Sunday, December 5, 2010

எவ்வளவோ தாங்கிட்டீங்க, இதையும் தாங்க மாட்டீங்களா என்ன?

அப்படி நம்பித்தான் சங்கர பாண்டி ஐயா நவம்பர் பத்தாம் தேதி மின்மடல் அனுப்பி டிசம்பர் மாதத்தில் ஒரு வாரம் தமிழ் மண நட்சத்திரமாக இருக்க விருப்பமான்னு கேட்டார்.
வேற நல்ல பதிவர் யாரும் கிடைக்காத கொடுமையோ அல்லது இது மாதிரி ஏதாவது பண்ணாலாவது இவன் கொஞ்சம் உருப்படியா எழுதுவான் என்று என்ற அவரின் நினைப்போ
எதுவோ ஒண்ணு அவரை எனக்கு மின் மடல் அனுப்ப வச்சிருக்கு. என்ன பண்றது விதி வலிது இல்லையா? நானும் படிக்கிற பத்துக் கணக்கான (கோடிக்கணக்கான வேணாம்
ஆயிரக் கணக்கான என்று எழுதினாலே அடி பின்னிடுவீங்கன்னு தெரியாதா?) நண்பர்களை நம்பி நானும் ஒத்துக்கிட்டேன்..

ஒரே ஒரு வாரம்தான், ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கிட்டீங்கன்னா, ஏதோ எனக்குத் தெரிஞ்ச சில விசயங்களைச் சொல்லிட்டு ஓடிடறேன். கேபிள் சங்கர் மாதிரி எண்டர் கவிதை
எழுதியோ உண்மைத் தமிழன் அண்ணன் மாதிரி நாவல் சைஸில் இடுகைகளோ எழுத மாட்டேன், நீங்களும் துப்புறதை பின்னூட்டங்களில் துப்பிட்டு மறந்திடணும், நேரில் பாக்குற வரைக்கும் மனசில வச்சிக்கிட்டு பழி வாங்குற அளவுக்கெல்லாம் போகக் கூடாது - இந்த டீலிங் ஓகேவா??

டிசம்பர் ஆறிலிருந்து பன்னிரெண்டாம் தேதிவரை இந்த வாய்ப்பு எனக்கு. இது என்ன மாதிரி co incidence என்று தெரியவில்லை, முதலாம் நாள் நான் (நான் மட்டுமா??) மறக்க விரும்பும் நாள். பன்னிரெண்டாம் தேதி மறக்க முடியாத முக்கியமான நாள். ரஜினியின் பிறந்த நாள் என்கிற வகையில் நெறய பேருக்கு டிசம்பர் 12ம் தேதி விசேஷ தினம், ஆனா எனக்கு வேறொரு வகையில் மறக்க முடியாத நாள், அது பத்தி பன்னிரெண்டாம் தேதி சொல்றேன்.

டிசம்பர் 6 - இந்தியாவுக்கே கறுப்பு தினம். உலக அரங்கில் இந்தியா தலை குனிந்த தினம். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை தகர்ப்புக்கும் இந்தியாவில் 1992ம் ஆண்டு நடந்ததுக்கும்
என்னைப் பொருத்த வரையில் பெரிய வித்தியாசமில்லை. இக்கறுப்பு தினத்தின் அரசியலுக்குள் புக விரும்பவில்லை. ஆனால் இந்தியா சகிப்புத்தன்மை அற்று போனது கண்டும் Co Existence தத்துவத்தில் நம்பிக்கை அற்றுப் போனதும் கண்டு தலை குனிந்த இந்தியர்களில் நானும் ஒருவன். கடவுள் நம்பிக்கை எனக்குண்டு, ஆனால் என்னைப் பொருத்த வரையில் கோவில்களின் தேவையே ஒரு கேள்விக்குறி. கோவில்களின் மீதும் மஸ்ஜித் களின் மீதும் பற்று கொண்டவர்கள் நாடு முழுதும் உள்ள புனரமைக்கப்படாத ஆயிரக்கணக்கான கோவில்களை புனரமைக்க கரம் கோக்காமல் வேண்டாத வேலைக்கு கரம் கோக்க தாழ்ந்தது என் போன்ற நாட்டின் மீது பற்று கொண்டவர்களின் தலை.

