Monday, December 6, 2010

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க: பகுதி 7

ரொம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னர் எழுதின இத்தொடரின் சில இடுகைகள்:

தமிழ்மண நட்சத்திர வாரத்தில ஏழு இடுகைகள் எழுதணுமாமே, நேனெங்கே போறது அத்தனை இடுகைகள் வெரைட்டியா எழுத. இதில வேற கேபிள் சங்கர் மாதிரி எண்டர் கவிதைகள் எழுத மாட்டேன்னு கமிட் பண்ணிட்டேன், இல்லன்னா மண்டபத்திலயாவது வாங்கி வந்து ஒப்பேத்தலாம். ஒடனே அ ஆ தொடரை தூசி தட்டி எடுத்து அடுத்த பகுதி இதோ:

வழக்கம் போல நாம பேசுற ஆங்கிலத்தில் இருக்கும் தவறுகளை உணர்ந்து அவற்றைத் திருத்திக் கொண்டாலே ஓரளவுக்கு சரியா பேசலாம். இந்த பகுதியில் தொலைபேசியில் பேசும் போது நம்மில் பலர் வழக்கமா செய்யுற தவறுகளையும் திருத்தங்களையும் பாக்கலாம்.


தொலைபேசியில் பேசுறதுன்னு சொன்னதும் நாலு முக்கிய விசயங்கள் ஞாபகத்துக்கு வருது, அவை

1. ஒருவரை கைப்பேசியில் கூப்பிடுவதற்கு முன்னர் Land Line ல கூப்பிடணும், அதில் அவருடன் பேச முடியாத பட்சத்தில் கைப்பேசியில் கூப்பிடலாம்.

2. நீங்க ஒருவரை அவரின் கைப்பேசியில் கூப்பிடும் போது அவர் பிஸியாக இருக்கலாம், முதலில் - இன்னார் பேசறேன், இந்த விசயத்துக்காக கூப்பிட்டேன், ரெண்டு நிமிஷம் பேசலாமா என்று கேட்டு விட்டுத் தொடரவும்.

3. ஒருத்தருக்கு போன் பண்ணிட்டு “யார் பேசறதுன்னு கண்டுபிடி பாக்கலாம்” என்று எரிச்சலைக் கிளப்பாதீர்கள், குரலைக் கேட்டவுடன் கண்டுபிடிக்க நீங்க எம் ஜி யாரோ கருணாநிதியோ அல்ல.

4. வீட்ல போன் எடுக்குறதை விட அலுவலகத்தில் போன் எடுக்கும் போது அதிக கவனமா இருக்கணும். You are the face of your organization for the caller. நீங்க போன் அட்டெண்ட் செய்யுற விதத்தை வைத்துத்தான் நீங்க வேலை செய்யும் நிறுவனத்தையே அடுத்த முனையில் இருப்பவர் எடை போடுவார் எனபதை நினைவில் வைக்கவும். Official Greeting பல விதமா செய்யலாம், பல சரியான வாக்கியங்களில் இதுவும் ஒன்று, இதை சரியான tone இல் சொன்னால் போதும்

Good morning, Thank you for calling Kokran Mekran company, My name is Sriram, How can I help you today?

Telephone Etiquette சம்பந்தமா நாலு விசயங்களைத் தொடர்ந்து தொலைபேசியில் தவிர்க்க வேண்டிய ஆங்கிலத் தவறுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

This is Sriram this side என்று சொல்வதைத் தவிர்க்கலாம் My name is Sriram என்று சொல்வதே அழகா இருக்கும்

What is your good name - தவறு May I have your name? - இதுவே சரி

You will get it today itself / I will do that today itself என்று சொல்வதை விடுத்து You'll get it by the end of the day today என்று சொல்லலாம்

I will just come to your room எல்லாத்துக்கும் ஜஸ்ட் உபயோகப்படுத்துவதை விட்டு I will be with you in minute என்று சொல்வதே சரி.

Hold on மிக அதிக அளவில் தவறாக உபயோகப் படுத்தப்படும் ஒரு பதம் - இதுக்கு அர்த்தம் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்குறதைத் தொடர்ந்து செய்யுங்க என்பதே ஆகும். அடுத்த முனையில் பேசுபவரை இதைச் சொல்வது தவறு, இதுக்கு பதிலா Please be on the line or phone, I will check that for you or I will check if Mr. X is available at office என்று சொல்லலாம்.


