Wednesday, September 2, 2009

அழகா இமெயில் எழுதலாம் வாங்க

இ மெயில் இன்று நம்மில் பலரின் வாழ்க்கையில் இன்றியமையாதாகப் போய்விட்டது. Personal / Official communication
எல்லாவற்றிற்கும் இன்று நாம் நம்பி இருப்பது இ மெயில்தான். இந்தப் பகுதியில் இ மெயிலில் செய்ய வேண்டிய / செய்யக்கூடாத சில விஷயங்களைப்
பற்றிப் பார்க்கலாம்.

முதலில் (First Firt இல்ல) பேசும்போது இ மெயில் என்று சொல்லிப்பழக வேண்டும், நம்மில் பலர் இன்னும் மெயில் அனுப்பறேன்னே சொல்றோம்.
என்னிடம் நீங்க மெயில் அனுப்புறேன்னு சொன்னா, நான் ஓரிரு நாட்களில் United States Postal service அல்லது Indian Postal service
வழியாக வரும் லெட்டரைத்தான் எதிர்பார்ப்பேன், ஏன்னா நீங்க சொன்னது அதுதான். ஸ்டாம்ப் ஒட்டி (சில சமயம் ஒட்டாமலும்) போஸ்டல் சர்வீஸ் வழியாக
அனுப்புவதுதான் மெயில், கம்ப்யூட்டர் & இண்டெர்நெட் உபயோகித்து அனுப்புவது Electoric Mail in short Email.

இனி இமெயில் பத்தி பாக்கலாம். முதல் விஷயம் Email ID மற்றும் service provider. Official Email ID தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்லை
வடிவேலு.கைப்புள்ள@கோக்ரான்மேக்ரான்.com என்ற format உங்கள் நிறுவனம் உபயோகித்தால் அதை மாற்ற முடியாது, ஆனால் Personal Email ID
தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை. முடிந்த வரையில் உங்கள் பெயரை மட்டும் உபயோகித்து ID create பண்ணுங்கள். நீங்கள் வேலை பார்க்கும்
ஜாதியாக இருந்தால் (Working class) கூடுதல் கவனம் தேவை, ஏன்னா ரெஸ்யூமேவில் அந்த ID தான் இருக்கும். எனக்கு தெரிந்த சிலர் idly2000,
powerbala, hessed,mailmeram,itsmeram
என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் ரெஸ்யூமேவில் பார்த்தால் அவரைப் பற்றி ஒரு
Casual Image விழுந்துவிடும், இந்த மாதிரி Fancy ID எல்லாம் chat க்கு வைத்துக்கொள்ளுலாம், ரெஸ்யூமேவில் வேண்டாம்.
Gmail / yahoomail/ Hotmail போன்ற பாப்புலரான domain ஐ தேர்ந்தெடுங்கள், comcast.net போன்ற ISP ID வேண்டாம்.

அடுத்தது பெறுனர் (Receiver's email ID), யாருக்கு இமெயில் அனுப்புறதுன்ற மேட்டர்ல சந்தேகம் ஏதும் இருக்காதுங்கறதால அடுத்த லைனுக்குத்
தாவலாம்.
CC (Carobon copy) - இது ஒரு முக்கியமான பகுதி. இ மெயிலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் யாருக்கெல்லாம் தேவையோ எல்லரையும்
CC இல் கண்டிப்பா சேக்கணும், யாருக்கெல்லாம் தேவையில்லயோ அவங்களை கண்டிப்பா சேக்கக் கூடாது. புடுங்குற ஆணி எல்லாமே தேவையில்லாத
ஆணிங்கறா மாதிரி ஆபீஸ் பாயைத்தவிர எல்லாரையும் CC ல சேர்க்ககூடாது (ராத்திரி லேட்டா வேலை செய்யும் போது இதை பலர் செய்யுறதைப்
பார்க்கிறேன் - அவங்க Hardwork பண்ணுறாங்களாம்- இது எரிச்சலைத்தான் உண்டு பண்ணும்). ஒருவருக்கு அனுப்பும் முதல் மடலில் அவரோட பாஸுக்கு
CC போடக்கூடாது. குறிப்பிட்ட நேரத்துக்குள் அவரிடமிருந்து Reply / Solution கிடைக்கலைன்னா Escalation மடலை பாஸுக்கு அனுப்பலாம் அல்லது
cc இல் சேர்க்கலாம். ஆனா உங்கள் அலுவகத்திலோ அல்லது வர்த்தகத் தொடர்புடைய வேறொரு அலுவகத்திலோ உள்ள ஒருவருக்கு பாராட்டு மடல்
(Appreciation email) அனுப்பும்போது அவருடைய பாஸுக்கு CC போடுங்கள். அடுத்த முறை அவருக்கு ஏதாவது ஒரு Request அனுப்பும்போது
வித்தியாசத்தைப் பாருங்கள்.

