Sunday, October 17, 2010

கனவு தேசத்தில் கணணி வாழ்க்கை - பகுதி 2

என்னடா இது மொதோ பகுதி எழுதாம ரெண்டாவது பகுதின்னு போட்டிருக்கேன்னு பாக்கறீங்களா? ஹி ஹி லாங் லாங் அகோ என்றழைக்கப்படும் ஏப்ரல் மாசத்தில் எழுதின டாலர் தேசம் தான் இது, ஆதி தாமிரா போன்ற பெரியோர்களின் சொல்படி பேர் மாற்றம் செஞ்சிருக்கேன், நல்லா இருக்கா?

பணிச்சுமை, வாழ்வில் சில மாற்றங்கள்னு பல காரணங்க இருந்தாலும், எதுவுமே எழுதத் தெரியல என்பதுதான் உண்மையான காரணம், முதல் பாகத்திலேயே சொல்லியிருந்தேன் -
ஏதாவது கேள்வி கேட்டீங்கன்னா, அதிலேருந்து லீட் எடுத்து எழுதறேன்னு.யாரும் இல்லாத டீக்கடையில் டீ ஆத்தினாலும் பரவாயில்லயின்னு இதோ ரெண்டாம் பகுதி.


ஒண்ணு ரெண்டு நல்ல விசயங்கள பாத்துட்டு பின்னர் பிரச்சனைக்குரிய விசயங்களைப் பார்ப்போம்

1. Current Job Market in US for IT Contracting : அமெரிக்கா நடப்பு ஆண்டின் ரெண்டாம் பகுதியில் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மெள்ள மீண்டு வருகிறது. ஒரிரு ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த வேலைகளை (Projects) நிறுவனங்கள் செய்ய ஆரம்பித்து விட்டன.பல நிறுவனங்கள் Wait and Watch Mode இல் இதுவரை இருந்தன, நிலைமை சீராகும் அறிகுறிகள் தெரிந்தவுடன், புது ப்ராஜக்ட்களில் செலவு செய்ய ஆரம்பித்து விட்டன. மேலும், It is common for companies to hire temporary workers (project based contractors) instead of full time employees immediately after a recession. ஆக மொத்தம் Contracting இல் இருப்பவர்கள் பலருக்கு இப்போ வேலை கிடைச்சிக்கிட்டு இருக்கு.

இப்போதைக்கு எனக்குத் தெரிந்து எல்லா டெக்னாலஜியிலும் காண்ட்ராக்ட் வாய்ப்புகள் இருக்கு, குறிப்பா டெவலெப்மெண்ட் (Oracle / Java / Donet/ SQL)ஆட்களுக்கு அதிகமா வாய்ப்பு இருக்கு. அதுக்குக் காரணம், புது அப்ளிகேஷன் டெவலெப்மெண்ட் நெறய கம்பெனிகள் செய்றாங்க மற்றும் 1999 /2000 ஆண்டு வாக்கில் நெறய அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டன, அவையனைத்தும் தங்களின் Life Cycle முடிப்பதனால், Upgrade / redo செய்ய நெறய வாய்ப்புகள் இப்போ இருக்கு.

டேட்டாபேஸ் அட்மின்களுக்கும் ஓரளவுக்கு வாய்ப்புகள் இருக்கு, இப்பொ நெறய ப்ராஜக்ட்ஸ் டெவலெப்மெணெட் ஸ்டேஜ்ல இருப்பதால், இன்னும் ஓரிரு மாதங்களில் QA மக்களுக்கும்
வாய்ப்புகள் நெறய உருவாகும்.

Bottomline இதுதான் - நீங்க இப்போ இருக்கும் ப்ராஜக்டிலிருந்து தாவ நினைத்திருந்தால் - இது நல்ல தருணம். நவம்பர் மாதத்தில் வேறு ப்ராஜக்ட் கிடைச்சா நலம், இல்லன்னா பெரும்பாலும் ஜனவரி 15க்கு அப்புறமே கிடைக்கும். Thanksgiving, Travel season, Christmas, Newyear ன்னு வரிசையா வரும், எவனும் வேலைக்கு வரமாட்டான்.

