Monday, August 31, 2009

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க- பகுதி 2:

பகுதி 1 படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த பதிவில் மேலும் சில தவிர்க்க வேண்டிய தவறுகளைப் பற்றிப் பார்க்கலாம்

1. Freegift : Gift என்றாலே அது கண்டிப்பாக Free ஆகத்தான் இருக்க வேண்டும், காசு கொடுத்து வாங்கினால் அது Gift ஆக இருக்க முடியாது

இந்த வார்த்தை விளம்பங்களில் அதிகம் உபயோகிக்கப் படுகிறது. பொருள் X வாங்கினால் பொருள் Y free ஆகக் கிடைக்கும் என்றோ அல்லது ஒரு பொருள்

Gift ஆகக் கிடைத்தது என்றோ கூறினால் போதும். Freegift என்பதை தவிர்க்கவேண்டும்.

2. I can't able to do this : can't உம் able உம் அடுத்தடுத்து வருவது சரியல்ல. I can't do this என்றோ I am not able to do this என்றோ சொல்ல வேண்டும். நண்பர்கள் நிறைய பேர் can't able என்று கூறக்கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய தவறுகளில்
இதுவும் ஒன்று.

அடுத்த இரண்டு தவறுகள் நான் தில்லியில் வாழ்ந்த போது கேட்டிருக்கிறேன், தமிழகத்தில் அதிகம் கேட்டதில்லை.

3. I gave the test / interview yesterday: Interview, Test, Exam இதையெல்லாம் கொடுக்க (give) முடியாது, I wrote my final
exam yesterday, I attended an Interview yesterday என்றுதான் சொல்ல வேண்டும்.

4. தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது, Myself Sriram என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன், இதுவும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.
I am Sriram என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல, Mr. X இடம் Mr.Sriram போன் பண்ணேனுன்னு சொல்லுங்க அல்லது ஸ்ரீராம் சார் போன்
பண்ணேன்னு சொல்லுங்க என்றும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். Mr / Sir போன்ற மரியாதை விகுதிகள் மற்றவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் போது
உபயோகப் ப்டுத்த வேண்டியவை, நமக்கு நாமே திட்டத்தில் சேராது...

5.இந்தியாவின் அனைத்து பகுதியினரும் பாகுபாடில்லாமல் செய்யும் தவறு இது: ஒருவர் பெயரைக் கேட்கும் போது, ரொம்ப polite ஆகக் கேட்பதாக நினைத்துக்
கொண்டு What is your Good Name? என்று கேட்கக்கூடாது. பெயரில் நல்ல பெயர், கெட்ட பெயர் என்று எதுவும் கிடையாது.
What(i)s your name (i உச்சரிப்பு கிடையாது- whats your name) என்று கேட்க வேண்டும், Polite ஆ கேப்பேன்னு அடம் பிடிச்சா May I
know your name
என்று கேட்கலாம்.

அழகா ஆங்கிலம் பகுதி 1 க்கு நல்ல ரெஸ்பான்ஸ், பகுதி இரண்டும் உங்களுக்கு பிடிச்சிருக்குமுன்னு நம்பறேன்.போரடிக்கும் போது சொல்லுங்க நிறுத்திக்கறேன்.
அப்புறம் வேற டாபிக்ல மொக்க போடுறேன்....

Saturday, August 29, 2009

இவங்க பேர் பொருத்தமா இருக்கா??

அடிபிடிச்ச இலுப்ப சட்டி கலர்ல இருக்கும் பையனுக்கு அம்மா வச்சாளாம் பேரு அரவிந்தசாமின்னு... இந்த மாதிரி கேசுங்க நாட்ல நிறைய இருக்க, நம்மாளுங்க
(பிளாக்கர்கள்) தனக்குத் தானே வச்சுக்கிட்ட பேருங்க அவங்களுக்கு பொருத்தமா இருக்கானு நான் செஞ்ச ஆராய்ச்சியோட Thesis தான் இது.

முதல்ல நான் பேருக்கு பொருத்தமாக நினைக்கும் பதிவர்கள்

1. கேபிள்சங்கர் - அண்ணன் சங்கர் நாராயணன் 10 வருஷமா கேபிள் டிவி தொழில் பண்ணிக்கிட்டு வர்றார், எனவே இந்த பேர் இவருக்கு சாலப்பொருத்தம்.
கூடிய சீக்கிரமே டைரக்டர் சங்கர் என்ற பேருக்கு கடும் போட்டி வரப்போகுது.

2. லக்கிலுக் : கார்ட்டூன் காரக்டர் போல ஒல்லியான தேகமும் துறு துறு கண்களும் உடையவர். இந்த பெயர் இவருடன் பள்ளி நாட்களில் இருந்தே ஒட்டிக்கொண்டது.
தமிழ் மொழிக்கே தகப்பன் ஆனதினால், இவரது சின்னப்பெயரான (short name) லக்கி என்கிற பெயரும் இவருக்கு பொருத்தமே.