Official Communication அனுப்பும்போது தன்னுடைய Personal IDக்கோ நண்பர்களின் ID க்கோ CC அனுப்பாதீர்கள். கண்டிப்பா
அந்த மின்மடல் உங்களுக்கோ நண்பருக்கோ தேவைன்னா BCC அல்லது Forward செய்யுங்கள்.

அடுத்த லைன் BCC (Blind Carbon Copy): Official Communicationல பெறுனருக்குத் தெரியாமல் மற்றொருவருக்கு
அனுப்பும் தேவை அடிக்கடி வராது.. BCC இல் இருப்பவர் அந்த இமெயிலுக்கு பதில் அனுப்ப முடியாது என்பதையும் மறந்து போய் அவர் பதில் அனுப்பி
விட்டால் BCC விஷயம் பெறுனருக்குத் தெரிந்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.முடிந்த வரை BCC உபயோகிப்பதை தவிர்க்கணும்,
இன்னாருக்கும் இந்த மடல் செல்கிறது என்பதை பெறுனருக்கும் தெரியப்படுத்துபடி CC போடலாம்.

நம்மில் பலர் Wishes / Invitation / chain emails அனுப்பும்போது நண்பர்கள் அனைவரையும் CC யில் சேர்த்து விடுகின்றனர்.
இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதன் மூலம் அனைவரின் முகவரியும் எல்லோருக்கும் தெரிந்து விடும்.
இ மெயில் அனுப்பும் நண்பரின் whole address book எனக்குத் தேவையில்லாதது மேலும் என்னுடைய முகவரியை அனைவரும் தெரிந்து கொள்வதை
நான் விரும்ப மாட்டேன் (இது பெண்களுக்கு அதிகம் பொருந்தும்), இந்த சமயங்களில் அனைவரின் முகவரிகளையும் BCC யில் சேர்க்க வேண்டும்.

நீங்க கொட்டாவி விட ஆரம்பிக்கறது தெரிகிறது, Body of the email பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம், முதல்ல Spoken English இப்போ இ மெயில்
உங்க கழுத்துல ரத்தம் வர்ற வரைக்கும் விடறதா இல்ல...

என்னோட இமெயில் Caption சொல்லி இந்த பதிவ முடிக்கிறேன்

The pessimist complains about the wind; the optimist expects it to change; the realist adjusts the sails,I am a realist...


டிஸ்கி: நான் ஆங்கில அறிஞனோ புரபசரோ இல்ல, communication பத்தி எல்லாம் தெரிஞ்ச Management Guru ம் கிடையாது. என்னோட பதினாறு
வருஷ சர்வீஸ்ல முட்டி மோதி தெரிஞ்சிக்கிட்டத, இந்த பதிவுல போடறேன். எல்லாமே சரின்னு சொல்லலை. தவறு இருந்தால் சொல்லுங்க, திருத்திக்கறேன்.
எனக்குத் தெரிஞ்ச சில விஷயங்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம், அவிங்களுக்கு இதெல்லாம் பயன்படலாம். நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா
எவ்வளவு மொக்க வேணா போடலாம்தானே....

43 comments:

sriram said...

பிள்ளையார் சுழி பின்னூட்டம்

ambi said...

Technically Me the Silver Medal..? :p

ambi said...

//இந்த மாதிரி Fancy ID எல்லாம் chat க்கு வைத்துக்கொள்ளுலாம், //

Kadalai poda!nnum jollalaam. :))

ambi said...

A lot of valid and useful info post! indeed. :)

(Manager is on rounds so me the peter, pls adjust.)

sriram said...

வாங்க அம்பி சார்..
இப்போ அம்பி தொர இங்கிலிபீஸ் பேசுது..
’’Kadalai poda!nnum jollalaam.’’
நான் கொஞ்சம் ரீஜண்டா சொன்னேன்..