2. நியூஃபெல்ட் மெமோ :

இந்த வருஷம் ஜனவரி மாசம் USCIS வெளியிட்ட இந்த சுற்றறிக்கை அமெரிக்க வாழ் H1B மக்களை ஒரு கலக்கு கலக்கியது, அந்நேரத்த்தில் இரண்டு இந்தியர்கள் பேசும்போதெல்லாம்
இத்தலைப்பு கண்டிப்பாக இடம்பெற்றது. இது முக்கியமாக வழக்கிலிருகும் Employer - Employee உறவை கேள்விக்குறியாக்கியது.

தேசி கன்சல்டிங் என்று அன்புடன் அழைக்கப்படும் கம்பெனின்கள் இயங்கும் முறையை பாப்போம் : ABC கம்பெனி குமார் என்பவரை வேலைக்கமர்த்தி அவருக்கு H1B Visa Sponsor
செய்யும், விசா கிடைத்ததும் அவரை அமெரிக்கா அழைத்து வந்து அவருக்கு ப்ராஜெக்ட் தேடும். இது H1B visa வின் அடிநாதமான "JOB FIRST VISA NEXT" கொள்கைக்கு எதிரானது. மேலும் குமாரை ஏதோ ஒரு க்ளையண்டுக்கு பத்தி விட்டதும், குமாருக்கும் ABC கம்பெனிக்குமான உறவு கிட்டத்தட்ட அறுந்தே போகும். சம்பளம் மட்டும் மாதம் ஒருமுறையோ இரு முறையோ அவர் வங்கி கணக்குக்கு போகும், மத்தபடி அந்த க்ளையண்ட் ப்ராஜக்ட் முடிந்தால் தான் ABCகம்பெனி குமாரைப் பத்தியே நினைக்கும். குமார் தினமும் ரிப்போர்ட் செய்வது க்ளையண்ட் மேனேஜருக்குத்தானே தவிர Employer க்கு அல்ல.

இதைத்தான் இந்த சுற்றறிக்கை கடுமையாக சாடியது. Employer - Employee Relationship எப்படி இருக்கணும்னு தெளிவா சொல்லியது. இதில் உள்ள மிக முக்கியப் பகுதியை இப்போ பாக்கலாம்.

United States Employer means a person, firm , corporation, contractor or other association or organization in the United
States which
1. Engages a person to work within the United States
2. Has an Employer - Employee relationship with respect to employees under this part, as indicated by the fact that it may
hire, pay, fire, supervise or control the work of any such employee and
3. Has an Internal Revenue Service Tax Identification number.

முதலாவது மற்றும் மூணாவது பாயிண்ட்டில் யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. இரண்டாவதில் தான் பிரச்சனையே. பெத்த கொழந்தய தவிட்டுக்குக் கொடுப்பது போல
H1B எம்ப்ளாயியை க்ளையண்டுக்குத் தத்து கொடுத்தப்புறம் ABC கம்பெனி குமாரின் day to day வேலைகளில் தலையிடாது - இதைத்தான் கேள்விக்குறியாக்கியது இந்த சுற்றறிக்கை.

இது இப்படி இருக்க, இங்குள்ள பலரும், இதுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கத் தொடங்கினர். Direct Client மட்டும்தான் லீகல், ABC கம்பெனிக்கும் க்ளையண்டுக்கும் இடையில் ஏதேனும் ஒரு கம்பெனி இருந்தால் அது இல்லீகல் என்றெல்லாம் அர்த்தங்கள் கற்பிக்கப் பட்டன. நியூஃபெல்ட் இது பத்தியெல்லாம் சொல்லவே இல்லை.