3. நர்சிம்: ”நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்” என்ற Caption உடன் உலா வரும் இவர், சமூக அவலங்களின் மீது அளப்பரிய கோவம் கொண்ட
நரசிம்ம மூர்த்தி. கொஞ்ச நாளுக்கு முன்னால் இவர் வலையுலகில் காட்டிய தார்மீகக் கோவம் சொல்லும் இவர் பெயருக்கு ஏற்றவர் என்று.
யாராவது பிரகலாதன்களுக்கு உதவுவதற்கு தூணிலிருந்தும் துரும்பிலிருந்தும் ஓடி வரும் இவர் ஸ்ரீராம் என்ற பெயர் கொண்டவர்களுக்கு மட்டும் போனில்
கூட மாட்ட மாட்டார்.

4.குசும்பன் : பேருக்கு மிகவும் பொருத்தமானவர். எந்த சீரியசான விஷயத்தயும் கலாய்க்ககூடியவர், இவர் எழுத்து kusumbu and kusumbu only.

5. தாமிரா: இவர் தன்னுடைய தங்க்ஸ் ரமாவிடம் எப்போதும் ஏமிரா... இப்போ எந்த கடைக்குப் போகணும் என்று கேட்பதினால், ரைமிங்காக இவர்
தாமிரா என்றழைக்கப்படுகிறார். இல்லம்மா போஸ்ட் எதுவும் போடல, படிக்கல, சும்மா மானிட்ட்டர்ல இருக்குற அழுக்கத்தான் தொடைக்கிறேன் என்று
ஆதிமுதல் பொய் சொல்லும் கண்ணனைப் போல் இருப்பதால், இவர் ஆதி மூல கிருஷ்ணன் என்றும் அறியப் படுகிறார்.

6பரிசல் காரன் : இவரே இவரின் பெயர்க்காரணத்தை ஒரு பதிவில் எழுதியுள்ளார். பரிசல் என்ற ஒரு தொண்டு நிறுவனத்தின் ஒரு முக்கியத் தூண் இவர், எனவே
இவர் ஒரு பரிசல் காரன் (இதையெல்லாம் கலாய்க்கக்கூடாது), இதே போல் டோண்டு அவர்களும் அவருக்கு அந்தப்பெயர் வந்த காரணத்தை சில பல முறைகள்
அவரது பதிவுகளில் கூறி விட்டார்.

7. வெட்டிப்பயல் : பெயர் பொருத்தத்திலேயே பாலாஜி தனக்கு வைத்துக்கொண்டதுதான் டாப் / பெஸ்ட். வெற்றிகரமாக தொடர்ந்து கம்பெனியில் வெட்டியாக
இருப்பவர் (உனக்கெல்லாம் பிளாக்ல எழுதுறது எப்படின்னு சொல்லிக்கொடுத்தால், இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவன்னு பாலாஜி சொல்வார் பாருங்களேன்)

8. வால்பையன் : பாலாஜிக்கு சொன்னது மாதிரி உறுதியுடன் இவரைப் பற்றி சொல்ல முடியவில்லை. யாராவது இவர் டவுசர் கிழியறமாதிரி பதிவு
போட்டீங்கன்னா, கிழிஞ்சவுடனே இவருக்கு வால் இருக்கா இலலயான்னு பாத்துட்டு சொல்லிடுறேன்.

9. பாஸ்டன்பாலா அண்ணன் / ஹாலிவுட் பாலா / ராகவன் நைஜிரியா : இவர்களெல்லாம் இருப்பிடங்களையே தங்கள் அடையாளங்களாக ஆக்கிக்கொண்டவர்கள்.
இவர்களால் அந்த இடங்களுக்கே ஒரு பெருமை வரும் லிஸ்டில் இவர்கள் இருப்பதால், நான் இந்த லிஸ்டில் இல்லை.

இப்போ பெயர் பொருத்தம் இல்லை என்று நான் நினைக்கும் பதிவர்கள்

1. டுபுக்கு : பல பேருக்கு தமிழ் வலையுலகத்தை அறிமுகப் படுத்தியவர் - பல பேரை எழுதத் தூண்டியவர். (இவனெல்லாம் எழுதறான், நான் எழுதக்கூடாதா
என்ற ரகம் இல்லை இவர், இவரை மாதிரி ஒரு நாள் நானும் எழுதணும் என்று நம்மை ஏங்க வைப்பவர்), டுபுக்கு என்றால் நம் மனதுக்கு வரும் வடிவேலு
காரக்டருக்கு நேர் மாறானவர், இவர் ஒரு சகல கலா வல்லவன். பொட்டி தட்டுதல் / குறும் படம் எடுத்தல் / காமடி என்று இவர் ஒரு Multi Faceted personality.

