Ground Reality பத்தி எதுவுமே தெரிந்து கொள்ளாமல், மேம்போக்காக எழுதப் பட்ட கட்டுரைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். அமெரிக்காவில் பாதி பேர் வீடு கடனில் மூழ்கிப் போய் கார்களில் வாழ்வதாகவும், கார் கடனை கட்ட
முடியாமல் காரை நடுரோட்டில் விட்டுச் செல்வதாகவும் எழுதி கிட்டத்தட்ட அந்நாட்டை Write Off செய்து வருகின்றன இந்திய குறிப்பாக தமிழக ஊடகங்கள்.
இது போன்ற ஒரு கட்டுரையை தினமணி போன்ற பொறுப்புள்ள பத்திரிக்கை அதுவும் தன் தலையங்கத்திலேயே வெளியிட்டு இருக்கிறது.
மிக மிக மேம்போக்காக எழுதிய அக்கட்டுரையை இங்கு காணலாம்.
இக்கட்டுரையில் மிக அதிக அளவில் பேசப் பட்டவை அமெரிக்காவில் வேலை வாய்ப்பு நிலவரம், H1B விசா மற்றும் அமெரிக்காவில் வேலை செய்து வரும் இந்தியர்களின் நிலைமை. இவற்றைப் பற்றி விரிவாக எழுதினால்
ஒரு நெடுந்தொடர் அளவுக்கு வந்துவிடும் என்பதால் ஒரு சில விவரங்களை மட்டும் சொல்லிவிட்டு கட்டுரையை Point -by - Point அலசலாம்.
1. அமெரிக்கா பொருளாதார மந்த நிலையிலிருந்து மெள்ள மீண்டு வந்து கொண்டு இருக்கிறது. வேலையில்லாதோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நிலையாக நின்று பின்னர் படிப்படியாகக் குறைந்து சனவரி 2012ல் 8.3% ஆக இருக்கிறது. கடைசியாக இதே அளவு இருந்தது Feb 2009ல். அதாவது போக வேண்டிய தூரம் இன்னும் இருந்தாலும் மூன்றாண்டுகளில் குறைந்த பட்ச வேலையில்லாத்திண்டாட்டம் இன்று -
இதுதான் உண்மையான நிலைமை.
2. அமெரிக்காவை Write off செய்யும் அளவுக்கு மோசமாக இருந்த பொருளாதார மந்த நிலையிலும் ஒவ்வொரு வருசமும் (2009, 2010, 2011) H1B Quota முழுவதுமாக வழங்கப் பட்டது.
3. கட்டுரையில் சொல்லியதற்கு நேர் மாறாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் க்ரீன் கார்ட் கடந்த ஆறு மாதங்களாக மிக வேகமாக நகர்ந்து வருகிறது. செப்டெம்பர் 2011 ல் ஏப்ரல் 2007 இல் நின்ற EB2 க்யூ இன்று மே 2010ல் நிற்கிறது. க்ரீன் கார்ட், EB1, 2, 3 பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சா தினமணியின் ஒரு நாள் பேப்பர் நிரம்பும் அளவுக்கு பேசலாம். விசாவில் இருக்கும் இந்தியர்களை துரத்தும் எண்ணமெல்லாம் இல்லை, அப்படி இருந்திருந்தால் 6 மாசத்தில் 3 வருட க்யூவை காலி செய்திருக்க மாட்டார்கள்.
