Tuesday, October 19, 2010

கனவு தேசத்தில் கணணி வாழ்க்கை பகுதி 3

பகுதி இரண்டில் நம்ம பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ சில விவரங்கள் கேட்டு பின்னூட்டம் போட்டிருந்தார்.

அப்பின்னூட்டம் : எந்த நகரங்கள் பணி புரிய +வாழ சிறந்த இடங்கள்.வீட்டு வாடகை என்ன செலவு ஆகும்? உணவு, குழந்தைகள் கல்வி கட்டணம் எவ்வளவு செலவு ஆகும் ( தோராயமாக). குறைந்த பட்ச ஊதியம் எவ்வளவு இருந்தால் அமெரிக்கா பணிக்கு வர வேண்டும்.

இந்த இடுகையில் இவை பத்தி எழுத ஆரம்பிக்கிறேன்.

விவரங்களுக்குள்ள போகும் முன்னே ஒரு டிஸ்கி : இங்கு சொல்லப் படுபவை என்னோட தனிப்பட்ட கருத்து மட்டுமே, மேலும் The suggested locations are only from the stand point of getting contract jobs while one works in Consulting under H1B Visa. Until Green Card, H1B will play a major role in every decision and having a project is imperative to keep the H1B alive.

1. வாழ / பணி புரிய சிறந்த இடங்கள் : அமெரிக்கர்களில் நிறைய பேர் ஒரே ஊரில் பிறந்து அங்கேயே வாழ் நாள் முழுதும் இருக்கின்றனர். இங்கு குடியேறியிருக்கும் மற்றவர்கள்தான் (குறிப்பாக இந்தியர்கள்) இடமாற்றத்தை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதுக்கு எனக்குத் தெரிந்து இரண்டு காரணங்கள் - 1. மேலே சொன்னது போல விசாவில் இருக்கும் வரை வேலையில் இருப்பதுதான் முக்கியம், எங்கு வேலை கெடைக்குதோ அங்க பொட்டி கட்டவேண்டியதுதான் 2. அமெரிக்காவில் எங்கிருந்தாலும் அது நமக்கு வெளி நாடுதான் - இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட ஒரே தூரம் தான். (ஒரே நேரம்தான்னு சொல்ல முடியல ஏன்னா அமெரிக்காவில் 4 Time Zone இருக்கு)

பொதுவா அமெரிக்காவில் வாழ சிறந்த இடங்கள் லிஸ்ட் வேணும்னா இணையத்தில நெறய இருக்கு, http://money.cnn.com/magazines/moneymag/bplive/2010/top100/
இந்த லிங்க்ல பாத்தீங்கன்னா பத்தென்ன நூறு இடங்களின் பட்டியலே இருக்கு.

இப்போ கன்சல்டிங்ல இருக்கும் தேசி மக்களுக்கு உகந்ததாக நான் கருதும் (நல்ல பாத்துக்கோங்க மக்கா முக்கியமா ஹாலி பாலா, இதுல ஃப்ளோரிடா இல்லாதது என்னோட கருத்து மட்டுமே) டாப் டென் இடங்களைப் பார்க்கலாம். அப்புறம் Cost of Living ல வாடகையை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்வேன். மாநில வரி தவிர மத்த விலைகள் ஓரளவுக்கு எல்லா இடத்திலும் ஒரே மாதிர்தான் இருக்கும். (எங்க போனாலும் அதே வால்மார்ட், அதே மேசீஸ், அதே டார்கெட் இன்ன பிற இன்ன பிற)

1. நியூ யார்க் நகரம் / நியூ ஜெர்சி : என்னை பொருத்த வரைக்கும் இந்த மெட்ரோ ஏரியாத்தான் வேலைகளின் தலை நகரம் என்பேன். NY / New York என்பது நியூ யார்க் மாநிலத்தைக் குறிக்கும், NYC / New York City என்பது உலகப் புகழ் நியூயார்க் நகரத்தைக் குறிக்கும் (ஆமா பச்சையம்மா கையில் தீப்பந்தம் பிடிச்சிக்கிட்டு நிக்குமே அதேதான்). ஹட்சன் நதி நியூயார்க் நகருக்கும் நியூ ஜெர்சி மாநிலத்தின் ஜெர்சி சிடிக்கும் இடையில் இருக்கு, NYC யும் NJ உம் சேர்ந்த ஒரு மெட்ரோ ஏரியா மிகப்பெரிய Job Market Area. இந்தப் பகுதியில இருக்குறவங்களுக்கு அடுத்தடுத்து ப்ராஜக்ட் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

