Tuesday, September 22, 2009

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க பகுதி 5

நேற்றைய இடுகையின் கடைசியில் Porkodi goes to office everyday to read and write blogs,isn't it? யில் இருக்கும் தவறு என்னன்னு கேட்டிருந்தேன், ராஜாதி ராஜும் பொற்கொடியும் Porkodi goes to office everyday to read and write blogs,doesn't she? என்று இருக்க வேண்டுமென்று சரியாகச் சொல்லியிருந்தார்கள். இதற்கு பெயர் Question Tag, இது பற்றி இந்தப் பதிவில் பாக்கலாம்.

Question Tag :

ஒரு Positive Statement அல்லது Negative Statement ஐ (பொதுவாக Declarative Statement) கேள்வியாக மாத்துவதற்கு உபயோகப்
படுத்தப் படுகிறது. A brief question that follows a statement in which the person asking it seeking confirmation or denial of
the statement.


ரொம்ப குழப்பமா இருக்கா, இப்போ ஒரு உதாரணம் சொல்றேன் பாருங்க : You did not go to office yesterday and watched cricket match, Isn't it என்று பலபேர் சொல்லக் கேட்டிருப்பீங்க, இதில் வரும் “Is not it" என்பது தான் Question tag.

நாம் சொன்னதை சரி பார்க்கவும், கேட்பவரது Acceptance / confiramation ஐ பெறுவதற்கும் இது பயன்படுகிறது. ஒருவரிடம் வேலை
செய்யவோ அலலது உதவி கேக்கும் போதோ polite ஆ கேக்கவும் இது பயன்படும்.
Auxiliary, Negation,Intonation, Emphasis ன்னு இதில் பல விஷயங்கள் இருக்கு. இதயெல்லாம் விவரமா சொன்னா wiki பக்கத்த படிக்கறா
மாதிரி இருக்கும். வாக்கியம் அமைப்பது எல்லாத்துக்கும் ஒரே மாதிரிதான், அத மட்டும் இப்போ பாப்போம். மேலதிக தகவல் தேவைப்படுவோர் விக்கி வாத்தியாரைக்
கேட்டுக்கலாம்.

ஒரு Statement ஐ சொல்லிவிட்டு Question tag சேக்கணும்னா, அந்த ஸ்டேட்மெண்டில் இருக்கும் is/was/does/did/do மட்டும் மாத்தி tag question அமைக்க வேண்டும்.

Examples of Positive statements


He is Smart, Isn't he? (இங்கு அந்த He க்கு ஸ்ரீராம் என பொருள் கொள்க ஹி ஹி)
It was a great match , wasn't it?
He did a great job, didn't he?
Porkodi goes to office (porkodi does go to office), doesn't she
You're coming, aren't you?
I told you do this yesterday, Didn't I?


இதுக்கெல்லாம் Isn't it ன்னு ஒரே Question Tag உபயோகிப்பதை பார்த்திருப்பீர்களே. வாக்கியத்தில் உள்ள is/was/ are/ did/ does/ do
உடன் not ஐ தேர்ந்தெடுத்து I/ You/ He / She இவற்றில் பொருத்தமானதை சேர்த்து பேசிப்பழகுங்கள்.

இப்போ சில Negative Statement உதாரணங்கள்

He is not an Indian, Is he?
It wasn't a great movie, was it?
You didn't do this, did you?
Your wife doesn't need your help in cooking, does she?
Sneha, you don't wear swimsuits,do you?
They were not part the team, were they?

வித்தியாசம் புரியுதா? இந்த வாக்கியங்களில் இருக்கும் not ஐ எடுத்துவிட்டு Question Tag அமைக்க வேண்டும்.

