மொச பிடிக்கிற நாயை மூஞ்சை பார்த்தா தெரியும்னு சொல்றது மாதிரி NRI மக்களின் செய்கைகளை வச்சு அவங்க அமெரிக்கா வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு
சொல்லிடலாம்.
ஆங்கிலம் : அமெரிக்கா வந்து இறங்கியதும் முதல் ஷாக் இவங்களோட உச்சரிப்பு. இங்கிலிபீசில நான் சேக்ஸ்பியர் லெவல்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவனுக்கு அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பு கிர்ர்ரட்டிக்கும் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு அத்தோட நிக்காமல் அமெரிக்கா நுனி நாக்கு ஆங்கிலம் பேச முயன்று கேவலமா தோத்துப் போவாங்க. (அமேரிக்க அக்சென்ட் வெகு சிலருக்கே வரும், இங்கே பிறந்த / வளரும் குழந்தைகள் அட்டகாசமா பேசும்).
சரி நமக்கு உச்சரிப்புதான் வாய்க்கலை, அவர்கள் உபயோகிக்கும் பதங்களை உபயோகிக்க ஆரம்பிப்பது அடுத்த லெவல்.
யாராவது How Are you ன்னு கேட்டா I am fineன்னு சொல்லியே பழக்கப்பட்ட நாம I am Good என்று சொல்ல ஆரம்பிப்போம். ஏதாவது ஒரு விசயத்துக்கு தயாரான்னு கேட்டா I am Ready என்று சொல்லாமல் I am all set என்றே சொல்லுவோம்.
நண்பர்களை டேய் என்று அழைக்காமல் DUDE என்று அழைக்கத் தொடங்கும்போதும் இந்தியாவில் இருப்பவரிடம் தொலை பேசும்போது Sounds Good என்று சொல்லி மறு முனையில் இருப்பவர் நம்ம குரல் அவ்ளோ நல்லாவா இருக்குன்னு குழம்பி அவரை சுத்தலில் விடும்போது பார்ட்டி அமெரிக்கா வந்து சில பல வருஷங்கள் ஆச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.
சாப்பாடு : அரிசியும் கோதுமையுமே மனுஷன் சாப்பிட உகந்தவை. சாலட் என்பது இலையும் தழையும், அது ஆடு மாடு சாப்பிடும் வஸ்து, மேலும் வெஜிடபிள் சாலட் என்பது முழு சாப்பாட்டுக்கு முன் சாப்பிடுவது, பர்கர் என்பது
இரண்டு முழு சாப்பாடுகளுக்கு இடையில் பொழுது போக சாப்பிடுவது - இதெல்லாம் ஊருக்கு வந்த புதுசில் அடிக்கும் கமெண்டுகள்.
தினமும் ஆபிஸுக்கு வீட்டு சாப்பாடு எடுத்துப் போக முடியல, பக்கத்தில இந்தியன் ரெஸ்டாரண்ட் எதுவும் கிடையாது- சூப், சாண்ட்விச், பர்கர், சாலட் இதுல ஏதாவது சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்றேன் - இது வந்து ஓரிரு வருஷங்கள் ஆன நிலை.
விடுமுறை நாட்களிலும், நண்பர்கள் வீட்டுக்குப் போனாலும் - I eat only Salad and Soup for Lunch and Dinner, Rice and Wheat are full of Carbs you know!!!இப்போ ஐயா அமெரிக்கன் ஆகிட்டாருன்னு அர்த்தம்.
பண விஷயம்:
சில்லரைக் காசு அமெரிக்கா வந்த புதுசில் குழம்ப வைக்கும் இன்னொரு விசயம் - நாணயங்கள்.
ஊருக்குப் புதுசு : ஐந்து செண்டுக்கும் பத்து செண்டுக்கும் வித்தியாசம் தெரியாத நிலை, அதிலும் முக்கியமா ஐந்து செண்ட் பத்தை விட பெரிசா இருப்பது இன்னும் குழப்பும்.
