வியாழக் கிழமை சாயந்திரம் நாலு மணிக்கு அலுவலகத்தில் மும்முமராய் வேலை செஞ்சிக்கிட்டு இருந்த போது (சொன்னா நம்பணும், சிரிக்கப் படாது), ”Wife Calling" என்றது கைப்பேசி. சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவியா? கட் ஆஃப் டையத்துக்கு முன்னாடி கொரியர் அனுப்பனும், நாளைக்குள்ள போய்ச் சேரலேன்னா சனி ஞாயிறு கொரியர் ஆபீஸ்ல தங்கிடும். யாருக்கும் உபயோகம் இல்லாமல் போயிடும், பட்ட கஷ்டம் வீண் என்று பாடம் நடத்தப் பட்டது.
ஆபிஸ்லேருந்து வீட்டுக்குப் போக பத்து நிமிஷம், பார்சல் எடுத்துக்க ஒரு அஞ்சு நிமிஷம் வீட்லேருந்து ஒரு கொரியர் ஆபிஸ் ஒரு அஞ்சு நிமிஷம் எப்படியும் ஒரு இருபது நிமிசத்தில் போயிடலாம் இன்னும் நெறய நேரமிருக்குன்னு கணக்கு போட்டது கார் டிரைவர் மனசு.மவனே இதுல ஏதாச்சும் மிஸ் ஆகி பல்பு வாங்கினா ஆப்பு பலமா இருக்கும்டி என்று எச்சரித்தது “ப்ராக்டிகல் புருஷன்” மனசு. ரெண்டாவது மனசு ஜெயித்ததுன்னு தனியா வேற சொல்லணுமாக்கும். உடனே Fedex ஆபீஸுக்கு போன் பண்ணி cut off time என்னன்னு கேட்டேன், ஆறரை மணி என்றது அந்த முனையில் இருந்த வெள்ளையம்மா. சீக்கிரமா கொண்டாந்தா சீக்கிரமா அனுப்பிடுவீங்களான்னு கேணத்தனமா கேட்டேன். முழு கண்டெய்னர் அளவுக்கு பொருள் இருந்தாத்தான் தனி ஷிப்மெண்ட்னு நக்கலா விளக்கமான்னு புரிஞ்சிக்க முடியாத ஒரு தொனியில் பதில் வந்தது. “நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு”ன்னு சொல்லிட்டு ஆபிஸ் வேலைகளை முடிச்சு அஞ்சு மணிக்கு கெளம்பி வீட்டுக்குப் போனா பார்சல் தயாராகலை. ஏன்னு கேட்டதுக்கு தங்கமணி, உன்னைய நம்பி நான் பேக் பண்ணி வச்சிட்டு உக்காந்திருந்தா நீ அன்னிக்குத்தான் ஆணி அதிகம்னு சீன் போட்டு லேட்டா வருவ , என்னிக்கு நான் தயாரா இல்லையோ அன்னிக்குத்தான் நீ சரியான நேரத்துக்கு வருவ, அதனாலதான் அதை ஃபிரீசர்லேந்து எடுக்கலன்னு சொன்னா. அரக்க பறக்க ஃப்ரீசர் பேக்கை எடுத்து பேக் பண்ணி, பிரிபெய்டு லேபில் ஒட்டி பார்சலை எடுத்துக்கிட்டு ஓடினேன்.
Fedex ஆபிஸ் போன பொது மணி ஆறு. கவுண்டரில் இருந்த உயர்ந்த மனிதனிடம் இந்த பார்சல் நாளைக்கு கண்டிப்பா போயிடுமா அதில் உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா இப்பவே சொல்லிடு, இப்ப போயிட்டு திங்கக் கிழமை திரும்ப வர்றேன்னு சொன்னேன். Over Night Shipping கண்டிப்பா நாளைக்குப் போயிடும், ஆமா எதுக்கு இவ்வளவு கேக்கறே, அப்படி அதுல என்னதான் இருக்கு தங்கம் அல்லது ஏதாவது விலை உயர்ந்த பொருள் அனுப்பறியான்னு கேட்டான். அதுக்கு நான் இதுக்குள்ள இருப்பதுக்கு விலையே நிர்ணயம் பண்ண முடியாது, தங்ககத்தை விலை கொடுத்து வாங்கிக்கலாம் இதுக்குள்ள இருப்பதை நீயோ நானோ என்ன பண்ணாலும் உருவாக்க முடியாது என்றேன். Hmm, what is so precious 'bout it என்று என்று கேட்டுக்கொண்டே பார்சலின் மீது இருந்த National Milk Bank பேரைப் பார்த்த அவர் ஒ உள்ளே தாய்ப்பால் இருக்கா? இப்ப புரியுது உன் அக்கரைக்குக் காரணம் என்றார். உன் மனைவிக்குத்தான் எவ்வளவு தாராள குணம் அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெறித்துவிடு, தாய்ப்பாலை தானம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை, கிடைப்பவர்கள் எல்லோரும் தானம் செய்வதில்லை என்றார்.
