Wednesday, October 21, 2009

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க - பகுதி 6

முந்தைய அ ஆ பகுதிகளை இங்கே காணலாம்.

என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குறிய பாஸ்டன் ஸ்ரீராம் வணக்கத்துடனும் தீபாவளி வாழ்த்துக்களுடனும் உஙகளை மொக்கை போட அடுத்த போஸ்டுடன் வந்து விட்டேன் (தீபாவளி லீவில் அடுத்தடுத்து தமிழ் படங்கள் பாத்தா இப்படித்தான் எக்குத்தப்பா வரும்)

அ ஆ ஐந்தாம் பாகத்தில் சொன்னா மாதிரி இந்த பகுதியில் singlular/Plural Form இல்லாத வார்த்தைகள் பற்றி எழுத நெனச்சிருந்தேன், ஆனா அவை பற்றி எழுதிக் கொடுக்க மண்டபத்தில ஆளில்லாத காரணத்தினால், இந்த பதிவில் உபயோகத்தில் இருக்கும் சில தவறான / ஆங்கிலத்தில் இல்லாத/Native Speakers of English உபயோகிக்காத வார்த்தைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

பல பேரின் பேச்சிலும் எழுத்திலும் அகராதியில் இல்லாத வார்த்தைகளைப் பார்த்திருக்கிறேன், English has adapted many words / Phrases for other languages ஆனா First First மாதிரி தப்பெல்லாம் adaptability யில் வராது. அப்படி சில வார்த்தைகளையும் அவற்றுக்கான சரியான வார்த்தைகளையும் இப்போ பாக்கலாம்.

1. Co-Brother : சகோதரிகளை மணந்த இரண்டுஆண்களின் உறவு முறையை சொல்ல இந்த வார்த்தை தென்னிந்தியாவில் மட்டும் பயன்படுத்தப் படுகிறது. இந்த மாதிரி ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது. Brother in Law என்பதே சரி..

2. Cousin Brother/Sister : உறவு முறையில் இன்னொரு தவறான வார்த்தை.Cousin is a relative with whom one shares a common ancestor. அண்ணன், அக்கா, தம்பி, தங்கைகளுக்கு பிறந்தவர்கள் அனைவரும் இடையில் இருக்கும் உறவு முறை Cousin. Aunt எவ்வளவுதான் பாசம் காட்டினாலும் Aunt Mother ஆக முடியாது. அதே போல, எவ்வளவுதான் சகோதரத்துவம் பேணினாலும் Cousin அண்ணனாவோ தங்கையாவோ ஆக முடியாது. He/She is my Cousin என்றுதான் சொல்லவேண்டும்.

3. Prepone : மிக அதிகமா உபயோகப் படுத்தப் படும் இன்னோரு தவறான வார்ததை. ஒரு காரியம் நடக்க குறித்த நேரத்தில் நடக்காமல் தள்ளிபோனால் அது Postponement, அதுவே குறித்த நேரத்துக்கு முன்னரே நடந்தா அது Advancement. Prepone என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது. I advanced my trip to USA by a week என்பதே சரி..

4. Roundtana : இந்த மாதிரி ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் இல்லாததால்,ஸ்பெல்லிங் சரியா தப்பான்னு கூடத் தெரியல. "Round About" எப்படி தமிழகத்தில் மட்டும் மருவி ரவுண்டானா ஆச்சுன்னு தெரியல. இனிமேலாவது Round About என்று சொல்லிப் பழகுவோம்.

5. Eversilver : இப்படி ஒரு உலோகம் இருந்தால் அது வெள்ளியை (Silver) விட விலை உயர்ந்த்தாக இருக்க வேண்டும், ஏன்னா அதுதான் Eversilver ஆச்சே.. Stainless Steel என்பதே இதன் சரியான பெயர். இது எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் பேசும் போது எவர்சில்வர் டம்ப்ளர் என்றுதான் சொல்கிறோம்.

அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்னு சொல்லாம, இனிமேலாவது இந்த மாதிரி ஆங்கிலத்தில் இல்லாத வார்த்தைகளை உபயோகிப்பதை நிறுத்துவோம்.

உண்மைத்தமிழன் குறும்படம் எடுக்கவும் கதை எழுதவும் தான் சவால் விட்டிருந்தார், அவர் அளவுக்கு நீண்ண்ண்ண்ட பதிவுகள் எழுத இல்லை, எனவே இங்க நிறுத்திக்கிட்டு அ ஆ பே வாங்க அடுத்த பகுதியில் சில தவறான வார்த்தை உபயோகஙகள் பத்திப் பாக்கலாம்...

42 comments:

பாலா said...

தப்பே பண்ணலைன்னு நினைச்சேன்.

கடைசி இரண்டு வார்த்தைகளை நானும் யூஸ் பண்ணிட்டுதான் இருக்கேன் (இங்க எவர்சில்வர் பாத்திரம் இல்லையே)! :) :)

===

எங்க தமிழ்மணப பட்டையை காணாம்?

வால்பையன் said...

மிக அருமையாக எளிமையாக விளக்கிணீர்கள்!

நன்றி ஆசானே!

sriram said...

பாலா,
நெறய பேர் தப்புன்னே தெரியாம பல சொற்களை / பதங்களை உபயோகிக்கறாங்க, அதுக்குத்தான் இந்த பதிவு.
யாராவது பின்னூட்டம் போட்டால் தானே தமிழ்மணத்தின் வல்து பக்கத்தில் வரும்..
வேறு ஏதாவது காணோமா? போன் பண்ணிக் கேட்டுக்கறேன்..

sriram said...

வாலு
நான் ஆசானெல்லாம் ஒண்ணுமில்ல, எனக்குத் தெரிஞ்ச சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி, அவ்வளவுதான்.
I am neither a teacher, nor want to be one...

rathinamuthu said...

நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் செய்திகள் சேர்க்கலாமோ என்று தோன்றுகிறது. நிறைய நாள் இடைவெளி வேறு. இரூந்த்தாலும் வாசிக்க தவறுவதில்லை. prepone, eversilver தெரிந்தும் தவறு செய்கிறேன். திருத்திக் கொள்கிறேன். Co brother, rountana, cousin brother/sister தவறுகளை எனக்கு தெரியாமலேயே தவிர்த்து இருக்கிறேன். co brothher என்று சொல்லும் போதெ எதோ தவறு இருப்பதாக உணர்ந்தேன். rountana இங்கு UAE வந்த பிறகு புரிந்தது. நிறைய இடைவெளி விடாமல் தொடர வேண்டுகிறேன்.

kishore said...

நல்லா இருக்கு ஸ்ரீராம். சுலபமா புரிஞ்சிக்கிற மாதிரி சொல்றிங்க..

sriram said...

நன்றி ரத்தின முத்து,
இந்த வார்த்தைகளை நீங்க சரியா சொல்வது குறித்து மகிழ்ச்சி.
இடைவெளி : அ ஆ வில் இடைவெளி வந்து விட்டது, ஆனால் மத்த டாபிக்ஸ் எழுத்றேன், இப்ப கூட Interview, Resume making, Phone etiquette, இன்னும் இரண்டு அ ஆ பாகங்கள் குறித்து யோசித்து வைத்து இருக்கிறேன்.
தொடர் ஆதரவுக்கு நன்றி

sriram said...

நன்றி கிஷோர், 4 பேருக்கு உபயோகமா இருந்தா சந்தோஷம்

Prabhu said...

கடைசி ரெண்டு வார்த்தைகளுக்கு பல காலமாக தடவிக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு தட்டு பட்டிருச்சு.

பர்ஸ்ட் கஸினுன்னு ஒரு வார்த்தையே ஒரு ஆங்கில புத்தகத்தில தான் படிச்சேன். இல்லன்றீங்களே?

ஸ்ரீராம். said...

