Wednesday, December 8, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை பகுதி 7

பத்து பத்து - நேற்றைய இடுகையின் தொடர்ச்சி பிடிக்காத பத்து


1. அம்மாவும் அப்பாவும் அக்காளும் அண்ணனுமே Distant Relatives ஆகிப் போன சோகம். என்னதான் 2 செண்ட்ல இந்தியாவுக்கு பேச முடியுமென்றாலும், வார இறுதியில் வெப்கேம் துணையோடு உரையாடினாலும் அருகாமைன்னு ஒண்ணு இருக்கே அது கிடைக்காது.

2. வாழ்க்கை முறை : அமெரிக்கர்களின் வாழ்க்கை முறை எனக்குப் பிடிக்காத ஒன்று. “கட்டற்ற சுதந்திரம்” இங்குள்ளவர்களைக் கெடுத்து வச்சிருக்கு. பதின்ம வயதிலேயே
எல்லாப் பழக்கங்களும் வந்திடுது. அளவுக்கு மீறிய Individuality இங்கு அதிக அளவில் விவாகரத்துகள் நடக்கக் காரணம். விளைவு நெறய் குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரோடும் வாழக் கொடுப்பினை இல்லை. பல பேருக்குத் தனிமையே துணை. வார இறுதியில் பப்புக்கும் பார்ட்டிகளுக்கும் துணை தேடி நெடும் பயணம்.

3. சேமிப்பு இல்லாமை: பணத்தைப் பொருத்த வரையில் நான் ஒரு Conservative. Saving Economy இல் அதிலும் ஒரு சாதாரண Indian Lower Middle Class சூழ்நிலையில்
வளர்ந்த எனக்கு அமெரிக்கச் சூழல் பெரும் வியப்பே. பெரும்பாலான அமெரிக்கர்கள் நாளை என்ற ஒன்றைப் பற்றியே கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அமெரிக்கர்களின் Combined Personal Debt 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகம் (சராசரியாக ஒரு குடும்பத்தின் கடன் 1.2 லட்சம் டாலர்கள்). இங்கிலாந்தின் மொத்த GDP யே அவ்வளவுதான். அறுபதிகளில் அமெரிக்கர்களின் சேமிப்பு சம்பளத்தில் 11 சதவிகிதம், அதுவே தொண்ணூறுகளில் 5 சதவிகிதம். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2003ல் அது 2.3 %. பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மக்கள் கொஞ்சம் விழித்துக் கொண்டு 5 முதல் 7 % வரை சேமிப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.

இந்த படம் பல நூறு கதைகள் சொல்லும்



4. உப்பு சப்பில்லாத உணவு : இந்தியாவிலிருந்து வந்த புதிதில் எல்லாரும் கடினமாக உண்ரும் விசயம் இது. நல்ல காரசாரமாக சாப்பிட்டுப் பழகிய நமக்கு இங்கு கிடைக்கும் உணவு வாயில் வைக்க வழங்காது. போகப் போக பழகினாலும் நாக்கு இந்திய உணவங்களைத் தேடி அலைவதைத் தவிர்க்க இயலாது.

5. Too many choices : நான் பிடிச்ச பத்தில் சொல்லியிருந்த ஒண்ணு - ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் Customer is King feeling. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு சொல்றா மாதிரி அமெரிக்காவில இருக்கும் அளவுக்கு அதிகமான சாய்ஸ் நம்மளை ஒரு பொருளை வாங்குவதற்கு பல மணி நேரம் செலவிட வைக்கும்.
Big Ticket Purchase எதுவானாலும் முக்கியமாக எலக்ட்ரானிக் பொருட்கள் (உதாரணமாக LCD TV or camera or Laptop) வாங்க முடிவெடுத்தால், மொதோ பிரச்சனை என்ன பிராண்டு / Specification வாங்குவது? ஒரு பொருளுக்கு நூத்துக் கணக்கான சாய்ஸ். கம்பெனியோட சைட்ல விவரங்களைப் பாக்கணும், அப்புறம் Cnet ல Expert review பாக்கணும், Marketplace தளங்களில் Compare பண்ணனும், Yelp, Amazon மாதிரி தளங்களில் User Review படிக்கணும். ஒரு வழியா பல மணி நேரங்கள் செலவழிச்சு ஒரு குறிப்பிட்ட மாடலை செலக்ட் பண்ணி முடிச்சு அப்பாடான்னு மூச்சு விட்டா அடுத்த யுத்தம் ஆரம்பிக்கும். அப்பொருளுக்கு நூறு சைட்ல நூறு விலை போட்டிருப்ப்பான்.
நமக்கோ நாம வாங்கின விலையை விட யாராவது குறைவா வாங்கிட்டாங்கன்னு தெரிஞ்சாத் தலையே வெடிச்சிடும். நாந்தான் கம்மி விலையில வாங்கியிருக்கேன்னு காட்டுவதற்காக
பல மணி நேரம் ஆன்லைன்ல செலவிடுவோம். Amazon பாத்தியா Ebay பாத்தியான்னு வேற எக்ஸ்பர்ட் ஒப்பீனியன் வேற பல திசைகள்லேருந்து வரும். இதுக்கெல்லாம் மீறி ஒரு விசயம் இருக்கு. நவம்பர் மாசத்துக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்குன்னு பாக்கணும், ஏன்னா Black Friday க்கு நாம் நெனச்ச பொருள் டீலில் வருமான்னு பாக்கணும். இதுவாவது பரவாயில்ல Big Ticket Purchase ல 100 -200 $ மிச்சமாகும். Macys போன்ற துணிக்கடைகளுக்கு போகும் போது நடக்கும் Coupon கூத்து இருக்கே சொல்லி மாளாது... Vivek & Co வுக்கோ Vasanth & Co வுக்கோ போனோமா நாலு TV பாத்தோமா ஒண்ணை பேரம் பேசி வாங்கி வீட்ல டெலிவர் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு கூல வர்ற சுகம் இருக்கே ... ஹூம்... அது ஒரு கனாக் காலம்..