அதுவரை இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டாத எனக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் பெருமை பிடிபடலை. ஆம் அந்த பார்சலில் இருந்தது 250 Ounce கிட்டத்தட்ட 7.5 லிட்டர் தாய்ப்பால். அது ஒரு பிறந்த குழந்தைக்கு இரண்டு வாரங்களுக்கான உணவு. தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி இம்சை அரசி இங்கே எழுதியிருக்கிறார்.பிறந்து ஆறு மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பெறுகின்றன என பல மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. குழந்தை பெற்ற தாய்மார்களில் பலருக்கு தேவையான அளவுக்கு பால் சுரப்பதில்லை, அதில் ஒரு சில குழந்தைகளின் பசியை என் மனைவி போக்கியிருக்கிறாள், அதை கொண்டு சேர்த்த புண்ணியத்தை நான் கட்டிகொண்டேன். பகிர்ந்தளிக்கும் அளவுக்கு வழங்கிய கடவுளுக்கு நன்றியையும, பகிர்ந்த என் மனைவிக்குப் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது கண்டிப்பா தம்பட்டம் அடிக்க அல்ல. ரத்த தானம், கண்தானம், உறுப்பு தானம் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும், பலர் செய்தும் வருகிறோம். தாய்ப்பால் தானம் பற்றிய அறிதல் மிகக் குறைவு, அதற்காகவே இப்பதிவு. இதைப் படிக்கும் யாரேனும் ஒருவர் இன்னொரு தாய் தன்னிடம் உபரியாக இருக்கும் தாய்ப்பாலை தானம் செய்யத் தூண்டினால் அதுவே போதும்.
இதுக்காக என் மனைவி, National Milk Bank இடம் கேட்டது எங்க மகள் பெயரில் ஒரு ThankYou Note. தனக்கு மட்டுமே உரித்தான சொத்தை அவள் சக குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறாள், இது அவளுக்கு இன்று புரியாது. விவரம் புரியும் போது விளக்கி இந்த ThankYou Note காட்ட எண்ணம். "சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப் படுத்திப் பாக்கறதுதான்" இதை எங்க மகளின் மனதில் விதைக்க எண்ணியுள்ளோம்,
நீ பிறந்ததிலிருந்தே உனக்கானதை பகிர்ந்தவள் என்று சொல்லி புரியவைக்க இது உதவியா இருக்கும்.
அமெரிக்காவில் இதை National Milk Bank என்ற சேவை நிறுவனம் செய்து வருகிறது (www.nationalmilkbank.org). நீங்க தயாரா இருந்தாலும் அவர்கள் உடனே பெற்றுக் கொள்வதில்லை, முதலில் தாயின் ரத்தத்தைப் பரிசோதனை செய்து பாக்கறாங்க, பின்னர் தாயின் மருத்துவரிடமும் குழந்தையின் மருத்துவரிடமும் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று அவங்களுக்கு அனுப்பனும். அப்புறம்தான் ஃப்ரீசர் பேக்கை அனுப்புவாங்க. குறிப்பிட்ட அளவு பால் சேர்ந்ததும் அவங்க செலவில் கொரியர் அனுப்பிடலாம். யாரிடமிருந்து பெறப்பட்டது யார் யாருக்கு வழங்கப் பட்டது போன்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப் படுகின்றன.
வாய்ப்பும், விருப்பமும் இருப்பவர்கள் உபரி தாய்ப்பாலை தானமாக வழங்கலாம், வாய்ப்பில்லாதவர்கள் இந்நிறுவனத்துக்குப் பொருளதவி வழங்கலாமே !!!
Sunday, August 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)
61 comments:
இதில் ஆயிரம் குறுக்கு கேள்விகள் வரலாம்..அத்தனைக்கும் தாய்மை எனும் தயாள குணம் பதில் சொல்லும் ...இந்த சிறப்பான தூண்டுதல் செய்கைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்களுக்கும் உங்கள் ஸ்ரீமதிக்கும்....