ரௌண்டானா, co-brother லாம் நானும் உபயோகம் செய்யறேன். சமீபத்தில்தான் prepone தொடங்கினேன். தப்பா...? அதே போல intro என்ற வார்த்தையும் தப்புதானே...

sriram said...

நன்றி பப்பு
1st Cousin / 2nd Cousin பத்தி இன்னும் கொஞ்சம் தேடிப்பாக்கறேன், அதுவரை அந்த பகுதிய எடுக்கறேன்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

sriram said...

ஸ்ரீராம்,
Prepone - கண்டிப்பா தப்பு, அது போன்ற வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது.
Intro - இது Introduction இன் Short form. இத தப்புன்னு சொல்ல முடியாது.

வெண்ணிற இரவுகள்....! said...

நல்லா இருந்தது .............நாங்களும் இனிமேல்
சரியாக பயன் படுத்துவோம்

கௌதமன் said...

பயனுள்ள கட்டுரை. பதிவிற்கு நன்றி. ஒரே ஒரு டவுட்டு - ரௌண்டானா கிடையாது என்றால் - டாணாக்காரர் என்ற சொல் - டிராபிக் போலீசுக்கு வந்தது எப்பிடி?

ambi said...

Roundana, eversilver - Good one.

Tamilishla 17 votes polirukku. :))

Where is porkedi..?

Shabeer said...

மிகவும் உபயோகமான நல்ல தகவல்கள். தயவு செய்து தொடருங்கள்

sriram said...

நன்றி வெண்ணிற இரவுகள் , ஆமா வெண்ணிற இரவுகள்னா என்ன- Snowy Night ஆ?

sriram said...

நன்றி கவுதமன்,
அது தாணாக்காரர், டாணாக்காரர் அல்ல என நினைக்கிறேன், எப்படி இருந்தாலும் எனக்கு அர்த்தம் தெரியாது..

sriram said...

நன்றி அம்பி
போன போஸ்ட் வரைக்கும் தமிலிஷ்ல சேத்ததே கிடையாது, நண்பர் ஹாலிவுட் பாலா தான் சொல்லித்தந்தார், அவருக்குத்தான் நன்றி சொல்லணும்.

பொற்கேடி- தெரியல, ஆணி சாஸ்தின்னு அவங்க பக்கத்திலேயும் சொல்லி இருந்தாங்க, கண்டிப்பா வருவாங்க...

sriram said...

நன்றி ஷபீர், கண்டிப்பா தொடர்ந்து எழுத முயற்சி பண்றேன்

ஆதி மனிதன் said...

அது போல non-vegetarian என்ற வார்த்தை ஆங்கில அகராதியில் இல்லை என்பதாக கேள்விப் பட்டிருக்கேன். அப்படித்தானே?

sriram said...

ஆதிமனிதன்
எனக்குத் தெரிந்த வரையில் அப்படித்தான், இந்த வார்த்தையும் அடுத்த லிஸ்டில் இருக்கு

கௌதமன் said...

Can't we use non as a prefix to any noun? non simply means not.

ஸ்ரீராம். said...

//"உண்மைத்தமிழன் குறும்படம் எடுக்கவும் கதை எழுதவும் தான் சவால் விட்டிருந்தார்"//

அதனால் என்ன.... நீங்கள்தான் "குறும்பாடம்" எடுக்கிறீர்களே...!

sriram said...

கவுதமன்,

அப்படித்தான் வரும்னு நீங்க சொன்னா கேட்டுக்கறேன். சந்தேகமா கேட்டீங்கன்னா -சத்தியமா தெரியல, கத்துகிட்டு வந்து சொல்றேன். வேறு யாராவது சொல்றாங்களான்னும் பாப்போம், மொழி வல்லுனர் பொற்கொடி இன்னும் வரல, அவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்

sriram said...

ஸ்ரீராம்,
குறும்பு???

ஷைலஜா said...