6. போர் தொடுப்பது / மூக்கை நுழைப்பது : வேறெந்த நாட்டினுடைய ஒரு அடி நிலத்தைக் கூட இதுவரை அபகரிக்காத (காஷ்மீரை குள்ளநரித்தனமாக நம்மோடு சேர்த்திருந்தாலும்)
நாட்டைச் சேர்ந்த எனக்கு அமெரிக்காவின் தேவையற்ற போர்கள் வெறுப்படைய வைக்கின்றன. நாடு பிடிக்கும் எண்ணம், உலக எண்ணெய் வளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் என பல காரணங்கள் இருக்கும் இவர்களுக்கு உலக அமைதிக்கு ஒரு காரணம் கூட தோன்றாதது வியப்பே.

7. Expensive Medicare : இந்த ஊரில் மருத்துவமனைகளும் மெடிக்கல் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சேர்ந்து அடிக்கும் கூட்டுக் கொள்ளை ஒரு Daylight Robbery.
ஊருக்கு ஊர் இலவசமா நூலகம் கட்டி அதில் இலவசமா சினிமா பட டிவிடி கொடுக்கும் அரசாங்கம் இலவச பொது மருத்துவமனை கட்டாது. இவனுங்க வாங்கற வருமான வரிக்கு
இலவசமாகவே மருத்துவ சேவை பண்ணலாம். உலகிலேயே அதிகமா Medicare க்கு செலவு செய்வது அமெரிக்காதான். GDPல 15 சதவிகிதம் இதுக்கு போகுது. ஆஸ்திரேலியா 9%, மிகச் சிற்ந்த சேவை உள்ள ஜப்பான் GDP ல 8% Medicare க்கு செலவு பண்ணுது. DHS மூலம் சிறப்பான சேவை வழங்கும் இங்கிலாந்தின் செலவு 7.5%. தரமான இலவச மருத்துவ வசதி கொண்ட கனடா கூட 10% க்கு மேல செலவு பண்ணுவது கிடையாது. அமெரிக்காவில் இத்தனை பணம் என்னாகுது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இதுக்கும் மீறி
ஆஸ்திரேலியாவில் annual cost of health care per capita is $2,886. In Canada it is $2,998 in UK it is $2317 the same in USA is
$5711,
இதுக்கும் மேல மருத்துவமனைக்குப் போகும் போதும் பணம் கேட்டால் கோவம் வருமா வராதா?

8. ஆட்டோ : அண்ணன் தம்பியை மிஸ் பண்றேனோ இல்லயோ நான் ஆட்டோவை அமெரிக்காவில் ரொம்பவே மிஸ் பண்றேன். எவ்வளவுதான் ஏமாத்தறாங்கன்னு பொலம்பினாலும் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் கையைக் காட்டி நிறுத்தி ஆட்டோவில் ஏறிப் போவதில் இருக்கு சவுகரியம் அமெரிக்காவில் கிடையாது. Public Transport வசதி ரொம்ப கம்மி, டாக்ஸி வாடகை அதிகம், அதையும் போன் பண்ணிக் கூப்பிடனும். நெனச்ச நேரத்துக்கு நெனச்ச இடத்தில் கிடைக்கும், தெருக்குத்தெரு ஆட்டோ ஸ்டாண்ட் - இந்த வசதியை மிஸ் பண்ணும் போதுதான் இதன் அருமை தெரியும்.

9. குடியுரிமைச் சட்டம் : Modern America முழுக்க முழுக்க வந்தேரிகளால் நிரம்பியது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் Permanent Residence Process எவ்வளவு இலகுவாக இருக்க வேண்டும்? இந்நாட்டுக்கு வேலை செய்ய வந்து PR விண்ணப்பம் செய்வதில் முக்கியமானவர்கள் இந்தியர்கள். அவங்களுக்கு PR கிடைக்க பல வருடங்கள் ஆகுது.
வேலை உரிமை விசா (work visa) வழங்க கெடுபிடி செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு வேலை செய்யத் தெரிவாகி வந்து வேலை செய்பவருக்கு PR கொடுப்பதில் இருக்கும் தாமதம் எரிச்சல் தருது.

10. பிளாஸ்டிக் உபயோகம் : சுற்றுச் சூழலை பாதுகாக்க உலக நாடுகள் ஒத்துழைக்கணும், ஓசோன் ஓட்டையை அடைக்க உலக நாடுகள் எல்லாம் சேந்து ரப்பர் உருக்கலாமுன்னு
சொல்லிக்கிட்டே அமெரிக்கா உபயோகிப்பது வருசத்துக்கு 100 பில்லியன் பிளாஸ்டிக் பைகள், இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர்கள். இதுபத்தி இங்கு யாருமே கவலைப் படுவதாகத்
தெரியவில்லை. ஏதோ என்னால முடிஞ்சது ஊரிலிருந்து 4-5 துணிப்பைகள் எடுத்து வந்து யார் என்ன நெனச்சாலும் கவலை இல்லைன்னு துணிப்பைகளில் காய்கறி, பழங்கள்
வாங்கி வருவருகிறேன்.

நேத்தும் இன்னிக்கும் நான் சொன்னது நான் கண்டவரையில் அமெரிக்காவில் எனக்குப் பிடித்த மற்றும் பிடிக்காத பத்து விசயங்கள். உங்களுக்கு பிடிச்ச / பிடிக்காத விசயங்களைப்
பின்னூட்டத்தில சொல்லுங்களேன்.

