Friday, November 20, 2009

டெண்டுல்கர் - இப்பவாவது இவர இந்த உலகம் நம்புமா?

சச்சின் டெண்டுல்கர் - Probably இந்தியாவில் அதிகம் நேசிக்கப்பட்ட அதே சமயம் அதிகம் குறை கூறப்பட்ட பெயர்.

இன்னுமா இவன இந்த உலகம் நம்புதுங்கற ரேஞ்சில இருக்குற பல பேர நமக்குத் தெரியும், ஆனால் இன்னுமா இவரது திறமையில் சந்தேகம், இன்னுமா இவர இந்த உலகம் நம்பலன்னு சொல்லக்கூடிய வெகுசிலரில் சச்சினும் ஒருவர்.



இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவரது Match Saving Century க்கு அப்புறமாவது டெண்டுல்கருக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துவார்களா? எத்தனையோ Match Winning Innings ஆடியிருந்தாலும் இந்த இன்னிங்க்ஸும் மிக முக்கியமான ஒன்று.
லோஷனின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கிய சச்சின் Critics இன் கூற்றையும் தவறென நிரூபித்திருக்கிறார். இனிமேலாவது சச்சின் முக்கியமான தருணங்களில் ரன் எடுப்பதில்லை / தனக்காக ஆடுகிறார், டீமுக்காக ஆடுவதில்லைன்னு சொல்றதையெல்லாம் நிறுத்துவார்களா பெரியவர்கள்??

சச்சினின் சாதனைகள் மிக அதிகம், எல்லாருக்கும் தெரிந்த விஷயங்களை மீண்டும் சொல்லி போர் அடிக்க விரும்பவில்லை, இதை மட்டும் பாருங்கள்
30,055 இண்டர்நேஷனல் ரன்கள், 88 சதங்கள், 144 அரை சதங்கள், டெஸ்ட் ஆவரேஜ் 54.79, ODI average 44.50 at a strike rate of 85.79. இதற்கு மேலும் ஒரு குழு ஆட்டத்தில் தனி நபரிடம் என்னதான் இந்த பாழப்போன விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.

நவ்ஜோத் சித்து சொன்னது போல - Statistics is like mini skirt, it reveals most of the things but not the most import thing. சச்சின் எண்களில மட்டுமல்லாமல் Attitude / Commitment போன்றவற்றிலும் மிக உயர்ந்து நிற்கும் ஒரு மனிதர். ஆஸ்திரேலியாவிற்கு
எதிரான ஷார்ஜா ஆட்டங்கள், தந்தை இறந்து சில நாட்களிலேயே விளையாடச் சென்றது, சிட்னி சென்சுரி இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

ஐந்தரை அடி கூட உயரம் இல்லாத ஒரு இந்தியர் இப்படி விஸ்வரூபம் எடுத்திருப்பதை நினைத்து பெருமை படுங்கள், குறை சொல்வதை நிறுத்துங்கள்..

AB, this lil prick is going to make more runs than you one day... ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மெர்வ் ஹூக்ஸ் ஆலன் பார்டரிடம் சச்சின் பத்தி சொன்னது - அவர் வாயில் சர்க்கரையை தூக்கி கொட்ட - அன்றே என்ன ஒரு நிதர்சனம்.....


If I've to bowl to Sachin, I'll bowl with my helmet on. He hits the ball so hard: Dennis Lillee. He is 99.5 per cent perfect. I'd pay to see him: Viv Richards.

நம்ம விமர்சகர்கள் விவியனைவிடவும் லில்லியை விடவும் அதிகம் கிரிக்கெட் பத்தி தெரிஞ்சவங்களா??

79 comments:

பாலா said...

///நம்ம விமர்சகர்கள் விவியனைவிடவும் லில்லியை விடவும் அதிகம் கிரிக்கெட் பத்தி தெரிஞ்சவங்களா?? //

என்னங்க இப்படி கேட்டுட்டீங்க??? :( :) :)

===

இப்ப நானெல்லாம்... சினிமாவைப் பத்தி தெரிஞ்ச மாதிரி எழுதறது இல்லையா?? அப்படி “லூஸு”ல விட்டுட்டு போங்க தல!

sriram said...

இல்ல பாலா அப்படி விட முடியல, கடந்த இருபது வருஷமா முதலிடத்தில இருக்கற ஒருத்தரப் பத்தி அவதூறு சொல்லும் போது கோவம் வரத்தான் செய்யும்..

Prathap Kumar S. said...

