நேற்று என்னுடைய பிறந்த நாள் (ஜூலை ஏழு). முதல் முறையாக என் பிறந்த நாள் பொதுத் தளங்களில் அறிவிக்கப் பட்டது (கண்ணு பட்டு விடுமுன்னு அம்மா என் போட்டோவை
சன் டிவிக்கெல்லாம் அனுப்புனதில்லை - அப்படியே அனுப்பிட்டாலும்...).
என்னுடைய இருபத்து எட்டு வருட வாழ்க்கையில் இத்தனை ஆயிரம் பேர் எப்போதும் வாழ்த்தியதில்லை (சரி சரி இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க - வயசில ஒண்ணு ரெண்டு
அதிகமாகவும், வாழ்த்தியவர்கள் எண்ணிக்கையில் ஒண்ணு ரெண்டு கம்மியாகவும் இருந்திருக்கலாம், அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பான்னு அடியேனை மன்னியுங்கள்).
தங்கள் பதிவுகளில் வாழ்த்து சொன்ன தோழர் ஈரோடு அருணுக்கும் (valpaiyan.blogspot.com), நண்பர் / Neighbour / Colleague/ என்னோட தற்போதைய கம்ப்யூட்டர்
கன்சல்டண்ட் அனைத்துமாகிய இளாவுக்கும் பெரிய கும்பிடு போட்டுக்கறேன். அவ்விரு தளங்களின் பின்னூட்டங்களில் வாழ்த்திய பழமை பேசி, சுகுமார், மேனகா, ஜே, செந்தில், தேவா,
ராம்ஜி, நசரேயன்,பா.ரா, கலா நேசன், கீதா ஆச்சல், நேசமித்ரன், கிரி, பட்டாபட்டி, இனியவன் உலக்ஸ், Nari, Writer விசா, கும்க்கி, வெறும் பய, காவேரி கணேஷ்,
தருமி ஐயா, ஈரோடு கதிர், மங்குனி அமைச்சர், விதூஷ், விக்னேஷ்வரி, வத்திராயிருப்பு பாலகுமாரன், ஜோதிஜி, சசி குமார், மைதிலி, உண்மைத் தமிழன், கபீஷ், ஆரூரன்
விசுவநாதன் ஆகியோருக்கும் நன்றி.
தனி மடலில் வாழ்த்திய பொற்கொடி, அப்பாவி தங்கமணி, அநன்யா, உமா ருத்ரன், தருமி ஐயா, நர்சிம், அனாமிகா துவாரகன் ஆகியோருக்கும் நன்றி. தொலைபேசிய
சீமாச்சு அவர்களுக்கும் நன்றி. மேலும் மனதிலேயே வாழ்த்திய உள்ளங்களுக்கும், இனிமேல் Belated wishes சொல்லப் போகும் நண்பர்களுக்கும் நன்றி.
ப்ளாக் எழுதி என்னத்த கிழிச்சேன்னு கேக்கும் தங்கமணிக்கு நேத்து இரண்டு இடுகைகளையும் பின்னூட்டங்களையும் காட்டினேன், இந்த லிஸ்டில் இளா, நர்சிம்,சீமாச்சு தவிர வேறு
யாரையும் நான் பார்த்தது கூட கிடையாதுன்னு சொல்லும் போது பெருமை தாங்கல எனக்கு - நன்றி நண்பர்களே..
என்னோட அமெரிக்க விசா பத்தின தொடரில் இப்படி எழுதியிருந்தேன் - // இதுக்குக் காரணம் ஒரு டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய். 1 $ = 1 ரூபாய் அதுகூட வேணாம் 1$ = 10
ரூபாய்னு ஆச்சுன்னா நம்மில் பல பேருக்கு அமெரிக்க ஆசை போயிடும்// அதுக்கு நாஞ்சில் மைந்தன்னு ஒரு நண்பரின் பின்னூட்டம் - //இதுவும் ஒரு காரணமாக இருந்தாலும் நான்
கேள்விப்பட்ட வரையில் பலர் கூறும் காரணம்... Comfortable lifestyle// - எதுவுமே எழுதாம ப்ளாக்கர்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு இருந்த எனக்கு லீட் கொடுத்த
நாஞ்சில் மைந்தனுக்கு நன்றி - அமெரிக்க வாழ்க்கையில் என்னா Comfortableன்னு எழுதறேன் நண்பரே..
Thursday, July 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
வாழ்த்துக்கள் பாஸ்டன் ஸ்ரீராம். உங்களுக்கு பின்னூட்டம் போட்டதில்லைன்னு நினைக்கிறன்.
நாங்கெல்லாம் அங்க வரணும் பாசு. மெக்சிகன்ஸ் எல்லாம் எப்படி உள்ளே வர்றாங்க?
ம்... அக்கா சிடிசன் ஆகி - எனக்கு பேமிலி ஜி.சி. அப்பளை பண்றதுக்குள்ளே... வயசாயிடும்.
எழுத ஆரம்பிச்சிடிங்களா,
யார் கிள்ளுனது இளவா!?
அன்னாசி எனக்கு விவரம் தேரேயயது இல்லாட்டி ரங்கமணிகள் சங்கம் சார்பா விழா எடுத்து இருப்பேன்..