’’A lot of valid and useful info post! indeed. :)’’

நெஜமாத்தான் சொல்றீங்களா - ஸ்மைலி போட்டனாதால் கேக்கறேன்...

இராகவன் நைஜிரியா said...

// sriram said...

பிள்ளையார் சுழி பின்னூட்டம் //

இதுதான் தூள் பின்னூட்டம் நைனா... யாருமே அடிச்சுக்க முடியாது...

இராகவன் நைஜிரியா said...

// நம்மில் பலர் Wishes / Invitation / chain emails அனுப்பும்போது நண்பர்கள் அனைவரையும் CC யில் சேர்த்து விடுகின்றனர்.
இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதன் மூலம் அனைவரின் முகவரியும் எல்லோருக்கும் தெரிந்து விடும்.
இ மெயில் அனுப்பும் நண்பரின் whole address book எனக்குத் தேவையில்லாதது மேலும் என்னுடைய முகவரியை அனைவரும் தெரிந்து கொள்வதை
நான் விரும்ப மாட்டேன் (இது பெண்களுக்கு அதிகம் பொருந்தும்), இந்த சமயங்களில் அனைவரின் முகவரிகளையும் BCC யில் சேர்க்க வேண்டும். //

நைனா இது சொன்னீயே கரீக்ட்டு. தேவையில்லாம நிறைய பேருக்கு நம்ம ஐடி தெரிஞ்சு இப்ப ஸ்பாமில் 100 க்கு மேல் இமெயில் குமிஞ்சுகிடக்கு. தாங்கமுடியலடா சாமி இந்த ஸ்பாம் மெயில் தொல்லை.

sriram said...

நன்றி ராகவன் ஜி
‘’இதுதான் தூள் பின்னூட்டம் நைனா... யாருமே அடிச்சுக்க முடியாது..’’ ஹி ஹி.. அது நமக்கு நாமே திட்டத்திம் ஒரு அங்கம்.

''தேவையில்லாம நிறைய பேருக்கு நம்ம ஐடி தெரிஞ்சு இப்ப ஸ்பாமில் 100 க்கு மேல் இமெயில் குமிஞ்சுகிடக்கு. தாங்கமுடியலடா சாமி இந்த ஸ்பாம் மெயில் தொல்லை''

இதுதான் நான் சொல்ல வந்தது

rathinamuthu said...

CC and BCC பற்றி இப்பொழுது தான் சரியாக அறிந்து கொண்டேன். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் தங்களிடமிருந்து, கொட்டாவி வருவதை சரியாக அறிந்து இன்று இத்துடன் முடித்ததற்கு நன்றி.

sriram said...

நீங்கள் தொடர்ந்து படிப்பது குறித்து சந்தோஷம் ரத்தினமுத்து.
பதிவின் நீளம் குறித்த என் நினைப்பு சரிதான் என்பதை அறிந்தேன், நன்றி..

ஷைலஜா said...

அழகா டிபன் சாப்பிட்டுவந்து அழகா பின்னூட்டமிடறேன்

blogpaandi said...

மின்னஞ்சல் எழுதுவது தொடர்பான, சிறப்பான, அனுபவபூர்வமான தகவல்களை தந்ததற்கு நன்றிகள் பல. மேலும் பல பயனுள்ள பதிவுகளை வலையிலேற்றவும்.

sriram said...

சீக்கிரம் வாங்க ஷைலஜா, Wait பண்றேன்

sriram said...

உங்க ஆதரவுக்கு நன்றி பிளாக்பாண்டி,
முடிஞ்ச வரை (தெரிந்த வரை) எழுதறேன்

Anonymous said...

Good post, very useful..

வால்பையன் said...

நல்ல தகவல் ரொம்ப நன்றி தல!

ஷைலஜா said...

உபயோகமான பதிவு.
ஸ்பாம் மெயில்களை வரவிடாம தடுப்பது எப்படி? வந்ததை அப்பப்போ அழிச்சிடறோம்னாலும் இன்பாக்சுக்கு வரதைவிட ஸ்பாம்க்கு அழையாவிருந்தாளியாக ஆயிரம் மெயில் வந்துடுதே...:)

sriram said...