//ஐந்தரை அடி கூட உயரம் இல்லாத ஒரு இந்தியர் இப்படி விஸ்வரூபம் எடுத்திருப்பதை நினைத்து பெருமை படுங்கள், குறை சொல்வதை நிறுத்துங்கள்..//

சரியான கேள்வி...

இந்தபதிவை படிச்சாவது அவரைபத்திய விமர்சனங்கள் குறையுமான்னு பார்ப்போம்...

sriram said...

அதுதான் என்னுடைய ஆதங்கமும் நாஞ்சில் பிரதாப், பார்ப்போம்...

சங்கர் said...

என்னை பொறுத்தவரை

"Criket is my religion, Sachin is my God"

சூரியனை நோக்கி நாய் குலைத்தால், சூரியனுக்கு என்ன சிறுமை வரும்??

வண்டிக்காரன் said...

சச்சின் வாழ்க!!!
சந்தொஷமாங்க..
யார் என்ன பேசினாலும் கிரிக்கெட் என்றாலே சச்சின்தாங்க.
நீங்க கோபப் படாதிங்க..

sriram said...

சரியா சொன்னீங்க சங்கர்

sriram said...

கோபம்ன்னு சொல்லமுடியாது வண்டிக்காரன், ஆதங்கம் - சரியா இருக்கும்னு நெனைக்கிறேன்

மீன்துள்ளியான் said...

வெறுப்பிற்கு முக்கிய காரணம் அவரை பற்றி அளவுக்கு அதிகமாக எல்லாரும் புகழ்வதால் .. இதை நீங்கள் இளையராஜா விடயத்திலும் கவனித்து இருக்கலாம் .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

நிலாரசிகன் said...

சச்சின் இன்னும் நாற்பது சதம் அடித்தாலும் குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

10 வீரர்கள் 172 அடித்த போது சச்சின் மட்டும் 175.

ஆனாலும் சச்சினால் தோற்றது என்கிறார்கள்.வெளங்கிடும்.

சீனு said...

http://jeeno.blogspot.com/2006/07/blog-post.html

sriram said...

நான் அப்படி நெனைக்கல செந்தில், சச்சினுக்கு கிடைத்த / கிடைத்துக் கொண்டிருக்கும் / கிடைக்கப் போகும் ஒவ்வொரு இன்ச் புகழுக்கும் அவர் பொருத்தமானவரே..

எனக்கும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு - காம்ப்ளிக்கு அவர் அளித்த சப்போர்ட், கார் டாக்ஸ் விஷயத்தில் விலக்கு எதிர்பார்த்தது போன்றவை, அதற்காக அவரின் பேட்டிங்கை தவறு சொல்லக் கூடாது

sriram said...

நிலா ரசிகன்,
நீங்க சொல்வது மிகச் சரி, நம்பருக்குள்ள போனா அவரை மிஞ்ச ஆளில்லை...

Kannan said...

குறை சொல்லுற ஜென்மங்கள் என்னைக்கும் திருந்தாது, விடுங்க ஸ்ரீராம், நம்ம சச்சினே அதப்பத்தி கவலைப்படுவதில்லை, நாம ஏன் வீணா அலடிகிட்டு..!!

உங்கள் தோழி கிருத்திகா said...

இனிமேலாவது சச்சின் முக்கியமான தருணங்களில் ரன் எடுப்பதில்லை / தனக்காக ஆடுகிறார், டீமுக்காக ஆடுவதில்லைன்னு சொல்றதையெல்லாம் நிறுத்துவார்களா பெரியவர்கள்?///////////////////////////

அப்படி ஆடுகிரவர்களை எல்லாம் விட்டுட்டு டீமுக்காக ஆடுற தலைவரை குறை சொல்லுரவங்களை எல்லாம் என்ன பண்றது...
என்னுடய 10 வருஷ ஆதங்கத்தை இந்த பதிவுல அழகா சொல்லிட்டிங்க....ஹாட்ஸ் ஆப்....இதுக்கு மேல சச்சினை யாரும் குறை சொல்ல கூடாது...

ஸ்ரீராம். said...

