Sunday, October 25, 2009

பார்த்தவை கேட்டவை ரசித்தவை - 1

கூட்டாஞ்சோறு பதிவு எழுதலன்னா, பதிவர்ன்னு யாரும் ஒத்துக்க மாட்டாங்கன்னு அசரீரி சொல்லுச்சு, சரி சாமி குத்தம் ஆகிப்போயிடக் கூடாதேன்னு நானும் களத்தில தொபுக்கட்டீர்னு குதிச்சுட்டேன். எவ்வளவோ செஞ்சிட்டோம், இதயும் செய்ய மாட்டோமான்னு ஒரு தெனாவட்டு தான்.

இப்பவே ஒரு டிஸ்கி போட்டுக்கறேன், பா கே ர வரிசை, என்(ண்)ணங்கள்/ கொத்து பரோட்டா / நான்வெஜ் & சாண்ட்விச்/ கிச்சடி இன்ன பிற போல நல்லா இருக்குமான்னு தெரியல, விரைவில் அவற்றின் இன்றைய தரத்தை அடைய முயல்கிறேன்(அதுக்குள்ள அவிங்க இன்னும் நல்லா எழுதுவாங்கல்ல). நானெல்லாம் எழுதறேங்கறதே காமெடிதான், அதனால காமெடியெல்லாம் எழுதமாட்டேன், என்னோட கிரியேட்டிவிடி லெவல் எனக்கு நல்லா தெரியுங்கறதால கவுஜயும் எழுதமாட்டேன், அப்பாடான்னு நீங்க பெருமூச்சு விடறது இங்கன கேக்குது...


மொதல்ல ஒரு சுய தம்பட்டம்: இரண்டாவது முறையா நான் பதிவு எழுத ஆரம்பித்து ரெண்டு மாசமும் சில நாட்களும் ஆச்சு, இதுவரை 6500 ஹிட்ஸுக்கு மேல வந்திருக்கு, அழகா ஆங்கிலம் தொடருக்கு நல்ல வரவேற்பு இருக்கு. பழகின பாவத்துக்காக எல்லா இடுகைகளையும் படிச்சு பின்னூட்டம் போடறவங்க பலர். இதுவரை வந்த / படித்த / பின்னூட்டம் போட்ட, போடாத அனைவருக்கும் நன்றி. தமிழ் மணத்தில கடைசி மூணு இடுகைகளுக்கு முன்னாடி யாரும் ஓட்டு போட்டதில்ல, கடைசி மூணுக்கு மொத்தம் ஏழு வோட்டு போட்ட புண்ணியவாண்களுக்கு நன்றி. இதுவரை நெகடிவ் வோட்டு விழாததுதான் பெரிய ஆச்சரியம். தமிலிஷ்ல வரும் மக்கள் ரொம்ப நல்லவங்க, இதுவரை போட்ட பதிவுகள் எல்லாத்தையும் பிரபலமாக்கிட்டாங்க..இதுவரை 54 பேர் பாலோயர்ஸா இருக்காங்க, எல்லாருக்கும் நன்றி.

பிளாக்கின் ABCD சொல்லிக்கொடுத்த வெட்டிப்பயல் பாலாஜிக்கும், தமிலிஷில் இணைக்க உதவி செய்த ஹாலிவுட் பாலாவுக்கும் Thanks a tonne guys.

இவனப்போயி எழுதச் சொன்னோமேன்னு வருத்தப்படும் டுபுக்கு அண்ணாச்சியே - ஆட்டோ அனுப்பறதுன்னா இவிங்க ரெண்டு பேரு வீட்டுக்கும் அனுப்புங்க -
They are the culprits, They spent their valuable time in creating this disaster...

