Tuesday, November 16, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை - பகுதி 5

முந்தைய பகுதிகள்
முஸ்கி (பின்னாடி போட்டா பின் குறிப்பு அல்லது டிஸ்கி, அப்போ முன்னாடி போட்டா முஸ்கி தானே?) : எந்திரன் பாக்காதவனும் என்கவுண்டர் பத்தி கருத்து சொல்லாதவனும்
தமிழனே இல்லைன்னு ஆகிப் போச்சு, அதனால நான் சொல்லிக் கொள்வது என்னன்னா..

நான் எந்திரன் பாத்துட்டேன், அதுக்கப்புறம் வ பார்த்தேன். வ பார்த்தப்புறம் எந்திரன் நல்ல படமா தெரிந்தது எனக்கு (இதை விடச் சின்னதா ரெண்டு பட விமர்சனம் யாராவது எழுதுங்க பாப்போம்)

அப்புறம் என்கவுண்டர் பத்தி என் கருத்து : இந்தியாவில் உள்ள எல்லா போலீஸ் தலைகளும் நீதிபதிகளும் ரூம் போட்டு பேசி ஒரு முடிவுக்கு வரலாம். எந்தெந்த கேஸ்களை நீதி மன்றத்துக்கு கொண்டு போகலாம், எந்தெந்த கேஸ்களை போலீஸே என்கவுண்டர் மூலம் தீர்க்காலாம் அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டுட்டா ஒவ்வோரு என்கவுண்டரின் போதும் நானூறு இடுகைகளிலிருந்து தப்பிக்கலாம். அம்புட்டுதேன்..


இப்போ நம்ம பொழப்பைப் பார்க்கலாம். பகுதி ரெண்டில் அமெரிக்காவில் L1 / H4 விசாக்களில் இருப்பவர்களும் சுலபமாக Visa Transer with Status Change செய்வதில் பிர்ச்சனை இருக்குன்னு சொல்லியிருந்தேன். அது என்னன்னு இப்போ பாக்கலாம்.

சென்ற ஆண்டு வரை L1 / H4 விசாக்களில் இருந்தவர்கள், மார்ச் ஏப்ரல் மாதங்களில் கன்சல்டிங் கம்பெனிகளைத் தொடர்பு கொண்டு H1B விசா விண்ணப்பிக்க விருப்பம் தெரிவிப்பார்கள். கம்பெனிகளும் பேரம் ஒத்துவந்தவர்களுக்கு விசா அப்ளை செய்வார்கள். வருடா வருடம் அக்டோபர் 1ம் தேதி அமுலுக்கு வரும் அறுபத்து ஐந்தாயிரம் விசாக்களுக்கு விண்ணப்பம் பெறுவது ஏப்ரல் 1ம் தேதி துவங்கும். 2006ம் ஆண்டுவரை இந்த கோட்டா சில பல மாதங்கள் வரை திறந்திருந்தது. 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் ஏப்ரல் ஒண்ணாம் தேதியே கிட்டத்தட்ட மூணு மடங்கு விண்ணப்பங்கள் USCIS அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன - அதிலிருந்து 65000 பேர் லாட்டரி முறையில் தேர்ந்து எடுக்கப் பட்டனர். 2009 ம் ஆண்டு நிலைமை தலைகீழ் - பொருளாதார மந்த நிலைமை காரணமாக வேலை வாய்ப்புகள் குறைந்தன. H1B மீதிருந்த மோகம் கொஞ்சம் குறைந்தது. கோட்டா டிசம்பர் மாதம் வரை திறந்திருந்தது. அப்போதும் L1 / H4 விசாக்களில் இருந்து கொண்டு H1B க்கு மாற விரும்பியோர் பெரும்பாலானோருக்கு விசா கிடைத்தது. அவங்க எல்லாருக்கும் கன்சல்டிங் கம்பெனிகள் Internal Project இருக்கறா மாதிரி காமிச்சு அப்ரூவல் வாங்கிக்கிட்டு இருந்தாங்க.அப்ளை செய்து ஓரிரு மாதங்களில் விசா அப்ரூவல் கிடைத்தது (ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்). அப்ரூவல் கிடைத்த மக்கள் செப்டம்பர் மாதத்திலிருந்து புது ப்ராஜக்ட்டுக்கு தேடுவாங்க, ப்ராஜக்ட் கிடைத்ததும் L1 விசாவில் பார்த்த வேலையை விட்டுட்டு H1 க்கு மாறுவாங்க.. இந்த ஆண்டு வரை நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்தது.


