இந்த அநன்யா Aunty என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டு இருக்காங்க, எனக்குப் பிடிச்ச அஞ்சு பாடகர் / பாடகிகளை வரிசைப் படுத்தி எழுதணுமாம்.
என்னோட ஆங்கில அறிவும் சங்கீத ஞானமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் - கேள்வி ஞானம் மட்டுமே / இலக்கண அறிவு பூஜ்யம். என்னால் ஒரு பாட்டை உணர்ச்சிப் பூர்வமாக மட்டுமே அணுக இயலும். ஸ்ருதி சேரல ஐஸ்வர்யா கூட வரலன்னெல்லாம் (முன்னது கமல் பொண்ணு ரெண்டாவது ரஜினி பொண்ணு) பேச முடியாது. எனவே கேக்குறதுக்கு ரம்யமா இருக்குற எல்லாப் பாட்டும் நல்ல பாட்டு, மத்ததெல்லாம் குத்துப் பாட்டு - இதுதான் என்னோட அளவுகோல்(ரம்யா யாருன்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் எல்லாம் நிராகரிகப்படும் என்பதை கறாராகத் தெரிவித்துக் கொள்கிறேன்)
S.P.B யும் யேசுதாஸும் என்னோட ஆல்டைம் ஃபேவரைட். தீபன் சக்கரவர்த்தி,ஹரிஷ் ராகவேந்தர், உன்னி கிருஷ்ணன் போன்ற பலர் ரெண்டாவது லிஸ்ட்ல வருவாங்க.
பாடகிகளில் S.ஜானகி யும் சித்ராவும் ஃபேவரைட்ஸ். நான் A.R.R ஐ வெறுக்காத இளைய ராஜா வெறியன். கண்ணதாசன் ஒரு கவியரசர், வாலியும் வைரமுத்துவும் கவி குறு நில
மன்னர்கள், மத்தவங்க எல்லாம் கவிச்சிப்பாய்கள்- இவை என்னோட மதிப்பீடு.
பாடகர்களை லிஸ்ட் போடறதை விட எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்களை லிஸ்ட் போடலாமுன்னு நெனக்க்கிறேன். இந்த லிஸ்ட் ரொம்ப பெரிசு, அதில அஞ்சு மட்டும் எடுக்கவே முடியாது எனவே பத்து பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
1. “யார் யார் சிவம் - நீதான் சிவம்” வித்யாசாகர் இசையில் தலைவர் பாடியது. இந்த பாட்டை ஒரு முறை கேட்ட யாரும் பிடிக்கலேன்னு சொல்ல மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் இது, மறுபடியும் கேட்டுத்தான் பாருங்களேன்..
2. “செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” எனது கார் பயணங்களில் என் மீது அடிக்கடி வந்து மோதும் பாடல்- எத்தனை முறைக் கேட்டாலும் அலுக்காத பாடல்களில் ஒன்று.
மொட்டையின் இசையில் ஜேசு அண்ணாவின் குரலில் வந்த தேவ கானமிது.
3. “பூவே செம்பூவே” - சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வரும் Bouncing Music பாட்டு, இசை - வேற யாரு?? ராஜாதான், பாடியது ?? பாட்ட கேட்டீங்க இல்ல,அப்புறம் என்ன டவுட்டு ? ஜேசு அண்ணா தவிர யாரல இது முடியும்???
4. “கண்ணே கலைமானே” - அல்டிமேட் பாட்டு, கண்ணதாசன் + இளைய ராஜா + யேசுதாஸ் கூட்டணியில் வந்த இன்னுமொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்..
5. “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” - பாசமலர் படத்தில் விச்சு + ராமமூர்த்தியின் கூட்டணி இசையில் T.M.S, P. சுசீலாவுடன் இணைந்து பாடியது.
இந்தப் பாட்டைக் கேக்க இங்க க்ளிக் பண்ணுங்க
என்னிக்காவது ராத்த்ரி தூக்கம் வரல்லன்னா நாலாவது பாடலையும் ஐந்தாவது பாடலையும் கேட்டுட்டு படுக்கைக்குப் போங்க, ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்.
6. “மஞ்சம் வந்த தென்றலுக்கு” மௌனராகங்கள் படத்தில் ராஜா இசையில் பாலு பாடியது.மெலடிக்கு இலக்கணமா இந்தப் பாட்டை வைக்கலாம்.
7. “காற்றில் உந்தன் கீதம்” - ஜானி படத்தில் இசைஞானியின் இசையில் S.ஜானகி பாடிய எவர்கிரீன் பாடல்.