சாதகங்கள் : மிக அதிக அளவில் இந்தியர்கள் இருக்குமிடம், இந்தியப் பொருட்களின் availability, அமெரிக்காவின் சிறந்த Public Transport System, வேலை வாய்ப்பு

பாதகங்கள் : மிக அதிக அளவில் இந்தியர்கள், குளிர், பனிப் பொழிவு, வாடகை அதிகம்.

2. கலிபோனிர்யாவில் - சான்ஃப்ரான்ஸிஸ்கோ / சன்னிவேல் / சனோசே (San Jose) பகுதி : இதுவும் மிக அதிக வேலை வாய்ப்பு உள்ள பகுதி மற்றும் இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதி + : வேலை வாய்ப்பு, மிதமான் சீதோஷண நிலை (வருடம் முழுதும் கிரிக்கெட் விளையாடலாம்), இந்தியர்கள் / இந்தியப் பொருட்கள் மற்றும் சன்னிவேலில் உள்ள இந்திய உணவகங்கள் (பாஸ்டன்ல சரவண பவன் இல்லாத கொடுமை எனக்குத்தான் தெரியும்)
- : மிக அதிக வாடகை

3. டெக்சாஸ் மாநிலம் - முக்கியமாக டல்லாஸ் (Dallas) ஏரியா : வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள ஏரியா. இங்கும் இந்தியர்கள், இந்தியக் கடைகள், உணவகங்கள் அதிகம்.
குளிர் தாங்காதுன்னு சொல்றவஙக்ளுக்கு நல்ல இடம், ஆனா வெயில் அதிகம். State Tax கிடையாது (உதாரணமா பாஸ்டன்ல் இருந்தா வருமான வரியில் 5 % State Tax)
மற்றும் மிகக் குறைந்த வாடகை (பாஸ்டன்ல 2BHK 1500 $ டல்லாஸ்ல 500 - 800 $) ஆகியவை சாதகங்கள். வெயில் ஒரு நெகடிவ் பாயிண்ட்.

4. சிகாகோ : Windy City என்றழைக்கப்படும் சிகாகோ என் பார்வையில் அடுத்த சிறந்த இடம். அழகான ஊர், மிக அதிக வேலை வாய்ப்புகள். குளிர், பனிப்பொழிவு, குளிர் காற்று என இயற்கைத் தொந்தரவு அதிகம், மிதமான வாடகை விகிதங்கள். ரெண்டு அழகான கோவில்கள் இங்க இருக்கு.

5. சார்ல்லெட் (Charlotte, North Carolina): சமீப காலங்களில் நெறய கம்பெனிகள் காலூன்றிய இடம் (Bank of America, Fidelity, Red Hat, Wachovia are a few to name). நெறய வேலை வாய்ப்புகள், அப்படியே வேலை கெடைக்கலனாலும் சீமாச்சு அண்ணனிடமோ, பழமை பேசியாரிடமோ சொன்னா ஒடனே வேலை போட்டுக் கொடுத்திடுவாங்க, ரெண்டு பேரும் மொதலாளிகளாக இங்க இருக்காங்க. அருமையான் வெதர், அதிகம் செலவு வைக்காத ஊர். One of my favorites.

