Thursday, March 17, 2011

என் வாழ்வில் இன்னுமொரு பெண்

காத்து காத்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாயென !! பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைத்தேன் நீ வருவாயென!!
வந்தாயடி என் வாழ்வின் வசந்தமாக.. வாழ்வாயடி நீ வளமனைத்தும் பெற்றவளாக..
மூன்றாவது முக்கியப் பெண்ணடி நீ என் வாழ்வில்.. மூன்றுமே முத்துக்களடி என்னளவில்..
பத்து மாதம் தாய் பொருத்தாள் உன் பாரம், இனி நீதானடி என் வாழ்வின் ஆதாரம்..
இத்தனை நாள் பொறுமை காத்தோமடி உன்னைக் காண.. இனி நீண்ட நாள் வேண்டாமடி உன் பெருமைகள் காண.
என் மாதிரி உன் மாதிரி நீ ஆக ஆசையில்லை கண்ணே- நீ ஆக வேண்டியது உலகுக்கே முன் மாதிரி..
ஆசையோடு உனக்கிட்ட பேர் ஸ்ரீஹிதா, சந்தோஷங்களை இனி நீ அள்ளித்தா..


சோழர் பரம்பரையில் மற்றுமொரு MLA. முதல் குழந்தையாக பெண்ணைப் பெற்ற நீண்ட பதிவர்கள் வரிசையில் இன்று நான். நானும் என் மனைவியும் எங்க முதல் குழந்தையை எதிர் பார்த்திருந்தது உங்களில் சிலருக்குத் தெரியும். இன்று உதயமானது எங்கள் சொர்க்கம்.
பெண் குழந்தைக்கு ஸ்ரீஹிதா ஸ்ரீராம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஸ்ரீஹிதாவின் முதல் புகைப் படம் உங்கள் பார்வைக்கு..



ஹிதா வரும் காலத்தில் என்னவாக வேண்டுமானாலும் ஆகட்டும். நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களோடு நேர்மையான,நல்ல மனுஷியாக அவளை வளர்ப்போம்.

55 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!! பட்டுப்போல் பூத்திருக்காள்.

இனிய ஆசிகள்.

நல்லா இருங்க.

பெம்மு குட்டி said...

Congratulation’s for you and your family may GOD Bless your child and your family





That's Y u haven’t written any posts last month.

எல் கே said...

ஆஹா உங்களைத்தான் ஜாக்கி அண்ணன் சொல்லி இருந்தாரா ? வாழ்த்துக்கள் பாஸ்டன் அண்ணாச்சி ..

ஸ்ரீஹிதாவுக்கும் என் வாழ்த்துக்கள்

Jackiesekar said...

என் மனைவிக்கும் என் நண்பரின் மனைவிக்கும் ஒரே நாளில்தான் குழந்தை பிறக்க டியூடேட் கொடுத்து இருந்தார்கள்.. ஆனால் இரண்டு நாள் தள்ளி எங்களுக்கு மகள் பிறந்தாள்..நண்பனுக்கும் பெண்குழந்தைதான்..அவன் வேறு தேசத்தில் இருக்கின்றான்... அங்கே குழந்தை ஆணா பெண்ணா என்று சொல்லி விடுகின்றார்கள். நண்பரின் மனைவிக்கு இன்னும் ஒரு வாரம் டெலிவரிஆகும் என்று மருத்தவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.. இந்த சந்தோஷத்தை இரண்டு குடும்பமும் கொண்டாடி இருக்கவேண்டும்... மழை பெய்வதும் குழந்தை பிறப்பதும் அந்த மகாதேவனுக்கே தெரியாது என்ற வரிகள் உண்மைதான்.. என் குட்டி மருமகளை காண ஆவலாய் இருக்கின்றேன்... என் மாமியார் இரண்டு குடும்பத்து குழந்தையும் நல்லபடியாக பிறக்கவேண்டி மகமாயிக்கு வேண்டி பால் அபிஷேகம் செய்ய வேண்டிக்கொண்டு இருக்கின்னறார்... நல்லபடியாகத்தான் பிறக்கும்....இரண்டு பேருக்குமே தலைபிரசவம்தான்..நண்பரின் மனைவிக்கும் சுகப்பிரசவம் அடைய எல்லாம் வல்ல பரம் பொருளை பிரார்த்திக்கின்றேன்--//


எனது பதிவில் இப்படித்தான் எழுதி இருந்தேன்...