இப்போ கட்டுரையில் சொல்லியிருப்பவற்றை பாக்கலாம்
1. //இந்தியப் பொருளாதார மேதையும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென்னுக்கு அமெரிக்க விருது வழங்கிப் பாராட்டிப் பேசும்போது மண்ணின் மைந்தருக்கு முன்னுரிமை என்பதை மீண்டும் தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்.//
நானறிந்தவரையில் ஒபாமா அன்று அவ்வாறு கூறவில்லை. கட்டுரை ஆசிரியருக்கு அமெரிக்க நிலவரம்தான் தெரியாது, அடிப்படை ஆங்கிலம் கூடவா தெரியாது? இதோ அந்நிகழ்ச்சியில் ஒபாமா பேசியது இதுதான் - இதைப் படித்து விட்டு சொல்லுங்கப்பூ, அப்படி ஏதாவது அர்த்தம் வருதான்னு
///You create new possibilities for all of us. And that's a special trait. And it assigns you a special task. Because in moments of calm, as in
moments of crisis; in times of triumph, as in times of tragedy: you help guide our growth as a people. The true power of the arts and the
humanities is that you speak to everyone. There is not one of us here who hasn’t had their beliefs challenged by a writer’s eloquence; or their
knowledge deepened by a historian’s insights; or their sagging spirits lifted by a singer’s voice. Those are some of the most endearing and memorable moments in our lives. Equal to the impact you have on each of us every day as individuals is the impact you have on us as a society. And we are told we're divided as a
people, and then suddenly the arts have this power to bring us together and speak to our common condition.////
நான் தினமணி தலையங்கக் கட்டுரை ஆசிரியர் மாதிரி போகிற போக்கில் அடிச்சிவிட்டதாக நீங்க நினைக்கக் கூடாதில்லையா, இதோ வெள்ளை மாளிகையின் அதிகாரப் பூர்வ செய்தி
http://www.whitehouse.gov/blog/2012/02/13/president-obama-awards-2011-national-medals-arts-and-humanities-white-house
2. //அமெரிக்காவில், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதலீட்டுச் சிக்கலில் உள்ள நிறுவனங்களை மீட்கும் திட்டம் கொண்டு வந்துள்ள ஒபாமா, இதை ஒரு நிபந்தனையாகவே அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் அரசின் நிதியுதவி, சலுகையைப் பெறும் நிறுவனங்கள் அமெரிக்க மண்ணில் அன்னியர்களுக்கு வழங்கப்படும் "தாற்காலிகப் பணி அனுமதி'யான எச்-1பி விசா பெற்றவர்களைப் பணிநியமனம் செய்யக்கூடாது என்பது நிபந்தனை. //
இந்த வரிகள் என்னை இக்கட்டுரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்டு கிடப்பில் போடப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது. ஏனெனில்
Fannie Mae & Freddie mac நிறுவனங்களுக்கென தனியே வந்த பெயில் அவுட் 183 பில்லியன் டாலர். இவை இரண்டும் வீட்டுக் கடன் கொடுத்துவிட்டு சிக்கலில் இருப்பவை, இவை இதுவரை 30 பில்லியன் டாலரை
திருப்பித் தந்துள்ளன
924 இதர நிறுவனங்களுக்கென வழங்கப் பட்ட பெயில் அவுட் தொகை 413 பில்லியன்
288 நிறுவனங்கள் வாங்கிய தொகையை திருப்பி தந்து விட்டன. 31 நிறுவனங்கள் முழுமையாக திருப்பா விட்டாலும் ஓரளுக்கு திருப்பித் தந்து விட்டன
இதுவரை 279 பில்லியன் டாலர் அளவுக்கு அசலும் 40 பில்லியன் டாலர் அளவுக்கு வட்டியும் (Divident, Interest, warrant etc) திருப்பித் தரப்பட்டுள்ளது.
இவ்வளவு நடந்தபின்னர், என்னவோ இப்பத்தான் ஒபாமா பணம் கொடுத்தா மாதிரியும் இன்னமும் இந்நிறுவனங்கள் ஒபாமாவின் கட்டுப் பாட்டில் இருப்பதுபோலவும் தேவையில்லாத பில்டப் எதுக்கு???
பணம் கொடுத்த போது ஒபாமா நிபந்தனைகள் விதித்தது உண்மைதான். வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10% ஆக இருக்க்கும் போது அவர் அப்படித்தான் பேச வேண்டும். அமெரிக்கரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அந்த இடத்துக்கு ஒரு H1B visaவில் இருப்பவரை வைக்கக் கூடாது, H1B visaவில் இருப்பவரை பணியில் அமர்த்தக் கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப் பட்டன. இதுவரைதான் உலகுக்குத் தெரியும். உண்மை நிலவரம் என்ன தெரியுமா?
