம்

I am not getting you என்பதை விட I'm Sorry, I didn't understand that (or) I'm Sorry, Can you say that again என்பது அழகாக இருக்கும்.


மறுபடியும் அலுவலக போன் சம்பந்தமாக ஒரு டிப். உரையாடல் முடிந்த பின்னர் இப்படிச் சொன்னால் அழகா இருக்கும்.

Is there anything else you need from Kokran Mekran today? Thanks for calling us, have a wonderful day.

அழகா இருக்குன்னு அலங்கார வாக்கியங்களை எல்லா இடங்களிலும் சொன்னா என்ன ஆகும்னு இந்த ஜோக்கைப் படித்து புரிஞ்சிக்கோங்க:

நேர்முகத் தேர்வுக்கு வந்த பெண்ணை தெரிவு செய்த மேனேஜர், சம்பளத்தை முடிவு செய்ய எண்ணினார். அந்தப் பெண்ணிடமே எவ்வளவு சம்பளம் எதிர் பாக்கறீங்கன்னு கேட்டார்.
அந்த பெண் மாதத்துக்கு பத்தாயிரம் என்று சொன்னாள். உடனே அழகா பதில் சொல்வதாக எண்ணி மேனேஜர் சொன்னார் - “With Pleasure". அதுக்கு உடனே அந்தப் பெண் அப்படின்னா இருபதாயிரமா கொடுத்திடுங்க என்றாள். புரிஞ்சவங்க சிரிச்சிக்கோங்க..

Sunday, December 5, 2010

எவ்வளவோ தாங்கிட்டீங்க, இதையும் தாங்க மாட்டீங்களா என்ன?

அப்படி நம்பித்தான் சங்கர பாண்டி ஐயா நவம்பர் பத்தாம் தேதி மின்மடல் அனுப்பி டிசம்பர் மாதத்தில் ஒரு வாரம் தமிழ் மண நட்சத்திரமாக இருக்க விருப்பமான்னு கேட்டார்.
வேற நல்ல பதிவர் யாரும் கிடைக்காத கொடுமையோ அல்லது இது மாதிரி ஏதாவது பண்ணாலாவது இவன் கொஞ்சம் உருப்படியா எழுதுவான் என்று என்ற அவரின் நினைப்போ
எதுவோ ஒண்ணு அவரை எனக்கு மின் மடல் அனுப்ப வச்சிருக்கு. என்ன பண்றது விதி வலிது இல்லையா? நானும் படிக்கிற பத்துக் கணக்கான (கோடிக்கணக்கான வேணாம்
ஆயிரக் கணக்கான என்று எழுதினாலே அடி பின்னிடுவீங்கன்னு தெரியாதா?) நண்பர்களை நம்பி நானும் ஒத்துக்கிட்டேன்..

ஒரே ஒரு வாரம்தான், ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கிட்டீங்கன்னா, ஏதோ எனக்குத் தெரிஞ்ச சில விசயங்களைச் சொல்லிட்டு ஓடிடறேன். கேபிள் சங்கர் மாதிரி எண்டர் கவிதை
எழுதியோ உண்மைத் தமிழன் அண்ணன் மாதிரி நாவல் சைஸில் இடுகைகளோ எழுத மாட்டேன், நீங்களும் துப்புறதை பின்னூட்டங்களில் துப்பிட்டு மறந்திடணும், நேரில் பாக்குற வரைக்கும் மனசில வச்சிக்கிட்டு பழி வாங்குற அளவுக்கெல்லாம் போகக் கூடாது - இந்த டீலிங் ஓகேவா??

டிசம்பர் ஆறிலிருந்து பன்னிரெண்டாம் தேதிவரை இந்த வாய்ப்பு எனக்கு. இது என்ன மாதிரி co incidence என்று தெரியவில்லை, முதலாம் நாள் நான் (நான் மட்டுமா??) மறக்க விரும்பும் நாள். பன்னிரெண்டாம் தேதி மறக்க முடியாத முக்கியமான நாள். ரஜினியின் பிறந்த நாள் என்கிற வகையில் நெறய பேருக்கு டிசம்பர் 12ம் தேதி விசேஷ தினம், ஆனா எனக்கு வேறொரு வகையில் மறக்க முடியாத நாள், அது பத்தி பன்னிரெண்டாம் தேதி சொல்றேன்.

டிசம்பர் 6 - இந்தியாவுக்கே கறுப்பு தினம். உலக அரங்கில் இந்தியா தலை குனிந்த தினம். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை தகர்ப்புக்கும் இந்தியாவில் 1992ம் ஆண்டு நடந்ததுக்கும்
என்னைப் பொருத்த வரையில் பெரிய வித்தியாசமில்லை. இக்கறுப்பு தினத்தின் அரசியலுக்குள் புக விரும்பவில்லை. ஆனால் இந்தியா சகிப்புத்தன்மை அற்று போனது கண்டும் Co Existence தத்துவத்தில் நம்பிக்கை அற்றுப் போனதும் கண்டு தலை குனிந்த இந்தியர்களில் நானும் ஒருவன். கடவுள் நம்பிக்கை எனக்குண்டு, ஆனால் என்னைப் பொருத்த வரையில் கோவில்களின் தேவையே ஒரு கேள்விக்குறி. கோவில்களின் மீதும் மஸ்ஜித் களின் மீதும் பற்று கொண்டவர்கள் நாடு முழுதும் உள்ள புனரமைக்கப்படாத ஆயிரக்கணக்கான கோவில்களை புனரமைக்க கரம் கோக்காமல் வேண்டாத வேலைக்கு கரம் கோக்க தாழ்ந்தது என் போன்ற நாட்டின் மீது பற்று கொண்டவர்களின் தலை.

