Saturday, August 29, 2009

இவங்க பேர் பொருத்தமா இருக்கா??

அடிபிடிச்ச இலுப்ப சட்டி கலர்ல இருக்கும் பையனுக்கு அம்மா வச்சாளாம் பேரு அரவிந்தசாமின்னு... இந்த மாதிரி கேசுங்க நாட்ல நிறைய இருக்க, நம்மாளுங்க
(பிளாக்கர்கள்) தனக்குத் தானே வச்சுக்கிட்ட பேருங்க அவங்களுக்கு பொருத்தமா இருக்கானு நான் செஞ்ச ஆராய்ச்சியோட Thesis தான் இது.

முதல்ல நான் பேருக்கு பொருத்தமாக நினைக்கும் பதிவர்கள்

1. கேபிள்சங்கர் - அண்ணன் சங்கர் நாராயணன் 10 வருஷமா கேபிள் டிவி தொழில் பண்ணிக்கிட்டு வர்றார், எனவே இந்த பேர் இவருக்கு சாலப்பொருத்தம்.
கூடிய சீக்கிரமே டைரக்டர் சங்கர் என்ற பேருக்கு கடும் போட்டி வரப்போகுது.

2. லக்கிலுக் : கார்ட்டூன் காரக்டர் போல ஒல்லியான தேகமும் துறு துறு கண்களும் உடையவர். இந்த பெயர் இவருடன் பள்ளி நாட்களில் இருந்தே ஒட்டிக்கொண்டது.
தமிழ் மொழிக்கே தகப்பன் ஆனதினால், இவரது சின்னப்பெயரான (short name) லக்கி என்கிற பெயரும் இவருக்கு பொருத்தமே.

3. நர்சிம்: ”நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்” என்ற Caption உடன் உலா வரும் இவர், சமூக அவலங்களின் மீது அளப்பரிய கோவம் கொண்ட
நரசிம்ம மூர்த்தி. கொஞ்ச நாளுக்கு முன்னால் இவர் வலையுலகில் காட்டிய தார்மீகக் கோவம் சொல்லும் இவர் பெயருக்கு ஏற்றவர் என்று.
யாராவது பிரகலாதன்களுக்கு உதவுவதற்கு தூணிலிருந்தும் துரும்பிலிருந்தும் ஓடி வரும் இவர் ஸ்ரீராம் என்ற பெயர் கொண்டவர்களுக்கு மட்டும் போனில்
கூட மாட்ட மாட்டார்.

4.குசும்பன் : பேருக்கு மிகவும் பொருத்தமானவர். எந்த சீரியசான விஷயத்தயும் கலாய்க்ககூடியவர், இவர் எழுத்து kusumbu and kusumbu only.

5. தாமிரா: இவர் தன்னுடைய தங்க்ஸ் ரமாவிடம் எப்போதும் ஏமிரா... இப்போ எந்த கடைக்குப் போகணும் என்று கேட்பதினால், ரைமிங்காக இவர்
தாமிரா என்றழைக்கப்படுகிறார். இல்லம்மா போஸ்ட் எதுவும் போடல, படிக்கல, சும்மா மானிட்ட்டர்ல இருக்குற அழுக்கத்தான் தொடைக்கிறேன் என்று
ஆதிமுதல் பொய் சொல்லும் கண்ணனைப் போல் இருப்பதால், இவர் ஆதி மூல கிருஷ்ணன் என்றும் அறியப் படுகிறார்.

6பரிசல் காரன் : இவரே இவரின் பெயர்க்காரணத்தை ஒரு பதிவில் எழுதியுள்ளார். பரிசல் என்ற ஒரு தொண்டு நிறுவனத்தின் ஒரு முக்கியத் தூண் இவர், எனவே
இவர் ஒரு பரிசல் காரன் (இதையெல்லாம் கலாய்க்கக்கூடாது), இதே போல் டோண்டு அவர்களும் அவருக்கு அந்தப்பெயர் வந்த காரணத்தை சில பல முறைகள்
அவரது பதிவுகளில் கூறி விட்டார்.