38 comments:

Porkodi (பொற்கொடி) said...

இல்லியே இங்க கடைகள்ல உங்க பை அல்லது கடையின் துணிப்பை ரீயூஸ் செய்தால் 50 செண்ட் கம்மி ஒரு பைக்குன்னு பண்றாங்களே!

bandhu said...

//வேலை உரிமை விசா (work visa) வழங்க கெடுபிடி செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு வேலை செய்யத் தெரிவாகி வந்து வேலை செய்பவருக்கு PR கொடுப்பதில் இருக்கும் தாமதம் எரிச்சல் தருது.//
ஏதோ நிம்மதியா பதிவு படிக்கலாம்னு வந்தா, இங்கேயும் நீங்க சோகத்தை கிளப்பறீங்க. நான் இங்கு வந்து 11 வருடமாகிறது (EB3, retrogression - the usual suspects..) இபாடியாவது இங்க இருந்து தான் ஆகணுமான்னு தெனம் என்னையே கேட்டுக்குறேன். சீக்கிரம் திரும்ப கிளம்பிடுவோம்னு நினைக்கிறேன்.. ஆனா குழந்தைங்களை கிளப்பறது எப்படின்னு நினைச்சா.. போங்க.. கடுப்பேத்திட்டீங்க..

Porkodi (பொற்கொடி) said...

இந்த பத்துல நிஜமாவே டெரர் மெடிகேர் தான். (ஆனா எங்க கொம்பேனி 100% பாத்துக்கற ஒரே காரணத்தால நேரடி தாக்கம் இல்லை.) அப்புறம் அது என்ன காஷ்மீர் குள்ளநரித்தனம்?? அதை பத்தி ஒரு தொடர் போடுங்க தல, எங்களை மாதிரி வருங்கால சந்ததியினர் தெரிஞ்சுக்கணும்ல..

sriram said...

Bandhu, இவ்விடுகை உங்களை புண்படுத்துமென்று கனவிலும் நினைக்கவில்லை. While having a quote for number of H1B per year, there need not be quote on the GC - This is my logic.

sriram said...

கேடியக்கா:
மொத தகவல் எனக்கு புதுசு, எங்கூர்ல இது மாதிரி இருப்பதாகத் தெரியவில்லை

2. காஷ்மீர் = அது பெரிய கதை, நெறய புத்தகங்கள், இணையப் பக்கங்கள் இருக்கு, படிங்க.
முக்கியமா பதான்கோட் ஏன் / எப்படி / எதுக்கு இந்தியாவோட சேக்கப் பட்டதுன்னு படிங்க.

bandhu said...

சத்தமில்லாமல் இருப்பது. நான் இங்கு வந்தா முதல் இரண்டு நாள் என்னடா ஏதோ மாதிரி இருக்கேன்னு பாத்தா.. ஒரே நிசப்தம்.. தாங்க முடியலை..
தெருக்களில் ஆளே இல்லாமல் இருப்பது. வெறிச்னு இருக்கிற தெருக்களை எப்பயுமே எப்படிப்பா பாத்திட்டு இருக்கறது?
கடையில் பே பண்ண போகும்போது இயந்திரத்தனமான how are you doing? கேட்கும்போது. நாம் என்ன சொன்னாலும் அவங்க கேக்க போறதில்லை. அப்பறம் எதுக்கு கேக்கணும்?
நீங்க சொன்னதில் ஒரு பெரிய பிரச்சனையை. Too many choices . போனமா.. வாங்கனமான்னு இல்லாம பெரிய தலை வலி.

Porkodi (பொற்கொடி) said...

bandhu, இன்னிக்கு தான் நிஜமாவே கண்ணோட்டம் எப்படி மாறுபடும்னு பாக்கறேன்.. நீங்க சொன்னது எல்லாம் எனக்கு பிடிச்சுருக்கு!!!

Chitra said...

I think in # 9 - it seems it was an easier process, until a while ago. People started abusing it and so came the problems. :-(

அமுதா கிருஷ்ணா said...

//உணவு வாயில் வைக்க வழங்காது//

விளங்காது என்று வரணுமோ..

காஷ்மீர் நம்ம குள்ளநரி தனம் என்றால் அது சுதந்திர நாடாக இருந்து இருக்கணுமா?

துணிப்பையில் காய்கறி குட் ஸ்ரீராம்.

sriram said...

நன்றி சித்ரா
I don't think it was the case.
The problem with GC is too many people are entering a tunnel but only certain number of people will be let out of the tunnel every year which is far less than the number of people entering every year.
SO the people in the tunnel are suffocating.

sriram said...

//உணவு வாயில் வைக்க வழங்காது//
அப்படி சொல்லியே பழக்கமாயிடிச்சு, ஐயங்கார் ஸ்லாங்குன்னு நெனைக்கிறேன்.

காஷ்மீர் : The only samastanam which did not join either India or Pak in 1947. We forced Raja Hari singh to join India while Pak was trying to occupy from the other side.. Long story, try to read

ராம்ஜி_யாஹூ said...

பிடித்த பத்தோடு அமெரிக்க கல்வி முறையை சேர்க்கலாம்.

சிந்தனை, சுய தொழில் முனைவு, புதியன கண்டுபிடித்தல் சார்ந்த கல்வி. வெறும் புத்தகம் சார்ந்த படிப்பாக மட்டும் அல்லாமல் செயல் முறை, மெய் நிகர் வாழ்க்கை சார்ந்த கல்வி முறை.


