2010ம் ஆண்டின் வசந்த காலத்தில் ஒரு அழகிய மாலைப் பொழுது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்து முகம் கழுவி ஜிம்முக்கு செல்ல எத்தனித்த போது அலறியது அலைபேசி. எடுத்துப் பேசிக் கொண்டே ஜிம்மை நோக்கி நடந்தேன். நான் நியூ ஜெர்சியிலிருந்து இளா பேசறேங்க, "சீமாச்சு" வாசன் நம்பர் குடுத்தார் என்றது அந்தப் பக்கக் குரல். சிலரை முதல் முறை பார்க்கும் போதே காரணம் ஏதுமின்றி பிடித்துப் போகும், இளாவுடன் முதல் முறை பேசினாலே
அவரைப் பிடித்துப் போகும் - அப்படிப்பட்ட நட்பான பேச்சு அவருடையது. நட்பு கொள்ளத் தூண்டியது நண்பர்களானோம்.
நான் வேலை செய்யும் நிறுவனத்தில் அவர் சேர்ந்ததும்,அதுக்காக பாஸ்டன் மாநகருக்கு மாறி வந்ததும்,பின்னர் நாங்களிருவரும் ஒரே குடியிருப்பில் இருப்பதும்,எங்களுக்கு குழந்தை பிறந்த போது Support சிஸ்டத்தில் அவர் முக்கியமானவராக இருந்ததும் வரலாறு.
அன்று மட்டும் அந்த போன் கால் வராமல் இருந்திருந்தால், தமிழ்த் திரையுலகம் ஒரு நல்ல கலைஞனை அடையாளம் காணாமலே போயிருக்கும் - இது எனக்கே ரொம்ப ஓவரா இருக்கு, எனவே நேர மேட்டருக்குப் போயிடுவோம்.
ஒரு நாள் இளா போன் பண்ணி ஷார்ட் ஃபிலிம் ஒண்ணு பண்றோம் நடிக்கிறீங்களா என்றார். என்ன விளையாடறீங்களா இளா, எனக்கு நடிக்கவெல்லாம் வராது என்றேன். விடாக் கண்டனாக அவரோ யார் யாரோ நடிக்கறாங்க, நீங்க ஏன் நடிக்கக் கூடாது மேலும் நீங்க பண்ணப் போறது "சார் போஸ்ட்" அளவுக்கு சின்ன ரோல்தான் என்றெல்லாம் சொல்லி சம்மதிக்க வைத்து விட்டார்.
ஒன் லைனை மெருகேத்தினா திரைக் கதை வரணும், எங்க விசயத்தில் வேற கதை வந்தது. மொதல்ல நாங்க பேசின சப்ஜெக்ட்டை விட இது கேட்சியா இருந்ததால் இதையே முடிவு பண்ணோம். எங்களுக்குள் இருந்த புரிந்துணர்வு ரொம்ப உதவியா இருந்தது. இந்த டயலாக் நல்லா இல்லை நான் பேசமாட்டேனெல்லாம் எங்க டைரடக்கர்கிட்ட சொல்லலாம் - அவ்ளோ நல்லவர் அவர்.
இந்த குறும்படம் எங்களுக்கு முதலிரவு மாதிரி - பங்கேற்று இருக்கும் மூவருக்கும் (இளா, நான் மற்றும் ஜெயவேலன்) இதுதான் முதல் அனுபவம். எனவே பிழைகளை பொருத்தருள்க, அடுத்த படத்தில் பிழைகள் வெளியில தெரியாத மாதிரி பாத்துக்கறோம்.
படம் எடுக்க முடிவு பண்ண நாளிலிருந்து ஊண் உறக்கம் இல்லாமல் படத்தைப் பத்தியே யோசித்து, பேசி,கதா பாத்திரமாகவே மாறி, படம் முடிவதற்குள் பத்து கிலோ உடல் எடை குறைந்து - இப்படியெல்லாம் சொல்லணும்னு ஆசைதான் ஆனா விளையாட்டா பேசி, விளையாட்டா எடுத்த படம் இதோ உங்க பார்வைக்கு.