வாங்க ஷைலஜா,
Google , yahoo வாலயே முழுசா செய்ய முடியாததப் பத்தி என்கிட்ட கேட்டா என்ன சொல்றது.
White list / Black list create பண்ணலாம், ஆனா அதுவும் 100% fool proof ன்னு சொல்ல முடியாது, அதிலும் சில Problem இருக்கு

Porkodi (பொற்கொடி) said...

அடடா யாராவது மக்களுக்கு இதையெல்லாம் சொல்லி புரிய வெக்க மாட்டாங்களானு நினைக்கும் போது நீங்களே பதிவை போடறீங்க :)

நல்லா இருக்கு எல்லா பாயிண்ட்ஸுமே..

//என்னோட பதினாறு
வருஷ சர்வீஸ்ல முட்டி மோதி தெரிஞ்சிக்கிட்டத, இந்த பதிவுல போடறேன். // ஹாஹாஹா.. ஹையோ ஹையோ.. :))))))

//’இதுதான் தூள் பின்னூட்டம் நைனா... யாருமே அடிச்சுக்க முடியாது..’’ ஹி ஹி.. அது நமக்கு நாமே திட்டத்திம் ஒரு அங்கம்.//
உண்மைய சொல்லுங்க, இது என் கிட்டர்ந்து கத்துக்கிட்டது தானே?

அப்புறம் அந்த டிஸ்கி என்னாத்துக்கு? ஆனா ஊனா எல்லா பதிவுலயும் போடறீங்க.. இது உங்க ப்லாக்.. உங்களுக்கு என்ன மொக்கை தோணுதோ போடலாம்.. எவனும் கேக்க முடியாது! ;) எவனும் கேக்க முடியாதுங்கற கெத்தோட எழுதுங்க, யாரவது எதாவது சொன்ன எடுத்துக்கணும்ங்கற பக்குவத்தோட பின்னுட்ட பேஜுக்கு போங்க, அதோட சரி. சும்மா திருத்திக்கறேன் வருத்திக்கறேன்னு.. :))))

அம்பி, மேனேஜர் ரவுண்ட்ஸ் வந்தா தானே தமிழ்ல எழுதணும்.. உங்க ஆளு கொஞ்சம் வித்தியாசமா இங்லிபிஸ்ல வீக்கோ..?

sriram said...

கருத்து கந்தசாமி பொற்கொடி, (இது நையாண்டி)
நீங்க சொன்னதெல்லாம் சரியா புரிஞ்சிக்கிட்டேன், இனிமே அப்படியே செய்யறேன் (இது சீரியஸ்)

அம்பிய வம்புக்கு இழுக்கலன்னா உங்களுக்கு தூக்கமே வராதா??
(இத்த யாரு சொல்றதுன்னு பின்னூட்டம் போட்டால் நிர்வாகம் அதை அனுமதிக்காது)

Porkodi (பொற்கொடி) said...

nakkal naiyandikaga kooda "kandasamy" nu arambikadhinga solliten! :(

butterfly Surya said...

உபயோகமான பதிவு. தகவல்கள் ரத்தின சுருக்கமாய் சிறப்பு..

வாழ்த்துகள்.

தொடருங்கள்....

அனுஜன்யா said...

சுவாரஸ்யமா பயனுள்ள தகவல்கள் தரும் இடுகை. தொடருங்கள்.

அனுஜன்யா

ambi said...

//ஸ்மைலி போட்டனாதால் கேக்கறேன்...
//

சிரிச்ச முகத்தோட ஒருத்தர் பின்னூட்டம் போடக் கூடாதா? அப்படி எடுத்துக்குங்க. :) (பார்ரா மறுபடியும் ஸ்மைலி போடறான்)


@கொடி, இப்ப உள்ள ஆளு ஒரு தமிழர். என்னிக்கு என் பிளாக்குல கமண்ட் போட போறாரோன்னு நானே பயந்து போயி இருக்கேன். :))

sriram said...

நன்றிக்கு ஒரு நன்றி வால்பையன்

sriram said...

யம்மா தாயே பொற்கொடி, உங்களப் போயி கந்தசாமின்னு சொல்வேனா?
உங்க மொக்கைக்கு முன்னாடி கந்தசாமியெல்லாம் எம்மாத்திரம்....
:)

sriram said...

நன்றி Butterfly சூர்யா,, தொடரத்தான் எண்ணியுள்ளேன். தொடர்வேன் என நம்புகிறேன்...

sriram said...