இதுக்கு செப்டம்பர் மாதம் வந்த தீர்ப்பு இதை விட பெரிய கொடுமை. இவ்வளவு பிரச்சனைக்கப்புறமும் அங்கே என்ன மயித்துக்கு கோவிலும் மஸ்ஜித்தும். அரசே இடத்தை கையகப் படுத்தி தீன் இலாஹி என்று பேரிட்டு ஒரு பள்ளிக்கூடம் கட்டுங்கடா வெண்ணைகளா. அங்கு படிக்கும் பிள்ளைகளுக்கு நாட்டுப் பற்றையும் நல்ல பண்புகளையும் சொல்லித் தாங்க. நாட்டுக்குத்தேவை பள்ளிகளும், லஞ்சம் வாங்காத அடுத்த சந்ததியும். பிரச்சனைக்கு அலையும் மதவாதிகள் அல்ல.

நான் இப்படித்தான். இந்தியா, லஞ்சம் பத்தி ஏதாவது ஆரம்பிச்சா உணர்ச்சி வசப்படுவேன், ஓவர் செண்டி ஒடம்புக்காகாது, எனவே நம்ப மேட்டருக்கு வருவோம். இந்த வாரத்தில்
வெறும் அமெரிக்கன் விசா பத்தி மட்டும் இல்லாம, Long Long ago விட்டுப்போன அழகா ஆங்கிலம் பேச வாங்க தொடரின் ஒரு பாகமும், நேர்முகத் தேர்வு தொடர்பான தொடரில் ஒரு சில பகுதியும் எழுத உத்தேசம். H1B விசா பத்தின சந்தேகங்கள் இருந்தா கேளுங்க, தெரிஞ்ச வரையில் சொல்றேன்.

ஒரு மிக முக்கியமான விசயம்: நண்பர் நர்சிம்மின் “தீக்கடல்” கவிதைத் தொகுப்பை உயிர்மை வெளியிடுகிறது. “ஏதாச்சும் செய்யணும் பாஸ்” வாக்கியத்தின் சொந்தக்காரர் அடைந்திருக்கும் உயரம் மகத்தானது. முதல் கவிதைத் தொகுப்புக்கு வாழ்த்துகக்ள் நர்சிம். உங்க கிட்டேயிருந்து இன்னும் நெறய எதிர் பார்க்கிறோம் பாஸ். நான் இனிமே தமிழ் ப்ளாக்கர் என்று என்னை சொல்லிக் கொள்வதை விட்டு விடலாமென்று இருக்கிறேன். பின்ன என்னங்க நாலு புத்தகங்கள் எழுதிய யுவகிருஷ்ணாவையும், கதை மற்றும் கவிதைத் தொகுப்பு எழுதிய நர்சிம்மையும் என்னையும்ஒரே அடைக்குறிக்குள் வச்சா நல்லாவா இருக்கு? கமலஹாசனும் J.K.ரித்திஷும் தமிழ் சினிமா உலகில் கதாநாயகர்கள் என்று சொல்வதைப் போல இருக்கு என் நிலைமை.