Spending ன்னு சொன்னதும் ஒரு விஷயம் நியாபகத்துக்கு வருது. In today's world,Everyone is trying hard to make the ends meet. வரவுக்குள்ள செலவு செய்வது எப்படின்னு தெரிஞ்சிக்கிறது பெரிய விஷயமா இருக்கு. Need எது Want எதுன்னு சரியா கண்டுபிடிச்சு செலவு பண்ணா, சில பல செலவுகளை கட்டுப்படுத்தலாம். ஒரு சின்ன கணக்கு - இருக்குற டிவி பொட்டியா தூக்கிப் போட்டுட்டு LCD டிவி வாங்கணும்னு ஒரு ஆசை. அதன் விலை $ 1000. மேலோட்டமா பாத்தா ஆயிரம் டாலர் மாதச்சம்பளத்தில் ஐந்தில் ஒரு பாகமோ, பத்தில் ஒரு பாகமோ (Depending on one's salary) இருக்கும், எனவே வாங்கி விடலாமுன்னு தோணுது. ஒரு பேச்சுக்கு ஐந்தில் ஒரு பாகம் என்று வச்சுப்போம். When you dig deeper,அதன் விலை $1500க்கு சமம். எப்படின்னு பாக்கறீங்களா? முதல்ல 5% Sales Tax சேத்தா அதன் விலை $ 1050. இந்த ஆயிரத்து ஐம்பது டாலர் செலவு செய்வதற்கு நான் 1500 டாலர் சம்பாதிக்கணும், அப்பத்தான் 30% இன்கம் டாக்ஸ் போக என் கையில் 1050 டாலர் வரும். நாம சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் அரசாங்கம் 33% எடுத்துக்குது (By way for Direct and Indirect taxes). இந்த மாதிரி யோசிச்சா பல விஷயங்களுக்கு நாம கொடுக்குற விலை ரொம்ப அதிகமா தெரியும். தேவையான அளவு சம்பாதிப்பது முடிவில்லா மாரத்தான் ரேஸ் மாதிரி, ஒடிக்கிட்டேதான் இருக்கனும்..

நாங்களும் கடந்த மூணு நாளா மாரத்தான் மாதிரி தினமும் ஒரு ஆங்கிலப் படங்கள் பாக்கறோம்(காரணமேயில்லாம). மூணு படங்களுமே எனக்கு பிடித்திருந்தன. Management, Bride Wars & The Proposal. மூணு படங்களுமே வித்தியாசமான படங்கள் (நம்மூர் டைரடக்கர்கள் சொல்வது போல
வித்தியாசமான இல்ல), அனைத்துமே ரெண்டு பேருக்குள்ள நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்கள்.ஒரு படம் ரெண்டு நண்பிகளுக்கு இடையில் நடக்கும் சண்டையைப்
பத்தியும் ரெண்டு படங்கள் வேலை செய்யுமிடத்தில் வரும் காதலைப் பத்தியும் சொல்லும் படங்கள். கெடச்சாப் பாருங்க, பிடிக்கும்..

வேலையப்பத்தி இன்னொறு விஷயம் : Looks like the tough times are over in US Job Market. நல்ல முன்னேற்றம் தெரியுது.
வேலையில்லாம இருந்த பல பேருக்கு வேலை கெடச்சிருக்கு. இன்னும் டிமாண்டை விட சப்ளை அதிகமாக இருப்பதால், Salary / Billing Rate குறைவாத்தான் இருக்கு, வேலை இல்லாமல் இருப்பதை விட இது எவ்வளவோ மேல். அமெரிக்காவில் Core Java மக்கள் யாராவது ப்ராஜக்ட் தேடிக்கொண்டு இருந்தால் எனக்கு தனி மடல் இடுங்கள். மத்த டெக்னாலஜி மக்களும் தொடர்பு கொள்ளுங்க, என்னால முடிஞ்சத செய்யறேன்.

அப்புறம் பதிவர் பாலராஜன் கீதா, ஆங்கிலத்தில் பிறர் செய்யும் தப்பையெல்லாம் அப்புறமா திருத்தலாம், மொதல்ல ஒன் தமிழ திருத்திக்கோன்னு ஒரு விஷயத்த கொட்டு கொட்டி சொல்லிக் கொடுத்தாங்க. “முயற்சிக்கிறேன்” - தவறு, “முயல்கிறேன்” என்பதே சரி.. நன்றி பாலராஜன் கீதா...

அப்புறம், இந்த மாதிரி பதிவுகள்ல A ஜோக்ஸ் சொல்லாமப் போனா உம்மாச்சி கண்ணக் குத்திடும், எனவே ரெண்டு ஜோக்ஸ் இங்க

1. அவள் ஒரு பேரழகி, அவள் கால்கள் Divine. நம்மாளுக்கு அவ மேல ஒரு இது வந்திடுச்சி, அவ கிட்ட போய் சொன்னான்
Nice legs, when do they Open?