ஒரு லேசான பொறாமைதான் மற்றவர்களை சச்சினிடம் குறை காணத் தூண்டுகிறது. அவர் இந்த நூற்றாண்டின் அற்புதம், சாதனை மன்னன், கிரிக்கெட் பூதம்.
அவர் செய்யப் போகும் இன்னொரு சாதனை வயது கடந்தும் விளையாடும் வீரர்... அதே வேகத்துடன், திறமையுடன் என்ற சாதனை...
விமர்சனங்களைப் பற்றி அவரே கவலைப் படவில்லை... நாம் ஏன்? நம் கடன் அவர் விளையாட்டை ரசிப்பதே...
ஷார்ஜா மேட்ச் என்னாலும் எந்நாளும் மறக்க முடியாத மேட்ச்...சென்னை டெஸ்ட் கூட...

உங்கள் (நம்?) பெயரைச் சொல்லியே விளித்து பதில் எழுதுவது கஷ்டம் என்று சொல்லி உள்ளீர்கள்... அந்தக் கஷ்டம் மறுபடி உங்களுக்கு...ஆனால் எனக்கு அந்தக் கஷ்டம் இல்லை...என் பெயரில் மட்டும் நான் இல்லை...

Prabhu said...

He has proved himself worthy in his social life too.MNS அமைப்பு மும்பை மராட்டியர்களுக்கேன்னு மொன்னையான பெயரில் அவ்வளவு அநியாயும் செய்யும் போது, 'நான் முதலில் இந்தியன். பிறகுதான் மராத்தியன்' எனக் கூற எவ்வளவு தைரியம் வேண்டும். செலிப்ரிட்டிஸ் இப்படி சொன்னாதான ஒரு Moral boost இருக்கும்? He was cooler that way.

ரவி said...

நான் சச்சினை குறை சொல்பவர்களில் மனதார சொல்வதில்லை..

சச்சின் அவுட்டானால் திட்டிக்கொண்டே அடுத்த ஆட்டத்தில் செஞ்சுரி போடுவாரா என்று எதிர்ப்பார்க்கும் ஆள்.

பாராட்டினா செஞ்சுரி போடமாட்டாருன்னு எனக்கொரு செண்டிமெண்ட். இது எப்புடி இருக்கு ?

அஹோரி said...

சரியா சொன்னீக ....

creativemani said...

நம்ம ஆளுங்க கிரிக்கெட்ட ஒரு குழு ஆட்டமா பார்க்கறத நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சுங்க சார்... இவங்கள பொறுத்தவரை எல்லாருமே எல்லா மேட்சும் நூறு அடிக்கணும் இல்லாட்டி அஞ்சு விக்கெட் எடுக்கணும்... ஒன்னு தலைல தூக்கி வச்சி ஆடுறது இல்லாட்டி தரைல போட்டு மிதிக்கறது... வச்சா குடுமி சரைச்சா மொட்டை கேசுங்க....

Unknown said...

i am really not sure how come you say he is great.
100% he is not a match winner.
Crucial situations he ll never play. Against zimbabwe, kenya and bangaladesh and some chota countries only he made most of his centuries.
If he is great, why he did not score in the 6th and crucial match against australia. Out of six matches only one match some how played well.
Vivian richards, ponting, gilchrist are match winners. not this Sachin.
Please post this and see others responses. I could see only positive responses about Sachin.
Please post this negative response also. Lets see

sriram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்

sriram said...

அதுதான் என் விருப்பமும் என் தோழி கிருத்திகா

sriram said...

நன்றி ஸ்ரீராம், உண்மைதான் - உங்கள் பெயரைன்னு சொல்லும் போது ஓகே அப்புறம் “நம்” பார்த்தவுடனே ஒரு uneasiness, I don't know why. Identity Crisis...:)

sriram said...

பப்பு, கிரிக்கெட்டையும் தாண்டி எனக்கும் அவரைப் பிடிக்கும், கருப்பு பணம் வாங்குவதில்லை என்று கேள்விப் பட்டேன்

sriram said...

செந்தழல் ரவி,
எப்படி இப்படி? ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

sriram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஹோரி...

sriram said...

கரெக்ட் மணிகண்டன்
மக்களுக்கு புரியணும், ஒருவர் எல்லா நாளும் 100 அடிக்கவோ 5 விக்கட் எடுக்கவோ முடியாது..

sriram said...

முரளி,
முதல்ல ஒண்ணு சொல்லிடறேன், இதுவரை என் பதிவில் எந்த பின்னூட்டத்தையும் நிராகரித்ததில்லை . தனி நபர் தாக்குதல் இல்லாத வரை எதையும் நிராகரிக்கவும் மாட்டேன்.

