ஒரு வாரமா ஆபிஸ்ல பயங்கர ஆணி, இந்தப் பக்கம் வரமுடியல, எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பீங்களே.. உங்கள அப்படியே விட்ற முடியுமா? அதனால அடுத்த
மொக்கையுடன் வந்து விட்டேன்..
இப்பொழுதெல்லாம் First level Phone Interview பழக்கத்தில் இருக்கு, அமெரிக்காவில் பெரும்பாலும் முதல் கட்டத்தேர்வு தொலைபேசியில் நடக்கிறது, இந்தியாவிலும் இந்த பழக்கம் ஆரம்பிச்சிருக்கு. முதல்ல இதப்பத்தியும் பின்னர் நேர்முகத்தேர்வு பற்றியும் பார்க்கலாம்.
Phone Interview : இதன் சாதகமான விஷயம் - Time Saving. ஒரு முப்பது நிமிட உரையாடலில் Employer- Prospective candidate பத்தியும் Candidate - Propective Employer / Postion பத்தியும் தெரிந்து கொள்ளலாம். பல நேரங்களில் இண்டர்வியூவுக்கு போன பின்புதான் அந்த வேலைக்கும் நமக்கும் ஒத்து வராதுன்னுதெரிய வரும்(Due to various reasons). இதுக்காக லீவு போட்டுட்டு லொங்கு லொங்குன்னு ஓடிப் போயிருப்போம்..
இதன் பாதகமான விஷயம் - You don't have your personality and your body language to compliment what you speak.
அதனால பேசும்போது ரொம்ப கவனமா இருக்கணும், சொல்லும் வார்த்தைகள் உங்க பர்சனாலிடிய பிரதிபலிக்கணும்.
செய்ய வேண்டியவை:
Take the call in a quiet place;speak up and speak clear – do not ramble and be articulate with your answers
Speak slowly but loudly. Check with the interviewer if you are audible and clear to him/ her.
Take the call from a reliable phone, make sure your cell phone is fully charged.
Disable the call waiting option on your cell phone.
Have a copy of your resume in front of you and the job description
கேட்கப்படும் கேள்வி புரியலன்னா, மறுபடியும் கேக்கச் சொல்லுங்க.
உரையாடலின் முடிவில் நீங்க கேட்பதற்கு கேள்விகள் தயாராக இருக்கட்டும் - What are the key skills required, When do they intend to hire,What is the project all about, what is the salary, ஆபிசில் பிளாக் எழுதலாமா/கூடாதா etc.
செய்யக்கூடாதவை:
உங்க நண்பரை விட்டு போன் இண்டர்வியூ எடுக்கச் சொல்லாதீங்க, நேரில் போகும்போதோ அல்லது வேலை கிடைத்த பின்னரோ மாட்டிக்குவீங்க.
Engage in a converation, Never make it a Monologue.
வளவளன்னு பேசாம ரத்தினச் சுருக்கமா பதில் சொல்லுங்க.
ஸ்பீக்கர் போனில் பேசாதீர்கள், கேட்பவருக்கு தெளிவா கேக்காது, உங்க பக்கத்தில் இருக்கும் சின்ன சத்தம் கூட அவருக்கு பெரிசா கேக்கும்.
As much as the Hiring Manager interviews the candidate, the candidate should also interview the client. இரண்டு பக்கமும் கேள்விகள் முடிந்ததும், நன்றி சொல்லி Next Steps பத்தி கேளுங்க.
போனை வைப்பதற்கு முன் மறக்காம மேனஜிரின் இமெயில் ஐடி வாங்கி அவருக்கு ஒரு Thank You note அனுப்புங்க.