I will just be back என்று சொல்வதை விட I will be back in just a minute or few minutes என்று சொல்லுங்க, அழகா இருக்கும்.

Revert back ரிவெர்ட்டுக்கு அடுத்து Back அவசியமில்லை Revert என்பதே போதுமானது.

Mr. X is out of station now, do you want to say something for him? என்று கூறாமல் Mr. X is not in town, he will be back on .., would you like to leave a message for him? என்று சொல்லலாம்

I am not getting you என்பதை விட I'm Sorry, I didn't understand that (or) I'm Sorry, Can you say that again என்பது அழகாக இருக்கும்.


மறுபடியும் அலுவலக போன் சம்பந்தமாக ஒரு டிப். உரையாடல் முடிந்த பின்னர் இப்படிச் சொன்னால் அழகா இருக்கும்.

Is there anything else you need from Kokran Mekran today? Thanks for calling us, have a wonderful day.

அழகா இருக்குன்னு அலங்கார வாக்கியங்களை எல்லா இடங்களிலும் சொன்னா என்ன ஆகும்னு இந்த ஜோக்கைப் படித்து புரிஞ்சிக்கோங்க:

நேர்முகத் தேர்வுக்கு வந்த பெண்ணை தெரிவு செய்த மேனேஜர், சம்பளத்தை முடிவு செய்ய எண்ணினார். அந்தப் பெண்ணிடமே எவ்வளவு சம்பளம் எதிர் பாக்கறீங்கன்னு கேட்டார்.
அந்த பெண் மாதத்துக்கு பத்தாயிரம் என்று சொன்னாள். உடனே அழகா பதில் சொல்வதாக எண்ணி மேனேஜர் சொன்னார் - “With Pleasure". அதுக்கு உடனே அந்தப் பெண் அப்படின்னா இருபதாயிரமா கொடுத்திடுங்க என்றாள். புரிஞ்சவங்க சிரிச்சிக்கோங்க..

45 comments:

பத்மநாபன் said...

அ .ஆ. பே .வாங்க அழகாக இருந்தது ... எளிமையாக இனிமையாக இருந்தது ... அப்படியே வெட்டி எடுத்து பசங்களுக்கு அனுப்பிட்டேன் ... ஆங்கிலத்தை தாழ்வு மனப்பான்மை தவிர்த்து நீங்க குறிப்பிட்ட பதங்களை பேசி பேசி பழகினாலே உட்கார்ந்துவிடும் ..

அந்த இன்டெர்வியு பொண்ணு தெளிவா இருக்காங்க ......

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

sriram said...

நன்றி பத்மநாபன்

sriram said...

வாங்க டீச்சர், வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி..

ஞாபகம் இருக்கா டீச்சர், அழகா ஆங்கிலம் தொடர் எழுத ஆரம்பிச்சதும் உங்க கிட்ட ஒப்பீனியன் கேட்டேன், ஏழு பாகம் எழுதிட்டேன் இதுவரை

Muthukumar said...

useful post...pls continue

a said...

உபயோகமான பல தகவல்கள்.....

Chitra said...

What is your good name - தவறு May I have your name? - இதுவே சரி


..... A guy from Tamilnadu asked an American, "What is your good name?"
He replied, "......as though I have a bad name??????"

ha,ha,ha,ha,ha,ha....

ராம்ஜி_யாஹூ said...

பெரும்பாலும் சிம்பிள் ப்ரெசென்ட் டெண்சே (simple present tense) பயன்படுத்த வேண்டிய இடங்களில் எல்லாம் இந்தியர்கள் ப்ரெசென்ட் continuous அதிகம் பயன் படுத்துகிறோம். (Instead of HE SAYS we use HE IS TELLING அதை தவிர்த்தாலே ஓரளவு நம் ஆங்கிலம் முன்னேறும்

நல்ல பதிவு, தொடரவும்.

Ramesh said...

நல்ல பதிவு.. தமிழ்மணம் நட்சத்திரமா வாழ்த்துக்கள்

அமுதா கிருஷ்ணா said...

oh..கோக்ரான் மேக்ரான்லியா வேலை செய்றீங்க..
நல்லாயிருக்கு ஸ்ரீராம் தொடரவும்.