வாங்க அனுஜன்யா,
சூர்யாவுக்கு சொன்ன பதிலை உங்க பேர் போட்டு ஒரு முறை படிச்சுக்கோங்க...

sriram said...

அம்பி உங்க சிரிச்ச முகம்தான் போட்டோவில தெரியுதே அப்புறம் எதுக்கு தனியா ஒரு ஸ்மைலி...

ஆதிமூலகிருஷ்ணன் said...

கேட்டுக்குறோம்ப்பா..

sriram said...

வாங்க ஆதி
என்ன மாதிரியான பதில் இது :)

karthick said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

Dubukku said...

//என்னோட பதினாறு
வருஷ சர்வீஸ்ல முட்டி மோதி தெரிஞ்சிக்கிட்டத, இந்த பதிவுல போடறேன்.//

எத இந்த HotBostonGuy@yahoo.com ன்னு ஒரு ஐடி வைச்சிருந்தீங்களே...அந்த இமெயில ஆபிஸில உபயோகப் படுத்தக்கூடாதுங்கிறதையா?? :P

ஹி ஹி சும்ம டமாசு டமாசு....

நல்ல உபயோகமான பதிவு

sriram said...

கார்த்திக்
போட்டில கலந்துகிட்டா படம் பாக்க சொல்வீங்களா? அப்படின்னா நான் ஜூட்டு

sriram said...

டுபுக்காரே
உங்க பத்வுல பொற்கொடிக்கு உங்க இமெயில் ஐடி குடுத்ததுக்கு பழிக்கு பழியா?? நல்லாருங்க...
இப்போ பாருங்க பொண்ணுங்க எல்லாம் அந்த முகவரியில் என்ன தொரத்தப் போறாங்க..

தருமி said...

எங்கள் கல்லூரி சார்பாக உள்ள ஒரு இடுகையில் புதிய பதிவுகளை ஏறத்தாழ 400 பேருக்கு இ-மெயில் அனுப்புகிறேன்.எல்லோருடைய பெயரையும் BCC-யில் போட்டு அனுப்புகிறேன். ஆனால் எல்லா இ-மெயில்களும் அந்த BCC-ல் உள்ள பெயர்களோடேயே போகிறது. தடுக்க முடியவில்லை. தெரிந்த சில பெரிய கணினி ஆட்களிடமும் கேட்டேன். இதுவரை பலனேதுமில்லை.

உதவுங்கள்.

அடுத்த முறை அதுபோல் அனுப்பும் இ-மெயிலை உங்களுக்கும் அனுப்பிப் பார்க்கிறேன். சரியா?

sriram said...

தருமி ஐயா,
எனக்கு புரிந்தது சரி என்றால், அப்படி நடக்க வாய்ப்பில்லை அல்லது எனக்குத் தெரிந்து யாருக்கும் அப்படி நடந்ததில்லை.
முதலில் நான் புரிந்த்தை சொல்கிறேன்.
நீங்கள் உங்களுடைய dharumi2@gmail.com என்ற முகவரியிலிருந்து என்னுடைய nsriram73@gmail.com என்ற முகவரிக்கு ஒரு இமெயில் அனுப்புகிறீர்கள், அதில் ஒரு 400 முகவரிகளை BCC இல் சேர்க்கிறீர்கள்.
இந்த நிலையில் எனக்கு வரும் மடலில் நான் அந்த 400 முகவரிகளைப் பார்க்க முடியாது, மேலும் அந்த 400 பேரில் ஒருவருக்கு மற்ற 399 முகவரிகள் தெரியாது.
இதில் ஏதேனும் வித்தியாசமாக் உங்களுக்கு நடந்திருக்கிறதா? அப்படி நடந்திருந்தால் வேறு ID யிலிருந்து முயன்று பாருங்களேன்.
நீங்கள் அனுப்பிய மடல்கள் கிடைத்தன (Mr. Sriram வேண்டாமே.. இன்றய பதிவு படியுங்கள்).