2ஜாக்கிசேகர் : இவருக்கும் குதிரை ஓட்டும் ஜாக்கிக்கோ ஜாக்கி ஷெராபுக்கோ எந்த ஒற்றுமையும் எனக்குத் தெரியவில்லை. பேர் நன்றாக இருந்தாலும் அர்த்தம்
ஏதும் இருக்கற மாதிரி எனக்குத் தெரியல. ஜாக்கி சான் மாதிரி கடின உழைப்பாளி என்பதால் இந்த பெயரோ? கூடிய சீக்கிரமே காமிரா மேன் சேகர் என்று
அறியப்படுவார்...

3. பைத்தியக்காரன் : அண்ணன் சிவராமன் இந்த பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தெரிய வில்லை. ஆனால் அவருக்கும் இந்தப் பெயருக்கும் துளிக்கூட
சம்பந்தமில்லை என்று கூறி இந்த thesis ஐ முடிக்கிறேன்.

நீங்களும் இதே மாதிரி பொருத்தமான / பொருத்தமில்லாத பெயர்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே (ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா பின்னூட்டம் போடுங்கப்பான்னு
சொல்லுறதுக்கு எவ்வளவு சொல்ல வேண்டியிருக்கு)

Thursday, August 27, 2009

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க

நான் இந்த (http://bostonsriram.blogspot.com/2009/08/blog-post.html) பதிவில் கூறியது போல என் பக்கத்தில் அமெரிக்க விசா பற்றி தொடர்ந்து எழுதுவேன். நடுவில் Spoken English மற்றும் Resume making பற்றியும்
எழுத ஆசை. அந்த வரிசையில் என் முதல் பதிவு இதோ...


அழகாய் ஆங்கிலம் பேச முதலில் நாம் வழக்கமாகச் செய்யும் தவறுகளை திருத்தணும். ஒரு கல்லில் தேவையில்லாத பகுதிகளை நீக்கினால் மிச்சமிருப்பது அழகான்
சிலை. இதே லாஜிக்கில் நாம் செய்யும் எல்லா தவறுகளையும் நீக்கினால், நான் பேசுவது அழகான (சரியான) ஆங்கிலம் ஆகி விடும்.

இந்த பதிவில் சில தவறுகளைப்பற்றி பார்க்கலாம்.

1. First First : எனக்கு தெரிஞ்சு தமிழர்கள் மட்டுமே இந்த தவறை செய்கிறார்கள். ஆங்கிலத்தில் First மட்டுமே உண்டு, first first கிடையாது.
தமிழில் முதன்முதலில் என்று உண்டு. எதையுமே அளவோடு சொல்ல நமக்குத் தெரியாது, எல்லாத்தையும் superlative ஆக சொல்ல வேண்டும் .
முதலில் என்றாலும் முதன்முதலில் என்றாலும் ஒரே அர்த்தம்தான். முதன்முதலில் என்று சொல்வதில் தவறு இல்லை, first first என்பதை first
என்று சொல்லிப் பழகணும்.

2. On the way ல இருக்கேன் - இதுவும் நாம் செய்யும் (சொல்லும்) ஒரு Common mistake. Iam on the way ன்னு முழுசா ஆங்கிலத்தில் சொல்லலாம்
அல்லது வந்துகிட்டே இருக்கேன்னு பேச்சுத்தமிழ்ல சொல்லலாம், கலந்துதான் பேசுவேன்னு முடிவெடுத்துட்டா way ல இருக்கேன்னு சொல்லலாம்.

3. இந்த verb "ing" ங்க நாம விடவே மாட்டோம், எல்லாத்துக்கூடவும் சேத்துக்குவோம். ஒங்க வீடு எங்க இருக்குன்னு கேக்கறதுக்கு நாம கேக்குறது “Where are you
staying" - இது தவறு. Where do you live or where do you stay ன்னு கேக்கணும். இதே மாதிரி "where are you working?" இது தவறு
"what do you do for living" அல்லது "where do you work" என்றுதான் கேக்கணும். ரொம்ப Grammer க்கு உள்ள நுழையாம சொல்லணும்முன்னா
ஒருவர் தொடர்ந்து / வழக்கமாக் செய்யும் செயலுக்கு “ing" வராது. Ex ; live / eat / work etc.

4. Photocopy எடுப்பதை Xerox எடுப்பதாகவே சொல்லிப் பழகிவிட்டோம். xerox என்பது ஒரு நிறுவனம், அவர்களும் Photocopy இயந்திரங்கள்
தயாரிக்கின்றனர், அவர்கள் மட்டுமே அல்ல. இதே போலத்தான் Jeep, இதுவும் ஒரு நிறுவனமே, car/ SUV போல ஒரு வகையான வாகனம் அல்ல.

5.Resume : இதை உச்சரிப்பதில்தான் தகராறே. இதை ”ரெஸ்யூமே” என்றுதான் சொல்ல வேண்டும், நம்மில் பலர் “ரெஸ்யும்”என்றும் ”ரெஷ்யும்”/”ரெஷ்யூமே”
(முக்கியமாக தெலுங்குக்காரர்கள் இப்படி சொல்வார்கள்) என்றும் உச்சரிக்கிறோம்.