// என்னிக்கு நான் தயாரா இல்லையோ அன்னிக்குத்தான் நீ சரியான நேரத்துக்கு வருவ, // இந்த செண்டிமெண்ட் உலகளாவியது போல
வாவ்... நல்ல விசயம்...
நம்ம ஊர்ல பெத்த புள்ளைக்கே பால் தர்றதில்லை.. அழகு போய்டுமாம்... :(
மனம் ம/நெ/கிழ வைத்த செய்தி. மனைவிக்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
அண்ணிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் தல. ரொம்ப நல்ல விஷயம்
பா.ஸ்ரீ என்ன சொல்றதுன்னு தெரியலை.. ரொம்ப பெரிய விசயம் நீங்க பண்ணிருக்கறது.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் கோடி...
நன்றி பத்மநாபன்
நன்றி அகமது சுபைர்
நன்றி கவிநயா
நன்றி கார்த்திக்
ராமசாமி, இதில் என் பங்கு ஒண்ணுமில்லை, வாழ்த்துக்கு நன்றி
I am proud to have a person named Sriranjani Sriram as my daughter.
ரொம்ப நல்ல விஷயம் ஸ்ரீ.. நாட்டில் மழை பெய்ய நீங்கள் ரெண்டு பேரும் கூட மறைமுகக் காரணமாய் இருக்கீங்க.. (#not joking)
எத்தனை பெரிய மனது உங்களுக்கும் சகோதரிக்கும்...
இங்கே இந்தியாவில் தாய்ப்பாலின் மருத்துவ குணங்கள் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கிறது.... பல தாய்மார்களுக்கு பால் இல்லை... இருப்பவர்கள் தமது குழந்தைக்கே கொடுப்பதில்லை...
உங்கள் இருவரின் நல்ல மனதுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்....
கண்டிப்பாக அதிசயிக்கிறேன், இப்படி ஒன்று இருப்பதே இன்றுதான் தெரியும்.
இது கண்டிப்பா தம்பட்டம் அடிக்க அல்ல. ரத்த தானம், கண்தானம், உறுப்பு தானம் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும், பலர் செய்தும் வருகிறோம். தாய்ப்பால் தானம் பற்றிய அறிதல் மிகக் குறைவு, அதற்காகவே இப்பதிவு. இதைப் படிக்கும் யாரேனும் ஒருவர் இன்னொரு தாய் தன்னிடம் உபரியாக இருக்கும் தாய்ப்பாலை தானம் செய்யத் தூண்டினால் அதுவே போதும்./
!!உண்மைதான் இதுவும் ஒருதானம் தான்..
// என்னிக்கு நான் தயாரா இல்லையோ அன்னிக்குத்தான் நீ சரியான நேரத்துக்கு வருவ, //
இது ஆண்களுக்குள்ள மொத்த குணம்..hahahaa
நல்ல அழகாக பல கதைகளை சொல்லி
கருத்தை தந்தீர்கள்..
நல்ல பதிவு,,
வாழ்த்துக்கள்..
http://sempakam.blogspot.com
உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்! ஹிஹிஹி! குழந்தைக்கும்தான்!
I am saluting your wife!! :-))
Great! :-)
மிக அருமையான விஷயம் ஸ்ரீராம் சார்.வாழ்த்துக்கள்.
Well done Sri.
அருமையான விஷயம் ஸ்ரீராம்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
கிரேட் ஸ்ரீ..சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்..
//varadarajan said...
I am proud to have a person named Sriranjani Sriram as my daughter.//
:))))))))
சிரிப்பையே எனது பதிலாகத் தந்து கடக்கிறேன்
நன்றி மணி
நன்றி வெங்கட் நாகராஜ்
நன்றி குடுகுடு, உங்களுக்கு இது பத்தி இதுவரை தெரியாயது ஆச்சரியமே
நன்றி விடிவெள்ளி
நன்றி திவா
நன்றி வெங்கட்டு
நன்றி அமுதா, சாரை கட் பண்ணிட்டு ஸ்ரீராம் என்றே சொல்லுங்க
நன்றி பாலாண்ணா
நன்றி வேலன் அண்ணாச்சி
நன்றி மணிஜி
யூ போத் ஆர் க்ரேட் :))
பாராட்ட வார்த்தைகள் கிடைக்கல ஸ்ரீ...
