Friday, April 2, 2010

டாப் டென் படங்கள்

தருமி ஐயாவோட இந்த பதிவ படிச்ச உடனே ரூமெல்லாம் போடாம ஒக்காந்து யோசிச்சேன் - நான் இது வரை பார்த்த தமிழ் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த 10 படங்கள் எதுன்னு.

நானெல்லாம் ஒரு காமடி பீஸு, என்னை யாரும் தொடர் பதிவு எழுத கூப்பிடமாட்டங்க, அதனால நானே ஜீப்பில ஏறி இந்த டாப் டென் பதிவ போடறேன்.

இந்த பத்துப் படங்கள் தமிழ்த்திரையுலகின் மிகச் சிறந்த படங்கள்னு அர்த்தமாகாது, நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இவை.

1. அன்பே சிவம்

2. மொழி

3. மூன்றாம் பிறை

4. நாயகன்

5. எதிர் நீச்சல்

6. தவமாய் தவமிருந்து

7. பாட்ஷா - இத விட சிறந்த எண்டர்டெயினர் தமிழில் நான் இதுவரை பார்க்கவில்லை

8. ஆண் பாவம்

9. முதல்வன்

10.ரிதம்.

பம்பாய், சேது, மைக்கேல் மதன காம ராஜன், சலங்கை ஒலி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களும் நான் மிகவும் ரசித்தவை. But they did not make it to my top 10.


இதைப் படிக்கும் அனைவரையும் அவர்களுக்குப் பிடித்த பத்து படங்களை பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

43 comments:

அநன்யா மஹாதேவன் said...

வழக்கமா பதிவு போடுறவங்களைத்தான் தொடர் பதிவுக்கு கூப்பிடுவாங்க. 6 மாசத்துக்கு ஒரு பதிவெல்லாம் போட்டா எப்புடி? அடுத்து புதுசா ஒரு பதிவு போட்டு உங்களைத்தான் தொடர் பதிவுக்கு கூப்பிடுவேன்! நல்ல லிஸ்டு. உங்க செகண்டு லிஸ்டு தான் என் ஃபேவரைட்டு! ரசனை மாறுபடும்.

Jaleela said...

எல்லாமே நல்ல தேர்வுகள். பாட்ஷா படம் கேட்கவே வேண்டாம்,

Palayking said...

Good Collection

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

டாப் டென்ல என்னோடதும் ஒரு ஏழு இருக்குங்க ..:)

தக்குடுபாண்டி said...

//நானெல்லாம் ஒரு காமடி பீஸு, என்னை யாரும் தொடர் பதிவு எழுத கூப்பிடமாட்டங்க, அதனால நானே ஜீப்பில ஏறி இந்த டாப் டென் பதிவ போடறேன்//
நாட்டாமை! என்ன இது நாங்க எல்லாம் இருக்கும் போது இப்படி நீங்க சொல்லலாமா?? எத்தனை கஷ்டமான கேஸுக்கு எல்லாம் நீங்க பஞ்சாயத்து பண்ணியிருக்கீங்க!!!....:) உங்களோட மிச்ச பெருமைகளை கேடியும், டுபுக்கு அண்ணாச்சியும் வந்து சொல்லுவாங்க....:)

என்றும் வம்புடன்,
தக்குடு

sriram said...

அநன்யா... அப்ப மொத லிஸ்ட்ல இருக்குற எந்த படமும் உங்க லிஸ்ட்ல இல்லயா?

sriram said...

நன்றி ஜலிலா..
கமல் ரசிகனான எனக்கே மிகவும் பிடிச்ச படம் பாட்ஷா, ரஜினி ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழா

sriram said...

நன்றி Palayking

sriram said...

நன்றி ஷங்கர், ஒத்த ரசனை குறித்து மகிழ்ச்சி..

sriram said...

யோவ் தக்குடு, நாட்டமைன்னு சொன்னதோடு மட்டுமில்லாம கோத்து வேற விடறியா..

நல்லா இருங்கடேய்ய்ய்ய்

rathinamuthu said...

தங்களின் டாப் டென் படங்கள் எனக்கும் பிடித்தவையே, எனக்கு பிடித்த்த படங்கள்
அன்பே சிவம், மைக்கேல் மதன காமராஜன், சர்வர் சுந்தரம், மொழி, பாமா விஜயம், எதிர் நீச்சல், தில்லானா மோகனாம்பாள், ஒரு தலை ராகம், நினைத்தாலே இனிக்கும், அலைபாயுதே, இது வரிசைப்படி இல்லை, சட்டென்று நினைவில் வந்தவை,
எனக்கு இன்னும் நிறைய படங்கள் பிடிக்கும் பாச மலர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், நாடோடிகள், இன்னும் பல.
நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகி்றீர்கள், தினமும் வந்து செல்கிறேன் ஏமாற்றத்துடன்.
தொடரந்து எழுதுங்கள்.

கே.ரவிஷங்கர் said...

நீங்கள் ரசிப்பதில் நாகேஷ் படங்களும் வருகிறது.சந்தோஷம். அவர் நடித்து பிரபலமாகாத,ஹீரோவாக நடித்த, ஒரு படம்தான் சோப்பு,சீப்பு,கண்ணாடி.1968.

அட்டகாசம்.

இதைப் பற்றிய பதிவு படிக்க:

http://raviaditya.blogspot.com/2010/04/blog-post.html

R.Gopi said...

ஸ்ரீராம்...

டாப்-10 படங்கள் லிஸ்ட் சூப்பர்....

