Monday, December 28, 2009

நல்ல மேனேஜரின் நற்குணங்கள் நாலு - பாகம் 2

பாகம் 1 இங்கே காணலாம்.

போன பாகத்தில் என்னை பாதித்த மேனேஜர்களின் 4 நல்ல குணங்கள் பத்திப் பாத்தோம், இந்த பகுதியில் இன்னுமொரு 4 பாயிண்ட் பாக்கலாம்.

1. பாரபட்சம் காட்டாதீர்கள் :
As the famous saying goes "Employees don't intend to leave the company but their managers" மேனேஜர்களின் மீது மிக அதிகமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு - பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்பது. டீமில் யாருக்கும் ”Special Treatment” கொடுக்காதீர்கள். ஜால்ரா அடிப்பவர்கள் / ஜொள் விட அனுமதிக்கும் பெண்கள் /மேனேஜருக்கு பர்சனல் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு பாரபட்சம் காட்டுவது நீங்களே உங்களுக்கு குழி பறித்துக் கொள்வதற்கு சமம். நல்ல வேலையாட்கள் உங்கள் டீமில் தங்க மாட்டார்கள்.

பெண்களை இரவு ரொம்ப லேட்டாக ஆபிஸில் வேலை வாங்காமல் சீக்கிரம் அனுப்புவது பாரபட்சம் ஆகாது.

2. பாராட்டுங்கள் தாராளமாக: தவறுகளை சுட்டிக் காட்டும் போதும், திட்டுக்களையும் பிறருக்கு தெரியாமல் தனிமையில் செய்யுங்கள். டீமில் ஒருவர் செய்த நல்ல செயலை உடனடியாக பாராட்டுங்கள் அதையும் பொதுவில் செய்யுங்கள். Never mince words while appreciating. Appreciation email அனுப்பும் போது மொத்த டீமுக்கும் copy பண்ணி அனுப்புங்கள், முக்கியமாக மேனேஜ்மெட்டில் இருக்கும் ஒருவரையும் இமெயிலில் சேருங்கள்.அப்ரைசல் செய்யும் போதும் முதலில் ஒருவர் செய்த நல்ல விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு குறைபாடுகளை சொல்லுங்கள்- உங்கள் மீதான மதிப்பு கூடும்.

3. ஆபிஸ் நேரத்துக்குப் பின் அழைக்கும் போது அனுமதி கேளுங்கள்:

கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானது இது. ஆபிஸ் மட்டுமே வாழ்க்கையில்லை, எல்லோருக்கும் Personal Life உண்டு, ஆபிஸ் நேரத்துக்குப் பின் ஒருவரை தொந்தரவு செய்யும் உரிமை எந்த
மேனேஜருக்கும் இல்லை. முடிந்த வரை வேலை நேரத்துக்குப் பின் வேலை சொல்வதையோ / போன் பண்ணுவதையோ தவிருங்கள், தவிர்க்கமுடியாமல் அழைக்கும் பட்சத்தில் முதலில் அகால நேரத்தில் அழைத்தமைக்கு வருத்தம் தெரிவித்து விட்டு அவரால் பேச இயலுமா என்று கேட்டு விட்டு விஷயத்தைச் சொல்லுங்கள்.

4. Exit Interview :

Every good thing in life has an end, your mate's tenure in your team is no exception- இதனை எப்போதும் மனதில் வையுங்கள். டீமில் ஒருவருக்கு நல்ல வாய்ப்பு அமைந்து அவர் resign செய்தால் அவரை வாழ்த்தி அனுப்புங்கள். கண்டிப்பாக ஒரு Exit Interview
நடத்துங்கள். கம்பெனியில் / உங்கள் டீமில் சரியில்லாத விஷயங்கள் எவை என்று கேளுங்கள். ஏதாவது ஒன்றை மாற்றி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் அவர் எதை மாற்றுவார் என்று கேளுங்கள். அவர் உங்கள் பெயரை Manager's reference ஆக எப்போதும் பயன் படுத்தலாமென
சொல்லுங்கள்.

ஒரு மாசத்துக்கும் மேலாக எதுவும் கிறுக்கவில்லை, அப்படி இருந்தும் இந்தப் பக்கம் அடிக்கடி வந்து ஏன் கிறுக்கலைன்னு கேட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி..

ஒரு பத்து நாள் Florida, Bahamas Trip போயிட்டு வந்தேன், பயணக் கட்டுரை எழுதுற அளவுக்கெல்லாம் சரக்கு இல்லைங்க, எனவே படங்கள் போடுறேன் அடுத்த பதிவில்...

46 comments:

blogpaandi said...

Good post.

sriram said...

நன்றி பிளாக் பாண்டி

Vinitha said...

very informative and nice.

sriram said...

நன்றி வினிதா

Thamira said...