இதுக்கு செப்டம்பர் மாதம் வந்த தீர்ப்பு இதை விட பெரிய கொடுமை. இவ்வளவு பிரச்சனைக்கப்புறமும் அங்கே என்ன மயித்துக்கு கோவிலும் மஸ்ஜித்தும். அரசே இடத்தை கையகப் படுத்தி தீன் இலாஹி என்று பேரிட்டு ஒரு பள்ளிக்கூடம் கட்டுங்கடா வெண்ணைகளா. அங்கு படிக்கும் பிள்ளைகளுக்கு நாட்டுப் பற்றையும் நல்ல பண்புகளையும் சொல்லித் தாங்க. நாட்டுக்குத்தேவை பள்ளிகளும், லஞ்சம் வாங்காத அடுத்த சந்ததியும். பிரச்சனைக்கு அலையும் மதவாதிகள் அல்ல.

நான் இப்படித்தான். இந்தியா, லஞ்சம் பத்தி ஏதாவது ஆரம்பிச்சா உணர்ச்சி வசப்படுவேன், ஓவர் செண்டி ஒடம்புக்காகாது, எனவே நம்ப மேட்டருக்கு வருவோம். இந்த வாரத்தில்
வெறும் அமெரிக்கன் விசா பத்தி மட்டும் இல்லாம, Long Long ago விட்டுப்போன அழகா ஆங்கிலம் பேச வாங்க தொடரின் ஒரு பாகமும், நேர்முகத் தேர்வு தொடர்பான தொடரில் ஒரு சில பகுதியும் எழுத உத்தேசம். H1B விசா பத்தின சந்தேகங்கள் இருந்தா கேளுங்க, தெரிஞ்ச வரையில் சொல்றேன்.

ஒரு மிக முக்கியமான விசயம்: நண்பர் நர்சிம்மின் “தீக்கடல்” கவிதைத் தொகுப்பை உயிர்மை வெளியிடுகிறது. “ஏதாச்சும் செய்யணும் பாஸ்” வாக்கியத்தின் சொந்தக்காரர் அடைந்திருக்கும் உயரம் மகத்தானது. முதல் கவிதைத் தொகுப்புக்கு வாழ்த்துகக்ள் நர்சிம். உங்க கிட்டேயிருந்து இன்னும் நெறய எதிர் பார்க்கிறோம் பாஸ். நான் இனிமே தமிழ் ப்ளாக்கர் என்று என்னை சொல்லிக் கொள்வதை விட்டு விடலாமென்று இருக்கிறேன். பின்ன என்னங்க நாலு புத்தகங்கள் எழுதிய யுவகிருஷ்ணாவையும், கதை மற்றும் கவிதைத் தொகுப்பு எழுதிய நர்சிம்மையும் என்னையும்ஒரே அடைக்குறிக்குள் வச்சா நல்லாவா இருக்கு? கமலஹாசனும் J.K.ரித்திஷும் தமிழ் சினிமா உலகில் கதாநாயகர்கள் என்று சொல்வதைப் போல இருக்கு என் நிலைமை.

அப்புறம், இன்றிலிருந்து அனானி ஆப்சன் எடுத்திடறேன். கொஞ்ச நாளைக்கு முன்னர் ஒரு பிரச்சனை வந்த போது உண்மைத் தமிழன் உள்பட பல பதிவர்கள் அனானி ஆப்சன் எடுக்கச்
சொல்லி அட்வைஸ் பண்ணாங்க, அப்பவே சொல்லியிருந்தேன் - ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டேன், முடிச்சிட்டு எடுக்கறேன்னு. இப்போ ஓரளவுக்கு அனானி பிரச்சனை கொறஞ்சு இருக்கு. அருண் என்று ஒரு நண்பர் அனானி ஆப்சன்ல வந்து பல நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்கார், இது மாதிரி இன்னும் பல பேர். ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தில் மட்டற்ற நம்பிக்கை இருக்கும் எனக்கு அனானி ஆப்சன் எடுப்பதில் வருத்தமே, இருப்பினும் தொல்லைகளில் இருத்து தப்பிக்க அது ஒன்றே வழி என்பதினால் இன்றும் முதல் இந்த வலைப்பூவில் அனானி ஆப்சன் இருக்காது. வேறொரு சமயத்தில் இதை மாற்றும் நிலை வரும் என நம்புகிறேன். அருண் போன்ற நண்பர்கள் பின்னூட்டங்களை தனிமடலில் அனுப்பினால் இடுகையில் சேர்த்து விட உத்தேசித்திருக்கிறேன். அப்புறம் அக்டோபர் 15 அன்று எழுதிய ஒரு வேண்டாத இடுகையையும் நீக்கி விட்டேன்.

