Tuesday, December 7, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை பகுதி 6

பத்து பத்து
முந்தைய பகுதிகள்

இந்தத் தொடரில் இதுவரை H1B விசா மற்றும் இடங்கள் / விலைவாசி பத்தி மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்தப் பதிவில் கொஞ்சம் வித்தியாசமா எனக்கு அமெரிக்காவில் பிடிச்ச /
பிடிக்காத பத்து விசயங்களைப் பத்திச் சொல்றேன். நீங்களும் உங்களுக்கு பிடிச்ச / பிடிக்காத விசயங்களைப் பத்தி பின்னூட்டத்தில சொல்லுங்களேன். நான் இங்கு சொல்லியிருப்பது
அனைத்தும் நான் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அனுபவித்து உணர்ந்தவை - இவை என்னோட பர்சனல் ஒப்பீனியன் மட்டுமே.


பிடித்த பத்து

1. Very Systematic : இந்த நாட்டில் இருக்கும் ஒழுங்கு முறை எனக்கு ரொம்பப் பிடிக்கும். போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதாகட்டும், பாதசாரிகளுக்கு வழி விடுவதாகட்டும் எங்கு சென்றாலும் வரிசையை கடை பிடிப்பதாகட்டும், அமெரிக்காவில் இருக்கும் ஒழுங்கு அனைவரும் பின்பற்ற வேண்டியது

2. Roads : நாட்டின் உள்கட்டமைப்பின் உயிர்நாடி அமெரிக்காவின் சாலைகள். ரொம்ப க்ளியரா Town Roads / Highways என்று பிரித்து சாலைகளை அமைத்து இருக்காங்க.
ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு செல்ல முதலில் Town Road இல் பயணித்து Highways இல் இணைந்து விட்டால் போக வேண்டிய Town வரை ஹைவேஸில் சிக்னல், பாதசாரிகள், எதிர் வரும் வாகனங்கள்னு எந்த தொந்தரவும் இல்லாம பயணிக்கலாம். சாலைகளின் தரமும் மிகவும் உயர்வு.

3. Ecommerce / Online Shopping : எனக்கு பர்சனலா ரொம்பப் பிடிச்ச இன்னொரு விசயம். ஒரு பொருளை வாங்க பல கடைகள் ஏறி இறங்க வேண்டாம். இருந்த இடத்திலிருந்தே பல வெப்சைட்களில் பொருளின் விவரம், விலை, Customer Feedback எல்லாம் படிச்சிட்டு ஆன்லைன்லயே வாங்கலாம். Amazon போன்ற தளங்களில் பயமில்லாமல் கடன் அட்டையை உபயோகித்து பொருட்களை வாங்கலாம். வங்கிக் கணக்கைக் கூட ஆன்லைனில் உபயோகிப்பது எளிது. இந்தியாவில் ICICI மற்றும் HDFC தளங்களை உபயோகித்திருக்கிறேன், இங்கு Bank of America வின் தளம் அவற்றை விட உபயோகிக்க எளிதாக உள்ளது. என்னளவில் Safe கூட.

4. லஞ்சம் இல்லை : அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக லஞ்சம் இல்லை என நான் Blanket Statement கூறவில்லை. ஆனால் கண்டிப்பாக என்னைப் போன்ற Common Man
வாழ லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை எனக் கூற முடியும். கடந்த நாலு வருசத்தில் மூணு கார் வாங்கி ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறேன், ஓட்டுனர் உரிமம் வாங்கியிருக்கிறேன்,
Electricity Connection, Phone Connection, Gas Connection வாங்கியிருக்கிறேன். இவ்வளவு ஏன், நாலு முறை Traffic police இடம் பிடிபட்டு ஒரு முறை டிக்கெட் வாங்கி, கோர்ட்டுக்குப் போய் அபராத்தை பாதியாக குறைத்திருக்கிறேன் - எதுக்கும் ஒரு பைசா லஞ்சம் கேட்டதுமில்லை, கொடுத்ததுமில்லை. மில்லியன் டாலர் காண்ட்ராக்ட்
தேவைப்படுவோர் லஞ்சம் கொடுப்பதாக இருக்கல்லாம், ஆனால் மிடில் க்ளாஸ் மக்கள் அமெரிக்காவில் வாழ லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை.

5. Customer is King : அமெரிக்கா வந்து போன எல்லாரும் இதனை ஒத்துக் கொள்வார்கள். இங்குள்ள பெரும்பாலான கடைகளில் கஸ்டமர் சர்வீஸ் மிகச் சிறப்பா இருக்கும். வால்மார்ட் போன்ற பெரிய கடைகளில் பொருட்களின் விவரங்களைப் பற்றி சொல்ல நெறய பேர் இல்லாம இருக்கலாம், ஆனா அக்கடைகளின் வெப்சைட்களில் எல்லா விவரங்களும் கிடைக்கும். ஒரு பொருள் உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அக்கடையின் கிளையில் இருக்கா இல்லயான்னு பாக்கலாம். கடைகளில் ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் Price Check
உபகரணங்களில் வாங்கும் பொருளின் விலையை அறியலாம். வாங்கிய பொருளை 30 நாட்களுக்குள் (பிடிக்கலைன்னா) திரும்பக் கொடுத்து பணம் பெறலாம். நீங்க மற்றொருவருக்கு வழங்கும் அன்பளிப்புகளுக்கு Gift Receipt கொடுப்பாங்க. அதுல விலை குறிப்பிடப் பட்டிருக்காது. அன்பளிப்பை வாங்கியவருக்கு அப்பொருள் பிடிக்காமல் போனாலோ, அப்பொருள் வேலை செய்யாமல் போனாலோ அல்லது ஒரே மாதிரி 2-3 பொருள் அன்பளிப்பா வந்துவிட்டாலோ (அஜந்தா வால்கிளாக் நியாபகம் வருதா?) அவர் Gift Receipt ஐ எடுத்துச் சென்று வேறு பொருள் வாங்கிக் கொண்டு வரலாம்.

