Monday, April 26, 2010

டாலர் தேசம் 1

நானென்ன பா.ரா வா? இந்த டாலர் தேசம் தொடருக்கு வேற யாராவது முன்னுரை எழுத?

நான் வலைப்பூக்கள் பக்கம் வர ஆரம்பிச்சது 2006ல். மொதல்ல படிக்க ஆரம்பிச்சது டுபுக்கின் எழுத்துக்களை. அதில் இம்ப்ரெஸ் ஆகி இன்னும் பல தளங்களைப் படிக்க ஆரம்பிச்சேன்.

2007, 2008ல பல வலைப்பூக்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பிச்சேன், பின்னூட்டப் பதிவராகவே பல இணைய எழுத்தாளர்களுக்கு (இப்போ இந்த Title தான் ஃபேஷன்ல இருக்கு) அறிமுகம் ஆனேன். என்னோட பின்னூட்டங்களைப் பாத்த சில நண்பர்கள் என்கிட்ட கூட சரக்கு இருக்குறதா (தப்பா) நெனச்சி என்னையும் ப்ளாக் தொறக்கச் சொன்னாங்க.

யாருமே பத்த வெக்காமலே ஐஸ்லாண்ட் எரிமலை (அந்த எடத்தோட பேரின் ஸ்பெல்லிங் காப்பி பேஸ்ட் பண்றதுக்குக் கூட கஷ்டமா இருக்கு, எப்படித்தான் உச்சரிக்கராங்களோ?) பத்தி
எரிஞ்ச மாதிரி என்னோட எழுத்துத் தாகம் பத்தி எரிஞ்ச போது ஹாலிவுட் பாலாவும் வெட்டிப்பயல் பாலாஜியும் ரொம்ப கஷ்டப் பட்டு எனக்கு ப்ளாக்னா என்னன்னு புரிய வச்சு ஒரு பக்கத்தையும் வடிவமைச்சுக் கொடுத்தாங்க.(அதுக்காக வருத்தப் பட்டு முடிச்சிட்டாங்களா இல்ல இன்னும் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்களான்னு தெரியல)

கிறுக்குறதுன்னு முடிவான அப்புறம் என் பேச்சை நானே கேக்காம கண்ட படி கிறுக்கலாமுன்னு நெனச்சேன், ஆனா எனக்கு முன்னாடி இருந்த மிகப் பெரிய கேள்வி - என்ன எழுதுறது?
நானெல்லாம் எழுதுறேங்கறதே ஒரு காமடி இந்த அழகுல நான் எங்க காமடியா எழுதுறது? எனவே எனக்கு கொஞ்சூண்டு தெரிஞ்ச அமெரிக்கன் விசா, வேலை வாய்ப்பு,Green Card, Spoken English, Personality Development பத்தி எழுதலாமுன்னு ஆரம்பிச்சேன். ஒரு சில பதிவுகள் மட்டுமே எழுதிய நிலையில் ஏதேதோ இலக்கில்லாம எழுதினேன். எழுத நேரமிருந்தாலும் என் சோம்பேறித்தனத்தினால் எந்த ஒரு தலைப்பைப் பத்தியும் தொடர்ந்து எழுதல.


இப்போ நான் சொல்லப் போற விசயம் எப்பவுமே நடக்கறதுதான். இருந்தாலும் கடந்த சில வாரங்களில் நடந்த சில பல நிகழ்வுகள் என்னை இந்த தொடர் எழுத வச்சிருக்கு.

1. வளைகுடா நாட்டில் கணணித்துறையில் இல்லாத ஒரு பதிவுலக நண்பர் ஒரு நாள் சாட்டில் வந்து SAP படிக்கலாமுன்னு இருக்கேன், அமெரிக்காவில் SAP இல் வேலை வாய்ப்புக்கள் எப்படி இருக்குன்னு கேட்டார். கணணித்துறையில் வேலை பாக்கும் நண்பர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் 10-15 வருட அனுபவத்தை விட்டு விட்டு துறை மாறத் துணிந்த நண்பரை Discourage செய்தேன்.

