Saturday, May 22, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று (மே மாதம் 23ம் திகதி) பிறந்த நாள் காணும் “பொற்கேடி” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கபடும் - கழகக் கண்மணி, ஆயிரம் வடை வாங்கிய அபூர்வ சிந்தாமணி,
சியாட்டில் சிங்காரி பொற்கொடியை வாழ்த்த வயதில்லாததனால் வணங்குகிறேன். அவர் எல்லா வளமும் ,நீண்ட ஆயுளும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இன்னிக்கு அவருக்கு சஷ்டியப்த பூர்த்தியான்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படமாட்டா என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, May 4, 2010

பத்துப் பாட்டு

இந்த அநன்யா Aunty என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டு இருக்காங்க, எனக்குப் பிடிச்ச அஞ்சு பாடகர் / பாடகிகளை வரிசைப் படுத்தி எழுதணுமாம்.
என்னோட ஆங்கில அறிவும் சங்கீத ஞானமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் - கேள்வி ஞானம் மட்டுமே / இலக்கண அறிவு பூஜ்யம். என்னால் ஒரு பாட்டை உணர்ச்சிப் பூர்வமாக மட்டுமே அணுக இயலும். ஸ்ருதி சேரல ஐஸ்வர்யா கூட வரலன்னெல்லாம் (முன்னது கமல் பொண்ணு ரெண்டாவது ரஜினி பொண்ணு) பேச முடியாது. எனவே கேக்குறதுக்கு ரம்யமா இருக்குற எல்லாப் பாட்டும் நல்ல பாட்டு, மத்ததெல்லாம் குத்துப் பாட்டு - இதுதான் என்னோட அளவுகோல்(ரம்யா யாருன்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் எல்லாம் நிராகரிகப்படும் என்பதை கறாராகத் தெரிவித்துக் கொள்கிறேன்)

S.P.B யும் யேசுதாஸும் என்னோட ஆல்டைம் ஃபேவரைட். தீபன் சக்கரவர்த்தி,ஹரிஷ் ராகவேந்தர், உன்னி கிருஷ்ணன் போன்ற பலர் ரெண்டாவது லிஸ்ட்ல வருவாங்க.
பாடகிகளில் S.ஜானகி யும் சித்ராவும் ஃபேவரைட்ஸ். நான் A.R.R ஐ வெறுக்காத இளைய ராஜா வெறியன். கண்ணதாசன் ஒரு கவியரசர், வாலியும் வைரமுத்துவும் கவி குறு நில
மன்னர்கள், மத்தவங்க எல்லாம் கவிச்சிப்பாய்கள்- இவை என்னோட மதிப்பீடு.

பாடகர்களை லிஸ்ட் போடறதை விட எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்களை லிஸ்ட் போடலாமுன்னு நெனக்க்கிறேன். இந்த லிஸ்ட் ரொம்ப பெரிசு, அதில அஞ்சு மட்டும் எடுக்கவே முடியாது எனவே பத்து பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.

1. “யார் யார் சிவம் - நீதான் சிவம்” வித்யாசாகர் இசையில் தலைவர் பாடியது. இந்த பாட்டை ஒரு முறை கேட்ட யாரும் பிடிக்கலேன்னு சொல்ல மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் இது, மறுபடியும் கேட்டுத்தான் பாருங்களேன்..


2. “செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” எனது கார் பயணங்களில் என் மீது அடிக்கடி வந்து மோதும் பாடல்- எத்தனை முறைக் கேட்டாலும் அலுக்காத பாடல்களில் ஒன்று.
மொட்டையின் இசையில் ஜேசு அண்ணாவின் குரலில் வந்த தேவ கானமிது.3. “பூவே செம்பூவே” - சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வரும் Bouncing Music பாட்டு, இசை - வேற யாரு?? ராஜாதான், பாடியது ?? பாட்ட கேட்டீங்க இல்ல,அப்புறம் என்ன டவுட்டு ? ஜேசு அண்ணா தவிர யாரல இது முடியும்???4. “கண்ணே கலைமானே” - அல்டிமேட் பாட்டு, கண்ணதாசன் + இளைய ராஜா + யேசுதாஸ் கூட்டணியில் வந்த இன்னுமொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்..5. “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” - பாசமலர் படத்தில் விச்சு + ராமமூர்த்தியின் கூட்டணி இசையில் T.M.S, P. சுசீலாவுடன் இணைந்து பாடியது.
இந்தப் பாட்டைக் கேக்க இங்க க்ளிக் பண்ணுங்க