ஓரிரு வருஷங்கள் ஆன பின்: அமெரிக்க நாணயங்களின் ஷேப்பும் மதிப்பும் நல்லாவே பழக்கமாகியிருக்கும், அத்துடன் பென்னியும் நிக்கலும் டைமும் நாலணா எட்டணா போல பழகியிருக்கும்.
அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சு : தெருமுனைக் கடைகளில் தரும் மீதப் பணத்தில் ஒரு செண்ட்களை எடுக்காமல் விட்டு விட்டு வர ஆரம்பிக்கும் போது அமெரிக்காவில் செட்டில் ஆயாச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்.
$ to ரூபாய் :
ஊருக்குப் புதுசு : எல்லாப் பொருட்களின் விலையையும் ரூபாயில் கன்வெர்ஷன் செய்து கவலைப் படுவது அமெரிக்கா வந்ததும் வரும் ஹாபி. ஒரு ப்ளேட் இட்லி 250 ரூபாயா? ஒரு தோசயின் விலை 500 ரூபாயா என்று சரியா சாப்பிடதா பலருண்டு இங்க.
ஒரிரு வருஷங்கள் ஆச்சு : கன்வெர்ஷன் மோகம் போயாச்சு. Your home is where you live என்பதை நம்பத்தொடங்கி பொருட்களை சகஜமாக வாங்கத் தொடங்கியிருப்போம்.
செட்டில்ட் இன் அமெரிக்கா : இவங்களை இந்திய விசிட்டின் போது தெரிஞ்சிக்கலாம் - அங்கு துணிமணி வாங்கும் போதோ, கலைப் பொருள் வாங்கும் போதோ - ஆயிரம் ருபாய் அப்படினா கிட்டத்தட்ட இருபது டாலர் அப்படின்னு சொன்னா பார்ட்டி அமெரிக்க செட்டில்ட்னு தெரிஞ்சிக்கணும்.
வீடு தேடும் படலம்:
அமெரிக்கா வந்திறங்கியது தேடும் அப்பார்ட்மெண்டில் நாம் எதிர்பார்க்கும் விசயங்கள் : வாடகை கம்மியாகவும் இந்தியர்கள் நிறையவும் இருக்கும் குடியிருப்பு, ட்ரெயினுக்குப் பக்கத்தில் இருக்கணும் (அப்பத்தான் கார் இல்லாம காலத்தை ஓட்ட முடியும்), இந்தியக் கடை மற்றும் வால்மார்ட் அருகில் இருப்பது அவசியம்.
வாடகை அதிகமானாலும் பரவாயில்லை- நல்ல தரமான அப்பார்ட்மெண்ட் வேணும், காரில் ஆபிஸ் போய் வர வசதியா இருக்கணும், தேசிக்கள் அதிகமா இல்லாம இருக்கணும் (ஒரே பாலிடிக்ஸ் யூ நோ!!)- இப்படியெல்லாம் டிமாண்ட் வச்சா அமெரிக்கா வந்து ஓரிரு வருஷங்கள் ஆச்சுன்னு அர்த்தம்.
ரியல் எஸ்டேட் ப்ரோக்கரிடம் மூணு நாலு லட்ச டாலர் விலைக்கு நல்ல வீடு பார்க்கச் சொல்லி - நல்ல டவுனா இருக்கணும், Excellent School District, க்ரைம் ரேட் கம்மியா இருக்கணும், Unemployment, diversity அப்படின்னு பெரிய Requirement லிஸ்ட் கொடுத்தால் அமெரிக்காவில் மொத்தமா செட்டில் ஆயாச்சுன்னு அர்த்தம்.
விசா: வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு இந்தியர்களும் அமெரிக்கக் குடியுரிமையும் சிறந்த உதாரணம்.