இப்போ நேர்முகத்தேர்வு :
முதல் கட்டம் - நேர்முகத்தேர்வுக்கு முந்தைய நாள்: Failure to Plan is Planning to fail - இது வேறெதுக்கு பொருந்துதோ இல்லயோ இண்டர்வியூவுக்கு ரொம்ப பொருந்தும். ஒரு இண்டர்வியூவுக்கு போகும் முன் கொஞ்ச நேரம் செலவழிச்சு பிளான் பண்ணா வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
மொதல்ல இண்டர்வியூ நடக்கும் நேரம், இடம், யார் என்பதையெல்லாம் ஒன்றுக்கு இரண்டு முறை கன்ஃபர்ம் செய்து கொள்ளுங்கள், முடிந்த வரை காலை நேரத்தில் இண்டர்வியூ வைத்துக் கொள்ளுங்கள், நீங்களும் ஃப்ரெஷ் ஆக இருப்பீர்கள், மேனேஜரும் நல்ல மூடில் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
கம்பெனியின் வலைதளத்துக்கு சென்று ஒரு மணி நேரம் செலவிடுங்கள். company history,Products and service offerings, latest announcements, கம்பெனி பத்தி கடைசியாக பேப்பரில் வந்த செய்தி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு இண்டர்வியூவில் நடு நடுவே சொல்லி அசத்துங்க.
டெக்னிகல் வேலையாக இருந்தால் Job Description தெரிந்து கொண்டு உங்களோட திறமை / அனுபவம் எவ்வாறு அதனுடன் ஒத்துப் போகிறதுன்னு
ஒரு 4-5 லைன் மனப்பாடமாக வையுங்கள்.
அந்த கம்பெனியில் வேலை செய்யும் யாருடனாவது அறிமுகம் இருந்தால் அவருடன் பேசி அந்த கம்பெனியில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் Qualification/Skills பத்தி தெரிஞ்சிக்கோங்க.
அப்புறம் ரொம்ப முக்கியமா, இண்டர்வியூவுக்கு அணியப் போகும் உடை, Shoe, Matching Socks எல்லாம் சரிபாத்து ராத்திரியே எடுத்து வைத்து விடுங்கள்.காலையில் ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்.
இரண்டாம் கட்டம்:
இண்டர்வியூவுக்கு போவதற்கு உங்களிடம் உள்ள சிறந்த உடையை தேர்ந்தெடுங்கள். அதுக்காக என்கிட்ட இருக்குறதிலேயே சிறந்த டிரெஸ் பச்ச கலர் பேண்டும்
செவப்பு கலர் சில்க் ஜிப்பாவும் சொல்லிட்டு அதயெல்லாம் போடக்கூடாது. என்னோட சாய்ஸ் Navy Blue Matt Finish Pant, White Shirt, Red tie and Navy Blue Blazer. கருப்பு பேண்ட் வெள்ளை சர்ட் கண்டிப்பாக கூடாது.
டை பத்தின சில விஷயங்கள் - Pant க்கு மேட்சிங்காக டை அணிவது ப்ரிட்டிஷாரின் பழக்கம், Shirt க்கு மேட்சிங்காக டை அணிவது அமெரிக்க வழக்கம்.
கல்யாணம் ஆகாதவர்கள் பெல்ட் வரையும், கல்யாணம் ஆனவர்கள் பெல்ட்டை தாண்டி (கொஞ்சம்) வருமாறும் டை அணிவது உலக வழக்கம்.
ஷீ - குனிஞ்சு பாத்தா முகம் தெரியணும் (தொப்பை மறைக்காம இருந்தா) அந்த மாதிரி பாலீஷ் போட்டு இருக்கணும். Pointed Black leather shoe with lace -இதுதான் நம்ம சாய்ஸ் எப்பவும். இன்னொறு முக்கியமான விஷயம், சாக்ஸ் பேண்ட் கலரில் இருக்க வேண்டும், கருப்பு ஷீவுக்கு வெள்ளை சாக்ஸ் கூடவே கூடாது, இந்த காம்பினேஷன் போட்ட ஒரே பிரபலம் மைக்கேல் ஜாக்ஸன் என்பது கூடுதல் தகவல்.