முதல் நிபந்தனைக்குக் காரணம் அதிக சம்பள அமெரிக்கரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு குறைவான சம்பளம் கொடுக்க ஆசைப்பட்டு விசாவில் இருப்பரை அமர்த்தக் கூடாதென்பதே. இது பெரும்பாலும் இந்தியர்களுக்குப் பொருந்தாது - ஏனெனில் ஒரு வேலைக்கு அமெரிக்கர் கேட்கும் சம்பளத்தை விட நம்மாள் கேட்கும் சம்பளம் அதிகம்
ரெண்டாவது - இந்த நிபந்தனை பணியமர்த்தல் அதாவது Employment க்குத்தான் பொருந்தும். இந்தியர்கள் பெரும்பாலும் Contracting அடிப்படையில்தான் இந்நிறுவனங்களில் வேலை செய்வார்கள், அவர்களுக்கு
பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படவில்லை (நெறய Contract கள் Terminate செய்யப் பட்டன - அவர்களில் பலருக்கு வேறு Contract கிடைத்தது). மேலும் ஒபாமா உதவி பெறும் நிறுவனங்கள் அங்கே இருந்த H1B மக்களை அனுப்பிவிட்டு அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்கச் சொல்லவில்லை. 10% அமெரிக்கர்கள் வேலையின்றி தவித்த போதும் பெரும்பாலான இந்தியர்கள் வேலையில் இருந்தார்கள்.
Bank of America உதவி பெற்ற ஒரு நிறுவனம். இங்கு வேலையை இழந்த ஒரு அமெரிக்கரையும் எனக்குத் தெரியும், கடந்த நான்காண்டுகளாக Contracting இல் இருந்து வரும் ஒரு H1B இந்தியரையும் எனக்குத் தெரியும்.
பணத்தைக் கொடுத்து விட்டு அரசாங்கம் கம்பெனியை தன் இஷ்டப் படி நடத்த விரும்புகிறது என்று குறை கூறியே பெரும்பாலான நிறுவனங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்தன.
3. //இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1.95 லட்சமாக இருந்தது. இப்போது, வெறும் 65,000 பேருக்கு மட்டுமே தாற்காலிகப் பணி அனுமதி என்று மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது//
கொய்யால.... இது பரணிலிருந்து தூசி தட்டி எடுத்த கட்டுரைதான் போலிருக்கு. 1,95,000 H1B விசா கடேசியா கொடுத்தது 2003ல்.
1990 முதல் 1998 வரை இருந்த quota 65,000 ஆயிரம்தான்
1999 & 2000 ஆம் ஆண்டுகளில் 115000 விசாக்களும் 2001 முதல் 2003 வரை 1,95,000 விசாக்களும் வழங்கப்பட்டன, வேலைகளுக்கு ஆட்கள் தேவைப் பட்ட காரணத்தால் AC21 ( American Competitiveness in the Twenty-first century act ) என்ற விசேஷ சட்டம் இயற்றப் பட்டு அதிக விசாக்கள் வழங்கப் பட்டன. 2004 முதல் மறுபடியும் பழைய எண்ணிக்கையான 65,000 க்கு விசாக்களின் எண்ணிக்கை குறைக்கப் பட்டன.
H1B தவிர ஆயிரக்கணக்கான இந்தியர்கள் L Visa (Intra company transfer - Ex: Infosys India to Infosys US), F Visa (Students Visa) , Nurse களுக்கான விசா, R visa (கோவில் அர்ச்சகர்கள் - Religious workers) என்று பல விசாக்களில் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். மேலும் பலர் ஒவ்வொரு வருடமும் வந்து கொண்டிருக்கின்றனர்
வருசத்துக்கு 20,000 H1B விசாக்கள் அமெரிக்காவில் மேல் படிப்பு படிக்க வந்தவர்களுக்கென தனியே வழங்கப் படுகிறது, அதுலயும் அதிகம் ஆட்டையைப் போடுவது நம்மாட்கள்தான்
உண்மை இப்படி இருக்கையில், தினமணியின் கட்டுரை ஒபாமா இந்தியர்களை விரட்டியடிக்க விசாக்களின் எண்ணிக்கையை குறைத்தது போல படம் போட்டிருப்பது எதுக்காகன்னு தெரியல.
