Thursday, August 27, 2009

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க

நான் இந்த (http://bostonsriram.blogspot.com/2009/08/blog-post.html) பதிவில் கூறியது போல என் பக்கத்தில் அமெரிக்க விசா பற்றி தொடர்ந்து எழுதுவேன். நடுவில் Spoken English மற்றும் Resume making பற்றியும்
எழுத ஆசை. அந்த வரிசையில் என் முதல் பதிவு இதோ...


அழகாய் ஆங்கிலம் பேச முதலில் நாம் வழக்கமாகச் செய்யும் தவறுகளை திருத்தணும். ஒரு கல்லில் தேவையில்லாத பகுதிகளை நீக்கினால் மிச்சமிருப்பது அழகான்
சிலை. இதே லாஜிக்கில் நாம் செய்யும் எல்லா தவறுகளையும் நீக்கினால், நான் பேசுவது அழகான (சரியான) ஆங்கிலம் ஆகி விடும்.

இந்த பதிவில் சில தவறுகளைப்பற்றி பார்க்கலாம்.

1. First First : எனக்கு தெரிஞ்சு தமிழர்கள் மட்டுமே இந்த தவறை செய்கிறார்கள். ஆங்கிலத்தில் First மட்டுமே உண்டு, first first கிடையாது.
தமிழில் முதன்முதலில் என்று உண்டு. எதையுமே அளவோடு சொல்ல நமக்குத் தெரியாது, எல்லாத்தையும் superlative ஆக சொல்ல வேண்டும் .
முதலில் என்றாலும் முதன்முதலில் என்றாலும் ஒரே அர்த்தம்தான். முதன்முதலில் என்று சொல்வதில் தவறு இல்லை, first first என்பதை first
என்று சொல்லிப் பழகணும்.

2. On the way ல இருக்கேன் - இதுவும் நாம் செய்யும் (சொல்லும்) ஒரு Common mistake. Iam on the way ன்னு முழுசா ஆங்கிலத்தில் சொல்லலாம்
அல்லது வந்துகிட்டே இருக்கேன்னு பேச்சுத்தமிழ்ல சொல்லலாம், கலந்துதான் பேசுவேன்னு முடிவெடுத்துட்டா way ல இருக்கேன்னு சொல்லலாம்.

3. இந்த verb "ing" ங்க நாம விடவே மாட்டோம், எல்லாத்துக்கூடவும் சேத்துக்குவோம். ஒங்க வீடு எங்க இருக்குன்னு கேக்கறதுக்கு நாம கேக்குறது “Where are you
staying" - இது தவறு. Where do you live or where do you stay ன்னு கேக்கணும். இதே மாதிரி "where are you working?" இது தவறு
"what do you do for living" அல்லது "where do you work" என்றுதான் கேக்கணும். ரொம்ப Grammer க்கு உள்ள நுழையாம சொல்லணும்முன்னா
ஒருவர் தொடர்ந்து / வழக்கமாக் செய்யும் செயலுக்கு “ing" வராது. Ex ; live / eat / work etc.

4. Photocopy எடுப்பதை Xerox எடுப்பதாகவே சொல்லிப் பழகிவிட்டோம். xerox என்பது ஒரு நிறுவனம், அவர்களும் Photocopy இயந்திரங்கள்
தயாரிக்கின்றனர், அவர்கள் மட்டுமே அல்ல. இதே போலத்தான் Jeep, இதுவும் ஒரு நிறுவனமே, car/ SUV போல ஒரு வகையான வாகனம் அல்ல.

5.Resume : இதை உச்சரிப்பதில்தான் தகராறே. இதை ”ரெஸ்யூமே” என்றுதான் சொல்ல வேண்டும், நம்மில் பலர் “ரெஸ்யும்”என்றும் ”ரெஷ்யும்”/”ரெஷ்யூமே”
(முக்கியமாக தெலுங்குக்காரர்கள் இப்படி சொல்வார்கள்) என்றும் உச்சரிக்கிறோம்.

நான் எழுதும் விசா பற்றிய பதிவுகளுக்கு பெரிசா ஒண்ணும் ரீச் இல்ல, அதுகாக நான் கவலப்படல, அதே மாதிரி spoken english / Resume பத்தியும்
எழுத ஆசை. நாம எழுதுறது நாலு பேருக்கு உபயோகமா இருந்தா சந்தோஷம். உங்க கருத்துக்களை (முக்கியமா துளசி டீச்சர்) எதிர்பார்க்கிறேன்.

