இத்தொடரின் முந்தைய இடுகைகள்
ரெண்டாம் பகுதியில் நம்ம பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ போட்ட பின்னூட்டத்திலிருந்து லீட் எடுத்து மூணாம் பகுதியில் அமெரிக்கவின் டாப் டென் ஜாப் மார்க்கெட் ஏரியாக்கள் பத்தி
எழுதினேன், மேலும் அவர் கேட்ட சம்பளம் / செலவு பத்தி அடுத்த பகுதியில் சொல்றேன்னு சொல்லியிருந்தேன், மூன்றாம் பகுதியிலும் நம்ம ராம்ஜி அதையே திரும்ப கேட்டிருந்தார்.
அவருக்கு இவ்விடுகை சமர்ப்பணம்.
எந்த நகரங்கள் பணி புரிய +வாழ சிறந்த இடங்கள் - பதில் சொல்லியாச்சு
வீட்டு வாடகை என்ன செலவு ஆகும் - இது இடத்துக்கு இடம் மாறுபடும், நியூயார்க், கலிபோர்னியா, நியூ ஜெர்சி, சிகாகோ, பாஸ்டன் ஆகிய இடங்களில் அதிகமாகவும், டெக்சாஸ், நார்த் கரோலினா போன்ற இடங்களில் கம்மியாகவும் இருக்கும், தோராயமாக ஆயிரம் டாலர்கள் வாடகைக்கு எடுத்து வைப்பது நல்லது.
உணவு, குழந்தைகள் கல்வி கட்டணம் எவ்வளவு செலவு ஆகும் ( தோராயமாக).
அமெரிக்காவில் அரசாங்க பள்ளிகளில் கல்வி இலவசம். பெரும்பாலானோர் பிள்ளைகளை அரசாங்க பள்ளிக்கே அனுப்புகின்றனர். தனியார் பள்ளிகளும் இங்குண்டு - For the
affluent class. குழந்தைகள் செலவு விசயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் நேரெதிர். இந்தியாவில் குழந்தை பள்ளி செல்லும் வரையில் ரொம்ப செலவாகாது, பள்ளி செல்ல
ஆரம்பிச்ச உடனே டொனேஷனில் தொடங்கி எக்கச்சக்க செலவு. பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் மெரிட்ல சீட் பொறியியல் / மருத்துவம் கிடைத்தாலோ அல்லது BA / BSC / BCom சேந்தாலோ ரொம்ப செலவாகாது. அமெரிக்காவில் 5 வயசில தான் பிள்ளைகளை பள்ளியில் சேக்க முடியும், அதுவரை Day Careக்கு ஆகும் செலவு அசாத்தியமானது.
பாஸ்டன் ஏரியாவில Day Care க்கு 2008 ஆனதாக National Assn of Child Care Resource & Referral Agencies சொன்னது $15895 Per kid. கடந்த ரெண்டு வருசத்தில பத்து சதவீதம் கட்டணம் கூடியிருந்தால் கூட வருசத்துக்கு பதினேழாயிரத்துக்கு மேல வரும். ஆனா 5 வயசாச்சுன்னா, KG முதல் 12 ம் வகுப்பு வரை கல்வி இலவசம், பள்ளிப் படிப்பு முடிச்சதும் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடும் - கல்லூரிப் படிப்பு அத்தனை Expensive.
