Wednesday, August 19, 2009

H1B விசா Apply செய்யலாமா வேண்டாமா??

நீங்க இப்போ இந்தியாவிலோ வேற எங்கயோ ITல வேலை செய்றீங்களா? இந்த வருஷம் H1B விசா எடுத்து அமெரிக்கா வர விரும்புனீங்களா? பொருளாதார மந்த நிலைமை & Poor Job Market காரணமாக விசா குறித்து முடிவு எடுக்க முடியாமல் குழம்பி போயிருக்கீங்களா?? உங்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஒரே வாக்கியம் “ Just Do It".
கடந்த 2 வருஷமா முதல் நாளன்றே (ஏப்ரல் 1ம் தேதி) 150,000க்கு மேல் விண்ணப்பங்கள் USCIS இல் (United States Citizenship and Immigration Servies) குவிந்தன. இந்த வருஷமோ, இன்று வரை 20000 இடங்கள் இன்னும் காலியாக உள்ளதாக தெரிகிறது. மேலே கூறிய 2 காரணிகள் இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தாலும், USCIS இன் மிதமிஞ்சிய கெடுபிடிகளும் இந்த நிலைமைக்கு ஒரு காரணம். மிக அதிக அளவில் விண்ண்ப்பிக்கும் விப்ரோ, இன்போசிஸ், டி சி எஸ்போன்ற நிறுவனங்களும் மிக குறைந்த அளவே விண்ண்ப்பித்து உள்ளன. இவை கடந்த வருஷங்களில் அளவுக்கு அதிகவாகவே விண்ணப்பித்துபின்னர் உபயோகித்து வந்தன. இவர்களின் Cost Cutting கூட ஒரு காரணம்.
நிலைமை இப்படி இருக்க, விசா விண்ணப்பிக்கச் சொல்பவனை பார்த்து “லூசாப்பா நீ” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. காலணியே அணியாத கிராமத்துக்கு சென்ற2 salesmen கதையை நெனச்சு பாருங்க. யாரும் காலணி அணிவதில்லை, இங்கு விற்பனை இருக்காது என்பது நெகடிவ் அப்ரோச், இங்கு யாருமே காலணிஅணிவதில்லை இது ஒரு பெரிய Market என்பதே பாஸிடிவ் மற்றும் சரியான அப்ரோச். பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்த போது பங்குகளை விற்றவர் பலர், அனைவருக்கும் நஷ்டமேமிஞ்சியது, அப்போது பங்குகளை வாங்கி, பொறுமையோடு காத்திருக்கும் அனைவருக்கும் லாபம் நிச்சயம். நான் சொல்வதும் இதே லாஜிக் தான்.
நான் ITல வேலை பாக்குற எல்லோரையும் அமெரிக்கா வாங்கன்னு சொல்லல. இப்போ இருக்குற நிலைமையினால என்ன செய்யுறதுன்னு தெரியாம யோசிக்குறவங்களுக்கு,என்னோட அட்வைஸ் தைரியமா விசா அப்ளை பண்ணுங்க. அமெரிக்கா போன்ற Grown Economyக்கு Recession ஒன்னும் புதுசில்ல, 5-6 வருஷ வளர்ச்சியும் & 1-1.5 வருஷ ரிசெஷணும் அமெரிக்காவுக்கு சகஜம். இப்போதுள்ள மந்த நிலை இவ்வளவு நாள் நீடிப்பதற்கு பல காரணங்கள். இந்த நிலை இன்னும் 6 அல்லது 9 மாதங்களில், மிக அதிக பட்சமாக 12 மாதங்களில் மாறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அதுக்க்கப்புறம் வேலை கிடைப்பதில் அதிக கஷ்டமிருக்காது.
நிலைமை நல்லா ஆனப்புறம் மறுபடியும் விசா கிடைப்பது கஷ்டமாயிடும், இப்போதைய கஷ்டம் விசா விண்ணப்பிக்க Employer கிடைப்பது மட்டுமே.ஏதாவது Employer கிடைத்தால் விசா விண்ணப்பிச்சு Approval வாங்கிடுங்க. இப்போதைக்கு Stamping போகாதீங்க, Job Market நல்லா ஆனப்புறம், ஸ்டாம்பிங் பண்ணிட்டு அப்புறமா செய்யுற வேலையை விடுங்க. இப்போ விசாவுக்கு 2500- 3000$ செலவு செய்ய வேண்டியிருக்கும், இதை முதலீடாக நினைத்துக்கொண்டு காத்திருந்தா வாய்ப்பு கண்டிப்பாக வரும். H1B விசா ஆறு வருடங்களுக்கு (3வருடங்கள் முதலில் + 3வருடங்கள் Extension) கிடைக்கும், நீங்கள் அமெரிக்காவில் இல்லாத நாட்கள் இந்த கணக்கில் வராது. இப்போ விசா வாங்கி ஒரு வருடம் கழித்து இங்கு வந்தால், அந்த நாள் முதல் நீங்கள் 6 வருஷம் அமெரிக்காவில் வேலை செய்யலாம்.
இன்னொரு விஷயம், Employer Credentials பற்றி ரொம்ப கவலைப் பட வேண்டாம். அந்த கம்பெனி சரியில்லையின்னா, நீங்க இங்கு வந்து சில மாதங்களில் வேறு கம்பெனிக்கு மாறி விடலாம், நிறைய பதிவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள், கண்டிப்பாக உதவி செய்வார்கள்.
நீங்கள் வேலை செய்யும் கம்பெனி வழியாக வருவதற்கு, L1 விசா ஒரு நல்ல வழி, அது பற்றி அடுத்த பதிவில்.
இது H1B பத்தி நான் எழுதும் முதல் பதிவு, இன்னும் நிறைய எழுத நினைத்துள்ளேன். நீங்க ஏதாவது specificஆக கேட்டா, அது உங்களுக்கு மட்டுமான பதிலா இருந்தா, தனி மடலில் பதில் சொல்கிறேன், எல்லாருக்கும் அந்த பதில் உபயோகமா இருந்தா, ஒரு போஸ்ட் போடுறேன்
டிஸ்கி: The above mentioned are purely my personal opinion and not be used as a Legal Opinion in any manner. I suggest you to use your wisdom and consider your personal situation before making any decision.