ரொம்ப Grammatical ஆ போகாம விளக்க ட்ரை பண்ணியிருக்கேன். எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

அப்புறம், News போன்ற Plural இல்லாத வார்த்தைகள் பற்றி கேள்விப் பட்டிருப்பீங்க, Singular இல்லாத வார்த்தைகளை ஒண்ணு ரெண்டு சொல்லுங்க..
ஒருமை - பன்மை (எருமை இல்லீங்க - singular- pluaral) பற்றி அடுத்த அழகா ஆங்கிலம் பகுதியில் பாக்கலாம்.

52 comments:

Porkodi (பொற்கொடி) said...

arumaiyana padhivu! vadaiyum nallave irukku! (naan oru 4 varathuku template reply than adikadi poduven.)

Porkodi (பொற்கொடி) said...

I am beautiful, ain't I (aren't I)? - indha tag sollve illiye?

Anonymous said...

Nouns that don have singular form: Scissors, Jeans.. Am i right?

Anonymous said...

cattle, clothes, pants, pliers, scissors, shorts, trousers are some plural words without singular form.

thyag

பாலா said...

நான் திரும்பவும் சொல்லுறேன்...! ப்ளாக் எழுத/படிக்க மட்டுமே... ஆஃபீஸ் செல்வதால்...

அந்த வாக்கியத்தில்.. எந்த தப்பும் இல்லை.. இல்லை.. இல்லை..! நெற்றிக்கண்ணை திறந்தாலும்.. குற்றமில்லை..!!!
=====

இந்த பதிவு சூப்பர்! :) கடைசி கேள்விக்கு பதில் தெரியல...!

Unknown said...

I just read the all the posts. :)))Keep up the good work bro..
I heard some guys called Jeans a Jean pant..is that Jeans Pant or,jean pants or simply jeans???

ambi said...

'காமன் மேனுக்கும்' புரியற மாதிரி ரொம்ப எளிமையா ஆனா வலிமையா எழுதி இருக்கீங்க ஸ்ரீராம். :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

சேர்த்து வைச்சு படிச்சிட்டேன்.

:) அடுத்த பகுதி எதிர்பார்த்து.

sriram said...

வாங்க பொற்கொடி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
(எனக்கும் டெம்ப்ளேட் பதில் சொல்லத் தெரியும்)
//I am beautiful, ain't I// இத நீங்க சொல்லலாம், நான் சொல்லக் கூடாது...

sriram said...

மித்து
மிகச்சரி..
வருகைக்கு நன்றி

sriram said...

வாங்க தியாக்,
லிஸ்டே போட்டுட்டீங்க..
இது பற்றி அடுத்த இடுகை எழுத எண்ணியுள்ளேன்.

sriram said...

Thanks Kamal.
It is called "Pair of Jeans". Pair of sunglasses is another example.

sriram said...

வாங்க ஹாலிவுட் பாலா,
எதுக்கு இந்த டென்ஷன். நான் பல முறை சொன்னா மாதிரி, அந்த வாக்கியத்தில் இருந்தது சொல் குற்றம் மட்டுமே.
நாம எல்லாருமே செஞ்சிக்கிட்டு இருக்கறதைப் போய் நான் தப்புன்னு சொல்வேனா?

sriram said...

அம்பி
உன்னைப்போல ஒருத்தன்லாம் பிளாக் எழுத, அத்த நான் படிக்க- எல்லாம் தலையெழுத்துன்னு சொல்றீங்களா??

sriram said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா
ரொம்ப சந்தோஷம்

rathinamuthu said...

மிக மிக நன்றாக இருந்தது. தொடருங்கள். அடுத்த பதிவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது எழுதுங்கள்.

Porkodi (பொற்கொடி) said...

Okay, you could have said "I am handsome, ain't I?" (Namale solikalana yaru solvaa..)

Point is how can you miss the important tag "ain't I, aren't I" - idhane niraya peruku theriyadhu? thopukaranam podunga, apo thaan next time important details ellam marakkama soluvinga :D

//அம்பி
உன்னைப்போல ஒருத்தன்லாம் பிளாக் எழுத, அத்த நான் படிக்க- எல்லாம் தலையெழுத்துன்னு சொல்றீங்களா??//

noothula oru vaasagam thala! :)

sriram said...