2. சீமாச்சு அவர்களின் தோழி அவரிடமிருந்து என் கைப்பேசியின் எண் வாங்கி சென்ற வார இறுதியில் பேசினார். இந்தியாவில் நல்ல கல்லூரியில் B.E Mechanical முடித்து,
அமெரிக்காவில் M.S Mechcalincal Engineering படித்த அவருக்கும் Software Developmentக்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது. அவரது கேள்வி - நான் எப்படியாவது அமெரிக்காவில் ஐடியில் செட்டிலாகணும், வழி சொல்லுங்க என்பதே. அவருக்கு அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்கிச் சொன்னேன்.

3. அமெரிக்காவில் வேலை செய்து வரும் பல நண்பர்களுக்கு H1B மற்றும் Green Card பத்தி பல விஷயங்களில் தெளிவின்மையை கண்டிருக்கிறேன். அதற்கு அவர்களையும் குறை
சொல்ல முடியாது, ஏன்னா அவங்க வேலை செய்யும் கம்பெனியில் Transparency என்பது மருந்துக்குக் கூட கிடையாது. H1B விசாவில் வேலை செய்யும் ஒரு கணணி பட்டதாரிக்கு அவருக்கு உள்ள உரிமைகள் பத்தி கூட சமயத்தில தெரியரதில்ல. சிங்கப்பூருக்கும் வளைகுடா நாடுகளுக்கும் செல்லும் கட்டிடத் தொழிலாளிகள் மாதிரி கன்சல்டன்சிகாரன் கூப்பிட்டான் இங்க வந்துட்டேன், ஆனா வேலை கிடைக்கல / சம்பளம் கொடுக்கலேன்னு புலம்புவதை பல முறை பார்த்திருக்கிறேன்.

4. சென்னையில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர்,என்னுடன் டெல்லியில் பணிபுரிந்தவர்,என் மாமா அனைவருக்கும் ஒரே கேள்வி - என் மகன் B.E படிச்சி முடிச்சிட்டான், அவனுக்கு அமெரிக்காவில் ஐடில ஒரு வேலை வாங்கி கொடுப்பியா என்பதுதான்.

5. இன்னொரு பதிவுலக நண்பர் புகைப்படத்துறையில் நிபுணர், அவருக்கும் ஒரு கேள்வி - தான் அமெரிக்கா எப்படி வருவது? வந்தா கேமரா மேன் வேலை கெடைக்குமா???

இப்படி நம்மில் பலருக்கும் அமெரிக்கா பற்றி ஒரு மாயை இருக்கு (வெளிய இருக்குறவங்களுக்கு எப்படி உள்ள வர்றது மற்றும் உள்ள வந்தவங்களுக்கு எப்படி இங்க நிரந்தரமா தங்கறது) இதுக்குக் காரணம் ஒரு டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய். 1 $ = 1 ரூபாய் அதுகூட வேணாம் 1$ = 10 ரூபாய்னு ஆச்சுன்னா நம்மில் பல பேருக்கு அமெரிக்க ஆசை போயிடும். அதனால தான் பா.ரா உபயோகித்த தலைப்பாக இருந்தாலும் இதையே இந்த தொடருக்கு வச்சிருக்கேன்.

US Immigration (H1B, Green Card Process), Full time - Consulting jobs in USA, Study and work in USA, Living in USA
பத்தியெல்லாம் எனக்குத் தெரிஞ்ச கொஞ்ச விஷயங்களை எழுதலாமுன்னு இருக்கேன். இது பத்தி சம்பந்தப் படாதவர்களுக்கு இது போரடிக்கும், நான் எது எழுதினாலும்தான் போரடிக்கும்,
இது சில பேருக்காவது உபயோகமா இருக்கும் எனவே பொருத்தருள்க.