பிடிக்காத பதினொன்று (நீங்கள் அதை முதல் pointil சொல்லி vitteerkal)

எவ்வளவுதான் சம்பளம், சலுகைகள் கொடுத்தாலும் ஊழியர்களுக்கு தங்கள் நிறுவனம் மீது ஒரு பந்தம், பாசம் இருக்காது.
நம் ஊரில் மாதம் 5000 சம்பளம் வாங்கும் ஊழியர் கூட முதலில் தன நிறுவன நலனை பார்ப்பார் பின்பே தன சுய நலம் கருதுவார். ஆனால் அமெரிக்காவில் நேர் எதிர் போக்கு

Sri said...

//வேலை உரிமை விசா (work visa) வழங்க கெடுபிடி செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு வேலை செய்யத் தெரிவாகி வந்து வேலை செய்பவருக்கு PR கொடுப்பதில் இருக்கும் தாமதம் எரிச்சல் தருது.

நல்ல இருக்கு உங்க logic . உங்க work -visa வந்து non-immmigrant வகை. அதுல வந்துட்டு permanent -ஆ இருக்க போறேன் அதனால சீக்கிரமா மாத்தி குடுன்னு கேட்டா நியாயமா?

Regarding #10, boston எப்படின்னு தெரியாது, ஆனா California is the trend setter for the entire world when it comes to protecting the environment.

Loved your post...

Srini

எண்ணங்கள் 13189034291840215795 said...

புரிய முடியுது..

முக்கியமா சுதந்திரம்.. அளவுக்கு மிஞ்சினா நஞ்சுதான்..

ஹுஸைனம்மா said...

இதன் முந்தைய ‘பிடித்த 10’ போலவே இதுவும் பிடித்திருக்கிறது.

வளைகுடா நாடுகளிலும் இதில் உள்ள சில பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் வரிகள் கிடையாது. மருத்துவ சேவையும் காஸ்ட்லி. குடும்ப வாழ்வு இன்னும் அவ்வளவு மோசமாகிவிடவில்லை...

உங்க அமெரிக்காவுல போர் தொடுக்கிறது பிடிக்கலைன்னா, இங்க அடங்கிப் போறது.. (நம்ம இந்தியாவை விடவான்னு சமாதானம் பண்ணிக்க வேண்டியதுதான்)

ஆனாலும், போன பதிவுல உள்ள பல காரணங்களுக்காகவே தொடர்கிறோம் இங்கேயே!!

Unknown said...

பிடிக்காத பத்து..கொஞ்சம் வெறுப்புதான்..

Kousalya Raj said...

உங்க பதிவில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் ஒன்று என்னனா, வெளிநாடு போய்விட்டால் எங்கே இருந்து வந்தோம் என்பதை மறந்து விட்டு பிறந்த நாட்டை பற்றி மிக மோசமாக வர்ணிப்பது...

அப்புறம் வெளிநாட்டை பற்றி ஒரேயடியாக ஆஹா ஓஹோனு பாராட்டுறது மட்டும் தான் படித்து இருக்கிறேன். ஆனா நீங்க தெளிவா பிளஸ் மைனஸ் இரண்டையும் வேறு படுத்தி பதிவிட்டு இருப்பது நிறைவாக இருக்கிறது. நன்றி

நேரம் கிடைத்தால் பழைய பதிவுகளையும் படிக்கணும் என்று இருக்கிறேன். வாழ்த்துகள் சகோ.

எல் கே said...

நல்ல பதிவு அண்ணா. காஷ்மீர் பல பல பல விஷயங்கள் தவறுகள் நிகழ்ந்து இருக்குது. ஒரு பதிவோ தொடரோ அது முடியாது.

ம.தி.சுதா said...

பதிவிலேயே அதன் கனம் உரைத்துவிட்டீர்களே...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception

ஜோதிஜி said...

இரண்டு பதிவுகளை சேர்த்து படிக்கும் போது நீங்கள் கொடுக்கும் தாக்கத்தை உணர்ந்து கொள்ள முடியும். இங்க உள்ளே வாழ்க்கையில் அமெரிக்கர்கள் கொடுத்த தாக்கம் அதிகம். ஏறக்குறைய பெரிய நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களால் வளர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர்களால் தான் அழிந்தும் போய் உள்ளார்கள். ஆனால் தவறு அமெரிக்கர்கள் மேல் அல்ல.

டாலர் தேசம் கொடுத்த தாக்கம் போல உங்கள் நோக்கம் சிறப்பானது. வெறுமனே வாழ்க் ஒழிக என்பதை விட இது போன்ற புரிந்துணர்வு முக்கியம்.

நன்றி ராம்.

எனக்கு பிடித்த ஒன்று

எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எம் மக்கள் முக்கியம் என்ற ஆதிகாலந்தொட்டு இன்று வரைக்கும் அமெரிக்கா கொண்ட வெளியுறவுக் கொள்கைகள்.

பிடிக்காத ஒன்று.

உலகத்திலே மற்ற நாடுகள் சண்டை போட்டுக் கொண்டால் தான் நல்லது என்று ஆயுத வியாபாரத்தையும் அதன் லாபத்தையும் மட்டுமே கருமமே கண்ணாக பார்த்துக் கொண்டுருப்பது.
அமெரிக்காவிற்கு பிடிக்காத வார்த்தைகள் மனிதாபிமானம், கருணை, காருண்யம், தன்னலமற்ற சேவை. அப்படியே இருந்தால் அதற்குள் உள்குத்து ஒன்று இருக்கிறது அர்த்தம்.

பிடித்த விசயம்

சீனாவின் ட்ரிலியன் டாலர்களை சார்ந்து மொத்த அமெரிக்காவே இருந்தாலும் போடா வெண்ணெய் என்று சீனாவுக்கு பெப்பே காட்டிவிட்டு தலாய்லாமாவை சந்தித்த தெனாவெட்டு.

