Monday, September 14, 2009

ஐடியா

என் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் சென்ற முறை மராமத்து நடந்த போது, கட்டிடத்தில் இருக்கும் அனைத்து கம்பெனிகளுக்கும்Property Management Company ஒரு அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் நடக்கவிருந்த வேலைகள் பற்றியும் எந்தெந்த வசதிகள் (Toilet, Parking) எவ்வளவு நாளைக்கு உபயோகிக்க முடியாது என்பதெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. அவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்து குறிப்பு அனுப்பியிருந்தாலும், பல பேர் எனக்கு தகவல் வரவில்லைன்னு குறை சொன்னார்கள்.

இந்த வருட மராமத்து வேலைகள் இன்று முதல் ஆரம்பம், போனமுறை சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு ஆளானவர் (அவர் எல்லா
நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய போதும்) இந்த முறை ஒரு ஐடியா செய்தார் பாருங்கள் - தொலைக்காட்சி நடுவர்க்ள் பாஷையில் சொன்னால் -
சான்ஸே இல்லை. கட்டிடத்தில் இருக்கும் நாலு கழிவறைகளின் கதவிலும் நோட்டிஸை ஒட்டிவிட்டார். மவனே ஆபிஸ் வந்தால் டெஸ்கில் இருக்கீங்களோ
இல்லயோ ஒரு நாளைக்கு பல தடவ இங்குதானடா வருவீங்க, இங்க ஒட்டினா எப்படி தெரியாதுன்னு சொல்லுவீங்கன்னு செஞ்சாரு பாருங்க ஒரு ஐடியா?
இதத்தான் Out of the Box Thinking ன்னு சொல்லுவாங்களோ?

12 comments:

அமுதா கிருஷ்ணா said...

நச்சுன்னு இருக்கு ஐடியா....

sriram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா

இராகவன் நைஜிரியா said...

அதை ஒரு இடுகையாப் போடலாம் என்று தோன்றி போட்டீங்க பாருங்க அங்கத்தான் நீங்க நிக்கறீங்க. இதுவும் ஒரு out of the Box Thinking அப்படின்னு சொல்லலாமுங்களா?

sriram said...

வாங்க ராகவன்,
இதெல்லாம் ஒரு பதிவான்னு துப்புவீங்கன்னு நெனச்சேன், சரியா செஞ்சீங்க.. அதனால உங்களோடது thinking on the expected lines..
சும்மா subject matter பதிவுகளுக்கு நடுவில ஒரு மொக்கை (மத்ததெல்லாம் மொக்க இல்லயான்னு கேக்கப்படாது..)

வால்பையன் said...

நல்ல ஐடியாவா இருக்கே!

இராகவன் நைஜிரியா said...

// sriram said...
வாங்க ராகவன்,
இதெல்லாம் ஒரு பதிவான்னு துப்புவீங்கன்னு நெனச்சேன், சரியா செஞ்சீங்க.. அதனால உங்களோடது thinking on the expected lines..
சும்மா subject matter பதிவுகளுக்கு நடுவில ஒரு மொக்கை (மத்ததெல்லாம் மொக்க இல்லயான்னு கேக்கப்படாது..)//

ஒரு சின்ன விசயம் -

blog = பதிவு (அ) வலைப்பூ
Post = இடுகை.

நீங்க எழுதும் இடுகையைப் போய் அப்படி எல்லாம் சொல்லுவேனுங்களா. வித்யாசமா நினைச்சுப் பார்த்து இருக்கீங்க அப்படின்னு சொல்றேன். பாராட்டாகத்தான் சொன்னேன்.

sriram said...

ஆமா வாலு, அவர் ஐடியா நல்லா இருந்த்தாக எனக்கு பட்டதால் எழுதினேன்

sriram said...

நானும் அப்படியேத்தான் எடுத்துக்கொண்டேன் ராகவன்..
இடுகை / பதிவு பற்றிய விளக்கத்துக்கு நன்றி, இனிமே அப்படியே எழுத முயற்சிக்கிறேன்...

ஷைலஜா said...

இப்படி சாதாரண விஷயத்தையும் எதார்த்தமா எழுதி பதிவாய் அளிக்கும் எங்க ஸ்ரீராமின் சாமர்த்தியத்துக்குமுன் அவரோட ஐடியால்லாம் ஒண்ணுமே இல்ல!

sriram said...

ஷைலஜாக்கா
குசும்பு???
ஆனாலும் என்னை சாமர்த்தியக்காரன் என்று சொன்னதற்கு நன்றி

ambi said...

எங்க ஆபிஸ்லயும் தகவல் எல்லாம் அனுப்ப மாட்டாங்க. அனுப்பினா அந்த மெயிலை டெலிட் பண்ணிடுவோம்னு தெரியும். அதனால் டாய்லட் கதவுல, லிப்டுகுள்ள ஒட்டிடுவாங்க. :))


இவ்ளோ ஏன், எல்லாம் சொஸ்தமா போன பிறகு தண்ணி விட்டுட்டு போங்கன்னு (ப்ளஷ் பண்ணிட்டு) கூட எழுதி ஒட்டிருகாங்க. :))

sriram said...

அம்பி சார்
உங்க ஆபிசிலும் இப்படித்தானா??

”””இவ்ளோ ஏன், எல்லாம் சொஸ்தமா போன பிறகு தண்ணி விட்டுட்டு போங்கன்னு (ப்ளஷ் பண்ணிட்டு) கூட எழுதி ஒட்டிருகாங்க”””

நீங்க சொல்றது ரூமுக்கு உள்ளே, நான் சொல்வது வெளியே...