எவ்வளவு செலவு ஆகும் : இதுக்கு பதில் சொல்வது ரொம்பக் கடினம். Variable Parameters ரொம்ப ஜாஸ்தி.. இருப்பினும் ஒரு சின்ன குடும்பத்துக்குத் தோராயாமா ஆகும்
செலவைப் பார்க்கலாம்: வாடகை - 1000, மின்சாரம் - 50, Heating : 50, செல்போன் - 50, டீவி - 50 (comcast க்கு அம்பது டாலர் குடுத்து அனைத்து ஆங்கில சேனல்கள் பார்க்கலாம் அல்லது பத்து டாலருக்கு ரொம்ப கம்மி ஆங்கிலமும் மிச்சம் 35-40 டாலருக்கு சன் டீவி பேக்கேஜும் பாக்கலாம்) இந்தியாவுக்கு தொலைபேச - 35$, இண்டர்நெட் - 50$
பால், மளிகை, காய்கறி இன்ன பிற 750-800$, கார் தவணை 250$, கார் இன்சூரன்ஸ்100$, பெட்ரோல் 150$, மருத்துவம் 100$, ஷாப்பிங்க் 200$, வெளியில் சாப்பிடும்
செலவு 250, Local vacation in US : 250$ மற்றும் இந்திய பயணத்துக்கு மாசாமாசம் ஒரு 250$ எடுத்து வைக்கணும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சில விசயங்கள் அதிகமாகலாம் வேறு விசயங்கள் கம்மியா ஆகலாம். உதாரணமாக கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போனா Eating out / Lunch செலவு அதிகமாகும், ரெண்டு கார் வச்சிருந்தா பெட்ரோல், இன்சூரன்ஸ் அதிகமா ஆகும். ஒரு typical family (2 + 1 kid) க்கு ஆகும் செலவு தோராயமாக 3800 $ முதல் 4000 $ (மாசத்துக்கு) ஒரு ஆயிரம் டாலராவது சேமிக்க முடியலன்னா அமெரிக்கா வருவதில் அர்த்தமே இல்லை, அதையும் சேத்தா மொத்தம் ஐயாயிரம் டாலர்.
To get 5000$ post tax, your salary should be in the order of $7500 to 8000$ per month. The tax structure will vary depending on number of dependents one has. The more the number of dependents the lesser the tax will be..
ராம்ஜி : வருசத்துக்கு 80,000$ - 100,000$ சம்பளம் கிடைச்சா உடனே ஃப்ளைட் ஏறிடுங்க..
ராம்ஜியின் அடுத்த சந்தேகம்: வீடு எங்கே தேடுவது :
இது பத்தி போன பகுதியின் பின்னூட்டதிலேயே சொல்லியிருந்தேன்.
இதுக்கு மொதல்ல இந்திய நகரங்களுக்கும், அமெரிக்க நகரங்களுக்கும் உள்ள வித்தியாசம் பத்தி தெரிஞ்சிக்கணும்.
Locations are City Based in India - Example Chennai City goes upto Tambaram (or even beyond) in the south, beyond Ambattur on
one side and now OMR is considered as Chennai.
Imagine Just Parrys Corner and Mount Road are called Chennai and Saidapet is mentioned as Saidapet, Taminadu instead of Saidapet, Chennai
- This is the basic difference. உதாரணத்துக்கு பாஸ்டன் நகரை எடுத்துக் கொண்டால் Downtown என்று அழைக்கபடும் இடமும் அதைச் சுற்றியுள்ள வெகு சில இடங்களும் மட்டுமே பாஸ்டன் பின்கோடில் வரும். மற்றவையெல்லாம் Subrubs. இங்கு நம்ம ஊர்ல இருக்குற மாதிரி ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கெல்லாம் வாகன வசதி (Public Transportation) கிடையாது. All roads lead to Romeன்னு சொல்றா மாதிரி நெறய இடங்களிலிருந்து Down Town க்கு மட்டும் ட்ரெயின் இருக்கு. அலுவலகம் Down Town ல இருந்தா வீடு சல்லிசாவும் நல்ல பள்ளிகள் எங்கே இருக்கோ அங்கேயும் வீடு எடுத்துக்கலாம். அலுவலகம் Down Town இல் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தால் அதற்கு அருகாமையில் மேலே சொன்ன Parameters எங்க இருக்கோ அங்க வீடு எடுத்துக்கலாம்.