மொதல்ல நல்ல விஷயத்தைப் பத்தி சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்னால் இருந்த உள்நுழைவு பிரச்சனை பத்தி நம்ம பழமை பேசி இந்த இடுகையில் எழுதியிருந்தார், அதிலேயே இது பத்தி தெளிவு கெடச்சவுடனே எழுதறேன்னு சொல்லியிருந்தேன். என்னோட சோம்பேறித்தனத்தால இன்னிக்கு வரை எழுதல, அது பத்தியும் Current Job Market பத்தியும் அடுத்த இடுகையில எழுதறேன். Stay Tuned for the next post.. Adios


டிஸ்கி : நான் எழுதத் துணிந்த சப்ஜெக்ட் ரொம்பப் பெரிசு.எதப் பத்தி எழுதறதுன்னு யோசிச்சிக்கிட்டே எதப்பத்தியும் எழுதாம காலத்தை ஓட்டிடுவேன் நான், எனவே நீங்க உங்களுக்கு இருக்கும் கேள்விகளை பின்னூட்டத்திலோ அல்லது தனிமடலிலோ அனுப்பினால், அதுக்கு பதில் சொல்லும் சாக்கில் ஒரு தலைப்பை கவர் பண்ணிடுவேன்.
அதுக்காக பாஸ்டன்ல Strip Club எங்க இருக்குன்னெல்லாம் கேக்கப் படாது...சொல்லிட்டேன்..

71 comments:

Ravi said...

மிக உருப்படியான விஷயம் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆவலுடன் உங்கள் அடுத்த போஸ்டை எதிர்பார்க்கிறேன்.

sriram said...

நன்றி ரவி..
Hoping to do justice to this topic this time

ஜாக்கி சேகர் said...

5. இன்னொரு பதிவுலக நண்பர் புகைப்படத்துறையில் நிபுணர், அவருக்கும் ஒரு கேள்வி - தான் அமெரிக்கா எப்படி வருவது? வந்தா கேமரா மேன் வேலை கெடைக்குமா???//

யாருப்பா அது-? இப்படி கூட ஆசைபடுவானுங்கால என்ன?

ஜாக்கி சேகர் said...

அதுக்காக பாஸ்டன்ல Strip Club எங்க இருக்குன்னெல்லாம் கேக்கப் படாது...சொல்லிட்டேன்.. //

இன்கேஸ் தலையில எழுதி இருந்து.. நான் பாஸ்டன் மண்ணை மிதிச்சா... நீ சொல்லவே வானாம்... எனக்கு மூக்கு வேர்த்துடும்...

ஜாக்கி சேகர் said...

ஹாலிவுட் பாலாவும் வெட்டிப்பயல் பாலாஜியும் ரொம்ப கஷ்டப் பட்டு எனக்கு ப்ளாக்னா என்னன்னு புரிய வச்சு ஒரு பக்கத்தையும் வடிவமைச்சுக் கொடுத்தாங்க.(அதுக்காக வருத்தப் பட்டு முடிச்சிட்டாங்களா இல்ல இன்னும் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்களான்னு தெரியல)//

அவுங்க ரெண்டு பேர் மட்டும் என் கைல கிடைக்கட்டும்.. அப்புறம் பேசிக்கிறேன்..

sriram said...

//யாருப்பா அது-? இப்படி கூட ஆசைபடுவானுங்கால என்ன?//

இதிலென்ன தப்பு ஜாக்கி.. அத்தனைக்கும் ஆசைப்படுன்னு சொல்ற ஜாதி நானு (இந்த வாக்கியத்தில “ஜாதி” க்கு அர்த்தமே வேறு - மறுபடியும் ஆரம்பிச்சிடாதீங்கப்பா)

ஆசைப்படுவது தவறுன்னு நான் எங்கேயும் சொல்லவே இல்லயே ஜாக்கி? உனக்கு எப்படி அப்படி ஒரு தொனி தெரிந்தது??

என்னோட வேலை அவர்களின் ஆசைக்கும் ரியாலிடிக்கும் உள்ள இடைவெளியை சுட்டிக்காட்டுவதே..
ஆசையை தப்புன்னு சொல்ல நான் யாரு...

sriram said...

//இன்கேஸ் தலையில எழுதி இருந்து.. நான் பாஸ்டன் மண்ணை மிதிச்சா... நீ சொல்லவே வானாம்... எனக்கு மூக்கு வேர்த்துடும்..//

சீக்கிரம் வா ஜாக்கி, நீதான் எனக்கு அந்த இடத்தை அடையாளம் காட்டணும்

sriram said...