நான் எழுதும் விசா பற்றிய பதிவுகளுக்கு பெரிசா ஒண்ணும் ரீச் இல்ல, அதுகாக நான் கவலப்படல, அதே மாதிரி spoken english / Resume பத்தியும்
எழுத ஆசை. நாம எழுதுறது நாலு பேருக்கு உபயோகமா இருந்தா சந்தோஷம். உங்க கருத்துக்களை (முக்கியமா துளசி டீச்சர்) எதிர்பார்க்கிறேன்.

படித்ததில் பிடித்தது : Don't worry about world coming to an end today, it is already tomorrow in Australia
(படிச்சா அனுபவிக்கணும் ஆராயப்படாது)

Monday, August 24, 2009

L1 விசா

நான் போன பதிவில் சொல்லியிருந்தது போல, இந்த பதிவில் L1 விசா பற்றிப் பார்க்கலாம்.
என்னதான் ஸ்டாலின் முதல்வர்கள் மாநாட்டுக்குப் போனாலும், அவர் துணை முதல்வர்தான்.அவர் செல்வதிலும் சில அனுகூலங்கள் இருக்க்த்தான் செய்கிறன. (முதல்வரின் பளு குறைவது, ஸ்டாலின் மற்ற தலைவர்களுடன் பழக வாய்ப்பு போன்ற சில). அது போலத்தான் H1B மற்றும் L1 விசாக்கள் - They bothare similar but not the same. இவை இரண்டும் அமெரிக்காவில் வேலை செய்யத் தரப்படுபவை. இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு, சில பல +/- உண்டு.L1 விசா பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முதல்ல, L1 விசான்னா என்ன என்று பார்க்கலாம், ரொம்ப டெக்னிகலா போகாம சொல்றேன். L1 என்பது Intra Company Transfer. ஒரு நிறுவனம், அமெரிக்காவிலும் வேறொறு நாட்டிலும் தன்னுடைய அலுவலகத்தை வைத்திருந்தால், அது தன்னுடைய ஊழியர்களை அமெரிக்க கிளைக்கு Transferசெய்து வேலை செய்ய வைக்கலாம். இதற்கு இருக்க வேண்டிய தகுதிகள் - Emplyee அந்நிறுவனத்தில் கடந்த மூன்றாண்டுகளில் ஒரு ஆண்டுக்கு குறையாமல் வேலை செய்திருக்க வேண்டும் மற்றும் அவர் Manager/Executive ஆகவோ Specialized Knowledge Staff ஆகவோ இருக்க வேண்டும்.
நீங்க விப்ரோ / இன்போசிஸ் போன்ற கம்பெனிகளில் வேலை செய்பவராக இருந்தால் L1 விசா எளிதாகப் பெற்று அமெரிக்கா வரலாம். இப்போதுள்ள நிலைமையில்L1 விசாவில் வருவது நல்லது, ஸ்டாம்பிங் செய்வது தேசி கன்ஸல்டிங்களின் H1B யை ஸ்டாம்பிங் செய்வதை விட எளிது.
இவை இரண்டுக்கும் என்ன ஒற்றுமை / வேற்றுமை என்னனனா, ரெண்டிலேயும் அமெரிக்காவில் வேலை செய்யலாம், H1B ல ஆறு வருஷம் வேலைசெய்யலாம், L1 ல ஏழு வருஷம் வேலை செய்யலாம், இரண்டிலும் Green Card Process செய்யலாம். ரெண்டுக்குமே apply பண்ணும் போது இங்கு அந்த நபருக்கு வேலை இருப்பதை உறுதி செய்யணும். H1B க்கு வருடாந்திர கோட்டா உண்டு L1 க்கு அது கிடையாது.
இப்போ ரெண்டுக்கும் உள்ள பிளஸ் மைனஸ் பற்றி பார்ப்போம். H1B ல எவ்வளவு தடவ வேணா வேலை மாறலாம் (புது Employerக்கு விசாவை மாற்றிக்கொள்ள வேண்டும்) ஆனா L1 ல அது முடியாது. L1 is specific to an employer. L1 ல இருக்கும் போது வேலை மாற நினைச்சா, ஏப்ரல் ஒண்ணாம் தேதி ஒரு Employer மூலம் H1B விண்ணப்பித்து அது Effective ஆகும் போது (அக்டோபர் 1) வேலை மாறலாம். L1 ல இருக்கும் மிகப்பெரிய + என்னன்னா, உங்கள் கணவனோ / மனைவியோ L2 இல் எந்த வேலை வேணா செய்யலாம், நீங்கள் H1B ல இருந்தால் அவர் H4 ல் இருப்பார், அதில் வேலை செய்ய முடியாது. உங்கள் கணவனோ / மனைவியோ career யை கெடுத்துக்கொண்டு அமெரிக்கா வர வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால்L1 உங்களுக்கு சிறந்த்து.(மேலதிக தகவல்கள் வேணுமுன்னா கேளுங்க சொல்றேன்)
பர்சனலாகவும், L1 ல அமெரிக்கா வந்து ஓரிரு வருஷங்களில் கொஞ்சம் செட்டில் ஆகி பின்னர் H1B க்கு மாறி Green Card Process பண்ணி நீண்ட நாள் இருப்பது நேரடி H1B ரூட்டை விட ஸ்மூத்தானது.
என்ன கம்பெனியில் சொல்லி L1 விசா விண்ணப்பிக்க கிளம்பிட்டீங்களா ? ஆல் தி பெஸ்ட்....
அதே டிஸ்கி மறுபடியும் : டிஸ்கி: The above mentioned are purely my personal opinion and not be used as a Legal Opinion in any manner. I suggest you to use your wisdom and consider your personal situation before making any decision.