இதன் அடிப்படியில் H1B visa வழங்குதல் சிக்கலாகியது, Port of Entry யிலும் (முக்கியமாக நியூயார்க் / நியூஜெர்ஸி) பலர் திருப்பி அனுப்பப் பட்டனர். USCIS இன் மீது கம்பெனிகள் ஒரு வழக்குப் போட்டன, வழக்குறைஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் USCIS Director ஐ சந்தித்து மனு கொடுத்தனர். Industry யும் தன் பங்குக்கு Indian H1B Contract work force இன் முக்கியத்துவத்தை திரை மறைவில் அரசுக்கும் USCIS க்கும் உணர்த்தியது.

3-4 மாதங்கள் நீடித்த குழப்பம் மே, ஜூன் மாத வாக்கில் தெளிவாகியது, இப்போது நிலைமை சீராக உள்ளது. என்ன ஒரு விசயம், H1B Petition (Extension or Transfer) அனுப்பும்போது, க்ளையண்ட்டிமிருந்து ஒரு வாக்குமூலம் வாங்கி இணைக்க வேண்டும்

“குமார் என்பவர் எங்களின் (க்ளையண்ட்) ஊழியர் அல்ல, அவர் ABC கம்பெனியின் முழுநேர ஊழியர், அவரை ஒரு குறிப்பிட்ட வேலையை (complete job description) செய்து முடிக்க நாங்கள் ABC கம்பெனியை பணித்துள்ளோம்.
குமாரை Supervise / Control செய்யும் அதிகாரம் ABC கம்பெனியின் முதலாளி திரு. ரெட்டிகாரு அவர்களுக்கே உரியது. எங்களுக்கு (க்ளையன்ட்) குமாரை வேறு ஒரு க்ளையண்டுக்குப் பத்தி விடும் அதிகாரம் எங்களுக்குக் கிடையது, அந்த அதிகாரமும் திரு.ரெட்டிக்கே உரியது. மேலும் இந்த ப்ராஜெக்ட் ஒரு On Going Project, எங்களுக்கு குமாரின் சேவை வெகுநாட்களுக்குத் தேவைப்படும்”

இப்படி ஒரு வாக்குமூலம் (Decent ஆ சொன்னா Client Letter) வாங்கிக் கொடுத்தா H1B Extension / Transfer இல் பிரச்சனை ஏதும் பெரும்பாலும் இருக்காது.
இந்த முறையில் நெறய ட்ரான்ஸ்ஃபர் இந்த ஆண்டு நடந்துள்ளது, ஒரு பிரபல பதிவர் கூட அண்மையில் தன்னுடைய விசாவை வேறொரு கம்பெனிக்கு மாற்றியதாகக் கேள்வி.

பழமைபேசி : முதற்கண் தாமதத்துக்கு மன்னிக்கனும், முடிஞ்ச வரை தெளிவாச் சொல்லியிருக்கேன்னு நெனைக்கிறேன்,ஏதாவது சந்தேகம் இருந்தாக் கேளுங்க, பொதுவில் சொல்லும் விசயமா இருந்தா பதிவில் சொல்றேன், இல்லேன்னா, தனிமடலில் சொல்றேன்


3. இந்த வருஷ H1B Quota :

2007மற்றும் 2008ம் வருஷங்களில் ரெண்டு மடங்கு அப்ளிகேஷன்கள் வந்ததால் லாட்டரி சிஸ்டம் மூலம் 65000 விசாக்கள் வழங்கப் பட்டன், போன வருஷம் நிலைமை தலைகீழ்.
டிசம்பர் மாதம் வரை விசா இருந்ததது. போன வருஷம் மாதிரியேதான் இந்த வருஷமும். அக்டோபர் 8ம் தேதி வரை 41900 பெட்டிஷன்கள் அனுப்பப்பட்டு உள்ளன, மீதம் இருப்பது
23,100 விசாக்கள். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வரை ரொம்ப மந்தமா போய்கிட்டு இருந்தது. L1 to H1, L2 to H1, H4 to H1, OPT to H1 மக்கள் பலரும் அக்டோபர் அருகில் வரும் சமயத்தில் விசா அப்ளை செய்துள்ளனர், Blanket L1 விசாவுக்கு பங்கம் வந்திருப்பதால் (மேலதிகத் தகவல்கள் அடுத்த பாகத்தில்) இந்திய நிறுவனங்களும் H1B அப்ளை செய்துள்ளன. இக்காரணங்களால் ஒரு திடீர் Surge in numbers. ஜனவரி மாதம் வரை கோட்டா இருக்கும் என்பது என்னுடைய அனுமானம்.