இதுக்கு இந்த ஆண்டு USCIS வச்சுது ஒரு ஆப்பு இல்ல இல்ல ரெண்டு ஆப்பு, மொதோ ஆப்பு - Confirmed Client work order (அதாங்க உண்மையான் ப்ராஜக்ட்) மற்றும் Clinet Letter இல்லாம H1B கொடுக்கறதில்ல. அப்புறம் ஆகஸ்ட் 14ம் தேதியிலிருந்து H1B Fee $2320 லேருந்து $4320 ஆக உயர்த்தி ரெண்டாவது ஆப்பு வச்சுது USCIS.ரெண்டாவதாவது வெறும் பணம் சம்பந்தப் பட்ட விசயம். மொதலாவது ஆப்பு கன்சல்டிங் கம்பெனிகளையும் வேலை தேடுவோரையும் செம Catch 22 situation ல வச்சிடுச்சு.போன வருசம் வரைக்கும், மொதல்ல விசா வந்திடும், அப்புறம் ப்ராஜக்ட் கெடைச்சதும், தற்போதைய கம்பெனிக்கு ரெண்டு வாரம் நோட்டீஸ் கொடுத்துட்டு புது கம்பெனி மற்றும் ப்ராஜக்ட்ல சேந்துடுவாங்க, இந்த வருசம் வேலை கெடைச்சாதான் விசா அப்ளை பண்ண முடியுங்கற நெலமை. Premium Processing ல போட்டா கூட விசா கிடைக்க 4-5 வாரம் ஆகும், விசா கெடைச்சப்புறம் தான் பார்க்கும் வேலையை விட முடியும், அதுக்கு ஒரு ரெண்டு வாரம் தேவை. எந்த க்ளையண்டும் ஒரு Contract worker க்காக கிட்டத்தட்ட
ரெண்டு மாசம் காத்திருக்கத் தயாரில்லை. அது மட்டுமல்லாமல் அவருக்கு விசா கிடைக்குமா என்கிற உத்தரவாமில்லாத நிலையில் யாரரையும் வேலைக்கு எடுப்பதில்லை.
விசாவோடு வா வேலை தர்றேன்னு சொல்ற க்ளையண்ட் ஒரு புறம், வேலை கெடைச்சப்புறம் சொல்லு விசா தர்றேன்னு சொல்ற USCIS ஒரு புறம் - L1 மக்களுக்கு இருபுறமும் அடி.

விப்ரோ, இன்ஃபோஸிஸ், TCS போன்ற கம்பெனிகளில் L1 விசாவில் வேலை செய்யும் கணினித்துறையினருக்கு இக்கம்பெனிகள் பெரும்பாலும் Green Card sponsor செய்வதில்லை. அதுமட்டுமல்லாமல் வாங்குற சொற்ப சம்பளத்துக்கு 12 -14 மணி நேரம் வேலை செய்யணும்.நல்ல கன்சல்டிங் கம்பெனியில சேந்தால் - நல்ல சம்பளம் அத்துடன் சில பல வருசங்களில் பச்சை அட்டையும் வாங்கிடலாம். அதனால நெறய பேர் கன்சல்டிங்குக்கு தாவறாங்க. இந்த வருட மாற்றத்தினால் பாதிக்கப் பட்டவங்க இவங்க. இதுக்கு என்னதான் தீர்வு??

1. தற்போது வேலை செய்யும் கம்பெனியை உங்க விசாவை L1 லேருந்து H1 க்கு மாத்தச் சொல்லி கேட்டுப்பாருங்க - கொஞ்சம் கஷ்டம்தான் - L1 ல இருக்கறவங்க H1 கேட்டா
சந்தேகம் வரும். கம்பெனியில் கொஞ்சம் HOld இருந்தா காய் நகர்த்திப் பாருங்க. H1 கெடைச்சதுக்கப்புறம் ட்ரான்ஸ்பர் செய்வது எளிது.

2. சமீபமா இந்தியாவில் இருக்கும் Embassy களில் L1 Stamping நெறய ரிஜக்ட் ஆவதால உங்க L1 Expire ஆகும்போதோ இல்ல கோட்டா முடியும் முன்னரோ உங்க கம்பெனி அவங்களாகவே உங்களுக்கு H1 அப்ளை பண்ண வாய்ப்பிருக்கு. கொஞ்சம் காத்திருக்கலாம்.

