Thursday, December 9, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை : பகுதி 8

முந்தைய பகுதிகள்

ஒரு நல்ல சேதி மற்றும் ஒரு எச்சரிக்கை

தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நீங்க எல்லாரும் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி.


கனவு தேசம் தொடரின் இப்பகுதியில் தற்போதைய நிலையில் இருக்கு ஒரு நல்ல விசயத்தையும் ஒரு பிரச்சனைக்குறிய விசயத்தையும் பாக்கலாம்

மொதல்ல நல்ல விசயம். அமெரிக்காவில் IT Contracting Job Market இப்போ ரொம்ப நல்லா இருக்கு. கடந்த அஞ்சு ஆறு மாசமாகவே நெறய காண்ட்ராக்டிங் வேலை வாய்ப்புகள் அதிகமாகிக்கிட்டு இருந்து வருது. Recession க்கு அப்புறம் பொதுவா கம்பெனிகள் Full Time ஆட்களை வேலைக்கு எடுப்பதை விட Temporary Staffing
என்று சொல்லப்படும் Contracting Resources களை வேலைக்கு அமர்த்துவது வழக்கமே.

2010ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன்) முன்னேற்றத்தின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. மூன்றாம் காலாண்டில் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்)
அதிக அளவில் வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. 2009ம் மூன்றாம் காலாண்டை விட 2010ன் மூன்றாம் காலாண்டில் 15 சதவீதம் அதிக வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. அதிக அளவில் டெக்னாலஜி கம்பெனிகள் அமைந்துள்ள கலிபோர்னியாவில் அதிக அளவு Recruitment நடந்திருக்கு.

இடங்களைப் பொருத்த வரையில் இதில் டாப் டென் இடங்களைப் பெற்ற இடங்கள் - கலிஃபோரினியா, நியூ ஜெர்ஸி, நியூ யார்க், டெக்ஸாஸ், இல்லினாய்ஸ், பென்சில்வேனியா,
வர்ஜினியா, ஜார்ஜியா, Massachusetts (அதாங்க எங்க ஊரு -இத தமிழ்ல எழுதுறது ரொம்ம்ப கஷ்டம்), மற்றும் ஃப்ளோரிடா.


டெக்னாலஜியைப் பொருத்த முறை, ஜாவா Requirements அதிக அளவில் வந்திருக்கு - 14 சதவீதம், அடுத்த ஹாட் டெக்னாலஜி Dotnet - 10%. SAP க்கும் System Admin க்கும் இதே அளவில் (10%) வேலை வாய்ப்புகள் வந்திருக்கு. QA - 8%, Data Warehousing / ETL - 7%, Oracle Apps- 5%, ப்ராஜக்ட் மேனேஜர் - 5%, Reporting Tools - 5%, Database Developers - 5%, Business Analysts - 4%, DBA = 4%, Web / Internet - 3%, People Soft - 3%, Siebel - 2%, Mainframe - 1%, Middleware - 1%, C and C++ - 1%, Mobile Applications - 1% மற்றும் Unix - 1% என்கிற விகிதங்களில் Requirement வந்துள்ளன.

ஒரு விசயம் ரொம்பத் தெளிவாத் தெரியுது. ஜாவா, Dotnet, Oracle போன்ற டெவலப்மென்ட் டெக்னாலஜிக்கும் சிஸ்டம் அட்மின்களுக்கும் இப்போதைய மார்க்கெட் நிலவரத்தில் அதிக டிமாண்ட் இருக்கு. இந்த டெக்னாலஜியில இருக்கும் IT மக்கள், ப்ராஜக்ட் மாற்ற நினைத்திருந்தால் அதுக்கு இது உகந்த நேரம்.

தற்போதைய நிலை ப்ராஜக்ட் மாத்துறதுக்குக்கு உகந்ததாக இருந்தாலும் H1B ல இருக்கும் மக்கள் இந்தியா செல்வதற்கு இது உகந்த நேரமல்ல.