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான பொட்டி தட்டும் மக்களின் கனவு H1B Visa. அமெரிக்கா வந்திறங்கியதும், ஷார்ட் டெர்ம் விசிட்டை லாங் டெர்ம் ஆக்குவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படும்
விசாவும் நீண்ட நாள் தங்கும் ஆசையும் நிறைவேறியதும் அடுத்த இலக்கு பச்சை அட்டை (Green Card) மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் இணைந்து இதற்காக பலவருடங்கள் காத்திருப்பது இடைப்பட்ட நிலை.
பச்சை அட்டை கிடைத்து ஐந்தாண்டுகளில் அமெரிக்கக் குடியுரிமை அடுத்த இலக்கு. அமெரிக்கா வந்து பத்தி பதினைந்து ஆண்டுகள் விசாவையும், பச்சை அட்டையையும், குடியுரிமையும் துரத்தி கடேசில எல்லாம் கிடைச்சப்புறம், செட்டிலானபின், I am going back to India for Good என்பது உச்சகட்டக் கொடுமை.
நான் இப்போது பெரும்பான்மையான விசயங்களில் ரெண்டாவது கேட்டகரியில் இருக்கிறேன்.
இவை தவிர நீங்க நினைக்கும் மத்த விசயங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்
41 comments:
Your home is where you live //
இது தான் வாழ்வின் தத்துவம்
ரொம்ப அழகான நேரேஷன். நல்லா இருந்தது பாலா. ;-))
அப்படியே புட்டுப்புட்டு வச்சுட்டீங்க:-)
நான் மூணாவது கேட்டகிரிக்கு வந்து ரொம்ப வருசமாச்சு.
இன்னும் ரெண்டு வாரத்தில் I am going back to NZ for Good:-)))))
நன்றி நாய்க் குட்டி மனசு
வாங்க வெங்குட்டு , நட்சத்திர வாழ்த்துக்கள்,
அப்புறம், நான் பாஸ்டன் பாலா இல்லை, பாஸ்டன் ஸ்ரீராம்
வாங்க டீச்சர், ஏன் இந்தியா போர் அடிச்சிருச்சா?
போதுமுன்னு ஆகிருச்சு!
Ji ... Very Good Post...
This will apply in Dubai also...
பாஸ்டன் அண்ணே..
சீக்கிரமா ஒபாமாகிட்ட சொல்லி கிரீன் கார்டு வாங்கு ஒரு பொறுப்பான அமெரிக்கக் குடிமகனா மாறிடுங்க..!
நிறைய தகவல்கள்.. தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி..!
நிறைய விஷயஙம் கத்துகிட்டேன்.. இந்த ஸ்டைலாப் ரைட்டிங்க எங்கயோ படித்தா போல இருக்கு....
நல்ல பதிவு. தெரியாத பல புதிய தகவல்கள்..
நன்றி..
நல்லா எழுதியிருக்க ஸ்ரீ..சுஜாதா கூட இந்த சப்ஜெட்டை எழுதியிருந்த நியாபகம்..xy syndrome..(rightaa?)
நல்லா எழுதியிருக்க ஸ்ரீ..சுஜாதா கூட இந்த சப்ஜெட்டை எழுதியிருந்த நியாபகம்..xy syndrome..(rightaa?)
நல்லா எழுதியிருக்க ஸ்ரீ..சுஜாதா கூட இந்த சப்ஜெட்டை எழுதியிருந்த நியாபகம்..xy syndrome..(rightaa?)
//போதுமுன்னு ஆகிருச்சு!// நெறைய பேருக்கு நடக்குறதுதான் டீச்சர்.
உ த அண்ணே, நீங்க கொஞ்சம் ரெக்கமண்டு பண்ணுங்க அண்ணே
//இந்த ஸ்டைலாப் ரைட்டிங்க எங்கயோ படித்தா போல இருக்கு..// நானென்ன ஜாக்கியா எழுத்தில் பாலகுமாரன் சம்மணமிட்டு உக்காந்திருக்க?