அப்புறம், இன்றிலிருந்து அனானி ஆப்சன் எடுத்திடறேன். கொஞ்ச நாளைக்கு முன்னர் ஒரு பிரச்சனை வந்த போது உண்மைத் தமிழன் உள்பட பல பதிவர்கள் அனானி ஆப்சன் எடுக்கச்
சொல்லி அட்வைஸ் பண்ணாங்க, அப்பவே சொல்லியிருந்தேன் - ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டேன், முடிச்சிட்டு எடுக்கறேன்னு. இப்போ ஓரளவுக்கு அனானி பிரச்சனை கொறஞ்சு இருக்கு. அருண் என்று ஒரு நண்பர் அனானி ஆப்சன்ல வந்து பல நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்கார், இது மாதிரி இன்னும் பல பேர். ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தில் மட்டற்ற நம்பிக்கை இருக்கும் எனக்கு அனானி ஆப்சன் எடுப்பதில் வருத்தமே, இருப்பினும் தொல்லைகளில் இருத்து தப்பிக்க அது ஒன்றே வழி என்பதினால் இன்றும் முதல் இந்த வலைப்பூவில் அனானி ஆப்சன் இருக்காது. வேறொரு சமயத்தில் இதை மாற்றும் நிலை வரும் என நம்புகிறேன். அருண் போன்ற நண்பர்கள் பின்னூட்டங்களை தனிமடலில் அனுப்பினால் இடுகையில் சேர்த்து விட உத்தேசித்திருக்கிறேன். அப்புறம் அக்டோபர் 15 அன்று எழுதிய ஒரு வேண்டாத இடுகையையும் நீக்கி விட்டேன்.

அடுத்த ஏழு நாளும் என்னுடன் தமிழ் மண முகப்பில் பயணிக்க இருக்கும் அனைவருக்கும் நன்றி.

79 comments:

Cable சங்கர் said...

நட்சட்த்திர வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

sriram said...

நன்றி யூத்து.. மொதோ கமெண்ட் உங்க கிட்டேருந்து வந்தது ரொம்ப சந்தோஷம்.
உங்களோட அடுத்த புத்தகம் எப்போ?

Mohan said...

தமிழ் மண நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்!

sriram said...

நன்றி மோகன்

a said...

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்......
வாரமுழுதும் கலக்குங்கள்.........

மணிஜி said...

அன்பு ஸ்ரீராம்..நட்சத்திர வாழ்த்துக்கள்...

Ravichandran Somu said...

நட்சட்த்திர வாழ்த்துகள்!

எல் கே said...

நட்சதிர வாழ்த்துக்கள்

vasu balaji said...

வாழ்த்துகள் ஸ்ரீராம்:)

நர்சிம் said...

நட்சத்திர வாழ்த்துகள் ஸ்ரீராம்.. கலக்குங்க.

anujanya said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள் ஸ்ரீராம். கலக்குங்க.

நர்சிம் கவிதைத் தொகுப்பு வெளியீட்டிற்கும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

Yoga.s.FR said...

இன்னமோ கத்துக்குட்டி போல பில்டாப்பு குடுக்குறீங்க,அட்வான்சா மொக்கைக்கு அடி போடுறாப்புல இருக்கு?இன்னமோ போங்க!

சிநேகிதன் அக்பர் said...

நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள்.

RVS said...

பாஸ்டன் ஸ்ரீராம் இனிமேல் ஸ்டார் ஸ்ரீராம். வாழ்த்துக்கள். ;-)

செ.சரவணக்குமார் said...

நட்சத்திர வாழ்த்துகள் நண்பரே.

அரவிந்தன் said...

வாழ்த்துக்கள்!!! ஸ்ரீ

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

ராம்ஜி_யாஹூ said...

நட்சட்த்திர வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்..

iniyavan said...

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

தருமி said...

வாழ்த்துகள் ..

Jackiesekar said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஸ்ரீ

Jackiesekar said...

இப்பதான்டா பார்த்தேன்.. தமிழ்மணம் முகப்பு.. ஒரு வாரத்துக்கு உன் கலக்கலா??? நடத்து...

Jackiesekar said...

தானாகவே ஆனானி ஆப்சன் எடுத்த தலைவர் வாழ்க..

ரவி said...

வாழ்த்துக்கள்யா. கலந்து கட்டி அடிக்கவும்.

பத்மநாபன் said...

தமிழ் மண நட்சித்திர பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள் ... உங்கள் நட்சித்திர வாரம் தமிழ் மணத்தில் சிறப்புற வாழ்த்துக்கள் ...

venkat said...

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சட்த்திர வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஓஹ். நீங்கதான் இந்த வார நட்சத்திரமா.. வாழ்த்துகள் ஸ்ரீராம்.

உண்மைத்தமிழன் said...