6. Snow : அமெரிக்காவில் இருக்கும் நெறய இந்தியர்களுக்குப் பிடிக்காத விசயம், ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம். பாஸ்டனில் டிசம்பர் தொடங்கி மார்ச் மாசம் வரை பனிப் பொழிவு இருக்கும். வாரம் ஒருமுறை இருக்கும் பனிப்பொழிவு ஓரிரு முறை Snow Storm ஆக அடித்துத் தள்ளும். அப்பொழுதெல்லாம் ஊரே வெள்ளையா பாக்க ரொம்ப அழகா இருக்கும். காரின் மீது இருக்க்கும் Snow வை சுத்தப் படுத்தும் பணி தவிர Snow Season ல எனக்கு எல்லாமே பிடிக்கும்.

7. NO Sir Culture : நான் கேள்விப்பட்ட ஒரு விவரம் : வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியை அங்கு சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளி பாக்கும் போது கூழைக் கும்பிடெல்லாம் போடாமல் சொல்வது : Good Morning Mr. President - அவ்வளவுதான் அவ்வளவேதான். இந்தியாவில் இருந்து இங்கு வந்த போது எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. என் டீமில் உள்ளவர்களை நான் ஒருபோதும் என்னை Sir என்று அழைக்க விட்டதில்லை எனவே எனக்கு இது பெரிய மாற்றமாக இருக்கவில்லை, நான் யாரையும் Sir போட்டு அழைக்க வேண்டாமென்று ஆகிய போது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் எவரையும் Hi Peter (அ) Hi Ramesh என்று பெயரிட்டுத்தான் அழைக்கணும்,யாரும் இங்கு சார் இல்லை.
இதுல ஒண்ணு கேட்டா இன்னும் ஆச்சர்யப் படுவீர்கள் : என்னை இங்கு இதுவரை Sir போட்டு விளித்தவர்கள் யார் தெரியுமா ? என்னை சாலையில் பிடித்த காவலர்கள் மட்டுமே.

8. 911 போன் : போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி, Domestic violence இன்ன பிற எல்லாத்துக்கும் அமெரிக்காவில் ஒரே நம்பர் 911. ஆபத்துக் காலங்களில் இந்த எண்ணுக்கு போன் பண்ணதும் சில நிமிடங்களில் நமக்குத் தேவையான உதவி வந்து சேரும். மிகச் சிறப்பாக செயல்படும் இச்சேவை ஒரு இலவச ஆபத்பாந்தவன். நான் இங்கு வந்த புதிதில் ஒரு முறை அலுவலகத்தில் இருக்கும் Fire Alarm அழுத்தி விட்டேன். உடன் வேலை செய்யும் நண்பரிடம் சொல்ல அவர் உடனே 911 க்கு போன் பண்ணினார். நான் தவறாக இழுத்து 2-3 நிமிடங்கள்தான் ஆகியிருக்கும் அதுக்குள் 2 தீயணைப்பு வண்டிகள் நிலையத்தை விட்டு கிளம்பி விட்டதாகவும் அடுத்த சில நிமிடங்களில் எங்க அலுவலகத்தில்
இருப்பாங்கன்னும் அடுத்த முனையில் இருந்த பெண்மணி சொன்னார், அவ்வளவு வேகம்.

9. பெண்ணுரிமை : நான் கண்ட வரையில் ஆணுக்குப் பெண் சமம் என்பது அமெரிக்காவில் முழுமையாக நடைமுறையில் இருக்கு. இன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கு
அளவுக்கு அதிகமாகவே சுதந்திரம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக இருக்கிறார்கள். சொல்லப் போனால்
அமெரிக்காவில் எந்தப் பெண்ணும் நானும் ஆணுக்குச் சமம் எனக்கும் உரிமை இருக்குன்னு சொல்வது கூட கிடையாது, அவர்கள் தங்களை கொஞ்சம் கூட ஆண்களுக்குக் குறைவாகக்
கருதுவதில்லை.

10. நகரம் / கிராமம் : அமெரிக்காவின் கட்டமைப்பில் இருக்கும் இன்னொரு முக்கிய விசயம் - நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் கட்டமைப்பில் அதிக வித்தியாசம் இல்லை.
பாஸ்டன் நகரில் இருக்கும் அதே மாதிரியான நல்ல குடிநீர், உணவு, சாலை வசதிகள், மருத்துவ, பள்ளி வசதிகள், மின்சாரம், இணையம் எல்லா வசதிகளும் நாட்டின் கடை கோடியில் இருக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். இந்தியாவில் இன்று இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை நகரங்களில் இருக்கும் வசதிகள் கிராமப் புறங்களில் இல்லை.இது மாறினால் நகரங்களில் பெருகும் ஜனத்தொகை பெருக்கப் பிரச்சனையை பெருமளவு தீர்க்கலாம்.

ஏற்கெனவே இடுகை ரொம்ப பெரிசா போயிடுச்சு, எனவே பிடிக்காத பத்து நாளைக்குச் சொல்றேன்.

51 comments:

KANA VARO said...

அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுறீங்க.. சூப்பரா இருக்கு...

Chitra said...

பிடித்த பத்தும் முத்துக்கள். பிடிக்காத பத்து காண ஆவலாய் இருக்கிறோம்.

Porkodi (பொற்கொடி) said...

ஹிஹி இதுக்கு தானா அம்புட்டு பிஸி.. :))) வாழ்த்துக்கள் தல!

அமுதா கிருஷ்ணா said...

நிறைய ஆங்கில படங்களில் 911-ன் அருமையினை பார்த்து இருக்கிறேன். அனைத்து தகவல்களும் நன்றாக இருக்கின்றன.

Porkodi (பொற்கொடி) said...

customer is king நான் சொல்ல வந்தேன், ஒண்ணு விடாம எல்லாத்தையும் சொல்லிட்டீங்க போல.. ட்ராவல் போகும் போது ரெஸ்ட் ஏரியா, செயின் ஸ்டோர்ஸ், முடிஞ்ச அளவுக்கு நேரம் தவறாமை/மத்தவங்க நேரத்தை மதிக்கறது, எத்தனை பில்டிங் கட்டினாலும் காடுகள் வயதான மரங்கள் இருக்கற ஏரியாக்களை பாதுகாப்பது.. ஹும்ம்ம்ம்.