படித்ததில் பிடித்தது : Don't worry about world coming to an end today, it is already tomorrow in Australia
(படிச்சா அனுபவிக்கணும் ஆராயப்படாது)

80 comments:

☀நான் ஆதவன்☀ said...

ரீச் இப்ப கிடைக்காம இருக்கலாம். பின்னாடி கண்டிப்பா ரீச்சாகும் அதுனால இந்த பாடங்கள் தொடரட்டும் :)

நிகழ்காலத்தில்... said...

\\அதே மாதிரி spoken english / Resume பத்தியும்
எழுத ஆசை. நாம எழுதுறது நாலு பேருக்கு உபயோகமா இருந்தா சந்தோஷம்\\

வாழ்த்துக்கள்., தொடருங்கள்

அமுதா கிருஷ்ணா said...

நல்ல பதிவு..இனி அடுத்து வரும் பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.

தருமி said...

//ஒருவர் தொடர்ந்து / வழக்கமாக் செய்யும் செயலுக்கு “ing" வராது. Ex ; live / eat / work etc. //

நன்றி

sriram said...

வாங்க ஆதவன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இப்போதைக்கு “கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே” என்று இருக்கிறேன்.

sriram said...

வாங்க “நிகழ்காலத்தில்”, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கண்மணி said...

continue

sriram said...

வாங்க அமுதா கிருஷ்ணன், எனக்கு தெரிஞ்ச கொஞ்ச விஷயத்தை எழுத்தில் வடிக்க ஆசை, அவ்வளவுதான். முடிஞ்ச வரைக்கும் எழுதறேன்

sriram said...

வாங்க தருமி ஐயா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

sriram said...

முடிஞ்ச வரைக்கும் பண்றேன் கண்மணி, நன்றி

துளசி கோபால் said...

என்னங்க ஸ்ரீராம்.....

பேராசிரியரே வந்துட்டுப் போயிருக்கார். ஆரம்பப்பள்ளி டீச்சர் வந்து சொல்லணுமுன்னு அடம் பிடிச்சால் எப்படி?

அதுவும் சரித்திர டீச்சர் ஆங்கிலப் பாடத்துக்கா!!!!

சரி, போகட்டும்.

ஆரம்பப்பாடங்கள் அசத்தலா இருக்கு.
இங்கே எல்லாருக்கும் மீ த ஃபர்ஸ்ட் சொல்ல ஆசை. அதனால்தான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்டா வந்து சொல்லிட்டு ஓடுவாங்க. அதுக்காக அவுங்கெல்லாம் நம்ம பதிவைப் படிச்சுட்டாங்கன்னு நாம் மகிழக்கூடாது:-)

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லையாம்.

பாடங்களைத் தொடர்ந்து நடத்துங்க.

வாழ்த்து(க்)கள்.

sriram said...

வாங்க டீச்சர், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
//பேராசிரியரே வந்துட்டுப் போயிருக்கார்.// யாரை தருமி ஐயாவை சொல்ரீங்களா? அவர் வெறும நன்றின்னுட்டு போயிட்டார், நான் சொன்னது சரியா தவறான்னு சொல்லல.
நானெல்லாம் நாலு பேரு வந்தாலே சந்தோஷப்படணும், இதில படிச்சாங்களா இல்லயான்னு ஆராய்ச்சி பண்ணா - வெளங்கிறும்.
நான் பாடமெல்லாம் எடுக்கல டீச்சர், practical ஆ சிலது சொல்ல ஆசப்படறேன்.
I want to be a trainer and not tutor in later part of my life

ஷைலஜா said...

தொடருங்க ஸ்ரீராம்.....எங்கம்மா உங்க பதிவைப்படிச்சி”குழந்தை அருமையா சொல்லித்தர்து’ன்னு பெருமைப்பட்டுக்கிறாங்க!

ஆமா தமிழ்ல நாந்தான் கட்டக்கடைசிங்கறாங்க அதுக்கு ஆங்கிலத்துல என்ன?

கண்மணி said...

கற்றது கை மண்ணளவு.
எனக்குத் தெரிந்தது உங்களுக்கும் நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம்.அடிப்படை தேவையில்லை என்றாலும் இது போன்ற சின்ன விஷயங்கள் //ஒருவர் தொடர்ந்து / வழக்கமாக் செய்யும் செயலுக்கு “ing" வராது. Ex ; live / eat / work etc. /தெரிந்து கொள்ளலாம்.

Anonymous said...