4. // ஒரு லட்சம் பேர் மாணவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்தவும், வாழ்க்கைச் செலவுக்காகவும் பணியாற்றுகிறார்கள். தற்போது அமெரிக்கா இந்தப் புதிய சட்டத்தின் மூலம், அந்த வாய்ப்புக்குத்
தடை போட்டுள்ளது. ஆகவே, இனி அமெரிக்காவுக்குப் போய், வேலை செய்துகொண்டே படிக்கலாம் என்பவர்களின் கனவு இனி பகல்கனவுதான்.
புதிதாக மாணவர்கள் அங்கே செல்வது குறையும் என்றாலும், ஏற்கெனவே இத்தகைய பகுதிநேர வேலையை நம்பி அங்கே சென்ற மாணவர்களின் கதி என்னவாகும்? அதனால், ஏற்கெனவே அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும்
மாணவர்களுக்கு மட்டுமாவது அவர்கள் தமது படிப்பை முடிக்கும் வரை, பணியாற்றவும், பணி வழங்கவும் அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்குக் கோரிக்கை வைக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது.//
கட்டுரையில் இருப்பவற்றில் மிகத் தவறான தகவல் இதுதான். மேலே சொன்னவற்றில் பல விசயங்கள் மேம்போக்காகவும், திரித்துக் கூறப் பட்டவை, இந்த பாயிண்ட் அடிப்படையிலேயே தவறு.
M.S அல்லது வேறு மேல் படிப்பு படிக்க வரும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மட்டுமே வாரத்துக்கு 20 மணி நேரம் வேலை செய்யலாம். கடுமையான சட்டதிட்டத்துக்கு உட்பட்டு வெகு அரிதாக சிலர் வெளியில் வேலை பார்க்கலாம்.
அந்த கண்டிஷன்கள் இங்கு தேவையில்லை என நினைக்கிறேன். மேலதிக தகவல் வேண்டுவோம் இங்கு தெரிந்து கொள்ளலாம்
அமெரிக்காவில் மேல் படிப்பு படித்த வெளி நாட்டவரை அமெரிக்காவிலேயே (அமெரிக்காவுக்கே என்று பொருள் கொள்க) வேலை செய்ய வைக்க அந்நாடு விரும்புகிறது. ஒபாமா ஆட்சியில்தான் M.S முடித்த மாணவர்களுகான OPT (Optional Practical Training)12 மாதங்களிலிருந்து 29 மாசமாக உயர்த்தப்பட்டது. இதிலும் அதிகம் பயனடைவது இந்தியர்களே. பெரும்பாலான மாணவர்கள் OPT யில் வேலை தேடிக்கொண்டு பின்னர் H1B விசா வாங்கி இங்கேயே செட்டில் ஆகின்றனர். ஒபாமா ஆட்சியில் இப்படியாக சலுகைகள் அறிவிக்கப் பட்டனவே தவிர மாணவர்களுக்கு(ம்) எந்த வித புதிய தடையும் விதிக்கப் படவில்லை.
இங்கு முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயம், மாணவர்களுக்கு Work Visa கிடையவே கிடையாது, நம்மூர் மாணவர்கள் வெளியில் இந்தியர்களில் நிறுவனங்களிலும் உணவகங்களிலும் Cash Job செய்கின்றனர்.இதில் எதுவும் மாறி விடவில்லை. கொய்யால சுத்தமா அடிப்படை அறிவு / ஞானம் இல்லாமல் கட்டுரை எழுதிவிட்டு பயபுள்ள இந்திய அரசுக்குள்ள கடமையைப் பத்தியெல்லாம் பேசுது!!!
கவிதைக்குப் பொய் அழகு என்றார் வைரமுத்து, அது கட்டுரைக்கும் பொருந்தும் என தினமணி நினைக்கிறது போல இருக்கு.