From: dharumi - dharumi2@gmail.com
Date: Wed, Aug 26, 2009 at 8:42 AM
Subject: DR. CHINNARAJ JOSEPH JAIKUMAR RESUMED OFFICE AS PRINCIPAL AND SECRETARY
To: "Dr. P. Kumarasamy" pkumarasamy@gmail.com

எனக்கு BCC யில் இருந்த முகவரிகள் தெரியவில்லை. திரு. குமாரசாமிக்கு தெரிந்ததா? 400 பேரில் எவருக்கேனும் மற்ற முகவரிகள் தெரிந்தனவா? அப்படி
இருந்தால், ஒருவரிடம் இருந்து Email Forward பெற்று Escalate செய்யலாம். தங்களின் தொலைபேசி எண்ணை மடலில் அனுப்பினால், பேசிப் புரிந்து
கொள்ள ஏதுவாக இருக்கும்..

Jaleela said...

//ஒருவருக்கு அனுப்பும் முதல் மடலில் அவரோட பாஸுக்கு
CC போடக்கூடாது. குறிப்பிட்ட நேரத்துக்குள் //


சரியாக சொன்னீர்கள் இதான் பெரிய தொல்லையா இருக்கு.

sriram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.

sriram said...

ஷோபன் என்ற நண்பர் எழுதியது
Dear Sriram,Another good post from you J.One good email etiquette while BCCing is: at the starting of the body or at the end put one PS saying that BCC is intentional. Though the receiver cant view other’s email IDs, one can understand that the email has been BCCed to others too. So its always a good manners to use this PS, if you use BCC in work place.Thanks,

ShobanPS: Again, I have no access to post comments in blogs. If you wish you can post this in your blog.

sriram said...

நண்பர் ஷோபனுக்கு நான் எழுதிய பதில்

Hi Shoban
Thanks for your continued patronage to my blogpage.
I would like to differ from your views on this Shoban, the very purpose of Bcc is to keep the recipient unaware of the others who are kept in the loop. By just mentioning that the email contains some IDs in BCC, the recipient will start wondering who all would got that email and it may lead to confusion. This is only my opinion and you may be correct and may work for you.
regards
Sriram

ஹாலிவுட் பாலா said...

///////
சிலர் idly2000, powerbala, hessed,mailmeram,itsmeram என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள்.
///////

யாருப்பா.. அது...????!!!!!!! :) :) :)


நிறைய இடங்களில், அது ICE BREAKER மாதிரி உபயோகப் பட்டிருக்கு ஸ்ரீராம். Casual image வர்ற மாதிரி, க்ரியேடிவா திங்க் (? ஹி ஹி) பண்ணுறவங்க-ன்னு கூட ஒரு இமேஜ் வரலாம் (வந்திருக்கு).

உங்கள்-ல ஆரம்பிச்சி, ஏன் அந்த பெயரை தேர்ந்தெடுத்தீங்கன்னு, கேட்காத ஆட்கள் ரொம்ப கம்மி. அதுவரையில்... நல்லதோ கெட்டதோ... powerbala கேட்ச்சியான பெயர்-ன்னு நான் நம்பறேன்.

sriram said...

’’ ஹாலிவுட் பாலா said...
///////
சிலர் idly2000, powerbala, hessed,mailmeram,itsmeram என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள்.
///////

யாருப்பா.. அது...????!!!!!!! :) :) :)


நிறைய இடங்களில், அது ICE BREAKER மாதிரி உபயோகப் பட்டிருக்கு ஸ்ரீராம். Casual image வர்ற மாதிரி, க்ரியேடிவா திங்க் (? ஹி ஹி) பண்ணுறவங்க-ன்னு கூட ஒரு இமேஜ் வரலாம் (வந்திருக்கு).

உங்கள்-ல ஆரம்பிச்சி, ஏன் அந்த பெயரை தேர்ந்தெடுத்தீங்கன்னு, கேட்காத ஆட்கள் ரொம்ப கம்மி. அதுவரையில்... நல்லதோ கெட்டதோ... powerbala கேட்ச்சியான பெயர்-ன்னு நான் நம்பறேன்.//

இப்போ அது யாருன்னு ஊருக்கே தெரிங்சிருக்கும் பாலா..
நான் கொஞ்சம் பழமைவாதி பாலா..
கொஞ்சம் அதிமாகவே conservative ஆக யோசிப்பவன். நான் உங்களிடத்தில் இருந்தால் powerbala / hollywoodbala ஐடியை Personal use க்கும் bala.somasundaram என்று ரெஸ்யூமுக்கும் வைத்திருப்பேன்.
Hope you understood my point- It was not to pick anyone's fault, it was just to convey message that we should be careful in choosing the ID.