நண்பர் ஈரோடு கதிர் எழுதிய இந்த இடுகையே என் இடுகைக்கு இன்ஸ்பிரேஷன்
1. போன் மணி அடிச்சா பேச வெளியிலிருந்து உள்ளே ஓடுவார்கள், இப்போ சிக்னல் கிடைக்கலேன்னு போனை எடுத்துக்கிட்டு வெளியே ஓடி வர்றாங்க
2. போன் வாங்க, போன் கனெக்ஷன் வாங்க ஆபீஸுக்கு நடையா நடக்கணும், கீரைக் கட்டு ஃப்ரெஷா வீட்டுக்கு வந்து தருவாங்க, இப்ப போனையும் போன் கனெக்ஷனையும் தெருவில் வைத்து விக்கறாங்க, கீரைக் கட்டை ஏசி வச்ச கடைக்குப் போயி வாங்கறாங்க
3. (தரமான) கல்வி இலவசம், கால்குலேட்டர் விலையே எங்க லெவலுக்கு அதிகம், இன்னிக்கு கம்ப்யூட்டர் கொள்ளை மலிவு, கல்விக் கட்டணமோ உச்சாணிக் கொம்பில்
4. பள்ளிகள் குழந்தைகளுக்கு ABCD சொல்லித்தருவது தங்களின் கடமை என நம்பின
5. அப்பாக்கள் யாரும் ஜிம்முக்கு போனதில்லை, இருப்பினும் குண்டாக இருந்ததில்லை
6. அலுவலகம் / பள்ளியிலிருந்து வந்த பின் டி வி பார்க்க நெறய நேரமிருந்தது, ஆனா பாக்க ரெண்டே ரெண்டு சானல்கள்தான் இருந்தன
7. Star Birthday வுக்கு கோவிலில் அர்ச்சனையும் English Birth Day வுக்கு வகுப்புத் தோழர்களுக்கு 50 காசு Eclairs உம் தான் அதிக பட்ச பிறந்த நாள் கொண்டாட்டம்
8. தீபாவளிக்கு சட்டைப் பையில் காசெடுத்துப் போயி பை நிறைய பட்டாசு வாங்கி வருவோம்
9. ஆங்கிலத்தில் அதிகம் உபயோகிக்கப் பட்ட எழுத்தாக E இருந்தது
10. Apple உம் Mouse உம் முறையே பழம் மற்றும் ஒரு உயிரினமாக அறியப் பட்டிருந்தன
11. இன்சூரன்ஸ் பாலிசிகள் முதலீடுகள் என்ற பெயரில் ஏமாற்றி விற்கப் படவில்லை
12. கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுக்கும் “துப்பார்க்கு துப்பாய” குறள் சொல்லத் தெரிந்திருந்தது
13. ரெண்டு ரூபாய் ஐம்பது காசுகளுக்கு RMS பந்தும் 25 ரூபாய்க்கு Vishwas பேட்டும் தான் விலை மதிப்பு மிக்க விளையாட்டுப் பொருட்கள்
14. டபுள் கேசட் டேப் ரெக்கார்டர்தான் Most Sophisticated Audio device
15. நண்பர்கள் வீட்டுக்கு போவதற்கு முன் போன் பண்ணி நீ ஃப்ரியா இருக்கியா இப்போ வரலாமான்னு கேட்டதேயில்லை
Wednesday, February 8, 2012
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
நல்ல பதிவு.
நன்றி.
நல்ல பதிவு.
நன்றி.
twitterல இருந்து பதிவுக்கா? நடத்துங்க. கடைசி வரியை நினைச்சேன், சிரிச்சேன்
நன்றி ரத்னவேல் ஐயா
ஆமா இளா, பதிவு போட எங்கிருந்தெல்லாம் லீட் எடுக்க வேண்டியிருக்கு...
கடேசி பாயிண்ட் :))) அது பொதுவாச் சொன்னதுங்க, யாரையும் மனசில் வச்சி சொல்லலை
good one sri anne
நிறைய சிந்திக்க சிரிக்க வச்சிடீங்க
யாவதும் உண்மை
அன்புடன்
சிங்கை நாதன்
நன்றி எல் கே, ரோமியோ & நாதன்
Nice. Pl. continue writing atleast occasionally
மச்சி நல்லா எழுதி இருக்கே.. நிறைய இடங்களில் அட போட வைத்து இருக்கின்றாய்.. முக்கியமாக ஆப்பிள் மற்றும் மவுஸ் செம டச்...தொடர்ந்து எழுத முயற்சிக்கவும்.
ஐ.எஸ்.ஒ சான்றிதழ் பெற தேவையில்லாத தரமான பதிவு சித்தப்பு :-)
அட்டகாசம்!! சூப்பர்ப்.
ரகசியமா உங்களுக்கு மட்டும் ஒரு வரி:
இப்படியெல்லாம் எழுதி நம்மோட வயசைக் காண்பிச்சுக்கக்கூடாது ப்ரதர். :-)
நன்றி மோகன், முயல்கிறேன்
Thanks மச்சி, கண்டிப்பா முயல்கிறேன்
நன்றி க ரா
நன்றி வெங்குட்டு,
வயசு : அது கெடக்குது கழுத, அதைக் குறைச்சு சொல்லி என்னாகப் போகுது?
எனக்கு 37 வயசுன்னு என் வலையுலக நண்பர்கள் பெரும்பாலானோருக்குத் தெரியும்
எத்தனை எத்தனை மாற்றங்கள்...
தொலைபேசி கூட நிறைய வீட்டில் இருந்ததில்லை... ”சார் தபால்” குரல் கேட்டு எத்தனை முறை வெளியே ஓடியிருப்போம்! இதைக்கூட நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்... :)
நல்ல பகிர்வு நண்பரே....
பட்டாஸ் ஸ்ரீ:))
எல்லா வரிகளும் மிக அருமை .எனக்கு மிகவும் பிடித்தவை 1,2,3,15 சில வரிகள் சிரிக்க வைத்தன ஆனால் சில வரிகள் நம்மை யோசிக்கவும் வைக்கின்றன
நன்றி வெங்கட் நாகராஜ்
நன்றி பாலாண்ணா
நன்றி அவர்கள் உண்மைகள்
//இப்ப போனையும் போன் கனெக்ஷனையும் தெருவில் வைத்து விக்கறாங்க, கீரைக் கட்டை ஏசி வச்ச கடைக்குப் போயி வாங்கறாங்க//
இதான் டாப்பு...;)))
மத்தது, சிரிக்கவும் வைத்தன, சிந்திக்கவும் (நமக்கும் முப்பது தாண்டிருச்சுனு)வைத்தன...:)
-
கடைசி வரி அட்டகாசம். தற்போதைய நிலைமை அப்படித்தான் இருக்கு :-)
நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி அமைதிச் சாரல்
நிறைய உண்மைகளை லைட்டா சொல்லி இருக்கீங்க.பழச நினைக்க வைத்தது.
//நண்பர்கள் வீட்டுக்கு போவதற்கு முன் போன் பண்ணி நீ ஃப்ரியா இருக்கியா இப்போ வரலாமான்னு கேட்டதேயில்லை// உண்மை
நலம் விசாரிக்கலாம்னு நண்பர்கள்/உறவினர்கள் மொபைலுக்கு அழைத்தால் ”இதோ 2 நிமிடத்தில் அழைக்கிறேன்” என்று சொல்லி துண்டிக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு விஷயமும் இல்லாமதான் கால் பண்ணுனியானு கேட்டு சலிப்போடு பேசுகிறார்கள்
Post a Comment