Wednesday, August 19, 2009

H1B விசா Apply செய்யலாமா வேண்டாமா??

நீங்க இப்போ இந்தியாவிலோ வேற எங்கயோ ITல வேலை செய்றீங்களா? இந்த வருஷம் H1B விசா எடுத்து அமெரிக்கா வர விரும்புனீங்களா? பொருளாதார மந்த நிலைமை & Poor Job Market காரணமாக விசா குறித்து முடிவு எடுக்க முடியாமல் குழம்பி போயிருக்கீங்களா?? உங்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஒரே வாக்கியம் “ Just Do It".
கடந்த 2 வருஷமா முதல் நாளன்றே (ஏப்ரல் 1ம் தேதி) 150,000க்கு மேல் விண்ணப்பங்கள் USCIS இல் (United States Citizenship and Immigration Servies) குவிந்தன. இந்த வருஷமோ, இன்று வரை 20000 இடங்கள் இன்னும் காலியாக உள்ளதாக தெரிகிறது. மேலே கூறிய 2 காரணிகள் இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தாலும், USCIS இன் மிதமிஞ்சிய கெடுபிடிகளும் இந்த நிலைமைக்கு ஒரு காரணம். மிக அதிக அளவில் விண்ண்ப்பிக்கும் விப்ரோ, இன்போசிஸ், டி சி எஸ்போன்ற நிறுவனங்களும் மிக குறைந்த அளவே விண்ண்ப்பித்து உள்ளன. இவை கடந்த வருஷங்களில் அளவுக்கு அதிகவாகவே விண்ணப்பித்துபின்னர் உபயோகித்து வந்தன. இவர்களின் Cost Cutting கூட ஒரு காரணம்.
நிலைமை இப்படி இருக்க, விசா விண்ணப்பிக்கச் சொல்பவனை பார்த்து “லூசாப்பா நீ” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. காலணியே அணியாத கிராமத்துக்கு சென்ற2 salesmen கதையை நெனச்சு பாருங்க. யாரும் காலணி அணிவதில்லை, இங்கு விற்பனை இருக்காது என்பது நெகடிவ் அப்ரோச், இங்கு யாருமே காலணிஅணிவதில்லை இது ஒரு பெரிய Market என்பதே பாஸிடிவ் மற்றும் சரியான அப்ரோச். பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்த போது பங்குகளை விற்றவர் பலர், அனைவருக்கும் நஷ்டமேமிஞ்சியது, அப்போது பங்குகளை வாங்கி, பொறுமையோடு காத்திருக்கும் அனைவருக்கும் லாபம் நிச்சயம். நான் சொல்வதும் இதே லாஜிக் தான்.
நான் ITல வேலை பாக்குற எல்லோரையும் அமெரிக்கா வாங்கன்னு சொல்லல. இப்போ இருக்குற நிலைமையினால என்ன செய்யுறதுன்னு தெரியாம யோசிக்குறவங்களுக்கு,என்னோட அட்வைஸ் தைரியமா விசா அப்ளை பண்ணுங்க. அமெரிக்கா போன்ற Grown Economyக்கு Recession ஒன்னும் புதுசில்ல, 5-6 வருஷ வளர்ச்சியும் & 1-1.5 வருஷ ரிசெஷணும் அமெரிக்காவுக்கு சகஜம். இப்போதுள்ள மந்த நிலை இவ்வளவு நாள் நீடிப்பதற்கு பல காரணங்கள். இந்த நிலை இன்னும் 6 அல்லது 9 மாதங்களில், மிக அதிக பட்சமாக 12 மாதங்களில் மாறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதுக்க்கப்புறம் வேலை கிடைப்பதில் அதிக கஷ்டமிருக்காது.
நிலைமை நல்லா ஆனப்புறம் மறுபடியும் விசா கிடைப்பது கஷ்டமாயிடும், இப்போதைய கஷ்டம் விசா விண்ணப்பிக்க Employer கிடைப்பது மட்டுமே.ஏதாவது Employer கிடைத்தால் விசா விண்ணப்பிச்சு Approval வாங்கிடுங்க. இப்போதைக்கு Stamping போகாதீங்க, Job Market நல்லா ஆனப்புறம், ஸ்டாம்பிங் பண்ணிட்டு அப்புறமா செய்யுற வேலையை விடுங்க. இப்போ விசாவுக்கு 2500- 3000$ செலவு செய்ய வேண்டியிருக்கும், இதை முதலீடாக நினைத்துக்கொண்டு காத்திருந்தா வாய்ப்பு கண்டிப்பாக வரும். H1B விசா ஆறு வருடங்களுக்கு (3வருடங்கள் முதலில் + 3வருடங்கள் Extension) கிடைக்கும், நீங்கள் அமெரிக்காவில் இல்லாத நாட்கள் இந்த கணக்கில் வராது. இப்போ விசா வாங்கி ஒரு வருடம் கழித்து இங்கு வந்தால், அந்த நாள் முதல் நீங்கள் 6 வருஷம் அமெரிக்காவில் வேலை செய்யலாம்.
இன்னொரு விஷயம், Employer Credentials பற்றி ரொம்ப கவலைப் பட வேண்டாம். அந்த கம்பெனி சரியில்லையின்னா, நீங்க இங்கு வந்து சில மாதங்களில் வேறு கம்பெனிக்கு மாறி விடலாம், நிறைய பதிவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள், கண்டிப்பாக உதவி செய்வார்கள்.
நீங்கள் வேலை செய்யும் கம்பெனி வழியாக வருவதற்கு, L1 விசா ஒரு நல்ல வழி, அது பற்றி அடுத்த பதிவில்.
இது H1B பத்தி நான் எழுதும் முதல் பதிவு, இன்னும் நிறைய எழுத நினைத்துள்ளேன். நீங்க ஏதாவது specificஆக கேட்டா, அது உங்களுக்கு மட்டுமான பதிலா இருந்தா, தனி மடலில் பதில் சொல்கிறேன், எல்லாருக்கும் அந்த பதில் உபயோகமா இருந்தா, ஒரு போஸ்ட் போடுறேன்
டிஸ்கி: The above mentioned are purely my personal opinion and not be used as a Legal Opinion in any manner. I suggest you to use your wisdom and consider your personal situation before making any decision.

