ஏப்ரல் 2008 ல் எழுத முடிவெடுத்து 3 இடுகைகள் எழுதிய நிலையில் சில பல காரணங்களுக்காக இது வரை எழுதுவதை தவிர்த்து வந்தேன். தமிழ் பதிவுலகில் நான் பார்த்த POLITICS, அதில் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை, நான் ரொம்ப சீக்கிரம் எதற்கும் ADDICT ஆகிவிடுபவன், இதிலும் அப்படி மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் நினைத்தேன்.
15 மாதமாக தமிழ்மணத்தில் வரும் almost every post படித்து வந்தேன்.நான் போட்ட பின்னூட்டங்கள் மூலம் நிறைய நண்பர்கள்.இப்போ என்ன ஆனாலும் சரி, எழுதிதான் பாத்துடுவோம் என்ற முடிவுக்கு வந்துட்டேன். (பயப்படாதீங்க, என் எழுத்து கொஞ்சம் மோசமாக இருக்கும், ரொம்ப மோசமா இருக்காது)
மேட்டருக்கு போவதற்கு முன்னர், ஒரு விஷயத்தை சொல்லணும், இதை கேட்டு விட்டு, காறி துப்புறதா, என்னை அடிக்குறதுக்கு எதையாவது தேடுறதாங்குறதைஉங்க முடிவுக்கே வுடறேன். ஒரு வாரத்துக்கு முன்ன, நம்ம் டுபுக்கு கிட்ட தொலைபேசிய போது, ஏன் ஆரம்பிச்சிட்டு அப்புறம் எழுதலன்னு கேட்டார், நானும் ரொம்ப மரியாதையா, என்ன எழுதறதுன்னு தெரியலன்னு சொன்னேன், சரி, atleast comments போட்டவங்களுக்காவது நன்றி சொல்லலாமே என்று சொன்னார். எனக்கு யாருங்க கமெண்ட்டெல்லாம் போடப்போறாஙக என்று நான் சொன்னதும், டுபுக்கு திட்டியதை அச்சில் ஏத்த முடியாது. பதிவு போட்ட பின்நானே என் பக்கத்தை திறந்து பாக்கல, மக்கா, சத்தியமா சொல்றேன்,16 comments வந்தது எனக்கு தெரியவே தெரியாது. அன்னிக்கு முடிவு பண்ணேன், எழுதுரதுன்னு, நம்ம பதிவுலகம், எவ்வளவோ தாங்கிடுச்சு, இதையும் தாங்காதா என்ன??
என்னையும் ஒரு ஆளா மதிச்சு பின்னூட்டம் போட்ட, கயல் விழி,பிரேம்ஜி, இரா.வசந்தகுமார், ராதா ஸ்ரீராம் (யக்கோவ், word verification எடுத்தாச்சு)காரூரன், டுபுக்கு, லக்கிலுக், கேபிள் (@ யூத்து), வண்ணத்துபூச்சியார், சுரேஷ், வால்பையன், இயற்கை, பிரபா அனைவருக்கும், ஒரு பெரிய நன்றி.தனித்தனியா, பதில் கமெண்டோட நன்றி சொல்ல ஜாக்கி அளவுக்கு எனக்கு சரக்கு போதாது, அதனால, எல்லாருக்கும் பொதுவா ஒரு கும்பிடு.
ஒரு வாரமா, எனக்கு பொறுமையாக,எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்த, வெட்டிப்பயல் பாலாஜிக்கு ஒரு Special Thanks (பேருக்கேத்தாப்போல, வெட்டியாத்தான் இருக்காருன்னு நினைக்கிறேன், எப்ப போன் பண்ணாலும் எடுத்து, பொறுமையா பதில் சொல்றார்) Infy ல சொல்லி அவருக்கு கொஞ்சம் வேல குடுக்க சொல்லணும்.
என்னை எழுத சொல்லி ஊக்கப் படுத்திய, வெட்டிப்பயல், டுபுக்கு, லக்கி, ஜாக்கி, கேபிள் @ யூத்து , ஹாலிவுட் பாலா, வால்பையன்,நர்சிம்,சீமாச்சு அனைவரையும் அன்புடன் நினைவு கூறுகிறேன்.
