Thursday, April 1, 2010

ரொம்ப நல்லவனின் இரு தவறுகள் மற்றும் இரு வேடங்கள்

ஒரு ஊர்ல ஒரு தான் தோன்றி இருந்தானாம். அவன் ஒரு நாள் ரொம்ப நல்லவங்க ஒண்ணா கூடின எடத்துக்குப் போயிட்டு வந்து தன்னோட நோட்டுப் புத்தகத்தில அது பத்தி
கிறுக்கினானாம். அப்படி கிறுக்கயில ரெண்டு தடவ தப்பு பண்ணானாம். ஒரு தப்பு ஒரு தனி மனுஷியப் பத்தி கமெண்ட் சொன்னது, ரெண்டாவது தப்பு ஒரு சமூகத்தையே நோக்கி
காரணமில்லாமல் மற்றும் அடிப்படை இல்லாமல் புழுதியைத் தூற்றினது.

ரெண்டுமே தப்புதான்னு அவனுக்கும், அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும், அந்த நல்லவங்க கூட்டம்னு சொன்னேனில்ல அங்க வந்த எல்லோருக்கும் தெரியும். ஒரு சமூகத்துக்கே அவன் செஞ்ச கொடுமையை எல்லோரும் சுட்டிக் காட்டியும், பல பேர் காட்டமாகக் கூறியும் அவன் அதை தவறுன்னு ஒத்துக்கவுமில்லை, கிறுக்கியதை ரப்பர் போட்டு அழிக்கவுமில்லை. இந்த பஞ்சாயத்து நாலஞ்சு நாள் நடந்தும் இதுதான் நிலைமை.

இவன் ஒரு பெண்மணிக்கு செஞ்ச தப்பை யாருமே சில நாள் கண்டுக்கலை (பெரிய தப்பு சின்ன தப்பை மறைத்து விட்டதுன்னு நினைக்கிறேன்), நாலு நாள் கழிச்சி இரண்டாம் கம்பர்
நல்லவங்க கூட்டம் நடத்தின பின்னர் நடக்கும் அரசியல் பத்தி தன்னோட நோட்ல எழுதும் போது தான் தோன்றியின் இந்த தப்பை சுட்டிக் காட்டி துப்பியிருந்தார். உடனே களத்தில குதிச்ச நண்பர்கள் இது தப்பு, இது தப்புன்னு பின்பாட்டு பாடினார்கள். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தான் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமையை தான் பெருந்தன்மையாக மன்னித்து விட்டதாக சொல்லிட்டாங்க. இதுல வேடிக்கை என்னன்னா தான் தோன்றி தான் தப்பாக எதுவும் சொல்லவில்லை, தனது வார்த்தைகளை இரண்டாம் கம்பர் திரித்து விட்டாதாக சொன்னான். அப்படி சொல்லிட்டு உடனே அடிச்சான் பாருங்க பல்டி.. அந்தர் பல்டி, இந்தர் பல்டியெல்லாம் தோத்துப் போயிடும் இவருகிட்ட.

தான் தவறு செய்யவே இல்லைன்னு நம்புறவன் என்னா செய்யணும், சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ தனது நிலைப் பாட்டை தெளிவு படுத்தி இருக்கணும். ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சாருன்னா, சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு போன் பண்ணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஏன்னா ஒரு பெண் சம்பந்தமான குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப் பட்டால் என்ன ஆகும்னு ஹீரோவுக்கு நல்லாவே தெரியும். கவுஜ படிக்க வர்ற பெண்கள் யாரும் வரமாட்டாங்களே.. கடையில யாருமே கல்லா கட்ட மாட்டாங்களே...


ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை உணர்ந்து தான் தவறு செய்ததாகவே கருதாத போதிலும் மன்னிப்பு கேட்ட தான் தோன்றி ஒரு சமூகத்தையே கேவலமாகப் பேசியதன் மூலம்
பலருக்கு ஏற்பட்ட (நான் உள்பட) மனவருத்தத்தைப் போக்க ஏதாவது செய்வாரா??? யாராவது கேட்டு சொல்லுங்களேன்... ரெண்டாம் கம்பரே..உங்க சொல்லுக்கு ஹீரோ மதிப்பு
தருவான்னு நெனைக்கிறேன்.. you too Kambar? கேள்விக்கு பதில் சொல்லிட்டு இதுக்கு பதில் கேட்டுச் சொல்லுங்களேன்...