என்னிக்காவது ராத்த்ரி தூக்கம் வரல்லன்னா நாலாவது பாடலையும் ஐந்தாவது பாடலையும் கேட்டுட்டு படுக்கைக்குப் போங்க, ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்.

6. “மஞ்சம் வந்த தென்றலுக்கு” மௌனராகங்கள் படத்தில் ராஜா இசையில் பாலு பாடியது.மெலடிக்கு இலக்கணமா இந்தப் பாட்டை வைக்கலாம்.


7. “காற்றில் உந்தன் கீதம்” - ஜானி படத்தில் இசைஞானியின் இசையில் S.ஜானகி பாடிய எவர்கிரீன் பாடல்.


8. “பூங்கதவே தாழ்திறவாய்” - ராஜாவின் பாடல்களுக்காவே ஓடிய பல படங்களில் ஒன்றான நிழல்கள் படத்தில் தீபன் சக்கரவர்த்தியின் Mesmerizing குரலில் ஒலித்தப் பாட்டு.
தீபன் வெள்ளித்திரையில் பெரிய அளவுக்கு வராததுக்கு காரணம் என்னன்னு தெரியல. இந்தப் பாட்டைக் கேட்டா அவரும் பாலுவின் அளவுக்கு வந்திருக்கணும்னு தோணும்.9. “ தென் பாண்டிச் சீமையிலே” படம் - நாயகன், இசை : Default குரல் : ரெண்டு வெர்ஷன் இருக்கு, பாலு பாடியது பாடியது ஒண்ணு, ராஜா மற்றும் தலைவர் பாடியது ஒண்ணு ரெண்டுமே டாப்பு.பாட்டு சின்னதா இருந்தாலும் அது க்ரியேட் பண்ணும் Impact ரொம்ப பெரிசு10. “சங்கீத ஜாதி முல்லை” - இசைப் பாமரனான என்னைக் கூட தொடை தட்ட வைக்கும் (என்னோட தொடையைச் சொன்னேன்) ராஜாவின் கம்போசிஷன். குண்டனின் Career
peak ல இருக்கும் போது பாடியது. நீங்களும் கேளுங்க..
பத்து பாட்டும் மட்டும்தான்னு மொதல்ல சொன்னதால இங்க முடிக்கறேன், இளைய ராஜாவின் பாட்டுக்கள் பத்தி எழுத புத்தகமே போதாது, ஒரு இடுகையில எங்க முடிக்கறது.
ஒரு ஜோக்கோட முடிச்சிக்கறேன்..

இளையராஜா ஒரு முறை வெளிநாட்டில் இருக்கும் போது நண்பர் ஒருவர் அவரை ஒரு ஹாலிவுட் பிரபலத்திடம் அறிமுகப் படுத்தினாராம் இவர் ஐநூறு படங்களுக்கு இசை அமைத்தவர் என்று. அவங்க எல்லாம் வருஷத்துக்கு ஒரு படம் முடிச்சாலே பெரிய விஷயம், 500 படம் பத்தி கேட்டு மிரண்ட அந்த பிரபலம் ராஜாவைப் பாத்து கேட்டராம் உங்களுக்கு எத்தனை பசங்கன்னு? மூணுன்னு பதில் சொன்ன ராஜாவைப் பாத்து அவர் கேட்டாராம் - When did you get time???

நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பாடல்களை லிஸ்ட் பண்ணி ஒரு இடுகை போடுங்களேன், நாங்களும் கேக்கறோம்...