6. பாஸ்டன் : ஐயா எங்க ஊர், எங்க ஊர். பாஸ்டன் பாலா, இளா போன்ற பிரபல பதிவர்கள் இருக்கும் ஊர், வெட்டிப்பயல் பாலாஜி இருந்த ஊர் அப்படின்னு ஏகப்பட்ட பெருமை
இந்த ஊருக்கு. இதுபோக Educational Capital of US ன்னு சின்னதாவும் ஒரு பெருமை இருக்கு. Financial Companies, Edu Institutions,
Insurance Companies, Pharma / Bio companies
ன்னு நெறய இருக்கு - வேலை வாய்ப்பு அதிகம். ஓரளவுக்கு நல்ல Public Transportation உள்ள ஊர். குளிர், பனிபொழிவு, அதிக வாடகை, மோசமான் ட்ராஃபிக் போன்றவை நெகடிவ் பாயிண்ட்ஸ்.

7. மின்னியாபொலிஸ் (minneapolis) : அமெர்க்காவின் Ice Box என்று சொல்லலாம், அவ்வளவு குளிர். இருப்பினும், நெறய கம்பெனிகள் இருப்பதால் (Target, United Health, Wells Fargo, Xcel Energy, Pepsi, 3M Etc) இங்கு நிறைய வேலை வாய்ப்புகள்.

8. Washington DC, Baltimore MD, some part of Virginia அடங்கிய DC Metro area : தலைநகரமும் அதன் அருகாமையில் இருக்கும் இடங்களும். புதுதில்லி, குர்கான், நொய்டா அடங்கிய மெட்ரோ ஏரியா மாதிரி. Government client concentrated area.

9. அட்லாண்டா

10. கொலம்பஸ், ஒஹாயோ (Columbus, OH)

இது என் பார்வையில் டாப் டென் இடங்கள், உங்க மதிப்பீடு வேற மாதிரி இருக்கலாம். எல்லா மாநிலங்களிலிருந்தும் எனக்கு வரும் வேலை வாய்ப்பு விவரங்களை வைத்து இதைத்
தொகுத்திருக்கிறேன்.

ராம்ஜி யாஹூ கேட்ட மத்த விவரங்கள் அடுத்த பகுதியில்..

Adios Amigos...

40 comments:

sriram said...

test

creativemani said...

நல்ல பகிர்வு ஸ்ரீ..
எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாள் ஆச்சு..
இப்போ Openings எல்லாம் எப்படி இருக்கு...
நிறுவனங்களே H1 Process செஞ்சு கொடுத்து recruit பண்ணிக்கறாங்களா? Can you please list the best job sites also?.. to get a job in US..

sriram said...

நன்றி மணி..
இப்போ நெறய Openings இருக்கு, ஆனா
இந்தியாவிலிருந்து recruit செய்வதில்லை

Vijiskitchencreations said...

ஸ்ரீராம் தாமதாமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நானும் உங்க ப்ளாகை தேடி ஒருவழியா வந்துட்டேனுங்கோ.

நல்ல பாஸ்டனை பற்றி எழுதியிருக்கிங்க.
நினைவு இருக்கா என்று தெரியல்லை.
அது தாங்க.www.vijisvegkitchen.blogspot.com
www.vijiscreation.blogspot.com
உஙக் தொலை பேசி எண்ணை எங்கோ எழுதி(பத்திராமா) பெட்டகத்தில் வைத்திருக்கேன். இது வரை அதை திறக்க கீ கிடைக்கவில்லை.
முடிந்தால் என்னோட ஐடிக்கு மீண்டும்.அனுப்பவும்.

sriram said...

நன்றி விஜி..
தனி மடல் அனுப்புங்க (nsriram73@gmail.com), கூப்பிடறேன்

Unknown said...

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் அகராதிப் படி (நிசமாவேங்க!), கணினி தான் சரியான வார்த்தையாம்.

நீங்க சொன்னதில், அநேகமாக உடன்படுகிறேன். அட்லாண்டாவில் தெலுகு மக்கள் நிறைய; வெயில் டெக்ஸாஸ் அளவு; சரவணபவன் இருக்கு. ஆனால், உங்க லிஸ்டில் பென்சில்வேனியாவையும் சேர்த்திருக்கலாம். நியுஜெர்சிக்குப் பக்கம் என்பதால், இந்தியர்கள் நிறைய/இந்தியப் பொருட்கள் கிடைக்கும்; கோவில்கள் இருக்கு; தமிழக உணவகங்களான சரவணபவன் / தேவி இருக்கு; நியுயார்க் போல வாடகை அதிகம் கிடையாது; நிறைய பேர் இங்கிருந்து நியுயார்க்ல வேலைக்குப் போறாங்க; பல மாநிலங்களூக்குப் பக்கத்தில் அமையக் கூடிய ஃபிலடெல்ஃபியா பக்கத்தில் குடியமர்ந்தால், வேலை வாய்ப்பும் நிறைய‌.