Quota Open ஆக இருந்தும் இந்தியாவிலிருந்து முன்னர் போல கன்சல்டிங் கம்பெனிகள் மூலம் வரமுடியவில்லை, அமெரிக்காவில் L1 / L2 / H4 விசாக்களில் இருப்பவர்களும் சுலபமாக Visa Transer with Status Change செய்யமுடியவில்லை, இதற்கெல்லாம் என்ன காரணம்?? இந்த பாகத்தில் ஒரு சில பாஸிடிவ் ஆன விசயங்களைப் பாத்தோம்,
நெகடிவ் விசயங்களை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

28 comments:

தமிழ் அனானி said...

தூங்கப் போங்க. :)

காலையில் கால் பண்ணுறேன்.

தமிழ் அனானி said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

என்னக் கொடுமை சரவணா......

sriram said...

தமிழ் அனானி..
என் மேலதான் உங்களுக்கு எவ்வளவு அன்பு...

போன் பண்ணுங்க, வெயிட் பண்றேன்..

sriram said...

// தமிழ் அனானி said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

என்னக் கொடுமை சரவணா......//

என்ன பண்றது அனானி, உங்கள மாதிரி அனானிங்க, பூஜை அறை, கழிவறை எதுன்னு பிரிச்சு பாக்கமுடியாம எல்லா எடத்திலேயும் கழிஞ்சு வைக்குதுங்க.. அதுக்குத்தான்

தமிழ் அனானி said...

//என்ன பண்றது அனானி, உங்கள மாதிரி அனானிங்க, பூஜை அறை, கழிவறை எதுன்னு பிரிச்சு பாக்கமுடியாம எல்லா எடத்திலேயும் கழிஞ்சு வைக்குதுங்க.. அதுக்குத்தான்//

என்னாது... ‘உங்கள மாதிரி அனானி’ங்களா???

நாளைக்கு 904 நம்பர்ல இருந்து ஒரு கால் வரும். அப்ப இருக்குது சங்கதி. :) :)

sriram said...

//நாளைக்கு 904 நம்பர்ல இருந்து ஒரு கால் வரும். அப்ப இருக்குது சங்கதி. :) :)//

அலோ அலோ யாரு ஹாலி பாலாவா இது??

தமிழ் அனானி said...

ஹாலியாவது பாலியாவது. அவனுக்குத்தான்... பாலூத்திட்டாங்கன்னு கேள்விப்பட்டேனே....?

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு. மேலும் சில முக்கிய தகவல்கள் பகிர வேண்டுகிறேன் (ஏற்கனவே பகிரா விடில்)

எந்த நகரங்கள் பணி புரிய +வாழ சிறந்த இடங்கள்.

வீட்டு வாடகை என்ன செலவு ஆகும்

உணவு, குழந்தைகள் கல்வி கட்டணம் எவ்வளவு செலவு ஆகும் ( தோராயமாக).

குறைந்த பட்ச ஊதியம் எவ்வளவு இருந்தால் அமெரிக்கா பணிக்கு வர வேண்டும்.

Unknown said...

பாஸ்டன் ஸ்ரீராம், நல்ல பதிவு... நானும் ஒரு up-surge கவனிக்கிறேன். நீங்க சொல்லறாப் போல, முதல்ல கான்ட்ராக்டிங் ஜாப்ஸ் தான் நிறைய வரும்.

