Friday, October 16, 2009

நல்ல மேனேஜரின் நற்குணங்கள் நாலு:

மேனேஜராக ஆவது நம்மில் பலரின் நெடுநாள் கனவு. மேனேஜராக ஆகிவிட்டால் வேலை செய்ய வேண்டாம் என்று பலரைப் போல் நானும் நினைத்தது ஒரு காலம். இந்த மேனேஜர் நாள் முழுவதும் கம்ப்யூட்டரின் முன்னால் ஒக்காந்து வேலை ஏதும் செய்வதில்லை என்று நினைத்திருக்கிறேன். நான் மேனேஜராக ஆன பின்புதான் அது எவ்வளவு கடினமான வேலை என்று புரிந்தது. Middle Management இல் வேலை செயவதைப் போல கஷ்டம் வேறில்லை.
மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் அடி விழுவது போல மேனெஜ்மெண்டிடமும் அடி வாங்கணும், டீமில் வேலை செய்வர்களிடமிருந்தும் இடி வாங்கணும். யாரிடமும் நல்ல பேர் கிடைக்காது.

கொஞ்சம் கொசுவத்தி சுத்தினா,2002 ல் என் முதல் விமானப் பயணம் சென்னையிலிருந்து தில்லிக்க்கு. ஒரு சின்ன Sales Team க்கு மேனேஜராக இருந்தவனை Branch Manager ஆக ஆக்கி தில்லிக்கு பத்தி விட்டாங்க கம்பேனியில். அந்த பயணத்திற்கு நான் என்னுடன் எடுத்துச் சென்ற புத்தகம் அப்துல் கலாம் ஐயாவின் “அக்னி சிறகுகள்”. I got the best managerial tip from that book, “Take the blame for a failure and give away the credit for success" என்பதுதான் அது. ஒரு முறை ஏவுகணை கடலில் விழுந்த போது APJ ஐயா வேலை செய்த நிறுவனத்தின் தலைவர் (தவான் என்று நினைக்கிறேன்) சொன்னாராம், இன்று பத்திரிக்கையாளர்களை நான் எதிர்கொள்கிறேன் - I will take the responsibility for this failure என்று. அதே ப்ராஜக்ட் வெற்றி அடைந்த போது, அதே தலைவர் APJ விடம் சொன்னாராம் - Go and take the press meet, it is your success என்று. அன்றிலிருந்து முடிந்தவரை இதனை கடை பிடித்து வருகிறேன். நான் ஒரு நல்ல மேனேஜரா இல்லயான்னு எனக்குத்
தெரியாது, ஆனால் ஒரு Successful Manager என்று சொல்ல முடியும்.

இந்த பதிவில் ஒரு நல்ல மேனேஜருக்கு இருக்க வேண்டிய நாலு குணங்களைப் பற்றி பார்ப்போம்.

1. Set a right example and be a Leader (Not a Manager)

Always remember that anything and everything what you do is being watched and imitated by your team members.


MBA விலோ அல்லது ஏதோ ஒரு Workshop லோ ஒக்காந்து நல்ல மேனேஜரா இருப்பது எப்படின்னு கத்துக்க முடியாது. நீங்க நல்ல மேனேஜரா இருக்கணும்னா ஒங்களுக்கு ஒரு நல்ல மேனேஜர் அமையணும். அவர் செய்யுறதை காப்பி அடிச்சு அதில் உங்களது ஸ்டைலை சேர்த்தால் நல்ல மேனேஜராக ஆகலாம். அதேபோல, உஙகள் டீமில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் உங்களை ரோல் மாடலாக பார்க்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் கவனிக்க படுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள். இந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன், எனக்கு
சரியான நேரத்தில் அரவிந்த் என்று ஒரு மிகச்சிறந்த மேனேஜர் அமைந்தார். நான் இன்றைக்கும் Tips தேவைப்படும் போது அணுகுவது அவரைத்தான். ஒரு மேனேஜர் எப்படி இருக்கணும்னு அவரிடமிருந்தும் எப்படி இருக்கக் கூடாது என்பதை அதற்கு முன் வேலை செய்த மேனேஜரிடமிருந்தும் கத்துக்கிட்டேன்.

எல்லாரும் நேரத்துக்கு ஆபிசுக்கு வரணும்னு நெனச்சா, மொதல்ல நீங்க நேரத்துக்கு ஆபிசுக்கு போகணும். இந்த ரூல் எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்.

2. Call them Colleagues :
அரவிந்திடமிருந்து நான் கற்ற பாடங்களில் இதுவும் ஒன்று.

I hate the word Subordinate.Team Mate அல்லது Colleague
என்று அறிமுகப் படுத்துங்கள். யாரையும் இவர் எனக்கு கீழே வேலை செய்கிறார் என்று சொல்லாதீர்கள்.