8. “பூங்கதவே தாழ்திறவாய்” - ராஜாவின் பாடல்களுக்காவே ஓடிய பல படங்களில் ஒன்றான நிழல்கள் படத்தில் தீபன் சக்கரவர்த்தியின் Mesmerizing குரலில் ஒலித்தப் பாட்டு.
தீபன் வெள்ளித்திரையில் பெரிய அளவுக்கு வராததுக்கு காரணம் என்னன்னு தெரியல. இந்தப் பாட்டைக் கேட்டா அவரும் பாலுவின் அளவுக்கு வந்திருக்கணும்னு தோணும்.
9. “ தென் பாண்டிச் சீமையிலே” படம் - நாயகன், இசை : Default குரல் : ரெண்டு வெர்ஷன் இருக்கு, பாலு பாடியது பாடியது ஒண்ணு, ராஜா மற்றும் தலைவர் பாடியது ஒண்ணு ரெண்டுமே டாப்பு.பாட்டு சின்னதா இருந்தாலும் அது க்ரியேட் பண்ணும் Impact ரொம்ப பெரிசு
10. “சங்கீத ஜாதி முல்லை” - இசைப் பாமரனான என்னைக் கூட தொடை தட்ட வைக்கும் (என்னோட தொடையைச் சொன்னேன்) ராஜாவின் கம்போசிஷன். குண்டனின் Career
peak ல இருக்கும் போது பாடியது. நீங்களும் கேளுங்க..
பத்து பாட்டும் மட்டும்தான்னு மொதல்ல சொன்னதால இங்க முடிக்கறேன், இளைய ராஜாவின் பாட்டுக்கள் பத்தி எழுத புத்தகமே போதாது, ஒரு இடுகையில எங்க முடிக்கறது.
ஒரு ஜோக்கோட முடிச்சிக்கறேன்..
இளையராஜா ஒரு முறை வெளிநாட்டில் இருக்கும் போது நண்பர் ஒருவர் அவரை ஒரு ஹாலிவுட் பிரபலத்திடம் அறிமுகப் படுத்தினாராம் இவர் ஐநூறு படங்களுக்கு இசை அமைத்தவர் என்று. அவங்க எல்லாம் வருஷத்துக்கு ஒரு படம் முடிச்சாலே பெரிய விஷயம், 500 படம் பத்தி கேட்டு மிரண்ட அந்த பிரபலம் ராஜாவைப் பாத்து கேட்டராம் உங்களுக்கு எத்தனை பசங்கன்னு? மூணுன்னு பதில் சொன்ன ராஜாவைப் பாத்து அவர் கேட்டாராம் - When did you get time???
நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பாடல்களை லிஸ்ட் பண்ணி ஒரு இடுகை போடுங்களேன், நாங்களும் கேக்கறோம்...
Tuesday, May 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
haiya! vadai!
பூங்கதவே தாழ் திறவாய் என்னோட அதி பயங்கர ஃபேவரிட்.. ஆனா இன்னிக்கு தான் வீடியோவ பாக்கறேன். அழகா இருக்கு லிஸ்ட்டு!
ஆயிரம் வடை வாங்கிய அபூர்வ கேடி..
song selection பத்தி ஒண்ணுமே சொல்லலை...
அடப்பாவி பொற்கொடி.... அதுக்குள்ள கமெண்ட்டியாச்சா.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அருமையான selections . எல்லா பாட்டுகளும் எல்லார் மனம் கவர்ந்தவை.
அழகா எழுதிருக்கீங்க ஸ்ரீராம்
இப்படி எல்லாம் ஸ்ருதி ஐஸ்வர்யா ரம்யானு எழுதினா நீங்களும் யூத்னு நாங்க ஒத்துபமா... என்னா ஒரு டெக்னிக்கு..... ம்....
//அநன்யா Aunty //
அறுவது வயசு நாட்டாமை எல்லாம் அனன்யாவை ஆண்ட்டினு சொல்றதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் (போஸ்ட் போட்டு நாலு நாளு ஆச்சு, ப்ளாக் பக்கம் எட்டியே பாக்கலைனா இதுவும் சொல்லுவோம் இன்னும் சொல்லுவோம்)
நன்றி பத்மா
அ(ட)ப்பாவி தங்கமணி - ஏன் இந்த கொலவெறி??
ஆஹா! அற்புதம் தல!
வாவ்..வாட் எ செலெக்ஷன்!
ரசித்தேன்.
:))
அப்புறம் பாட்டு selection பத்தி சொல்லணும்னா... சிம்ப்ளி சூப்பர்ப்....