படத்தைப் பார்த்தாச்சா? பாராட்ட நினைப்பவர்கள் எல்லாம் பின்னூட்டத்தில் பாராட்டலாம், திட்டணும்னு நெனச்சா என்னையும் இளாவையும் கோத்து விட்ட "சீமாச்சு" வாசனையோ என்னையெல்லாம் நடிக்க வைக்கலாம்னு நெனச்சஇளாவையோ தாராளமா எவ்வளவு வேணா திட்டலாம். ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க தப்பாவே எடுத்துக்க மாட்டாங்க. இதெல்லாம் போதாது காரி துப்பியே ஆகணும்னு நெனைக்கறவங்க வசதிக்காக:
வேறு எந்த பேனரிலும் ஒரு வருஷத்துக்கு நடிக்கக் கூடாதுன்னு டைரடக்கர் கட்டளை. எனவே காலேஜ் சப்ஜெக்ட் ஹீரோ, அமெரிக்க மாப்பிள்ளை போன்ற எந்த ரோல்களையும் ஒத்துக் கொள்ள முடியாத கையறு நிலையில் இருக்கேன். நாந்தான் நடிக்கணும் இல்லைனா படமே எடுக்க மாட்டேன்னு யாரும் அடம் பிடிக்க வேண்டாம், என்னால தமிழ்த் திரையுலகம் ஒரு வருடம் ஸ்தம்பித்துப் போவதை நான் அனுமதிக்க முடியாது.. நீங்க கல்லை எடுக்கறதுக்கு முன்ன நான் அடுத்த ஷூட்டிங்குக்கு ஜூட்...
Monday, October 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
50 comments:
அண்ணே..
அடுத்த கால்ஷீட் எனக்குத்தான்..! ஊருக்கு வரும்போது என் படத்துல நடிச்சுக் கொடுத்திட்டு போங்க..! அட்வான்ஸை இளாகிட்ட வாங்கிக்குங்க. நான் கொடுக்கச் சொல்றேன்..!
:-) Nice.
சரவணன், உங்களுக்கு இல்லாத கால்ஷீட்டா? கண்டிப்பா இந்தியா வரும்போது படம் பண்ணலாம்.
நமக்குள்ள என்ன அட்வான்ஸெல்லாம்?
Thanks Vijayshankar
அன்பின் ஸ்ரீ,
அலுவலகத்தில் யூடியுப் பார்க்க வசதியில்லை.வீட்டுக்கு சென்றவுடன் பார்த்து சொல்கிறேன்.
அன்புடன்
அரவிந்தன்
//sriram said...
சரவணன், உங்களுக்கு இல்லாத கால்ஷீட்டா? கண்டிப்பா இந்தியா வரும்போது படம் பண்ணலாம்.
நமக்குள்ள என்ன அட்வான்ஸெல்லாம்?
//
ஸ்ரீராம்,
நீங்க இந்தியாவுலயே செட்டில் ஆகப் போறிங்களா ? சொல்லவேயில்ல?
Nice
கோயம்புத்தூர் ஸ்லங்கோட பார்க்கிறப்போ இன்னும் ரசனை..!
சின்ன சின்ன கிராஃபிக்ஸ் டச்சும் நல்லா இருக்கு..!
வாழ்த்துகள் அண்ணா..!
பரவாயில்லை படம்.. தொடர்ச்சியா பட்டைய கிளப்புங்க... மக்கள்ஸ் அப்பாடக்கர்ல் கருப்பா வரது என்னோட பால்ய சினேகிதன் ஜெயவேலன்... நானும் இவனும் ஆறுலேந்து +2 வரை ஒன்னா படிச்சோம்..பாஸ்ரீ நீங்க இவ்வளவ்வு ஒல்லியா இருப்பீங்கன்னு நினைக்கவே இல்ல...
பாத்துட்டு சொல்லுங்க அரவிந்தன்
ஜோ, இந்தியாவில் செட்டில் ஆவது பத்தியெல்லாம் இன்னும் யோசிக்கவேயில்லை.
நன்றி வசந்த்
நன்றி இராமசாமி..
ம்ம்ம்ம் இந்தப்பேட்டியெல்லாம் விகடன் தீவாளி மலர்ல வந்திருக்க வேண்டியது :)))))
விஜி, இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலயா?