//Don't worry about world coming to an end today, it is already tomorrow in Australia//

So, this is not for Australians

--R.K
USA

sriram said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு ஷைலஜா. அம்மாவுக்கு ஒரு Speical thanks.
கட்டக்கடைசியை "last last" ன்னு சொல்லிப்பாருங்களேன். அடி வாங்குனா நான் பொருப்பில்ல. “me the last" நல்லாருக்கில்ல

sriram said...

நன்றி கண்மணி, ஏதோ கொஞ்சம் தெரிந்ததை வச்சிக்கிட்டு 35 வருஷம் பூமியிலும் 16+ வருஷம் வேலையிலும் ஓட்டிக்கிட்டு இருக்கேன்.
மத்தவளுக்கு நான் பயன்பட்டால் சந்தோஷமே.
அடிக்கடி வாங்க

sriram said...

RK இதெல்லாம் ஓவர் குசும்பு ஆமா.
நாந்தான் அனுபவிங்க ஆராயாதீங்கன்னு சொன்னேனே..
ஆமா US ல எங்க இருக்கீங்க..
781 363 9168 என்னைத் தொடர்பு கொள்ளலாம், நீங்கள் விரும்பினால்

Anonymous said...

Near Baltimore, MD.
I am at work now..sure will have chat later some time

--R.K
USA

sriram said...

சந்தோஷம் RK , long weekend க்கு DC / MD வருகிறேன், முடிந்தால் சந்திக்கலாம்

இராகவன் நைஜிரியா said...

நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்குங்க. அதற்கான நேரம் வரவேண்டும், அவ்வளவுதான்.

// //ஒருவர் தொடர்ந்து / வழக்கமாக் செய்யும் செயலுக்கு “ing" வராது. Ex ; live / eat / work etc. //

நன்றிகள் பல.

sriram said...

வாங்க ராகவன். அங்கீகாரம் கிடைக்கும் போது கிடைக்கட்டும், நான் ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஷைலஜா said...

iram said...
ரொம்ப சந்தோஷமா இருக்கு ஷைலஜா. அம்மாவுக்கு ஒரு Speical thanks.
கட்டக்கடைசியை "last last" ன்னு சொல்லிப்பாருங்களேன். அடி வாங்குனா நான் பொருப்பில்ல. “me the last" நல்லாருக்கில்ல

August 27, 2009 11:35 AM ///

>>>>>>>>>me the last தான் நல்லாருக்கு. எதுக்கு சொல்லி அடிவாங்கணும்(நாமல்ல அடிக்கணுமாம்>:):)

BTW...>>(is it correct?) {பயமாருக்கு சர்ச்பார்க் கான்வெண்ட்ல எல்லாம் படிக்கல! ஸ்ரீரங்கம் ஹைஸ்கூல்ல ஆங்கிலமீடியம்தான்:)}

நானும் இப்போ யுஎஸ் அதும் தலைநகர்ல:)

ஷைலஜா said...

நான் ஒரு வழிப்போக்கன்
***********************


இப்படி எழுதி இருக்கீங்களே முகப்பிலே இதையே ஒரு பெண் தமிழ்ல எப்படி சொல்றதாம்?:):)

ஷைலஜா said...

☀நான் ஆதவன்☀ said...
ரீச் இப்ப கிடைக்காம இருக்கலாம். பின்னாடி கண்டிப்பா ரீச்சாகும் அதுனால இந்த பாடங்கள் தொடரட்டும் :)

August 27, 2009 8:56 AM
/////


yep!நாங்க காலடி எடுத்து வச்சிட்டோம் இனிமே பாருங்க:)

sriram said...

தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி ஷைலஜா.
நீங்களாவது ஆங்கில மீடியம், நான் தமிழ் மீடியம் பத்தாவது வரை.

//BTW...>>(is it correct?) //
எதைக் கேக்குறீங்க? me the last யா?
ஐயோ.. இவ்வளவு அப்பாவியா நீங்க?
me the first மாதிரி me the last உம் தமிழ் வலையுலக terminology.
வெளில சொல்லிடப்போறீங்க..

sriram said...

//நான் ஒரு வழிப்போக்கன்
இப்படி எழுதி இருக்கீங்களே முகப்பிலே இதையே ஒரு பெண் தமிழ்ல எப்படி சொல்றதாம்?:):)//
(காவேரிக் குசும்பு ???)
I am a female route eraser ன்னு சொல்லிப் பாருங்களேன்..