என்ன பாடமெல்லாம் பலமா இருக்குது? மானேஜர் ரொம்ப படுத்திட்டாரா பாஸ்?

sriram said...

வாங்க ஆதி..
அதெல்லாம் ஒண்ணுமில்லை, இதுவும் நான் கிறுக்கும் தலைப்புகளில் ஒண்ணு

ரோஸ்விக் said...

நல்ல பயனுள்ள பதிவுகள் நண்பரே. நல்லா சொல்லீருக்கீங்க. இது பலருக்கும் பயன்படக்கூடும். மிக நன்றி.

நீங்கள் பலரால் நல்ல மேலாளராக போற்றப்படுவதற்கு வாழ்த்துகள்.

ரோஸ்விக் said...

vote your tamilish vote also brother. :-)

creativemani said...

மூன்றாவது பாயிண்ட் ரொம்ப முக்கியமானது... எனக்குத் தெரிந்து யாரும் அதை (சரிவர) கடைபிடிப்பதில்லை..

ksvkumar said...

A subject that is so complex but you have managed to capture it in easy and plain language. keep it up.

sriram said...

வருகைக்கும், கருத்துக்கும், வோட்டுக்கும் மிக்க நன்றி ரோஸ்விக்

sriram said...

நன்றி மணிகண்டன்
என்னுடைய மேனேஜர் ஒருவர் கடைபிடித்த பழக்கங்களில் அதுவும் ஒன்று, நான் அவரை காப்பி அடிப்பதோடு சரி

sriram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எல்லாமே நல்ல பாயின்ட் ஸ்ரீராம்.மிக நல்ல பதிவு.பாராட்டுக்கள்.

sriram said...

மிக்க நன்றி ஸ்ரீ

பாலா said...

சார்,

ஐ வாஸ் ஊரில் இல்லை. ஸொ ப்ளீஸ் க்ராண்ட் மீ லீவ் ஃபார் யெஸ்டர்டே.

-பாலா

பாலா said...

ஆஹா.. நீங்களும் இருக்கறமாதிரி படத்தை போடுங்க. சும்மா காக்கா, குருவியை மட்டும் படம் புடிச்சிப் போடக் கூடாது...!!

சொல்லிபுட்டேன். நேர்லதான் பார்க்க முடியல. போட்டோலயாவது...! :(

ambi said...

ரொம்ப ஷார்ட்டா ஆனா ஸ்வீட்டா இருக்கு பதிவு.

எல்லாமே சரியான பாயிண்ட்ஸ்.
மை டூ செண்ட்ஸ்:

மானேஜர் என்பவரும் டீமில் ஒரு ஆள் தான் என டீம் மேட்களுக்கு சொல்லாமேயே புரிய வைக்கனும். கொம்பு முளைச்ச மாதிரி நடந்துக்க கூடாது.

என்ன பிராப்ளம்னாலும் ஈசியா அணுகக் கூடியவரா இருக்கனும்.

//பயணக் கட்டுரை எழுதுற அளவுக்கெல்லாம் சரக்கு இல்லைங்க//

நீங்க எழுதுங்க, சரக்கு இருக்கா இல்லையா?னு நாங்க சொல்றோம். :))

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ........ said...

அனுபவங்கள் என்று நினைக்கிறேன் . அதையும் அனவரும் ரசிக்கும் வகையில் பதிவு செய்திருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றுதான் வாழ்த்துக்கள் !!!!!!!!!!


என்றும் அன்புடன்
சங்கர் ........................
http://wwwrasigancom.blogspot.com/

sriram said...

வாங்க பாலா
என்னோட படம் போடலாம்தான், ஆனா அப்புறம் பதிவுக்கு வர்ற 4-5 பேர் கூட வராம போயிடுவாங்கன்னு பாக்குறேன்.
அன்புக்கு நன்றி

sriram said...

நன்றி அம்பி
நானும் எழுதி வச்சிருந்த பாயிண்ட்களில்
இருந்தவை
1.Be simple and approachable
2. Speak their language...
இதத்தான் great men think alike ன்னு சொல்வாங்களோ???

பயணக் க்ட்டுரை : இப்படி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமா இருக்கு, படம் போடறேன் பாத்துக்கோங்க

sriram said...

நன்றி சங்கர்

ambi said...

//இதத்தான் great men think alike ன்னு சொல்வாங்களோ???//

avvvvvv :)) ithuku enna rendu adi adichu irukalaam. :)))

sriram said...

ஏன் அம்பி ஏன்
நான் நல்ல விதமாத்தானே சொன்னேன்

குசும்பன் said...

//நல்ல மேனேஜரின் நற்குணங்கள் நாலு - பாகம் 2 //

பாஸ் நற்குணங்கள் என்று எழுதியிருந்தை கூட நற்குடின்னு படிச்சிட்டேன் பாஸ்:)

sriram said...