Thursday, August 13, 2009

வேரறுக்கப்பட வேண்டிய(வை)வர்கள்

கடந்த ஞாயிறு ஜெயா டி வி யில் ஒளிபரப்பான மக்கள் அரங்கம் நிகழ்ச்சியை பார்த்தேன்.
அதில் பேசிய இரண்டு பேர்களின் பேச்சைக் கேட்டு இவ்வளவு கேவலமாகக் கூட மக்களால் நடந்து கொள்ளக் கூடுமா என்று கொதித்தேன். சமூகம் மற்றும் ஒரு தனி மனிதரின் வக்கிரங்களால் எவ்வளவு இம்சிக்க முடியும் என்பதற்கு இவர்களுக்கு நடந்த கொடுமைகளே சாட்சி. ஜாதி மற்றும் லஞ்சம் என்று நான் வெறுக்கும், கடுமையாக எதிர்க்கும், வேரறுக்க நினைக்கும் விஷயஙகளைப் பற்றி கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது, என்னால் இதற்கு எதுவும் செய்ய் முடியவில்லை என்று நினைக்கும் போது, வெட்கம் பிடுங்கித் தின்கிறது.
1)அ.இராஜ மாணிக்கம் திருச்சி மாவட்டத்தின் ஒரு கடை கோடி கிராமத்தை சேர்ந்தவர், MA,M.Phil, B.ED என்று தன் பெயருக்குப்பின்னால் ABCD யை குலுக்கிப் போட்டு வைத்திருப்பவர். இவர் அண்ணன் ஒரு BSC பட்டதாரி. இவர்களைத் தவிர அந்த கிராமத்தில் ஒரே ஒருவர் தான் பட்டதாரி.இருந்ந்தாலும் இவருக்கும் இவர் குடும்பத்தினரையும் கிராமத்தில் யாரும் மரியாதையாக நடத்துவது கிடையாது. காரணம் என்ன தெரியுமா? இராஜ மாணிக்கத்தின் தந்தை ஒரு வெட்டியான். இவர்களின் ஜாதியை காரணம் காட்டி இவர்களை இன்னும் கீழ்த்தரமாகவே நடத்துவதாக சொல்கிறார். இந்த கிராமத்தில் இன்னும் இரட்டை குவளை முறை இருப்பதாகவும் சொல்கிறார். ஊரிலேயே மிக அதிகம் படித்த இவரை மதிக்காமல் தாங்கள் படிக்காமலே பெற்ற பட்டங்களை (ஜாதி)பெயருக்கு பின்னால் அலையுதுங்க இந்த ஊர் மாக்கள்.

