Thursday, October 8, 2009

அஞ்சுக்கு அஞ்சாமல் பதில் சொல்வது எப்படி:

மக்கள்ஸ், நான் இங்கே சொன்னா மாதிரி Resignation letter எழுதி வேலய விட்டுட்டிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். அதனால இப்போ ஒழுங்கா இண்டெர்வியூ அட்டெண்ட் செய்வது எப்படின்னு பாக்கலாம்.

செந்தழல் ரவி நான் கிறுக்கியிருந்த சிலவற்றைப் பார்த்து ஏமாந்து எனக்கு தேடுஜாப்ஸில் எழுத ஒரு Invite அனுப்பியிருந்தார், நாமளும் ரவுடியாக இது ஒரு நல்ல வாய்ப்புன்னு உடனே ஜீப்பில் ஏறிவிட்டேன். அங்கு எழுதிய முதல் பதிவின் மீள்பதிவு இதோ இங்கே:


முதல்ல ஒரு சுய அறிமுகம்.உங்களில் சில பலருக்கு என்னைப் பற்றி தெரிந்து / தெரியாமல் இருக்கலாம் (சிலருக்கு தெரிந்தும் பலருக்கு தெரியாமலும்).

நான் கடந்த 16.5 வருடங்களாக Sales / Marketing துறையில் பணி புரிந்து வருகிறேன்.இதுவரை சென்னை, புதுதில்லி மற்றும் பாஸ்டனில் வேலை பார்த்துள்ளேன். தற்போது பெரும்பாலான நேரம் தமிழ்மணத்தில் மேயவது மற்றும் கொஞ்சூண்டு ஆணி புடுங்குவது பாஸ்டனில் ஒரு IT Consulting Company இல் Head - Marketing ஆக.

இந்த தளத்தில் இதுவரை வேலை வாய்ப்பு செய்திகள் மட்டுமே வந்துள்ளது. நான் இங்கு Spoken English, Interview Tips, Resume Making,Personality Development, US Work Visa பற்றியெல்லாம் எழுத எண்ணியுள்ளேன். முதல்ல ஒண்ணு ரெண்டு பதிவுகள் போட்டு விட்டு உங்களின்
கருத்து / ஆலோசனை / கேள்விகளின் படி தொடரலாம் என்றிருக்கிறேன்.

இந்த இடுகையில் Interview வில் கேட்கப்படும் 5 Tricky கேள்விகள் பற்றியும் எப்படி பதில் சொல்வது என்பது பற்றியும் பார்க்கலாம்.

உங்களது துறை சார்ந்த கேள்விகளுக்கு (Technical Question) பதில் சொல்வது எப்படின்னு உங்களுக்கு தெரியும். ஆனால் சில Open Ended/Explorative கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்வது என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கு, அது மாதிரி ஒரு அஞ்சு கேள்விகள் இங்கே : (பெரும்பாலும் இண்டர்வியூக்கள்
ஆங்கிலத்திலேயே நடத்தப் படுகின்றன, எனவே ஆங்கிலம் அதிகம் இருக்கும் கோச்சிக்காதீங்க)

1. Tell me about Yourself :

பல இண்டர்வியூக்களில் இதுதான் முதல் கேள்வி (இது கேள்வியா??) This is not a question but an Open ended statement (Open ended, closed ended பத்தி மேலதிக தகவல்கள் வேணும்னா சொல்லுங்க, வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்).

இது உங்களின் English Speaking Ability, Communication skills பத்தி தெரிந்து கொள்ளக் கேட்கப்படுவது.(இவை ரெண்டும் ஒன்றல்ல,பல பேர் நெனைக்கிறா மாதிரி)

இதுக்கு ரொம்ப சின்னதாவும் இல்லாம ரொம்ப பெரிசாவும் இல்லாம பதில் சொல்லணும்.

Myself Sriram, Born in Chennai,studied at Ramakrishna school, graduated from Gurunanak college in Velachery, chennai with Major in Maths, having one mother, one father, one wife, one brother, one sister ன்னு சொன்னீங்கன்னா கேட்பவருக்கு கொட்டாவி வருவதும் வேலை கிடைக்காது என்பதும் நிச்சயம்.

This allows candidates a choice of what they think is important to impart about themselves. When you hear this statement, hear "Tell me about your professional self". Give only information that will help the interviewer decide to hire you.