பாஸ்டன்ஜி..
பாராட்ட வார்த்தைகளில்லை..
உங்கள் இருவரையும் வணங்குகிறேன்..!
பாராட்ட வார்த்தைகள் கிடைக்கல!
GREAT SERVICE SRIRAM!
MY GREETING TO YOURS MRS & YOUR DAUGHTER!
நன்றி கண்ணா
நன்றி உ த சரவணன்,
நீங்க வணங்குற அளவுக்கெல்லாம் எதுவும் பண்ணிட்டதா நான் நம்ப்வில்லை. அப்படி ஏதும் இருந்தாலும் அதை மண்டைக்கு ஏற்றிக் கொள்ள உத்தேசமில்லை
நன்றி விஜயசங்கர்
நன்றி லக்கி.
தாய்ப்பால் சேமிப்பகம் குறித்து அறியத்தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துகளும்.
இந்தியாவில் இருக்கும்போது, பால் தேவைக்கு அதிகம் சுரந்தால், உறவினர் குழந்தைகளை வைத்துப் பாலூட்டுவதுண்டு. (கிராமங்களில் உறவினர்கள் அருகருகே வசிப்பதால் உறவுக்குழந்தைகள்). இங்கே அமீரகம் வந்தபிறகு அதற்கு வழியில்லாமல் பால்கட்டி அவஸ்தையும் பட்டதுண்டு. இப்படி தாய்ப்பால் சேமிப்பகங்கள் இருப்பது இருதரப்பிற்குமே வரப்பிரசாதம்.
//நம்ம ஊர்ல பெத்த புள்ளைக்கே பால் தர்றதில்லை.. அழகு போய்டுமாம்...//
உங்களுக்குத் தெரிஞ்சு எத்தினி பேர் அப்படி கொடுக்காம இருந்திருக்காங்க பாஸ்?
ஹுசைனம்மா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எல்லாத் தாய்மார்களையும் சொல்ல முடியாது என்றாலும், மேல் தட்டு பெண்களில் சிலர் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்பதை அறிவீர்கள்தானே?
மச்சி..
பெரிய விஷயம்..நம்ம நாட்டுல இதை சொல்லவே யோசிப்பான்... ஏன்னா நம்ம ஆளுங்க புத்தி அப்படித்தான்..
இது தம்பட்டம் அல்ல... இப்படி ஒரு விஷயம் இருக்கறதே எனக்கு எல்லாம் இப்பதான் தெரியும்..
நான் ஆரம்பத்துலே இருந்தே சொல்லறது இது போலான விஷயங்களை வாரத்துக்கு ரெண்டாவது எழுதுன்னு சொல்லறதுக்கான அர்த்தத்தை இப்பவாவது புரிஞ்சிக்கோ...
ஸ்ரீஹிதாவுக்கு அவள் வளர்ந்து பெரியவள் ஆகும் நேரம் அந்த தேங்ஸ் நோட்டை பார்க்கும் போது அவள் அம்மாவை இன்னும் காதலுடன் பார்ப்பாள்...
உனக்கும் உன் மனைவிக்கு எனது வாழ்த்துகள்.. அதை பற்றி ஒரு பதிவு எழுதியமைக்கும் சேர்த்து....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
Thanks மச்சி, முடிந்த அளவுக்கு எழுதறேன் ஜாக்கி
தல,
மிகப் பெரிய விஷயம். இங்கேயும் சில குழந்தைகளுக்கு பிறந்தவுடன் பிரச்சனைகள் வரும்போது தாய் ஓரு மருத்துவமனையிலும், குழந்தை அவசர சிகிச்சைக்காக வேறு இடத்திலும் இருக்க நேரிடும்போது அதற்கென வடிவமைக்கப் பட்ட ப்ளாஸ்கில் தாயிடமிருந்து பால் தருவிக்கப் பட்டு குழந்தைக்கு கொடுப்பார்கள். இருக்கும் தூரத்தைப் பொருத்து அந்தத் தந்தை அல்லாடுவார். காலதாமதத்தால் சில முறை பயன்படுத்த முடியாமல் போவதும் நடக்கும். இந்த செய்தி புதுசு. சிறப்பானதும் கூட.
வாழ்த்துக்கள். அறியத்தந்தமைக்கு நன்றி.