//அவுங்க ரெண்டு பேர் மட்டும் என் கைல கிடைக்கட்டும்.. அப்புறம் பேசிக்கிறேன்..//

ஏன் இந்த கொலை வெறி??

ஜாக்கி சேகர் said...

சீக்கிரம் வா ஜாக்கி, நீதான் எனக்கு அந்த இடத்தை அடையாளம் காட்டணும்//

அடப்பாவி நிச்சயமா உனக்கு அந்த இடம் தெரியவே தெரியாதா?

ஸ்ரீராம் பேர் இருந்தா.. அவுங்க ஏகபத்தினி விரதனா இருப்பாங்கன்னு எல்லாம் என்னல நம்ப முடியாதுப்பா...

ஜாக்கி சேகர் said...

ஆசைப்படுவது தவறுன்னு நான் எங்கேயும் சொல்லவே இல்லயே ஜாக்கி? உனக்கு எப்படி அப்படி ஒரு தொனி தெரிந்தது??

என்னோட வேலை அவர்களின் ஆசைக்கும் ரியாலிடிக்கும் உள்ள இடைவெளியை சுட்டிக்காட்டுவதே..
ஆசையை தப்புன்னு சொல்ல நான் யாரு...//

ஸ்ரீ அது பகடியா கேட்ட கேள்வி அது...

வெட்டிப்பயல் said...

ரொம்ப நாளா எதிர்பார்த்த தொடர்... தலைப்பை மாற்றிவிட்டால் பின்னால் வரும் குழப்பத்தை தவிர்க்கலாம் :)

ஜாக்கி,
எப்படியும் என்னை விட மொக்கையாவா ஸ்ரீராம் எழுதிடப் போறாருனு ஒரு தைரியம் தான் :-)

Madumitha said...

எழுதுங்க ஸ்ரீ.
//நானெல்லாம் எழுதறேங்கறதே
காமெடி//
நல்லாத்தான் எழுதுறீங்க.
தன்னடக்கம் கூடத்
திறமையின்
வெளிப்பாடுதான்.

anura said...

நல்ல பதிவு.....டாலர் தேசம் தொடருக்காக வெயிட்டிங்க்!பூங்கொத்து!

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு சார். தொடருங்கள்.

அநன்யா மஹாதேவன் said...

அண்ணாத்தே,
நீங்க ஆரம்பிச்சதே பெரிய சந்தோஷம். அடுத்தடுத்த பதிவுகள் வரட்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Palay King said...

Ji..

Come on..


மிக உருப்படியான விஷயம் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆவலுடன் உங்கள் அடுத்த போஸ்டை எதிர்பார்க்கிறேன்.


repeat

ஆதிமூலகிருஷ்ணன் said...

சின்சியராக எழுதினீர்களானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது ஒரு பெரிய விஷயமாகவும் அமையலாம். வெட்டிப்பயல் சொல்வது போல தலைப்பை மாற்றிவிடுங்கள்.!

Senthil said...

keep going, i guess many of us are interested on this topic

ILA(@)இளா said...

Please start this soon, I drafted for new series for New USA arrivals. we may go hand by hand

sriram said...

// வெட்டிப்பயல் said...
ரொம்ப நாளா எதிர்பார்த்த தொடர்... தலைப்பை மாற்றிவிட்டால் பின்னால் வரும் குழப்பத்தை தவிர்க்கலாம் :)

ஜாக்கி,
எப்படியும் என்னை விட மொக்கையாவா ஸ்ரீராம் எழுதிடப் போறாருனு ஒரு தைரியம் தான் :-)//

நன்றி பாலாஜி.. வேறென்ன பேர் வைக்கலாமுன்னு சொல்லுங்க..

sriram said...

// Madumitha said...
எழுதுங்க ஸ்ரீ.
//நானெல்லாம் எழுதறேங்கறதே
காமெடி//
நல்லாத்தான் எழுதுறீங்க.
தன்னடக்கம் கூடத்
திறமையின்
வெளிப்பாடுதான்.//

நன்றி மதுமிதா..தன்னடக்கமெல்லாம் இல்லீங்க, இருக்கும் சரக்கின் அளவு எனக்குத் தெரியும்

Vidhoosh(விதூஷ்) said...