அதிலும் "செந்தாழம் பூவில்" ஆல் டைம் மெலடி
"கண்ணே கலைமானே" கவிஞர் கண்ணதாசன் எழுதின கடைசி பாட்டு. அருமையான லாஸ்ட் signature
"மலர்ந்தும் மலராத" என்றும் இனிக்கும்
மௌன ராகம்ல எல்லா பாட்டுமே கலக்கல் தான், எதை சொல்ல எதை விட
“ தென் பாண்டிச் சீமையிலே” கேக்க கேக்க சலிக்காத ஒண்ணு
Mostly , எல்லாமே என்னோட favourites ம் கூட.... அனன்யா என்னையும் கூப்ட்டு இருக்காங்க... சீக்ரம் போடறேன்
(டாலர் தேசம் இப்ப போடறீங்க?)
உங்களுக்கும் சங்கீதத்துக்கும் ரொம்ப் தூரமா..? கேள்வி ஞானமே தூள் பரத்துதே..?
நன்றி ஷங்கர்
நன்றி அப்பாவி
வாங்க யூத்து, நன்றி..
வெறும் கேள்வி ஞானம் மட்டும்தான் யூத்து, இதுல ஒரு பாட்டின் ராகம் கூட என்னன்னு தெரியாது..
நல்ல செலக்ஸன்ஸ். டாலர் தேசம் என்ன ஆச்சு பாஸ். இகர்லி வெய்டிங் :-).
பத்துப் பாட்டுக்கு
எட்டுத்தொகைக்
கொடுத்தாலும் தகும்.
யேசுதாஸ் அண்ணாவாம். அநன்யா ஆன்ட்டியாம்.. மஹா ஜனங்களே, இதுல இருந்தே தெரியலை இவர் பெருசுன்னு?
அநன்யா குட்டி என்று அன்புடன் அழைக்கும் வல்லிம்மா கூட இதை பொறுத்துக்க மாட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்...
லிஸ்டு ஜோர் போங்க. பூங்கதவே தாழ் திறவாய் மைஸ் டூ ஃபேவரைட்யா. சூப்பர் சாங்ஸ்.என்ன ஜெனரலா எழுதிட்டு விட்டுட்டீங்க? தொடர் பதிவுக்கு அழைக்கலையா? க்ர்ர்ர்...
நன்றி கண்ணன்
நன்றி மதுமிதா
அநன்யா Aunty..
ஜேசு அண்ணாங்கறது இண்டஸ்ட்ரியில பொதுவா சொல்றது.
அநன்யா குட்டி -- உங்களுக்கு காமடி சென்ஸ் அதிகம்னு எல்லாருக்கும் தெரியும், அதுக்காக இவ்வளவா??
எனிவே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Aunty Ji
raavanan songs came.....
pls listen....
http://rapidshare.com/files/383454823/_MP3__Raavanan__2010__Original_ACD_RIP_VBR__320Kbps___TTHellRaiser_.zip
500 படம் பத்தி கேட்டு மிரண்ட அந்த பிரபலம் ராஜாவைப் பாத்து கேட்டராம் உங்களுக்கு எத்தனை பசங்கன்னு? மூணுன்னு பதில் சொன்ன ராஜாவைப் பாத்து அவர் கேட்டாராம் - When did you get time???
செம ஜோக் ஸ்ரீ...
மன்றம் வந்த தென்றலுக்கு பாட்டுல.. நடுவுல டிரம்பட் சவுண்டு எப்பயும் எனக்கு அந்த பாட்ல பிடிச்ச இசை..
நன்றி வழிப்போக்கன், கண்டிப்பா கேக்கறேன்
ஆமா ஜாக்கி அது ஒரு அருமையான டைமிங் ஜோக்
அந்த ஒரு பாட்டில் மட்டுமா? பல பாடல்களில் பல்லவிக்கும் சரணத்துக்கும் நடுவில் வரும் BGM - ராஜா கலக்கியிருப்பார், ஸ்பெஷாலிடி என்னன்னா சில பாடல்களில் வரும் மௌனம் ம்யூசிக்கை விட சூப்பரா இருக்கும்.
கலக்கல் கலெக்ஷன்..
anna kalakittel. ithula irukara 2-10 ennoda favourites. super selection.
நாட்டாமை கூட போஸ்ட் எல்லாம் போடுரார். ரொம்ப சந்தோஷம்! எல்லா பாட்டுமே நன்னா இருக்கு அண்ணா!
////அநன்யா Aunty //
அட, எப்பிடி நாட்டாமை?? கலக்கிட்டேள் போங்கோ!