அப்படி என்ன, நமக்கு பிடிச்சத 10க்குள்ள அடக்கிட முடியுமா என்ன??

ஆதிமூலகிருஷ்ணன் said...

இந்த பத்துப் படங்கள் தமிழ்த்திரையுலகின் மிகச் சிறந்த படங்கள்னு அர்த்தமாகாது, நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இவை.//

இதச்சொல்லாட்டி நாங்க தப்பா எடுத்திருப்போமே பாஸ்.. ஹிஹி.!

sriram said...

தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்க்கும் நன்றி ரத்த்தின முத்து ஐயா..
உங்களை தினமும் ஏமாற்றிக் கொண்டு இருந்ததுக்கு Sorry, சரக்கு இல்லாததே எழுதாதமைக்கு காரணம், கூகிளாண்டவர் துணையோடு ஏதாவது பாத்து எழுதறேன்

sriram said...

அந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று ரவிஷங்கர்.

sriram said...

வாங்க பிரபலம்..
நீங்க அந்த மாதிரியெல்லாம் நெனைக்கக் கூடிய ஆள் இல்லையே...

தருமி said...

மன்னிக்கணும்.

பெரிய மனசு பண்ணி நீங்களே ஒரு பதிவு போட்டதற்கு நன்றி.

ஒண்ணு பண்ணுங்களேன் .. இந்த லிஸ்ட் மட்டும் பின்னூட்டத்தில போட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கும். மாஸ்டர் லிஸ்ட் ஒண்ணு ரெடி பண்ணலாமே!

தருமி said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

டாப் டென்ல என்னோடதும் ஒரு ஏழு இருக்குங்க ..:)//

நீங்களும் வாங்களேன் .....

ஜாக்கி சேகர் said...

இந்த லிஸ்ட்ல ஆண்பாவம் நான் எதிர்பார்க்காத ஒன்று...எல்லாமேம அற்புதம்..

sriram said...

நன்றி ஜாக்கி
ஆண்பாவம் - எனக்கு மிகவும் பிடித்த முழு நீள நகைச்சுவைப் படம்.
Comedy Category க்கு என்னோட சாய்ஸ் அதுதான்

sriram said...

தருமி ஐயா..
எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு, இதில் உங்க தவறென்ன??

உங்க பக்கத்திலேயும் இதை போட்டுட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

My days(Gops) said...

அன்பே சிவம் எனக்கும் புடிக்கும் :) ... நல்ல கலெக்ஷன்ஸ்

//சரக்கு இல்லாததே எழுதாதமைக்கு காரணம், கூகிளாண்டவர் துணையோடு ஏதாவது பாத்து எழுதறேன்//

ஏற்கனவே எழுதினதை பார்த்து எழுத போறீங்கனு சொல்லுங்க?

sriram said...

கோப்ஸ், இப்படியெல்லாம் பப்ளிக்ல உண்மையைப் போட்டு ஒடைக்கப் படாது..

kavinsandron said...

எனக்கு இதுடன் சேர்த்து கடலோரக் கவிதைகளும் பிடிக்கும்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
sriram said...
This comment has been removed by the author.
Porkodi (பொற்கொடி) said...

soober list boss! (unga baani thaan :P)

sriram said...

நன்றி கேடி

AKKAPOR said...

Sri Ram sir your top ten has 6 of mine.
Rest four.... That's Ok sir

அப்பாவி தங்கமணி said...

ரூமெல்லாம் போடாம யோசிச்சே இப்படியா... ஆனாலும் சூப்பர் டாப் 10 லிஸ்ட் தான்... நெறைய அதில் என்னுடைய டாப் 10 லும் வரும்.. அப்போ அப்போ போகும்..... மறுபடியும் வரும்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பட்டாபட்டி.. said...

அய்.. எனக்கு பிடித்த 7 படங்கள் உங்கள் லிஸ்டில் இருக்கு சார்...

( ஏன் சார் மகாநதி பிடிக்கலையா..)

Madumitha said...

பத்தும் முத்து.
கொஞ்சம் முன்னே பின்னே
மாறினாலும்.

sriram said...

நன்றி அக்கப்போர்
அந்த ஆறு எவைன்னு சொல்லுங்களேன்

sriram said...

நன்றி அப்பாவி தங்கமணி

sriram said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பட்டாபட்டி..
மகாநதி - பிடிக்கும், T20(அதுதாங்க டாப் 20) லிஸ்ட் போட்டா இடம்பிடிக்கும்

பட்டாபட்டி.. said...

@sriram said...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பட்டாபட்டி
//

சார்ர்ர்ர்ர்.... இது முதல் வருகையில்லை..
உங்கள் ப்ளாக்கின் ரெகுலர் வாசகன் நான்...

முக்கியமா, உங்கள் பதிவு, ”நல்ல மேனேஜரின் நற்குணங்கள்”னை, என்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்துள்ளேன்..

sriram said...

நன்றி பட்டாபட்டி,
மொதோ வாட்டின்னு நெனச்சிட்டேன், மன்னிக்கவும்

Anonymous said...

Nattami

etho vanthuviten..

am the 41th..

hmm

nalla erkku...padhiu..

sangathila meetingla erukeknn....

apprum vanthu pakren..

valga valamudan
v.v.s
complan surya

Priya said...

எல்லாமே சிறந்த படங்கள்... நல்ல தேர்வு!

Insightful Instincts said...

Sabaapathi, Alai payudhe (all-time favourite romantic movie), anjali, server sundaram, mudhalvan, yedhirneechal, mozhi, anbe sivam, kaadhala kaadhala, thangapadhakam (comedy track alone),.........