நன்றி பபாஷா
Great... you can't preserve a better gift to your daughter than this 'thank you note'
You're right, very less awareness about this... blog is a good medium for sure. Great
ரொம்ப நல்ல, பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
ஸ்ரீராம்ஜி, அற்புதமான பணி.. நெகிழ்ந்து போய் வார்த்தைகள் வர மறுக்கின்றன.. வாழ்த்துகள்.. :)
இனிய ஸ்ரீ,
இப்படிப்பட்ட சேவையையும் தேவையையும் பற்றி இப்போதே அறிகிறேன்.
இதைச் செய்வதும் அறியத்தருவதும் இந்திய சமூகத்தில் சற்று கடினம்.
அனைத்திற்கும் ஒரு தொடக்கம் தானே தேவை.
Your concern is great.
அன்பு நித்யன்
நல்ல பதிவு ! உபயோகம் உள்ளது !
Very nice! As a twinmom, I know how precious breast milk is. Many people think that once you delivered you would get milk naturally which is not true. Not all people get milk and on top of it lot of other issues like, latching, quantity of milk regardless of eating etc... Donating Milk is big thing. It is not only physically exhausting with all the pumping also very time consuming with a new born.
நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி அமைதி சாரல்
நன்றி குரு
நன்றி ஷண்முகா
A and A
Thanks for your appreciation and concern.
தாய்ப்பால் தானத்தை விடவும் சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. என்ன ஒரு நல்ல செயல். தங்கள் மனைவிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்; நானும் இது போல் தானம் செய்ய ஆசைப்பட்டேன்; இங்கிலாந்தில் வசதியும் இருந்தது, மருத்துவமனையில் அதுகுறித்து விசாரித்தும் வைத்திருந்தேன்; ஆனால் வாய்ப்பு பத்து மாதத்திலேயே தீர்ந்து போனது எனக்கு.
இந்தியாவின் சீதோஷ்ண நிலை இது போல் தாய்ப்பால் தானத்திற்கு உகந்ததா என்று தெரியவில்லை; ஏதோ ஒரு புத்தகத்தில் தாய்ப்பாலை ஆறு மணிநேரத்துக்கு மேல் சேமித்து வைத்தல் கூடாது என்று படித்தேன். உண்மை எதுவென்று புரியவில்லை .
மீண்டும் உங்கள் நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள்.
நன்றி பிரதீபா..
தாய்ப்பாலை 6 மணிநேரம் வெளியிலும், 6 நாட்கள் ரெஃப்ரிஜிரேட்டரிலும், 6 மாதங்கள் ஃப்ரீசரிலும் வைத்திருந்து உபயோகிக்கலாம்.
This is a good attempt and it will make lot of followers in future.
Amarnath
ஸ்ரீராம்.. உங்க அனுமதியோடு இந்த போஸ்டை குலேபகாவலியில் ஷேர் செய்யவா?
வாழ்த்துக்கள் - உங்கள் மனைவிக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த உங்களுக்கும். தாய்ப்பால் தானம் பற்றி கேள்விப்பட்டதில்லை, பகிர்ந்தமைக்கு நன்றி.
Bro,
Your blog is one of my fav, but didnt get a chance to read this entry,really impressed and came know there are lot of ways we can help this society.convey my wishes to sister and my pretty friend Srihitha (spelling correcta thala!!)
"namakuriya valviyal snathosangalodu aduthavaryaum santhosika muyala vendum"(peelingayita ippadi ethuna varum,kadnukatheenga).
Take care
SivA
நன்றி அமர்
தாராளமா செய்யுங்க குருவே, அனுமதியெல்லாம் எதுக்கு?
நன்றி Sh....
நன்றி சிவா, ஸ்பெல்லிங் சரிதான்
ரொம்ப நல்ல விஷயம் பண்றீங்க , வாழ்த்துக்கள்!
சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி
அக்காவுக்கு இங்க இருந்தே ஒரு நமஸ்காரம் பண்ணிக்கறேன். அப்பாவுக்கும் பாஸ்டன் பட்டுகுட்டிக்கும் வாழ்த்துக்கள்!!
நன்றி இளயதாசன்
நன்றி தக்குடு பாண்டி
Dear Sriram,
I got a link of your Blog from Jackie sekar's web. I am visiting your blog for the first time. and what i see /read is something amazing it was really touching to know about this. i felt overwhelmed
I salute you and your wife for such a noble deed. i pray to god that he showers you,your wife, children and your generation with all the prosperities.
Idhukku mela ezhutha mudialla
Post a Comment