என்ன பண்றது இப்படி ஏதும் ஏத்தி விட்டாத்தான் அடுத்த படத்துல க்ளோசப் ஷாட் கம்மியா வைப்பீங்க :))))
ஸ்ரீ.. உண்மையில் இது ஒரு நல்ல முயற்சி.. இருக்கற விஷயங்களை மட்டும் வச்சிக்கிட்டு (USA-INDIA) இந்தளவுக்கு பண்ணியிருக்கிறது பெரிய விஷயம்.. உங்கள் டீமுக்கு வாழ்த்துக்கள். btw.. கிளைமாக்ஸ் பஞ்ச் டயலாக் சூப்பர்.. :)))
ஸ்ரீ... இனிமே Mass Hero படங்களுக்கு மட்டுமே கால்ஷீட் குடுங்க. நம்மளுக்கு இந்த award film ஒத்துவராது. ஒரு ரஜினி மாதிரி வரணும் நீங்க... இந்த award, classic எல்லாம் சுத்த பேத்தல்.
இங்கணம் - அகில இந்திய Boston ஸ்ரீயின் ரசிக மன்ற கடை நிலை தொண்டன்.
விஜி & ராஜ் : ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல...
இப்பதான் கலைச்சேவை பண்ண ஆரம்பிச்சிருக்கீங்க. அப்படியே நட்சத்திர இரவும் நடத்துங்க. கல்லா கட்டலாம் :)))
சும்மா இருங்க ஸ்ரீ... உங்க weight'tu உங்களுக்கு தெரியாது... அவையடக்கம் வேணாம்...
ஸ்ரீராம், உங்களுக்கு நடிப்பு வருகிறது. வாழ்த்துக்கள் ))
நன்றி சௌமியன்
நல்ல முயற்சி ஸ்ரீராம். நல்லா பண்ணிருக்கீங்க. வாழ்த்துகள்.
அடுத்த படம் இன்னும் நல்லா வர அட்வான்ஸ் வாழ்த்துகள்.
மச்சி இந்த படம் நல்ல முயற்சி…அமெரிக்காவில் முழு படத்தையும் எடுதது இருந்தாலும், சமகால தமிழக வாழ்வின் பிரச்சனைகளை சொல்லி இருப்பதால் ஒரு நேட்டிவிட்டி கிடைக்கின்றது... லோ பட்ஜெட்டில் நல்ல முயற்சி..முதல் முறையாக நடிக்கின்றாய் என்ற எண்ணம் படம் பார்க்கும் போது வரவேயில்லை.. அவ்வளவு இயல்பாய் நடித்து இருக்கின்றாய்.. என்ன அந்த ஆள் பேசும் ஸ்லாங்கும் உன் ஸ்லாங்கும் ஒரு சில காட்சிகளில் தவிர பல காட்சிகளில் தொங்கி நிற்க்கின்றது..டீக்கடைக்கு லுக் இன்னும் கீழே இறக்கி கொடுத்து இருக்கலாம்.. தண்ணி அடித்து நொறுக்கும் கிளாசில் அயல்நாட்டு வாசனை...நன்றாக நடித்து இருக்கின்றாய்... வாழ்த்துகள்...நாம் ஒரு முறை பேசி இருக்கின்றோம்... சென்னை வரும் போது நாம் ஒரு படம் நிச்சயம் செய்வோம்....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...
நல்லா இருக்கு ஸ்ரீ.
வாழ்த்துக்கள்.
ஏற்கனவே நீங்க ஒரு பெரிரிரிரிய அப்பாடக்கர்ங்கர்தாலையோ என்னவோ நடிச்ச மாதிரியே தெரியலை நாட்டாமை! :PPP
பார்ட்னர் - எனது ஐம்பது வருட வாழ்கையில் இப்படி ஒரு கலைப் படைப்பை நான் பார்த்ததே இல்லை. எடுத்துக் கொண்ட கருத்திற்க்கு எந்த பாதிப்பும் வராமல் ஒரு கவிதை போல உள்ளது இந்தப் படைப்பு. அப்படியே தமிழ் திரை உலகை ஒரு கை பார்த்து, அப்படியே தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக வர வேண்டியது தான் பாக்கி. இந்த தமிழ் நாடே உனது வருகையை எதிர் பார்த்து இருக்கிறது. அரசியல் கட்சி ஆகும் போது உனது உடன் ப்ரியாவா சகோதரன் என்னை மறந்து விடாதே.
இப்படிக்கு
ராமச்சந்திரன்
அகில உலக தலைமை பாஸ்டன் ஸ்ரீராம் நற்பணி மன்றம்.