ஏற்கனவே சொல்லி இருக்காங்கதான், இருந்தாலும் தலைப்பு வேற மாதிரி வச்சுடுங்க.

ரொம்ப பயன் தரக்கூடிய பதிவாக இருக்கும் இது. வாழ்த்துக்கள். ரொம்பவே எதிர்பார்க்கிறேன்.

முக்கியமா, professional அல்லாத, ஐ.டி. துறை சாராத, வெகு சாதாரண படிப்பு படித்த, spouse visa-வில் வந்த பெண், ஒரு நிலையில், இந்தியாவுக்கும் திரும்ப முடியாமல், அங்கேயே, வேலைக்கு போக வேண்டிய நிலை வந்தால் என்ன செய்ய முடியும்? அவளுக்கு என்ன மாதிரியான opportunities, legal commitments வரக்கூடும் என்பது போன்றவை.

sriram said...

வருகைக்கும், கருத்துக்கும், பூங்கொத்துக்கும் நன்றி அனுரா

sriram said...

நன்றி சரவணகுமார்

sriram said...

நன்றி Palay King

sriram said...

வாங்க பிரபலம்..

சின்சியரா எழுத முயல்கிறேன்..

நீங்களாவது ஒரு பேர் suggest பண்ணுங்களேன்.

sriram said...

நன்றி அனன்யா..

sriram said...

நன்றி செந்தில்

sriram said...

நன்றி இளா.. கண்டிப்பா ரெகுலரா எழுதறேன்.
கண்டிப்பா செய்யலாம் இளா, சீக்கிரம் இங்க வாங்க, சேர்ந்து நெறய செய்யலாம்

sriram said...

நன்றி விதூஷ்..
மூணு பிரபலங்கள் சொல்லிட்டீங்க - கண்டிப்பா பேர் மாத்திட வேண்டியதுதான், என்ன பேர் வைக்கலாம் - சொல்லுங்களேன்.

Spouse - H4 அல்லது L2 விசாவில் இருப்பார்கள், அது பத்தியும் ஒரு முழு இடுகை போடறேன், Lead கொடுத்ததுக்கு நன்றி

Vidhoosh(விதூஷ்) said...

அமெரிக்காவில் ஒரு கண்ணாடி வீடு அப்டீன்னு வையுங்க.

இப்படிக்கு
அப்பளம் :))

sriram said...

//அமெரிக்காவில் ஒரு கண்ணாடி வீடு அப்டீன்னு வையுங்க.//

புதசெவி..
கல்லெறிஞ்சு கண்ணாடி வீட்டை ஒடைக்கறமாதிரின்னு அர்த்தத்தில சொன்னீங்களான்னு தெரியல.

இந்தத் தொடரில் அமெரிக்காவைப் பத்தி உயர்த்தியோ தாழ்த்தியோ சொல்லப் போவதில்லை, Just facts and figures.

Vidhoosh(விதூஷ்) said...

facts and figures - என்பதனால்தான் அப்படி சொல்லி இருக்கேன். அங்கே இருப்பது இருக்காததும் நம் கையில் இருக்கும் 'கல்' பொறுத்துதான் என்பதால். :)

நீங்க இந்தியர்களை அடிப்படையாக வைத்து எழுதினால், இங்கிருந்து (இந்திய உறவினர்கள்) வெளியிலிருந்து பார்க்க பகட்டாய் இருக்கும். அங்கே இருந்தால் மட்டுமே தெரியும் transparency என்ற வாழ்கையின் நிர்வாணம். அதான் அந்தப் பெயர் பரிந்துரைத்தேன்.

நசரேயன் said...

நல்ல முயற்சி தலைவா.. தொடருங்கள்

Porkodi (பொற்கொடி) said...

காத்திருக்கிறேன்.

ஏத்தி தாழ்த்தி சொல்லப் போறது இல்லைன்னாலும் எனக்கு எனோ சுஜாதாவின் "கனவு தொழிற்சாலை" தான் சட்டுனு நினைவுக்கு வந்துது. அது இல்லைனா, "சக்கரவியூகம்"னு தோணுது.