Jokes apart, I am just a passerby என்றோ I am a Gypsy என்றோ சொல்லலாம். இந்த வாக்கியத்துக்கு Gender முக்கியமில்லன்னு கருதுகிறேன்

sriram said...

//yep!நாங்க காலடி எடுத்து வச்சிட்டோம் இனிமே பாருங்க:)//

நீங்கல்லாம் இருக்கிற தைரியத்தில தான் நானெல்லாம் எழுதுறேன்.

BTW, DC யிலா இருக்கீங்க? Long weekend க்கு அங்க தான் வரேன்...

Anonymous said...

நல்லா பதிவு

Porkodi (பொற்கொடி) said...

bayangrama thondu seiringa polarke..! varren adikadi.. :)

Porkodi (பொற்கொடி) said...

bayangrama thondu seiringa polarke..! varren adikadi.. :)

இராம்/Raam said...

நன்றி.. :)

Dubukku said...

வாத்தியாரே சும்மா புகுந்து விளையாடுங்க....அதே மாதிரி issue ங்கிறதை நம்ம ஊர்ல இஷ்யு ன்னு சாதாரணமா சொல்லுவோம் ஆனா இதையே நிறைய வெள்ளைக்காரங்க இஸ்யுன்னு சொல்வாங்க எது சரி?

ஷைலஜா said...

sriram said...
தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி ஷைலஜா.
நீங்களாவது ஆங்கில மீடியம், நான் தமிழ் மீடியம் பத்தாவது வரை.//

>>>> ஆனால் ஆங்கிலமீடியத்துல படிச்சிட்டே தமிழ்லதான் மிஸ்ஸைகலாட்டா பண்ணுவோம்:)

//BTW...>>(is it correct?) //
எதைக் கேக்குறீங்க? >>>>>


நான் கேட்டது BTWஇதைத்தான்.....ஏன்னா onthe way சொல்லகூடாதுன்னீங்களே அதனால இதுவும் தப்பான்னு தெரிஞ்சிக்க.

////
ஐயோ.. இவ்வளவு அப்பாவியா நீங்க?///
>>>>>>>


ஆமாங்க ரொம்ப அப்பாவி. என் ப்ளாக் படிச்சாலே தெரிஞ்சிடுமே உங்களுக்கு(ஸ்ஸ்ஸ் அப்பா எப்டில்லாம் வலைபோடவேண்டி இருக்குப்பா என் எழுத்துக்காவியங்களைப்படிக்கவைக்க:):)..

August 27, 2009 6:15 PM

ஷைலஜா said...

sriram said...
.

BTW, DC யிலா இருக்கீங்க? Long weekend க்கு அங்க தான் வரேன்>>>>


DC க்கு விசிட்தான் ,,....long weekend
நான் நியூயார்க்வரப்போறேனே வரலாறுகாணாதவகையில் இணைய சந்திப்பு நடக்க இருக்கிறதே தெரியாதா ஸ்ரீராம் உஙக்ளுக்கு?:) பேசாம அதுக்கு வாங்க.

ஷைலஜா said...

sriram said...
//நான் ஒரு வழிப்போக்கன்
இப்படி எழுதி இருக்கீங்களே முகப்பிலே இதையே ஒரு பெண் தமிழ்ல எப்படி சொல்றதாம்?:):)//


(காவேரிக் குசும்பு ???)////இல்லையாபின்ன? அதுவும் திருச்சி அகண்டகாவேரியாச்சே! அதிகமாவே இருக்கும்!::)


//I am a female route eraser ன்னு சொல்லிப் பாருங்களேன்
>>>>>>>>>>>>>>>>>>>

உதை வாங்கிக்கவா?:)


//
Jokes apart, I am just a passerby என்றோ I am a Gypsy என்றோ சொல்லலாம். இந்த வாக்கியத்துக்கு Gender முக்கியமில்லன்னு கருதுகிறேன்
///


ஆமாம்......தமிழ்ல புலவர் எழுத்தாளர் கவிஞன் இப்படிப்பல வார்த்தைகள் எல்லாம் பொதுதானே! என்னவோபோங்க விட்டுக்கொடுக்கறதே பெண்களுக்கு வழக்கமா போச்சு!!:)

வால்பையன் said...

//எனக்கு தெரிஞ்சு தமிழர்கள் மட்டுமே இந்த தவறை செய்கிறார்கள். ஆங்கிலத்தில் First மட்டுமே உண்டு, first first கிடையாது.//

very first என்பதும் தவறா நண்பரே!?