H1B visa stamping செய்வதில் தற்போது சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவருகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து எம்பஸிகளிலும் கோவில் பிரசாதம் போல H1B stamping செய்ய செல்லும் அனைவருக்கும் Blue Paper என்றழைக்கப்படும் Form 221G (Request for More documents) வழங்கப் படுகிறது. பல பேருக்கு Visa Rejection கூட நடக்கிறது. ஸ்டாம்பிங் தேவைப்படுவோர் தற்போது இந்தியா செல்வதைத் தவிர்ப்பது நலம். ஸ்டாம்பிங் இருந்தாலும் Port of Entry யிலும் பல கேள்விகள் கேட்டு
Deport செய்வதும் நடந்து வருகிறது. ஏதொரு முக்கிய காரணமும் இல்லாமல் இந்திய விடுமுறை ப்ளான் பண்ணியிருக்கும் நண்பர்கள் பயணத்தைக் கொஞ்சம் ஒத்திப் போடுங்க.
மேலதிக விவரம் தேவைன்னா தனி மடல் அனுப்புங்க, கூப்பிடறேன். நிலைமை சகஜமானதும் அப்டேட் பண்றேன்.

23 comments:

sriram said...

தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை
ஒரு டெஸ்ட் கமெண்ட்

Porkodi (பொற்கொடி) said...

idhu enna aniyayam, 2 padhivellam podalaama?????

Porkodi (பொற்கொடி) said...

பதிவுக்கு சம்பந்தமில்லா கருத்து: 'இல்லினாய்' தானே, ஏன் இல்லினாய்ஸ்னு சொல்றீங்க?! மஸ்ஸச்யூஸெட்ஸ் ‍ சரியா இருக்கா? நல்லாருக்கு தல.. சும்மா வந்து வந்து பாத்து ஈயாடிட்டு இருந்த ப்லாக் இப்ப தான் கலகலன்னு நல்லாருக்கு. பேசாம நட்சத்திர வருஷம் ஆரம்பிக்கலாம்.

sriram said...

//நட்சத்திர வருஷம் ஆரம்பிக்கலாம்//

கேடி ஏனிந்த கொலைவெறி..
எனக்கு இங்க நாக்கு தள்ளுது ஒரு வாரத்துக்கே

Chitra said...

எனக்கு இங்க நாக்கு தள்ளுது ஒரு வாரத்துக்கே

....Tell me about it.... Been there ... Done that.... I never realized until then, how big a challenge it was!


You are doing a great job! :-)

paya said...

பீப்பிள்சாப்ட் வெறும் மூணு பெர்சென்ட்தானா...அவ்வவ்வ்வ்வ்...அப்போ நான் கனவு தேசத்துக்கு இப்போதைக்கு பொட்டி கட்டமுடியாதுனு சொல்லுங்க....-பயபுள்ள.

அமுதா கிருஷ்ணா said...

மசாச்சூஸெட்ஸ் சரியா வருமா..

ஆமாம் ஒரு வாரம் தொடர்ந்து பதிவு என்பது மிக கஷ்டம்

ராம்ஜி_யாஹூ said...

இன்று பல இந்தியப் பொறியியல் பட்டதாரிகள் அமெரிக்காவில், பிற நாடுகளில் எம் எஸ் படிக்க செல்லுகின்றனர்.

அமெரிக்க நிறுவன வேலை வாய்ப்பில், நேர்முகத் தேர்வில் அமெரிக்கா உயர் படிப்பு, பிற நாட்டு உயர் படிப்பு குறித்த பாகுபாடு இருக்கிறதா (MS in USA, MS in Australia, Singapore..)

ILA(@)இளா said...

எகொஇச-
9:37 PM Boston Sriramதத்துபித்துவங்கள் இருபது- நேத்து பிடிக்காத பத்து அதுக்கு முன்னாடி பிடிச்ச பத்து,
10:24PM Boston Sriramகனவு தேசத்தில் கணினி வாழ்க்கை : பகுதி 8

ILA(@)இளா said...