இந்த சப்ஜெக்ட் பேசும் போது ஒரு சில தகவல்களையும் தெரிஞ்சிக்கலாம். அமெரிக்காவின் குறைந்த விலைவாசி கொண்ட பத்து மாநிலங்கள் 1.Oklahoma 2.Texas
3. Tennessee 4. Arkansas 5.Nebraska 6.South Dakota 7.Missouri 8.Kansas 9.Georgia 10. Mississippi இதுல டெக்சாஸிலும் ஜியார்ஜியாவிலும் வேலைவாய்ப்புகளும் நல்லா இருக்கும்.
பாஸ்டனுக்கும் சார்லெட்டுக்கும் விலைவாசியில் கிட்டத்தட்ட 30% வித்தியாசம் இருக்கு. இங்க போயி பாருங்க
http://www.bankrate.com/calculators/savings/moving-cost-of-living-calculator.aspx ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்கு, இரண்டு ஊர்களுக்கு இடையில்
இருக்கும் விலைவாசி வித்தியாசத்தை அழகா பட்டியலிட்டு இருக்காங்க..
ரெண்டாம் பகுதியில அம்போன்னு விட்ட (அம்பி சார் ரொம்ப அக்கறையா விசாரிச்ச) விசா ட்ரான்ஸ்ஃபர் பிரச்சனை பத்தியும் இடமிருந்தா அப்பாவி தங்கமணி கேட்ட கனடா மேட்டரையும் அடுத்த பகுதியில் பாக்கலாம்.
Wednesday, October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
அமெரிக்கா வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள மிக அருமையான தொடர்..தொடரட்டும்..
ம்ம் ஆகட்டும்..
நன்றி அமுதா கிருஷ்ணா
புரியலயே இளா
//ILA(@)இளா said...
ம்ம் ஆகட்டும்..//
He's indirect abt asking, 'Do you think you know more than I do? '
Response: ILA, Why dont you start your own section, if you think so highly of yourself.
அனானி அன்பரே..
எனக்கும் இளாவுக்கும் கொஞ்சம் (கொஞ்சம் என்ன கொஞ்சம் , நெறயவே) வாய் ஜாஸ்தி, We don't any mouthpiece I guess)
அனானி நல்லா இருய்யா.. உள்ளேன் ஐயா போடத்தான் அப்படியொரு பின்னூட்டம். உங்க நாரதர் வேலை நடக்குட்டும். சத்யமேவ ஜயதே
ஹிஹிஹி நாரதர்கள் ஜாஸ்தியாயிட்டே போறாப்புல.. :) இந்த பதிவுக்கு பேரு தான் உப்புமா பதிவு, மேட்டர் ரொம்ப கம்மி ஆனா சுவையாத்தேன் இருக்கு.. :)
நல்லா கோர்வையா எழுதி இருக்கீரு.
டே-கேர்கள் பத்தி இன்னும் கொஞ்சம் விவரனையா சே! விவரமா எழுதி இருக்கலாம். :P
யப்பா, என்னமா கோத்து விடறாங்க பா.. :))
Hi, I need a clarification regarding the H1B.. My visa expired last month... If I want to renew the H1B, how much will it cost and what are all the procedures...
நன்றி கேடியக்கா
நன்றி அம்பி சார்..
அப்புறம், டே கேர் பத்தி விவரமா, டீச்சருங்க வயசு, vital stats பத்தியெல்லாம் எழுத நானென்ன அம்பியா??
Balaji Venkat,
You haven't mentioned if you are in India or in US.
Guess you are not in US because, your H1B has expired and you are asking for details about renewing it. Had you been in US, the extension must have been applied before the expiry of the previous H1B.
Now coming to your query, H1B is EMPLOYER SPONSORED VISA, you cannot apply or renew, your employer has to do that.
An expired Visa cannot be renewed. It will be a new H1B in your case, but since you have been awarded h1b earlier, the new one will not come under Quota.
It is imperative to have a project and a client letter to get your H1B extension. Unless you have a project, The chances of getting the H1B extended is bleak.
The cost involved :
USCIS Fee : $1820
Attorney Fee : varies from $500 to $ 1500
Let me know if you need to know anything more
regards
Sriram
Nice and useful information shared.