பிடிக்காத விசயம்

பாகிஸ்தானை கூச்சப்படாமல் வளர்த்துக் கொண்டுருப்பது.

நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

sriram said...

ராம்ஜி : முதல் முறையா உங்க கருத்திலிருந்து மாறுபடறேன். கல்வி : I have my own reservations about Education in USA. இந்தியாவின் மனனம் செய்யும்
கல்வி முறையில் எனக்கு உடன்பாடு கிடையாது. அமெரிக்காவின் செயல் முறை கல்வி பிடிக்குமென்றாலும் படிப்புக்கு முக்கியத்துவம் தராதது பிடிக்கவில்லை. யூனிஃபார்ம் இல்லாததும்
ஒரு குறை. கையெழுத்துப் பயிற்சி மிகக் குறைவு.ஸ்கூல் ட்ராப் அவுட் ரேட் மிக அதிகம்.

Being Loyal to the employer : I beg to differ here too. நீங்க வேலை செய்யுறீங்க, நிறுவனம் நீங்க செய்யும் வேலைக்கு சம்பளம் தருது. Period அதுக்கு
மேல அந்த உறவில் ஒண்ணுமில்லை என்பது என் கருத்து. என் கருத்தை ஒரு இடுகையா எழுதறேன் சீக்கிரமே.

நன்றி ஸ்ரீநி, I completely understand your view on Non Immigrant and PR. ஒரு பேச்சுக்கு கோட்டாவை விலக்கி விட்டாலும் க்ரீன் கார்ட் கிடைக்க 3 வருஷம்
ஆகும். நான் அறிந்த வரையில் பல நாடுகளில் PR Process இதை விடக் குறைவு. வந்தேறிகளின் நாடான அமெரிக்காவில் இப்படி இருக்கக் கூடாது. பாஸ்டனில் ஒரு ஐரிஷ்காரனிடம்
இது பத்தி பேசும்போது சொன்னேன், நான் வந்து நாலு வருஷம் ஆச்சு நீ (அவனின் முன்னோர்கள்) வந்து நானூறு வருஷம் ஆச்சு அவ்வளவுதான் வித்தியாசம், நீயோ நானோ மண்ணின்
மைந்தர்கள் கிடையாது அமெரிக்காவைச் சொந்தம் கொண்டாட.

நன்றி சாந்தி

நன்றி ஹுஸைனம்மா, சரியாச் சொன்னீங்க, பிடிச்ச பத்து கொஞ்சம் வெயிட்டா இருப்பதால் தொடர்கிறோம்.

நன்றி நந்தா

நன்றி கௌசல்யா, ஒரு இடத்தை செண்டிமெண்ட் கலக்காமல் வெறும் இடமாகப் பார்க்கும் அளவுக்கு பக்குவம் எனக்கு இருக்குன்னு நினைக்கிறேன். எந்த ஒரு விசயத்திலும்
நிறை குறை இரண்டையும் தயங்காமல் சுட்டிக்காட்டுவேன். உண்மையை உரைப்பதில் தயக்கமென்ன?

நன்றி LK

நன்றி ம.தி. சுதா

sriram said...

ராம்ஜி : முதல் முறையா உங்க கருத்திலிருந்து மாறுபடறேன். கல்வி : I have my own reservations about Education in USA. இந்தியாவின் மனனம் செய்யும்
கல்வி முறையில் எனக்கு உடன்பாடு கிடையாது. அமெரிக்காவின் செயல் முறை கல்வி பிடிக்குமென்றாலும் படிப்புக்கு முக்கியத்துவம் தராதது பிடிக்கவில்லை. யூனிஃபார்ம் இல்லாததும்
ஒரு குறை. கையெழுத்துப் பயிற்சி மிகக் குறைவு.ஸ்கூல் ட்ராப் அவுட் ரேட் மிக அதிகம்.

Being Loyal to the employer : I beg to differ here too. நீங்க வேலை செய்யுறீங்க, நிறுவனம் நீங்க செய்யும் வேலைக்கு சம்பளம் தருது. Period அதுக்கு
மேல அந்த உறவில் ஒண்ணுமில்லை என்பது என் கருத்து. என் கருத்தை ஒரு இடுகையா எழுதறேன் சீக்கிரமே.

நன்றி ஸ்ரீநி, I completely understand your view on Non Immigrant and PR. ஒரு பேச்சுக்கு கோட்டாவை விலக்கி விட்டாலும் க்ரீன் கார்ட் கிடைக்க 3 வருஷம்
ஆகும். நான் அறிந்த வரையில் பல நாடுகளில் PR Process இதை விடக் குறைவு. வந்தேறிகளின் நாடான அமெரிக்காவில் இப்படி இருக்கக் கூடாது. பாஸ்டனில் ஒரு ஐரிஷ்காரனிடம்
இது பத்தி பேசும்போது சொன்னேன், நான் வந்து நாலு வருஷம் ஆச்சு நீ (அவனின் முன்னோர்கள்) வந்து நானூறு வருஷம் ஆச்சு அவ்வளவுதான் வித்தியாசம், நீயோ நானோ மண்ணின்
மைந்தர்கள் கிடையாது அமெரிக்காவைச் சொந்தம் கொண்டாட.

நன்றி சாந்தி

நன்றி ஹுஸைனம்மா, சரியாச் சொன்னீங்க, பிடிச்ச பத்து கொஞ்சம் வெயிட்டா இருப்பதால் தொடர்கிறோம்.

sriram said...

நன்றி நந்தா

நன்றி கௌசல்யா, ஒரு இடத்தை செண்டிமெண்ட் கலக்காமல் வெறும் இடமாகப் பார்க்கும் அளவுக்கு பக்குவம் எனக்கு இருக்குன்னு நினைக்கிறேன். எந்த ஒரு விசயத்திலும்
நிறை குறை இரண்டையும் தயங்காமல் சுட்டிக்காட்டுவேன். உண்மையை உரைப்பதில் தயக்கமென்ன?