முக்கால் மணிநேரத்துக்குள்ள இன்னொரு பதிவா? ஏன்..

தேவன் மாயம் said...

நிறைய விசயங்கள் சொல்கிறீர்கள்! தொடருங்கள்!

sriram said...

ஏன் கேடியக்கா, நான் ஒரே நாளில் ரெண்டு இடுகை போடுறது ஆச்சர்யமா இருக்கா? ஒரு ரகசியம் சொல்றேன், நேத்து கையில ரெண்டு இடுகைதான் இருந்தது, ஒரு Challenge ஆ
இருக்கட்டுமேன்னு ரெண்டையும் போஸ்ட் பண்ணிட்டேன், இதுவரை இன்னிக்கு ராத்திரி போஸ்ட் பண்ண இடுகை கிடையாது, எழுதறேனான்னு பாக்கலாம்.

இல்லினாய் : திருத்திக்கறேன் கேடியக்கா

நன்றி சித்ரா, You made my day...:)

paya : People Soft க்கு எப்பவுமே ஜாவா அளவுக்கோ Oracle அளவுக்கோ Requirement இருக்காது, ஆனா ஒரு விசயம், PS billing rate எப்பவுமே அதிகம்.
நீங்க Technically Strong ஆ இருந்தா கண்டிப்பா வேலை கிடைக்கும், இங்கு வர வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ணாதீங்க

அமுதா கிருஷ்ணா : Massachusetts : ரெண்டாவது Syllable இல் குழப்பம் இல்லை அது “ச”/ 'Sa'. பிரச்சனையே முதல் Syllable தான். தமிழில் Magesh = மகேஷ்.
Ma க்கு தமிழில் ம. மசசூசெட்ஸ் (சூ = Chu) என்பது கிட்டத்தட்ட சரி.

ராம்ஜி : அமெரிக்காவுக்கு MS படிக்க வருபவர்களில் முக்கால் வாசி பேர் அதை Back Door Entry ஆகத்தான் பயன் படுத்தறாங்க. MS படிச்சப்புறம் 12 அல்லது 29 மாசம்
(Depending on the course) வேலை செய்ய உரிமம் வழங்கப் படும், அதை OPT - Optional Practical Training என்று சொல்வார்கள். எந்த கோர்ஸ்
படிச்சாலும் தேசி மக்கள் வந்து விழுவது கணினித் துறையில்தான். During this period they get their H1B done by consulting company and continue
to stay in US. நான் சொல்வது பெரும்பான்மை, விதிவிலக்குகள் உண்டு.

IT Contracting ஐப் பொருத்த மட்டில் Basic Degree தான் பாக்கறாங்க, H1B க்கு Qualification 12+4 வருடப் படிப்பென்பதால் எல்லாருமே Qualify ஆகிடுவாங்க.
உபரித்தகவல் : 4 வருட வேலை அனுபவம் ஒரு வருட படிப்புக்கு இணையாகக் கருதப்படும்.


இளா : H1B மேட்டர் ரொம்ப Dry ஆ இருந்தது அதுதான் சும்மா ஒரு மொக்கைப் பதிவும் போட்டேன். Result : இன்னிக்கி கைவசம் ஒரு இடுகையும் இல்லை, பாப்போம் ஏதாவது
தேறுதான்னு

sriram said...
This comment has been removed by the author.
sriram said...
This comment has been removed by the author.
sriram said...

நன்றி தேவன் மாயம்

ராமுடு said...

Good one sriram.

Ramji Yahoo: Yes. There are lot of differences. At the international level, american universities made the top posts. Apart from that, teaching methodology is entirely different. But we need to consider the university as well. In India, we have the same difference like Anna University & Annamalai.. Its more or less same :)

sriram said...

நன்றி ராமுடு.
நான் IT Contracting Jobs பத்தி மட்டும் சொன்னேன், Your input on the other jobs was useful.

பத்மநாபன் said...