3. மொதோ ரெண்டு விசயங்களில் உங்க கிட்ட கண்ட்ரோல் இல்லை, இது அப்படியில்லை. உங்க Resume வை உங்களுக்கு / நண்பர்களுக்குத் தெரிந்த எல்லா Hiring Managerகளுக்கு அனுப்பி வைங்க. தேர்ந்தெடுக்கப் பட்டால் விசா ப்ராசஸ் பண்ண நல்ல கன்சல்டிங் கம்பெனி தயாராக இருப்பதாகவும் 5-6 வாரங்களுக்குள் கண்டிப்பாக வேலையில் சேர முடியுமெனவும் உறுதி கொடுங்க. தெரிஞ்சவங்க மூலம் வரும் Resume க்கு என்னிக்குமே மதிப்பு அதிகம்.உறுதியா வேலையில் சேருவார்ன்னு தெரிஞ்சா மேனேஜர்கள் வேலை கொடுக்க வாய்ப்புண்டு. Law of Averages இல் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு. நூறு பேருக்கு ஒரு பொருளையோ சேவையைப்பத்தியோ சொன்னால் கண்டிப்பாக ஒருவருக்காவது தேவை இருக்கும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை...

4. H4 ல இருக்கும் அம்மணிகள் Afford பண்ண் முடிஞ்சா M.S படிக்க ஏதாவது ஒரு யுனிவர்சிடில ஜாயின் பண்ணிடுங்க. There will be some light at the end of the tunnel. ரெண்டு வருசம் கழிச்சு OPT மூலம் 29 மாசம் EAD கிடைக்கும், அதுக்குள்ள H1b பண்ணிடலாம் அல்லது உங்க கணவரின் மூலம் உங்களுக்கும் பச்சை அட்டை கிடைக்கலாம்.

பின் குறிப்பு : இத்தொடர் குறித்தான உங்க மேலான கருத்துக்களை சொல்லுங்க, உங்க கருத்துக்களின் அடிப்படியில்தான் அடுத்த மாசம் இதில் Concentrate பண்ணலாம இல்ல ரொம்ப நாளா நினைப்பில் இருக்கும் இண்டர்வியூ குறித்தான தொடரில் கவனம் செலுத்தலாமான்னு முடிவு பண்ணனும். கேள்விகள் / சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்க,எழுத மேட்டர் இல்லாமல் இருக்கும் எனக்கு லீட் கொடுக்க உங்களை விட்டா யாரு இருக்காங்க?

கொஞ்சம் வேலை இருப்பதால் டிசம்பர் முதல் வாரம் அடுத்த இடுகை வரும். யாருங்க அது ஐயா மூணு வாரம் நிம்மதின்னு குதிக்கறது?? இதுக்கெல்லாம் சேத்து வச்சிக்கறேன் அடுத்த மாசம்..

22 comments:

RVS said...

//Law of Averages இல் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு. நூறு பேருக்கு ஒரு பொருளையோ சேவையைப்பத்தியோ சொன்னால் கண்டிப்பாக ஒருவருக்காவது தேவை இருக்கும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை...//
அட்டகாசம். சரியான கூற்று.

// எந்திரன் பாக்காதவனும் என்கவுண்டர் பத்தி கருத்து சொல்லாதவனும்
தமிழனே இல்லைன்னு ஆகிப் போச்சு//

தத்துவம் நம்பர் 100001 ??? ;-)

sriram said...

வாங்க RVS அண்ணா. நன்றி

பாலராஜன்கீதா said...

//நான் எந்திரன் பாத்துட்டேன், அதுக்கப்புறம் வ பார்த்தேன். வ பார்த்தப்புறம் எந்திரன் நல்ல படமா தெரிந்தது எனக்கு (இதை விடச் சின்னதா ரெண்டு பட விமர்சனம் யாராவது எழுதுங்க பாப்போம்)//
எந்திரன் > வ
:-)

ILA (a) இளா said...

//எந்திரன் > வ//
எந்திரன்>வ
அதைவிட இது சிறுசுங்க, பாருங்க Space இல்லை :)

Anonymous said...