நன்றி முத்தையா..
அடிக்கடி எழுத முயற்சி பண்றேன்.
ஒரே பயம், என்கிட்ட இருக்கும் சரக்கு கம்மி, சீக்கிரமே தீந்து போயிடும்

sriram said...

பொற்கொடி
I am handsome, aren't I?"
I am handsome, aren't I?"
I am handsome, aren't I?"
I am handsome, aren't I?"
I am handsome, aren't I?"
I am handsome, aren't I?"
I am handsome, aren't I?"
I am handsome, aren't I?"
I am handsome, aren't I?"
I am handsome, aren't I?"
போதுமா???
போஸ்டையும் எடிட் பண்ணி சேத்துடறேன்...
நன்றி குறிப்பிடதற்கு...

Porkodi (பொற்கொடி) said...

sari sari kochikadhinga thala.. ellam "naanum rowdy thaan" nu try panradhu thaan :)

Unknown said...
This comment has been removed by the author.
sriram said...

கோவமெல்லாம் இல்ல பொற்கொடி
ain't I சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

Anonymous said...

//I am handsome, aren't I?" //

I thought this should be like

"I am handsome, Am I not?"

sriram said...

இல்லீங்க அனானி அன்பரே
I am handsome, Am I not என்பது question tag அல்ல.
Am I not handsome என்பது Straight Question.
when you say, Iam something, the question tag should aren't I only
Hope it is clear now.
Thanks for your visit...

கண்மணி/kanmani said...

சிங்குலர் இல்லாத வார்த்தை..ஹூம்..
GOD ,GREETINGS ,HEAVEN ,HELL ,...
பார்த்து..ஸ்ரீராம் பொற்கொடி வாத்தியாருக்கே பாடம் சொல்லித் தராங்க...அப்பால தனியா டியூஷ எடுக்கப் போறாங்க:))

கண்மணி/kanmani said...

ஏது டெஸ்ட் இடுகையெல்லாம் போட்டு டெலிட் செஞ்சிருக்கீங்க...

கண்மணி/kanmani said...
This comment has been removed by the author.
sriram said...

கண்மணி,
வால் பையன் கடவுளே இல்லங்கறார், இதுல GOD singular ஆ plural ஆன்னு வேற ஆராய்ச்சியா?? தாங்காது...
just kidding...
அந்த வார்த்தைகள் பற்றி அடுத்த ஆங்கிலம் பதிவில பாப்போம்.

//பொற்கொடி வாத்தியாருக்கே பாடம் சொல்லித் தராங்க...அப்பால தனியா டியூஷ எடுக்கப் போறாங்க:))//
யக்கா நான் வாத்தியாரும் இல்ல பொற்கொடி ஸ்டூடண்டும் இல்ல. அவங்க மெத்தப் படித்த மேதாவி. ::))
இந்த தளத்தில் நான் மட்டும் எழுதினாலும், பொற்கொடி, Sword Fish, Floraipuyal போன்ற பலரும் தவறுகளை சுட்டிக் காட்டி வருகின்றனர் (Including the ones I make). நமக்கு வேண்டியது அறிவு, அதை யார் தந்தால் என்ன??
பொற்கொடி Grammar டியூஷன் எடுத்தால் சேர நான் ரெடி.

இந்த பதிவு இரண்டு நாள் முன்னரே தயார், அப்போ தமிழ்மணத்தில் சேக்க முடியல, அதனால ஒரு டெஸ்ட் பதிவு போட்டுப்பாத்தேன், சரியான உடனே அத எடுத்திட்டேன்.

உங்க கேள்வி ஒரளவுக்குத்தான் புரியுது. எதுக்கும் அனானி அன்பருக்கு சொன்ன பதில இன்னொரு முறை படித்துப் பாருங்க, புரியலன்னா சொல்லுங்க, விளக்க முயற்சி பண்றேன்.