அமெரிக்கா உலகில் வாழத்தக்க இடங்களில் முதன்மையானதல்ல, சொல்லப் போனால் முதல் பத்து நாடுகளில் அமெரிக்கா இருக்குமா என்பதே சந்தேகம்தான். அமெரிக்காவின் மீது வைக்க விமர்சனங்கள பலவுண்டு, என் போன்றோரைக் கேட்டால் நாங்க எழுதிக் கொடுத்துட்டுப் போறோம், அதை விட்டுட்டு தினமணிக்கு இந்த பொழப்பு தேவைதானா?
23 comments:
தினமணியின் தரத்திற்கு மிக மேலோட்டமாக எழுதியிருக்கிறார்கள். வரிக்கு வரி பிழைகள் மலிந்த ஒரு தலையங்கம். அழகாக தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். ஒரு சந்தேகம்.. AC21 என்பது கிரீன் கார்டு வருவதற்கு முன்னேயே ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனிக்கு மாறும் சலுகை கொடுப்பது மட்டுமே என்று நினைத்திருந்தேன். அது தவறா?
பந்து, கண்டிப்பா அதுவும் AC21 இன் ஒரு அங்கம்.
AC21 ACT வந்தப்புறம்தான், விசா ட்ரான்ஸ்ஃபர் அப்ளை பண்ணதும் வேலைக்குச் சேறலாம், 6 வ்ருஷம் முடிஞ்சப்புறமும் க்ரீன் கார்ட் ப்ராசஸ்ல இருந்தா எக்ஸ்டென்ஷன் வாங்கலாம், I 140 அப்ரூவ் ஆகி 6 மாசம் கழிச்சு க்ரீன் கார்டுக்கு சேதாரம் இல்லாமல் வேலை மாறலாம் (நீங்க சொன்னது) எல்லாம் சாத்தியமாச்சு
அமெரிக்கப் பொருளாதார அப்டேட் :
நேற்று (Feb 21) Dow Jones பங்குச் சந்தை குறியீடு 13,000 புள்ளிகளை கடந்தது. இந்த அளவு கடைசியாக மே 2008ல் தான் இருந்தது என்பது கூடுதல் தகவல்.
ஏக இறைவனின் சாந்தி அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்றாலும் இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இருந்தவன், தற்போதும் இந்தியாவின் பத்திரிக்கைகளை தவராது கவணித்து வருபவன். அந்த வகையில் தினமணியின் தலையங்கம் தொடர்பில் நீங்கள் சொல்லிய கருத்துக்களை நான் வரவேற்கின்றேன். காரணம் தினமணி மட்டுமல்ல, தமிழகத்தின் பல நாளிதழ்களின் நிலை இப்படித் தான் இருக்கின்றது. காரணம் அவர்கள் முறையாக சர்வதேச அரசியலைப் பற்றிய தங்கள் கவணத்தை செலுத்துவதில்லை, அத்துடன் அமெரிக்கா போன்ற நாடுகள் மீது எதையாவது எழுதினால் தமிழ் பேசும் மக்கள் அதனை பேசு பொருளாக்கிக் கொள்வார்கள் என்ற நப்பாசையும் அவர்கள் இப்படி எழுதத் தூண்டுகின்றது என்பதே எனது கருத்து. மற்றும் தினமணி ஆசிரியர் முதல் அனைத்து பத்திரிக்கை ஆசிரியர்களும் வெளிநாட்டு அரசியலுக்கு முறையான முக்கியத்துவம் கொடுப்பதுடன் அதைப் பற்றிய செய்திகளை தெளிவாக ஆய்வு செய்து வெளியிட வேண்டும் என்று அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன்.
இவன்
ரஸ்மின் (M.I.Sc)
துணை ஆசிரியர் “அழைப்பு” மாத இதழ். (இலங்கை)
visit: www.rasminmisc.com
நன்றி ரஸ்மின்..
கருத்துடன் முழுதும் உடன்படுகிறேன்
பாஸ்ஸ்ரீ, பத்திரிக்கைகள் ஏதோ பரபரப்புக்கு செய்தி போட்டா நீங்க அதை இவ்வளவு பொறுப்போட அலசி ஆராய்ந்து பதில் சொல்லியிருக்கீங்க. நிச்சயம் இது இங்கு படிப்பவர்களுக்கும் வந்து படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கும் - மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைகிறேன்.