நன்றி யாழினி
நன்றி மணிஜி, நான் சுஜாதா இது பத்தி எழுதியதை படித்ததில்லை
Sounds Good .....Good one:)
செட்டிலானபின், I am going back to India for Good என்பது உச்சகட்டக் கொடுமை.
//
உண்மை...
:-)
//அமெரிக்கா வந்து பத்தி பதினைந்து ஆண்டுகள் விசாவையும், பச்சை அட்டையையும், குடியுரிமையும் துரத்தி கடேசில எல்லாம் கிடைச்சப்புறம், செட்டிலானபின், I am going back to India for Good என்பது உச்சகட்டக் கொடுமை.
//
Correct...
I am done with everything and came back to India three months back:)))
நானும் இரண்டாவதுதான். ஆனா எப்ப ஊருக்கு போவேன்னு தெரியாது. India is my country, all brother and ....ters.. This country has dry life you know(USA)
Boston Sriram.. Sriram ஆனதன் பிண்ணனி என்னவோ?
நன்றி ராஜ நடராஜன்
நன்றி பட்டாப்பட்டி
ஜாக்கி மூலம் நீங்க இந்தியா சென்றது பத்தி அறிந்தேன் ரவிச்சந்திரன்.
இளா, அப்போ கிரீன் கார்ட் ப்ராசஸ் நிறுத்திடலாமா?
நன்றி ரத்னவேல் ஐயா.
கார் வாங்குவது
--------------
70,000 மைல்களுக்குள் ஓடின used Toyota Corolla / Honda Civic / Nissan Altima தேடறது - Stage#1
Brand new Toyota Camry / Honda Accord / Nissan Altima வாங்கறது - Stage#2
ஏற்கனவே ஒரு கார் இருக்கும்போது இன்னொரு Van வாங்கறது. Travelling with kids in a small car is tough you know?! :-) - Stage#3
Lexus / Acura / Pontiac வாங்கினா EAD / Green Card வந்துடுச்சுன்னு அர்த்தம் - Stage#4
BMW / Benz / Ford / other than Japanise கார் வாங்கினா செட்டில் ஆயாச்சுனு அர்த்தம் - Stage#5
அப்புறம் இந்த "Stege No.:" க்கு பதிலா "Stage#"னு போடறது கூட :-)
நான் கூட இரண்டாவது நிலைல தான் இருக்கேன். அதோடவே U-Turn போட்டு இந்தியா போறதாத்தான் உத்தேசம். அதுக்குன்னு இளா கிட்ட கேட்ட மாதிரி GC Process நிறுத்திடலாமான்னு கேட்டா...ஹி ஹி ..அது பாட்டுக்கு அது போகட்டுமேனு சொல்லுவம்ல :-)
நன்றி ஸ்ரீநிவாசன்
இளாவிடம் அந்த கேள்வி கேட்டதற்கு வேறு ஒரு காரணம் இருக்கு !!!
கார் மேட்டர் : இதை நினைவில் வச்சிருந்தேன், எழுத மறந்திட்டேன், நியாபகப் படுத்தியதுக்கு நன்றி.
நான் கார் விசயத்தில், வழக்கம் போல மொதல்ல பழைய Corolla வாங்கினேன், ஆனா அங்கிருந்து ஜம்ப் பண்ணி லெக்சஸ் வாங்கிட்டேன், ஒருவேளை அதனால் மறந்திருப்பேனோ ?
அட அட.... பொட்டியோட அஞ்சு வருசத்துக்கு முன்னாடி பொட்டியோட வந்து எறங்குனது ஞாபகம் வருது.....