வாங்க.. வாங்க.. வாழ்த்துக்கள்ண்ணே.. கொளுத்துங்க.. கொளுத்துங்க..

sriram said...

நன்றி யோகேஷ்
நன்றி மணிஜி
நன்றி ரவிச்சந்திரன்
நன்றி LK
நன்றி பாலாண்ணா
நன்றி நர்சிம். கவுஜ புக்குக்கு இன்னுமொரு முறை வாழ்த்துக்கள்.
நன்றி அனுஜன்யா, தன்யனானேன்.
நன்றி யோகா, நான் கத்துக்குட்டிதான், அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்
நன்றி அக்பர்
நன்றி RVS
நன்றி SSK
வாங்க அரவிந்தன் நலமா? வருகைக்கு நன்றி
நன்றி ராம்ஜி
நன்றி அமுதா
நன்றி உலக்ஸ்
நன்றி தருமி ஐயா
நன்றி ஜாக்கி
நன்றி ரவி, செஞ்சிடலாம்
நன்றி பத்மனாபன்
நன்றி வெங்கட்
நன்றி TVR ஐயா
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி உ.த அண்ணே..

sriram said...

Subha shini
to nsriram73@gmail.com

ஹாய் ஸ்ரீராம்
வாழ்த்துக்கள். ரொம்ப நல்ல விஷயங்கள் எழுதறீங்க. தொடர்ந்து எழுதுங்கள்...
அன்புடன்
சுபா

sriram said...

நன்றி சுபா..
நீங்க தனிமடலில் அனுப்பின கமெண்ட்டை உங்க இமெயில் ஐடியை நீக்கிவிட்டு பப்ளிஷ் பண்ணிட்டேன்

நசரேயன் said...

நட்சட்த்திர வாழ்த்துக்கள்

ILA (a) இளா said...

நட்சட்த்திர வாழ்த்து(க்)கள் ! ஏதாவது பொரட்சி பத்தி எழுதிற போறீங்க..

sriram said...

நன்றி இளா..

ஐயையோ, அடிச்சிக் கேட்டாகூட நான் அதெல்லாம் எழுத மாட்டேன்.

மணிகண்டன் said...

Great sriram. Good that tamilmanam recognized you. Yup ! Start the series again.

cheena (சீனா) said...

நட்சத்திர நல்வாழ்த்துகள் ஸ்ரீராம்

சின்னப் பையன் said...

தமிழ் மண நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்!

sriram said...

நன்றி மணி
நன்றி சீனா ஐயா..

பவள சங்கரி said...

அன்பின் ஸ்ரீராம் நட்சத்திர வாழ்த்துக்கள். அசத்துங்க.......ஆவலாகக் காத்திருக்கிறோம்......ஆரம்பமே தூள்..........

ஜோதிஜி said...

உங்கள் அறிமுகம் சுஜாதா பாணியில் இருந்தது. உங்கள் எதிர்பார்ப்பு உள்ள கனவுகள் நடந்தால் மிகவும் மகிழ்ச்சி. நட்சத்திர வாழ்த்துகள் ராம்.

sriram said...

நன்றி சிப்பிக்குள் முத்து

sriram said...

நன்றி ஜோதிஜி..
நல்ல வேளை சுஜாதா உயிருடன் இல்லை. என்னையெல்லாம் தன்னோடு ஒப்பிடுவதை அவர் பார்த்தால் தற்கொலை பண்ணிப்பார் :)

குடுகுடுப்பை said...

வாழ்த்துகள்.

Chitra said...

அடுத்த ஏழு நாளும் என்னுடன் தமிழ் மண முகப்பில் பயணிக்க இருக்கும் அனைவருக்கும் நன்றி


.....தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

நட்சத்திர வாழ்த்துகள் ஸ்ரீராம்!

sriram said...

நன்றி குடுகுடுப்பை
நன்றி சித்ரா
நன்றி வசந்த்

Starjan (ஸ்டார்ஜன்) said...

தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிக்க என்னுடைய வாழ்த்துகள் ஸ்ரீராம்.

அரசூரான் said...