எல்லாம் நல்லபடியாக நடந்தது பரம்பொருளுக்கு நன்றி.

குழந்தை கொள்ளை அழகு...


இனியெல்லாம் சுகமே....

Jackiesekar said...

இரண்டு நாள் தவித்தேன், கதறினேன்...இன்று சுகமாய் இருக்கின்றது.. ஆனால் அந்த டென்ஷன் இருக்கின்றதே...யப்பா வெளி சொல்ல முடியாத வேதனை..

எல் கே said...

//இரண்டு நாள் தவித்தேன், கதறினேன்//

அண்ணே அதை வெளியில் எக்ஸ்ப்ரெஸ் பண்றது கஷ்டம்

Unknown said...

ஸ்ரீராம், மனமார்ந்த ஆசிகள். குழந்தை பிறந்ததா என்று இன்று உங்களை கேட்டு விட வேண்டும் என்று தோன்றியது உண்மை!!

பேரு நல்லா இருக்கு. ஹிதா அனைவருக்கும் ஹிதமானதைச் சொல்லி, நல்வாழ்வு வாழ என், குடும்பத்தாரின் ஆசிகள், ஆசைகள். குழந்தை பார்க்கவே //பட்டுப்போல் பூத்திருக்காள்.//, பாப்பாவுக்கு முத்தங்கள்.

இவ்வளவும் நடக்கப் பொறுத்தாண்ட தாயும் நலம் என்று நம்புகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் சார்.. வீட்டுக்கு மஹா லட்சுமி வருகை

R. Gopi said...

நல்வரவு ஸ்ரீஹிதா

ஸ்ரீராம், நல்ல பெயர் வைத்துள்ளீர்கள்.

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே"

என்ற தாயுமானவரின் பராபரக் கண்ணிதான் நினைவிற்கு வருகிறது.

எல்லா வளமும் பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

புது அம்மா, புது அப்பாவிற்கும் வாழ்த்துகள்!

Unknown said...

Your baby is very cute!
thyagarajan

Paavai said...

She looks so serene... hearty welcome to the newborn and congratulations to the proud parents

விஜி said...

வாழ்த்துக்கள் :)

டக்கால்டி said...

Congrats Sir

அமுதா கிருஷ்ணா said...

ஹை பொண்ணா, வாழ்த்துக்கள்.இரண்டு தடிப்பசங்களின் அம்மா..

Pranavam Ravikumar said...

அருமை!

Unknown said...

குழைந்தைக்கு என் அன்பும் , ஆசிர்வாதங்களும் ...வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

Unknown said...

குழைந்தைக்கு என் அன்பும் , ஆசிர்வாதங்களும் ...வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

vasu balaji said...

ஹேய். ஸ்ரீராம். ஸ்ரீஹிதாவா. க்யூட். :)). என் ஆசிகள். உங்களுக்கு வாழ்த்துகள்.

Ravichandran Somu said...

Congrats Sriram!!!

Asir said...

Congrats Sir

blogpaandi said...

வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பரே

RVS said...

எனக்கும் முதல் குழந்தை பெண் குழந்தைதான்...
எல்லோரும் லக்ஷ்மி, அதிர்ஷ்டம் என்று கூறினார்கள்...
ரெண்டாவதும் பெண் பிறந்து...
டபுள் லக்ஷ்மி, டபுள் அதிர்ஷ்டம்... ;-)))
நீங்களும் கூடிய விரைவில் டபுள் சந்தோஷம் காண ஆசை.
ஹிதாவிற்கு ஆசிகள். உங்களுக்கு வாழ்த்துக்கள். ;-)

எண்ணங்கள் 13189034291840215795 said...

மனமார்ந்த வாழ்த்துகள் ஸ்ரீராம்..

மிகுந்த மகிழ்ச்சியும்..

குழந்தைக்கு எம் ஆசியும்...

Sathish Kumar said...

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்..! குட்டி ரோஜாப் பூ "ஹிதாவு"க்கு நல்வரவு...!

iniyavan said...

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

இனிமையா ஹிதமா இருக்கும் பெண்மகள், பொன் போல இருக்கிறால். இனிமையான நல்வாழ்த்துகள். அனைத்து நலங்களும் பெற இறைவன் அருள்வான்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//என் மாதிரி உன் மாதிரி நீ ஆக ஆசையில்லை கண்ணே- நீ ஆக வேண்டியது உலகுக்கே முன் மாதிரி//
Lovely words...welcome ஸ்ரீஹிதா....:)))

//ஸ்ரீஹிதாவின் முதல் புகைப் படம் உங்கள் பார்வைக்கு.. //
பாப்பாவுக்கு சுத்தி போடுங்க அண்ணாத்தே... பெண் குழந்தைகள் எப்பவும் அழகும் ஐஸ்வர்யமும் தான் வீட்டில்... மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீஹிதாவின் அம்மா மற்றும் அப்பாவுக்கு...:))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...
This comment has been removed by the author.
Peppin said...