அப்புறம், உங்களின் அறியாமையை நெனச்சா எனக்கு பாவமா இருக்கு..

one day மேட்ச்ல அவர் அடித்த 45 சதங்களில் வலிமை குறைந்த டீம்களுக்கு எதிரா அடித்தது 11 மட்டுமே (bagaladesh, bermuda, kenya, zimbabwe, UAE included)
தலைவரோட ஃபேவரைட் ஆஸ்திரேலியா.

Test match : மொத்தம் 43 அதில் 3 மட்டுமே zimbabwe வுக்கு எதிராக..

ஒருவரே எல்லா மேட்சிலும் ஆட முடியாது முரளி, மத்தவங்களும் அப்பப்போ ஆடணும்..

“one match some how played well”
some how ஆக ஆடித்தான் முப்பதாயிரம் ரன்கள் அடித்தாரா...
Grow up Murali...

Heam said...

அட விடுங்க அண்ணே .. சொல்றவன் சொல்லிடு தன இருப்பான் எல்லாம் stomach fire பார்ட்டிங்க . எவன் என்ன சொன்னாலும் தல தல தான் ..

- Heam -
www.sachislife.com

Heam said...

// i am really not sure how come you say he is great.
100% he is not a match winner.
Crucial situations he ll never play//

Murali grow up man did u ever seen at least the highlights of his innings . the last innings he played in test cricket against Srilanka is sure a match saver . also if u want only him to play all matches then whats the role of other 10 player .. Sriram please arrange a signature campaign so that we can nominate Mr.MURALI for Indian team selection coz he will score 200 in every game :)

- Heam -
www.sachislife.com

sriram said...

Heam,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
இது உங்க முதல் பின்னூட்டத்துக்கு

sriram said...

Heam, நாம் இருவரும் முரளியை ரொம்பவே அதிகமா கேலி பண்ணிட்டோம்னு நெனைக்கிறேன், அவர் எண்ணம் அவருக்கு, நம்பர் பத்தி கேட்டால், நம்பராலேயே பதில் சொல்லுவோம்...

Heam said...

Sriram .. He he .. avar oditar pola .. please check our website for the God of Cricket . its not recently updated but will be back with updated datas in few days
www.sachislife.com

sriram said...

Heam
உங்கள் வலைத்தளம் பார்த்தேன், சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்

Anonymous said...

Sachin is a great player. But sometimes he fails to score when we needed. But we can't blame him for that. We have another 10 players to play to win a game. No one can find any weakness from his batting. He is a most complete batsman with technique and temperament. He played some great innings against the top sides like Australia. Still big countries like Aussis are targeting and planning against him.

பித்தனின் வாக்கு said...

அவர் கிரிகெட்டை தன் வாழ்வாகவும், நாட்டுப் பற்றுடனும் விளையாடிகின்றார். அவர் அதில் காட்டும் முனைப்பு மற்றும் ஈடுபாடு வேறு எவரிடமும் காணாதது. விமர்சனகளைப் புறந்தள்ளுங்கள், ஒரு மாட்ச் ஆடினால் புகழுவார்கள், மறு மாட்ச்சில் இகழுவார்கள். ஆனால் ஆதவன் என்றும் ஆதவன் தான். நன்றி.

Unknown said...

// நம்ம விமர்சகர்கள் விவியனைவிடவும் லில்லியை விடவும் அதிகம் கிரிக்கெட் பத்தி தெரிஞ்சவங்களா?? //

நம்ம ஊர்ல யாராவது தன்னை பெரிய ஆள் அப்டின்னு நிருபீச்சா உடனே அவர் பத்தி குறை கண்டுபுடிச்சி தன்ன பெரிய புத்திசாலின்னு காட்டிகுவாங்க... நானும் சச்சினை பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன் முடிந்தால்படிக்கவும்...

sriram said...

நன்றி அனானி

sriram said...

நன்றி பித்தனின் வாக்கு, அவர் என்றுமே ஆதவந்தான்

புருனோ Bruno said...

//எனக்கும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு - காம்ப்ளிக்கு அவர் அளித்த சப்போர்ட், கார் டாக்ஸ் விஷயத்தில் விலக்கு எதிர்பார்த்தது போன்றவை, அதற்காக அவரின் பேட்டிங்கை தவறு சொல்லக் கூடாது//

சீருந்து வரி விலக்கு கோரியதில் எனக்கும் அவர் மீது விமர்சணம் உண்டும்

அகார்கரை நீங்கள் விட்டு விட்டீர்கள் :) :)

புருனோ Bruno said...