அடுத்த ஏழு நாளும் என்னுடன் தமிழ் மண முகப்பில் பயணிக்க இருக்கும் அனைவருக்கும் நன்றி.

Tuesday, November 16, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை - பகுதி 5

முந்தைய பகுதிகள்
முஸ்கி (பின்னாடி போட்டா பின் குறிப்பு அல்லது டிஸ்கி, அப்போ முன்னாடி போட்டா முஸ்கி தானே?) : எந்திரன் பாக்காதவனும் என்கவுண்டர் பத்தி கருத்து சொல்லாதவனும்
தமிழனே இல்லைன்னு ஆகிப் போச்சு, அதனால நான் சொல்லிக் கொள்வது என்னன்னா..

நான் எந்திரன் பாத்துட்டேன், அதுக்கப்புறம் வ பார்த்தேன். வ பார்த்தப்புறம் எந்திரன் நல்ல படமா தெரிந்தது எனக்கு (இதை விடச் சின்னதா ரெண்டு பட விமர்சனம் யாராவது எழுதுங்க பாப்போம்)

அப்புறம் என்கவுண்டர் பத்தி என் கருத்து : இந்தியாவில் உள்ள எல்லா போலீஸ் தலைகளும் நீதிபதிகளும் ரூம் போட்டு பேசி ஒரு முடிவுக்கு வரலாம். எந்தெந்த கேஸ்களை நீதி மன்றத்துக்கு கொண்டு போகலாம், எந்தெந்த கேஸ்களை போலீஸே என்கவுண்டர் மூலம் தீர்க்காலாம் அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டுட்டா ஒவ்வோரு என்கவுண்டரின் போதும் நானூறு இடுகைகளிலிருந்து தப்பிக்கலாம். அம்புட்டுதேன்..


இப்போ நம்ம பொழப்பைப் பார்க்கலாம். பகுதி ரெண்டில் அமெரிக்காவில் L1 / H4 விசாக்களில் இருப்பவர்களும் சுலபமாக Visa Transer with Status Change செய்வதில் பிர்ச்சனை இருக்குன்னு சொல்லியிருந்தேன். அது என்னன்னு இப்போ பாக்கலாம்.

சென்ற ஆண்டு வரை L1 / H4 விசாக்களில் இருந்தவர்கள், மார்ச் ஏப்ரல் மாதங்களில் கன்சல்டிங் கம்பெனிகளைத் தொடர்பு கொண்டு H1B விசா விண்ணப்பிக்க விருப்பம் தெரிவிப்பார்கள். கம்பெனிகளும் பேரம் ஒத்துவந்தவர்களுக்கு விசா அப்ளை செய்வார்கள். வருடா வருடம் அக்டோபர் 1ம் தேதி அமுலுக்கு வரும் அறுபத்து ஐந்தாயிரம் விசாக்களுக்கு விண்ணப்பம் பெறுவது ஏப்ரல் 1ம் தேதி துவங்கும். 2006ம் ஆண்டுவரை இந்த கோட்டா சில பல மாதங்கள் வரை திறந்திருந்தது. 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் ஏப்ரல் ஒண்ணாம் தேதியே கிட்டத்தட்ட மூணு மடங்கு விண்ணப்பங்கள் USCIS அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன - அதிலிருந்து 65000 பேர் லாட்டரி முறையில் தேர்ந்து எடுக்கப் பட்டனர். 2009 ம் ஆண்டு நிலைமை தலைகீழ் - பொருளாதார மந்த நிலைமை காரணமாக வேலை வாய்ப்புகள் குறைந்தன. H1B மீதிருந்த மோகம் கொஞ்சம் குறைந்தது. கோட்டா டிசம்பர் மாதம் வரை திறந்திருந்தது. அப்போதும் L1 / H4 விசாக்களில் இருந்து கொண்டு H1B க்கு மாற விரும்பியோர் பெரும்பாலானோருக்கு விசா கிடைத்தது. அவங்க எல்லாருக்கும் கன்சல்டிங் கம்பெனிகள் Internal Project இருக்கறா மாதிரி காமிச்சு அப்ரூவல் வாங்கிக்கிட்டு இருந்தாங்க.அப்ளை செய்து ஓரிரு மாதங்களில் விசா அப்ரூவல் கிடைத்தது (ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்). அப்ரூவல் கிடைத்த மக்கள் செப்டம்பர் மாதத்திலிருந்து புது ப்ராஜக்ட்டுக்கு தேடுவாங்க, ப்ராஜக்ட் கிடைத்ததும் L1 விசாவில் பார்த்த வேலையை விட்டுட்டு H1 க்கு மாறுவாங்க.. இந்த ஆண்டு வரை நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்தது.