Best wishes Sriram!!!

எண்ணங்கள் 13189034291840215795 said...

குழந்தை செம க்யூட். மலரும் நினைவுகள் ஏற்படுத்தாமல் இல்லை..

நீங்க இனி பிஸியான அப்பா..:)

சுத்தி போடணும் குழந்தைக்கு..

வருண் said...

Sure she is pretty, Mr&Mrs Sriram! :)

She will teach you lots of unlearned lessons about life to you! :)

Congrats!

Anonymous said...

வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
அரவிந்தன்

R.DEVARAJAN said...

குழந்தைக்கு ஆசிகள்

தேவ்

bandhu said...

குழந்தைக்கு என் ஆசிகள்! ஷேமமாக இருப்பாள்!

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் ஸ்ரீ

டெக்ஸாஸ் கண்ட சோழன்
குடுகுடுப்பை

அரசூரான் said...

பாஸ்ஸ்ரீ வாழ்த்துகள். ஸ்ரீஹிதா...அருமை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

குட்டி பாப்பா so க்யூட்....


வாழ்த்துக்கள் Sriram...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஹிதா...தங்கள் படைப்பிலேயே இது தான் பிடித்தது. அருமையான பெயர்..பெயர்க் காரணம் சொல்லியிருக்கலாம்..பட்டு ரோஜாவிற்கு எங்கள் குடும்ப ஆசிகள்!

காவேரிகணேஷ் said...

மிக்க சந்தோசம் தரும் தருணம் இது.

வாழ்த்துக்கள் தலைவரே.

Anonymous said...

பொண்ணு இவ்ளோ அழகா இருக்கே. அம்மா மாதிரியா? நீங்க அடிப்பாவின்னு சொல்றது கேக்குது. வளர்ந்த பிறகு, எதுக்குப்பா இந்த படம் போட்டேன்னு தொரத்தி தொரத்தி அடிக்கப் போறா. நான் கண்ணாடி போட்டுட்டு பார்த்து சிரிக்கப்போறேன். ஹா ஹா ஹா.

வாழ்த்துக்கள் தாத்தா. (அப்ப இவ எனக்கு சித்தியா)

சாந்தி மாரியப்பன் said...

தாய்க்கும் சேய்க்கும் தந்தைக்கும் வாழ்த்துகள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஸ்ரீஹிதா. பெயரிலேயே ஹிதம் & ரிதம் (இதமும் இசையும்) உள்ளன. மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்,

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

இன்னைக்கு தான் பார்த்தேன், போன் பண்ணீயிருந்தேன் நீங்க பிஸி போல, நல்லா பார்த்துக்கோங்க தல!

இனிமே தான் உங்களுக்கு பொறுப்பு அதிகம்!

Gayathri said...

congrats..dhristi suttripodunga

Nat Sriram said...

Congrats Sriram !! Never knew..Randomly visited your blog..Srihitha is so lovely..(Enakkum ponnu than..Takes me back to those days..)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

பெண் குழந்தைகள் எப்போதும் அப்பாவுக்கு அதிகம் ரிலேட் ஆவார்கள்,அவர்கள் அம்மா போன்ற தோற்றத்தில் இருந்தாலும் :))

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் ஸ்ரீராம்.

சுரேகா.. said...

. அழகுப்பெட்டகத்தின் வருகை ..வசந்தம் தான்.! அதனால் தாமதமானாலும்.. என் வாழ்த்துக்களையும் சேர்த்துவிடுங்கள்!

RRSLM said...

Congrats Sriram!

இராஜராஜேஸ்வரி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீஹிதாவிற்கு

Ganesh-Vasanth said...

Hello Frndu,i returned back to your blog after 3 months and happy to see the good news.
Congrats!!!!
May god bless the baby

tamilraja said...

அழகு குட்டி செல்லம்

tamilraja said...

என் வாழ்விலும் ஹிதாவைப்போலவே ஒரு தேவதை எனை தேடி வந்திருக்கிறது

ஜோதிஜி said...

வாழ்த்துகள்