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள்..

தேவன் மாயம் said...

வாழ்த்துகள் ! தொடருங்கள்!

Anonymous said...

நிறைய புது தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி

arasan said...

super sir..

vasu balaji said...

நன்றி தொடருங்கள்.:)

இனியா said...

Good one Sriram!!!

sriram said...

நன்றி முத்துகுமார்

நன்றி யோகேஷ், நேத்து கூப்பிட்டு வாழ்த்தினதுக்கு ஸ்பெசல் நன்றி

நன்றி சித்ரா.. நீங்க சொன்னதை நெனச்சி சிரிச்சேன். அதே போல, நாமெல்லாம், How are you? Good night என்று மட்டுமே சொல்லிப் பழக்கப் பட்டவர்கள்.
அமெரிக்கர்களைப் பாத்து நம்மாளுங்க How are you doing today?, Have a Good one என்றெல்லாம் செயற்கையான டோனில் சொல்வதும் சிரிப்பா இருக்கும்.

நன்றி ராம்ஜி, சரியாச் சொன்னீங்க, Telling ஆவது பொருத்துக்கலாம், எல்லாத்துக்கும் Put / Putting உபயோகிப்பது இருக்கே அதுதான் கொடுமை.

நன்றி ரமேஷ்

நன்றி நந்தா

நன்றி தேவன் மாயம்

நன்றி சதீஷ்

நன்றி அரசன். Sir வேண்டாமே? Call me Sriram.

தேங்க்ஸ்ண்ணா, ”ங்க” வேண்டாமே..

sriram said...

நன்றி இனியா

sriram said...

நன்றி அமுதா கிருஷ்ணா..

கோக்ரான் மேக்ரான் கம்பெனில நம்மாளுங்க நெறய பேர் வேலை செய்யுறாங்க, அதில் நானும் ஒருத்தன்

Jaleela Kamal said...

மிக பயனுள்ள பாடமுங்கோ. நன்றி
சித்ரா ஒரே சிரிப்பு தான் போங்கோ

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//புரிஞ்சவங்க சிரிச்சிக்கோங்க.. //
ha ha good one..

Same as using "just" for everything, people use "like" (me too)

As I noticed myself, initally this was used to pause to prepare for "how to proceed with the conversation", then develop into a manerism. Trying to avoid "like" in conversations now

Useful post... hold on (correct thaane teacher... ha ha)

sriram said...

நன்றி ஜலீலா..

நன்றி அப்பாவி தங்கமணி..

using "like" a lot : I am consciously working on this one.
I have successfully stopped using "and all that stuff" at the end of a sentence. Still using "like" in between every now and then. You hit the nail on its head on the reasons for using it.

அப்புறம், நான் டீச்சரில்லை. Trainer ஆக வேண்டுமென்பது என் நீண்ட நாள் கனவு. இந்த போஸ்டெல்லாம் அதை அடைவதற்கான பயணமாகவே கருதுகிறேன்.

ம.தி.சுதா said...

//////ஒருத்தருக்கு போன் பண்ணிட்டு “யார் பேசறதுன்னு கண்டுபிடி பாக்கலாம்” என்று எரிச்சலைக் கிளப்பாதீர்கள், குரலைக் கேட்டவுடன் கண்டுபிடிக்க நீங்க எம் ஜி யாரோ கருணாநிதியோ அல்ல./////

சரியாகச் சொன்னீர்கள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள் சகோதரா...

Unknown said...

Hullo Sriram, This is Kekke Pikke. You say I can able to speak Englishu?

:-))

மணிகண்டன் said...

Good post sriram.

sriram said...

நன்றி ம.தி.சுதா
நன்றி மணிகண்டன்

sriram said...

KP, நீங்க ஆங்கிலம் பேசும் அழகே அழகு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Sriram said //அப்புறம், நான் டீச்சரில்லை. Trainer ஆக வேண்டுமென்பது என் நீண்ட நாள் கனவு. இந்த போஸ்டெல்லாம் அதை அடைவதற்கான பயணமாகவே கருதுகிறேன்//

All the best... goodluck to reach there sooner

sriram said...