எதுவாயினும், வார நாட்களில் பயணம் செய்து வேலை செய்ய தயாராய் இருப்பவர்கள், நீங்கள் சொன்ன பல இடங்களில் எதிலும் வசிக்கலாம்.

நல்லா போயிட்டிருக்கு. கன்டினியூ!

அமுதா கிருஷ்ணா said...

அருமையான அமெரிக்க தகவல்கள்.

sriram said...

நன்றி கெக்கு பிக்கேணி..

பென்சில்வேனியா / கொலம்பஸ் - ரெண்டையும் பத்தாவது இடத்துக்கு கன்சிடர் பண்ணேன், எனக்கென்னவோ கொலம்பஸ்ல அதிகம் வாய்ப்புகள் இருப்பதாகப் பட்டது.

sriram said...

நன்றி அமுதா

குடுகுடுப்பை said...

டாலஸ் ஏரியாவில 500-800$ 2 பெட் ரூம் ஜங்க் அபார்ட்மெண்ட்தான் கிடைக்கும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயதில் இருந்தால் நல்ல பள்ளிகள் உள்ள இடத்தில் 1000 -1200 க்கு நல்ல அபார்ட்மெண்ட் கிடைக்கும்.

பயனுள்ள பதிவு, டாலஸ் தேசிகளுக்கு நல்ல தேர்வு என்பதில் ஐயமில்லை

sriram said...

தகவலுக்கு நன்றி குடுகுடுப்பை.
1000 டாலருக்கு டாலஸில் நல்ல அப்பார்ட்மெண்ட் கிடைக்குமே, பாஸ்டன்ல நல்ல அப்பார்ட்மென்டுக்கு 1500 க்கு மேல கொடுக்கணும்

ராம்ஜி_யாஹூ said...

நன்றிகள்.

நான் எதிர்பார்த்த/எதிர்பார்க்கும் பதிவின் உதாரணம்.

பட்டுகோட்டையில் இருக்கும் ஒரு மென்பொருள் பொறியாளர் சென்னை வேலை கிடைத்து வருகிறார். பெருங்குடியில் அலுவலகம்.

வாழ சிறந்த இடங்கள்.

சைதாபேட்டை, கிண்டி மடுவின்கரை, வேளச்சேரி, பள்ளிகரணை, சொலிந்கநலூர்

சைதாபேட்டை- தனி நபர் ரூம் வாடகை 1500, குடும்பத்துடன் இரண்டு படுக்கை அரை வீடு வாடகை 700௦. வாடகை முன்பணம் பத்து மாத வாடகை.

கிண்டி- தனி நபர் ரூம் வாடகை 130௦, இரண்டு படுக்கை அரை வீடு வாடகை 7௦௦௦,

வேளச்சேரி - தனி நபர் ரூம் 25௦௦, இரண்டு படுக்கை அரை 1௦௦௦௦,

சோளிங்கநல்லூர் ரூம் 1௦௦௦, இரண்டு படுக்கை 5௦௦௦.

சாப்பாடு ஸெலவ௪ தனி நபர் மாதம் 3௦௦௦, கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் 6௦௦௦

குழந்தை படிப்பு செலவு ஒரு குழந்தைக்கு மாதம் ௨௦௦௦

மின்சாரம், இணையம் செலவு மாதம் ௨௦௦௦.

minimum acceptable salary for a bachelor 14000. for a husband,wife,2kids- 25000.

sriram said...

நன்றி ராம்ஜி..

செலவு, சம்பள விவரம் : அடுத்த பதிவில் வருது..