ராம்ஜி_யாஹூ said...

சித்ராவின் கருத்தை வழி மொழிகிறேன்.

எனக்கும் அமெரிக்காவின் அலுவலகங்களில் காசோலை இல்லது இனைய பணப் பட்டுவாடா (எட்டு வருடங்கள் முன்பு) பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி.

paperless/ pen less offices are amazing.

ராம்ஜி_யாஹூ said...

நம் ஊரில் இன்னமும் விடுப்பு கடிதத்தை பாக்ஸ் FAX மூலம் அனுப்பும் நடைமுறை உள்ளது.
இன்றைய அமெரிக்க நர்சரி குழந்தைகளிடம் பாக்ஸ் என்றால் என்ன என்பார்கள்.

blogpaandi said...

பயனுள்ள பதிவு. நன்று.

தேவன் மாயம் said...

தொடருங்கள்! நல்ல அலசல்!

தமிழ் அனானி said...

sollave illaiye..... :) :)

vaazthukkal... Sriram. :) :)

தக்குடு said...

ரெண்டு கையையும் விட்டுட்டு கார் ஓட்னீங்களா அண்ணாச்சி! அதுக்குதான் போலீஸ் புடுச்சுதா??..:) அஜந்தா வால்க்ளாக்கை மறக்க முடியுமா??..:))

பத்மநாபன் said...

ஸ்டேட்ஸ் , ஸ்டேட்ஸ் என்று மக்கள் பறப்பதற்கு காரணம் புரிந்தது ... நம்ம நாடும் இப்படி மாறுவதற்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது . அரசியலும் அரசியல்வாதிகளும் தான் தடையாக இருக்கிறார்கள் ....

Unknown said...

பிடிக்காத பத்து வேகமாக போடுங்க....உங்களுக்கு பிடித்தது உண்மை..

ஒவ்வாக்காசு said...

அருமை... வழக்கம் போலவே...

//பிடிக்காத பத்து நாளைக்குச் சொல்றேன்//

உங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு... :-))

Cheers,
Ovvaakkaasu

RVS said...

தக்குடுக்கு ஊர்ல சைக்கிள் ஓட்டற ஞாபகம் ;-) (ரெண்டு கைய உட்டுட்டு.. )
பிடித்த பத்து சூப்பர். பெண்ணுரிமை, ஆணுக்கு பெண் நிகர் என்று சொல்லாமல் அவர்களே நடைமுறையில் எடுத்துக்கொண்டது பற்றி சொன்னது சூப்பர். ஸ்டேட்ஸ் பல இடங்களில்/துறைகளில் மத்யமர்களுக்கு நல்ல ஸ்டேடஸ் அளித்திருக்கிறது என்று தெரிகிறது.
நல்ல பகிர்வு. ;-)

ரிஷபன்Meena said...

கிப்ட் ரெசிப்ட் புதுசு. பெண்ணுரிமை தவிர மத்த எல்லாமும் எல்லா வளர்ந்த நாடுகளுக்கும் பொருந்தும்.

sriram said...

நண்பர் விஜய பாஸ்கரின் இமெயில் பின்னூட்டம்

வணக்கம்..இந்த நாட்டில் இருக்கும் ஒழுங்கு முறை எனக்கு ரொம்பப்
பிடிக்கும். போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதாகட்டும், பாதசாரிகளுக்கு
வழி விடுவதாகட்டும் எங்கு சென்றாலும் வரிசையை கடை பிடிப்பதாகட்டும்,
அமெரிக்காவில் இருக்கும் ஒழுங்கு அனைவரும் பின்பற்ற வேண்டியது...


கொஞ்ஞம் சத்தமா சொல்லுங்க...என்னா இதெல்லாம் இங்கு சுத்தமா
கிடையாது..அல்லது....அலட்ச்சியம்...குழந்தைகளுக்கு மதத்தை பபோதிக்கிற
அளவுக்கு இங்கு பேசிக்கா எது நல்லது...பொது இடத்தில் எப்படி
பழகனும்..நாகரிகம் என்பது என்ன என்பனவெல்லாம் சொல்லிக்கொடுப்பதே
இல்லை...படிக்கனும்...வேலைக்கு போகனும்...அவ்வளவுத்தான்...இதுதான் இங்கு
நாகரிகமாக கருதப்படுகிறது.தனி மனிதனை/சக மனிதனை மதிக்கும் கல்ச்சர்
கிடையவே கிடையாது...என்னா இங்கு பிறக்கும்போதே நாம் இந்த
ஜாதி...இவர்கலெல்லாம் இந்த
சாதி...தீண்டப்படாது...மரியாதைக்கொடுக்கப்படாது என்றுத்தானே
போதிகிறோம்..எவ்வளவுத்தான் போதித்தாலும், படித்து ஒரு சமுகத்தில்
அந்தஸ்த்துள்ள மனைதனாக வழம் வரும்போதாவது சிந்திக்கிறோமா...கிடையவே
கிடையாது..செம்மரி கூட்டம்தான்...வாழ்க வள‌முடன்.விஜய்.

sriram said...

நன்றி கனா வரோ

நன்றி சித்ரா

கேடியக்கா, பின்ன இருக்காதா? ஏழு இடுகைகள் எழுத எனக்கு சாதாரணமா 3-4 மாசம் ஆகும்.ஒரே வாரத்தில் ஏழுன்னா சும்மாவா?