7. வெட்டிப்பயல் : பெயர் பொருத்தத்திலேயே பாலாஜி தனக்கு வைத்துக்கொண்டதுதான் டாப் / பெஸ்ட். வெற்றிகரமாக தொடர்ந்து கம்பெனியில் வெட்டியாக
இருப்பவர் (உனக்கெல்லாம் பிளாக்ல எழுதுறது எப்படின்னு சொல்லிக்கொடுத்தால், இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவன்னு பாலாஜி சொல்வார் பாருங்களேன்)

8. வால்பையன் : பாலாஜிக்கு சொன்னது மாதிரி உறுதியுடன் இவரைப் பற்றி சொல்ல முடியவில்லை. யாராவது இவர் டவுசர் கிழியறமாதிரி பதிவு
போட்டீங்கன்னா, கிழிஞ்சவுடனே இவருக்கு வால் இருக்கா இலலயான்னு பாத்துட்டு சொல்லிடுறேன்.

9. பாஸ்டன்பாலா அண்ணன் / ஹாலிவுட் பாலா / ராகவன் நைஜிரியா : இவர்களெல்லாம் இருப்பிடங்களையே தங்கள் அடையாளங்களாக ஆக்கிக்கொண்டவர்கள்.
இவர்களால் அந்த இடங்களுக்கே ஒரு பெருமை வரும் லிஸ்டில் இவர்கள் இருப்பதால், நான் இந்த லிஸ்டில் இல்லை.

இப்போ பெயர் பொருத்தம் இல்லை என்று நான் நினைக்கும் பதிவர்கள்

1. டுபுக்கு : பல பேருக்கு தமிழ் வலையுலகத்தை அறிமுகப் படுத்தியவர் - பல பேரை எழுதத் தூண்டியவர். (இவனெல்லாம் எழுதறான், நான் எழுதக்கூடாதா
என்ற ரகம் இல்லை இவர், இவரை மாதிரி ஒரு நாள் நானும் எழுதணும் என்று நம்மை ஏங்க வைப்பவர்), டுபுக்கு என்றால் நம் மனதுக்கு வரும் வடிவேலு
காரக்டருக்கு நேர் மாறானவர், இவர் ஒரு சகல கலா வல்லவன். பொட்டி தட்டுதல் / குறும் படம் எடுத்தல் / காமடி என்று இவர் ஒரு Multi Faceted personality.

2ஜாக்கிசேகர் : இவருக்கும் குதிரை ஓட்டும் ஜாக்கிக்கோ ஜாக்கி ஷெராபுக்கோ எந்த ஒற்றுமையும் எனக்குத் தெரியவில்லை. பேர் நன்றாக இருந்தாலும் அர்த்தம்
ஏதும் இருக்கற மாதிரி எனக்குத் தெரியல. ஜாக்கி சான் மாதிரி கடின உழைப்பாளி என்பதால் இந்த பெயரோ? கூடிய சீக்கிரமே காமிரா மேன் சேகர் என்று
அறியப்படுவார்...

3. பைத்தியக்காரன் : அண்ணன் சிவராமன் இந்த பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தெரிய வில்லை. ஆனால் அவருக்கும் இந்தப் பெயருக்கும் துளிக்கூட
சம்பந்தமில்லை என்று கூறி இந்த thesis ஐ முடிக்கிறேன்.

நீங்களும் இதே மாதிரி பொருத்தமான / பொருத்தமில்லாத பெயர்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே (ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா பின்னூட்டம் போடுங்கப்பான்னு
சொல்லுறதுக்கு எவ்வளவு சொல்ல வேண்டியிருக்கு)

29 comments:

sriram said...

சும்மா டெஸ்டிங்

shortfilmindia.com said...

நான் பத்து இல்ல.. 15 வருஷத்துக்கு மேல கேபிள் ஆபரேட்டராய் இருக்கேன். உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.

கேபிள் சங்கர்

sriram said...

வாங்க யூத்து.. இதென்ன புது ஐடி?
கண்டிப்பா ப்லிக்கும் அதுவும் விரைவில்

Mãstän said...

நல்ல ஆராய்ச்சி... :)

இன்னும் பல பேர விட்டிடீங்க?

jackiesekar said...