Location : இதுக்கு இந்திய நகரங்களுக்கும், அமெரிக்க நகரங்களுக்கும் உள்ள வித்தியாசம் பத்தி சொல்லணும், சொல்றேன்.
In a nut shell : Locations are mentioned as City Based in India - Example Chennai City includes all the areas you mentioned and many more.
Imagine Just Parrys Corner and Mount Road are called Chennai and Saidapet is mentioned as Saidapet, Taminadu instead of Saidapet, Chennai - This is the basic difference.

எதுவுமே எழுதத்தெரியாமல் ஒக்காந்திருக்கும் எனக்கு லீட் மேல லீடா கொடுக்குறீங்க - நீங்க ரொம்பபபப நல்லவரு

ILA (a) இளா said...

சரி, அடுத்தப் பகுதி எப்போ?

sriram said...

//ILA(@)இளா said...
சரி, அடுத்தப் பகுதி எப்போ?//

வாங்க இளா, பெரியவங்க வந்திருக்கீங்க.. சீக்கிரமே எழுதறேன் இளா

Anonymous said...

//பாஸ்டன் பாலா, இளா போன்ற பிரபல பதிவர்கள் இருக்கும் ஊர்//
This is a Joke right?
Include Anony next time, who lives in the same town!

sriram said...

//Anonymous said... //பாஸ்டன் பாலா, இளா போன்ற பிரபல பதிவர்கள் இருக்கும் ஊர்//
This is a Joke right?//
No I mean it..

//Include Anony next time, who lives in the same town!//

I'm afraid I can't do that until I know who is that Anony.. Anonys can only be NOTORIOUS and not FAMOUS. Let me know if you need to class to understand the difference.

Anonymous said...

//Anonys can only be NOTORIOUS and not FAMOUS.//
Well NOTORIOUS B.I.G IS FAMOUS TOO...
எங்க கிட்டயேவா

sriram said...

//Anonymous said...
Anonys can only be NOTORIOUS and not FAMOUS.//
Well NOTORIOUS B.I.G IS FAMOUS TOO...//

Chris Wallace உன்ன மாதிரி முகமூடி போட்டுக்கிட்டுத் திரியல, அப்புறம் நான் போதைப் பொருள் வச்சிருந்துக்காக அரெஸ்ட் ஆனவர்களை Famous லிஸ்ட்ல வைக்குறது கிடையாது.

//எங்க கிட்டயேவா//
ஓ அப்போ நீ தனி ஆள் கிடையாதா? ஒரு குருப்பாத்தான் அலையறீங்களா??

தமிழ் அனானி said...

வேலையும், சம்பளமும் ஃப்ளோரிடாவில் கம்மியா இருக்கலாம். ஆனால் நம் தமிழ்நாட்டு சீதோஷணநிலையும், குறைந்த வாடகை, நோ ஸ்டேட் டேக்ஸ் மாதிரியான அட்வாண்டேஜும் இருக்கு.

ஹரிக்கேன் மட்டுமே ஒரு பெரிய தொந்தரவு.

ராம்ஜி எதுனா ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்ணப் போறாரா?

ரவி said...

Save பண்ணி வெக்கவேண்டியது..

ambi said...

யோவ் அண்ணாச்சி, நீர் எப்ப பதிவு போடறீர்னே தெரிய மாட்டேங்குது. :)

இப்படி உருப்படியா சீரியல் பதிவா போட்டு தள்ளும். :)

தனி மெயில் வந்துட்டே இருக்கு.

ambi said...

//அமெரிக்காவில் L1 / L2 / H4 விசாக்களில் இருப்பவர்களும் சுலபமாக Visa Transer with Status Change செய்யமுடியவில்லை, இதற்கெல்லாம் என்ன காரணம்??//

இந்த கேள்விய அம்போன்னு விட்டுபுட்டு அடுத்த டாபிக் தாவியாச்சா..? :P

naandhaan said...

கடந்த இரண்டு மணி நேரமா உங்கள் வ்லை பதிவை
ப்டித்து கொண்டு இருக்கின்ரேன்.

Yor are inspiring..
No
You inspire me.

sriram said...

