Monday, December 28, 2009

நல்ல மேனேஜரின் நற்குணங்கள் நாலு - பாகம் 2

பாகம் 1 இங்கே காணலாம்.

போன பாகத்தில் என்னை பாதித்த மேனேஜர்களின் 4 நல்ல குணங்கள் பத்திப் பாத்தோம், இந்த பகுதியில் இன்னுமொரு 4 பாயிண்ட் பாக்கலாம்.

1. பாரபட்சம் காட்டாதீர்கள் :
As the famous saying goes "Employees don't intend to leave the company but their managers" மேனேஜர்களின் மீது மிக அதிகமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு - பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்பது. டீமில் யாருக்கும் ”Special Treatment” கொடுக்காதீர்கள். ஜால்ரா அடிப்பவர்கள் / ஜொள் விட அனுமதிக்கும் பெண்கள் /மேனேஜருக்கு பர்சனல் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு பாரபட்சம் காட்டுவது நீங்களே உங்களுக்கு குழி பறித்துக் கொள்வதற்கு சமம். நல்ல வேலையாட்கள் உங்கள் டீமில் தங்க மாட்டார்கள்.

பெண்களை இரவு ரொம்ப லேட்டாக ஆபிஸில் வேலை வாங்காமல் சீக்கிரம் அனுப்புவது பாரபட்சம் ஆகாது.

2. பாராட்டுங்கள் தாராளமாக: தவறுகளை சுட்டிக் காட்டும் போதும், திட்டுக்களையும் பிறருக்கு தெரியாமல் தனிமையில் செய்யுங்கள். டீமில் ஒருவர் செய்த நல்ல செயலை உடனடியாக பாராட்டுங்கள் அதையும் பொதுவில் செய்யுங்கள். Never mince words while appreciating. Appreciation email அனுப்பும் போது மொத்த டீமுக்கும் copy பண்ணி அனுப்புங்கள், முக்கியமாக மேனேஜ்மெட்டில் இருக்கும் ஒருவரையும் இமெயிலில் சேருங்கள்.அப்ரைசல் செய்யும் போதும் முதலில் ஒருவர் செய்த நல்ல விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு குறைபாடுகளை சொல்லுங்கள்- உங்கள் மீதான மதிப்பு கூடும்.

3. ஆபிஸ் நேரத்துக்குப் பின் அழைக்கும் போது அனுமதி கேளுங்கள்:

கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானது இது. ஆபிஸ் மட்டுமே வாழ்க்கையில்லை, எல்லோருக்கும் Personal Life உண்டு, ஆபிஸ் நேரத்துக்குப் பின் ஒருவரை தொந்தரவு செய்யும் உரிமை எந்த
மேனேஜருக்கும் இல்லை. முடிந்த வரை வேலை நேரத்துக்குப் பின் வேலை சொல்வதையோ / போன் பண்ணுவதையோ தவிருங்கள், தவிர்க்கமுடியாமல் அழைக்கும் பட்சத்தில் முதலில் அகால நேரத்தில் அழைத்தமைக்கு வருத்தம் தெரிவித்து விட்டு அவரால் பேச இயலுமா என்று கேட்டு விட்டு விஷயத்தைச் சொல்லுங்கள்.

4. Exit Interview :

Every good thing in life has an end, your mate's tenure in your team is no exception- இதனை எப்போதும் மனதில் வையுங்கள். டீமில் ஒருவருக்கு நல்ல வாய்ப்பு அமைந்து அவர் resign செய்தால் அவரை வாழ்த்தி அனுப்புங்கள். கண்டிப்பாக ஒரு Exit Interview
நடத்துங்கள். கம்பெனியில் / உங்கள் டீமில் சரியில்லாத விஷயங்கள் எவை என்று கேளுங்கள். ஏதாவது ஒன்றை மாற்றி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் அவர் எதை மாற்றுவார் என்று கேளுங்கள். அவர் உங்கள் பெயரை Manager's reference ஆக எப்போதும் பயன் படுத்தலாமென
சொல்லுங்கள்.

ஒரு மாசத்துக்கும் மேலாக எதுவும் கிறுக்கவில்லை, அப்படி இருந்தும் இந்தப் பக்கம் அடிக்கடி வந்து ஏன் கிறுக்கலைன்னு கேட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி..

ஒரு பத்து நாள் Florida, Bahamas Trip போயிட்டு வந்தேன், பயணக் கட்டுரை எழுதுற அளவுக்கெல்லாம் சரக்கு இல்லைங்க, எனவே படங்கள் போடுறேன் அடுத்த பதிவில்...