இதுக்கு இந்த ஆண்டு USCIS வச்சுது ஒரு ஆப்பு இல்ல இல்ல ரெண்டு ஆப்பு, மொதோ ஆப்பு - Confirmed Client work order (அதாங்க உண்மையான் ப்ராஜக்ட்) மற்றும் Clinet Letter இல்லாம H1B கொடுக்கறதில்ல. அப்புறம் ஆகஸ்ட் 14ம் தேதியிலிருந்து H1B Fee $2320 லேருந்து $4320 ஆக உயர்த்தி ரெண்டாவது ஆப்பு வச்சுது USCIS.ரெண்டாவதாவது வெறும் பணம் சம்பந்தப் பட்ட விசயம். மொதலாவது ஆப்பு கன்சல்டிங் கம்பெனிகளையும் வேலை தேடுவோரையும் செம Catch 22 situation ல வச்சிடுச்சு.போன வருசம் வரைக்கும், மொதல்ல விசா வந்திடும், அப்புறம் ப்ராஜக்ட் கெடைச்சதும், தற்போதைய கம்பெனிக்கு ரெண்டு வாரம் நோட்டீஸ் கொடுத்துட்டு புது கம்பெனி மற்றும் ப்ராஜக்ட்ல சேந்துடுவாங்க, இந்த வருசம் வேலை கெடைச்சாதான் விசா அப்ளை பண்ண முடியுங்கற நெலமை. Premium Processing ல போட்டா கூட விசா கிடைக்க 4-5 வாரம் ஆகும், விசா கெடைச்சப்புறம் தான் பார்க்கும் வேலையை விட முடியும், அதுக்கு ஒரு ரெண்டு வாரம் தேவை. எந்த க்ளையண்டும் ஒரு Contract worker க்காக கிட்டத்தட்ட
ரெண்டு மாசம் காத்திருக்கத் தயாரில்லை. அது மட்டுமல்லாமல் அவருக்கு விசா கிடைக்குமா என்கிற உத்தரவாமில்லாத நிலையில் யாரரையும் வேலைக்கு எடுப்பதில்லை.
விசாவோடு வா வேலை தர்றேன்னு சொல்ற க்ளையண்ட் ஒரு புறம், வேலை கெடைச்சப்புறம் சொல்லு விசா தர்றேன்னு சொல்ற USCIS ஒரு புறம் - L1 மக்களுக்கு இருபுறமும் அடி.

விப்ரோ, இன்ஃபோஸிஸ், TCS போன்ற கம்பெனிகளில் L1 விசாவில் வேலை செய்யும் கணினித்துறையினருக்கு இக்கம்பெனிகள் பெரும்பாலும் Green Card sponsor செய்வதில்லை. அதுமட்டுமல்லாமல் வாங்குற சொற்ப சம்பளத்துக்கு 12 -14 மணி நேரம் வேலை செய்யணும்.நல்ல கன்சல்டிங் கம்பெனியில சேந்தால் - நல்ல சம்பளம் அத்துடன் சில பல வருசங்களில் பச்சை அட்டையும் வாங்கிடலாம். அதனால நெறய பேர் கன்சல்டிங்குக்கு தாவறாங்க. இந்த வருட மாற்றத்தினால் பாதிக்கப் பட்டவங்க இவங்க. இதுக்கு என்னதான் தீர்வு??

1. தற்போது வேலை செய்யும் கம்பெனியை உங்க விசாவை L1 லேருந்து H1 க்கு மாத்தச் சொல்லி கேட்டுப்பாருங்க - கொஞ்சம் கஷ்டம்தான் - L1 ல இருக்கறவங்க H1 கேட்டா
சந்தேகம் வரும். கம்பெனியில் கொஞ்சம் HOld இருந்தா காய் நகர்த்திப் பாருங்க. H1 கெடைச்சதுக்கப்புறம் ட்ரான்ஸ்பர் செய்வது எளிது.

2. சமீபமா இந்தியாவில் இருக்கும் Embassy களில் L1 Stamping நெறய ரிஜக்ட் ஆவதால உங்க L1 Expire ஆகும்போதோ இல்ல கோட்டா முடியும் முன்னரோ உங்க கம்பெனி அவங்களாகவே உங்களுக்கு H1 அப்ளை பண்ண வாய்ப்பிருக்கு. கொஞ்சம் காத்திருக்கலாம்.

3. மொதோ ரெண்டு விசயங்களில் உங்க கிட்ட கண்ட்ரோல் இல்லை, இது அப்படியில்லை. உங்க Resume வை உங்களுக்கு / நண்பர்களுக்குத் தெரிந்த எல்லா Hiring Managerகளுக்கு அனுப்பி வைங்க. தேர்ந்தெடுக்கப் பட்டால் விசா ப்ராசஸ் பண்ண நல்ல கன்சல்டிங் கம்பெனி தயாராக இருப்பதாகவும் 5-6 வாரங்களுக்குள் கண்டிப்பாக வேலையில் சேர முடியுமெனவும் உறுதி கொடுங்க. தெரிஞ்சவங்க மூலம் வரும் Resume க்கு என்னிக்குமே மதிப்பு அதிகம்.உறுதியா வேலையில் சேருவார்ன்னு தெரிஞ்சா மேனேஜர்கள் வேலை கொடுக்க வாய்ப்புண்டு. Law of Averages இல் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு. நூறு பேருக்கு ஒரு பொருளையோ சேவையைப்பத்தியோ சொன்னால் கண்டிப்பாக ஒருவருக்காவது தேவை இருக்கும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை...