வால்பையன் said...

//ஒருவர் தொடர்ந்து / வழக்கமாக் செய்யும் செயலுக்கு “ing" வராது. Ex ; live / eat / work etc.//

which book you are read?ன்னு கேக்கனுமா?

which book you are reading?ன்னு கேக்கக்கூடாதா?

வால்பையன் said...

//படித்ததில் பிடித்தது : Don't worry about world coming to an end today, it is already tomorrow in Australia //

அருமையான வாசகம்!

வால்பையன் said...

தொடர்ந்து என் போன்ற ஞானசூனியங்களுக்கு அறிவூட்டுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்!

தருமி said...

தெரியாததைச் சொல்லித் தந்ததால்தானே அதைக் குறிப்பிட்டு நன்றி சொன்னேன்!

மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறேன்.

sriram said...

நன்றி அனானி

sriram said...

வருகைக்கு நன்றி இராம், சொல்வதற்கு ஒண்ணுமே இல்லயா..

sriram said...

// Dubukku said...
வாத்தியாரே//

தல.. நான் வாத்தியாரெல்லாம் இல்ல, கண்மணிக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்.
எனக்கு தெரிந்த வரையில் “இஷ்யூ” என்று சொல்லித்தான் பழக்கம். இங்கு வந்த பிறகு concern என்று சொல்லியே பழகிவிட்டது, அந்த வார்த்தையே உபயோகிப்பதில்லை.
அதே போல் “அசோஷியேட்” என்பதே சரியான உச்சரிப்பு.

sriram said...

ஷைலஜா : கண்டிப்பா வந்து படிச்சுட்டு கமெண்ட் போடுறேன். கொஞ்சமாவா கலாய்க்கிறீங்க, பதிலுக்கு நாங்களும் சென்னை குசும்ப காட்டுவோமில்ல..
சந்திப்பு பத்தி தெரியாது, DC க்கு எல்லா பிளானும் பண்ணியாச்சு. அடுத்த மீட்டிங்ல கண்டிப்பா கலந்துக்கறேன்.

’’ விட்டுக்கொடுக்கறதே பெண்களுக்கு வழக்கமா போச்சு’’ இது எனக்கு என்னன்னே புரியல என்னா இந்த மாதிரி நடந்து நான் பார்த்ததே இல்ல, விளக்கவும்.

sriram said...

வாங்க வால்பையன்..
very first என்பதும் தேவையில்லாத ஒன்று. First என்றாலும் veryfirst என்றாலும் ஒன்றே.

//which book you are read?ன்னு கேக்கனுமா? //What are you reading now ன்னு கேக்கணும்

//அருமையான வாசகம்//
அது சொந்த சரக்கல்ல

//தொடர்ந்து என் போன்ற ஞானசூனியங்களுக்கு அறிவூட்டுமாறு தாழ்மையுடன் ///

இது டூ மச், நானென்ன இங்கு பாடமா எடுக்கறேன்..

Anonymous said...

Use of 'ing: It is grammatically ok to use the 'present continuous tense' but Americans like to speak/ write in 'active' voice. so if you are working in US it is better to avoid -ing!
thyag

sriram said...

வாங்க தியாக்.
I am living in Boston என்று சொல்வது கண்டிப்பாக Grammatically தவறு கிடையாது. ஆனால் I live in Boston என்று சொல்வதுதான் உலக வழக்கம் (அமெரிக்காவில் மட்டுமல்ல)

Anonymous said...

//ஆனால் I live in Boston என்று சொல்வதுதான் உலக வழக்கம் (அமெரிக்காவில் மட்டுமல்ல)//
Then why do we (Indians) use -ing?. We would not have picked it up ourselves. Perhaps I think, our way of writing/ speaking are based on UK's English style. I observed the 'active' voice style mostly in USA.

thyag

ஷைலஜா said...

sriram said...
ஷைலஜா : கண்டிப்பா வந்து படிச்சுட்டு கமெண்ட் போடுறேன். கொஞ்சமாவா கலாய்க்கிறீங்க, பதிலுக்கு நாங்களும் சென்னை குசும்ப காட்டுவோமில்ல.
>>>>>>


வாங்க...வெல்கம்!.

////
சந்திப்பு பத்தி தெரியாது, DC க்கு எல்லா பிளானும் பண்ணியாச்சு. அடுத்த மீட்டிங்ல கண்டிப்பா கலந்துக்கறேன்.//ok. சும்மா பெரிய மீடிங்னு சொன்னேன் அப்படியெல்லாம் இல்ல..ஆனால் சிலர் ஒரு இடத்தில் கூடி ஏதாவது உபயோகமா பேச நினைக்கிறோம்.