//If it is so,why dont u explain how and why it has to be taken the way u said.//
இது நான் சொல்வதல்ல, Question tag ஓட definition அப்படி.
ஒரு Statement ல இருக்கும் verb ஐ முதல்ல போட்டு, அடுத்து not இல்லன்னா சேக்கணும், இருந்தா ரிமூவ் பண்ணனும் கடைசில I ,You, we, they, he, she எது பொருத்தமோ அத போடணும்.
isn't she, do not they, don't you area some of the examples

Porkodi (பொற்கொடி) said...

////பொற்கொடி வாத்தியாருக்கே பாடம் சொல்லித் தராங்க...அப்பால தனியா டியூஷ எடுக்கப் போறாங்க:))//
யக்கா நான் வாத்தியாரும் இல்ல பொற்கொடி ஸ்டூடண்டும் இல்ல. அவங்க மெத்தப் படித்த மேதாவி. ::))
//

kanmani akka and sriram saar, yen indha kola veri??? naan samathu appavi kutti ponnu. apdiye appeatu aagikaren!

ஆதி மனிதன் said...

ஸ்ரீராம் அண்ணா. நீங்களாம் எங்களுக்கு ஆசிரியரா கிடைச்சிருந்தா நல்லா இருந்துருக்கும். சில சின்ன சின்ன points மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் என் நண்பர்களிடம் கூட பகிர்ந்துகொண்டேன். நானும் புதுசா கடை போட்டுருக்கேன். உங்களையும் ஒரு எடுத்துகாட்டா சொல்லி. வந்து பாருங்க... பாத்துட்டு வாழ்த்துங்க ...

sriram said...

ஆதி மனிதன்
உங்க கடைக்கு வந்து பின்னூட்டம் போட்டுட்டு follower ஆகி விட்டேன்.

கண்மணி/kanmani said...

ஸ்ரீராம் எனக்கு என்ன சந்தேகம்னா நீங்க basic english or spoken eng or stylish eng இதுல என்ன சொல்லித்தரப் போறிங்க.
ஃகொஸ்டியன் டேக் எல்லாம் பேசிக் தானே ?
i hope you got my points என்பதை
got it ?என்றோ

would you like to hv a cup of coffee என்பதை
hv abt a coffee?என்றோ சுருக்கமா
நீட்டி முழக்காமல் பேசக் கற்றுத் தருவது நோக்கம் என்றால் அடிப்படை தேவைதானா?
basic;spoken;grammer எல்லாம் தான் உங்க பதிவில் அடக்கம் என்றாலும் உங்க இஷ்டம்.ஆனால் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை வரிசைப் படுத்திக் கொடுத்தால் step by step ஆக இருக்கும்.

I am beautiful, ain't I (aren't I)?
இதுக்கு am i not?என வரலாமா என ஒருவர் கேட்டதுக்கு வரக்கூடாதுன்னு சொன்னீங்க.ஏன் என்பதற்கு விளக்கம்[for exemption] சொல்லுங்கன்னு சொன்னேன்.
அதுக்குத்தான் உதாரணமா ஸ்கூல்ல வழக்கமா கட்டுரை எழுதச் சொல்லும் தலைப்பு சொன்னேன்.
if i were the Prime Minister.....[நான் பிரதம மந்திரியாக இருந்தால்...]
you got my points?
if not appittuuuuuuuu.....

ஆதி மனிதன் said...

Thanks a lot Sriram. You the First!

வால்பையன் said...

//Auxiliary, Negation,Intonation, Emphasis//

நான் இன்னும் ஒண்ணாங்கிளாஸ் தான் தல, அதுகேத்த மாதிரி ஆரம்பிச்சிட்டு போங்க!

வால்பையன் said...

//Auxiliary, Negation,Intonation, Emphasis//

நான் இன்னும் ஒண்ணாங்கிளாஸ் தான் தல, அதுகேத்த மாதிரி ஆரம்பிச்சிட்டு போங்க!

sriram said...