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு முதல்முறை விசா ரிஜெக்ட் ஆனபோது எனக்கு நீங்கள் ஆலோசனை சொன்னது நினைவில் வருகின்றது. வாழ்த்துகள்.

:)

sriram said...

மறுபடியும் நன்றி விதூஷ்.
”கல்எரிதல்”, “உடைக்கறது” போன்ற பதங்கள் வேண்டாமென்று ஃபீல் பண்றேன்.

”கனவு தேசத்தில் கணணி வாழ்க்கை”
இதுமாதிரி வைக்கலாமா?

sriram said...

நன்றி நசரேயன்

sriram said...

நன்றி கேடி..
ரெண்டுமே நல்லா இருக்கு, கலா மாஸ்டர் மாதிரி சொல்லணும்னா - உங்க கிட்டேருந்து இன்னும் எதிர் பார்க்கிறேன்

sriram said...

நன்றி அப்துல்லா..
அது மாதிரி இன்னும் நெறய கேள்விகள் நெறய பேருக்கு இருக்கு, முடிந்த வரை தெளிவு படுத்தறேன்

இராமசாமி கண்ணண் said...

நல்ல முயற்சி. சீக்கிரம் தொடருங்கள்.

Palay King said...

Ji..

Good .. COngrats..

Waiting for Part 2

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கனவு தேசத்தில் கணிணி வாழ்க்கை - சூப்பர்!

நேர்த்தியாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. :)

அசத்துங்க தல!
:)

வால்பையன் said...

அடிக்கடி எழுதுங்க தல!

sriram said...

நன்றி ஷங்கர்.. Will try to live upto your expectation

sriram said...

எழுதறேன் அருண்

அப்பாவி தங்கமணி said...

உபயோகமான ஒரு பதிவு. நான் கனடால இருந்தாலும் US விசாஸ் etc பத்தி எத்தன வாட்டி கேட்டு இருந்தாலும் தெளிவான விளக்கம்/பதில் கெடைச்சதில்ல. Waiting to read your posts. Thanks

தலைப்பு இன்னும் தேடரீங்கன்னா சும்மா ஒரு suggestion "அமெரிக்கா - உள்ளும் புறமும்" (ரெம்ப ஓவரா இருக்கோ?)

அப்பாவி தங்கமணி said...

-

sriram said...

வாங்க அப்பாவி, கேள்விகளை கேளுங்க, முடிஞ்ச வரைக்க்கும் வெளக்கறேன்

வெட்டிப்பயல் said...

அமெரிக்க விசா... வாங்கிடு லேசா

அமெரிக்க விசா, கிடைப்பது லேசா?

பர்கர் பீசா... அமெரிக்கன் விசா

ஒபாமா.. உள்ள வரலாமா?

வந்தாரை வாழ வைக்கும் அமெரிக்கா!

sriram said...

நன்றி பாலாஜி, எல்லாமே சூப்பரா இருக்கு, அடுத்த இடுகை எழுதுறதுக்குள்ள முடிவு பண்ணிடறேன்

ஹாலிவுட் பாலா said...

வெளங்கிடும்....
.
.
.


-ன்னு தலைப்பு வைங்களேன்! ;)

Vidhoosh(விதூஷ்) said...

ஹாலி பாலா. எங்க ஆளையே காணோம்?

வெளங்கிடும்... டைட்டில் :)))

Vidhoosh(விதூஷ்) said...

http://pithatralkal.blogspot.com/2010/04/3.html

முகிலன் கூட எழுதிட்டு இருக்கார் பாருங்க. நல்லா இருக்குங்க.

வெற்றி said...

//5. இன்னொரு பதிவுலக நண்பர் புகைப்படத்துறையில் நிபுணர், அவருக்கும் ஒரு கேள்வி - தான் அமெரிக்கா எப்படி வருவது? வந்தா கேமரா மேன் வேலை கெடைக்குமா???//

இது ஜாக்கி அண்ணன் தான?எனக்கு தெரியுமே :))

வெற்றி said...

//Blogger ஹாலிவுட் பாலா said...

வெளங்கிடும்....
.
.
.