2)அடுத்து பேசியவர் துறையூரை சேர்ந்த விவசாய குடும்பத்து சரண்யா என்ற பெண். பணமில்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தியவர்.விவசாயிகளுக்கான அடையாளஅட்டை கிடைத்தால் படிப்பதற்க்கு சலுகைகள் கிடைக்கும் என்று கேள்விப் பட்டு, தாசில்தாரிடம் சென்று கேட்டிருக்கிறார். அப்போது அந்த தாசில்தார், இந்த பெண்ணுக்குஒரு லட்ச ரூபாய் கிடைக்க வழி சொல்லி இருக்கிறார். சரண்யாவின் தந்தை விபத்தில் இறந்ததால் குடும்பத்திற்கு 1 லட்சம் கிடைக்கும் என்றும் அதற்கு தனக்கு 50,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்க,சரண்யா அதற்கும் சம்மதித்து, பணம் வரும் போது கழித்துக்கொள்ளுங்கள் என்றிருக்கிறார்.அந்த தாசில்தாரோ பணம் முன்னமே வேண்டும் என கூறி உள்ளார். சரண்யாவும் அவரது குடும்பத்தாரும் முட்டி மோதிப் பார்த்து விட்டு, கலெக்டர், முதலமைச்சர் என்று பலரிடமும் Escalate செய்தும் பலன் பூஜ்யம். 2 கலெக்டர்கள் போட்ட ஆணைகளையும் அவர் மதிக்க வில்லை. இதுக்கெல்லாம் சிகரம் வச்சா மாதிரி ஒரு விஷயம்- சரண்யா அவரிடம் மீண்டும் சென்று தன் நிலைமையை விளக்கி இருக்கிறார். அதற்கு அந்த ராட்சசி, உனக்கு படிக்கனும்னா “தொழில்” செய்து படிச்சிக்கோ என்று வழி காட்டியுள்ளார். அந்தப் பெண் பாவம், நானாயிருந்தால் நீயும் “தொழில்” செஞ்சுத்தான் படிச்சு வேலைக்கு வந்தியான்னு கேட்டிருப்பேன்.
இந்த மாதிரி ஜாதி வெறி பிடித்து,லஞ்சப்பித்து பிடித்து அலையும் நாய்களைக் கண்டால் கொதிக்குது. இதுங்க போகும் போது என்னத்த கொண்டு போகப் போகுதுங்க...வாழும் போது 4 பேருக்கு நல்லது செய்யலேன்னாலும், கெடுதல் செய்யாம இருக்கலாம் இல்ல....
நான் ’இந்நாட்டின் பிரதமரானால்’ ன்னு கட்டுரை எழுத விரும்பவில்லை. ஆனால்,எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் இந்த மாதிரி ஈனப்பிறவிகளிக்கு மிக அதிகமானதண்டனை தர வழி செய்வேன்.
நான் இன்னும் “இந்தியன்” என்பதில் பெருமையுடன் இருக்கிறேன், இந்த நாதாரிகள் அதுக்கு வேட்டு வச்சிரும் போலருக்கு...
இங்க ஒரு விஷயததை சொல்லியே ஆகணும், Visu Educational Trust இந்தப் பெண்ணுக்கு இருபதாயிரம் கொடுத்து படிப்பை தொடர உதவி உள்ளது.விசுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
BTW, H1B Visa பத்தின முதல் பதிவை நாளை போட முயற்சிக்கிறேன்.

Wednesday, August 12, 2009

இரண்டாவது துவக்கம்

ஏப்ரல் 2008 ல் எழுத முடிவெடுத்து 3 இடுகைகள் எழுதிய நிலையில் சில பல காரணங்களுக்காக இது வரை எழுதுவதை தவிர்த்து வந்தேன். தமிழ் பதிவுலகில் நான் பார்த்த POLITICS, அதில் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை, நான் ரொம்ப சீக்கிரம் எதற்கும் ADDICT ஆகிவிடுபவன், இதிலும் அப்படி மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் நினைத்தேன்.