வாழ்த்துக்கள் பாஸ்ஸ்ரீ... கலக்குங்க.
இண்ட்ரோ-வுல கல்லூரி டிராப் அவுட்-ன்னு போட்டிருக்கு... ஓ நீங்க பில்கேட்ஸ் டைப்பா... சூப்பரு.

தக்குடு said...

அண்ணா! வாழ்த்துக்கள், ரொம்ப சந்தோஷமா இருக்கு!!..:)

Thamira said...

நட்சத்திர வாழ்த்துகள் ஸ்ரீராம். கலக்குங்க..

sriram said...

நன்றி அரசூரான்..

B.Sc Maths முடிக்காமலே விட்டுட்டு வேலைக்குப் போயிட்டேன், அப்புறம் Open University ல M.A படிச்சேன், அப்புறமா One of the Top 10 B School ஆன IIFT ல Executive Masters in International Business படிச்சேன்..

Long Story Short.. நான் காலேஜ் ட்ராப் அவுட்தான்..

ட்ராப் அவுட்டெல்லாம் பில் கேட்ஸ் ஆக முடியுமா? குள்ளமா இருப்பவர்கள் எல்லாம் அண்ணாதுரை மாதிரி அறிவாளிகளும் கிடையாது, படிக்காத எல்லாரும் காமராஜர் மாதிரி மேதைகளும் கிடையாது

sriram said...

நன்றி தக்குடு

நன்றி ”பிரபல பதிவர்” “ரமா புகழ்” ஆதி தாமிரா அவர்களே :)

creativemani said...

வாழ்த்துக்கள் ஸ்ரீ...

ILA (a) இளா said...

என்ன கொடுமைய்யா இது. வணக்கம்னு ஒரு பதிவு, நன்றின்னு ஒரு பதிவு. மீதி இருக்கிற 5 நாளைக்கும் 5 பதிவு.. இந்த வணக்கம்/நன்றி முறை என்னிக்குதான் ஒழியுமோ(நட்சத்திரங்கள் கவனிக்க).

Unknown said...

இந்த சென்டிக்கும் லோக்கலுக்கும் நடுவில் "நின்று ஆட" வாழ்த்துகள் ஸ்ரீராம்!

க ரா said...

வாழ்த்துக்கள ஸ்ரீராம். கலக்குங்க

sriram said...

நன்றி மணி.

sriram said...

இளா..
இடுகையை படிச்சிட்டுதான் பின்னூட்டம் போட்டீங்களா?
தமிழ் கூறும் நல்லுலக வழக்கப் படி வணக்கம் சொல்லி ஆரம்பிச்சிட்டு டிசம்பர் ஆறு, பிரச்சனைக்குரிய நிலம் பத்தின என்னோட கருத்துக்களைச் சொல்லியிருந்தேன்.

முக்கியமா “தீக்கடல்” கவிதைத் தொகுப்பைப் பத்தி சொல்லியிருந்தேன், அனுஜன்யா தவிர யாரும் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

இனிமே இடுகையை படிச்சிட்டு பின்னூட்டம் போடுங்க, சரியா?

sriram said...

//இந்த சென்டிக்கும் லோக்கலுக்கும் நடுவில் "நின்று ஆட" வாழ்த்துகள் ஸ்ரீராம்!//

நன்றி KP. ஒரே ஒரு செண்டி இடுகை கடேசி நாள்ல வருது, அதுவும் உங்களுக்குப் பிடிக்கும்னு நெனைக்கிறேன்

sriram said...

நன்றி இராமசாமி

சாந்தி மாரியப்பன் said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்..

Unknown said...

நட்சத்திர வாழ்த்துகள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... சூப்பர்...ஸ்டார்... அதாவது நீங்க தமிழ்மண நட்சத்திரம்... ரெம்ப ரெம்ப சந்தோஷம்... கழக கண்மணிகளில் ஒருத்தி என்ற வகையில் ஹேஏஏஏஏஏ.... வேற என்ன சந்தோஷம் தான் நாட்டாமை... கலக்குங்க...

Nice first post...

sriram said...