நன்றி அமுதா கிருஷ்ணா

நன்றி கேடியக்கா, பிடித்த விசயங்கள் 15 கிட்ட இருந்தன, அதிலேருந்து 10 தெரிவு செஞ்சு எழுதினேன்

நன்றி ராம்ஜி. Check less transactions are good but I have my reservation about paperless and pen less office. என் கையெழுத்து சுமாராக
இருக்கும் என்பதாலோ என்னவோ தெரியல, எனக்கு அழகான கையெழுத்தின் மேல் எப்போதும் ஒரு மோகம். எழுதுவதே கொறஞ்சு போச்சு இதில அழகான கையெழுத்தை எங்கே தேட?

நன்றி ப்ளாக் பாண்டி..

நன்றி தேவன் மாயம்

நன்றி தமிழ் அனானி. இது என்ன பெரிசா எழுதிக் கிழிச்சதுக்கு அவார்டா? எல்லாரிடம் பெருமையாக சொல்லிக் கொள்ள. என்னைப் பொருத்தவரை தமிழ் மணம் என்னையும் ஒரு
பதிவரா மதிச்சு அறிமுகம் செய்து வைத்ததாகவே கருதுகிறேன்.

நன்றி தக்குடு. 30 மைல் வேகம் செல்ல வேண்டிய சாலையில் 50 மைல் வேகத்தில் சென்று டிக்கெட் வாங்கினேன்.

சரியாச் சொன்னீங்க பத்மனாபன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நன்றி நந்தா, பிடிக்காத பத்து இன்னிக்கு ராத்திரி, ஒரு ரகசியம் சொல்றேன் - ஏழு பதிவு எப்படி எழுதுறதுன்னு தெரியாமத்தான் இதை ரெண்டா ஒடச்சேன்.

நன்றி ஒவ்வாக்காசு

நன்றி RVS

நன்றி ரிஷபன் மீனா

நன்றி விஜய பாஸ்கர்.

ILA (a) இளா said...

என்னடா ஆச்சர்யமா இருக்கு, இன்னுமா உங்களை யாரும் திட்டலை? “அமெரிக்க அடிவருடி, முதலாளித்துவ ஜிங்ஜாங், இந்திய பேராண்மையை கொளுத்த வந்த துரோகியே..” இப்படி.

sriram said...

இன்னும் யாரும் அப்படியெல்லாம் சொல்லலை இளா. பத்த வச்சிட்டீங்க இல்ல, இனிமே வரும்னு நினைக்கிறேன்.

பட்டமெல்லாம் உங்கள மாதிரி பிரபல பதிவர்களுக்குத்தானே கொடுக்குறது வழக்கம், என்னய மாதிரி காமடி பீஸுக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்களே?

வடுவூர் குமார் said...

NO Sir Culture
இங்கு எனது அலுவலகத்தில் சொல்லி சொல்லி அலுத்துப்போகிறது, எப்ப திருந்துவாங்க என்று தெரியவில்லை.இந்த நோய்க்கு என்னை தாக்கும் எண்ணம் கூடிய சீக்கிரம் வரும் போல் இருக்கு.

sriram said...

நன்றி வடுவூர் குமார்.
இந்நோய் உங்களைத் தாக்காம பாத்துக்கோங்க

vettiblogger said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். விதிமுறைகளைக் கடைப்பிடித்தல் பற்றி ஒன்று கூற ஆசைப்படுகிறேன். It is mostly because of the enforcement. காலப்போக்கில் அனைவருக்கும் பழகிவிடுகிறது. கார் ஓட்டும் போது ஒரு சிறு தவறு செய்தாலும், மாட்டுவதற்கு தான் வாய்ப்புகள் அதிகம். அவ்வளவு போலீஸ்காரர்கள் அந்நாட்டில்.
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் எங்கள் பகுதியில் Brush Fire. மிகப்பெரிய ட்ராபிக் ஜாம். அன்று அனைவரும் ஹைதராபாதில் ஓட்டுவது போல் கார் ஓட்டினார்கள். ஏனென்றால் போலீஸ் பிடிக்க மாட்டார்கள் என்று தெரியும்.
நமது ஊரிலும் "Enforcement" அதிகப்படுத்தி, லஞ்சத்தை ஒழித்தால் ஒழுங்கு முறையை கொண்டு வர முடியும் என்பது எனது கருத்து. சரி, சரி..ஆபீஸில் பகல் கனவா என்று கேட்காதீர்கள்.

ILA (a) இளா said...

//"Enforcement" அதிகப்படுத்தி//
கையூட்டை அதிகப்படுத்தின்னு ஆகிருதுங்க, அப்படின்னா மக்கள் திருந்துவாங்க.... போலீஸ் மாம்ஸ்???

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Very systematic - 200% right. At the same time would like to mention a honest opinion that we (Indians) will follow that systematic system here, when we go back home எல்லாம் காத்துல பறந்து போகுதே பாஸ்... நெறைய பேரு அப்படி செய்யறத நானே பாத்தேன்... for example throwing garbage anywhere etc... very sad to witness that

Roads - idhu super...

//ஆனால் மிடில் க்ளாஸ் மக்கள் அமெரிக்காவில் வாழ லஞ்சம்
கொடுக்கத் தேவையில்லை//
well said...

Customer is king... - I can't agree more... back home there will be more customer service reps than customers when you enter a store but no service provided unless a supervisor is watching them (experienced very recently)

//Snow : அமெரிக்காவில் இருக்கும் நெறய இந்தியர்களுக்குப் பிடிக்காத விசயம், ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம்//
ஏன் இந்த கொலை வெறி...snow பிடிக்குமா? தெய்வம் தான்... ofcourse it's like heaven if you're watching from sitting on the other side of a french window... but when you are supposed to walk or drive in that crazy slousy (!!!) snow, I see hell there... (just my opinion..ha ha)

No sir culture - ha ha...it took me a while to accustom to that honestly...now I guess its gonna be hard to change other way

911 number - I heard in India also they have a similar service now...

//அமெரிக்காவில் எந்தப் பெண்ணும் நானும் ஆணுக்குச் சமம் எனக்கும் உரிமை இருக்குன்னு சொல்வது கூட கிடையாது//
நெஜமாவா சொல்றீங்க? தங்கமணி கூடவா சொல்றதில்ல... ஹா ஹா... நான் வீட்டுல அடிக்கடி இதை ஞாபகப்படுத்த வேண்டி இருக்கே... ஹா ஹா...