கொஞ்சம் பர்சனல் விஷயங்களும் நிறைய எக்ஸ்பீரியன்ஸ் பத்தியும் சொல்லணும். உங்க பேரிலிருந்து ஆரம்பிக்காதீர்கள், கேட்பவருக்கு உங்கள் பேர் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். I have a bachelors degree in Mathematics and a MBA from a premier institute, I have 16+ yrs of experiene in Sales and Marketing, I have been in office automation sales all along my career which is very vital for your organization, I am an Highly organized invidual who keep the orgainization's goals ahead of my personal goals which will result in higher productivity for a prospective employer like you ன்னு ஒவ்வொரு பாயிண்டையும் கம்பெனிக்கு பாஸ்டிவாக மாத்தி சொல்லுங்கள். வேலையில் நீங்கள் சாதித்தவற்றைப் பற்றி மறக்காமல் குறிப்பிடுங்கள் (accomplishments at work).

நீங்கள் ஏதாவது certification வைத்திருந்தால் (OCP, Sun certified java professional etc) அது பற்றியும் குறிப்பிடுங்கள்.

2. Why do you want to work for us:

உங்களின் சமயோசித புத்தியை சோதிப்பதற்கும், உங்கள் திறமைகளை எப்படி அந்த வேலைக்கு ரிலேட் செய்கிறீர்கள் என்பதை பாக்கவும் கேட்கப்படும் கேள்வி இது.
I need a job and you need a Java Developer, so I want to work for you ன்னு சொல்லாதீங்க அது எல்லாருக்கும் தெரியும்.
வேலைக்கு முயற்சி செய்யும் கம்பெனியை பத்தி தெரியாம கதை விடாதீங்க, இந்த கம்பேனியில் பிடுங்குற ஆணிகள்தான் உலகிலேயே சிறந்த ஆணிகள்ன்னு
பொய் சொல்லாதீங்க.

Talk about your top three or four skills (எனக்கு அத்தனையெல்லாம் கெடயாது, சும்மா அடிச்சு விடுவேன்)match them to the tasks of the job.Tell them something that you know about their company that makes you really want to work for them. Show how your goals and objectives are compatible with theirs.

அந்த கம்பேனியில் உங்களுக்கு பலரைத் தெரிந்திருந்தால், 1-2 பேரை மட்டும் சொல்லுங்கள், அனைத்து பேரையும் சொல்லாதீர்கள், முக்கியமாக மிக உயர்ந்த பதவியில் இருப்பவரின் பெயரை சொல்லாதீர்கள். குழு சேர்ப்பது, ரெகமண்டேஷன் HR டிபார்ட்மெண்டுக்கு பிடிக்காது (அவை அவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய விஷயங்கள், they dont like competition)

3. What are your Strengths and Weaknesses:

The trick with this question is to move quickly to something more relevent about your candidacy. Interviewers will not fall for the old trick so many like to use of projecting a strength as a weakness (for ex"I am a perfectionist") Also, dont say things like " I am a Hard worker" they dont need donkeys. They need people who would use more Brains than Calories.

உங்களின் உண்மையான மூன்று Strengths மற்றும் ஒரு வீக்னெஸ் பற்றி சொல்லுங்கள். Talk about a clear action plan to over come that weakness with a deadline you have set for yourself.

I tend to give all possible disounts in a negotiation which I consider as a weakness. I am working on it by reading books on how to negotiate and by attending sessions with trainers who have mastered the art of negotiation. They help me to stay focussed and to correct my problem. I am hopeful of negotiating betterabout 90 days.
இந்த மாதிரி சொல்லுவது கண்டிப்பா நல்ல பலனைத் தரும்.

4. What salary figure do you have in mind?

Any question about how much money you want to make should only be asked if you are a serious candidate for the job. Try to postpone this question until all other questions are asked. Ask the interviewer if he/she is convinced about your candidacy and if salary is the only thing standing between you and the offer. If pressed for a quick reply, quote a range rather than a single figure.

நீங்க எவ்வளவு கொடுத்தாலும் ஒத்துக்கறேன்னு சொல்லக் கூடாது, நாம என்ன ஜெயலலிதாவா - ஒரு ரூபாய்க்கு வேலை செய்ய?