’’//// விட்டுக்கொடுக்கறதே பெண்களுக்கு வழக்கமா போச்சு’’ இது எனக்கு என்னன்னே புரியல என்னா இந்த மாதிரி நடந்து நான் பார்த்ததே இல்ல, விளக்கவும்///


இது என்ன கூவம்குசும்பா?:):)

sriram said...

hi Thyag
''Then why do we (Indians) use -ing?. We would not have picked it up ourselves. Perhaps I think, our way of writing/ speaking are based on UK's English style. ''

Thats exactly what i am saying, we Indians speak wrong. As far as I know, the British also say "live", 'work' etc. May be bloggers like Dubukku who live in UK can comment.

we Indians say onething correctly - I love you, we never say I am Loving you...

sriram said...

வாங்க ஷைலஜா, இப்போத்தான் தூங்கி எழுந்தீங்களா?

’’இது என்ன கூவம்குசும்பா?’’

இது சென்னை Special குசும்பு..

THIYAGARAJAN said...

//we Indians say one thing correctly - I love you, we never say I am Loving you...//
ha ha.... may be, we tell when we are really in love!

I realize one thing-apeak'ing' active voice gives a command feel.
thyag

sriram said...

THIYAGARAJAN said...
//we Indians say one thing correctly - I love you, we never say I am Loving you...//
ha ha.... may be, we tell when we are really in love!

தியாகு, அது சும்மா ஒரு example க்கு சொன்னது.

’’I realize one thing-apeak'ing' active voice gives a command feel.
thyag’’

இந்த கோணத்தில் நான் யோசித்ததில்லை.

jackiesekar said...

eநல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் என்னை மாதிரி ஆட்களுக்கு சொல்லி புரியவைப்பது பெரிய விஷயம்தான்...
நன்றி
ஜாக்கி

கார்த்திக் பிரபு said...

enne madhiri tamil medium makaluku romba use full

adhe madhiri //neeyum nanum or avanum avanulm addhai seivargal

idhai eppadi angliathula solradhu..indha madhiri matter gal ellam eduthu vidunga boss

nandri

sriram said...

கார்த்திக் பிரபு
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நானும் தமிழ் மீடியம்தாங்க...

//adhe madhiri //neeyum nanum or avanum avanulm addhai seivargal
idhai eppadi angliathula solradhu..indha madhiri matter gal ellam eduthu vidunga boss//

நான் ரொம்ப அப்பாவிங்க, என்ன கேக்கறீங்கன்னு புரியல, கொஞ்சம் விளக்கமா கேட்டீங்கன்னா சொல்றேன்.
வில்லங்கமா கேட்டீங்கன்னா, தனிமடலில் சொல்றேன்

கார்த்திக் பிரபு said...

ada villangam la ilappa may be nan kettadhu appdi thoniruku pola ungalauku :)

nan ketka vandhadhu .."neeyum nanum nalaiku ooruku pogalam"

idhai eppadi solradhu you and me or me and you or i and you

ipo puriyumnu ninaikurane :)

sriram said...

விளக்கமா கேட்டதுக்கு நன்றி கார்த்திக், You and I will go என்பதுதான் சரின்னு நினைக்கிறேன். ஈசியா we ன்னு ஒரு வார்த்தை இருக்கே

நேசன்..., said...

Resume பற்றி எழுதுங்கள் கொஞ்சம் விரிவாகவே.....சில மாதிரிகளையும் கொடுங்கள்.உண்மையிலேயே மிகுந்த பயனுள்ளவையாக இருக்கும்........ஆவலாய் காத்திருக்கிறேன்!.....

sriram said...

வாங்க நேசன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ரெஸ்யூமே பத்தி எழுத தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்.

Dubukku said...

//Thats exactly what i am saying, we Indians speak wrong. As far as I know, the British also say "live", 'work' etc. May be bloggers like Dubukku who live in UK can comment//

Nope I dont think we have picked this from British. Here in UK too we use only live and work. no "ing".

sriram said...

நன்றி டுபுக்காரே, சந்தேகம் தீர்த்தமைக்கு...

FloraiPuyal said...