கண்மணி
உங்களுக்கு 3 கேள்விகளுக்கு பதில் இதோ
1. முதல்ல ஒரு விஷயத்தை clear பண்ணிடறேன். எனக்கு Grammar அதிகமா (அதிகமா என்ன அதிகமா, சுத்தமா)
தெரியாது. எனவே நான் இலக்கண சுத்தமா ஆங்கிலம் எழுதுறதைப் பத்தி இப்போதைக்கு எழுத மாட்டேன். இந்த தொடரில்
நான் கேட்ட தவறுகளை (பேசுவதில்) சுட்டிக் காட்டி திருத்தங்களையும் சொல்லி வருகிறேன். கண்டிப்பா Basic english
கிடையாது.verb, adjective,tenses என்றெல்லாம் சொல்லி உங்களை நோகடிக்க மாட்டேன், ஏன்னா எனக்கு அதெல்லாம்
தெரியாது. Stylish English - இது இடத்தைப் பொருத்து வேறு படும். உதாரணமாக Hi in India, Hello in UK
and Hey in US. இதுவும் நமக்கு வேண்டாம். மிச்சமிருப்பது Spoken English, நாம இதில Concentrate பண்ணலாம்.
That Said (பாருங்க எழுதும் போதே ஒரு பாயிண்ட் Having said thatன்னு பெரிசா சொல்லாம / எழுதாம that saidன்னு
சின்னதா சொல்லாம் / எழுதலாம்). Question Tag எல்லாம் Basic English தானேன்னு கேக்கறீங்க. இதை பேசும் போது
எல்லோரும் உபயோகிக்கறோம், பலர் isn't it தவிற எதயும் சொல்வதில்லை, எல்லா statement க்கும் இதயே
சொல்கின்றனர், அத கரெக்ட் பண்ண முயற்சி பண்ணேன்.

2. சுருக்கமாக பேசுவது பற்றியும் எழுதணும், இன்னும் அது பற்றி இதுவரை எழுத வில்லை. Grammer கண்டிப்பாக
இப்போதைக்கு கிடையாது. Step by Step approach - இதை ஒரு feedback ஆக எடுத்துக் கொள்கிறேன்.
நான் முன்னரே சொன்னது போல் I am neither a teacher by profession nor interested to become one.
என்கிட்ட சிலபஸ் எல்லாம் ஒண்ணும் கிடையாது. நான் இதுவரை கேட்ட தவறுகளை List பண்ணி வருகிறேன்.
இனிமேல் முடிஞ்ச வரை தொடர்ச்சியா எழுத முயற்சி பண்றேன். உங்கள்ள யாராவது ஒரு list of topics சொன்னாலும்
எழுத முயற்சி பண்றேன். யாராவது சொல்லிக் கொடுக்க தயாரா இருந்தால், அவங்களும் இந்த தளத்தில் எழுதலாம்.
நமக்கு வேண்டியது விஷய ஞானம், அது எங்கிருந்து வந்தாலும் சந்தோஷமே.

3. I am Handsome; Am I not? இந்த வாக்கியத்தில் Grammatical ஆக தவ்றேதும் இல்லை. ஆனால் Question tag என்று
வரும் போது aren't I என்பதுதான் விதியின் உள் அடங்கும். Iam living in Boston என்பது இலக்கணப்படி சரியே, ஆனால்
I live in Boston என்று சொல்வது மரபு. இப்போ புரிகிறதா?

இதிலேயும் ஒரு பாயிண்ட் ஞாபகத்துக்கு வருது : பெண்களை குறிப்பிடும்போது Beautiful என்றும் (She is Beautiful) ஆண்களை
குறிப்பிடும் போது Handsome என்றும் (He is Handsome) சொல்ல வேண்டும், He is beautiful என்று சொல்வது மரபல்ல.

sriram said...

You are welcome Athimanithan,

sriram said...