இதுக்கு பதில் சொல்ல நீங்க கொஞ்சம் Ground Work செய்யணும்.உங்கள் நண்பர்களிடமோ அல்லது உங்கள் ரெஸ்யூமேவை கம்பெனிக்கு அனுப்பிய HR agency யிடமோ அந்த கம்பெனியின் Salary Structure பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அதுக்கு ஏத்தா மாதிரி ஒரு ரேஞ்ச் சொல்லுங்கள்.
அவர்கள் Negotiate செய்தால் அப்போது Negative Statement ஐ கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும். I will not accept a salary which is less than 10Lakhs என்று சொல்லாமல், An offer which is in excess of 10Lakhs per annum will make me accept the same immediately என்று சொல்வது ஒரே அர்த்ததை தந்தாலும் பின்னரை சொல்வது நல்லது.

The Mantra is "Never close the door in any negotiation". Always keep the conversation going and keep presenting your case with your positives until you get what you need.

உங்களின் தற்போதைய சம்பளத்தை அதிகமாக சொல்லாதீர்கள். இப்போதெல்லாம் Payslip / Bank Statment copy கேட்கிறார்கள். இப்போது நீங்கள் ஐந்து லட்சம் வாங்கிக் கொண்டு இருந்தாலும் பத்து லட்சம் கேட்பதில் தடையேதுமில்லை. எனக்கு இப்படி ஒரு முறை நடந்தது. Interviewer என்னைப்
பார்த்துக் கேட்டது “How can you expect 2X when you are currently getting only X?" அதற்கு நான் சொன்னது “My current package should have no bearing on what I should be getting or what I deserve. You are going to pay me for what I would be doing and not for what I did earlier". என் தைரியம் பாராட்டப்பட்டதோடு வேலையும் கொடுக்கப் பட்டது.

5. Why are you looking for Change? அல்லது Why did you leave your job?

வேலையில் இருந்து கொண்டு வேலை தேடினால் :

நீங்கள் எதிர்நோக்கியிருக்கும் வேலை எவ்வாறு உங்களை முன்னேற்றும் என்று விரிவாகச் சொல்லுங்கள். நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் எவ்வாறு Saturation Point எட்டி விட்டது என்று விளக்குங்கள். கண்டிப்பாக வேலை செய்யும் கம்பெனி பத்தியோ மேனேஜர் பத்தியோ தவறாக சொல்லதீர்கள். அதிக சம்பளத்துக்காக என்று சொல்லாதீர்கள், அதுவே உண்மையாக இருப்பினும்.

வேலை இழந்திருந்தால் :

In this case, You must take the Bull by the Horn and say that you have been fired. State your case without emotion or blame and show how you will or have corrected the problem.

கண்டிப்பாக வேலை பார்த்த கம்பெனி பத்தியோ மேனேஜர் பத்தியோ தவறாக சொல்லாதீர்கள். நிதி நெருக்கடியால் வெளியேற்றப்பட்டதாகச் சொல்லலாம்....

நான் ஒரு அஞ்சு கேள்விகள் பத்தி சொன்னேன். இப்பொ நீங்க இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வீங்கன்னு சொல்லுங்க.
Do you have any other interviews going on ? அல்லது What other opportunities are you pursuing?
இதுக்கு பதிலை பின்னூட்டத்திலோ அல்லது இன்னொரு இடுகையிலோ சொல்கிறேன்.

30 comments:

sriram said...
This comment has been removed by the author.
அகில் பூங்குன்றன் said...

டிப்ஸ் எல்லாம் நல்லா இருக்கு.....

sriram said...

வாங்க அகில்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Porkodi (பொற்கொடி) said...

//I have a bachelors degree in Mathematics and a MBA from a premier institute, I have 16+ yrs of experiene in Sales and Marketing, I have been in office automation sales all along my career which is very vital for your organization, I am an Highly organized invidual who keep the orgainization's goals ahead of my personal goals which will result in higher productivity for a prospective employer like you //

//எனக்கு அத்தனையெல்லாம் கெடயாது, சும்மா அடிச்சு விடுவேன்//

:)))) haiyo haiyo.

nalla padhivu, prabalam agitinga nu sollunga!

sriram said...

வாங்க பொற்கொடி,
உங்கள அம்பியின் பதிவில் தேடினேன்.

ஐயோ ஐயோன்னு சொல்லிட்டு அப்புறம் நல்ல பதிவுன்னும் சொல்றீங்க- உள் குத்து ஏதும் இருக்கோ?

