இன்னுமா இவன இந்த உலகம் நம்புதுங்கற ரேஞ்சில இருக்குற பல பேர நமக்குத் தெரியும், ஆனால் இன்னுமா இவரது திறமையில் சந்தேகம், இன்னுமா இவர இந்த உலகம் நம்பலன்னு சொல்லக்கூடிய வெகுசிலரில் சச்சினும் ஒருவர்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவரது Match Saving Century க்கு அப்புறமாவது டெண்டுல்கருக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துவார்களா? எத்தனையோ Match Winning Innings ஆடியிருந்தாலும் இந்த இன்னிங்க்ஸும் மிக முக்கியமான ஒன்று.
லோஷனின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கிய சச்சின் Critics இன் கூற்றையும் தவறென நிரூபித்திருக்கிறார். இனிமேலாவது சச்சின் முக்கியமான தருணங்களில் ரன் எடுப்பதில்லை / தனக்காக ஆடுகிறார், டீமுக்காக ஆடுவதில்லைன்னு சொல்றதையெல்லாம் நிறுத்துவார்களா பெரியவர்கள்??
சச்சினின் சாதனைகள் மிக அதிகம், எல்லாருக்கும் தெரிந்த விஷயங்களை மீண்டும் சொல்லி போர் அடிக்க விரும்பவில்லை, இதை மட்டும் பாருங்கள்
30,055 இண்டர்நேஷனல் ரன்கள், 88 சதங்கள், 144 அரை சதங்கள், டெஸ்ட் ஆவரேஜ் 54.79, ODI average 44.50 at a strike rate of 85.79. இதற்கு மேலும் ஒரு குழு ஆட்டத்தில் தனி நபரிடம் என்னதான் இந்த பாழப்போன விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.
நவ்ஜோத் சித்து சொன்னது போல - Statistics is like mini skirt, it reveals most of the things but not the most import thing. சச்சின் எண்களில மட்டுமல்லாமல் Attitude / Commitment போன்றவற்றிலும் மிக உயர்ந்து நிற்கும் ஒரு மனிதர். ஆஸ்திரேலியாவிற்கு
எதிரான ஷார்ஜா ஆட்டங்கள், தந்தை இறந்து சில நாட்களிலேயே விளையாடச் சென்றது, சிட்னி சென்சுரி இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
ஐந்தரை அடி கூட உயரம் இல்லாத ஒரு இந்தியர் இப்படி விஸ்வரூபம் எடுத்திருப்பதை நினைத்து பெருமை படுங்கள், குறை சொல்வதை நிறுத்துங்கள்..
AB, this lil prick is going to make more runs than you one day... ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மெர்வ் ஹூக்ஸ் ஆலன் பார்டரிடம் சச்சின் பத்தி சொன்னது - அவர் வாயில் சர்க்கரையை தூக்கி கொட்ட - அன்றே என்ன ஒரு நிதர்சனம்.....
If I've to bowl to Sachin, I'll bowl with my helmet on. He hits the ball so hard: Dennis Lillee. He is 99.5 per cent perfect. I'd pay to see him: Viv Richards.
நம்ம விமர்சகர்கள் விவியனைவிடவும் லில்லியை விடவும் அதிகம் கிரிக்கெட் பத்தி தெரிஞ்சவங்களா??