வாத்தியார் ஜாவா வந்த காலத்தில் சொன்னது..எல்லாரும் போட்டது போட்டபடி போய் ஜாவா படியுங்கள் நல்ல எதிர்காலம் என்றார் . இன்னமும் ஜாவா கொடி பறந்துகொண்டிருக்கிறது..

நாங்களெல்லாம் கோர் என்ஜினிரிங் பந்தாவில் அவர் பேச்சை கேட்கவில்லை ..இன்னமும் ஸ்க்ரு டிரைவர் பிடித்து கொண்டிருக்கிறோம்..

உங்கள் தகவல் இளைநர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது..தொடர வாழ்த்துக்கள்...

அரசூரான் said...

பாஸ்ஸ்ரீ, நாலு பதிவ ஒரே நாள்ல படிக்கிறமாதிரி ஆகிப்போச்சு வேலை... கலக்கல்... இந்த வாரம் பாஸ்ஸ்ரீ-யின் கனவுவுவு... வாரம்

sriram said...

நன்றி பத்மநாபன்..
வாத்யாரை எல்லாரும் ரொம்ப மிஸ் பண்றோம் இல்ல

sriram said...

நன்றி அரசூரான்.

நெஜமாவே இது கனவு வாரம்தான்.
கிட்டத்தட்ட ரெண்டு வார உழைப்பு.
நாலு பேருக்கு உபயோகமா இருந்தா சந்தோஷம்தான்.

வாய்ப்பளித்த சங்கரபாண்டி ஐயாவுக்குத்தான் நன்றி சொல்லணும்

muchanthi said...

//அனைவருக்கும் Blue Paper என்றழைக்கப்படும் Form 221G (Request for More documents) வழங்கப் படுகிறது. பல பேருக்கு Visa Rejection கூட நடக்கிறது. ஸ்டாம்பிங் தேவைப்படுவோர் தற்போது இந்தியா செல்வதைத் தவிர்ப்பது நலம்.//

எல்லாருக்கும் நடக்கிறது என்று சொல்வதருகு இல்லை , என் நண்பர்கள் இருவர்க்கு சென்னை விசா Refuse (not rejection)
செய்ய பட்டுள்ளார்கள் அதருக்கு சொன்ன காரணம் (insuffisent Employer documents)// ஸ்டாம்பிங் இருந்தாலும் Port of Entry யிலும் பல கேள்விகள் கேட்டு Deport செய்வதும் நடந்து வருகிறது.//

இங்கு வருபவர்களிடம் சரியான விசா பேப்பர் இருக்கும் நேரத்தில் Deport செய்வது அதிகம் நடப்பது இல்லை
. உங்களுக்கு சில மணி நேரம் கொடுக்கப்படும் , இன் நேரத்தில் அவர்கள் தங்கள் கம்பெனி மனித வளத்துறை மற்றும் கம்பெனி சட்ட ஆலோசகரி தொடர்பு கொள்ளலாம் அவர்கள் பேசி என்ன காரணம் என்று விவாதிக்க முடியும் பல நேரங்களில் உள்ளே அனுமதிக்க (Entry) செய்திருகிறார்கள் .

ஊருக்கு செல்பவர்கள் தங்கள் கம்பெனி சட்ட ஆலோசகரின் தொலைபேசி என்னை பெற்று செல்வது நல்லது , அவர்களிடம் நீங்கள் உங்களை முன் அறிமுகம் செய்து கொள்வது மிக நல்லது . நான் பார்த்த வரையில் நம்மவர்கள் பெரும்பாலும் தங்கள் கம்பெனி மனித வளத்துறை மற்றும் கம்பெனி சட்ட ஆலோசகர் சரியான தொடர்பு வைத்து இருப்பது இல்லை . .

sriram said...

நன்றி முச்சந்தி
சில விசயங்களைப் பொதுவில் சொல்ல முடியாது, தேவையற்ற கெடுபிடிகள் நடந்து கொண்டிருக்க்கு - பொதுவில் இவ்வளவுதான் சொல்ல முடியும், விருப்பப் பட்டால் தனிமடல்களில்
விவாதிக்கலாம்.