நல்ல நாளிலேயே நமக்கெல்லாம் அப்ரைசல் ஆப்புவைக்கும் வைபவமாகவே இருக்கும், இப்போ இருக்குற (உண்மையிலேயே இன்னும் இருக்கா??)பொருளாதார மந்த நெலமையில ஆப்பு இன்னும் ஸ்ட்ராங்காவே இருக்கும். அப்படியெல்லாம் ஆகாம இருக்க என்ன பண்ணனும்னு இந்தப் பதிவில் பாக்கலாம்.
மொதல்ல Performance Appraisalனா என்னன்னு பாக்கலாம், ஏற்கனவே முடிவு செஞ்சி வச்சிருக்குற ஊதிய உயர்வை கொடுக்குறதுக்குஅல்லது ஊதிய உயர்வு இல்லேன்னு சொல்றதுக்கு முன்னாடி நடக்குற சடங்குன்னு நீங்கல்லாம் சொல்றது கேக்குது, ஆனால் Ideal Appraisal அப்படி இருக்கக் கூடாது.
அப்ரைசலின் முக்கிய நோக்கங்கள்
சென்ற வருடத்தில் நீங்க செஞ்ச வேலைக்கான Feedback கொடுக்க
நடப்பு ஆண்டிற்க்கான் இலக்கை நிர்ணயம் செய்ய (To set the Target for this Year)
சம்பள உயர்வுக்கும் பதவி உயர்வுக்கும் தேவையானவற்றை முடிவு செய்ய (To set a base for salary increases, promotions,bonuses)
நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்கும் இடையே அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த.
சில பல நிர்வாகங்கள் வேலை செய்பவர்களை சுய மதிப்பீட்டு அறிக்கை (Self Evaluation report) கொடுக்கச் சொல்வார்கள். உங்க கம்பெனியில் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இந்த ரிப்போர்ட்டை கண்டிப்பா அப்ரைசலுக்கு முன்னர் தயார் பண்ணுங்க,This will help you in presenting your case in the appraisal and to be in the driver's seat of the review process. இதில் நாலு விஷயங்களை கவர் பண்ணனும், அவை
1.Job Resposibilities and Skills
2. Achievement
3.Overall Performance and
4.Goal Setting.
தனக்குத்தானே ரிவ்யூ எழுதுவது கடினமான காரியம், முடிந்த அளவுக்கு ரிவ்யூ சப்ஜெக்டிவ்வாக இல்லாமல் Measurable ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
Tangible / Measurable format will allow you to show how you are contributing to your employer's bottom line.
உதாரணமாக : Your contribution in getting a new client on board and the revenue from that client.
1. திறமைகள் மற்றும் வேலை விவரங்கள் (Skills and Job Responsibilities)
ரிப்போர்ட்டின் முதல் பாகத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் (ஆபிஸ் நேரத்தில் ப்ளாக் படிப்பதையும் கிறுக்குவதையும் சொல்லவே கூடாது)
- Phone calls, Emails, Budgets, Account Follow up, Client meetings, Coding, Testing எதையும் விடாமல் பட்டியலிடுங்கள்.
அடுத்து உங்களுக்கு இருக்கும் அனைத்து திறமைகளையும் (அப்படின்னு ஒண்ணு இல்லாதவங்க என்னய மாதிரி கற்பனை குதிரையைத் தட்டிவிட்டு ஏதாவது
எழுதுங்க) - Strong Communication skills, Project managament skills, Ability to focus on achieving strategic objectives Nurturing and instilling confidence in your team memebers - பட்டியலிடுங்கள்.
நீங்க செய்த வேலைகளையும், குறிப்பிட்ட வேலையை தனியாகச் செய்தீர்களா அல்லது ஒரு குழுவின் அங்கமாக செயல்பட்டீர்களா என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுங்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவையோ (Division) ஒரு குறிப்பிட்டா க்ளையண்டையோ நீங்கள் நிர்வகித்து இருந்தால், அந்தப் பிரிவின் சென்ற வருட இலக்கையும (Target), Achievementயும் குறிப்பிடுங்கள். Mentioning the value makes a better impact.