நன்றி அமைதிசாரல்
நன்றி சேது
நன்றி அப்பாவி தங்கமணி

ILA (a) இளா said...

//இனிமே இடுகையை படிச்சிட்டு பின்னூட்டம் போடுங்க//
அடக்கொடுமையேஎ இது வேறையா? ஏன்யா எங்களுக்கு இப்படி ஒரு தண்டனை. நாங்க நாங்களாவே இருக்கோம், உங்க கருத்துக்களை எங்க மேல திணிக்காதீங்க. இது என்ன கம்யூனிஸ்ட் மாதிரி..:)

ILA (a) இளா said...

இந்த மாதிரி சம்பிரதாயங்களை கட்டுடைத்த ரெண்டு தமிழ்மண நட்சத்திர day one பதிவுகளைப் பாருங்க Click -1 , Click-2

Unknown said...

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

தாராபுரத்தான் said...

வாழ்த்துக்கள்..ங்க

sriram said...

நன்றி பாஸ்கர்
நன்றி பழனிச்சாமி ஐயா

sriram said...

நன்றி நசரேயன்
நன்றி சின்னப்பையன் சத்யா..

மன்னிக்கனும், உங்க ரெண்டு பேரோட பின்னூட்டங்களும் முன்னரே பப்ளிஷ் பண்ண மிஸ் பண்ணிட்டேன்

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள்!!!

என்ன எழுதப் போறீங்கனு ஆவலா இருக்கேன்.

sriram said...

நன்றி பாலாஜி.
நான் என்ன புதுசா எழுதிடப் போறேன்?
அதே பழைய மாவுதான், புதுசா அரைக்கணும், அம்புட்டுதேன்..

ஆங்கிலம் ஒரு பகுதி இப்பத்தான் பப்ளிஷ் பண்ணேன்

ஒரு H1B இடுகை வருது
அமெரிக்காவில் இருக்கும் விசயங்க பத்தி 2 இடுகைகள், புதுசா இண்டர்வியூ பத்தி ஒரு தொடர் யோசிச்சு வச்சிருக்கேன்

நானும் பல முறை கேட்டுட்டேன், முடியும் போது போன் பண்ணுங்க

வல்லிசிம்ஹன் said...

நட்சத்திர வாழ்த்துகள். உங்கள் எழுத்துகளைப் படிக்க ஆவலாக இருக்கிறது. சிறப்பான வாரத்துக்கும் வாழ்த்துகள்.

sriram said...

நன்றி வல்லிம்மா..
உங்க எதிர் பார்ப்பை முடிந்த வரை Fulfill செய்ய முயல்கிறேன்

வெட்டிப்பயல் said...

எப்ப வேணா போன் பண்ணுங்க பாஸ்...
நம்பர் மெயில்ல அனுப்பறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

//நன்றி யோகேஷ்
நன்றி மணிஜி
நன்றி ரவிச்சந்திரன்
நன்றி LK
நன்றி பாலாண்ணா
நன்றி நர்சிம். கவுஜ புக்குக்கு இன்னுமொரு முறை வாழ்த்துக்கள்.
நன்றி அனுஜன்யா, தன்யனானேன்.
நன்றி யோகா, நான் கத்துக்குட்டிதான், அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்
நன்றி அக்பர்
நன்றி RVS
நன்றி SSK
வாங்க அரவிந்தன் நலமா? வருகைக்கு நன்றி
நன்றி ராம்ஜி
நன்றி அமுதா
நன்றி உலக்ஸ்
நன்றி தருமி ஐயா
நன்றி ஜாக்கி
நன்றி ரவி, செஞ்சிடலாம்
நன்றி பத்மனாபன்
நன்றி வெங்கட்
நன்றி TVR ஐயா
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி உ.த அண்ணே//
எல்லார் பெயரும் போட்டாச்சு சரி, பிலிம் எங்கே.....:]]

sriram said...

//எல்லார் பெயரும் போட்டாச்சு சரி, பிலிம் எங்கே.....:]] //

மனோ, என்ன கேக்கறீங்கன்னு புரியல,
புதசெவி

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.