15 மாதமாக தமிழ்மணத்தில் வரும் almost every post படித்து வந்தேன்.நான் போட்ட பின்னூட்டங்கள் மூலம் நிறைய நண்பர்கள்.இப்போ என்ன ஆனாலும் சரி, எழுதிதான் பாத்துடுவோம் என்ற முடிவுக்கு வந்துட்டேன். (பயப்படாதீங்க, என் எழுத்து கொஞ்சம் மோசமாக இருக்கும், ரொம்ப மோசமா இருக்காது)
மேட்டருக்கு போவதற்கு முன்னர், ஒரு விஷயத்தை சொல்லணும், இதை கேட்டு விட்டு, காறி துப்புறதா, என்னை அடிக்குறதுக்கு எதையாவது தேடுறதாங்குறதைஉங்க முடிவுக்கே வுடறேன். ஒரு வாரத்துக்கு முன்ன, நம்ம் டுபுக்கு கிட்ட தொலைபேசிய போது, ஏன் ஆரம்பிச்சிட்டு அப்புறம் எழுதலன்னு கேட்டார், நானும் ரொம்ப மரியாதையா, என்ன எழுதறதுன்னு தெரியலன்னு சொன்னேன், சரி, atleast comments போட்டவங்களுக்காவது நன்றி சொல்லலாமே என்று சொன்னார். எனக்கு யாருங்க கமெண்ட்டெல்லாம் போடப்போறாஙக என்று நான் சொன்னதும், டுபுக்கு திட்டியதை அச்சில் ஏத்த முடியாது. பதிவு போட்ட பின்நானே என் பக்கத்தை திறந்து பாக்கல, மக்கா, சத்தியமா சொல்றேன்,16 comments வந்தது எனக்கு தெரியவே தெரியாது. அன்னிக்கு முடிவு பண்ணேன், எழுதுரதுன்னு, நம்ம பதிவுலகம், எவ்வளவோ தாங்கிடுச்சு, இதையும் தாங்காதா என்ன??

என்னையும் ஒரு ஆளா மதிச்சு பின்னூட்டம் போட்ட, கயல் விழி,பிரேம்ஜி, இரா.வசந்தகுமார், ராதா ஸ்ரீராம் (யக்கோவ், word verification எடுத்தாச்சு)காரூரன், டுபுக்கு, லக்கிலுக், கேபிள் (@ யூத்து), வண்ணத்துபூச்சியார், சுரேஷ், வால்பையன், இயற்கை, பிரபா அனைவருக்கும், ஒரு பெரிய நன்றி.தனித்தனியா, பதில் கமெண்டோட நன்றி சொல்ல ஜாக்கி அளவுக்கு எனக்கு சரக்கு போதாது, அதனால, எல்லாருக்கும் பொதுவா ஒரு கும்பிடு.

ஒரு வாரமா, எனக்கு பொறுமையாக,எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்த, வெட்டிப்பயல் பாலாஜிக்கு ஒரு Special Thanks (பேருக்கேத்தாப்போல, வெட்டியாத்தான் இருக்காருன்னு நினைக்கிறேன், எப்ப போன் பண்ணாலும் எடுத்து, பொறுமையா பதில் சொல்றார்) Infy ல சொல்லி அவருக்கு கொஞ்சம் வேல குடுக்க சொல்லணும்.
என்னை எழுத சொல்லி ஊக்கப் படுத்திய, வெட்டிப்பயல், டுபுக்கு, லக்கி, ஜாக்கி, கேபிள் @ யூத்து , ஹாலிவுட் பாலா, வால்பையன்,நர்சிம்,சீமாச்சு அனைவரையும் அன்புடன் நினைவு கூறுகிறேன்.

எப்படா, மேட்டருக்கு வருவேங்கற உங்களோட Mind Voice எனக்கு கேக்குது. அதனால,நான் சொல்ல வந்தத சொல்லிடறேன், அப்பப்போ பொதுவான விஷயங்களையும், ரெகுலரா H1B - Work Visa for America வை பத்தியும் எழுதலாமுன்னு இருக்கேன், Subject Matter பத்தி எழுத எனக்கு என்னதெரியுமுன்னு கேட்டீங்கன்னா - 3 வருஷமா பாஸ்டன்ல ஒரு Consulting company ல Marketing Department க்கு Head ஆ இருக்கேன், கம்பெனிக்கு கஸ்டமரிடமிருந்த்து Projects தேடுறது, Placement தேடுறது எல்லாம் என் தலைமையில் தான், முக்கியமாக H1B, Greencard Processingஆகியவற்றில் 3 வருஷ அனுபவம். நான் எழுதுவது நாலு பேருக்கு உபயோகமா இருந்தா சந்தோஷம். Applying for H1B, Green Card processing, Choosing the right company, Fulltime Job Vs consulting, How does the Contracting work, life of IT folks in USன்னு பல விஷயங்கள் பற்றி எழுதலாமுன்னு முடிவு பண்ணிருக்கேன், நீங்க ஏதாவது specific ஆ கேட்டா, அது உங்களுக்கு மட்டுமான பதிலா இருந்தா, தனி மடலில் பதில் சொல்கிறேன், எல்லாருக்கும் அந்த பதில் பொதுவா இருந்தா, ஒரு போஸ்ட் போடுறேன்.

மத்தபடி, சமூக அவலங்கள், பாலிடிக்ஸ்,கிரிக்கெட், சினிமா பற்றியும் எழுத ஆசை (கண்டிப்பா நம்ம லெவல் உலக சினிமா இலல, கமல் வாழ்த்து, விஜய்ஜோக்ஸ் இப்படித்தான் இருக்கும்)
சீக்கிரமே நெக்ஸ்ட் மீட் பண்றேன்
என்றும் அன்புடன்ஸ்ரீராம்