Ex : I manage a team, I lead the group, I worked with the team on XYZ accounts, I worked on a $ 50 M account alone successfully, managing the day to day communication with 100 clients.
2. சென்ற வருடத்தில் நீங்க சாதித்ததை (Achievement) தெளிவாகப் பட்டியலிடுங்கள். Be Honest but make sure to acknowledge all your accomplishments. இங்கு உபயோகிக்க வேண்டிய சில வார்த்தைகள்
** Successfully
** Contributed
** Negotiated
** Supported
** Nurtured
நீங்கள் தனியாக சாதித்தவற்றையும், குழுவாகச் செய்தவற்றையும் தனித்தனியே குறிப்பிடுங்கள். ஒரு போதும் அணியின் / இலாகாவின் (Team / Department)வெற்றியை தனதாக்க வேண்டாம்.
நீங்கள் கொணர்ந்த க்ளையண்ட் மூலம் சென்ற வருடம் கிடைத்த வருமானத்தை மட்டுமல்லாமல் வருமாண்டுகளில் அந்த க்ளையண்ட்டிடமிருந்து எதிர்நோக்கும்
வருமானத்தையும் குறிப்பிடுங்கள் (Forecast)
சென்ற வருடம் உங்கள் கம்பெனி சரிவை நோக்கி சென்றிருந்தால், உங்கள் இலாகா மற்ற இலாகாகளை விட எவ்வாறு சிறப்பாக செயல்பட்டதுன்னு சொல்லுங்க
Ex. Successfully cut costs to help the bottomline of the company.
3. Overall Performance.
இதில் மூன்று விஷயங்கள சொல்லணும், Strength, Growth and Areas that need improvement.
கண்டிப்பா ஓரிரு பாயிண்ட் Needs Improvement லிஸ்டில் இருக்கட்டும் (This enhances your credibility) ஆனா எப்பவும் Strength லிஸ்ட்ல அதிக பாயிண்ட்ஸ் இருக்கட்டும்.
Strength : List what you do and feel confident about. Demostrate your understading of the market in which your company operates. கம்பெனியின் வளர்ச்சிக்கும் லாபத்துக்கும் உங்களின் பங்கை தெளிவாகச் சொல்லுங்கள்.
Growth : சென்ற வருடத்தில் நடந்த முக்கியமான வளர்ச்சிகளை குறிப்பிடுங்கள். நீங்க புதுசா கத்துக்கிட்டதை எப்படி Implement செஞ்சீங்கன்னு சொல்லுங்க
EX : Skill your recently acquired, How PMP certification helped you to be a better project manager etc.
Needs Improvement : நீங்க எந்தெந்த விஷயங்களில் முன்னெற நினைக்கிறீர்கள்னு சொல்லுங்கள், கூடவே இலக்கினை அடைய இதுவரை எடுத்துள்ள முயற்சி பற்றி சொல்லுங்கள். இலக்கினை அடைய உங்களின் திட்டமும் Deadline உம் மிக அவசியம்.
4. அடுத்தாண்டிற்கான இலக்கு (Goal Setting):
அடுத்தாண்டுக்கான நீங்கள் எண்ணியிருக்கும் டார்கெட்டை குறிப்பிடுங்கள். ஒரு விஷயம் ஞாபகம் இருக்கட்டும் - கை எட்டும் தூரத்தில் இருப்பது - Reachable கஷ்டப்பட்டு எட்டிப் பிடிப்பது - Goal. உங்க கோல் எப்போதும் கஷ்டப்பட்டு எட்டும் படி இருக்கட்டும். அதுக்கப்புறம் உங்க மேனேஜரிடம் கலந்தாலோசித்து இலக்கில் மூன்று விஷயங்களை முடிவு செய்யுங்கள்.
இலக்குகள் என்னென்ன (What are the goals)
அவற்றை அடையும் வழி மற்றும் திட்டம் (How to achieve the goals)
Priority and On a Scale of one to hundred what weight do they have on your job.
Plan B - மாற்றுத்திட்டம் திட்டமிடலின் முக்கிய அம்சம், உங்களின் Plan B யும் தெளிவாக இருக்கட்டும்.