//100% he is not a match winner.//

உங்கள் கூற்றுப்படி மேட்ச் வின்னர் என்பதற்கு உள்ள தகுதிகள் என்ன என்று விளக்கு முடியுமா

புருனோ Bruno said...

//Crucial situations he ll never play.//

உங்களின் கூற்றுப்படி Crucial situations என்றால் என்ன

கடந்த டெஸ்ட் போட்டியின் இறுதி தினம் Crucial situation இல்லையா

புருனோ Bruno said...

//Against zimbabwe, kenya and bangaladesh and some chota countries only he made most of his centuries. //

ஹி ஹி ஹி

சச்சின் எந்த நாட்டுடன் அதிக சதம் அடித்துள்ளார் என்று கூட தெரியாதா உங்களுக்கு

என்ன கொடுமை சார் இது

sriram said...

நன்றி பேநா மூடி, கண்டிப்பா படிக்கிறேன்

புருனோ Bruno said...

//If he is great, why he did not score in the 6th and crucial match against australia. Out of six matches only one match some how played well.//

எந்த ஒரு விளையாட்டு வீரராலும் அனைத்து ஆட்டங்களிலும் 100 அடிக்க முடியாது

இந்த கேள்வியே தவறு

//Vivian richards, ponting, gilchrist are match winners. not this Sachin. //

எப்படி என்று விளக்குங்கள்

தான் விளையாடிய ஆட்டங்களில் எத்தனை சத ஆட்டங்களை ரிச்சர்ட்ஸ் வென்று தந்துள்ளார்

தான் விளையாடிய ஆட்டங்களில் எத்தனை சத ஆட்டங்களை பாண்டிங் வென்று தந்துள்ளார்

தான் விளையாடிய ஆட்டங்களில் எத்தனை சத ஆட்டங்களை கில்கிரிஸ்ட் வென்று தந்துள்ளார்

தான் விளையாடிய ஆட்டங்களில் எத்தனை சத ஆட்டங்களை சச்சின் வென்று தந்துள்ளார்

என்று கூறினால் நாங்கள் தெளிவு பெற உதவியாக இருக்கும்

புருனோ Bruno said...

//அப்புறம், உங்களின் அறியாமையை நெனச்சா எனக்கு பாவமா இருக்கு..
//

சச்சினை குறை சொல்பவர்களின் கிரிக்கெட் அறிவு பொதுவாகவே இந்த அளவு தான் இருக்கிறது

புருனோ Bruno said...

// the last innings he played in test cricket against Srilanka is sure a match saver . //

அவர் விளையாடியதால் அது சாதா இன்னிங்கஸ்

அன்று அவர் டக் அடித்திருந்தால் நாம் இன்னிங்க்ஸ் தோல்வி அடைந்திருப்போம்

உடனே சச்சின் குருசியல் இன்னிங்க்ஸ் விளையாட மாட்டார். சச்சின் இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாட மாட்டார். சச்சின் நான்காவது இன்னிங்கஸ் விளையாட மாட்டார் என்று கூறியிருப்பார்கள் :) :) :)

sriram said...

வாங்க மருத்துவரே... உங்களைத்தான் இவ்வளவு நேரமா காணோமேன்னு பாத்தேன், சச்சின் மற்றும் இளையராஜா பத்தின பதிவுகள் உங்க கமெண்ட் இல்லாம முழுமையடையாதே...

ஆமாம் அகார்கர் விஷயத்தை விட்டுவிட்டேன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..

உங்களின் மற்ற கேள்விகள்தான் எனக்கும், சச்சினுக்கு ஒரு yard stick மற்றவர்களுக்கு வேறு Yard stick ஏனென்று இன்றுவரை எனக்கு புரியவில்லை

புருனோ Bruno said...

//உங்களின் மற்ற கேள்விகள்தான் எனக்கும், சச்சினுக்கு ஒரு yard stick மற்றவர்களுக்கு வேறு Yard stick ஏனென்று இன்றுவரை எனக்கு புரியவில்லை//

மற்றவர்களுக்கு yardstick இல்லை. inchstick வைத்து தான் அளக்கிறார்கள்

இவருக்கு மட்டும் தான் yardstick :) :)

sriram said...

மற்றவர்களுக்கு yardstick இல்லை. inchstick வைத்து தான் அளக்கிறார்கள்

இவருக்கு மட்டும் தான் yardstick :) :)

:) :) நல்லா சொன்னீங்க மருத்துவரே....

Anonymous said...

கொஞ்சம் எட்டிப் பார்க்க:
http://aris-ungaliloruvan.blogspot.com/

Anonymous said...