எவர்சில்வர் வார்த்தை எவர்க்ரீனா எல்லார் கிட்டயும் இருக்கு!!!!
கசின் ப்ரதர் கசின் சிஸ்டரும் பரவலா இருக்கு .. ரவுண்டானா தப்புன்னு எனக்கு இப்போ புரிஞ்சுது நானும் இப்படியேதான் சொல்லிட்டு இருந்தேன்:) எளிமையா அழகா சொல்றீங்க ப்ரதர் வாழ்க உங்க தொண்டு!

sriram said...

யக்கா,
எகன மொகனயில தாக்கறீங்க...
நாலு பேருக்கு உபயோகமா இருக்கறதுல இரு திருப்தி
நன்றி ஷைலஜா அக்கா...

Anonymous said...

Good one.. Prepone, Eversilver - New info for me. Thanks!

sriram said...

நன்றி மித்து...

முரளிகண்ணன் said...

நன்றாக விளக்கியுள்ளீர்கள்,

நன்றி

Anonymous said...

Prepone, ofcourse the invention(!) of indians, has already found its place in dictionaries. Nothing wrong in using it.

Eversilver came into use because of the marketing term used by the stainless steel utencil producers. Like, in tamilnadu (even india) we still use 'xerox' for photo copies. Surely not to be used.

Words like cousin sister, roundana, co-brother etc. are entirely wrong.

sriram said...

நன்றி முரளி கண்ணன்

sriram said...

நன்றி அனானி அன்பரே
Prepone - இதனை அகராதியில் சேர்த்துவிட்டதாக சொல்வதில் எனக்கு வேறு கருத்து உண்டு, இன்னிக்கும் Wikipedia / oxford dictionary / word web ஆகியவற்றில் இது கிடையாது

Prabhu said...

தாணாக்காரர்////

தாணா என்றால் இந்தியில் காவல் நிலையம் என்று அர்த்தம். அதனால் அவர் தாணாக்காரராக அழைக்கப் பட்டிருக்கலாம்.

மணிகண்டன் said...

sriram, prepone ன்னு ஒரு வார்த்தை கிடையாதுன்னு தெரியும். பட், ஏகப்பட்ட பேரு (நீங்க சொல்ற native speakers கூட) பேசும் வார்த்தை ஆகி பலவருஷம் ஆகுது. I also think that this is included in oxford. need to verify

மணிகண்டன் said...

இப்பதான் உங்களோட முந்தைய பதிவுகள் எல்லாம் படிக்கறேன். கலக்கல். சேவையை தொடருங்க. ரீடர்ல சேர்த்துட்டேன். கத்துக்கலாம்.

Kumar.B said...

"prepone" we are quite often use this word in our writing and speaking language. One of my senior Jap expat made a big fuss when i used this word to communicate him. he sent a 3page mail about nonavailability of 'PREPONE". Nice post

sriram said...

நன்றி மணிகண்டன், நீங்களும் தெரிஞ்சத பகிர்ந்து கொள்ளுங்க, எல்லாரும் கத்துக்கலாம்.

sriram said...

நன்றி குமார்..

இதுதான் நான் சொல்ல முனைவது..
இந்தியர்களுடன் பேசும்போது, Cousin Brother, Co Brother, Roundana என்றெல்லாம் சொன்னால் வித்தியாசம் தெரியாது ஆனால் ஆங்கிலம் சரியா பேசரவங்க கூட பேசும் போது இப்படி பேசினால் சிரிப்பாஙக..

அப்புறம், Not trying to pick you.
jus read this instead of what you have written - you will understand the difference.

"prepone" - We use this word often while speaking or writing. One of my colleague who is from Japan made a big issue about using the word Prepone. I used this word while communicating with them and I got a 3 page Email explaining the NON EXISTENCE of the word PREPONE.

Kumar.B said...

done

D. Chandramouli said...

There was a Round Tana on Mount Road in Madras decades back. It was really an underground toilet facility. That is where Anna statue stands now. On the one side, the Ellis Road led to Triplicane, and on the other, once famous New Elphinstone theater stood and where movies like Chase a crooked shadow (taken in Tamil as Pudhiya Paravai) were screened.