நன்றி அப்பாவி த மணி

Floraipuyal said...

You can include some of these too (Sorry for the lengthy list)
Most noticeable - highly annoying, but not very confusing, to native English speakers:
use of only - 'he did that only'
use of no / isn't it as a tag question - 'you are doing it no? '
confusion between can and able to - 'I can / cannot able to do this'
time of day - 'yesterday night, today morning'
pronunciation of l in plane and blue
use of antiquated words and phrases - thrice, do the needful, intimate someone
progressives - you have already mentioned this - 'I am telling him'
variations in noun number and determiners - 'I am pulling your legs'
prepositions - 'discuss about'
word order - 'He is late always'

Very confusing to native English speakers:
use of local vocabulary - stephney, eve teasing, out of station, cent per cent,
specs, hillstation, pass out ( to mean graduate ), expire ( to die ), timepass ( pastime )
terrace vs roof
dress vs clothes
half / full sleeves to mean short / long sleeves
timing to mean hours of operation
native to mean native city
mugging to mean memorising and not a street crime
mail to mean email
use of 'the same'
ragging to mean hazing
use of phrases 'like nothing' and 'like anything'
hotel to mean a restaurant (This is dangerous. A friend of mine casually asked a female coworker 'Can I take you to a nice hotel now?'. She freaked out. :) )
to fag to mean to smoke
hot drinks to mean hard liquor

Many native English speakers understand, but some get confused:
alveolar stops /d/, /t/ as in night, end
/s/ and /z/ - desert vs dessert
use of Sir as an honorific
pronunciation of ew as in sew
pronunciation of v vs W - victor vs wicked
confusion between monophthongs vs diphthongs - ei in either, /eɪ/ in face, /oʊ/ in goat

Dubukku said...

கலக்குங்க அண்ணாச்சி... நல்ல பயனுள்ள பதிவு

sriram said...

வாங்க Floraipuyal. ரொம்ப நாளாச்சு பாத்து, அ ஆ முந்தைய பகுதிகளில் நாம Interact பண்ணது ஞாபகம் வருது.
பின்னூட்டம் - கலக்கிட்டீங்க..
He did that only, Question tag, yesterday night, out of station, Native, Hotel vs Restaurant, Hot drinks இதெல்லாம் பத்தி
எழுதிட்டேன். மத்ததெல்லாம் ”little over my head". நெறய விசயங்கள் புரியல. நீங்க ஏன் ரெண்டு மூணு பகுதிகள் எழுதக் கூடாது? நானும் சில விசயங்கள்
தெரிஞ்சிக்க வாய்ப்பா இருக்கும்

sriram said...

நன்றி வாத்யார்

எண்ணங்கள் 13189034291840215795 said...

ரொம்ப சுவாரஸ்யம்...

sriram said...

நன்றி சகோதரி

sriram said...

சுபாஷிணி இமெயிலில் அனுப்பிய பின்னூட்டம்

ஸ்ரீராம் நல்ல விஷயங்கள் சொல்லி குடுக்கரவா எல்லாருமே குரு (teacher) தான். ரொம்ப பயனுள்ள பதிவு. அருமையான விஷயங்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்
அன்புடன்
சுபா

sriram said...

நன்றி சுபா.

நான் யாருக்கும் எதையும் சொல்லிக் கொடுப்பதாக நினைக்கவில்லை, எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன். Floraipuyal போன்றவர்கள் அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளும் விசயங்களிலிருந்து தெரியாதவற்றைத் தெரிந்து கொள்கிறேன்.

Subhashini said...

Neenga appadi ninaikirathu unga perunthanmai boss.
anbudan subha

சுந்தரா said...

நல்ல பதிவுங்க...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

sriram said...

சுபா
பொய்யான அவையடக்கம் என்னிடம் அறவே கிடையாது. உண்மையைத்தான் சொன்னேன்

sriram said...

நன்றி சுதந்திரா

ILA (a) இளா said...

Come again- இதுக்கு அமெரிக்கர்கள் எடுத்துக்கொள்ளும் அர்த்தமே தனி. மக்களே, Use Pardon or you say that again , ever ever try come again to USA people. come again= "CUM AGAIN"

Unknown said...

நல்ல தொகுப்பு