-ன்னு தலைப்பு வைங்களேன்! ;)//

ஹா ஹா ஹா :))

ambi said...

அடுத்த பகுதிக்கு வெய்டிஸ்.

கதவை திற, டாலர் வரட்டும்! (இந்த பேரை வெச்சு பாருங்க, கூட்டம் சும்மா அள்ளிக்கும்) :))

sriram said...

பாலாவுக்கு என்னாச்சின்னு தெரியல விதூஷ், நேத்து கூட போன் பண்ணேன், எடுக்கல
வெளங்கிடும் :)

முகிலன் எழுதுறது நல்லா இருக்கு..

வெற்றி - ஜாக்கி சேகர் கேமரா மேனா? எனக்குத் தெரியாதே?? வருகைக்கு நன்றி

ஓரிரு நாளில் வெளி வரும் அம்பி, கதவை திற, டாலர் வரட்டும் - super suggestion, நன்றி

SAKTHI said...

let s see!!!!!

sriram said...

Yes Sakthi lets wait and see :)

Madhuram said...

Sriram, I personally feel that if you write it in English it will be helpful for non-tamilians too.

For instance if somebody asks me a question regarding this subject I can refer him/her to your blog to get it clarified.

தக்குடுபாண்டி said...

நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி!

என்றும் வம்புடன்,
தக்குடு

(நாங்களும் டெம்ப்ளேட் பின்னுட்டம் கிரியேட் பண்ணி வச்சுருக்கோம்ல!!!...:))

sriram said...

மதுரம்,
தமிழே இங்க ததிங்கிணத்தோம் போடுது, இதுல இங்கிலிபீசு வேறயா??

வாய்யா தக்குடு, இத்தனை பேர் இது மாதிரி கெளம்பியிருக்கீங்க??

Madhuram said...

I can relate to this very much because naangalum GC kidaikka padaadha paadu pattu veruthu poi Canada vandhuttom. But no regrets for having come here. I feel at home here in Canada than I ever felt in the US. So maybe in our case it was good fate that we didn't get the GC.

I'm very sure that this series will be of immense help to people who are clueless about what's happening and how to go about it.

sriram said...

Thanks for your encouraging words Madhuram. I cannot ask for more if my scribblings are useful to some one. I have seen lot of IT folks like you who have no clue about their rights / H1B / GC etc. My knowledge on these are acquired out of need (I am still learning) and I thought I should share it with my friends.
Thanks for dropping by and for your kind words

Anonymous said...

America yenra Sorgapuri!

Vetrimagal said...

Very good post. Looking forward to your further posts.
As a parent, and as a responsible community member, I appreciate your tips. I will surely help youngsters who contact me on this topic.

Thanks.

LK said...

mayapuri - etho enaku terinjathu solren...
@thakkudu

ingayum comedya

SKumar said...

நானும் ஆவலுடன் இந்த தொடரை எதிர்பார்த்துக் கொண்டு உள்ளேன். இங்கு H1Bல் இருக்கும் மக்கள் வேறு technologies-ல் (ex. SAP/ Oracle Apps from .NET/Java/Testing technologies) வேலை தேட வேண்டும் என்றால் அதை படிப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் அதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் சொல்லுங்களேன்.

Rangan Kandaswamy said...

நீங்கள் எப்படி அமெரிக்கா சென்றீர்கள் என்பதை எழுதினாலே, பாதி விஷயம் தெரிந்துவிடும்.

நாஞ்சில் மைந்தன் said...

// இதுக்குக் காரணம் ஒரு டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய். 1 $ = 1 ரூபாய் அதுகூட வேணாம் 1$ = 10 ரூபாய்னு ஆச்சுன்னா நம்மில் பல பேருக்கு அமெரிக்க ஆசை போயிடும். அதனால தான் பா.ரா உபயோகித்த தலைப்பாக இருந்தாலும் இதையே இந்த தொடருக்கு வச்சிருக்கேன். //

இதுவும் ஒரு காரணமாக இருந்தாலும் நான் கேள்விப்பட்ட வரையில் பலர் கூறும் காரணம்... Comfortable lifestyle.