//அ(ட)ப்பாவி தங்கமணி - ஏன் இந்த கொலவெறி??//அவங்களை நீங்க விட்டுடீங்கனு அவங்களுக்கு குறையா இருக்கு, ஒரு aunty-க்காக இன்னொரு aunty வக்காளத்து வாங்கத்தானே செய்வாங்க...;)
நன்றி பட்டாபட்டி
நன்றி LK
2-10 பிடிச்ச உங்களுக்கு அன்பே சிவம் பாட்டு ஃபேவரைட்டா இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது
தக்குடு,
இந்த Aunty ங்க எல்லாம் (கேடி, அடப்பாவி, அநன்யா) ஒண்ணா சேந்துண்டு ஒரே அலப்பறை பண்றதுகள்..
//sriram said...
தக்குடு,
இந்த Aunty ங்க எல்லாம் (கேடி, அடப்பாவி, அநன்யா) ஒண்ணா சேந்துண்டு ஒரே அலப்பறை பண்றதுகள்..//
நாட்டாம, இதெல்லாம் சரியல்ல... நாட்டமைன்னா ஒரு நடுநிலையா இருக்க வேண்டாமோ... இப்படி தக்குடுக்கு மட்டும் சப்போர்ட் பண்றது அநியாயம்... ஆமாம் சொல்லிட்டேன். இன்னொரு விசயம் ஆத்தர அவசரத்துக்கு நாங்க தான் வரணும் தோஹால இருந்தெல்லாம் ஆள் வராது கேட்டேளா
//ஆத்தர அவசரத்துக்கு நாங்க தான் வரணும்//
நீங்கதான் ஆத்திர அவசரத்துக்கு வரணும் ஆனா இட்லி மட்டும் செஞ்சு எடுத்திட்டு வந்திடாதீங்க ப்ளீஸ்...
//sriram said...
நீங்கதான் ஆத்திர அவசரத்துக்கு வரணும் ஆனா இட்லி மட்டும் செஞ்சு எடுத்திட்டு வந்திடாதீங்க ப்ளீஸ்... //
இப்படி தக்குடு பக்கம் பேசினா இட்லி தான் வரும்
Kallakal Ji
Good Selection..
Enakku Anbe Sivathula "poo vaasam purappadum" song romba romba pidikkum. I think that's the best melody by Vidyasagar. Adhula naduvula vara music ellam avvalavu nalla irukkum. Niraiya dhadavai enakku kanla thanni vandhirukku andha bits kekkum bodhu. Sriram Parthasarathy appadiye urugiyirupparu andha paatula.
Enakku eppavum oru aasai adhutha jenmam nu onnu irundha naan carnatic music nalla kathukanum. I did learn it for 8 years druing school days aana andha vayasula I didn't realise that I really had a talent and in future la sariya kathukaadhadhukku varutha paduvennuttu.
Yaar yaar sivam paatu lyrics kaaga romba pidikkum. My policy is God fearinga irukkanum nu avasiyam illa as long as you have a conscious and you can tell apart from what is right and what is wrong and act accordingly.
Mattha ellam paatum enakkum pidikkum.
//Porkodi (பொற்கொடி) said...
பூங்கதவே தாழ் திறவாய் என்னோட அதி பயங்கர ஃபேவரிட்.. ஆனா இன்னிக்கு தான் வீடியோவ பாக்கறேன். அழகா இருக்கு லிஸ்ட்டு!//
Amma thaye, nee romba chinna ponnu nu (manasa thethikittu) othukirom, adhukaaga chance kidaikkum bodhellam adha proove panra madhiri edhavadhu sollanuma?
நன்றி Palay king
Maduram Said
.....
சக யூத்து, இப்போ புரியுது நீங்க ஏன் “பூ வாசம்” பாட்டை அதிகம் விரும்பறீங்கன்னு. என்னை மாதிரி இசைப் பாமரனுக்கெல்லாம் யார் யார் சிவம் தேவ கானம். அந்தப் பாட்டின் வரிகளும் பாட்டு வெகுவாக பிடித்ததற்கு ஒரு காரணம்.
//chance kidaikkum bodhellam adha proove panra madhiri edhavadhu sollanuma?//
அது ட்ரேட் மார்க் Aunty அளப்பறை, கண்டுக்காதீங்க
தக்குடு பாண்டி..
ஐய இது என்ன சின்னப் புள்ளத்தனமா பின்னூட்டம் போடுறதுல கூட அம்பிய காப்பி அடிக்கணுமா??
kaappi yellam illai naattamai, yengalukku onnupoolathaan thoonum....:) ungalukku sonnaa puriyaathu...;)
http://www.scubeproductions.com/jakkuboys.html
இசை/பாடல்கள் குறித்த உங்கள் அறிவு பிரமிக்கவைக்கிறது. ஹிஹி.. நானும் அதே மாதிரிதான் வச்சுக்கங்களேன்.
பாடல்கள் தேர்வு அழகு. அதிலும் முதல் பாடல்.!
Post a Comment