நகரம் / கிராமம் - இன்னும் சொல்லப்போனா கிராமம் கொஞ்சம் நல்லாவே இருக்குங்க... well planned wide roads in suburbs than in downtowns... right?

//பிடிக்காத பத்து நாளைக்குச் சொல்றேன்//
பிடிக்காதது பத்து தானா.? என்னை விட்டா பத்து பக்க லிஸ்ட் குடுப்பேன்... ஹா ஹா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...
This comment has been removed by a blog administrator.
முச்சந்தி said...

//1. Very Systematic : இந்த நாட்டில் இருக்கும் ஒழுங்கு முறை எனக்கு ரொம்பப் பிடிக்கும். போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதாகட்டும், பாதசாரிகளுக்கு வழி விடுவதாகட்டும் எங்கு சென்றாலும் வரிசையை கடை பிடிப்பதாகட்டும், அமெரிக்காவில் இருக்கும் ஒழுங்கு அனைவரும் பின்பற்ற வேண்டியது//

இந்த ஒழுங்கு முறை குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே கல்வி மூலம் சொல்லி கொடுக்க படுகிறது என்ன எனுகிரேன்.பெரும்பாலும் இப் பழக்கம் வளர்ந்த பின்னும் அனைவராலும் பின்பற்ற படுகிறது


//4. லஞ்சம் இல்லை : அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக லஞ்சம் இல்லை என நான் Blanket Statement கூறவில்லை. ஆனால் கண்டிப்பாக என்னைப் போன்ற Common மண் வாழ லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை எனக் கூற முடியும். //

பல இனங்கள் சேர்ந்து வாழும் பெரு நகரங்களில் லஞ்சம் கொஞ்சம் , கொஞ்சம் இருக்கிறது , சிறு நகரங்களில் இல்லை என்னலாம் .

//5. Customer is King : . வாங்கிய பொருளை 30 நாட்களுக்குள் (பிடிக்கலைன்னா) திரும்பக் கொடுத்து பணம் பெறலாம்.//

பொருளாதார சந்தை உள்ள நாட்டில் வாடிக்கையாளர்கள் ஆணைவரும் கிங் தான்.

இச் சலுகைகளை missuse செய்கிறவர்களும் பல உண்டு , உதாரணமக சுற்றுலா செல்லும் இரு நாட்களுக்கு மட்டும் புது கேமரா வாங்கி அதனை உபயோகித்து விட்டு திரும்ப கொடுப்பது . இப்போது பல கடைகளில் (return policy) மாற்றி விட்டார்கள் பணம் தருவதுற்கு பதில் (In-Store) கார்டு தருகிறார்கள் , இதன் மூலம் நீங்கள் யாதேனும் பொருளை வாங்கி தான் ஆக வேண்டும் அதுவும் அவர்களின் கடைகளில் மட்டும்(chain stores like sears, big lots, jc penny etc,, :).

//6. Snow : அமெரிக்காவில் இருக்கும் நெறய இந்தியர்களுக்குப் பிடிக்காத விசயம், //

இந்தியர்களு மட்டும் இன்றி பொதுவாக வெப்ப பகுதில் இருந்து குளிர் பகுதிக்கு வருபவர்களுக்கு பிடிபதில்லை

Arizona- vil இருந்து Boston வருபவர்களிடம் கேட்டு பாருங்களேன் :).

//8. 911 போன் : போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி, Domestic violence இன்ன பிற எல்லாத்துக்கும் அமெரிக்காவில் ஒரே நம்பர் 911. ஆபத்துக் காலங்களில் இந்த எண்ணுக்கு போன் பண்ணதும் சில நிமிடங்களில் நமக்குத் தேவையான உதவி வந்து சேரும்.//

உண்மைதான் இப்போது இருக்கும் இந்த பொருளாதார நிலை பாட்டில் பல சிறு நகரங்களில் இந்த அமைப்புகளில் ஆள் கட்(lay off) நடந்து கொண்டிருகிறது என படித்த நாபகம்
.
//10. நகரம் / கிராமம் : அமெரிக்காவின் கட்டமைப்பில் இருக்கும் இன்னொரு முக்கிய விசயம் - நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் கட்டமைப்பில் அதிக வித்தியாசம் இல்லை.
பாஸ்டன் நகரில் இருக்கும் அதே மாதிரியான நல்ல குடிநீர், உணவு, சாலை வசதிகள், மருத்துவ, பள்ளி வசதிகள், மின்சாரம், இணையம் எல்லா வசதிகளும் நாட்டின் கடை கோடியில் இருக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். .//


அப்படி எல்லா இடங்களிலும் எல்லா வசதியும் உள்ளது என சொல்ல முடியாது , ஒரு முறை நிஜ அமெரிக்க கிராம பக்கம் போய் பார்த்து வரவும் . (visit villages/ small towns in Lousiana, Missisipi, Alabama, Montona , North/Soth Dakota , Ohio, Arizona etc,...)

முச்சந்தி said...
This comment has been removed by the author.
முச்சந்தி said...
This comment has been removed by the author.
முச்சந்தி said...
This comment has been removed by the author.
முச்சந்தி said...
This comment has been removed by a blog administrator.
முச்சந்தி said...
This comment has been removed by the author.
முச்சந்தி said...
This comment has been removed by the author.
முச்சந்தி said...
This comment has been removed by the author.
முச்சந்தி said...
This comment has been removed by the author.
முச்சந்தி said...
This comment has been removed by the author.
முச்சந்தி said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

ஜார்ஜ் வாஷிடங்டன் முதல் ஓபாமா முதல் பலரும் அதிபராக வந்து போயிருக்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில் அதிபர் என்பது ஒரு பதவி மட்டுமே. ஆனால் அமெரிக்காவின் கொள்கைகள், வெளியுறவு நோக்கங்கள் ஒரே மாதிரி தான்.