நன்றி LK

நன்றி ம.தி. சுதா

ILA (a) இளா said...

அரசு, மக்களை கடனாளியா வெக்கிற தந்திரத்தை மறந்துட்டீங்களா?

வடுவூர் குமார் said...

உங்களுக்கு முன்பு பலர் அமெரிக்க வாழ்கையை பற்றி எழுதியிருந்தாலும் உங்கள் கோணம் வித்தியாசமாக தெரிகிறது.

Denzil said...

@ராம்ஜி "நம் ஊரில் மாதம் 5000 சம்பளம் வாங்கும் ஊழியர் கூட முதலில் தன நிறுவன நலனை பார்ப்பார் பின்பே தன சுய நலம் கருதுவார். " செம காமெடி. இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களையும் சேர்த்துதான் சொல்றீங்களா?

பத்மநாபன் said...

இவ்வளவு ஓட்டை இருக்கா ...அப்ப நான் வர்லிங்க.. பாலைவனத்திலேயே இருக்கேன்...

இங்க என்ன நன்மைன்னா , இது இப்படித்தான்னு ஒரு முடிவோட வந்து விடுகிறோம்..எதிர்பார்ப்பும் இல்லை எமாற்றமும் இல்லை...

வாத்தியார் சொன்ன மாதிரி.. அமெரிக்காவில எல்லாமே பெரிசு...

முச்சந்தி said...

//1. அம்மாவும் அப்பாவும் அக்காளும் அண்ணனுமே Distant Relatives ஆகிப் போன சோகம். என்னதான் 2 செண்ட்ல இந்தியாவுக்கு பேச முடியுமென்றாலும்,..//
ஊரை விட்டு வெளி இடம் போய் வேலை பார்க்கும் எல்லாருக்கும் தூரம் பிடிக்காது தான் . அமெரிக்கர் ஒருவர் வேலை விஷயமாக இந்திய வில் இருந்தால் அவரும் இதை தான் சொல்லுவர் . எல்லாருக்கும் அவர் அவர் சொந்த ஊர் ஒரு சுவர்க்கம் , நாஞ்சில் நாட்டுகராரான எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மும்பை இல் வசிக்கும் போது எழுதிய பல கட்டுரை களில் அவர் ஊர் பாசத்தை காணலாம்
http://nanjilnadan.wordpress.com/

//2. வாழ்க்கை முறை : அமெரிக்கர்களின் வாழ்க்கை முறை எனக்குப் பிடிக்காத ஒன்று. “கட்டற்ற சுதந்திரம்” இங்குள்ளவர்களைக் கெடுத்து வச்சிருக்கு. பதின்ம வயதிலேயே,...விளைவு நெறய் குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரோடும் வாழக் கொடுப்பினை இல்லை//
கட்டற்ற சுதந்திரம் ஒரு காரணமா இருக்கலாம், எனக்கு தெரிந்து பல தனி பெற்றோர் (single parent) தங்கள் குழந்தைகளை நல கல்வியும் வாழ்க்கைக்கும் உதவி புரிந்துளர்கள் .

//சேமிப்பு இல்லாமை: பணத்தைப் பொருத்த வரையில் நான் ஒரு Conservative. Saving Economy இல் அதிலும் ஒரு சாதாரண Indian Lower Middle Class சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு அமெரிக்கச் //
பொருளாதார சந்தை வியாபர நோக்கு உடைய எந்த நாட்டிலும் சேமிப்பு என்பது குறைவே .

//4. உப்பு சப்பில்லாத உணவு : இந்தியாவிலிருந்து வந்த புதிதில் எல்லாரும் கடினமாக உண்ரும் விசயம் இது. நல்ல காரசாரமாக சாப்பிட்டுப் பழகிய நமக்கு இங்கு கிடைக்கும் உணவு வாயில் வைக்க வழங்காது.//
ஒருவருக்கு பிடித்த உணவு அடுத்தவருக்கு பிடிக்காமல் போகலாம், உணவு ஒரு நாட்டின் வாழ்கை மற்றும் தட்ப வெப்ப நிலையை பொருது அமைகிறது . நான் பார்த்த வரையில் அமெரிக்காவில் உள்ள பெரு நகரங்களில் எல்லா நாடு உணவு சாலைகளும் உள்ளது , உண்ணவு விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும் , அதே நேரம் உணவை வீண் செலவு செய்வது இவர்கள் தான் முதல் இடத்தில இருப்பார்கள் என்ன எனுகிரேன்.

முச்சந்தி said...

//5. Too many choices : நான் பிடிச்ச பத்தில் சொல்லியிருந்த ஒண்ணு - ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் Customer is King feeling. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு சொல்றா ,..//

Too many choices : மீண்டும் பொருளாதார சந்தை தான் , பொருள் வாங்க வருபவர்களுக்கு ஒரே பொருளுக்கு பல சாய்ஸ் கொடுத்தே ஆகவேண்டும் இல்லை எனில் சந்தை இல் பிழைக்க முடியாது,

// Vivek & Co வுக்கோ Vasanth & Co வுக்கோ போனோமா நாலு TV பாத்தோமா ஒண்ணை பேரம் பேசி வாங்கி வீட்ல டெலிவர் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு கூல வர்ற சுகம் இருக்கே ... ஹூம்... அது ஒரு கனாக் காலம்..//
பேரம் பேச மக்கள் தொகை ஒரு காரணமாக இருக்கலாம், நம் ஊரில் குறைந்த லாபத்தில் அதிக பொருள் விற்று விபாரம் பண்ணலாம்,....
//6. போர் தொடுப்பது / மூக்கை நுழைப்பது : வேறெந்த நாட்டினுடைய ஒரு அடி நிலத்தைக் கூட இதுவரை அபகரிக்காத இது (காஷ்மீரை குள்ளநரித்தனமாக நம்மோடு சேர்த்திருந்தாலும்//

இது எல்லா வல்அரசுகளுக்கும் உள்ள பொதுதன்மை , இன்னும் சில வருடங்களில் இக் குணங்கள் வேறு ஒரு நாட்டில் இருந்து வரலாம் .