1.Selfish

2.Scoring Against weaker Oppostions

3.Failing in pressure situation

Anonymous said...

I really believe Sachin is a legend and the best cricketer, but it doesn't really mean he is perfect. I am not a great fan of Sachin and I completely agree with you. He is just like any other cricketer under pressure.

I really hate Sachin see playing both forms of the game, just to score more runs and make his records stronger. He is old enough to quit from one form of the game and try to play in Test cricket rather playing two ODI's and missing the next two ODI's for the past year.

Anonymous said...

Sachin tendulkar is a great batsman with the max number of 100's. But do u know he is not in the wisden 100 bcos none of his 100's were match winning. Sachin plays well in one days, but just in the first innings. The only time he played and has won matches for india in second innings is in sharjah and partly in the wc. He cannot play under pressure specially when wickets are down, as you saw in the first one day against england during chasing. YOu need people with a big heart to play at number 4. Thats the reason he doesnt want to play at that position. Chappel wanted him to bat at that position.

Anonymous said...

During chasing, numbr 4 is a very crucial position, and is a match wining position, players like rahul dravid, yuvraj, dhoni, inzamam, even gibbs (although he was an opener) have played at umber 4 in pressure situations an won matches. Sachin tendulkar does not have the heart to play at that position and gets out when situation starts worseninng. Yuvraj has played mch less games that tendu, but he still has won more matches, people argue thats bcos tendulkar opens he cant bat for 50 overs. all i want to say is, just bcos sachn has max number of runs doesnt mean he is a match winner. The problem wid people in our country is that if someone like Kapil speaks the truth, that sachin needs to play like dhoni (1st test vs endland), where he stood his ground wid tailenders, people will come on streets in favor of sachin, Thats the reason y our cricket team is losing. They cant hear the truth. The reality is that the world laughs on BCCI and indian public for supporting tendulkar, who in his career of 18 years gives up incrucial situations. I believe sachin has the capability of hhitting 500 runs, even against australia, but that match will be a draw. He cant play an innings like VVS laxman in calcutta against australia (281). Instaed of taking our flags on street and burning effigy of people like kapil and Chappel, think abt it, thy might be right.

Anonymous said...

Manjrekar had based his case over 51 ODIs, in which Tendulkar's batting average was 62.10 in 24 innings when the side batted first. The same average was as low as 26 in 27 innings in which India batted second and Manjrekar wrote in his column that this was hurting the side.

The cricketer-turned-commentator said Tendulkar got away with it because of his stature and felt the batsman had become an elephant in the dressing room that no one wanted to talk about.

Talking to reporters in the capital on Thursday, Manjrekar said he would not disown the statement because Tedulkar indeed was struggling in that phase.

"That was a phase when he was too cautious and tension could be seen on his face. He was afraid of failure and getting out. That seems to have disappeared now and he is playing with more freedom," Manjrekar said.

வால்பையன் said...

//நம்ம விமர்சகர்கள் விவியனைவிடவும் லில்லியை விடவும் அதிகம் கிரிக்கெட் பத்தி தெரிஞ்சவங்களா??//

அவுங்க ரெண்டு பேரும் யாருன்னு கேக்குறவங்க தான் நம்ம ஆளுங்க!

sriram said...

வாலு
அவிங்க யாருன்னு தெரியல்லன்னா பரவாயில்ல, தெரியாத விஷயத்தப் பத்தி பேசாம இருக்கலாமில்ல

sriram said...

அனானி...
இவ்வளவு கருத்துக்கள் சொல்லும் போது பெயர் சொல்ல என்ன தயக்கம்.
உங்க கமெண்டுகளை படிக்கும் போது point by point பதில் சொல்ல நினைத்தேன், உங்க கடைசி கமெண்ட் பார்த்தது (2 தடவை) எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். முகம் காட்ட விரும்பாதவர் / காரணமே இல்லாமல் ஒருவரைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சிக்கும் ஒருவருக்கு பதில் சொல்ல வேண்டாமென இருக்கிறேன்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
அப்புறம், இதுவரை நெகடிவ் வோட்டு வாங்கியதில்லை என்கிற அவப்பெயரை நீக்கியதுக்கும் நன்றி

sriram said...