சுருக்கமாக சொல்லப்போனால் பல நாடுகளை பழிகொடுத்து தன் மக்களை குறிப்பாக நீங்கள் சொன்ன பொதுமக்களை இதஞ்சூட்டில் வைத்துக் கொள்ளும் இதமான நாடு தான்.

ஆனால் இந்தியா மட்டுமல்ல மற்ற அத்தனை வளர்ந்து கொண்டுருக்கும் நாடுகளுக்கும் அமெரிக்கா போலவே மற்றொரு புதிய தத்துவம் உண்டு.

ஆட்சிக்கு வந்து அமர்பவர்கள் தங்களை தங்கள் குடும்பங்களை வளமாக வைத்துக் கொண்டு அமெரிக்காவிற்கு அடிபணிந்து மொத்த நாட்டு மக்களையையும் பலிகிடாவாக்குவது.

குறிப்பா இந்தியா மன்மோகன் சிங் அந்த விதத்தில் முதன்மையாக முக்கிய இடத்தில் இருப்பது மொத்தத்திலும் சிறப்பு.

தமிழ் தட்டெழுத்து முறையான பயிற்சி உங்களிடம் இருந்து இருந்தால் நீங்க எத்தனை விசயங்களை இது போல உருப்படியான நல்ல தகவல்களை எழுத முடியும் என்று யோசித்துப் பார்க்கின்றேன்.

sriram said...

நன்றி வெட்டிப்ளாக்கர். இது உங்க புனைப் பெயரா இல்ல என்னைக் குறிப்பதா?

இளா, Enforcement எப்படி கையூட்டாகும்?

நன்றி அப்பாவி தங்கமணி, எனக்கு நெஜமாவே SNOW ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டுப் பெண்களுக்கு சம உரிமை கேட்டுப் போராடுவதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அவங்க பாத்து
கொடுக்கறதுதான் எங்களுக்கான உரிமை.

நன்றி முச்சந்தி, நான் வசதின்னு சொன்னது கட்டமைப்பைப் பத்தி, ஒரு நகரத்தில் கிடைக்கும் தடையில்லா மின்சாரம், சுகாதாரமான குடிநீர், சாலை வசதி அனைத்தும் கடை கோடி
கிராமத்திலும் கிடைக்குதுன்னு நெனைக்கிறேன்


நன்றி ஜோதிஜி,
//தமிழ் தட்டெழுத்து முறையான பயிற்சி உங்களிடம் இருந்து இருந்தால் நீங்க எத்தனை விசயங்களை இது போல உருப்படியான நல்ல தகவல்களை எழுத முடியும் என்று யோசித்துப்
பார்க்கின்றேன்// இது புரியல, விளக்க முடியுமா?

எண்ணங்கள் 13189034291840215795 said...

எல்லாமே நல்ல விஷயங்கள் தான்.. ஸ்னோ அனுபவிக்காத எமக்கும் ஆசைதான்...


உங்க அறிமுகத்துல வெளிப்படையா College Drop out.னு சொன்னது நல்லா இருந்தது..

ஜோதிஜி said...

நன்றி ராம்.

நான் பார்த்தவரைக்கும் நிறைய பேர்கள் நல்ல விசயங்களை எழுத ஆர்வமாக இருக்கிறாங்க. நீங்களும் அப்படித்தான் என்று நினைக்கின்றேன்.

ஆனால் தமிழ் தட்டெழுத்து என்பது சற்று கடினம் போல இருக்கும் போல. நான் பழகிய கேட்ட அத்தனை வலைபதிவில் எழுதும் நண்பர்கள் அத்தனை பேர்களும் மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் அடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

எனக்கு தமிழ் தட்டெழுத்து மிக நல்ல முறையில் பயிற்சி இருப்பதால் வரம் போல் உள்ளது.

ஒரு வேளை உங்களுக்கும் இது போன்ற பயிற்சி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமோ என்று யோசித்தேன்.

நீங்கள் தான் ஒரு இடுகை எழுதுவதற்கு இத்தனை நாட்கள் தேவைப்படுகிறது என்று சொன்னீர்களே?

புலம் பெயர்ந்தவர்களின் அனுபவங்கள் பலரும் எழுதாமல் அல்லது எனக்குத் தெரிந்த பலரும் ஆங்கிலம் வழியே மின்னஞ்சலில் கருத்து தெரிவித்துக் கொண்டுருப்பதும் இது தானே காரணமாக இருக்கமுடியும்?

என் எண்ணங்கள் சரிதானா?

sriram said...

ஜோதிஜி
ஓ இதுதானா நீங்க சொல்ல வந்தது?
எனக்கு ஆங்கில தட்டெழுத்தில் நல்ல பயிற்சி உண்டு, தமிழில் இல்லை. NHM கொண்டு தழிழில் தட்டச்சுவதில் எனக்கு பிரச்சனை ஏதுமில்லை.

அட நீங்க வேற, பதிவு எழுத நேரமாவதற்கு காரணங்கள் சரக்கின்மை மற்றும் சோம்பேறித்தனமே..

ஆங்கிலத்தில் மின்னஞ்சல் குறித்தான உங்க கருத்து சரியே

sriram said...

//பயணமும் எண்ணங்களும் said...
எல்லாமே நல்ல விஷயங்கள் தான்.. ஸ்னோ அனுபவிக்காத எமக்கும் ஆசைதான்...
உங்க அறிமுகத்துல வெளிப்படையா College Drop out.னு சொன்னது நல்லா இருந்தது..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி.
ஸ்நோ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, இமய மலையை காஷ்மீர், ஹிமாச்சல், உத்தராஞ்சல் என்று பல மாநிலங்களிலிருந்து பல கோணங்களில் கண்டும் போதவில்லை.

College Drop out : உண்மையை சொல்வதில் தயக்கமென்ன. அதே சமயத்தில் பொய்யான அவையடக்கமும் எனக்குக் கிடையாது.

bandhu said...