//7. Expensive Medicare : இந்த ஊரில் மருத்துவமனைகளும் மெடிக்கல் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சேர்ந்து அடிக்கும் கூட்டுக் கொள்ளை ஒரு Daylight Robbery.ஊருக்கு,..//

உண்மை தான் , அதே நேரம் பல இன்சூரன்ஸ் கம்பனிகளின் கூட்டு முற்சியால் இன்று பல நோய்களுக்கு நவீன மருந்து கண்டுபிடித்து கொண்டு இருக்கிறார்கள் (Insurance compaines are funding the research குறிப்பாக இதய, சர்க்கரை , cancer,.. )

//Public Transport வசதி ரொம்ப கம்மி, டாக்ஸி வாடகை அதிகம்//

பல பெரு நகரங்களில் Public transportation is there

டாக்ஸி வாடகை அதிகம் , அப்படி தெரியலியே (நம் ஊருக்கு கணவர் பண்ணி பார்த்தல் அதிகமாக தான் தெரியும் :) )

முச்சந்தி said...

//. குடியுரிமைச் சட்டம் : Modern America முழுக்க முழுக்க வந்தேரிகளால் நிரம்பியது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் Permanent Residence Process எவ்வளவு இலகுவாக இருக்க வேண்டும்? இந்நாட்டுக்கு வேலை செய்ய வந்து PR விண்ணப்பம் செய்வதில் முக்கியமானவர்கள் இந்தியர்கள். அவங்களுக்கு PR கிடைக்க பல வருடங்கள் ஆகுது.
வேலை உரிமை விசா (work visa) வழங்க கெடுபிடி செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு வேலை செய்யத் தெரிவாகி வந்து வேலை செய்பவருக்கு PR கொடுப்பதில் இருக்கும் தாமதம் எரிச்சல் தருது.//

குடியுரிமைச் சட்டத்தில் பல அரசியல் மற்றும் சமுக காரணங்கள் நிரம்பி உள்ளது , இது இப்போதிக்கு அவளவு சுலபமாக மாறும் என்று தெரியவில்லை . எரிச்சல் தருவதற்கு காரணம் ஒரு வகையில் நமது எண்ணம் /எக்கம் என்று கூட சொல்லலாம் ,.

குடிஉரிமை மேலும் சட்ட சிகளை ஏர் படுத்தி கொண்டிருகிறது . இப்போது பல அரசியல் மற்றும் தான் ஆர்வ அமைப்புகள் குடியற்றதிரு எதிராக செயல் பட ஆரம்பித்து உள்ளன . நேரம் கிடைக்கும் போது H1B வேண்டாம் என சொல்லும் அமைப்பினை பற்றியும் படிங்கள் .

http://www.h1b.info/


முழுக்க வந்தேரிகளால் ,உண்மை உலகின் பல நாடுகளில் தம் சொந்த மக்களுக்கே சம உரிமை மறுக்கப்படும் இன் நேரத்தில் வந்தேறிகள் உள்ள நாட்டில் ,காலம் கடத்தியும் வந்தேறிகளை வரவேற்கிறார்கள் .




//10. பிளாஸ்டிக் உபயோகம் : சுற்றுச் சூழலை பாதுகாக்க உலக நாடுகள் ஒத்துழைக்கணும், ஓசோன் ஓட்டையை அடைக்க உலக நாடுகள் எல்லாம் சேந்து ரப்பர் உருக்கலாமுன்னு சொல்லிக்கிட்டே அமெரிக்கா உபயோகிப்பது வருசத்துக்கு 100 பில்லியன் பிளாஸ்டிக் பைகள், இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர்கள்//

பல பெரும் வணிக கடைகளில் துணிப்பை விற்கிறார்கள் , அக் கடைகளில் துணிப்பைஇல் பொருள் வாங்குபவர்களுக்கு தள்ளு படியும் கொடுகிறார்கள் (like Safeway, randalls,Krogers etc,...



//யூனிஃபார்ம் இல்லாததும் ஒரு குறை.//

பெரும் பலான பள்ளி களில் சீருடை உள்ளது .

bandhu said...

அன்புள்ள முச்சந்தி ..
//குடியுரிமைச் சட்டம் எரிச்சல் தருவதற்கு காரணம் ஒரு வகையில் நமது எண்ணம் /எக்கம் என்று கூட சொல்லலாம் ,.//

அப்படியா? என் குழந்தைகள் தங்கள் பள்ளி படிப்பு முழுவதுமே இங்கு படித்த பிறகு கூட PR வரவில்லை / வரும் வாய்ப்பு கூட தெரியவில்லை எனும் போது, குடியுரிமை பிரச்சனையை எப்படி என் எண்ணம் / ஏக்கம்(?) காரணமாக இருக்க முடியும்?

பிரச்சனையின் முதல் படி, பிரச்சனையை இருக்கிறது என்று உணர்வது. அது கூட இங்கு இல்லை என்பது தான் கொடுமை.

Dubukku said...