டிரெஸ் பண்ணி முடிச்சாச்சா? நேரத்துக்கு கெளம்பி இண்டர்வியூ நேரத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு கம்பெனியை அடையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.அப்பத்தான் ரிலாக்ஸ்டா வண்டியை நிறுத்திவிட்டு, உடைகளை மறுபடி ஒருமுறை நேர்த்தி செய்துவிட்டு, செக்யூரிட்டியை தாண்டி வரவேற்பரைக்கு குறித்த நேரத்துக்கு அஞ்சு நிமிஷம் முன்ன போக முடியும்.
உள்ளாற போன பின்பு என்ன செய்யணும்னு அடுத்த பகுதியில் பாக்கலாம்.. திங்களன்று எழுத கண்டிப்பாக முயல்கிறேன்..
Friday, November 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
நீங்க இங்க குறிப்பிட்ட அத்தனை தப்பையும் பண்ணியிருக்கேன்=ன்னு உங்களுக்கே தெரியும்! :) :)
ஆனாலும்.. உங்களுக்கு.. ரொம்ப நேர்மையான மனசுங்க. தமிழ்மணத்துல நீங்களே உங்களுக்கு ஓட்டு போட்டுக்க மாட்டேங்கறீங்களே!
=====
குனிஞ்சி பார்த்தா முகம் தெரியனும்னு சொன்னதும், எனக்கு ராதா மோகனின்.. அழகிய தீயே நினைவுக்கு வந்துடுச்சி! :) :)
அட நீஙக வேற பாலா.. நான், நீங்க உள்பட இந்த தவறுகள் எல்லாருமே செய்யறதுதான்.. இனிமே திருத்திக்கலாம்..
நான் எப்பவுமே எனக்கு தமிழ்மணத்தில் ஒட்டு போட்டது கிடையாது, உங்களுக்கே தெரியும், மூணு போஸ்ட்டுக்கு முன்னால ஒரு வோட்டு கூட இருக்காது.
//கருப்பு பேண்ட் வெள்ளை சர்ட் கண்டிப்பாக கூடாது. /// ???
அடுத்து இண்டர்வியூ எடுப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க ஸ்ரீராம்.
//அகில் பூங்குன்றன் said...
//கருப்பு பேண்ட் வெள்ளை சர்ட் கண்டிப்பாக கூடாது. /// ??? -
அது ரெஸ்டாரண்ட்ல இருக்குறவங்க போடற யூனிஃபார்ம்.
//அடுத்து இண்டர்வியூ எடுப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க ஸ்ரீராம்.//
கண்டிப்பா தெரிஞ்சத எழுதறேன்
ஓ.....
Sriram, you can write a book, collection of all these posts on interview. Its really useful.
மித்து
மிக்க நன்றி
என்ன வெச்சி காமெடி எதுவும் பண்ணலியே??
ரொம்ப உபயோகம் இதெல்ல்லாம். இனிதான் இதெல்லாம் பயன்படுத்தனும்.
Not at all.. I feel these are informative posts. You can think of writing a book.
நன்றி பப்பு
அதுக்கெல்லாம் இன்னும் நெறய வளரணும் மித்து, உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்
நல்ல நேரத்துல போட்டிங்க இந்த பதிவை ..பிச்சிக்கும் போல இருக்கு இங்கே. எங்க Product-யே தூக்கி விடுறதா பேச்சு நடக்குது.
வண்டிக்காரரே
என்ன சொல்ல வரீங்கன்னு முழுசா புரியல, உடனே வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கீங்களா?
///என்ன வெச்சி காமெடி எதுவும் பண்ணலியே??///
இப்படித்தான்.. பிக்ஸார் எழுதும் போது... என்னை வச்சி காமெடி பண்ணினாங்க! :) :)
எனக்கும் அப்படித்தான் தோணுது பாலா...
:):)
மித்து, Jus kidding, don't worry..
thanks for your appreciation
You are welcome :)
ரொம்ப உபயோகமான பதிவு. எனக்கு இல்லாட்டாலும் தெரிஞ்ச நண்பர்களுக்கு சொல்லலாம் இல்லே?