ஸ்ரீராம்,

//H4 ல இருக்கும் அம்மணிகள் Afford பண்ண் முடிஞ்சா M.S படிக்க ஏதாவது ஒரு யுனிவர்சிடில ஜாயின் பண்ணிடுங்க. There will be some light at the end of the tunnel. ரெண்டு வருசம் கழிச்சு OPT மூலம் 29 மாசம் EAD கிடைக்கும், அதுக்குள்ள H1b பண்ணிடலாம் அல்லது உங்க கணவரின் மூலம் உங்களுக்கும் பச்சை அட்டை கிடைக்கலாம்.//



நல்லது, ஆனால் கம்ப்யூட்டர் படிகதிங்க, நீங்கள் படித்து வேலைக்கு போகும் போது
நம்ம consulting compay ஆளுகள் H1 B விட குறைந்த சம்பளம் தருவார்கள் . அம்மணிகள் கல்வி துறையில் படிக்கலாம் (MS in Education - Teaching , Teachers are a Huge demand in US), உங்களுக்கு ஆரம்பத்தில் குறைந்த சம்பளம் கிடைக்கலாம் (min $60000/Annum - Now days lot of State department of education is directly sponsoring H1B for Teachers Ex: newyork, Boston,..
If you are Bachelors in Science or Maths degree holders , now the best time to Join MS and get a job in Teaching , But you should have the passion in teaching not like IT consulting :)) ஆனால் பச்சை அட்டை இரண்டு வருடத்துக்குள் வந்துவிட்டும் ( If you are planning to stay in US for some time,..)

அருண்

sriram said...

நன்றி பாலராஜன் கீதா

sriram said...

இளா
சாயந்திரம் நேர்ல பாக்கும்போது வச்சிக்கறேன் கச்சேரியை

sriram said...

நல்லா சொன்னீங்க அருண்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

teaching line ல நெறய பெண்கள் H1B ல இருக்கறத பாக்கறேன். உண்மையான விருப்பம் இருப்பின் நல்ல வழி அது.

இந்த மாதிரி நல்ல கருத்துக்கள் வருவதால் அனானி ஆப்ஷன் வைக்கணும்னு தோணுது, என்ன பண்றது சில ஜந்துக்களும் அனானி ரூபத்தில வருதே..

Anonymous said...

நன்றி ஸ்ரீராம்

//விப்ரோ, இன்ஃபோஸிஸ், TCS போன்ற கம்பெனிகளில் L1 விசாவில் வேலை செய்யும் கணினித்துறையினருக்கு இக்கம்பெனிகள் பெரும்பாலும் Green Card sponsor செய்வதில்லை. //

L-1A வருபவர்களுக்கு எல்லா கம்பனிகளும் கிரீன் கார்டு செய்கிறது (L-1A for executives and managers, and L-1B for workers with specialized, Most of the companies do the green cards for L-1A visa holders.)
.
L1-B வருபவர்கள் H1-B visa சமமாக இருபதினால் செய்வதில்லை.


//அதுமட்டுமல்லாமல் வாங்குற சொற்ப சம்பளத்துக்கு 12 -14 மணி நேரம் வேலை செய்யணும்.//

எல்லா கம்பெனிகளும் Department of labour நிர்ணைக்க பட்ட சம்பளம் கொடுக்க வேண்டும் [Ex: labour Depart says 5 yrs Software engineer salary is $60,000/yr Albany-newyork, But we expect 120000/yr with the same experience category. So the Indian companies bring the people from Indiia and pay the minimum salary :)]

For working hours,உங்கள் கிளிஎன்ட் பொருத்தது , சில கம்பெனிஇல் , அலுவலக நேரதிருக்கு மேல் வேலை செய்ய அனுமதிபதில்லை.

பெரும்பாலும் இந்திய கம்பனிகள் முழு ஆண்டு ஒபந்தம் (Annual contract ) செய்திருப்பதால் அவர்கள் அதிக நேரம் வேலை செய்வார்கள் (client never asked why you working long hours).


