Thursday, December 9, 2010

தத்துபித்துவங்கள் இருபது

நேத்து பிடிக்காத பத்து அதுக்கு முன்னாடி பிடிச்ச பத்து, இன்னிக்கு தத்து பித்துவங்கள் இருபது. ரெண்டு நாளா கொஞ்சம் சீரியஸா டிஸ்கஷன் போச்சு, அடுத்ததும் அமெரிக்க
காண்ட்ராக்ட் வேலை நிலவரம் பத்தி சீரியஸா வருது. எனவே நடுவுல ஒரு கெக்கே பிக்கே காமடி.பொருத்தருள்க.

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

6. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

7. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

8. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

9. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

10. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

11. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

12. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

13. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

14. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

15. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

16. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

17. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

18. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

19. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

20. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது

தத்துபித்துவங்கள் கண்டெடுத்தது இணையத்தில், மூழ்கி முத்தெடுத்தவர் : “என்றும் அன்புடன்” பாஸ்டன் ஸ்ரீராம்

14 comments:

Porkodi (பொற்கொடி) said...

enaku thaana?

Porkodi (பொற்கொடி) said...

பஸ்சுல நீ ஏறினாலும் உம்மேல பஸ் ஏறினாலும் டிக்கட் வாங்க போறதென்னவோ நீ தான்.

நட்சத்திர வாரம் தினமும் பதிவு போடணும்னு ரூல் போட்டாளே அவள‌ சொல்லணும் அவள‌ சொல்லணும்! (எப்பூடீ எங்க பெண்ணியவாதம்..)

Porkodi (பொற்கொடி) said...

பால் போடுறவன் பால்காரன். பேப்பர் போடுறவன் பேப்பர்காரன். அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?

மாணவன் said...

செம கலக்கல்...

தொடருங்கள்...

கெக்கே பிக்குணி said...

இந்த * வாரத்தின் சிகரமாக, //ஒரு கெக்கே பிக்கே காமடி//யை அளித்து எம் பெருமையை நிலைநாட்டும் உம் கொற்றம் வாழ்க.

அமைதிச்சாரல் said...

என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது.

நேந்திரங்காய் சிப்ஸை தின்னமுடியும், மெமரிசிப்ஸை தின்னமுடியுமா!!!

LK said...

அண்ணே ஏன் ஏன் இப்படி ..

வானம்பாடிகள் said...

படிக்கிறாங்களான்னு டெஸ்டா. 13,20 ரிபீட்டு. நாட்டாம தலைப்ப மாத்திச் சொல்லு:)))

பத்மநாபன் said...

இந்த மாதிரி பதிவுகளுக்கு ...பின்னூட்டம் இரண்டு தத்துபித்துவங்களாக / கடிகளாக இருக்கவேண்டியது வலைமரபு ..

1 .. என்ன தான் நான் அனுப்புற மெசேஜ்அட்டு பழசா இருந்தாலும் , உங்க மொபைலில் ஒன் நியு மெசேஜ் ரிசிவிட் தானே வரும்..

௨. என்ன தான் பூமி சூரியனை சுத்தி சுத்தி வந்தாலும் , பூமிக்கு சூரியன் பிக் அப் ஆகாது ....

Sathish said...

Good. 13 and 20 are same message.

ஜாக்கி சேகர் said...

முடியல மச்சி முடியலை..

ILA(@)இளா said...

//முடியல மச்சி முடியலை..//
REPEATTTTUUUEEE

ஆதிமூலகிருஷ்ணன் said...

enna kodumai ithu sriram?

sriram said...

ஆமா கேடியக்கா, வட உங்களுக்குத்தான்

நன்றி மாணவன்

நன்றி KP

நன்றி அமைதி சாரல், உங்க தத்துவத்தை repeat ஐ replace பண்ண உபயோகித்து விட்டேன்

ஏன் LK, என்ன ஆச்சு

இல்ல பாலாண்ணா, அது மிஸ்டேக், சரி பண்ணிட்டேன்

நன்றி பத்மநாபன், ரெண்டுமே சூப்பர்

நன்றி சதீஷ், சரி பண்ணிட்டேன்

ஏன் மச்சி, என்ன ஆச்சி

இளா, என்ன ரிப்பீட்டு??

ஏன் பிரபலம், பிடிக்கலையா??