நல்ல முயற்சி. ஆங்கிலம் பற்றிய புரிதல் நம்மிடம் குறைவாகவே உள்ளது. அதிலும் கடந்த நூறாண்டுகளில் ஆங்கிலம் பல மாற்றங்களடைந்ததை நம்மில் பலர் உணர்வதில்லை. காட்டு thrice என்பது இக்காலத்தில் three times. இது தவிர வட்டார சொலவடைகள் மற்றும் இந்திய மொழிகளின் தாக்கங்கள் போன்றவற்றால் பல்வேறு தவறுகள் செய்கிறோம். இதை நம்மில் பலர் உணர்வதேயில்லை. தமிங்கிலத்தில் butஆனா என்பது போலத்தான்.

//
//ஒருவர் தொடர்ந்து / வழக்கமாக் செய்யும் செயலுக்கு “ing" வராது. Ex ; live / eat / work etc.//

which book you are read?ன்னு கேக்கனுமா?

which book you are reading?ன்னு கேக்கக்கூடாதா?

//
இரண்டுமே தவறு.
சில பொத்தகங்களைக் குறிப்பிட்டு அவற்றுள் எதனைப் படிக்கிறீர்கள் என்று கேட்க மட்டுமே which வரும்.
which book ( of a finite set of books ) are you reading?
மற்ற இடங்களில் what தான்.
what book are you reading?
what books do you read?


//
Use of 'ing: It is grammatically ok to use the 'present continuous tense' but Americans like to speak/ write in 'active' voice. so if you are working in US it is better to avoid -ing!
thyag

I am living in Boston என்று சொல்வது கண்டிப்பாக Grammatically தவறு கிடையாது. ஆனால் I live in Boston என்று சொல்வதுதான் உலக வழக்கம் (அமெரிக்காவில் மட்டுமல்ல)

//ஆனால் I live in Boston என்று சொல்வதுதான் உலக வழக்கம் (அமெரிக்காவில் மட்டுமல்ல)//
Then why do we (Indians) use -ing?. We would not have picked it up ourselves. Perhaps I think, our way of writing/ speaking are based on UK's English style. I observed the 'active' voice style mostly in USA.

thyag
//

தற்காலிக செயல்களுக்கும் வருங்காலத்தில் நாம் செய்ய விரும்பும் செயல்களுக்கும் மட்டுமே present continuous வரும்.

eg., I am living in Bangalore ( but after a short duration, I will live in a different city. )
or
I am living in Bangalore next year ( I do not live in Bangalore right now, but have plans to live in the future. )

மற்ற இடங்களில் present மட்டுமே
I live in Chennai.

மாற்றிச் சொல்வது தவறு. இவ்விடங்களில் active, passive களுக்குத் தொடர்பில்லை.

//
Then why do we (Indians) use -ing?
//
முன்பு சொன்ன காரணங்கள் தான். நூறு கோடி இந்தியர்கள் தவறாகச் சொல்வதால் சரியாகி விடாது. இன்னுமொரு காட்டு yesterday night, today morning போன்றவை - இந்திய மொழிகளில் நேற்று + இரவு, இன்று + காலை என்று கூட்டிச் சொல்வது போல் ஆங்கிலத்தையும் சொல்கிறோம். last night, this morning என்பதே சரி.

//
hi Thyag
''Then why do we (Indians) use -ing?. We would not have picked it up ourselves. Perhaps I think, our way of writing/ speaking are based on UK's English style. ''

Thats exactly what i am saying, we Indians speak wrong. As far as I know, the British also say "live", 'work' etc. May be bloggers like Dubukku who live in UK can comment.

we Indians say onething correctly - I love you, we never say I am Loving you...
//


//we Indians say one thing correctly - I love you, we never say I am Loving you...//
ha ha.... may be, we tell when we are really in love!

I realize one thing-apeak'ing' active voice gives a command feel.
thyag
//

We dont tell anything when we are in love. We can tell when we are in love, and say something when we are in love.


//
விளக்கமா கேட்டதுக்கு நன்றி கார்த்திக், You and I will go என்பதுதான் சரின்னு நினைக்கிறேன். ஈசியா we ன்னு ஒரு வார்த்தை இருக்கே
//
You and I will go என்பதே சரி. ஆனால் அமெரிக்காவில் You and me என்பதுவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அப்புறம் ரெசூமே என்பதே சரியான உச்சரிப்பு. இது ஆங்கிலமல்ல ப்ரெஞ்சு மொழி.

sriram said...

வாங்க Floraipuyal, விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி. நான் சொன்ன / சொல்ல நினைத்த விஷயங்களை இலக்கணத்தோடு சொல்லியிருக்கீங்க.
நான் சொன்னது போல, எனக்கு இந்த அளவு விளக்கமா Grammer knowledge கிடையாது.

rathinamuthu said...