அனானி...
இவ்வளவு கருத்துக்கள் சொல்லும் போது பெயர் சொல்ல என்ன தயக்கம்.
உங்க கமெண்டுகளை படிக்கும் போது point by point பதில் சொல்ல நினைத்தேன், உங்க கடைசி கமெண்ட் பார்த்தது (2 தடவை) எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். முகம் காட்ட விரும்பாதவர் / காரணமே இல்லாமல் ஒருவரைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சிக்கும் ஒருவருக்கு பதில் சொல்ல வேண்டாமென இருக்கிறேன்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
அப்புறம், இதுவரை நெகடிவ் வோட்டு வாங்கியதில்லை என்கிற அவப்பெயரை நீக்கியதுக்கும் நன்றி

Anonymous said...

Hi Sriram, This is Anony again. Sorry if my comment about Sachin hurt you.
Anyway i am completely against your comments about Sachin.

Not only me. Many of my friends used to like him. even me too.
when i was studying college i was a big fan of Sachin. Later slowly everyone came to know about his inconsistency, lack of confidence, could not bat at number four/five, always look for opening slot to make records which will not help India to win.
Now everyone hates him. One more thing have you noticed.
even if he is not in the match india will win the match without any problem. But if he comes and gets out for a single digit, then mostly india looses.

Please give your comments about that.

Sundar.

Anonymous said...

sorry for putting negative vote. the hatred i have on sachin made me to that.

முரளிகண்ணன் said...

நல்ல பதிவு ஸ்ரீராம்

sriram said...

நன்றி முரளி கண்ணன்..

sriram said...

அட நீங்க வேற சுந்தர் - நெகடிவ் வோட்டுக்கெல்லாம் கவலைப் படற ஆள் நானில்லை..
சொல்லப் போனா சில பதிவுகளுக்கு முன் எனக்கு வோட்டே விழுந்ததில்லை..

அப்புறம், Your opinion about Sachin won't hurt me. you have every right to have an opinion about anyone / anything under the sun. What I didnot like was the word which you used. I felt bad having deleted your comments...

Consistency : I would let you explore on google and come to your own conclusion about Sachin's consistency.. I would be re-inventing the wheel if I list down the numbers..

Team Loosing when Sachin does not score : Thanks for accepting that but is cricket not a team game??

Porkodi (பொற்கொடி) said...

ennaiye nambala indha ulagam, sachinai mattum nambiduma? vandhuten vandhuten! :)

ambi said...

சச்சின் ஒரு சிறந்த வீரர் தான், சந்தேகமே இல்லை.

1) உலக கோப்பை அரை இறுதியில் ஈடன் கார்டனில் வெறும் 250 சேஸிங்கில் முக்ய தருணத்தில் சச்சின் எப்படி அவுட் ஆனார்னு உங்களுக்கு நினைவில் இருக்கா ஸ்ரீராம்?

2) உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்த்ரேலியாவின் அவ்ளோ பெரிய டார்கெட்டை சேஸ் பண்ண ஒரு ஓப்பனர் எப்படி ஆடி இருக்கனும்..? அவர் அவுட்டான ஷாட் உங்க நினைவில் இருக்கா ஸ்ரீராம்..?

நான் மறுபடியும் சச்சினை குறை சொல்லவில்லை.

முக்ய பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படாதது இந்த நாட்டின் சாபகேடு. :(

அது கிரிகெட்டிலும் சரி, ஈழ விவகாரத்திலும் சரி. :(

sriram said...

பொற்கேடி,, எங்க போயிட்டீங்க இவ்வளவு நாளா? எல்லாம் நலந்தானே?

sriram said...

அம்பி,
உலகில் யாரும் / எதுவும் perfect கிடையாது, சச்சின் near perfect, அவ்வளவுதான் நான் சொல்வது..
You could quote 2 occasions when did not take the team through, don't you remember any situation where he did?

சேவாக் அவுட் ஆனா வரும் கமெண்ட் - அவன் ஒரு காடா ப்ளேயர், பட்டா பாக்கியம் படாட்டா லேகியம்.

லக்‌ஷ்மணோ கங்கூலியோ அவுட் ஆனா - சீனியர் ப்ளேயர்கள் பொறுப்பா ஆட வேணாமா?? அவ்வளவுதான்..

சச்சின் மட்டும் அவுட் ஆகிவிட்டால் - அவ்வளவுதான்..

மொத்தத்தில் சச்சினின் ஆட்டம் கற்பு போல ஆகிவிட்டது, மத்தவங்க அவுட் ஆனா அது அத்தியாயம், சச்சின் அவுட் ஆனா அது நாவலாகிவிடுகிறது...