Be a part of the team as a Leader and don't Boss around. Team Mates அனைவரையும் உங்களை பேர் சொல்லி அழைக்க வற்புறுத்துங்கள். Sir என்று அழைப்பதை தடை செய்யுங்கள். என்னுடைய டீம் மேட்ஸ் என்னை விளித்தது "Hi Sri" என்றுதான். This goes a long way in creating a bondage...

3. Don't give them fish to eat, Teach them how to Fish:

மறுபடியும் அரவிந்த் புராணம். நான் அவரிடம் ஒரு Problem கொண்டு சென்றால் அவர் எப்போதும் சொல்வது - ஸ்ரீராம், Problem இருக்குன்னு மட்டும் சொல்லாதே, அதுக்கு மூணு solution யோசித்துக் கொண்டு வா, அதில் எது சிறந்தது என்று சொல்கிறேன். அப்போல்லாம் எனக்கு பத்திக்கிட்டு வரும், யோவ் எனக்கு மூணு Solution தெரிஞ்சா நான் ஏன் உங்க கிட்ட வர்றேன்னு கத்தத் தோணும். I realized lot later that he was preparing me to live on my own and not be a Parasite.

Teach them how to fish, if you keep feeding them, they will die of hunger after you...

4. Don't shock them into changes:

மாற்றம் ஒன்றே நிலையானது, ஆனால் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்து விடாது. When facing change, Communicate as early in the process as possible. Remember that your team mates are a few steps behind you in the acceptance cycle. Give them a reasonable
amount of time to adjust.


எல்லா விரல்களும் ஒரே அளவில் இருப்பதில்லை. Resistance to change ஒருவருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்.

மக்கள்ஸ், இதப் பத்தி எழுத ஆரம்பித்த போது ரைமிங்கா நற்குணங்கள் நாலுன்னு தலைப்பு வச்சி நாலு பாயிண்ட் எழுதணும்னு நெனச்சேன், எழுதும் போது
இன்னும் நாலு பாயிண்ட் தோணிச்சு, பதிவு ரொம்ப பெரிசா போகாம இத்தோட நிறுத்திக்கறேன்,பிடிச்சிருந்தா சொல்லுங்க, அடுதத பாகத்தில் இன்னொரு
நாலு பாயிண்ட் எழுதறேன்.

32 comments:

சங்ககிரி ரமேஷ் said...

Good post Sriram..

Leaders don't create followers, they create more leaders.

Ramesh

sriram said...

வாங்க ரமேஷ், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சரியாச் சென்னீங்க..

பாலா said...

அப்ப... ஃபாலோயர்ஸ் விட்ஜெட்டை தூக்கிடலாமா..ன்னு யோசிக்கிறேன். :) :)
-------

கலக்கறீங்க... ஸ்ரீராம். முதல்ல இண்டர்வியூ... இப்ப மேனேஜர்.... அடுத்து சிஇஓ-வா?

இன்னும்.. நிறைய டிப்ஸ் எதிர்பார்க்கிறோம். :)

தீபாவளி வாழ்த்துக்கள்.! :)

sriram said...

நன்றி பாலா, தீபாவளி வாழ்த்துக்கள்

மணிகண்டன் said...

good post sriram :)- i think that this is my first visit.

I always felt like i have to work for a successful manager and don't mind whether he is good or bad :)-

அகில் பூங்குன்றன் said...

Wow....interesting post.

sriram said...

வாங்க மணிகண்டன்,
உங்க கிச்சடிகளை தொடர்ந்து சுவைப்பவன் நான்..

sriram said...

அகில், உண்மையவா சொல்றீங்க

Porkodi (பொற்கொடி) said...

nalla direct report ku irukka vendiya gunam: enna senjalum nalla iruku esaman nu solidradhu, apdinu pakkathu veetu akka solla sonnanga :)

Porkodi (பொற்கொடி) said...

Happy deepavali "boss"ton sriram..! aparam inoru vishayam, neenga indha post potta dhinam thaan International Boss Day! :) Happy Boss Day too.

Jackiesekar said...

இன்று பத்திரிக்கையாளர்களை நான் எதிர்கொள்கிறேன் - I will take the responsibility for this failure என்று. அதே ப்ராஜக்ட் வெற்றி அடைந்த போது, அதே தலைவர் APJ விடம் சொன்னாராம் - Go and take the press meet, it is your success என்று.--,இப்படி பட்ட மேனேஜர்கள் அரிது... என் நண்பியோடு பேசும் போது, அவள் ஆபிஸ் விஷயங்கள் பேசும் போது திறமை மிக குறைவாக உலக ஞானம் குறைவான ஆட்கள்தான் உயர் பதவியில் இருந்து உயிரை வாங்குகின்றார்கள் என்றாள்....
ஒரு சில நல்லவர்களும் இருக்கின்றார்கள்...

sriram said...

யம்மா பொற்கேடி,
அந்த மாதிரி ஆட்களை டீம்ல வச்சிருந்தால், ஒரு நாள் பெரிய ஆப்பு நிச்சயம்.