அப்புறம் பிரபலம் எல்லாம் ஒன்ணும் இல்லீங்க, பதிவில் சொன்னது போல ரவி ஏமாந்து போய் கூப்பிட்டார், நானும் உடனே ஜீப்பில் ஏறிட்டேன்.

பாலா said...

இந்த அஞ்சு கேள்விக்கும், நான் தப்பு தப்பாதான் பதில் சொன்னேன்.

ஜோக் என்னன்னா..., வேலை கிடைச்ச இண்டர்வியூல, இந்த கேள்வி எதையும் கேட்கலை.

ஆக்சுவலி.. கேள்வியே கேக்கலை!!!

பிரச்சனை என்னன்னா.. இதையெல்லாம் நினைப்பு வச்சி பதில் சொல்லனுமே? பத்து வருசம் வொர்க் பண்ணின மேட்டர்லயே கேள்வி கேட்டா.., பயத்துல எல்லாம் மறந்துடுது. இது??

இருந்தாலும்... அடுத்த இண்டர்வியூ அட்டண்ட் பண்ணுற மாதிரி இருந்தா.. நிச்சயம் இதை ஒரு ரெஃபரன்ஸ்-ஆ வைச்சிக்க வேண்டியதுதான்.

sriram said...

வாங்க பாலா,
நீங்க அடுத்த முறை இண்டெர்வியூ போறதுக்கு முன்ன இன்னும் சில பகுதிகள் எழுதறேன். தயாரா போங்க

ambi said...

சூப்பர், இந்த எல்லா கேள்விகளும் எனக்கு கேட்க்கப்பட்டன. (இதுக்கு மேலயும் கேட்டாங்க).

Do you have any other offers in your hand? அப்படினு கேட்டாங்க.

ஜப்பான்ல சாக்கிசான் கூப்டாக!, அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்டாகனு ஒரு தடவை சொன்னேன்.(நெஜமாவே ரெண்டு கைல இருந்தது). டக்குனு துண்டை போட்டு சம்பளத்தை பேசிட்டாங்க. :))

Unknown said...

உங்கள் பதிவுகள் உபயோகமாகவும் நேர்த்தியுடனும் இருக்கிறது. தொடருங்கள்...

sriram said...

அம்பி,
You should consider yourself Lucky. I have never hired anyone for my team who had multiple offers.
’’Do you have any other offers in your hand?’’ இது பயங்கர Tricky question. இதுக்கு சேஃபா, I am pursuing few opportunities and they are at different levels of consideration" ன்னு சொல்வது நல்லது.

sriram said...

நன்றி கிருஷண பிரபு, என் எழுத்துக்கள் உங்களுக்கு பிடித்திருப்பது சந்தோஷம்.

திவாண்ணா said...

您想結婚媽!!!

十年大陸新娘及越南新娘介紹經驗,合法的婚姻介紹機構,嚴肅,專業的婚姻介紹網站,擁有臺灣多加外籍新娘婚姻協會人員合作,本網站是由大陸當地臺灣媒人所設立,位於廣西省,臨近越南河內,娶外籍新娘通過本站直接到異國娶親,省掉臺灣外籍新娘婚姻仲介中間環節,可以節省費用,全台各地都有我們所服務過的客人,如有需要可以提供電話詢問,我們的口碑經得起檢驗,也可為你推薦臺灣合法信譽好的婚姻協會人員為您服務,希望通過我們讓你以最經濟實惠的方式找到理想的伴侶,能夠為有緣人牽線搭橋,異國姻緣一線牽,歡迎以婚姻為目的,具備嚴肅婚姻心態,有責任感,有心想娶外籍新娘的臺灣單身男士與我們聯繫,我們將誠心為您服務!

சீன மொழில பின்னூட்டம் இல்லைன்னு குறைபட்டுக்கிட்டீங்களே தீத்து வைக்கலாம்ன்னு... இது என்ன சொல்லுதுன்னு தெரியாது!
;-))

sriram said...

திவா...
குசும்பு???
ரசித்தேன்...
அந்த பின்னூட்டம் அம்பிய திட்டி வந்திருக்குமோ?

திவாண்ணா said...