வாங்க குசும்பன்
பெரியவங்க எல்லாம் நம்ம கடைப் பக்கம் வர ஆரம்பிச்சிட்டீங்க...

அப்புறம் நான் வடகரை வேலன் அண்ணாச்சி சொன்னா மாதிரி “மிதவாதி”
நற்குடி பத்தியெல்லாம் எழுத மாட்டேன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Porkodi (பொற்கொடி) said...

சார்,

ஐ வாஸ் ஊரில் இல்லை. ஸொ ப்ளீஸ் க்ராண்ட் மீ லீவ் ஃபார் யெஸ்டர்டே (& டே பிஃபோர் யெஸ்டர்டே & டுடே & டுமாரோ).

போங்கய்யா.. பதிவு போடுவாரு முதல்ல துப்பிடலாம்னு தேவுடு காக்கற அன்னிக்குலாம் ஒண்ணூமே இருக்காது ஒரு நாள் வரலைன ஆட்டமே முடிஞ்சு இருக்குமாம்..

Porkodi (பொற்கொடி) said...

என்னது பஹாமாஸா? அதான் பதிவு போட போறது இல்லில? அப்போ ஃபோட்டோவை போட்டுட்டு அடுத்த ஊரு பீச்சுனு சொல்லிட்டு போறது? என்னாத்துக்கு என் வயித்தரிச்சலையும் கொட்டிக்கறீங்க? :)

sriram said...

பொற்கேடி,
துப்புறதுக்குத்தான் பதிவு போடுங்க பதிவு போடுங்கன்னு கூவிக்கிட்டு இருந்தீங்களா?
என்னா கிரிமினல் மைண்ட்டு??

உங்க வயித்தெரிச்சல கொட்டிக்கறதுல இருக்குற சொகமே அலாதி, அதான்...

நெக்ஸ்ட் மீட் பண்றேன்

Porkodi (பொற்கொடி) said...

pinna enna maalai pottu varaverkava post poda solrom?? :D

Happy new year Sriram!

sriram said...

உங்க டகால்டி வேல நல்லா புர்ஞ்சிக்கிட்டேன்... நல்லா இருங்க:):)

உங்களுக்கும் உங்க ரங்குவுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

sriram said...

Thanks and Wish you the same Sri

Asir said...

Ji...

Good Post..

sriram said...

நன்றி ஆசிர்

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு நைனா, என்னைய மாதிரி புதுச்சா டேமேஜர் ஆனவங்களுக்கு ரொம்ப ஹெல்பு ஆவும் வாத்தியாரே. நன்றி சொல்லிக்கினு ஜகா வாங்கிக்கிறேம்பா. அப்ப அப்ப இது மாதிரி அட்வைஸ்சு பண்ணுப்பா. ஆபிஸ்ல ரொம்ப யூஸ் ஆவும். நன்றி.

sriram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பித்தனின் வாக்கு

Paleo God said...

ஹாலிவுட் பாலா said...
சார்,

ஐ வாஸ் ஊரில் இல்லை. ஸொ ப்ளீஸ் க்ராண்ட் மீ லீவ் ஃபார் யெஸ்டர்டே.

-பாலா//

nice to meet u Sri..
நான் பாலா சாரோட 'தூரத்து' friend .. :) nice post.:

sriram said...

நன்றி பலா பட்டறை..
Pleasure knowing you

Porkodi (பொற்கொடி) said...

neenga photo podradhukulla naane bahamas poitu vandhuruven pola.. :D aaapppy new year!

ஆதி மனிதன் said...

அப்பாடா வாத்தியார் இல்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தோம். அப்படின்னு சொல்லுவோம்னு நினைச்சிங்களா? இல்லவே இல்லை.

இன்று கூட எங்கே ஆள காணோம்னு ஒரு பின்னூட்டம் போடலாம்னு தான் வந்தேன். Welcome back and write more.

sriram said...

நன்றி ஆதி மனிதன்
நன்றி ஹேராம்

Jaleela Kamal said...

நானும் வந்து வந்து பார்த்துட்டு ஓய் விட்டேன், பதிவு எதுவும் ரொம்ப நாளா இல்லை.

சரியான பதிவு நச்சுன்னுசொல்லி இருக்கீங்க. புத்தாண்டு வாழ்த்துக்கள் நேரம் கிடைக்கும் போது எங்க பக்கமும் வந்து சொல்லுங்கள்.

Porkodi (பொற்கொடி) said...

enna bahama photos varave matengudhu?

Suganya said...

Just got into your blog and I really liked it. Glad I came here. I've read your post about H1B and I must say, you are the first one I've heard saying "Go for it". I second you on the "Salesmen" story.

Anonymous said...

unga postai padichooney orey kosuvathiyaa poochu, nalla post...:)

Polisamiyar