நாட்டாமை எப்பிடி நான் பாக்காம விட்டேன் உங்க போஸ்டை!! கொடை மழை மாதிரி 3 - 4 போஸ்ட் போட்டாச்சு போலருக்கு.
என்றும் வம்புடன்,
தக்குடு
மிகவும் பயனுள்ள பதிவு.
பலர் அமெரிக்கா சென்று மாதம் $500 கூட இந்தியாவிற்கு சேமிப்பாக அனுப்ப முடியாமல் திண்டாடுகின்றனர். அந்த நிலை வரப் போகும் மென்பொருள் பட்டதாரிகளுக்கு உருவாகாமல் இருக்கும்.
நன்றிகள்.
Hi Sriram
Very information & Useful article. I fully agree with you on the expense/salary front & the cutoff for coming to US by leaving the family in India.
However we need to consider one important thing - the Quality of life in US(need to accept that its much better back in our home) - includes the infrastructure & other things here.
By God's grace I stay one of best place in US (Houston) which is a Metro at a low cost of living. Also personally I admire on the health care facility here (insrance'la daan).
Keep up the good work..
Cheers, Rajaram
Hi Sriram
Thanks a lot for a very informative & a useful article. I fully agree with you on the Salary front & cutoff salary to come to US.
However in my humble view, we need to consider one more thing.. Quality of life & the price we pay for this. Its really amazing to see the infrastructure & clear defined process to get anything.. I wish & pray that we can get the same in Chennai ASAP..
Keep up your good work..
Cheers, Rajaram
இன்றுதான் பதிவுகளை பார்த்தேன். அருமையாக எழுதிட்டு வரீங்க.
இந்திய கண்சல்டன்சி காரங்க அடிக்கிற கூத்து கொள்ளை பத்தியும் எழுதுங்க..
ஸ்ரீராம் : அருமையான விவரங்கள்............
anony comment அப்புறம் இளா பதில் எல்லாம் சூப்பர்.........
அருமையான விவரங்கள்... பக்ரிவுக்கு நன்றி.
interesting article. However, your comment about "there is no point in coming to US if you can't save $1000 a month" sounds like 'lets go to dubai for a couple of years to make some money' to me :) IMHO, coming to America is more of a "haley's comet" watching life changing experience than anything else. However, i do enjoy reading your blog! :)
நன்றி நாந்தான்
நன்றி தக்குடு
நன்றி ராம்ஜி - உங்க எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டேனா?
Thanks Rajaram for Dropping by.
Quality of life / Ease of life – this is an highly debatable subject. While I completely agree with your view point on Infrastructure in US, I still miss Autos, Domestic Help we had while in Delhi, Getting my car washed everyday for Rs.200 per month etc.
நன்றி அகில் பூங்குன்றன்..
தேசி கன்சல்டன்சிகள் - எழுதி மாளாது, இருப்பினும் முயல்கிறேன்
நன்றி யோகேஷ்
நன்றி சரவணன்
Hi Morpheus,
Good to know that you found my scribblings interesting.
I never tried to compare earnings / savings in US with any other place.
All I tried to communicate is - It is human to expect better saving potential when one moves away from his / her home town and comfort zone.
Honestly, Being able to save more than what I would have saved in India (at the current exchange rates) is one of the very few factors for me. What is the fun in living near skyscrapers when you don't own any of them..
அமெரிக்காவைப் பற்றி அறிது கொண்டோம் அருமையாக...
நன்றி!!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
http://betaofbusinessthoughts.blogspot.com/
annae adutha part eppo??
very Informative Posts... Thanks Sriram.
Cheers,
Ovvakkaasu
Sriram
Before coming to US, when my parents told me to do some household things (gardening or cleaning etc.,) i feel that we can do these things by paying few hundreds.. But after landing in US i realized that doing things on our own has its own advantage.. I feel more comfortable when i do these things now in US..I get more time to forget about the 'client things' while doing these jobs. I take this point in US as a positive point.. I agree with some double engine people struggling with household works..(:-)
When we can expect the next part of the article?