நீல் போர்ட்ஸ் ரேடியோ நிகழ்வ கேட்டப்ப சொன்னார். 8.3% எல்லாம் பொய்யாம், 10% க்கு மேல இருக்காம், ஒபாமா அரசு தவறான புள்ளிவிவரத்த சொல்லுதுன்னு மனுசன் சத்தியம் பண்ணுறார்.
நன்றி அரசூரான்.
அரசுகள் தரும் புள்ளிவிவரங்களுக்கு ஆதாரங்கள் கேக்க முடியாது, அதை ஒருவர் மறுத்துப் பேசும் போது ஆதரங்கள் தேவை, இதுதானே காலா காலமா நடந்துட்டு வருது? விவாதங்களுக்கு அரசு தரும் எண்ணிக்கைகளைத்தான் எடுத்தாள வேண்டியிருக்கு.
மாணவர்களுக்கு உபயோகமாக இருந்தால் எனக்கு சந்தோஷமே
I have a small request sriram.Pl. send your post to dinamani. If it is a real responsible magazine then they have to publish your comments which would be really valuable to many as the reach would be more
நன்றி சித்ரா
அதனால ஏதும் பயனிருக்கும்னு நான் நினைக்கலை, இருப்பினும் இந்த லின்கை அங்க போடறேன்.
Nice informative post. Media should not only concentrate on readers rating but also have moral responsibility & reliability. Must do more research before publishing anything so delicate
A very informative and useful post, Sriram. Thanks.
Ovvakkasu
Superb post Sriram! Bang on! (Nanum chennai than, MS student, #same story) :)
நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி ஒவ்வாகாசு
நன்றி காயத்ரி.. இப்போ MS படிச்சிக்கிட்டு இருக்கீங்களா? எந்த ஊரில்?
UT Austin la padichitruken! Been following your blog for a long time. Gud job! Keep it coming :)
நாட்டாமை அண்ணாச்சி, நம்ப செட்டுக்கு நீங்க நாட்டாமையா இருந்தாலும் உங்களுக்குள்ள ஒரு 'புள்ளிவிபர புலி' இத்தனை நாளா உறங்கிட்டு இருந்துருக்குனு இப்பதான் தெரியுது அண்ணாச்சி! உலக அளவுக்கு டீடெயிலை அள்ளிவிட்டு புல்லரிக்க வச்சுபுட்டீங்க. :))
என்றும் வம்புடன்,
தக்குடு
நன்றி ஸ்ரீராம், இந்த கட்டுரையை படிச்சபிறகு தூரத்துல கொஞ்சம் ஒளி தெரியுது - பயபுள்ள
dinamani mattumalla ingu ellaa paththirikaikalum appadiththaan.adichchu viduvaanga!athaiyum paya pullika nambuthunga!!ellaam vithi!!
ஏற்கனவே செத்துக்கொண்டிருக்கும் தினமணியை கொலைவெறியோடு ..சாரி புள்ளிவிபரத்தோடு போட்டுத்தாக்கி இருக்கிறீர்கள்...
ரசித்தேன்...-:)
every media in india is just bullshit! often i noticed whatever they said about US is their own imagination without knowing the fact. once one guy in neeya naana said there are thousands commited suicide in US bcoz of recession and gopi was supporting that argument. i dont know when our country is going to grow?
Very good post. Thanks for defending the accuracy of US policies.
Dear Mr. Sriram
It is interesting to know that the queue for EB2 category has moved up to May 2010. Please advise what is the waiting list for EB3 category. Is there any official link through which one can get this general info? Thanks in advance.
நம்ம ஊருல இந்த மாதிரி கடன் வாங்கினா, நாலு வருஷம் கழிச்சு, அந்த கடனை எல்லாம் யாரும் அடைச்சிருக்க மாட்டாங்க.. அரசாங்கமும் அதை எல்லாம் தள்ளுபடி செய்திருக்கும். அதை பாராட்டி தினமணி ஒரு தலையங்கமும் எழுதி இருக்கும்... இது தான் இன்றைய நிதர்சனம்...
எடிட்டரின் தகுதி சரியில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. வேறென்ன சொல்ல?
Post a Comment