Friday, December 10, 2010

கம்பெனியை காதலிக்கணுமா? ஒரு விவாதம்

பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ அமெரிக்கவில் பிடிக்காத பத்து இடுகையில் ஒரு கருத்தைச் சொன்னார். இதோ அந்தப் பின்னூட்டம்

//எவ்வளவுதான் சம்பளம், சலுகைகள் கொடுத்தாலும் ஊழியர்களுக்கு தங்கள் நிறுவனம் மீது ஒரு பந்தம், பாசம் இருக்காது.நம் ஊரில் மாதம் 5000 சம்பளம் வாங்கும் ஊழியர் கூட முதலில் தன நிறுவன நலனை பார்ப்பார் பின்பே தன சுய நலம் கருதுவார். ஆனால் அமெரிக்காவில் நேர் எதிர் போக்கு//

இதுக்கு அப்பதிவிலேயே பதில் சொல்ல ஆரம்பிச்சேன். அப்புறம் இதுபத்தி கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதாலும் இது குறித்தான பிறரின் கருத்துகக்ளையும்
அறிய வேண்டும் என்பதாலும் ஒரு தனி இடுகையா எழுதறேன். பல நேரங்களில் இது பத்தி விவாதிக்க வேணும்னு நினைப்பேன்.இப்பத்தான் நேரம் கூடி வந்திருக்கு.

வேலை செய்யும் நிறுவனத்தின் மீது பந்தம் பாசம் எல்லாம் தேவையா? இது நீயா நானாவில் விவாதிக்க நல்ல தலைப்பு. சின்ன லெவலில் என் தளத்தில் விவாதிக்கலாம்.

நான் பார்த்த வரையில் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்து அதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். கம்பெனிக்காக என் உயிரையே கொடுப்பேன் என்றெல்லாம் சொல்வார்கள். பலவருஷம் வேலை செய்வதையும் பிணைப்பையும் இணைத்துப் பேசுவார்கள். என்னைப் பொருத்த மட்டில் இதெல்லாம் தேவையில்லை.

என்னோட கருத்துக்களை முன் வைக்கிறேன், உங்க கருத்துக்களை எதிர் பார்க்கிறேன். முக்கியமா, இனியவன் உலக்ஸ் அவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன். நான் அறிந்த அளவில் அவர் வேலை செய்யும் கம்பெனியோடு ரொம்ப அட்டாச்டு. வேற ரொம்ப நல்ல Opportunity வந்த போதும் நிறுவனத்தை விட்டு விலகாதவர், திடீரென்று போன் பண்ணி மலேசியாவிலிருந்து இந்தியா வாங்கன்னு டீ குடிக்க கூப்பிடறா மாதிரி கூப்பிட்டாலும் வீட்டுக்கே போகாமல் நேரா சென்னை வரும் அளவுக்கு கம்பெனியை காதலிப்பவர். அவர் கருத்தை அறிய ஆவல்.

My Views about Job and its importance in your life:



வேலை செய்யும் கம்பெனிக்கு உண்மையா, நேர்மையா இருக்கணும் அதுக்காக கம்பெனியை காதலிப்பதோ அல்லது குடும்பத்துக்கு முன்னர் வேலையை வைப்பது சரியல்ல. நெறய இந்தியர்கள் குடும்பத்தைக் கவனிக்க நேரமில்லாமல் வேலையோடு ஒன்றியிருப்பதைக் காண்கிறேன். ஒரு மேனேஜர் என்ற வகையிலும் நான் எதிர்பார்த்தது எதிர்பார்ப்பது திறமையான, நேர்மையான,கம்பெனியின் பணத்தைக் களவாடாத, கம்பெனிக்கு வர வேண்டிய லாபத்தை தனதாக்கிக் கொள்ளாத Employee தானே தவிர கம்பெனியைக் காதலிப்பவரை அல்ல. என் டீமில் வேலை செய்த நண்பர்களுக்கு வேறு நல்ல வாய்ப்புகள் கிடைத்த போது சந்தோஷமாக அனுப்பி வைத்தேன். அவங்க இன்னிக்கும் சென்னையிலிருந்தும் மும்பையிலிருந்தும் துபாயிலிருந்தும் Career Guidance கேட்டுத் தொடர்பு கொள்கிறார்கள். என் டீமில் தில்லியில் வேலை செய்த ஒருவருக்கு விப்ரோ மும்பையில் வேலை கிடைத்த போது சேருமாறு அறிவுருத்தி அனுப்பிவைத்தேன். நான் அவரின் Reporting Manager ஆக இருந்தாலும் நான் Rational ஆக
முடிவெடுப்பேன் என்ற நம்பிக்கையில் என்னிடம் அறிவுரை கேட்டார். அதே நண்பர் பின்னர் ஒருநாள் விப்ரோவிலிருந்து வேறொரு கம்பெனிக்கு மாறட்டுமா என்று கேட்ட போது
வேண்டாமெனத் தடுத்தேன். ரெண்டு நிகழ்விலும் SWOT Analysis தான் முடிவு செய்ததே தவிர கம்பெனி மீதான காதல் அல்ல.