Porkodi (பொற்கொடி) said...

aathavai paaka poi irundhen boss! kadaisi nimishathula plan pannadhala thidir nu pona madhri agiduchu. ellam nalame. unga english solli kudukum series mudinju pocha???

Anonymous said...

//Consistency : I would let you explore on google and come to your own conclusion about Sachin's consistency.. I would be re-inventing the wheel if I list down the numbers..//

Sriram nice way to escape without giving the details.
Anyway lets windup the debating. why we should talk about that fellow and waste our time.

Have a ball. Enjoy...
C u...

Porkodi (பொற்கொடி) said...

பழைய பாடம் எல்லாம் படிச்சு அரியர்ஸ் க்ளியர் பண்ணியாச்சு.. :) என்ன இங்லிபிஸ் வாத்தியார் திடீர்னு காணாம போயிட்டார்? இன்னும் உண்டுனு நம்பறேன்.

ஏற்கனவே சொல்லிட்டேனானு தெரியலை, இருந்தாலும், அடுத்து வர்ற பகுதிகள்ல நீங்க ஒரு விஷயம் பத்தி நல்லா விவரமா புலம்பியே ஆகணும் பாஸ் - ஆங்கிலம் நல்லா பேச தெரிஞ்ச பலரே "I did come to the party last evening"னு சொல்லாம "I did came to the party"னு சொல்றாங்க. சின்ன விஷயம் தான்னாலும் ரொம்ப பரவலா கேக்கறேன். :( அப்புறம் இங்கு இருக்கும் நிறைய இந்தியர்கள் "crib"னு சொல்றாங்க implying "complain" அதுவும் தவறு. அப்புறம், pronouncing words like buffet, rendezvous, discotheque - இதை பத்தியும் எழுதணும்னு தாழ்மையுடன் கேட்டுக் கொ'ல்'கிறேன்.

என்னடா சச்சினை பத்தி ஒண்ணும் கருத்து உதிர்க்கலைனு பாக்கறீங்களா? (பார்க்கலியேனு சொல்ல கூடாது..) எனக்கு இந்த idol worship சுத்தமா பிடிக்கல.. வெச்சா குடுமி சிரைச்சா மொட்டைனு ஒரேடியா பாராட்ட வேண்டியது இல்லைன திட்ட வேண்டியது.. ரஜினி, ரஹ்மான், சச்சின், எதை எடுத்தாலும் இதே attitude தான்.

மணிகண்டன் said...

சச்சின் பதிவுல என்னோட கமெண்ட் இல்லாம இருக்கக்கூடாது. இவ்வளவு வருஷமா பிடிக்காதவங்க, இந்த உருபடாவட்டி மேட்ச் முடிஞ்சவுடன கருத்தை மாத்திப்பாங்களா ? :)-

@அம்பி உலககோப்பை அரை இறுதி போட்டி - இந்தியா அடிச்ச 120 ரன்ல சச்சின் அடிச்சது 65 - இதுல அவரை குறை சொல்றது எப்படி நியாயம் ? ரெண்டாவது அதிக எண்ணிக்கை 25, மூணாவது எண்ணிக்கை 10 ரன் :)-

@பொற்கொடி தூக்கி வச்சி ஆடறதும் அப்புறம் கால்ல போட்டு மிதிக்கறதும் ஒரு ஸ்போர்ட்ஸ் ரசிகனோட ரொம்ப basic qualities :)-

உங்கள் தோழி கிருத்திகா said...

http://spiritual-indian.blogspot.com/2009/11/blog-post_30.html......


இதை பார்க்கவும் உடனே

ரவி said...

http://tvpravi.blogspot.com/2009/12/blog-post_02.html

முடிவு

Porkodi (பொற்கொடி) said...

ada kadavule aduthu ungluku enna boss achu? adutha padhivu epo?? yen thaan aal aaluku bloga anadhaiya vittu paduthringlo!!

Porkodi (பொற்கொடி) said...

pochuda.. ivarukkum guru madhriye blogophobia vandachu pola..!

Madhan said...

பதினைந்து வருடங்களுக்கும் மேலாக எல்லா ஆட்டத்திலேயும் அவரையே நம்பி கொண்டு இருந்து, ஒரு சில போட்டிகளில் அவர் ஏமாற்றியது, மனதில் மறக்காமல் பதிந்து விடுகிறது போலும். நீங்கள் சொல்வது போல, குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கை விடுத்து பார்த்தால், சச்சின் அவரது எல்லா புகழுக்கும் பொருத்தமானவரே!