அப்படி இருந்தா நல்லது.
;-))
சர்வேசன் ப்ளாக்லே நிறைய பாத்து இருக்கேன்.
ஆனா ஸ்பாமாதான் இருக்கணும்.

ஸ்ரீராம். said...

என்னை மாதிரி பாமரனுக்கெல்லாம் பாடம் எதுவும் இல்லையா? Jokes apart, your blog is informative and useful.

sriram said...

வாங்க என் பேர் கொண்டவரே,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Happy to know that you found my scribblings useful and informative

sarathy said...

அருமை...
மிகவும் உபயோகமான இடுகை....

// கண்டிப்பாக வேலை செய்யும் கம்பெனி பத்தியோ மேனேஜர் பத்தியோ தவறாக சொல்லதீர்கள். //

நான் என்னோட பாஸை பத்திதான் சொல்லனும்னு நினைச்சுட்டு இருந்தேன்...

தொடருங்கள்..

பாலராஜன்கீதா said...

பயனுள்ள நல்ல பதிவு. என் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்திருக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

இதெல்லாம் முன்பே சொல்லிக் கொடுத்திருக்கலாம்.வடை எனக்கில்லை.
Informative.Keep going!

sriram said...

வாங்க சாரதி,
கண்டிப்பா எந்த நெலமயிலும் கம்பேனி பத்தியோ பாஸ் பத்தியோ இண்டெர்வியூவில் தப்பா சொல்லாதீங்க..

sriram said...

வாங்க பாலராஜன்கீதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//என் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்திருக்கிறேன்.//
உஙக அன்புக்கு நன்றி...

sriram said...

வாங்க ராஜ நடராஜன்,
இப்போதானே எழுத வந்திருக்கிறேன், இனிமே இதுமாதிரி டாபிக் எல்லாம் கவர் பண்ணலாம்.

முகில் said...

அருமையான பதிவு ஸ்ரீராம்.
என் நண்பர் பாலராஜன்கீதா அவர்களின் பரிந்துரையின் பேரில் படிக்க நேர்ந்தது.
யாருக்கு யூஸ் ஆவுதோ இல்லையோ, எனக்கு ரொம்ப யூஸ் ஆகும். ஏன்னா அடுத்த மாசம் எனக்கு சென்னைல இன்டர்வியூ இருக்கு.

பாலா said...

தமிழிஷில், முதல் ‘பிரபலமானதற்கு’ வாழ்த்துகள்! :) :)

sriram said...

வாங்க முகில், உங்களுக்கும் பாலராஜன் கீதாவுக்கும் நன்றி.
உங்களுக்கு உபயோகமாக இருப்பதில் சந்தோஷமே.
உங்களின் நேர்முகத்தேர்வுக்கு முன்னர், அணிய வேண்டிய ஆடை, தயார் செய்யும் முறை பற்றி எழுத முயற்சிக்கிறேன்

sriram said...

'''ஹாலிவுட் பாலா said...
தமிழிஷில், முதல் ‘பிரபலமானதற்கு’ வாழ்த்துகள்! ''

நன்றி தல, எல்லாம் நேத்து நீங்க சொன்னதால நடந்தது, இல்லன்னா நடந்திருக்காது

பெசொவி said...

//Myself Sriram, Born in Chennai,studied at Ramakrishna school, graduated from Gurunanak college in Velachery, chennai with Major in Maths, having one mother, one father, one wife, one brother, one sister//

வாவ்! நானும் குரு நானக் காலேஜ் தான். BSc Maths தான். ஆனால் முடிச்சது 1990 ல.

so, as an ex-Guru Nanak, I wish you all success.

(என்னைப் பத்தி ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருச்சோ?)

sriram said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
வாவ்! நானும் குரு நானக் காலேஜ் தான். BSc Maths தான். ஆனால் முடிச்சது 1990 ல.

so, as an ex-Guru Nanak, I wish you all success.

(என்னைப் பத்தி ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருச்சோ?)///

Small world uh??

நான் முடிச்சது 1993ல, நான் உங்கள விட யூத்து.... :)
அதுவும் ஈவினிங்க் காலேஜ், வாழ்த்துக்கு நன்றி

தருமி said...

//I am an Highly organized invidual wh...//

இதுல an-க்குப் பதிலா a போடலாமா?

ஒரு காசு said...

இந்த வரிசையில இன்னொரு கேள்வி:

What did you like/dislike about your previous team ?