4. H4 ல இருக்கும் அம்மணிகள் Afford பண்ண் முடிஞ்சா M.S படிக்க ஏதாவது ஒரு யுனிவர்சிடில ஜாயின் பண்ணிடுங்க. There will be some light at the end of the tunnel. ரெண்டு வருசம் கழிச்சு OPT மூலம் 29 மாசம் EAD கிடைக்கும், அதுக்குள்ள H1b பண்ணிடலாம் அல்லது உங்க கணவரின் மூலம் உங்களுக்கும் பச்சை அட்டை கிடைக்கலாம்.

பின் குறிப்பு : இத்தொடர் குறித்தான உங்க மேலான கருத்துக்களை சொல்லுங்க, உங்க கருத்துக்களின் அடிப்படியில்தான் அடுத்த மாசம் இதில் Concentrate பண்ணலாம இல்ல ரொம்ப நாளா நினைப்பில் இருக்கும் இண்டர்வியூ குறித்தான தொடரில் கவனம் செலுத்தலாமான்னு முடிவு பண்ணனும். கேள்விகள் / சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்க,எழுத மேட்டர் இல்லாமல் இருக்கும் எனக்கு லீட் கொடுக்க உங்களை விட்டா யாரு இருக்காங்க?

கொஞ்சம் வேலை இருப்பதால் டிசம்பர் முதல் வாரம் அடுத்த இடுகை வரும். யாருங்க அது ஐயா மூணு வாரம் நிம்மதின்னு குதிக்கறது?? இதுக்கெல்லாம் சேத்து வச்சிக்கறேன் அடுத்த மாசம்..

Wednesday, October 27, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை பகுதி 4

இத்தொடரின் முந்தைய இடுகைகள்

ரெண்டாம் பகுதியில் நம்ம பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ போட்ட பின்னூட்டத்திலிருந்து லீட் எடுத்து மூணாம் பகுதியில் அமெரிக்கவின் டாப் டென் ஜாப் மார்க்கெட் ஏரியாக்கள் பத்தி
எழுதினேன், மேலும் அவர் கேட்ட சம்பளம் / செலவு பத்தி அடுத்த பகுதியில் சொல்றேன்னு சொல்லியிருந்தேன், மூன்றாம் பகுதியிலும் நம்ம ராம்ஜி அதையே திரும்ப கேட்டிருந்தார்.
அவருக்கு இவ்விடுகை சமர்ப்பணம்.

எந்த நகரங்கள் பணி புரிய +வாழ சிறந்த இடங்கள் - பதில் சொல்லியாச்சு

வீட்டு வாடகை என்ன செலவு ஆகும் - இது இடத்துக்கு இடம் மாறுபடும், நியூயார்க், கலிபோர்னியா, நியூ ஜெர்சி, சிகாகோ, பாஸ்டன் ஆகிய இடங்களில் அதிகமாகவும், டெக்சாஸ், நார்த் கரோலினா போன்ற இடங்களில் கம்மியாகவும் இருக்கும், தோராயமாக ஆயிரம் டாலர்கள் வாடகைக்கு எடுத்து வைப்பது நல்லது.

உணவு, குழந்தைகள் கல்வி கட்டணம் எவ்வளவு செலவு ஆகும் ( தோராயமாக).

அமெரிக்காவில் அரசாங்க பள்ளிகளில் கல்வி இலவசம். பெரும்பாலானோர் பிள்ளைகளை அரசாங்க பள்ளிக்கே அனுப்புகின்றனர். தனியார் பள்ளிகளும் இங்குண்டு - For the
affluent class. குழந்தைகள் செலவு விசயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் நேரெதிர். இந்தியாவில் குழந்தை பள்ளி செல்லும் வரையில் ரொம்ப செலவாகாது, பள்ளி செல்ல
ஆரம்பிச்ச உடனே டொனேஷனில் தொடங்கி எக்கச்சக்க செலவு. பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் மெரிட்ல சீட் பொறியியல் / மருத்துவம் கிடைத்தாலோ அல்லது BA / BSC / BCom சேந்தாலோ ரொம்ப செலவாகாது. அமெரிக்காவில் 5 வயசில தான் பிள்ளைகளை பள்ளியில் சேக்க முடியும், அதுவரை Day Careக்கு ஆகும் செலவு அசாத்தியமானது.
பாஸ்டன் ஏரியாவில Day Care க்கு 2008 ஆனதாக National Assn of Child Care Resource & Referral Agencies சொன்னது $15895 Per kid. கடந்த ரெண்டு வருசத்தில பத்து சதவீதம் கட்டணம் கூடியிருந்தால் கூட வருசத்துக்கு பதினேழாயிரத்துக்கு மேல வரும். ஆனா 5 வயசாச்சுன்னா, KG முதல் 12 ம் வகுப்பு வரை கல்வி இலவசம், பள்ளிப் படிப்பு முடிச்சதும் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடும் - கல்லூரிப் படிப்பு அத்தனை Expensive.