//கருப்பு பேண்ட் வெள்ளை சர்ட் கண்டிப்பாக கூடாது. /// when i was in a star hotel to attend an interview the interviewer itself mistook me as a HOTEL STAFF. i realized my mistake. When you are specific about your dressing either you should have experienced or expected it from others
பையனை படிக்கச்சொன்னேன்.நல்ல விபரங்கள்.
நன்றி ஸ்ரீராம், கண்டிப்பா நண்பர்களுக்கு சொல்லுங்க
வாங்க குமார், அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி
தன்யனானேன் வடுவூர் குமார்
உருப்படியான பதிவு.
நன்றி ஸ்ரீ...
பயனுள்ள இடுகை
ரொம்ப உபயோகமான தவல்கள்.
http://kgjawarlal.wordpress.com
நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா
நன்றி ஜவர்லால்..
உங்க ஜோக்ஸ் எல்லாம் தொடர்ந்து படித்து வருகிறேன், கலக்குங்க
ரொம்ப உபயோகமான பதிவுங்க
ஓட்டுக்கள் போட்டாச்சு
டை பத்தின சில விஷயங்கள் - Pant க்கு மேட்சிங்காக டை அணிவது ப்ரிட்டிஷாரின் பழக்கம், Shirt க்கு //மேட்சிங்காக டை அணிவது அமெரிக்க வழக்கம்.
கல்யாணம் ஆகாதவர்கள் பெல்ட் வரையும், கல்யாணம் ஆனவர்கள் பெல்ட்டை தாண்டி (கொஞ்சம்) வருமாறும் டை அணிவது உலக வழக்கம்.//
இது புதுசுங்க
ரொம்ப நன்றி
இன்னும் ஒரு இண்டர்வியூவா?
கடவுளே போதும்,ஆனால் நண்பர்களுக்கு சொல்லுவேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்திகேயன்
its very useful tips for me !!!!
Thanks
//கல்யாணம் ஆகாதவர்கள் பெல்ட் வரையும், கல்யாணம் ஆனவர்கள் பெல்ட்டை தாண்டி .....//
IF so, குழந்தை இருப்பவர்கள்..?
இன்டர்வியூக்கு அரை மணி முன்னாடியே போனா ரிஷப்சனிஸ்டை பிரண்ட் பிடிச்சுக்கலாம். இது கூடுதல் தகவல். சென்னை கம்பெனில இப்படி தான்.... :))
இன்னிக்கு செவ்வாய்கிழமை. (இல்ல சும்மா நியாபகபடுத்தினேன்) :))
ambi said...
IF so, குழந்தை இருப்பவர்கள்..?
அம்பி, குழந்தை இருப்பவர்கள் டையை கழட்டி குழந்தைக்கு வேறு விதமாக மாட்டி விடலாம்....:)
//ambi said...
இன்னிக்கு செவ்வாய்கிழமை. (இல்ல சும்மா நியாபகபடுத்தினேன்) :))//
வாக்கு கொடுத்தா அத கண்டிப்பா செய்யணும், அதுவே எனக்கு ஒரு உந்து சக்தியாக இருக்குமுன்னு நெனச்சி ஒரு பீலிங்ல அப்படி எழுதிட்டேன். இனிமே நான் ஒரு டெட்லைன் கொடுத்துட்டு பண்ணாட்டி ஏண்டான்னு கேளுங்க...
எப்படி இவ்வளவு தகிரியமா சொல்றேன்னா, இனிமே டெட்லைனே சொல்றதில்லன்னு முடிவு பண்ணிட்டேன் :) :)
உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் பயனுள்ளது.
வாங்க போஸ்டன் ஸ்ரீராம் வந்து என் பிலாக்கில் உங்கள் அவார்டை பெற்று கொள்ளுங்கள்.
நன்றி ஜலீலா
superb informative article thalaiva
Post a Comment