வாலு
//Auxiliary, Negation,Intonation, Emphasis//
இதப் பத்தியெல்லாம் நான் விளக்கமா சொல்லவே இல்லயே.
தேவைப்பட்டா google பண்ணி பாக்கலாம்.
மத்தபடி Question tag concept புரிஞ்சுதா?

கண்மணி/kanmani said...

no harsh feelings sriram.[hope u won't have ]
we/i wish to know more about short and usable spoken english[phrases] and words of exemption catogories that we do not come through much.
no intention to hurt you any way bro
teek hi
good

கண்மணி/kanmani said...

thanks for your patient n responsible reply

sriram said...

Not at all Kanmani.
I really took your earlier comments in the right spirit. Your feedbacks are valuable and they will drive me in the right direction.
Not sure if my replies made you to think that I am upset. My apologies if it was so.

let me gather my thoughts about shortening the phrases and will come up with a post soon.

I am not hurt sis.

Sab theek hai, Chinta na karo.

//thanks for your patient n responsible reply//
you are welcome Kanmani. You are the first one who said I have patience ... :)

பாசகி said...

Ji very informative, thanks.

//He is Smart, Isn't he? (இங்கு அந்த He க்கு ஸ்ரீராம் என பொருள் கொள்க ஹி ஹி)//

நான் என் பேரை போட்டுக்குவேன் ஹிஹி.. ஹிஹி...

//ஒருமை - பன்மை//

எனக்கு தெரிஞ்சதெல்லாம் நேர்மை எருமை கருமை :) நீங்களே சொல்லிடுங்க. [courtesy: Senthil] :))

sriram said...

பாசகி,
கண்மணிக்கான என் பதிலைப் படிங்க
பெண்களுக்கு Beatiful வரும் Handsome வராது.
you are beautiful, Aren't you?

எனக்கு உங்க நேர்மை பிடிச்சிருக்கு..

பாசகி said...

அடபாவிங்களா(மன்னிச்சுக்கோங்க) நான் பையன் சார் அவ்வ்வ்வ்வ்வ் :(((((

sriram said...

அடப்பாவி.. சொல்லவே இல்ல...
பாசகின்னா என்னப்பா அர்த்தம்...
நான் பாசக்கார பொண்ணுன்னு நெனச்சேன்

பாசகி said...

இதுக்குத்தான் profile பாக்கணும்-னு சொல்றது.

புனைப்பெயர் ஜி.(அவ்ளோ பெரிய ஆளா நீ-னு கேக்காதீங்க) :)

Porkodi (பொற்கொடி) said...

ada vangkodumaiye.. Baasaki - naan unga profile pathen analum neenga ponnu nenachutu irundhen!! enna koduma saravana :O Baasaki peru sounds so much like a girl's adhan.

adada kanmani, thala edhuku ivlo peelingu.. blog na ipdi ellam karasarama pesina than gethu! varna kya kick he life mein?

பாசகி said...

profile பார்த்துமா, அவ்வ்வ்வ் :)

'பா' என் அம்மா பெயரோட முதல் எழுத்து + 'சகி' என் பெயரோட சுருக்கம்.

ambi said...

அடுத்த பகுதிய போடுங்கடே!

ஸ்ரீராம், உங்க ஆபிஸ்ல கூட வேலை எல்லாம் குடுக்கறாங்களா என்ன? :))

ambi said...

இந்தாங்க வட்டமா ஐம்பது. :))

sriram said...

ambi said...
அடுத்த பகுதிய போடுங்கடே!

அம்பி சொல்லுக்கு அப்பீலேது? போடறேன் சார்...

ஸ்ரீராம், உங்க ஆபிஸ்ல கூட வேலை எல்லாம் குடுக்கறாங்களா என்ன? :))

குசும்பு???

ரவுண்டா அம்பதாக்குனதுக்கு நன்றி அம்பி சார்

udhaya said...

"you're coming. right?"

can we ask like the above to ask. are you coming?