மேலும் எனக்கு பிடித்தது ..
1. அடிப்படை வசதிகள் எளிதில் கிடைப்பது. இங்கு வீட்டிற்கு தேவையான மின்சாரம், தண்ணீர், Garbage Disposal, தொலை பேசி, காஸ் இணைப்புகள் அனைத்தும் சில மணி நேரங்களில் கிடைத்துவிடும் (யாருடைய சிபாரிசும் இல்லாமல்)
2. இயற்கை. Pristine Nature.
3. மிக சுத்தமாக பராமரிக்கப்படும் தேசிய பூங்காக்கள்.
4. அற்புதமான பொது நூலகங்கள்.
5. நெடுஞ்சாலைகளில் உள்ள ரெஸ்ட் ஏரியாக்கள்
6. நேஷனல் பப்ளிக் ரேடியோ எனப்படும் NPR மற்றும் அதன் துணை நிறுவனங்கள். இது போல் இந்தியாவில் ஒன்று இல்லையே என்று நிறைய வருந்தியிருக்கிறேன். car talk கேட்டிருக்கிறீர்களா?
7. அதிகம் நடை முறை சிக்கல்கள் இல்லாத விதி முறைகள்.

Jaleela Kamal said...

ரொம்ப அருமை, இந்திய அமெரிக்கர்கள் அங்கு வாழும் வாழ்கை பற்றி தெரியாத விஷியங்கள் தெரிந்து கொண்டேன்.

பொருள் பிடிகக் வில்லை என்றால் 30 நாளில் திருப்பி கொடுக்கலாம் பரவாயில்லையே.
இங்கு துபாயில் 7 நாட்கள் வரை டைம் இருக்கு

சில அரபி மற்றும் அமெரிக்கன் பள்ளிகளில் ,
டீச்ச்ர், மிஸ் எல்லாம் கிடையாது

miss.basheera என்று பெயரிட்டு தான் அழைக்கிறார்கள்,யாரையும் சார் என்று கூட சொல்வதில்லையாம். mr.john இப்படி தான் அழைக்கிறார்களாம்.

பிடித்த பத்தும் மிக அருமை

பிரதீபா said...

//நாலு முறை Traffic police இடம் பிடிபட்டு ஒரு முறை டிக்கெட் வாங்கி, கோர்ட்டுக்குப் போய் அபராத்தை பாதியாக குறைத்திருக்கிறேன்//- அடேயப்பா.. சண்டை எல்லாம் வேற போடுவீங்களா :)

//30 நாட்களுக்குள் (பிடிக்கலைன்னா) திரும்பக் கொடுத்து பணம் பெறலாம்// - அதுக்கும் மேலயும் எடுத்துக்கலாம், பில்லே இல்லாமையும் திருப்பிக் குடுக்கலாம்; வால்மார்டோட price tag இருந்தாப் போதும். gift certificate தருவாங்க. இப்பவும் அப்படி இருக்கான்னு தெரியலைங்க.

//NO Sir Culture //- :)) எங்கப்பா அம்மா என்னைத் திட்டுவாங்க, எவ்வளவு பெரிய ஆளு, பேரு சொல்லிக் கூப்பிடறியேன்னு.

//Snow : அமெரிக்காவில் இருக்கும் நெறய இந்தியர்களுக்குப் பிடிக்காத விசயம், ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம். பாஸ்டனில் டிசம்பர் தொடங்கி மார்ச் மாசம் வரை பனிப் பொழிவு இருக்கும். வாரம் ஒருமுறை இருக்கும் பனிப்பொழிவு ஓரிரு முறை Snow Storm ஆக அடித்துத் தள்ளும். அப்பொழுதெல்லாம் ஊரே வெள்ளையா பாக்க ரொம்ப அழகா இருக்கு// -- ஆமா, ஆமாங்க.. அதுவும் அரிசோனா மாதிரி எடத்துல இருந்து, அந்த வெள்ளைப் பனி அழகுக்காகவே மும்முறை பாஸ்டன் வந்ததுண்டு.

//911 போன்// - ஒரு தடவை இந்தியாக்கு போன் பண்றேன்னு சொல்லிட்டு அதிமேதாவி மாதிரி டைரக்டா 91 அப்புறம் ஒரு 1 சேத்து அடிச்சதுல அடுத்த அஞ்சாவது நிமிஷம் ஆபீசுக்கு போலீஸ் வந்துடுச்சுங்க .. பேந்த பேந்த முழிச்சேன் நல்லா.. :)

//பெண்ணுரிமை// - நானும் பாத்தேன், பத்து பேரு smoking area ல நின்னு தம் அடிச்சுட்டு இருந்தா அதுல ஏழு பொண்ணுங்க !! நல்ல பெண்ணுரிமை தான் போங்க. :)

நீங்க சொன்ன இந்தப் பத்து கூட நாலஞ்சு விஷயங்கள் நானும் சொல்ல ஆசைப்படுறேன்.

ஸ்கூல் பஸ் நின்னா பக்கத்துல இருக்கற எல்லா வண்டியும் நிக்குமே, அது ; லைசென்ஸ் எடுக்க நம்ம ஊரு மாதிரி இல்லாம தர்மப்படி ஓட்டிக் காமிச்சா தான் தருவாங்களே, அது; வாரக் கடைசி ஆய்ட்டா நிறைய இடங்கள் பொழுது போக்க இருக்குமே அது; சந்தோஷத்தை பிறருக்கும் ஒட்ட வைத்து அவர்களையும் அந்த நல்ல நிமிஷங்களை உணரச் செய்யும் பல அமெரிக்கர்கள் ; ஆம்புலன்ஸ் வந்தால் கண்டிப்பாக ஒதுங்கி நிற்கும் ஒழுக்கம்; முக்கியமாக நம் ஊரில் காண முடியாத மிக மிக அழகான fall சீசன்.

ஆனா இது அத்தனையும் விட சந்தோஷமானது நம்ம ஊருக்கு போற பிளைட் விமான நிலையத்தில் தரை இறங்குமே , அது தாங்க :)

பிரதீபா said...