//இதற்கெல்லாம் என்ன காரணம்?? இந்த பாகத்தில் // ...சரி, சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்க!

a said...

விவரமான விவரங்கள் ஸ்ரீராம்.............

தற்போதைய சந்தை நிலவரத்தை பற்றிய தங்கள் கருத்தோடுஒத்து போகிறேன்

sriram said...

ராம்ஜி யாஹு..

கண்டிப்பா நீங்க கேட்ட விசயங்கள் பத்தி எழுதறேன் - ஓரிரு நாட்களில்

sriram said...

நன்றி கெக்கு பிக்கேணி..
தனிமடல் கிடைத்தது, பதில் எழுதறேன்

sriram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகேஷ்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு.

வால்பையன் said...

//அமெரிக்கா நடப்பு ஆண்டின் ரெண்டாம் பகுதியில் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மெள்ள மீண்டு வருகிறது. //

நானும் அதை தான் கவனித்து கொண்டிருக்கீறேன்!

sriram said...

நன்றி ஸ்ரீ

sriram said...

நன்றி வாலு..
என்ன பண்றது ரெண்டு பேருக்கு அதுதானே பொழப்பு

பழமைபேசி said...

Thanks Buddy!

Anonymous said...

ஆபீஸ் நேரத்துல, எல்லா ப்ளாகுக்கும் போய், பதிவு போடற வேலை கூட பேரிக்காவுல இருக்குனு, உன்ன பாத்து தான் புரிஞ்சுகிட்டேன்.

sriram said...

//ஆபீஸ் நேரத்துல, எல்லா ப்ளாகுக்கும் போய், பதிவு போடற வேலை கூட பேரிக்காவுல இருக்குனு, உன்ன பாத்து தான் புரிஞ்சுகிட்டேன்//

இது புரிய உனக்கு இவ்ளோ நேரமாச்சா அனானி

Anonymous said...

//இது புரிய உனக்கு இவ்ளோ நேரமாச்சா அனானி//
பொருளாதாரம் வெளங்கிரும்

sriram said...

பொருளாதாரம் :
அதப் பத்தியெல்லாம் நமக்கு என்ன கவலை அனானி..
நாம பாட்டுக்கு அடுத்தவன் பதிவுல போயி சொறிஞ்சி விட்டுகிட்டு கிட்டு இருப்போம்

Anonymous said...

Anony ya vanthu comment podura annan Jackie valga...

sriram said...

அனானி ,
தூங்கி எழுந்தாச்சா?? எழுந்ததும் நேரா என்னோட ப்ளாக்தான் போல?? உன்னோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயா??

Senthil said...

good keep going, i added your blog to my google reader for this series, and been waiting for months next updates.

its NOT யாரும் இல்லாத டீக்கடை.
I guess many people like this, at last the everyone's passion is to grow & achieve good career & money.

sriram said...

Thanks Senthil, you made my day

sriram said...

Thanks Senthil, you made my day

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//என்னடா இது மொதோ பகுதி எழுதாம ரெண்டாவது பகுதின்னு போட்டிருக்கேன்னு பாக்கறீங்களா//
ஆஹா... இதை படிக்காம முன்னாடி இடுகை எல்லாம் தேடினேனே... ஆஆஆ.....

//நவம்பர் மாதத்தில் வேறு ப்ராஜக்ட் கிடைச்சா நலம், இல்லன்னா பெரும்பாலும் ஜனவரி 15க்கு அப்புறமே கிடைக்கும்//
என்னங்க ஜோசியர் பலன் சொல்ற மாதிரியே சொல்றீங்க... ஜஸ்ட் கிட்டிங்...

Honestly, waiting for these posts for many days. Though I live in North America, still much less exposure to employment market info in USA. Nice collection of information. I guess most of the readers will find this useful