முதல் வருடம் : கே மார்ட் / வால் மார்ட் மட்டுமே போவது
அடுத்த சில வருடங்கள் : ஜே சி பென்னி : கோல்ஸ் : எப்போவாவது மேசிஸ்
செட்டில் ஆனவர்கள் : ப்ளூமிங்க்டேல், குறைந்த பட்சம், மேசிஸ்
முதல் வருடம் : ஆம்வே காரர்களிடம் சேரலாமா என்று யோசிப்பது
அடுத்த சில வருடங்கள் : ஆம்வே காரர்களிடமிருந்து ஓடுவது
செட்டில் ஆனவர்கள் : ஆம்வே காரர்களை ஒரு மைல் தூரத்திலே கண்டு பிடிப்பது
Bandu, Amway Matter - Super
நான் எடுத்தவுடனே Stage#2 க்கு போயிட்டேன் கார் விசயத்துல மட்டும்.
//GC//
அது பாட்டுக்கு போவட்டும். ஸ்ரீனிவாசன் கட்சிதான் நாம்பளும்
1. First 4 years, you agree with democrats and then change yourself to republican.
2. In SFO Bay area, we are looking at million dollar properties with $300000 to $400000 in down payment for very good school district
3. Make friends only with equal status
4. Take vacations only around the world and not to India or local(US) anymore
எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்படுகிறது ஆனால் ஆன்லைனில் கூப்பன் ப்ரிண்ட் பண்ணி மாறி மாறி க்யுவில் நிற்கும் நிலை என்றும் நம் இந்தியனுக்கு மாறாது.
படிப்பதற்கு நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
இரண்டாம் நிலையில் 1999 பாதி வழியில் விட்டாலும், இந்தியா சுகமாக இருந்தாலும் ( வீடுகள் , இடங்கள் , கார்கள், பல வாசல்கள், ஆல்மோஸ்ட் ரிடர்யர்டு லைப் ) , மீண்டும் அங்கு வந்து குழந்தை குட்டிகளோடு இருப்போமில்லே...
அப்புறம், இப்போ அங்கே ஜாப் மார்கெட் எப்படி என்று கேட்டால் மிகவும் கஷ்டம் என்றே பதில் வருது... இந்தியர்களிடம் இருந்து... அவங்க ஜாப்பை நாம லாவட்டிடா?
வெள்ளை தோல்.. நண்பர்களிடம் ( புது வருட வாழ்த்துக்கள மட்டும் சொல்லி வந்தேன் பத்து வருடமாக) நான் அங்கு திரும்பி வரலாம் என்று சொன்னதிற்கு - உங்கள் ரேசூமேவை கொடுங்க என்று சொல்லி, விடாமல் வாங்கி - பல இன்டர்வியுக்கள்... ட்ரிப்கள் என ஏற்பாடு செய்த நல்ல உள்ளங்கள் இருக்காங்க... சங்கு சுட்டாலும்!
அது ஏங்க அப்படி நம்ம மக்கள்ஸ் மட்டும் தனி?
http://vijayashankar.blogspot.com/2006/03/you-are-desi-if.html
திஸ் இடுகை sounds good :-)))))
திஸ் இடுகை sounds good :-)))))
நிஜம்தான் ரூஃபினா சொன்ன்டை வழிமொழிகிறேன். YOUR HOME IS WHERE YOU LIVE.. :))
நல்ல பகிர்வு ஸ்ரீராம்.
திரு நாகப்பனிடம் பேசி விட்டு அவர் மெயில் ஐடியும் ., கைபேசி எண்ணும் அளிக்கிறேன் ஸ்ரீராம்.:)
நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
Nice on bala im also in Boston MA only...
justin bieber quizzes
/ரியல் எஸ்டேட் ப்ரோக்கரிடம் மூணு நாலு லட்ச டாலர் விலைக்கு நல்ல வீடு பார்க்கச் சொல்லி - நல்ல டவுனா இருக்கணும், //
stage-1--- மூணு நாலு லட்ச டாலர்
stage 2--300 thousand to 400 thousand dollars!!
'லட்சம்' use panninal, innum desiyagathaan irukkirar enru artham.
thyagarajan
Post a Comment