பரிசல் மூலமாக இன்று தான் தங்கள் பதிவை படிக்க நேர்ந்தது. நன்றாக உள்ளது. ஆங்கிலம் - Learn English Grammer Through Tamil
(http://aangilam.blogspot.com/2007/12/1.html)
சற்று சிரமானதாக இருந்தது. அதில் grammer கற்றுத்தரப்படுகிறது. ஆனால் தங்கள் பதிவு எளிமையாகவும் சுவாரள்யமாகவும் இரூக்கிறது. தொடருங்கள். தொடருகிறேன்.

sriram said...

வாங்க ரத்தினமுத்து:
பரிசலுக்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
எனக்கு grammer ரொம்ப தெரியாததால்
Practical Examples சொல்லியிருக்கிறேன். Grammar உடன் படித்தால் இன்னும் எளிதாகப் புரியும் என்று நான் நினைத்திருந்தேன். மறுபக்கமும் இப்போது (உங்கள் கமெண்ட் மூலம்) புரிந்தேன்.
தொடருங்கள், தொடர்கிறேன், தொடர்வோம், தெளிவடைவோம்..

இமெயில் எழுதுவது பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன், நாளை பதிவிடுவேன்னு நினைக்கிறேன், உங்களுக்கு பிடிக்குமுன்னு நினைக்கிறேன்.

sriram said...

பொற்கொடி,
மன்னிக்கனும், உங்க கமெண்டை எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியல, my unconditional apologies.
அம்பி தளத்தில அப்படி காறித்துப்பிட்டீங்களே..
என்ன இருந்தாலும் தப்பு என்னுதுதான்.
அடிக்கடி வாங்க, உங்க அன்புத் தம்பி இல்லயா நான்..

Anonymous said...

good.... Mr. sriram...

thondu thodarattum...

Anonymous said...

good.... Mr. sriram...

thondu thodarattum...

தியாகு said...

நல்ல விசயங்கள் செய்கிறீர்கள் நண்பரே நன்றி

sriram said...

நன்றி தியாகு, பகுதி 2, பகுதி 3
படிச்சீங்களா

கார்த்திக் பிரபு said...

sriram said...
விளக்கமா கேட்டதுக்கு நன்றி கார்த்திக், You and I will go என்பதுதான் சரின்னு நினைக்கிறேன். ஈசியா we ன்னு ஒரு வார்த்தை இருக்கே
//

very simple reply ..can u elaborate pls :)

sriram said...

கார்த்திக் பிரபு said...
sriram said...
விளக்கமா கேட்டதுக்கு நன்றி கார்த்திக், You and I will go என்பதுதான் சரின்னு நினைக்கிறேன். ஈசியா we ன்னு ஒரு வார்த்தை இருக்கே
//

very simple reply ..can u elaborate pls :)

You and I will go to Boston tomorrow
I am going along with Karthik to Boston tomorrow
Karthik and I are going to Boston tomrrow
Karthik is coming along with me to Boston tomorrow
These are some of the possibilities, let me know if your query is still not answered

Jaleela said...

ஸ்ரீராம் நல்ல முயற்சி தொடருங்கள்

sriram said...

வாங்க ஜலீலா, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Ramanc said...

சிறிய வகுப்பில் ஆங்கிலம் என்றால் வெப்பங்காய் கச்சல். அது தொடர்ந்து வந்துட்டே இருந்துது. ஆனால் பல்கலைகழகத்தில் தான் ஆங்கிலத்தின் அருமை விளங்கியது. என்ன செய்ய முக்கி முனகி படித்து இப்ப தான் ஒரளவுக்கு வந்திருக்கிறேன்.

இந்த தொடர் நல்லாயிருக்கு.

my studying pattern also same as you said. ao i love to study by the mistake.

பாலராஜன்கீதா said...

//ஆனா இதையே நிறைய வெள்ளைக்காரங்க இஸ்யுன்னு சொல்வாங்க எது சரி?//
இஸ்யூ என்பதே சரி என்று எங்கள் ஆங்கிலச் சுருக்கெழுத்து ஆசிரியர் கற்றுத்தந்திருக்கிறார்.

sriram said...

விளக்கத்துக்கு நன்றி பாலராஜன் கீதா.

Ponniyinselvan said...

it's 'grammar' . thats the correct spelling.
karthik+amma