அய்யோ இந்த ப்ரைவேட் ஆஸ்பத்ரி செலவும் அதுக்காக காத்து கிடக்கவேண்டியதும் இருக்கே....இங்க யூ.கேல பெரிய தொல்லை. நம்ம ஊர் மாதிரி டோக்கன் வாங்கினோமா டாக்டரைப் பார்த்தோமா "ஒரு பென்சிலின் ஊசி போடுங்க டாக்டர்"ன்னு உரிமையோடு கேட்டு வாங்கினோமான்னு கிடையவே கிடையாது ஹூம்

கல்வி - நீங்க தனிப் பதிவு போடுங்க அங்கன பதில் போடுகிறேன். இந்த மக்கப் செய்யறது வாழ்வியல் உபயோகம் தெரியாமல் சொல்லிக் குடுக்கிறது எனக்கு உடன்பாடே கிடையாது. :))) கல்வி சுவாரசியமாகவும், குழந்தைகள் விருப்பத்துடனும் சந்தோஷத்துடனும் படிக்கிற ஒரு விஷயமாய் இருக்கனும் என்பதில் மட்டுமே எனக்கு உடன்பாடு :))

எங்கூர்ல சீருடை இல்லாத பள்ளியே கிடையாது

முச்சந்தி said...

நண்பர் பந்து,

//பிரச்சனையின் முதல் படி, பிரச்சனையை இருக்கிறது என்று உணர்வது. அது கூட இங்கு இல்லை என்பது தான் கொடுமை //

பிரச்சனையை பல வருடங்களுக்கு முன்பே அவர்கள் உணர்ந்து விட்டார்கள் , குடி உரிமை வழக்கு உரைஞ்சருடன் (Immigration Attorny) கேட்டு பாருங்கள் . பிரச்சினை தள்ளி போடுவது வேறு ஒன்றும் இல்லை எல்லாம் அரசியல் தான் என எனுகிரீன் .

//அப்படியா? என் குழந்தைகள் தங்கள் பள்ளி படிப்பு முழுவதுமே இங்கு படித்த பிறகு கூட PR வரவில்லை / வரும் வாய்ப்பு கூட தெரியவில்லை எனும் போது, குடியுரிமை பிரச்சனையை எப்படி என் எண்ணம் / ஏக்கம்(?) காரணமாக இருக்க முடியும்?//

வேறு நாடு ஓன்று எப்போது எல்லோருக்கும் குடி உரிமை வழங்குவது என்பது எந்த காலத்திலும் வரலாற்றில் இல்லை. வரும் காலங்களில் குடி உரிமை வழங்குவது சிக்கலாக மாறும். பல சட்ட அமைப்புகள் குடி உரிமை துரித படுத்த தாங்களா ஆனா முற்சிகளை செய்து கொண்டிருகிறார்கள் . நான் பார்த்த வரையில் இந்தியர்கள் அதிகமாக பங்கு கொள்வது கிடயாது, முடிந்தால் உங்கள் ஊரில் உள்ள அமைப்பு களுக்கு உதவுங்கள் (ஊர் கூடி தேர் இழுப்பது ). முடிந்தால் இதை படிக்கவும்

http://www.advancingequality.org/

(நீண்ட நாட்கள் இங்கு இருக்கும் நமக்கு நமது மனம் இங்கு இருந்து செல்ல வழி கொடுப்பது இல்லை என்னையும் சேர்த்து ).

sriram said...

அரசை ஏன் குறை சொல்லணும் இளா? அரசு கேப்பைல நெய் வடியுதுன்னு சொன்னா கேக்கறவனுக்கு எங்க போச்சு அறிவு

நன்றி வடுவூர் குமார்

நன்றி டென்சில், Being Loyal to employer பத்தி எழுதிக்கிட்டு இருக்கேன், சீக்கரமே பதிவேன்

நன்றி பந்து

நன்றி முச்சந்தி

டாங்க்ஸ் வாத்யார், கல்வி பத்தி உங்கள மாதிரி மெத்தப் படிச்சவங்க யாராவது எழுதினா நல்லா இருக்கும், நானோ ஒரு தற்குறி, என்னைப் போயி கல்வியின் தரத்தைப் பத்தியெல்லாம்
எழுதச் சொல்றீங்களே

Jaleela Kamal said...

சரியாக சொல்லி இருக்கீங
அம்மா,அப்பா, அண்ணன், தங்கை சொந்தங்கள்\
ஆட்டோ இதேல்லாம் ரொம்ப ஏக்கமான் விஷியம் தான்
துபாயை பற்றியும் எழுத நிரைய இருக்கு முடிந்த போது தொடரலாம்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பிடித்தது பிடிக்காதது ரெண்டுமே நெறைய ஒத்துப் போகுது.. ஸ்நோ விஷயத்துல கண்டபடிக்கு வேறுபடறேன் :))))

பிரதீபா said...

//ஏதோ என்னால முடிஞ்சது ஊரிலிருந்து 4-5 துணிப்பைகள் எடுத்து வந்து யார் என்ன நெனச்சாலும் கவலை இல்லைன்னு துணிப்பைகளில் காய்கறி, பழங்கள்
வாங்கி வருவருகிறேன்// - ரொம்ப ரொம்ப பாராட்டுக்கள் உங்களுக்கு. நானும் ஒரு ரெண்டு வருஷமா ஷாப்பிங் ட்ராலி பேக் ஒன்னு வெச்சுகிட்டு இழுத்துகிட்டே சுத்தறேன். கடையில குடுக்கற பை எதுவும் வாங்காம இருந்தா இங்க காசும் மிச்சம், சுற்றுப்புறம் கெடுதலும் மிச்சம். தொடர்வோம்.

sriram said...

நன்றி ஜலீலா, துபாய் பத்தி எழுதுங்களேன், படிக்க ஆவலாயிருக்கிறேன்

நன்றி எல் போர்ட்

நன்றி பிரதீபா