//நல்ல கன்சல்டிங் கம்பெனியில சேந்தால் - நல்ல சம்பளம் அத்துடன் சில பல வருசங்களில் பச்சை அட்டையும் வாங்கிடலாம். அதனால நெறய பேர் கன்சல்டிங்குக்கு தாவறாங்க. இந்த வருட மாற்றத்தினால் பாதிக்கப் பட்டவங்க இவங்க. இதுக்கு என்னதான் தீர்வு?? //

இப்ப இருக்கும் பொருளாதார நிலையில் கன்சல்டிங் நல்ல சம்பளம் கிடைக்க வாய்பு உள்ளது உண்மை ஆனால் வேலை எவளவு நாட்கள் என்பது உறுதி இல்லை (The contract jobs are not gurantee to go).
ஒருவர் முப்பது நாட்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருத்தல் அவரது H1-B மறு பதிப்பு தாமத மாக வாய்பு உள்ளது (Its tough to reniew the visa if the person not in the pay roll more then 15 days. Working with Indian big companies some time guranty the job in India - ).

Arun

Jackiesekar said...

இது எல்லாமே படிச்சவங்களுக்கான விசயம்... நான் அபிட்டு...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிகமிக உபயோகமான பதிவு!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

Porkodi (பொற்கொடி) said...

நல்ல பதிவு, மிக்க நன்றி.

ஏன் உங்களுக்கு தான் டெம்ப்ளேட் போட வருமா.. நீங்க இஸ்டப்பட்டு கஸ்டப்பட்டு போஸ்ட் போட்ருக்கீங்க ஆனா இப்ப‌ எனக்கு ரெண்டே ரெண்டு கேள்விதேன். 1.ஹாலி எப்படி பதிவு போடாம போலாம்? இதை யாரும் தட்டிக் கேக்கலியா? 2.ஸ்னோவுக்கும் பஜ்ஜிக்கும் என்ன கனெக்சன்னு எப்ப ஸ்னோ பெய்தாலும் பஜ்ஜி திங்க ஆசை வருது??

எனக்கு இன்டர்வ்யூ பத்தி படிக்க ஆசையா இருக்கு.

தக்குடு said...

ஹும்ம்ம்ம், பல் இருக்கறவன் பக்கோடா திங்கலாம். படிச்ச புள்ளைங்களுக்கான பதிவு போலருக்கு, யூ எஸ் எல்லாம் நான் மேப்லதான் பாத்ருக்கேன் நாட்டாமை! ஒரே ஒரு ஆறுதலான விஷயம் அங்க போகர்துக்கு நிறையா பேர் தோஹால இறங்கி டீ காப்பி சாப்டுட்டு, கக்கா எல்லாம் போய்ட்டு கனெக்டிங் ப்ளைட் புடிச்சு போவாங்க.

Dubukku said...

அலசி காயப்போட்டிருக்கீங்க. இப்போ இங்கயும் யூ.கேல மொத்தமா ஆப்பு அடிச்சிட்டாங்க. ஹெசெஸெம்பின்னு ஒரு போங்காட்டம் இருந்தது. அதுல தான் நம்மாட்கள் யூ.கே எம்பசி வழியா போனேன்..அங்க சும்மா குடுத்தாங்கன்னு வாங்கிட்டு வந்தாங்க. அத 13000லேர்ந்து 1000மா குறைச்சிட்டாங்க. அந்த ஆயிரமும் எந்திரன் மாதிரி சயின்ட்ஸ்ட், மற்றும் ஆதாரப்பூர்வமான சாதனையாளர்களுக்கு மட்டும் தானான். அத்தோட இன்ட்ரா கம்பெனி ட்ரான்ஸ்பர்ல வர்றவங்க 5வருஷத்துல திரும்ப போயிடனும்ன்னு இன்னொரு ஆப்பு. அவங்களுக்கு பெர்மணன்ட் செட்டில்மெண்ட் ஆப்ஷன் கிடையாதாம். அடுத்த வருஷம் ஸ்டுடென்ட்ஸ் விசாவும் ஆப்படிக்கிறாங்க.

sriram said...

கருத்துக்களுக்கு நன்றி அருண்

1. GreenCard : விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற கம்பெனிகள் க்ரீன் கார்ட் ஸ்பான்ஸர் செய்கின்றன, ஆனால் எத்தனை சதவீதம் பேருக்கு என்பதுதான் கேள்வி?