எவ்வளவு செலவு ஆகும் : இதுக்கு பதில் சொல்வது ரொம்பக் கடினம். Variable Parameters ரொம்ப ஜாஸ்தி.. இருப்பினும் ஒரு சின்ன குடும்பத்துக்குத் தோராயாமா ஆகும்
செலவைப் பார்க்கலாம்: வாடகை - 1000, மின்சாரம் - 50, Heating : 50, செல்போன் - 50, டீவி - 50 (comcast க்கு அம்பது டாலர் குடுத்து அனைத்து ஆங்கில சேனல்கள் பார்க்கலாம் அல்லது பத்து டாலருக்கு ரொம்ப கம்மி ஆங்கிலமும் மிச்சம் 35-40 டாலருக்கு சன் டீவி பேக்கேஜும் பாக்கலாம்) இந்தியாவுக்கு தொலைபேச - 35$, இண்டர்நெட் - 50$
பால், மளிகை, காய்கறி இன்ன பிற 750-800$, கார் தவணை 250$, கார் இன்சூரன்ஸ்100$, பெட்ரோல் 150$, மருத்துவம் 100$, ஷாப்பிங்க் 200$, வெளியில் சாப்பிடும்
செலவு 250, Local vacation in US : 250$ மற்றும் இந்திய பயணத்துக்கு மாசாமாசம் ஒரு 250$ எடுத்து வைக்கணும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சில விசயங்கள் அதிகமாகலாம் வேறு விசயங்கள் கம்மியா ஆகலாம். உதாரணமாக கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போனா Eating out / Lunch செலவு அதிகமாகும், ரெண்டு கார் வச்சிருந்தா பெட்ரோல், இன்சூரன்ஸ் அதிகமா ஆகும். ஒரு typical family (2 + 1 kid) க்கு ஆகும் செலவு தோராயமாக 3800 $ முதல் 4000 $ (மாசத்துக்கு) ஒரு ஆயிரம் டாலராவது சேமிக்க முடியலன்னா அமெரிக்கா வருவதில் அர்த்தமே இல்லை, அதையும் சேத்தா மொத்தம் ஐயாயிரம் டாலர்.

To get 5000$ post tax, your salary should be in the order of $7500 to 8000$ per month. The tax structure will vary depending on number of dependents one has. The more the number of dependents the lesser the tax will be..

ராம்ஜி : வருசத்துக்கு 80,000$ - 100,000$ சம்பளம் கிடைச்சா உடனே ஃப்ளைட் ஏறிடுங்க..

ராம்ஜியின் அடுத்த சந்தேகம்: வீடு எங்கே தேடுவது :

இது பத்தி போன பகுதியின் பின்னூட்டதிலேயே சொல்லியிருந்தேன்.
இதுக்கு மொதல்ல இந்திய நகரங்களுக்கும், அமெரிக்க நகரங்களுக்கும் உள்ள வித்தியாசம் பத்தி தெரிஞ்சிக்கணும்.

Locations are City Based in India - Example Chennai City goes upto Tambaram (or even beyond) in the south, beyond Ambattur on
one side and now OMR is considered as Chennai.

Imagine Just Parrys Corner and Mount Road are called Chennai and Saidapet is mentioned as Saidapet, Taminadu instead of Saidapet, Chennai
- This is the basic difference.
உதாரணத்துக்கு பாஸ்டன் நகரை எடுத்துக் கொண்டால் Downtown என்று அழைக்கபடும் இடமும் அதைச் சுற்றியுள்ள வெகு சில இடங்களும் மட்டுமே பாஸ்டன் பின்கோடில் வரும். மற்றவையெல்லாம் Subrubs. இங்கு நம்ம ஊர்ல இருக்குற மாதிரி ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கெல்லாம் வாகன வசதி (Public Transportation) கிடையாது. All roads lead to Romeன்னு சொல்றா மாதிரி நெறய இடங்களிலிருந்து Down Town க்கு மட்டும் ட்ரெயின் இருக்கு. அலுவலகம் Down Town ல இருந்தா வீடு சல்லிசாவும் நல்ல பள்ளிகள் எங்கே இருக்கோ அங்கேயும் வீடு எடுத்துக்கலாம். அலுவலகம் Down Town இல் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தால் அதற்கு அருகாமையில் மேலே சொன்ன Parameters எங்க இருக்கோ அங்க வீடு எடுத்துக்கலாம்.

இந்த சப்ஜெக்ட் பேசும் போது ஒரு சில தகவல்களையும் தெரிஞ்சிக்கலாம். அமெரிக்காவின் குறைந்த விலைவாசி கொண்ட பத்து மாநிலங்கள் 1.Oklahoma 2.Texas
3. Tennessee 4. Arkansas 5.Nebraska 6.South Dakota 7.Missouri 8.Kansas 9.Georgia 10. Mississippi
இதுல டெக்சாஸிலும் ஜியார்ஜியாவிலும் வேலைவாய்ப்புகளும் நல்லா இருக்கும்.

பாஸ்டனுக்கும் சார்லெட்டுக்கும் விலைவாசியில் கிட்டத்தட்ட 30% வித்தியாசம் இருக்கு. இங்க போயி பாருங்க
http://www.bankrate.com/calculators/savings/moving-cost-of-living-calculator.aspx ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்கு, இரண்டு ஊர்களுக்கு இடையில்
இருக்கும் விலைவாசி வித்தியாசத்தை அழகா பட்டியலிட்டு இருக்காங்க..