ஜாக்கிசேகர் : இவருக்கும் குதிரை ஓட்டும் ஜாக்கிக்கோ ஜாக்கி ஷெராபுக்கோ எந்த ஒற்றுமையும் எனக்குத் தெரியவில்லை. பேர் நன்றாக இருந்தாலும் அர்த்தம்
ஏதும் இருக்கற மாதிரி எனக்குத் தெரியல. ஜாக்கி சான் மாதிரி கடின உழைப்பாளி என்பதால் இந்த பெயரோ? கூடிய சீக்கிரமே காமிரா மேன் சேகர் என்று
அறியப்படுவார்...---//

ஜாக்கிசானை ரொம்ப பிடிக்கும் என்னை போலவே ஜாக்கி சிறுவய முதலே ரொம்பவும் கஷ்டப்ட்டு முன்னேற்றம் அடைந்தவர்.... அல்ா எடுத்து கொண்ட வேளையில் 100 சதவீதம் தன் முழுதிறமையையும் வெளிபடுத்துபவர்... அதனால் எனது பெயருடன் ஜாக்கியை இனைத்துக்கொண்டேன்...ஜாக்கி்க்கு நான் ரசிகன் மட்டும் அல்ல எனது மானிசிக குருவும் கூட...


நன்றி ஸ்ரீராம் என் பெயரை குறிப்பிட்டு எழுதியமைக்கு...

sriram said...

வாங்க மஸ்தான் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
யாரைச் சொல்றீங்க? எல்லாரப்பத்தியும் எழுதினா அது never ending ஆகிவிடும்
அப்புறம் பின்னூட்த்தில் என்னத்த எழுதுறது??

sriram said...

உன்ன விட்டுட்டு நான் பதிவர் வட்டம் பத்தி எழுத முடியுமா ஜாக்கி...
உன் மானசீக குருவைப் போல புகழ் பெற வாழ்த்துக்கள்..

நர்சிம் said...

கலக்கல் தலைவா..

நல்லாத்தான போய்க்கிட்டு இருக்குன்னு நினைக்கும் போதே போன் மேட்டர கோர்த்துட்டீங்களே தல..ஹஹஹா ரசித்தேன்..மாதக்கடைசில போன்லயே தான் பொழப்பு..அல்லது பொழப்பு பொழைக்கணும்னா போன் தான்..

பேசுங்க..வோம்..தல

நன்றி.

ஹாலிவுட் பாலா said...

தல...

நான்... ஹாலிவுட் படங்களை பத்தி மட்டும் எழுதனும்னு முடிவு பண்ணின பின்னாடி, தேர்ந்தெடுத்த பேர் அது. இருந்த இடம், தற்செயல்தான்..! :)

ஷைலஜா said...

//அடிபிடிச்ச இலுப்ப சட்டி கலர்ல இருக்கும் பையனுக்கு அம்மா வச்சாளாம் பேரு அரவிந்தசாமின்னு...//


இதென்ன புதுமொழியா ஸ்ரீராம்?:)நல்லாத்தான் ”பெயர்” ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க.....நான்கூட இந்தப்பெயர்படுத்தும்பாடு பத்தி ஒரு காமெடிபதிவினை சிலநாள்முன்பு போட்ருக்கேன்(இப்போவாவது ப்ளாக்வந்துபடிக்கிறீங்களான்னு சோதனைலாம் செய்யல):)


//நீங்களும் இதே மாதிரி பொருத்தமான / பொருத்தமில்லாத பெயர்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே//


>>>> ஷைலஜா ஒண்ணுபோதுமே.

ஷை(shy)ன்னாலும் வெட்கம் லஜ்ஜைன்னாலும் வெட்கம்..பொருத்தமா பொருத்தமில்லையா?:):)


// (ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா பின்னூட்டம் போடுங்கப்பான்னு
சொல்லுறதுக்கு எவ்வளவு சொல்ல வேண்டியிருக்கு)//


எல்லாம் எங்க டெக்னிக்தான்! சல்தா ஹை:)
posted by sriram at 6

sriram said...