2. Labor Law எல்லாம் இந்தியக் கம்பெனிகளுக்கு ஒரு பொருட்டே கிடையாது, Client சொல்றானோ இல்லயோ, ஆன்சைட்ல இருக்கும் மக்களில் பெரும்பாலானோர் 8 மணி
நேரத்துக்கு அதிகமாகவே வேலை செய்கின்றனர். க்ளையண்டைப் பொருத்தவரைக்கும் 8 to 5 (மதிய இடைவேளை உள்பட) அலுவலகத்தில் இருக்கணும், நம்மாளுங்க அதுக்கு
மேலேயும் ஆபிஸில் வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு வந்தப்புறமும் Off Shore மக்களுடன் மீட்டிங் அட்டெண்ட் பண்ணனும். Status Update Meeting தவறில்லை, ஆனால்
பலபேருக்கு அது முடிவதற்கு இரவு 12 மணிக்கு மேலாகுது, மறுபடியும் காலை 9 மணிக்கு ஆபிஸில் இருக்கணும்.

3. //Its tough to reniew the visa if the person not in the pay roll more then 15 days// இதுக்கு பெரும்பாலான கன்சல்டிங் கம்பெனிகள்
Work Around வைத்துள்ளன. Saving for the rainy day concenpt தான் எல்லாம்.

4. //Working with Indian big companies some time guranty the job in India// கண்டிப்பா ஒத்துக்கறேன், ஆனால் அந்த So called Job Guarantee
க்கு கொடுக்கும் விலை ரொம்ப அதிகம்.

அருண், உங்க கிட்டேருந்து நெறய விவரங்கள் கிடைக்கும் போல இருக்கு, nsriram73@gmail.com க்கு தனிமடல் அனுப்புங்க, பேசலாம்.



நன்றி ஜாக்கி

நன்றி ஆர். ஆர். ஆர்

sriram said...

டெம்ப்ளேட் பின்னூட்டத்துக்கு நன்றி கேடியக்கா
ஹாலி பாலா : எனக்கும் அவர் மேல கோபம்தான், புதுசா பதிவு எழுத வேணாம், எப்ப தோணுதோ எழுதட்டும், பக்கத்தையே அழிச்சிட்டார்.
இண்டர்வியூ தொடர் : டிசம்பர்ல ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன்.


நன்றி தக்குடு, நானும் தோஹாவை மேப்லதான் பாத்திருக்கேன், இக்கரைக்கு அக்கரை பச்சை.

sriram said...

வாங்க தல, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹும்ம், நம்ம ஆளுங்களை உலகம் பூரா ரவுண்டு கட்டி அடிக்கறாங்கன்னு நெனைக்கிறேன், நீங்க ஏன் UK Immigration பத்தி சில இடுகைகள் எழுதக் கூடாது??

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு நண்பரே. முந்தைய பகுதிகளையும் வாசித்தேன். அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

sriram said...

நன்றி சரவண குமார்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice informative post

நானும் எந்திரன் போன சண்டே தான் பாத்தேன்... சொன்னா கிண்டல் பண்ணுவாங்களோனு வெளிய சொல்லல... nice to know I got company...ha ha

Endhiran super
இதான் என் விமர்சனம்... இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க...ஹா ஹா

//65000 பேர் லாட்டரி முறையில் தேர்ந்து எடுக்கப் பட்டனர்//
கிரீன் கார்டு லாட்டரினு ஏதோ சொல்ல கேள்வி... இதுக்கும் லட்டரியா...அட கொடுமையே... அப்ப நம்ம மக்கா உளுந்து உளுந்து படிக்கறது என்னத்துக்கு... பாவம்...

//எழுத மேட்டர் இல்லாமல் இருக்கும் எனக்கு லீட் கொடுக்க உங்களை விட்டா யாரு இருக்காங்க//
ஆஹா... நான் கேட்ட கொஸ்டின்க்கு எல்லாம் ஆன்சர் இல்லையே இன்னும்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Porkodi said
//ஸ்னோவுக்கும் பஜ்ஜிக்கும் என்ன கனெக்சன்னு எப்ப ஸ்னோ பெய்தாலும் பஜ்ஜி திங்க ஆசை வருது??//

கொடி எப்படிம்ம்மா?எப்படி? உனக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் டவுட்.. சான்சே இல்ல போ... நாட்டாமை தீர்ப்பு சொல்றதுக்குள்ள மீ எஸ்கேப்...

ஒவ்வாக்காசு said...

Very very Informative Post Sriram... Thanks.

The Onsite people's job is getting difficult day by day... Considering the Offshore-Onsite % in many companies, these days people are not as ethusiatic as 3-4 years back...

Cheers,
Ovvaakkasu