//A good manager doesn't try to eliminate conflict; he tries to keep it from wasting the energies of his people. If you're the boss and your people fight you openly when they think that you are wrong - that's healthy.”//

அப்படின்னு படிச்சிருக்கேன்..
BTW, யார் அந்த பக்கத்து வீட்டு அக்கா, தப்பு தப்பா சொல்லி தர்றது??

sriram said...

பொற்கொடி, உங்களுக்கும், உங்களின் கணவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இது பத்தி எழுதணும்னு 1-2 வாரமாகவே நெனச்சிருந்தேன், அம்பியின் புடவை பதிவில் கூட சொல்லியிருந்தேன், நேற்று World Boss Day என்று எனக்குத் தெரியாது, It was a co incident. தகவலுக்கு நன்றி..

sriram said...

ஆமா ஜாக்கி, பல இடங்களில் தகுதி இல்லாதவர்கள்தான் இருக்கிறார்கள்.ஒரு சிறந்த மேனேஜரின் கீழ் வேலை செய்வது சந்தோஷமான விஷயம், நான் பதிவில் குறிப்பிட்டவரின் கீழ் 7 வருஷம் வேலை செஞ்சேன்...

ஸ்ரீராம். said...

//"எல்லாரும் நேரத்துக்கு ஆபிசுக்கு வரணும்னு நெனச்சா, மொதல்ல நீங்க நேரத்துக்கு ஆபிசுக்கு போகணும். இந்த ரூல் எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்"//

பானை சோறு. ஒரு அரிசி. ஆங்கிலப் பாடத்தைவிட இதை ரசித்தேன். அடுத்தடுத்து அழகாய் குறிப்புகள்.

sriram said...

வாங்க ஸ்ரீராம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஆர். அபிலாஷ் said...

அருமையான பதிவு ஸ்ரீராம். கூடவே, மேலாளர்கள் பதற்றப்படக் கூடாது, பதறினால் காட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன். பெண் மேலாளர்கள் இந்த விசயத்தில் எப்படி? தொடர்ந்து எழுதுங்கள்!

sriram said...

வாங்க அபிலாஷ், கருத்துக்கு நன்றி.
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்

Veliyoorkaran said...

Sriram sir...nalla irukkunga...en bossa ninaivupaduthiteenga...nanri...

Kumar.B said...

well said, Most of them may not applicable few years before. But at present unless you follow this you may not be recoganised or followed by your colleagues. a point what you missed out is sitting with them unofficially and understand/ participate and give a solution to their problems even though its not related to work.

sriram said...

வாங்க வெளியூர்க்காரன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

sriram said...

வாங்க குமார்,
கருத்துக்கு நன்றி, Getting to the team mates personally - is a point I have reserved for the next part.
will try to write 4 more points soon

ambi said...

Another Good one Sriram.
I would love to read these kind of posts as a series rather than one more post with 4 points. :-)

//அம்பியின் புடவை பதிவில் கூட சொல்லியிருந்தேன்//

Yes, I do remember and I keep on checking your space everyday except on weekends. :)

My 2 cents:
People always leave from their bosses not from the company. So Managers should be a example for the team members. - Asim Premji (WIPRO CEO)

sriram said...

வாங்க அம்பி,
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தது பற்றி சந்தோஷம், மேனேஜர்ஸ் பத்தி இன்னும் 1-2 பதிவுகள் வரும்.

ஒரு டிப்: எப்போதும் பேரை Spell பண்ணும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அவர் Azim Premji and not Asim Premji, also he is the Chairman of Wipro and not CEO.
அசீம் என்னுடைய ஆதர்ஷ நாயகன். நீங்க சொன்ன பாயிண்டையும், அவரின் Simplicity பத்தியும் அடுத்த பதிவில் எழுதுவேன்.

ambi said...

Sorry for those errors, I was bit skeptical on Azim's spelling, wanted to cross-check in the net. But was in a hurry to close the day. Will keep this point in my mind in the future.

sriram said...

Hi Ambi
No need to feel sorry for this.
My Mantra is never spell a name wrong, when in doubt ASK.
Also, people don't like some one making a mistake with their designation.

கௌதமன் said...

Very useful. I like such blog spots and such blog posts.

sriram said...

நன்றி கவுதமன், தன்யனானேன்.
காலையில 8 மணிக்கு இப்படி ஒரு கமெண்ட். இன்னிக்கு உங்க புண்ணியத்தில நாள் முழுமைக்கும் உற்சாகமாக இருப்பேன்

Ananya Mahadevan said...

அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை.. போஸ்டுன்னா இது போஸ்டு. Bookmarked. Very well written. Please do write more of such tips.

Ananya Mahadevan said...

Excellent post. Keep sharing more of your knowledge.

Anonymous said...

Nice post// frst time i am coming to ur blog.

Polisamiyar

bhuvan2uall said...

Intresting.. Very good management lesson.