ஸ்ரீராம்
உங்கள் தகவலுக்கு நன்றி,
"பாஸ்டன் ஏரியாவில Day Care க்கு 2008 ஆனதாக National Assn of Child Care Resource & Referral Agencies சொன்னது $15895 Per kid. கடந்த ரெண்டு வருசத்தில பத்து சதவீதம் கட்டணம் கூடியிருந்தால் கூட வருசத்துக்கு பதினேழாயிரத்துக்கு மேல "
பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும்போது குழந்தயை டே கேர் விடுவது ஒன்றும் பெரிய செல்லவு இல்லை , இருவரின் வருமானம் இதற்கு உதவி செய்யும் ( Ifeach make $60,000/yr). பெரும்பாலும் நம்மவர்கள் ( H1B visaஇல் வரும்போது பெண்கள் விட்டில் குழந்தைகளுக்கு கல்வி சொல்லி கொடுகிறார்கள் like Home Schooling , lot of my friends they are doing as a group ) .
பெரு நகரங்களில் உள்ள அரசு பள்ளிகள்ளில் டே கேர் இலவசம் ( Under ESL Program "English as Second Launguage" we are eligible since our mother launguge is tamil)
[ Also You are eligible to deduct the Day Care Expence upto $8000/yr on your Annual Tax filling]
பெரும் பலான நூலகங்களில் வாரம் மூன்று நாட்கள் குழந்தை கல்வி இலவசம். [Most of the libraries has the free kids programs like strry telling, numbering etc,..)
Thanks,
Arun
thala where on earth is hollywoodbala.com?!
நன்றி ராம மூர்த்தி
இப்பதான் ரிலீஸ் பண்ணேன் எல் கே
பாத்துட்டு கருத்து சொல்லுங்க
நன்றி ஒவ்வாக்காசு
Rajaram
thanks for stopping by and for your comment. Posted the next part jus now
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருண்
கேடியக்கா
Wake Up, பாலா கடையை மூடி ரொம்ப நாளாச்சு..
இதுக்குத்தான் கடைத்தெரு பக்கம் அடிக்கடி வரணும்...
Sriram - Great Job on this article. The main objective for most Indians to leave family back and come here (sometimes) is to save to the maximum. Can you please also write about how to save money in the US, as much as you know? By that, I mean spending less and options to save on a day-to-day basis, investment options etc. Thanks
நன்றி செல்ல நிலா.
இங்கிருக்கும் இந்தியர்களுக்கு சேமிக்கவா கத்துக் கொடுக்கணும்? Walmart, Costco, Sams, BJS,டாலர் ஷாப் னு பல விதங்கள்ல சேமிக்கறாங்க. இன்வெஸ்ட்மென்ட் - இதில் நான் கத்துக்குட்டி.
அது பத்தி சொல்ல எனக்கு அறிவு கம்மி. ஆனா ஒரு விஷயம் சொல்லணும். அமெரிக்காவில் இருக்கும் பல இந்தியர்கள் செய்யும் மிஸ்டேக் என்னன்னா மிச்சம் இருக்கும் பணம் அனைத்தையும் இந்தியாவுக்கு அனுப்பி விடுவது. Your Home is where you live -இருக்கும் இடத்தில் ஆபத்து அவசரத்துக்கு
பணம் வச்சிக்கணும்
Nice post, very informative
//Your Home is where you live -இருக்கும் இடத்தில் ஆபத்து அவசரத்துக்கு
பணம் வச்சிக்கணும்//
very well said...took a while to realise it..
sd
hi sriram,
ur blog is awesome...
can u write about how to deal office matters...like i really work hard, but i dont get the recognition as others, & i work hard, but i lose confidence sometimes..
can u write how to be bold & confident in office & deal stupid colleagues n office..?
Post a Comment