An Organization is any day bigger than an Individual.If Dhirubai Ambani is replaceable in Reliance and if Narayanamurthy is replaceable in Infosys, No one is indispensible in any organization. But Anil and Mukesh can never replace their father.

என்னைப் பொருத்தவரையில் ஒருவர் நல்லா வேலை செய்யும் வரையில் கம்பெனி அவரை வைத்துக் கொள்ளும். வேலை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டாலோ, கம்பெனியின் நிதி
நிலைமை சரியா இல்லாமல் போனாலோ அவ்வளவு ஏன் கம்பெனியின் நிர்வாகம் மாறினாலும் அவரை வேலையை விட்டு அனுப்ப ஒரு கணம் கூட தயங்காது. அப்படி இருக்கையில்
Employee மட்டும் ஏன் நிறுவனத்தின் மீது காதல் கொள்ள வேண்டும்?

"Love your profession but never fall in love with your company" இது நாராயண மூர்த்தி அவர்கள் சொன்னதாக வெளிவந்தது. அவர் என்ன அர்த்ததில் இதைச் சொன்னாரெனத் தெரியாது. என்னளவில் இதுக்கு அர்த்தம் - Job Satisfaction மற்றும் சம்பளம் ரெண்டும் சரி விகிததில் இருக்கும் வரை வேலை செய். இது மாறும் போது வேறு வேலை தேடு. சில வேலைகளில் சந்தோஷம் அதிகமாகவும் சம்பளம் குறைவாகவும் சில வேலைகளில் இது மாறியும் இருக்கும், Trade-off நீங்கதான் முடிவு செய்யணும். உங்கள் மீதும் செய்யும் வேலையின் மீதும் (Profession) காதல் கொள்ளுங்கள். நிறுவனத்தின் மீதல்ல. எண்ணங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் வேவ்வேறாக இருந்தால் (Yours and company's) வேறு வேலை தேடுவது நலம்.


“It is not the employer who pays the wages. Employers only handle the money. It is the customer who pays the wages.”
இது ஹென்றி ஃபோர்ட் சொன்னது. நெறய பேர் முதலாளி சம்பளம் கொடுப்பதாக நினைக்கிறார்கள். கஸ்டமர்கள் வாங்குவது குறைந்து பண வரவு குறைந்தால் முதலாளி
சொந்தப் பணத்தில் இருந்து எடுத்துக் கொடுக்க மாட்டர், ஆட்குறைப்புதான் செய்வார். நிலைமை இப்படி இருக்கையில் நாம் மட்டும் ஏன் வேலையைக் காதலித்து நல்ல வாய்ப்புகளை விட வேண்டும்?

அதே போல பணத்தின் பின்னால் ஓவரா அலைந்து வாழ்க்கையை அனுபவிக்காமல் விடுதலும் தவறே. There is no point in being the richest man in the grave yard, you cannot do any business from there - இது புரிஞ்சா போதும். Work - Family Balance தன்னால வரும்.

அம்புட்டுதேன் நம்ம கருத்து, ஒரு நல்ல விவாதத்தைத் துவக்கி வைத்த நண்பர் ராம்ஜி யாஹூ வுக்கு நன்றி.

26 comments:

அமுதா கிருஷ்ணா said...

இப்ப எல்லாம் காதல் என்பது மனிதர்களுக்கு இடையிலேயே இல்லை.தினம் ஒன்று எனத்திரிகிறார்கள்.இதில் கம்பெனி மீது காதல் சுத்த பேத்தல். காசு எங்கே ஜாஸ்த்தியோ அங்கே ஒரே தாவு. இது தானே இப்ப நடைமுறை.அப்படியே காதலித்தாலும் அது ஒரு தலை காதலாய் தான் இருக்கும்.(எனக்கு தேவை இல்லாத சப்ஜெக்ட்)ஏனெனில் am a V.O!!! but my hubby and son in this field..