11 comments:

இராகவன் நைஜிரியா said...

மிக நல்ல தகவல் மற்றும் அலசல். அதிலும் அந்த டிஸ்கி தான் என்னைக் கவர்ந்தது.

sriram said...

வாங்க இராகவன், நன்றி.
இந்த பதிவுக்கு வந்த ஒரே கமெண்ட் உஙகளுது, அதற்கு ஒரு Special Thanks.
அமெரிக்க விசா பத்தி நிறைய எழுத ஆசை, Response பொறுத்து முடிவு செய்கிறேன்.

ஹாலிவுட் பாலா said...

H1-B பத்தின உங்க பாய்ண்ட் ரொம்ப சரி.

ஆறு வருசம் H1-B-ல இருந்துட்டு.. அப்படியே H4-க்கு மாறினவங்க.. திரும்ப H1-B அப்ளை பண்ண முடியுமா? [இந்த ஆறு வருடத்தில்.. ஒரு முறை கூட இந்தியா போகலை.]

முடிஞ்சா... இந்த ரினிவல் பத்தி ஒரு பதிவு போடுங்க ஸ்ரீராம்.

============

தல.. நான் ரீடர்ல உங்க ப்ளாகை போட்டிருக்கேன். ஆனா அப்டேட் ஆக மாட்டேங்க்குதே...! :(

இப்ப ஃபாலோயரா மாறின பின்னாடியும் அதே நிலைமை தான்.

ரீடர் அடம் புடிக்குது. ஒரு வேளை ரொம்ப நாள் நீங்க எழுதலைன்னதும்.. ரீடருக்கு டச் விட்டு போய்டுச்சா? :) :)

sriram said...

வாங்க பாலா, வேலை எப்படி போகுது, விசா டிரான்ஸ்பர் சுமுகமா முடிஞ்சுதா??
உங்க Query புரியல (இன்னும் கொஞ்சம் Information தேவை- பதில் சொல்ல), மடல் எழுதுங்கள் / தொலை பேசுங்கள்.

இந்த ரீடர் விஷயம் என்னோட சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது, எதுக்கும் என்னோட Technical Advisor வெட்டிபயல் பாலாஜியை கேட்டுப்பார்க்கிறேன்.

ராம்ஜி.யாஹூ said...

Nice and useful post. I too agree with you. Infact this is the right period to get US visa because not much competition. Recession will be over by March2010 and the recovery will be great. Plenty of oppurtunitues will be there.

So young s/ware ppl (age group 25 to 28) should use this right time.

sriram said...

வாங்க ராம்ஜி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
என் கருத்தும் உங்கள் கருத்தும் ஒத்துப் போவதில் மகிழ்ச்சி.

Anonymous said...

//இன்னொரு விஷயம், Employer Credentials பற்றி ரொம்ப கவலைப் பட வேண்டாம். அந்த கம்பெனி சரியில்லையின்னா, நீங்க இங்கு வந்து சில மாதங்களில் வேறு கம்பெனிக்கு மாறி விடலாம், //

If employer is dubious, there is every possibility that the consulate will reject the visa.

Raju said...

Hi Boston Sriram

I am sort of getting interested in working @ USA.

Can you please post information about consulting co's? (sponsors)

I think you missed on some basic qualification info. May be?

Regards
Raju
http://www.linkedin.com/in/rajusundaram

????????????? ????????? said...

Good article, expect more from you

sriram said...

வாங்க ராஜு சுந்தரம், H1B விண்ணப்பிக்க 12+4 yrs of eduction அவசியம், 4 வருச work experiance ஐ 1 வருஷ education க்கு equate செய்யலாம். நீங்க இத சந்தேகமா கேட்டீங்களான்னு தெரியல, இருந்தாலும் பதில் சொல்லிட்டேன்.
கன்ஸல்டிங் கம்பெனிகள் பத்தி பொதுவுல வேண்டாமே. விவரம் வேணும்னா, தனிமடலில் சொல்கிறேன், nsriram73@gmail.com க்கு எழுதுங்கள்

sriram said...

வாங்க ???, பேரையாவது சொல்லலாமே..
எனக்கு தெரிஞ்சத அப்பப்போ எழுதறேன்