செயல் அலுவலகம் - அபு தாபி ( அமீரகம் )
நன்றி சரவண குமார்
நன்றி ஜாக்கி, அடுத்த முறை பெட்டரா ட்ரை பண்றோம்
நன்றி வேலன்
டேய் தக்குடு மவனே, நேர்ல பாக்கற அன்னிக்கு வச்சிக்கறேன் கச்சேரிய
உங்களை எப்படி மறக்க முடியும் பார்ட்னர்? கட்சி ஆரம்பிச்சா நீங்கதான் கொ ப ச, ஆட்சியைப் பிடிச்சா நீங்கதான் நிதியமைச்சர் போதுமா
ennadhu adhukulla 31 kummiya???
//அவரோ யார் யாரோ நடிக்கறாங்க, நீங்க ஏன் நடிக்கக் கூடாது //
ellam andha yaaruku yaarovala vandha vinai.. kadavule..
Good job Randy! ;) most of your lines are super apt for your real character, so meedhi ellam punaivaa illa nenaivaa. :P
கலக்கல் ஸ்ரீராம். நடிப்பு ரொம்ப இயல்பா இருந்தது. மொத்த்துல நல்ல அட்டெம்ப்ட்.
சரி நானும் சொல்லிக்கிறேன் லண்டன் வரும் போது ஒரு படம் பண்ணுவோம்.
இந்தியா, யூ.எஸ், யூ.கே, மலேசியா சிங்கப்பூர், துபாய்ன்னு ஏகத்துக்கு உங்க கால்ஷீட்டுக்காக வெயிட்டிங்.. கலக்குங்க !!!!
அண்ணே இந்த தலைமை ரசிகர்மன்ற தலைவர் பதவியை யாருக்கும் குடுத்துறாதிங்க. # i reserved it
அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் ராண்டி அண்ணே! நீங்க பஞ்சாயத்து பண்ணர ஸ்டைல பாத்தப்பவே எனக்கும் இட்லி மாமிக்கும் லேசா ஒரு சந்தேகம், இப்பதானே தெரியுது உங்க பெரியப்பாவும் நாட்டாமை!னு :PP
படம் நல்லாதானே இருக்கு எதுக்கு திட்டனும் வாழ்த்துக்கள் சார்
அல்லாருக்கும் நன்றி!
நன்றி பொற்கொடி
நன்னி டுபுக்கு வாத்யார்
நன்றி அப்துல்லா
நீ கற்பூரம்டா தக்குடு கண்ணா
நன்றி லஷ்மி அம்மா
அடுத்த ஆஸ்கர் அவார்டு உங்களுக்குத்தான்னு பி.பி.சியில ஃப்ளாஷ் நியூஸ் ஓடுது :-)
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..
Sooper Appu!
Aduthathu Hollywood-a?
Cheers
Raajesh
Raajrj.blogspot.com
Really good for the first time! Congrats! :)
நேத்து இந்த வீடியோ கோவிந்த்கிட்ட காட்டினேன்... "கொஞ்சம் அசப்புல சீமான் மாதிரி இருக்கார்"னு சொன்னார்... நான் ஒண்ணும் சொல்லலை மை லார்ட்... டோண்ட் கில் தி messanger ...:)) கனடா ரசிகர் பண்ற தலைவர்(வி) போஸ்ட் இப்பவே ரிசர்வ் பண்ணிக்கறேன் நாட்டாமை... ஜோக்ஸ் அபார்ட்... நல்ல துவக்கம்... நல்ல கான்சப்ட்... அடுத்த ரிலீஸ் எப்போங்க?
//நீங்க பஞ்சாயத்து பண்ணர ஸ்டைல பாத்தப்பவே எனக்கும் இட்லி மாமிக்கும் லேசா ஒரு சந்தேகம், இப்பதானே தெரியுது உங்க பெரியப்பாவும் நாட்டாமை!னு//
அதானே...;))
ஸ்ரீ ராம். இன்று தான் உங்கள் படத்தை! பார்த்தேன். சிம்ப்ளி சூப்பர். என் ஒரே வேண்டுகோள். கீழே ஆங்கிலத்தில் சப் டைட்டில் போட்டு யு டுபில் போட்டால் "ஏன் இந்த கொலவெறி" க்கு அடுத்த ஹிட் இதுக்கு தான்.
படம் சூப்பர்..திருச்சி வந்தா சொல்லுங்க..பெரிசா பானர் வைக்கிறேன்..அதுக்கு முன்னாடி அஞ்சு நூறை தள்ளுங்க..ரூபாய் வேண்டாம்..
டாலர்லேயே தள்ளுங்க...
ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?
நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை.
அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.
அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.
சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது!
Part 1: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1
Part 2: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2
.
Post a Comment