Vijayashankar said...

Nice!

வெட்டிப்பயல் said...

I do accept your views :-)

Porkodi (பொற்கொடி) said...

குடும்பம் சொந்த நலன் எல்லாத்தையும் பின்னுக்கு தள்ளிட்டு கம்பெனி மேல இருக்கும் காதல் காதலே இல்லை. அது வெறி. பாரபட்சமா எதிலயும் பட்டுக்காம இருக்கேங்கற பேர்ல புது முயற்சிகளை நெகடிவ்வா பேசறது, ஈமெயில்ல ஜோக்ங்க்ற பேர்ல கம்பெனிய கிண்டல் அடிக்க்றதுல ஆரம்பிச்சு தவறான நேரங்கள்ல லீக் பண்றது வரை ஒரு கூட்டம் இருக்கு ‍ அது துரோகம். ரெண்டுமே கூடாது.

நாம நல்லா இருந்தா தான் நம்ம கம்பெனி நல்லாருக்கும் என்ற எண்ணமும் கம்பெனியின் முன்னேற்றத்திற்கு நாமும் காரணம்; காரணமாக இருக்க முயற்சிக்க வேண்டும் போன்ற உணர்ச்சிகள் தானே காதல்? அது இருக்க‌ வேண்டும்.

Porkodi (பொற்கொடி) said...

சுருக்கமா நீங்க சொல்ற மாதிரி சொல்லலாம், வெட்டி சொல்ற மாதிரியும் சொல்லலாம், நான் சொல்ற மாதிரியும் சொல்லலாம். :)

sriram said...

Well said Sri.Valid points. நிச்சயமா இப்போ எல்லாம் கம்பெனி மேல் காதல் இந்தியர்களுக்கு கொறஞ்சுருக்கும். As you said Love your profession but not the Company is right.
அன்புடன்
சுபா

sriram said...

நன்றி அமுதா கிருஷ்ணா

நன்றி விஜயஷங்கர்

நன்றி பாலாஜி

கேடியக்கா : நீங்களா இது, இவ்ளோ சீரியஸாக் கூட எழுத வருமா உங்களுக்கு? நன்றி

நன்றி சுபா

Porkodi (பொற்கொடி) said...

கிகிகி நாங்க சீரியஸா எழுதின சில பல பதிவுகள் ஒரு 50 பேரை சிண்டை பிச்சி ஓட பண்ணியிருக்கு.. எங்களுக்கும் கோவம் வரும்!

RVS said...

இன்றைக்கு நிறைய பேர் வேலையை இருப்பதும் விட்டு விலகுவதும் தன்னுடைய மேலதிகாரியால்தான்.
நிறைய பேர் கம்பனியை விட பாஸை காதலிக்கிறார்கள். காதலிக்கிறார்கள் என்றால் நேசிக்கிறார்கள். நேசிக்கிறார்கள் என்றால் அன்பாய் இருக்கிறார்கள். அன்பாய் இருகிறார்கள் என்றால் ஐ லவ் யு இல்லை. ஐ சப்போர்ட் யு யு சப்போர்ட் மீ என்ற கான்செப்டில் நிறைய கம்பெனிகளில் டீம் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிகாரியின் உருட்டல் மிரட்டல் போன்றவைகளினால் துவேஷம் வளர்ந்து கம்பனி கசந்து போகிறது. இல்லையேல் கம்பெனி இனிக்கிறது. கம்பெனி என்றாலே ஊழியர்களின் தொகுப்பு தானே. எனக்கு தெரிந்து நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் கம்பனியைக் காட்டிலும் Close Companion ஆக உள்ள மேலதிகாரியை விரும்பியதால் இருக்கிறார்கள். வேறு திசைக்கு இந்த விவாதத்தை இழுத்திருந்தால் மன்னிக்கவும்.

Chitra said...

Interesting points. Thank you for sharing these. :-)

Jackiesekar said...

ரொம்ப சரியா சொன்ன ஸ்ரீ ... அதே போல கம்பெனி ஒன்றும் சும்மா தூக்கி ஒன்றும் கொடுத்து விடாது...

இது பற்றி ஒரு விரிவாய் நானும் ஒரு பதிவு எழுதி இருக்கின்றேன்... என் கேள்விக்கான பதில் அந்த பதிவின் கடைசியில் இருக்கும்...