தமிழ் அனானி..
நீங்க சொல்றத ஏத்துக்கறேன்,ஆனா உங்க ஊரு என்னோட டாப்டென்ல இல்ல

ராம்ஜியை கலாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன், அவுரு எனக்கு லீட் கொடுக்குற தெய்வம்

sriram said...

இந்த கிறுக்கல்களையெல்லாம் சேமிச்சு வச்சு என்ன பண்ண போறீங்க செந்தழல ரவி?

sriram said...

வாங்க அம்பி, எழுதிட்டாப் போச்சு

sriram said...

//இந்த கேள்விய அம்போன்னு விட்டுபுட்டு அடுத்த டாபிக் தாவியாச்சா..? :P//

இல்ல அம்பி, பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு அடுத்தது அதுதான்

sriram said...

நாந்தான்னா யாரு?? :)

Jokes apart, Thanks, you made my day..

Raja said...

ஸ்ரீ, இன்று சரவணபவனின் இரண்டாவது கிளை திறப்பு இங்கே (அட்லாண்டாவில்), ஒரு எட்டு வந்துட்டு போங்களேன்.

sriram said...

ராஜா
என் வயத்தெரிச்சல கொட்டிக்கிட்டீங்களா? இப்போ நல்லா போயி சரவண பவன்ல..... : )

Just Kidding. Thanks for stopping by and for leaving a note

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா.. கொஞ்சம் கண்ணசந்தா ஏகப்பட்ட ரீலு ஓடிடுச்சு போலிருக்கே.. கடசில எல்லாரும் கெஞ்சியும் செய்யாம அந்த அநானியால தான் அதிவேகமா ரிலீஸ் பண்றீங்க போல!! =)

Arun said...

Sriram Vs Anony ... nala eruku Game :) Mega serial madri poite eruku.. Anony kuda sadarana allu madri therila..

Good post.. keep it up ji..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பாஸ்டன்ல சரவண பவன் இல்லாத கொடுமை எனக்குத்தான் தெரியும்//
எங்க ஊர்ல இருக்கே...

Nice top 10 update.

Quick question (may be not a quick one. I have met some people here who moved from US as Green Card process is difficult. Why some can get it easyly and some don't? Is there any eligibility criteria or how does it work?

Is a green card holder allowed to live outside of US for longer term?

Here in canada, once you immigrate and stay here for 3 complete years, you can apply for citizenship. I assume it's not that simple in USA, right?

Too many questions? Okay okay, done....

sriram said...

பொற்கொடியக்கோவ்..
ஆமாக்கா ரெண்டு மூணு ரீல் ஓடிப்போச்சு, அனானி புண்ணியம் கட்டிகிட்டார்

sriram said...

நன்றி அருண்..

sriram said...

புவனாக்கா
ரெண்டாவது பகுதிக்கு லேட்டாப் போட்ட கமெண்டுக்கு நன்றி

இப்போ இந்த பகுதியில் கேட்ட கேள்விகளை வச்சே ஒரு பகுதி தேத்திடறேன், பதில் விரைவில்

Anonymous said...

//அமெரிக்கர்களில் நிறைய பேர் ஒரே ஊரில் பிறந்து அங்கேயே வாழ் நாள் முழுதும் இருக்கின்றனர்//

Muttrilum thavaru... Condos concept US lla thanga jasthi.. Athuvum namma alunga varrathukku munnadi ernthee....

One more cons as you listed in NY/NJ.. More Indians... Yenga... ungalukke over aa teriyillai.. Namakku namale thaan edhiri.. Intha madiri elutharathula..

Indians eel erukka koodathunna andartica poi erukka vendiyathu thaan...

swathii said...



usa visit visa consultants in hyderabad We are the Best USA B1 B2 Visa Consulants providing the Best service to all our Cusomters. We analysize the applicants profile and let them know how to
apply for the USA B1 B2 Visiting/Tourist/Business visa

maharishii said...


b1 visa consultants As we are the Top Visa services consultants for United States of America, We know exactly what documents you need to carry for your Visa interview as per your case. Most of the Applicants Not required to carry most of the Documents. Depends on Applicant to Applicant we will suggest the Documents to you to carry for your interview.