2. முதலிரவில் கணவனைப் பாத்து மனைவி சொன்னாள் - பாத்து மெதுவா செய்யுங்க ஏன்னா I am still a vigin. கணவனுக்கு அதிர்ச்சி, ஏன்னா அவள் மூணு முறை விவாகரத்தானவள். கணவன் எப்படின்னு கேட்ட போது மனைவி சொன்னாள் “Well, my first husband was a gynecologist and all he wanted to do was look at it. My second husband was a psychiatrist and all he wanted to do was talk about it. Finally, my third husband was a stamp collector and all he wanted to do was...


நெக்ஸ்ட் மீட் பண்றேன்...

32 comments:

ரோஸ்விக் said...

நாலாவது கணவர் கால்நடை மருத்துவர இருந்தா அந்தம்மா பாவம்....இன்னொரு விவாகரத்து இன்னொரு கல்யாணம் பண்ணிருக்கோனும்...:-)

என்னா ஒரு வில்லத்தனம்...


http://thisaikaati.blogspot.com

ஸ்ரீராம். said...

வறுகடலை.
சாப்டுட்டுப் பார்க்கும்போது US ல வேலை இல்லாத திண்டாட்டம் மறையுது , LCD TV விலை, சில ஆங்கிலப் படங்கள் பெயர் எல்லாம் தெரிஞ்சுது.. இது போலவும் தொடருங்கள்...

sriram said...

நன்றி ரோஸ்விக்..

sriram said...

நன்றி ஸ்ரீராம், என்னா கிறுக்கினாலும் தவறாம வந்து படிக்கிற நீங்க ரொம்ம்ம்ப நல்லவர்...

வால்பையன் said...

உங்களுக்கு இன்னும் மைனஸ் ஓட்டு விழலையா!?
அப்படினா நீங்க இன்னும் பிரபலம் ஆகலைன்னு அர்த்தம்!

sriram said...

//வால்பையன் said...
உங்களுக்கு இன்னும் மைனஸ் ஓட்டு விழலையா!?
அப்படினா நீங்க இன்னும் பிரபலம் ஆகலைன்னு அர்த்தம்!///

ஆமா வாலு, நல்ல பதிவர்ன்னு பேர் எடுத்தால் போதும், “பிரபல ப்திவர்” பட்டம் எனக்கு என்றும் வேண்டாம்

ஸ்ரீராம். said...

ஔவையே...நல்ல பதிவர் என்றால் என்ன, பிரபல பதிவர் என்றால் என்ன?

sriram said...

ஸ்ரீராம்,
எல்லா நல்ல பதிவர்களும் பிரபல பதிவர்கள் கிடையாது, எல்லா பிரபல பதிவர்களும் ....
இப்போ புரிஞ்சுதா???

இராகவன் நைஜிரியா said...

// இந்த மாதிரி யோசிச்சா பல விஷயங்களுக்கு நாம கொடுக்குற விலை ரொம்ப அதிகமா தெரியும். //

இந்த மாதிரி யோசிச்சா, விலை அதிகம் தெரியுதோ இல்லையோ, ஒன்னு மட்டும் நல்லா புரியுது... விரைவில் பைத்தியம் பிடிக்கும் என்று.

இராகவன் நைஜிரியா said...

// விரைவில் அவற்றின் இன்றைய தரத்தை அடைய முயல்கிறேன் //

வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

// பழகின பாவத்துக்காக எல்லா இடுகைகளையும் படிச்சு பின்னூட்டம் போடறவங்க பலர். //

இப்படியெல்லாம் வேற இருக்கா... ம்.. நடக்கட்டும்... நடக்கட்டும்

ஹாலிவுட் பாலா said...

அந்த ஸ்டாம் கலெக்டர் என்னா பண்ணுனார்-ன்னு சொல்லுலீங்களே...!

அடுத்தப் பதிவுலயாவது.. அந்த சீன் வருங்களா? :( :(

////////

நாலாவது கணவர் கால்நடை மருத்துவர இருந்தா அந்தம்மா பாவம்....இன்னொரு விவாகரத்து இன்னொரு கல்யாணம் பண்ணிருக்கோனும்...:-)

ஹா.. ஹா.. ஹா!! இது ஜூப்பரு! :) :)

ஹாலிவுட் பாலா said...