ரெண்டாம் பகுதியில அம்போன்னு விட்ட (அம்பி சார் ரொம்ப அக்கறையா விசாரிச்ச) விசா ட்ரான்ஸ்ஃபர் பிரச்சனை பத்தியும் இடமிருந்தா அப்பாவி தங்கமணி கேட்ட கனடா மேட்டரையும் அடுத்த பகுதியில் பாக்கலாம்.

Tuesday, October 19, 2010

கனவு தேசத்தில் கணணி வாழ்க்கை பகுதி 3

பகுதி இரண்டில் நம்ம பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ சில விவரங்கள் கேட்டு பின்னூட்டம் போட்டிருந்தார்.

அப்பின்னூட்டம் : எந்த நகரங்கள் பணி புரிய +வாழ சிறந்த இடங்கள்.வீட்டு வாடகை என்ன செலவு ஆகும்? உணவு, குழந்தைகள் கல்வி கட்டணம் எவ்வளவு செலவு ஆகும் ( தோராயமாக). குறைந்த பட்ச ஊதியம் எவ்வளவு இருந்தால் அமெரிக்கா பணிக்கு வர வேண்டும்.

இந்த இடுகையில் இவை பத்தி எழுத ஆரம்பிக்கிறேன்.

விவரங்களுக்குள்ள போகும் முன்னே ஒரு டிஸ்கி : இங்கு சொல்லப் படுபவை என்னோட தனிப்பட்ட கருத்து மட்டுமே, மேலும் The suggested locations are only from the stand point of getting contract jobs while one works in Consulting under H1B Visa. Until Green Card, H1B will play a major role in every decision and having a project is imperative to keep the H1B alive.

1. வாழ / பணி புரிய சிறந்த இடங்கள் : அமெரிக்கர்களில் நிறைய பேர் ஒரே ஊரில் பிறந்து அங்கேயே வாழ் நாள் முழுதும் இருக்கின்றனர். இங்கு குடியேறியிருக்கும் மற்றவர்கள்தான் (குறிப்பாக இந்தியர்கள்) இடமாற்றத்தை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதுக்கு எனக்குத் தெரிந்து இரண்டு காரணங்கள் - 1. மேலே சொன்னது போல விசாவில் இருக்கும் வரை வேலையில் இருப்பதுதான் முக்கியம், எங்கு வேலை கெடைக்குதோ அங்க பொட்டி கட்டவேண்டியதுதான் 2. அமெரிக்காவில் எங்கிருந்தாலும் அது நமக்கு வெளி நாடுதான் - இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட ஒரே தூரம் தான். (ஒரே நேரம்தான்னு சொல்ல முடியல ஏன்னா அமெரிக்காவில் 4 Time Zone இருக்கு)

பொதுவா அமெரிக்காவில் வாழ சிறந்த இடங்கள் லிஸ்ட் வேணும்னா இணையத்தில நெறய இருக்கு, http://money.cnn.com/magazines/moneymag/bplive/2010/top100/
இந்த லிங்க்ல பாத்தீங்கன்னா பத்தென்ன நூறு இடங்களின் பட்டியலே இருக்கு.

இப்போ கன்சல்டிங்ல இருக்கும் தேசி மக்களுக்கு உகந்ததாக நான் கருதும் (நல்ல பாத்துக்கோங்க மக்கா முக்கியமா ஹாலி பாலா, இதுல ஃப்ளோரிடா இல்லாதது என்னோட கருத்து மட்டுமே) டாப் டென் இடங்களைப் பார்க்கலாம். அப்புறம் Cost of Living ல வாடகையை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்வேன். மாநில வரி தவிர மத்த விலைகள் ஓரளவுக்கு எல்லா இடத்திலும் ஒரே மாதிர்தான் இருக்கும். (எங்க போனாலும் அதே வால்மார்ட், அதே மேசீஸ், அதே டார்கெட் இன்ன பிற இன்ன பிற)

1. நியூ யார்க் நகரம் / நியூ ஜெர்சி : என்னை பொருத்த வரைக்கும் இந்த மெட்ரோ ஏரியாத்தான் வேலைகளின் தலை நகரம் என்பேன். NY / New York என்பது நியூ யார்க் மாநிலத்தைக் குறிக்கும், NYC / New York City என்பது உலகப் புகழ் நியூயார்க் நகரத்தைக் குறிக்கும் (ஆமா பச்சையம்மா கையில் தீப்பந்தம் பிடிச்சிக்கிட்டு நிக்குமே அதேதான்). ஹட்சன் நதி நியூயார்க் நகருக்கும் நியூ ஜெர்சி மாநிலத்தின் ஜெர்சி சிடிக்கும் இடையில் இருக்கு, NYC யும் NJ உம் சேர்ந்த ஒரு மெட்ரோ ஏரியா மிகப்பெரிய Job Market Area. இந்தப் பகுதியில இருக்குறவங்களுக்கு அடுத்தடுத்து ப்ராஜக்ட் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

சாதகங்கள் : மிக அதிக அளவில் இந்தியர்கள் இருக்குமிடம், இந்தியப் பொருட்களின் availability, அமெரிக்காவின் சிறந்த Public Transport System, வேலை வாய்ப்பு

பாதகங்கள் : மிக அதிக அளவில் இந்தியர்கள், குளிர், பனிப் பொழிவு, வாடகை அதிகம்.