வாங்க நர்சிம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கவுக்கறதெல்லாம் பெரிய வார்த்தை தல, சும்மா சொன்னென், இன்று பேசுகிறேன்

sriram said...

வாங்க பாலா
நலம் தானே...
எது எப்படியிருந்தாலும் உங்க பெயர்
பொருத்தமே

இராகவன் நைஜிரியா said...

// இவர்களெல்லாம் இருப்பிடங்களையே தங்கள் அடையாளங்களாக ஆக்கிக்கொண்டவர்கள்.
இவர்களால் அந்த இடங்களுக்கே ஒரு பெருமை வரும் லிஸ்டில் இவர்கள் இருப்பதால், நான் இந்த லிஸ்டில் இல்லை.//

மற்ற இரண்டு பேரும் சரி... என்னை சொல்றீங்களே .. எப்படின்னுதான் புரியலை. வலைப்பூவிற்கு என்ன பேர் வைப்பது என்று யோசனை செய்த போது, பின்னூட்டங்களில் இராகவன், நைஜிரியா என்று போடுவேன், அதை அப்படியே வச்சுட்டேன். மத்தபடி விசேஷமான காரணம் எதுவும் கிடையாது.

sriram said...

வாங்க ஷைலஜா
//இதென்ன புதுமொழியா ஸ்ரீராம்?:)//
நம்புங்க இது நெஜமாவே எனக்குத் தோணியது தான்..

//இப்போவாவது ப்ளாக்வந்துபடிக்கிறீங்களான்னு சோதனைலாம் செய்யல//
வந்துகிட்டே இருக்கேன்

//ஷை(shy)ன்னாலும் வெட்கம் லஜ்ஜைன்னாலும் வெட்கம்..பொருத்தமா பொருத்தமில்லையா?:):)//
இந்த விளையாட்டுக்கு நான் வரலை, கேள்வி உங்க ரங்க்ஸ்க்கு forward செய்யப்படுகிறது..

ஆமா காலையில எத்தன மணிக்கு எழுந்து இத படிச்சீங்க

sriram said...

வாங்க ராகவன் ஜி
நைஜீரியாவில் இன்னும் சொல்லாப்போனா ஆப்ரிக்காவில் எனக்குத் தெரிந்து இருக்கும் ஒரே தமிழ் பதிவர் நீங்கதான், இது போதாதா...

வெட்டிப்பயல் said...

//சிங்கை நாதன் போன்ற பிரகலாதன்களுக்கு உதவுவதற்கு தூணிலிருந்தும் துரும்பிலிருந்தும் ஓடி வரும் இவர்//

I feel this comparison is not good :(

// வெட்டிப்பயல் : பெயர் பொருத்தத்திலேயே பாலாஜி தனக்கு வைத்துக்கொண்டதுதான் டாப் / பெஸ்ட். வெற்றிகரமாக தொடர்ந்து கம்பெனியில் வெட்டியாக
இருப்பவர்//

:)

sriram said...

//I feel this comparison is not good :(//

ஏன்னு சொல்ல முடியுமா பாலாஜி

உங்களைப் பத்தி சொன்னது சும்மா காமெடிக்காக, Hope you took it in the sportive spirit..

Dubukku said...

//(இவனெல்லாம் எழுதறான், நான் எழுதக்கூடாதா
என்ற ரகம் இல்லை இவர், இவரை மாதிரி ஒரு நாள் நானும் எழுதணும் என்று நம்மை ஏங்க வைப்பவர்)//

//இவர் ஒரு சகல கலா வல்லவன்//

எப்படிங்க இப்படியெல்லாம்...காமெடில பின்னுறீங்க போங்க...

இதெல்லாம் அப்படியே வரது தான் இல்ல....

ஷைலஜா said...

sriram said...

//இப்போவாவது ப்ளாக்வந்துபடிக்கிறீங்களான்னு சோதனைலாம் செய்யல//
வந்துகிட்டே இருக்கேன்>>>>

நன்றி,,,, ஒரு பின்னூட்டம் வந்திருக்கு!