படித்து பார்க்க..
http://www.jackiesekar.com/2009/05/blog-post_29.html

கிளியனூர் இஸ்மத் said...

விவாதத்திற்குரிய கட்டுரை கம்பெனியை காதலிப்பது என்பது ஏமாற்று வேலை.அந்த கம்பெனியிலிருந்து தனக்கு கிடைக்ககூடிய வரவு ஆதாயம் கிடைக்கும் வரை அந்த கம்பெனியை நேசிப்பார்கள் அது இல்லை எனில் ஏனோ தானோதான்.

அதாவது சம்பளத்திற்காக மட்டும் வேலைப் பார்ப்பவர்களிடம் கம்பெனி நேசம் இருக்காது ஆனால் சம்பளம் + கிம்பளம் பெறகூடியவர்களிடம் தங்களின் கம்பெனிமீது நேசம் இருப்பதுபோல் காட்சி இருக்கும் உண்மையில் நேசம் கம்பெனியின் மீது அல்ல தங்களுக்கு கிடைக்கும் சம்பளம் அல்லாத கிம்பளம் மீது.
எனிவே வாழ்த்துக்கள்.

Mugundan | முகுந்தன் said...

சிறிராம்,

நிறைய பேர் "வேலைப் பைத்தியமாக" உழைப்பதைப்
பார்க்கிறோம்,உண்மையாய் எட்டு மணி நேரம் உழைத்தாலே போதும்.
ஆனால் சில நிறுவனங்கள் ஆர்டர் வாங்குவதே அசிங்கமாகத்தான்,ஆனால்
அதற்கு நேர்மாறாக பணிபுரிபவர்கள் ஒழுக்கசீலர்களாக, பெருமிததுடன்
நடந்து கொள்வர்.

வேலையை செய்தால் மட்டும் போதும்.வெட்டியாய் காதலிக்க தேவையில்லை...

சிவராம்குமார் said...

கம்பனியை லவ் பண்றதை விட்டுட்டு நம்ம பாக்கிற வேலைய லவ் பண்ணலாம்!

thiagu1973 said...

//என்னைப் பொருத்தவரையில் ஒருவர் நல்லா வேலை செய்யும் வரையில் கம்பெனி அவரை வைத்துக் கொள்ளும். வேலை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டாலோ, கம்பெனியின் நிதி
நிலைமை சரியா இல்லாமல் போனாலோ அவ்வளவு ஏன் கம்பெனியின் நிர்வாகம் மாறினாலும் அவரை வேலையை விட்டு அனுப்ப ஒரு கணம் கூட தயங்காது. அப்படி இருக்கையில்
Employee மட்டும் ஏன் நிறுவனத்தின் மீது காதல் கொள்ள வேண்டும்? //

கம்பெனி மீது காதல் கம்பெனிக்காக உயிரையும் கொடுப்பேன்னு யாராவது சொன்னா நல்லா பாருங்க அந்த பக்கம் ஏதாவது கமிசன் வாங்கிட்டு இருப்பான்

Prathap Kumar S. said...

//நிலைமை சரியா இல்லாமல் போனாலோ அவ்வளவு ஏன் கம்பெனியின் நிர்வாகம் மாறினாலும் அவரை வேலையை விட்டு அனுப்ப ஒரு கணம் கூட தயங்காது. அப்படி இருக்கையில்
Employee மட்டும் ஏன் நிறுவனத்தின் மீது காதல் கொள்ள வேண்டும்? //

சூப்பரா சொன்னீங்க... பொதுவாக எல்லாக்கம்பெனியிலுமே மேனேஜ்மெண்ட் என்பது சுயநலதனம்தான்.
364 நாட்கள் நல்லவேலை செய்து 1 நாள் சிறுதவறு செய்தாலும் 364 நாட்கள் செய்ததை மறந்து ஒருநாள் செய்த தவறையே பெருசாகஎடுப்பார்கள். ஒரு நொடியில் தூக்கி எறிவார்கள்.

நல்ல ஆஃபர் கிடைத்தால் அந்த நிமிடமே பேப்பர் போட்டுவிடவேண்டும்.
கம்பெனி விசுவாசம்= புண்ணாக்கு

sriram said...