இவற்றின் மூலம் உங்களின் அடுத்தாண்டு அப்ரைசல் எதன் அடிப்படையில் இருக்குமென்று தெளிவாக குறிப்பிட முடியும்.
Good luck with your evaluation and remember - There is no harm in self promotion.
பின்குறிப்பு : எவ்வளவோ முயன்றும் இதை விட கம்மியா ஆங்கிலம் உபயோகிக்க முடியவில்லை, மன்னிக்கவும்.
Sunday, February 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
Nice one sriram! Very helpful!
நன்றி வசீகரா
நம்ம கம்பெனில இந்த வருஷம் போனஸ், இன்கிரிமென்ட் கிடையாதுன்னு சொல்லிருந்தாக்கூட பரவாயில்ல.. இந்த வருஷம் அப்ரைசல்லே கிடையாதுன்னு சொல்லிட்டானுங்க... இருந்தாலும் நீங்க சொன்னதை நோட் பண்ணிகிட்டேன். நன்றி ஸ்ரீராம் பயனுள்ள தகவலுக்கு.
இதெல்லாம் அப்ரைசல்ல பாக்குறாங்களா என்ன? எனக்கு தெரிஞ்ச வரைக்கும் மேனேஜருக்கு புடிச்சிருந்தா நல்ல ரேட்டிங் இல்லேன்னா ஆப்பிங்....
//ஆபிஸ் நேரத்தில் ப்ளாக் படிப்பதையும் கிறுக்குவதையும் சொல்லவே கூடாது//
அம்பி & கொடி, உங்க ரெண்டு பேரையும் நனைச்சாதான் கவலையா இருக்கு. நம்பளோட அப்ரைசல் அப்ப பிளாங்கா இருக்கும்...:)
வாங்க நாஞ்சில் பிரதாப்
இல்லாத ரெசஷனக் காட்டி நெறய கம்பெனிகள் இப்படித்தான் செஞ்சிக்கிட்டு இருக்கு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க விசா,
இதத்தான் நான் பதிவின் முதலில் சுட்டிக் காட்டியிருந்தேன், அப்ரைசல் அப்படி இருக்கக் கூடாது, என்ன செய்யுறது, பல இடங்களில் அப்படித்தான் இருக்கு
தக்குடு பாண்டி,
பொற்கொடி ஆபிஸ்ல முழுநேரமா செய்யுற வேலயே ப்ளாக் எழுதுறதும் படிக்கறதும்தான், அவங்க அப்ரைசல நாம தான் செய்யணும்
quite informative. thanks for sharing.
இதெல்லாம் இன்னும் நடக்குதா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனன்யா
சில இடங்கள்ல நடக்கலேன்னாலும், பல இடங்கள்ல அப்ரைசல் நடக்குது அண்ணாமலையாரே..
Nice one Sriram !!
In my initial days I used to do one more thing for appraisals. There is a concept of internal customer for all of us i.e. people who work in your same company whom you cater for. I used to get a short feedback about me from them and used to put this as a supportive evidence in my appraisal. (ofcourse my referrals always go ga ga about me :)) and you need to ensure that too :)) Needless to say my managers were impressed and there will be less chance of debate/denial on your accomplishments.
வாங்க டுபுக்கு அண்ணே..
வாழ்த்துக்கு நன்றி..
That was a good idea. The management would always want to retain someone who is liked by the team..
நீங்க ஏன் மேனேஜ்மெண்ட் டிப்ஸ் எழுதக் கூடாது
ada pvigala.. adhukulla 4avadhu pandhi started a? :'(
//ஆபிஸ் நேரத்தில் ப்ளாக் படிப்பதையும் கிறுக்குவதையும் சொல்லவே கூடாது//
//அம்பி & கொடி, உங்க ரெண்டு பேரையும் நனைச்சாதான் கவலையா இருக்கு. நம்பளோட அப்ரைசல் அப்ப பிளாங்கா இருக்கும்...:)//
enna thakkudu uncle ennanavo solrar.. posta padichitu varren..