/..../ஷை(shy)ன்னாலும் வெட்கம் லஜ்ஜைன்னாலும் வெட்கம்..பொருத்தமா பொருத்தமில்லையா?:):)//
இந்த விளையாட்டுக்கு நான் வரலை, கேள்வி உங்க ரங்க்ஸ்க்கு forward செய்யப்படுகிறது....//


ரங்க்ஸ் கிட்ட காமிச்சேன்...’ஸ்ரீராம் சாது(அந்த சாது(ரிஷி) இல்ல:) வாக தெரியறார் ரொம்ப அறுக்காதே/ என்கிறார்!:)

//ஆமா காலையில எத்தன மணிக்கு எழுந்து இத படிச்சீங்க//

6மணிக்கு எழுந்த நினைவு. காலை எழுந்தவுடன் படிப்புன்னு பாரதி சொல்லி இருக்காரே:)

sriram said...

வாங்க டுபுக்காரே
‘’எப்படிங்க இப்படியெல்லாம்...காமெடில பின்னுறீங்க போங்க...’’
நான் எவ்வளவு சீரியசா எழுதுனத இவ்வளவு ஈசியா காமடின்னு சொல்லிடீங்களே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

sriram said...

ஷைலஜா அக்கா
‘’ரங்க்ஸ் கிட்ட காமிச்சேன்...’ஸ்ரீராம் சாது(அந்த சாது(ரிஷி) இல்ல:) வாக தெரியறார் ரொம்ப அறுக்காதே/ என்கிறார்!:)’’

நான் உங்கள படுத்தறது போதாதுன்னு அவர வேர இதெல்லாம் படிக்கச்சொல்லி படுத்தரீங்களா??

‘’6மணிக்கு எழுந்த நினைவு. காலை எழுந்தவுடன் படிப்புன்னு பாரதி சொல்லி இருக்காரே:)’’

அதெல்லாம் அறிவு அதிகமாகிறாமாதிரி ஏதாவது நல்லதா படிக்கணும், இந்த மாதிரி மொக்க பிளாக் இல்ல...

வால்பையன் said...

//இல்லம்மா போஸ்ட் எதுவும் போடல, படிக்கல, சும்மா மானிட்ட்டர்ல இருக்குற அழுக்கத்தான் தொடைக்கிறேன் என்று
ஆதிமுதல் பொய் சொல்லும் கண்ணனைப் போல் இருப்பதால், இவர் ஆதி மூல கிருஷ்ணன் என்றும் அறியப் படுகிறார்.//

எல்லோரும் இதை தானே பண்றோம்!
ஆனா பாருங்க ”ஆபாச” தலைவராக இருப்பதால் அவருக்கே சரியான பொருத்தம்!

ஆபாச=ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!

sriram said...

வாங்க வால்பையன்
ஆபாச தலைவர்- நல்லா குடுக்கறாய்ங்க டீடெய்லு...

//எல்லோரும் இதை தானே பண்றோம்!// - நல்லா சொன்னீங்க வாலு

Anonymous said...

மேட்டர் நல்லாருக்கே

sriram said...

நன்றி அனானி..

பரிசல்காரன் said...

என்னையும் அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி தல!

sriram said...

வாங்க பரிசல், முதல் வருகைக்கு நன்றி.
நான் அறிமுகப்படுத்தும் நிலையில் நீங்களும் இல்லை, உங்களை அறிமுகப்படுத்தும் நிலையில் நானும் இல்லை, இது உங்களுக்கும் நன்றாகத் தெரியும். மேலும் இது அறிமுகப் படுத்தும் பதிவு அல்ல, பேர்ப் பொருத்தம் பார்க்கும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஸ்ரீராம். அதுவும் ஆதிமூலகிருஷ்ணனுக்கு இது வரை இல்லாத மாதிரி விளக்கம் தந்திருக்கீங்க. ரசித்தேன்.

sriram said...

வாங்க ஆதி, உங்களை இந்த பதிவுக்கு ரொம்ப எதிர்பார்த்தேன், வருகைக்கு நன்றி.
தவறாக எடுத்துக் கொள்ளாமல் ரசித்ததில் சந்தோஷம்...