//நாலு முறை Traffic police இடம் பிடிபட்டு ஒரு முறை டிக்கெட் வாங்கி, கோர்ட்டுக்குப் போய் அபராத்தை பாதியாக குறைத்திருக்கிறேன்//- அடேயப்பா.. சண்டை எல்லாம் வேற போடுவீங்களா :)

//30 நாட்களுக்குள் (பிடிக்கலைன்னா) திரும்பக் கொடுத்து பணம் பெறலாம்// - அதுக்கும் மேலயும் எடுத்துக்கலாம், பில்லே இல்லாமையும் திருப்பிக் குடுக்கலாம்; வால்மார்டோட price tag இருந்தாப் போதும். gift certificate தருவாங்க. இப்பவும் அப்படி இருக்கான்னு தெரியலைங்க.

//NO Sir Culture //- :)) எங்கப்பா அம்மா என்னைத் திட்டுவாங்க, எவ்வளவு பெரிய ஆளு, பேரு சொல்லிக் கூப்பிடறியேன்னு.

//Snow : அமெரிக்காவில் இருக்கும் நெறய இந்தியர்களுக்குப் பிடிக்காத விசயம், ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம். பாஸ்டனில் டிசம்பர் தொடங்கி மார்ச் மாசம் வரை பனிப் பொழிவு இருக்கும். வாரம் ஒருமுறை இருக்கும் பனிப்பொழிவு ஓரிரு முறை Snow Storm ஆக அடித்துத் தள்ளும். அப்பொழுதெல்லாம் ஊரே வெள்ளையா பாக்க ரொம்ப அழகா இருக்கு// -- ஆமா, ஆமாங்க.. அதுவும் அரிசோனா மாதிரி எடத்துல இருந்து, அந்த வெள்ளைப் பனி அழகுக்காகவே மும்முறை பாஸ்டன் வந்ததுண்டு.

//911 போன்// - ஒரு தடவை இந்தியாக்கு போன் பண்றேன்னு சொல்லிட்டு அதிமேதாவி மாதிரி டைரக்டா 91 அப்புறம் ஒரு 1 சேத்து அடிச்சதுல அடுத்த அஞ்சாவது நிமிஷம் ஆபீசுக்கு போலீஸ் வந்துடுச்சுங்க .. பேந்த பேந்த முழிச்சேன் நல்லா.. :)

//பெண்ணுரிமை// - நானும் பாத்தேன், பத்து பேரு smoking area ல நின்னு தம் அடிச்சுட்டு இருந்தா அதுல ஏழு பொண்ணுங்க !! நல்ல பெண்ணுரிமை தான் போங்க. :)

நீங்க சொன்ன இந்தப் பத்து கூட நாலஞ்சு விஷயங்கள் நானும் சொல்ல ஆசைப்படுறேன்.

ஸ்கூல் பஸ் நின்னா பக்கத்துல இருக்கற எல்லா வண்டியும் நிக்குமே, அது ; லைசென்ஸ் எடுக்க நம்ம ஊரு மாதிரி இல்லாம தர்மப்படி ஓட்டிக் காமிச்சா தான் தருவாங்களே, அது; வாரக் கடைசி ஆய்ட்டா நிறைய இடங்கள் பொழுது போக்க இருக்குமே அது; சந்தோஷத்தை பிறருக்கும் ஒட்ட வைத்து அவர்களையும் அந்த நல்ல நிமிஷங்களை உணரச் செய்யும் பல அமெரிக்கர்கள் ; ஆம்புலன்ஸ் வந்தால் கண்டிப்பாக ஒதுங்கி நிற்கும் ஒழுக்கம்; முக்கியமாக நம் ஊரில் காண முடியாத மிக மிக அழகான fall சீசன்.

ஆனா இது அத்தனையும் விட சந்தோஷமானது நம்ம ஊருக்கு போற பிளைட் விமான நிலையத்தில் தரை இறங்குமே , அது தாங்க :)

பிரதீபா said...

(Fall season in New Hampshire White mountain- கண் வியந்து, நெஞ்சம் நெகிழ்ந்து , வாழ்க்கையையும் நிறைக்கும் இயற்கை அது !!)

sriram said...

நன்றி பந்து, பிடிச்சது பிடிக்காதது ரெண்டுமே இன்னும் நெறய சொல்லலாம், நீங்க சொன்னவற்றில் ரேடியோ தவிர மத்த எல்லாம் எனக்கும் பிடிக்கும், ரேடியோ கேட்டதில்லை

நன்றி பிரதீபா, கோர்ட்டுக்குப் போயி சண்டையெல்லாம் போடவில்லை. கவுண்டரிடம் செந்தில் வச்சிப்பாரே அந்த மாதிரி ஒரு அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு, ஆமாம் ஐயா
வேகமாத்தான் வண்டி ஓட்டினேன், எவ்ளோ ஸ்பீடா போனேன்னு தெரியல, கான்ஸ்டபிள் சார் சொன்னார் அம்பது மைல்னு சரின்னு சொல்லிட்டேன் சார் என்று சொன்னேன், இவனை
என்ன பண்றதுன்னு தெரியாம ஓகே ஓகே நாப்பது மைல்னு போட்டு இருநூறு டாலர் ஃபைனை நூறா குறைக்கிறேன் என்ன சொல்றேன்ன்னு கேட்டார், கட்டிடறேன் எஜமான்னு சொல்லிட்டு
வந்துட்டேன்.
நீங்க சொன்ன விசயங்க எனக்கும் பிடிக்கும், ஊரில் போய் இறங்கியது வருவது சந்தோசம், நான் சொன்னது பிடிச்ச விசயங்கள் பத்து

இராஜராஜேஸ்வரி said...

உங்கள் அமெரிக்க அனுபங்கள் அமெரிக்கா வரும் போது உபயொகப்படும். என் ஆஸ்திரேலிய அனுபவங்கள் பார்த்து தங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

உங்கள் அமெரிக்க அனுபங்கள் அமெரிக்கா வரும் போது உபயொகப்படும். என் ஆஸ்திரேலிய அனுபவங்கள் பார்த்து தங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.