//பொற்கொடி ஆபிஸ்ல முழுநேரமா செய்யுற வேலயே ப்ளாக் எழுதுறதும் படிக்கறதும்தான், அவங்க அப்ரைசல நாம தான் செய்யணும்//
yov! yen indha kola veri? ellarukum comment podama kaaya vitta theriyum sedhi..! kootungada panchayatha.. koopidungada geetha paatiya..!
super post! what do you think about "perception" in this whole process? that is, what others think you're/about what you do..
may be, you can write a spearate post on how to manage perceptions with rest of the team/upper hierarchy (without sounding stupid/propaganda material)? at least to me, this is a big deal..
Hi Kedi
"Perception" is something which is inherent in every human being, you cannot find a person who does not have any perceived ideas.
நம்ம டுபுக்கார் கூட நான் கோபமா இருக்கறதா நெனச்சிக்கிட்டு இருக்கார், நான் அத மாத்த என்னால ஆனத செய்யுறேன்.
only you can change other's perception about you.
Coming to "perception" in Appraisal
- would be better if you could quantify the work and that is what I mentioned in my post.
Let me see if I can gather my thoughts on this and write.. சிம்பிளா சொல்லணும்னா - சரக்கு இருந்தா எழுதறேன்
நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க. ஆனா என்ன எழுதி கொடுத்தாலும் (அப்ரைசல்ல) யானை பசிக்கு சோளப் பொறிதான் போங்க.
ver nice info...
Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)
Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof
Download Youtube Videos free Click here
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here
அப்பரைசல் பற்றி நானும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்...
முடிந்தால் பார்க்கவும்...!!!!
http://desandhiri.blogspot.com/2010/02/blog-post_05.html
Excellent post!.
Appraisal is a formality and we must take the opportunity to communicate something to our boss.
Familiar phrases:
No Employer can satisfy their employees. And No employee can satisfy their employer.
An Employer always pay enough to their employees so that they won't quit. And employees always work enough so that they won't be sacked.
like to see more from you on this topic.
அண்ணா சில சந்தேகங்கள், அப்ரைஸில் நாம அலுவலகத்தில் கடலை போட்டதையும்,காபி சாப்புக்கு தள்ளிக்கிட்டு போனதையும் சொல்லக் கூடாதா?
அப்புறம் பிளாக் அவார்ட்ஸ் வாங்குனா அப்ரைசல்ல பாயிண்ட்ஸ் கூடுமா?
தம் அடிக்க ஒரு மணி நேரம் செலவிடுவதை சொல்லாமா கூடாதா?
அப்ரைசலுக்கு மூனு மாதம் முன்னால் இருந்து டீம் லீடருக்கு சோப் போட்டதையும், முறைவாசல் செய்ததையும் சொல்லக் கூடாதா?
அப்படியே அப்ரைசல் எப்படி செய்வது என்று சொன்னால் நல்லா இருக்கும், ஏன்னா எங்க கம்பெனியில் அப்ரைசல் செய்வது ஊதியத்திற்கு பரிந்துரைப்பது எல்லாம் நான் தன். சுருக்கமா சொன்னா எம்.டிக்கு அல்லக்கை மாதிரி. நன்றி.
பொற்கொடி ப்ளாக்ல இருந்து உங்க லிங்க் புடிச்சேன்.அடுத்தாத்து அம்பி போல இருக்கே பேருன்னு போய் பாத்தா பெரிய வம்பியா இருப்பீங்க போல இருக்கே. Performance Appraisal ல ரெம்ப நொந்த அனுபவம் போல இருக்கே. ஆனா சூப்பர் காமெடி பதிவு. ரசிச்சு படிச்சேன். அடிக்கடி போஸ்ட் போடுங்க ஸ்ரீராம்
//தனக்குத்தானே ரிவ்யூ எழுதுவது கடினமான காரியம்//
புகழேந்திகளுக்கு ரொம்ப ஈஸி....
யூ ஆர் யூஸிங் டூ மச் இங்கிலீஷ் ஐ ஸே....
வாங்க கோபி..
இந்த பதிவில் ஆங்கிலத்தை இதை விட குறைக்க முடியவில்லை, அடுத்த முறை முயல்கிறேன்
நல்ல சிந்தனைகள். அடுத்த வருட appraiselகு இப்பவே தயாராக ஆரம்பிச்சுட்டேன் தோழரே! நன்றி.
Post a Comment