2. கலிபோனிர்யாவில் - சான்ஃப்ரான்ஸிஸ்கோ / சன்னிவேல் / சனோசே (San Jose) பகுதி : இதுவும் மிக அதிக வேலை வாய்ப்பு உள்ள பகுதி மற்றும் இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதி + : வேலை வாய்ப்பு, மிதமான் சீதோஷண நிலை (வருடம் முழுதும் கிரிக்கெட் விளையாடலாம்), இந்தியர்கள் / இந்தியப் பொருட்கள் மற்றும் சன்னிவேலில் உள்ள இந்திய உணவகங்கள் (பாஸ்டன்ல சரவண பவன் இல்லாத கொடுமை எனக்குத்தான் தெரியும்)
- : மிக அதிக வாடகை

3. டெக்சாஸ் மாநிலம் - முக்கியமாக டல்லாஸ் (Dallas) ஏரியா : வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள ஏரியா. இங்கும் இந்தியர்கள், இந்தியக் கடைகள், உணவகங்கள் அதிகம்.
குளிர் தாங்காதுன்னு சொல்றவஙக்ளுக்கு நல்ல இடம், ஆனா வெயில் அதிகம். State Tax கிடையாது (உதாரணமா பாஸ்டன்ல் இருந்தா வருமான வரியில் 5 % State Tax)
மற்றும் மிகக் குறைந்த வாடகை (பாஸ்டன்ல 2BHK 1500 $ டல்லாஸ்ல 500 - 800 $) ஆகியவை சாதகங்கள். வெயில் ஒரு நெகடிவ் பாயிண்ட்.

4. சிகாகோ : Windy City என்றழைக்கப்படும் சிகாகோ என் பார்வையில் அடுத்த சிறந்த இடம். அழகான ஊர், மிக அதிக வேலை வாய்ப்புகள். குளிர், பனிப்பொழிவு, குளிர் காற்று என இயற்கைத் தொந்தரவு அதிகம், மிதமான வாடகை விகிதங்கள். ரெண்டு அழகான கோவில்கள் இங்க இருக்கு.

5. சார்ல்லெட் (Charlotte, North Carolina): சமீப காலங்களில் நெறய கம்பெனிகள் காலூன்றிய இடம் (Bank of America, Fidelity, Red Hat, Wachovia are a few to name). நெறய வேலை வாய்ப்புகள், அப்படியே வேலை கெடைக்கலனாலும் சீமாச்சு அண்ணனிடமோ, பழமை பேசியாரிடமோ சொன்னா ஒடனே வேலை போட்டுக் கொடுத்திடுவாங்க, ரெண்டு பேரும் மொதலாளிகளாக இங்க இருக்காங்க. அருமையான் வெதர், அதிகம் செலவு வைக்காத ஊர். One of my favorites.

6. பாஸ்டன் : ஐயா எங்க ஊர், எங்க ஊர். பாஸ்டன் பாலா, இளா போன்ற பிரபல பதிவர்கள் இருக்கும் ஊர், வெட்டிப்பயல் பாலாஜி இருந்த ஊர் அப்படின்னு ஏகப்பட்ட பெருமை
இந்த ஊருக்கு. இதுபோக Educational Capital of US ன்னு சின்னதாவும் ஒரு பெருமை இருக்கு. Financial Companies, Edu Institutions,
Insurance Companies, Pharma / Bio companies
ன்னு நெறய இருக்கு - வேலை வாய்ப்பு அதிகம். ஓரளவுக்கு நல்ல Public Transportation உள்ள ஊர். குளிர், பனிபொழிவு, அதிக வாடகை, மோசமான் ட்ராஃபிக் போன்றவை நெகடிவ் பாயிண்ட்ஸ்.

7. மின்னியாபொலிஸ் (minneapolis) : அமெர்க்காவின் Ice Box என்று சொல்லலாம், அவ்வளவு குளிர். இருப்பினும், நெறய கம்பெனிகள் இருப்பதால் (Target, United Health, Wells Fargo, Xcel Energy, Pepsi, 3M Etc) இங்கு நிறைய வேலை வாய்ப்புகள்.

8. Washington DC, Baltimore MD, some part of Virginia அடங்கிய DC Metro area : தலைநகரமும் அதன் அருகாமையில் இருக்கும் இடங்களும். புதுதில்லி, குர்கான், நொய்டா அடங்கிய மெட்ரோ ஏரியா மாதிரி. Government client concentrated area.

9. அட்லாண்டா

10. கொலம்பஸ், ஒஹாயோ (Columbus, OH)

இது என் பார்வையில் டாப் டென் இடங்கள், உங்க மதிப்பீடு வேற மாதிரி இருக்கலாம். எல்லா மாநிலங்களிலிருந்தும் எனக்கு வரும் வேலை வாய்ப்பு விவரங்களை வைத்து இதைத்
தொகுத்திருக்கிறேன்.

ராம்ஜி யாஹூ கேட்ட மத்த விவரங்கள் அடுத்த பகுதியில்..

Adios Amigos...