வாழ்த்துக்கள்
//யார் கிள்ளுனது இளவா!?//
நான் என்னால முடிஞ்ச வரைக்கும் கிள்ளினேன்..! ஆனா எல்லாரும் பதிவு எல்லாம் போட்டு வாழ்த்தவும் "குற்ற உணர்ச்சி"ல வந்துட்டாருன்னு நினைக்கிறேன்.. :)
சரி தல, பிறந்த நாள்-நன்றி பதிவை கலாய்க்கற அளவு நான் கொடுமைக்காரி இல்ல, அதனால இதுல இருக்கற அண்டப்புளுகை எல்லாம் ஒதுக்கிடுறேன் :)
நன்றி ரங்கன்..
புது H1B பத்தியும் Family Green Card பத்தியும் எழுதறேன்..
வாங்க வாலு..
நன்றி கார்த்திக்
நன்றி கேடியக்கா
belated wishes
நன்றி கார்க்கி, தன்யனானேன்
பொறந்தநாளுன்னா விருந்துன்னு ஒன்னு தரனும்.
//யார் கிள்ளுனது இளவா!?//
அது வார வாரம் கிள்ளுறேன், எருமைத்தோலுக்கு எல்லாம் உறைக்காது.. எழுத நேரம் இருக்கு, சரக்கிருக்கு, ஆனா உக்காந்து எப்ப பார்த்தாலும் மொக்கைய திருப்பி திருப்பி படிச்சா ? விளங்குமா?
//எழுத நேரம் இருக்கு, சரக்கிருக்கு,//
சரக்கோட சைடிஷ்ஷும் இருந்தா ஒருவேளை எழுதுவாரோ என்னவோ!?
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.
இப்படியா வாழ்த்தச் சொல்லி அடம்பிடிக்கிறது ?
ஒரு காசு ஐயா..
நன்றி
நானெப்போ வாழ்த்தச் சொல்லி சொன்னேன்??
நெறய பேரு ஓட்டுபோடச் சொல்லி கேக்கறா மாதிரி கூட நான் கேட்பதில்லை.
Vaazhthukal Sriram!!!
நன்றி இனியா
நான்தான் மிஸ்ஸாயிட்டனா.? எல்லாத்துக்கும் சேர்த்து இந்தா பிடிச்சுக்கங்க.. என்னோட நல்வாத்துகளை.!
(அப்புறம் அதென்ன கடைசியில், நீங்களா? எழுதப்போறீங்களா? சரிதான்)
நன்றி பிரபலம்..
இந்த நேரத்தில ஆன்லைன்ல என்ன பண்றீங்க??
ஏன் நானெல்லாம் எழுதக்கூடாதா??
இல்ல நீங்க ரொம்ப சுறுசுறுப்பாச்சேன்னு சொல்ல வந்தேன். என்னவெல்லாமோ எழுதுவேன்னு சொன்னாமாதிரி ஞாபகம். ஹிஹி.
// ஆதிமூலகிருஷ்ணன் said...
இல்ல நீங்க ரொம்ப சுறுசுறுப்பாச்சேன்னு சொல்ல வந்தேன். என்னவெல்லாமோ எழுதுவேன்னு சொன்னாமாதிரி ஞாபகம். ஹிஹி.//
ஹி ஹி....
என்ன பாஸ்.. அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க..
இல்ல.. ஒபாமாவ விட்டு போன் பண்ணுவோம்...
என்ன வாலு..சரியா?...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
//இனிமேல் Belated wishes சொல்லப் போகும் நண்பர்களுக்கும் நன்றி//
:))
Belated birthday wishes Boss. :)))
ஜூலையில் பிறந்தவர்கள் நல்லவங்களா இருப்பாங்கன்னு தெரியும்... உங்களைப் பார்த்ததும் வல்லவராகவும் இருப்பார்கள் என்று தெரிந்தது.
கால தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்..ஸ்ரீ
நன்றி பட்டாபட்டி, சீக்கிரமே எழுதறேன்
நன்றி ரகு
நன்றி ராதாகிருஷ்ணன்
நன்றி அம்பி
தாங்க்ஸ்டா ஜாக்கி
Belated wishes boss..Have a prosperous, fruitful year.
பர்த்டே ஊர்வலம் எல்லாம் முடிஞ்சதுங்களா? ட்ரீட் எப்போ எங்கன்னு சொன்னேங்கன்னு பெட்டி காட்ட ஆரம்பிச்சுடுவோம்... (ஹி ஹி ஹி)... சீக்ரம் பதிவு போடுங்க boss... நன்றி
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
Belated wishes JI..
May GOD Bless you a lot..
aaha miss pannitene..paravalla..belated birthday wishes...
எங்கே பாஸ்டனில் இருக்கிங்க.
நம்ம ஊரில் இருந்துகிட்டே எப்படி மிஸ் பன்ண்டிட்டேன்.
இன்று தான் இந்த பக்கம் வந்து எட்டி பார்த்தேன். நல்ல ப்ளாக். மீண்டும் வருகிறேன்.நிங்க எப்ப வரபோறிங்க.
/நிங்க எப்ப வரபோறிங்க.//
athu avarukue teriyaathu
வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!
Post a Comment