எப்படா, மேட்டருக்கு வருவேங்கற உங்களோட Mind Voice எனக்கு கேக்குது. அதனால,நான் சொல்ல வந்தத சொல்லிடறேன், அப்பப்போ பொதுவான விஷயங்களையும், ரெகுலரா H1B - Work Visa for America வை பத்தியும் எழுதலாமுன்னு இருக்கேன், Subject Matter பத்தி எழுத எனக்கு என்னதெரியுமுன்னு கேட்டீங்கன்னா - 3 வருஷமா பாஸ்டன்ல ஒரு Consulting company ல Marketing Department க்கு Head ஆ இருக்கேன், கம்பெனிக்கு கஸ்டமரிடமிருந்த்து Projects தேடுறது, Placement தேடுறது எல்லாம் என் தலைமையில் தான், முக்கியமாக H1B, Greencard Processingஆகியவற்றில் 3 வருஷ அனுபவம். நான் எழுதுவது நாலு பேருக்கு உபயோகமா இருந்தா சந்தோஷம். Applying for H1B, Green Card processing, Choosing the right company, Fulltime Job Vs consulting, How does the Contracting work, life of IT folks in USன்னு பல விஷயங்கள் பற்றி எழுதலாமுன்னு முடிவு பண்ணிருக்கேன், நீங்க ஏதாவது specific ஆ கேட்டா, அது உங்களுக்கு மட்டுமான பதிலா இருந்தா, தனி மடலில் பதில் சொல்கிறேன், எல்லாருக்கும் அந்த பதில் பொதுவா இருந்தா, ஒரு போஸ்ட் போடுறேன்.
மத்தபடி, சமூக அவலங்கள், பாலிடிக்ஸ்,கிரிக்கெட், சினிமா பற்றியும் எழுத ஆசை (கண்டிப்பா நம்ம லெவல் உலக சினிமா இலல, கமல் வாழ்த்து, விஜய்ஜோக்ஸ் இப்படித்தான் இருக்கும்)
சீக்கிரமே நெக்ஸ்ட் மீட் பண்றேன்
என்றும் அன்புடன்ஸ்ரீராம்
Wednesday, August 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
Test
welcome sriram
வாழ்துக்கள் ஸ்ரீராம், பேக் டு தி பெவிலியன்....
பதில் கமெண்டோட நன்றி சொல்ல ஜாக்கி அளவுக்கு எனக்கு சரக்கு போதாது, அதனால, எல்லாருக்கும் பொதுவா ஒரு கும்பிடு.//
நன்றி ஸ்ரீராம்.... நிறைய எழுதுங்கள் பார்த்தவற்றை சந்தித்ததை என எழுதுங்கள்... வாழ்த்துக்கள்
வாங்கோண்ணா... அட வாங்கோண்ணா :-)
Thanks Cable
வாழ்த்துக்கு நன்றி ஜாக்கி
நன்றி லக்கி , வந்துட்டோமில்ல...
டெக்னிக்கல் விசயங்கள் எழுத தமிழ்வலையில் ஆட்கள் மிகவும் குறைவு தல!
அதோடு சேர்த்து ஆங்காங்கே மொக்கைகளையும் தூவுங்க!
வருகைக்கு நன்றி வால்பையன்.
எழுதிட்டா போச்சு
Welcome Thala :)
Thanks Thala
தொடருங்கள்..
வாழ்த்துகள்.
நன்றி வண்ணத்துப்பூச்சியாரே..
இந்த முறை தொடருவேன்னு நினைக்கிறேன்.
வாங்க வாங்க கலக்குங்க...ஏங்க நீங்க எங்களையெல்லாம் எவ்வளவு திட்டியிருக்கீங்க...அப்புறம் நாங்களும் எப்படி கணக்கு தீர்த்துக்கறதாம்?? :))
வாங்க தல, உங்களைத்தான் எதிர் பாத்துக்கிட்டு இருந்தேன்.
தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளை மன்னித்து பாத்து செய்யுங்க
Post a Comment