டிஸ்கி 1: இது ஒரு கற்பனைக் கதை, யாரையும் குறிப்பதில்லைன்னு ஜல்லி அடிக்கப் போறதில்லை, நீங்க நெனைக்கிற ஆளைப்பத்தித்தான் சொல்லி இருக்கிறேன்.

டிஸ்கி 2 : இது பல நாள் குமுறல், சும்மா சும்மா தேவையில்லாம பாப்பான்னு எழுதினா எவண்டா ஜாட்டான்னு நானும் கேக்கலாமுன்னு இருக்கேன்.

டிஸ்கி 3 : இது நாள் வரை பின்னூட்டப் பெட்டி திறந்த்துதான் இருந்தது, உங்க எல்லாரோட Maturity மேல இருக்குற நம்பிக்கையில இன்னிக்கும் அப்படியே வச்சிட்டு தூங்கப்
போறேன்.

38 comments:

ILA (a) இளா said...

சரி சரி.. நல்லா தூங்குங்க. பதிவ நானும் படிக்கலை, நீங்களும் படிக்க வேணாம். பேச்சு பேச்சாவே இருக்கனும்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
shortfilmindia.com said...

நல்ல பதிவு.. இவனுங்களுக்கு ப்ளாக்குன்னு ஒண்ணை கத்து கொடுத்ததுக்கும் வெட்கப்படுகிறேன். அசிங்கப்படுறேன்.

VISA said...

புரிஞ்சு போச்சு எனக்கு புரிஞ்சு போச்சு....டிங்கிரி...டியாலே....டிங்கிரி...டிங்கிரி...டியாலே....


naanum padichean....enna panrathu...

செந்தில் நாதன் Senthil Nathan said...

படித்ததின் அடையாளமாய்..

Jackiesekar said...

இது நாள் வரை பின்னூட்டப் பெட்டி திறந்த்துதான் இருந்தது, உங்க எல்லாரோட Maturity மேல இருக்குற நம்பிக்கையில இன்னிக்கும் அப்படியே வச்சிட்டு தூங்கப்
போறேன். --//

ஸ்ரீ நம்ம ஆளுங்க மேல அவ்வளவு நம்பிக்கையா???

ராம்ஜி_யாஹூ said...

எல்லாருமே வயது வந்த முதிர்ந்த பதிவர்கள் தாம்.

நீங்கள் வெளிப்படையாகவே எழுதி இருக்கலாம், அசோக், நரசிம், விதோச்ஷ் பதிவுகள், பின்னூட்டம் என்று.
ஏன் இந்த மறைமுக கற்பனை புனைவு பதிவு என்று தெரிய வில்லை.

சங்கம்/குழுமம் ஆரம்பித்த பிறகாவது இது போன்ற தனி நபர் kindal, கேலி பிரச்னைகளுக்கு சங்கத்தின் பொதுக் குழு, செயற் குழு கூட்டத்தின் நேரத்தை செலவழிக்காமல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
sriram said...

அப்படியே ஆகட்டும் இளா

sriram said...

கருத்துக்கு நன்றி கேபிள் சங்கர்

sriram said...
This comment has been removed by the author.
sriram said...

வாங்க விசா, இப்படியே எல்லாரும் சொன்னா இன்னும் நெறய பேர் கெளம்புவானுங்க இப்படி...

sriram said...

விட்டுச் சென்ற சுவடுக்கு நன்றி செந்தில்

sriram said...

ஆமாம் ஜாக்கி, இன்னும் நம்பிக்கை இருக்கு..
அதுக்கும் மேல, என்னையெல்லாம் ஒரு ஆளா மதிச்சி எவனும் வந்து இங்க குப்பை கொட்ட மாட்டான், அதெல்லாம் ஒன்ன மாதிரி “பிரபல பதிவர்” பக்கத்திலதான் நடக்கும்

நசரேயன் said...

புரிஞ்ச மாதிரியே இல்லையே.. எனக்கு மட்டும் தனியா விளக்கம் கொடுங்க..

sriram said...

ராம்ஜி..
பதிவிலேயே குறிப்பிட்டு இருந்தேனே.. இது கற்பனை அல்ல, நீங்க நெனைக்கிற அதே ஆள் பத்திதான்னு.
இந்த மாதிரி எழுதினா நல்லா இருக்குமுன்னு நானா நெனைச்சிக்கிட்டேன், வேறொரு காரணமும் கிடையாது..
வருகைக்கு நன்றி

sriram said...