அப்புறம் அந்த எல்சிடி டிவி மேட்டரு.

செலவு 1050-ல் முடியாது.

அதுக்கு ஒரு ஸ்டேண்ட் வாங்கனும். = $100-$150
வால் மவுண்ட்-ன்னா : $100 + லேபர் சார்ஜ்

எல்சிடி வாங்கினப் பின்னாடி, ரெகுலர் சேனல் பார்க்கப் பிடிக்காது. அப்ப HD சேனல்ஸ்க்கு சப்ஸ்க்ரைப் பண்ணனும். அதுக்கு $70.

அப்புறம் HD Box-க்கு தனி காசுன்னு சொல்லி, ரூமுக்கு $5 (டைரக்ட்டீவி), இல்லன்னா $15 (காம்கேஸ்ட்) புடுங்கிடுவானுங்க.

எல்சிடி-ன்னா ஒகே. ஆனா ப்ளாஸ்மான்னா.. கரண்ட் சார்ஜ் பிச்சிக்கும். அதுக்கு எக்ஸ்ட்ரா $20-$30.

இப்ப ரெகுலர் டிவிடி ப்ளேயர்ல படம் பார்க்க முடியுமா? அப்ப ப்ளூரே ப்ளேயர் வாங்கனும். $150

PS3-யா வாங்கிட்டா.. பெரிய ஸ்க்ரீனல விளையாடிகிட்டே, ப்ளுரேல படம் பார்க்கலாம்னு தோணும். $299

எழவு.. ப்ளூரேல.. போயி... சாதரண டிவிடில படம் பார்க்கறதா..??

ப்ளூரே.. டிவிடிதான் வாங்கனும். ஒவ்வொரு டிவிடியும் $30.

நெட்ஃபிலிக்ஸ்ல ரெண்ட் பண்ணினா.. ப்ளூரேக்குன்னு தனியா $1 டாலர் எக்ஸ்டரா..!!

கூட்டி கழிச்சிப் பாருங்க. சம்பளம் கட்டுப்படியாகுமான்னு!!!!!!!
=====

ஹாலிவுட் பாலா said...

ஏங்க.. மூணு படத்தை மூணு நாள்ல பார்க்கறது ஒரு மேட்டரா??

நான் காலைல இருந்து மதியத்துக்குள்ள பார்த்து முடிச்சிடுவேன்.

ஹாலிவுட் பாலா said...

இப்பதாங்க இன்னொன்னு நினைப்பு வந்துச்சி!

பெரிய டிவி வச்சா போதுமா..? அதுக்கு 7.1 ஆடியோ தேவைப் படும்தானே?

ஏழு ஸ்பீக்கர், ஒரு சப்-வூஃபர் $300 அவுட்.

இதையெல்லாம் கனெக்ட் பண்ண, ஒரு ரிசீவர் வேணுமில்ல. இன்னொரு $500 அவுட்.

இப்ப பார்த்தா, ஒரு டிவி, ஒரு ப்ளூரே, ஒரு ரிசீவர், ஒரு கேபிள்/டிஷ் பாக்ஸ்ன்னு ஏகப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் வந்துடும்.

அதுக்கெல்லாம்.. சேர்த்து ஒரு யுனிவர்சல் ரிமோட் வாங்கனும். இன்னொரு $150-$200 காலி.

ambi said...

பார்த்தேன், படித்தேன். அந்த மெக்சிகோ மேட்டர் உங்களுக்கு இ-மெயிலுல வந்துச்சா? :p

@ஹாலிவுட் பாலா, ஸ்ச்ப்பா, முடியல. டிவியே வேணாம்னு சொல்ல வெச்சுட்டீங்க. :))

sriram said...

//இராகவன் நைஜிரியா said...

இந்த மாதிரி யோசிச்சா, விலை அதிகம் தெரியுதோ இல்லையோ, ஒன்னு மட்டும் நல்லா புரியுது... விரைவில் பைத்தியம் பிடிக்கும் என்று.//
அப்படியெல்லாம் ஆகாது இராகவன், செலவுதான் கம்மியா ஆகும்

sriram said...