நசரேயன்..
நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர், இந்த கழிசடை மேட்டரெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்கீங்க.
முடிஞ்சா Chat ல வாங்க

பாலா said...

பிரச்சனை ஒரு மாதிரி புரிஞ்சிருச்சி. ஆனா... வேர், கிளையெல்லாம் தேடிப்போய் படிக்க இப்ப டைமில்லை ஸ்ரீராம்.

இதுக்கு நீங்க பதிவு போட்டும் ஒன்னும் ஆகப்போறதில்லை.

விட்டுத்தள்ளுங்க.

sriram said...

வாங்க பாலா..
நான் போன் பண்ணி 3 நாள் ஆகியும் நீங்க திரும்ப போன் பண்ணாத போதே நீங்க பிஸியா இருப்பதை உணர்ந்தேன்.

எதுக்கெடுத்தாலும் பாப்பான்னு சொல்லுறது எரிச்சலா இருக்கு. ஒரு பெண்ணுக்கு தன்னால் ஏற்பட்ட வலியை உணர்ந்து மன்னிப்பு கேட்டவருக்கு, முதல் வரிசையில் ஒக்காந்திருந்த துளசி டீச்சருக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்பதை உணர முடியாதா என்பதே என் கேள்வி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சரி விட்டுத் தள்ளுங்க.

ரவி said...

சரி சரி ஓக்கே ஓக்கே !!!

sriram said...

இப்படியே எவ்வளவு நாள் விட்டுத்தள்ளுறது ஸ்ரீ

sriram said...

நன்றி ரவி..

Dr.Rudhran said...

interesting post sriram.
just keep watching the comments and you will soon wonder what you have written. nameless and spineless people would take the point of discussion to someother area.
best wishes.

sriram said...

Thanks for dropping by Doctor.
I am sure you would have noticed that I didn't even acknowledge any comment / part of comment which is not related to this post.
I have faith on my fellow bloggers' maturity level and I still don't use moderation. Hoping to remain so.

If Raghavanji has a difference of opinion with you, it is for two of you to either fight over it or come to a common ground. We (others) have no right to comment on it.
Be rest assured that I will not tolerate any தனி மனிதத் தாக்குதல் in my page.

Besides all these, I am delighted to know that one of the well known personality in TN dropped into my page and commented.
That said doctor, I have a couple of points which I don't like in your writing / things you support etc. I would like to keep that discussion private, Will write to you if you share your email ID.

regards
Boston Sriram

Dr.Rudhran said...

dr.rudhran@gmail.com

sriram said...

Thank you Dr.Rudhran, will write to you soon

Jaleela Kamal said...

ரொம்ப நாள் கழித்து பதிவு வந்துள்ளேதே என்று வந்து பார்த்தேன்.நீங்க யார சொல்றீஙக்ன்னு புரியல..

dondu(#11168674346665545885) said...

????????????????????????????????
Am I missing something?

Sent you invite to Googletalk as Narasimhan Raghavan.

Regards,
Dondu Narasimhan Raghavan

sriram said...

வாங்க ஜலீலா..
ரொம்ப நாளா கிறுக்காம இருந்தவன கிறுக்க வச்ச புண்ணியவான் அவரு.
இது புரியாம இருக்குறவங்க ஆசீர்வதிக்கப் பட்டவங்க.. அப்படியே இருங்க.
கண்டிப்பா தெரியணும்னா, இமெயில் அனுப்புங்க / சாட்ல வாங்க

sriram said...

Thanks for dropping by RaghavanJi.
Not sure as what you mean by missing. If you are asking about the post - I can explain in a chat session.
If you are asking about comments / Dr.R, they are self explanatory.

regards
Sriram

R.Gopi said...

ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல “தல”.

இது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தேசம்...

sriram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபி

akkapor said...

Sri Ram Sir Have mailed to your id.

Unknown said...

Good sharing sriram.

வாக்காளன் said...

Hi Sriram, I am just thinking why didn't you write this as a direct post (even with names ! :)

balutanjore said...

dear sriram

this is the first time i am writing here.

when i started reading blogs it was a
disgusting experience to see the hatred against brahmins(brahminism?)

i think a blogger will be deemed POPULAR only if he spits venom against a particular community.

let us ignore these people

balasubramanyan vellore

Madhuram said...

Indha post dhaan unga blog la naan first padichen ninaikiren. Enaku thalai kaal puriyala. Sari enna madhiri chinna pasangalukku neenga onnum ezhudharadhu illanu quieta poitten.