இராகவன் நைஜிரியா said...
// விரைவில் அவற்றின் இன்றைய தரத்தை அடைய முயல்கிறேன் //

வாழ்த்துகள்//

நன்றி இராகவன்

sriram said...

இராகவன் நைஜிரியா said...
// பழகின பாவத்துக்காக எல்லா இடுகைகளையும் படிச்சு பின்னூட்டம் போடறவங்க பலர். //

இப்படியெல்லாம் வேற இருக்கா... ம்.. நடக்கட்டும்... நடக்கட்டும்//

என்னவோ தெரியாத மாதிரி கேக்கறீங்க?
பாவம் பையன் பொழச்சிப் போகட்டும்னுதானே நீங்களும் அப்பப்போ வந்து படிச்சிட்டோ / படிக்காமாலோ (:)) பின்னூட்டம் போடறீங்க..

sriram said...

அந்த ஸ்டாம் கலெக்டர் என்னா பண்ணுனார்-ன்னு சொல்லுலீங்களே...!

அடுத்தப் பதிவுலயாவது.. அந்த சீன் வருங்களா? :( :(

பாலா, ஆனாலும் உமக்கு இவ்வளவு குசும்பு ஆகாது...

sriram said...

//கூட்டி கழிச்சிப் பாருங்க. சம்பளம் கட்டுப்படியாகுமான்னு!!!!!!!//

பாலா, பிளாஸ்மாவும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம், இருக்குற சோனி டிவிலேயே படம் நல்லா தெரியுது...

sriram said...

அம்பி,
அந்த மெக்ஸிகோ ஜோக், நல்லெண்ணெய் நடிகை, செய்தி வாசிப்பாளர் கேசட் மாதிரி ஆகிப்போச்சு, ஞாபகம் இருக்கா, அப்போவெல்லாம், கேசட் இருக்குன்னு சொல்வாங்க ஆனா கண்ல காட்ட மாட்டாங்க..
உங்களுக்கு வந்தா சொல்லுங்க..

அமிர்தவர்ஷினி அம்மா said...

படிக்க சுவாரஸ்யமாக இருந்தது

வண்டிக்காரன் said...

ஊர்ல sales tax 6.25 ஆயிடுச்சுங்க ..அப்புறம்... ஏன் எல்லாமே Female Lead படங்களாவே பார்க்குறீங்க...

Nilofer Anbarasu said...

பார்த்தவை கேட்டவை ரசித்தவை ரொம்பவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. வெரி இன்ட்ரஸ்டிங்.

sriram said...

நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா

sriram said...

வண்டிக்காரன், அது சும்மா ஒரு கணக்குக்காக சொன்னது, ஆமா நீங்களும் Massachusetts ஆ?

Female Lead movies - அப்படியெல்லாம் தேர்ந்தெடுத்து பாக்கல - Stop & Shop ல இருக்குற பட்ங்கள்ல தேர்ந்தெடுத்து பார்த்தேன்

sriram said...

நன்றி நிலொஃபர் அன்பரசு

Ananya Mahadevan said...

இந்த பகுதியோட அடுத்த episode எங்கேன்னு தேடிண்டு இருக்கேன். எழுதலன்னா மரியாதையா எழுதிடுங்க.Quite Interesting.

vijicreations said...

ஸ்ரீராம் நான் இன்று தான் இந்த ப்ளாக் பக்கம் வந்தேன். நல்ல அருமையான் ப்ளாக். எல்லா விஷயங்களும்மே யூஸ்புல். மேலும் நான் பாஸ்டனில் இருந்து படித்துவிட்டு வருகிறேன்.பாஸ்டனில் போன வாரம் ஸ்னோ ஸ்ராம் எப்படி இருந்தது. நிங்க நியு இங்கில்ந் தமிழ் சங்கம் வருவதுண்டா?

sriram said...

வாங்க விஜி
பாஸ்டன்ல எங்க இருக்கீங்க?
நான் அதிகம் தமிழ்ச்சஙகம் வருவதில்லை, லக்ஷ்மி கோவிலுக்கு வருவதுண்டு, நேரம் கிடைக்கும் போது 781 363 9168 க்கு கூப்பிடுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

padma said...

எழுத தெரியாதுன்னு சொல்லியே சூப்பராக எழுதுறீங்க