கேடியக்கா comments ரொம்ப சரி.
//நாம நல்லா இருந்தா தான் நம்ம கம்பெனி நல்லாருக்கும் என்ற எண்ணமும் கம்பெனியின் முன்னேற்றத்திற்கு நாமும் காரணம்; காரணமாக இருக்க முயற்சிக்க வேண்டும் போன்ற உணர்ச்சிகள் தானே காதல்? அது இருக்க‌ வேண்டும்.//

அந்த உணர்ச்சிகள் ஓரளவுக்கு கடமைன்னு நினைகிறேன். Employees எல்லோருக்கும் அந்த உணர்வு கண்டிப்பா இருக்கணும். கரீட்டா கேடியக்கா. This is my view.
அன்புடன் சுபா

பத்மநாபன் said...

வேலை என்பது முதலில் வாழ்வாதாரம்....காதல் என்பதெல்லாம் தேவையில்லை ஆனால் ஒரு பிடிப்பு இருக்கவேண்டும்.

Porkodi (பொற்கொடி) said...

romba correct subha akka!

sriram said...

வெங்குட்டு
வித்தியாசமான கோணத்தில் பார்த்திருக்கீங்க. என் கணிப்பு : மேனேஜரை வெறுத்தால் கம்பெனியையும் சேத்து வெறுக்கறாங்க, மேனேஜரை பிடித்திருந்தால் அது அங்கேயே நின்று
விடுகிறது, அதுக்காக கம்பெனியை காதலிப்பதில்லை. தாங்கள் வேலையை விட்டுப் போனாலும், மேனேஜர் வேலையை விட்டுப் போனாலும் அவருடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
மேனேஜரோடு செர்ந்து வேலையை விட்டு அவர் போகும் கம்பெனிக்கு போன பலரை எனக்குத் தெரியும்

தக்குடு said...

'பெல்பாட்டம்' மொதலாளி கிட்ட வாங்கற சம்பளத்துக்கு உண்மையா உழைச்சாளே போதும்! காதல் கத்திரிக்கா எல்லாம் ரெண்டாம்பட்சம் தான்.

iniyavan said...

ஸ்ரீராம்,

நான் வேலை விசயமாக இன்று அதிகாலை கோலாலம்பூர் வந்ததாலும், நேற்று முழுவதும் வேறு வேலையில் பிஸியாக இருந்ததாலும் உங்கள் இடுகையை படிக்க முடியாமல் போய் விட்டது.

இன்றுதான நண்பர் shiridi.saidasan லிங்க் அனுப்பினார்.

என்னைப் பற்றி உங்கள் பதிவில் எழுதியமைக்கு நன்றி.

ஆம். நான் என் வேலையை காதலிக்கிறேன். என் கம்பனியை காதலிக்கிறேன். என் சேர்மனை தெய்வமாக பார்க்கிறேன்.

என் மனைவி, குழந்தைகளை எந்த அளவிற்கு நேசிக்கிறேனோ அதே அளவு என் கம்பனியை நேசிக்கிறேன்.

என் வேலையில் எனக்கு கிடைக்கும் சந்தோசம் அலாதியானது. எனக்கு இது வரை கிடைத்திருக்கும் எல்லா சந்தோசங்களும் என் கம்பனியால்தான் கிடைத்தது.

நண்பர்கள் சொல்வதுண்டு, நான் ரிலையன்ஸில் சேர்ந்து இருந்தால் இதைவிட நிறைய சம்பளம் கிடைத்திருக்கும் என்று.

எனக்கு பணம் பெரிதல்ல. எங்கே எனக்கு நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கிறதோ அங்கேதான் நான் இருப்பேன். எனக்கு 17 வருடமாக என் கம்பனியில் அந்த நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கிறது, அதனால் இங்கே இருக்கிறேன்.

செய்யும் வேலையை காதலியுங்கள், தானாக கம்பனியையும் காதலிக்க ஆரம்பிப்பீர்கள்.

இதில் ஒன்றும் தப்பு இருப்பதாக நான் நினைப்பதில்லை.

என்றும் அன்புடன்,
இனியவன் என்.உலக்ஸ்

Rajaram said...

Hi

I fully agree with RVS comments on individual's attachment to company through their manager. Premji always mentions that the employee takes the decision to stick / leave the company based on their Managers. They only establish the bond between us and the company.

I worked from a very conservative manufacturing (TVS) to a liberal MNC (Oracle) - Still wondering whether the managers are conservative / liberal due to the company policies or by their nature (like a Chicken & Egg story)

Though the current liberalized environment is favouring everyone, I still vote for the old school, where the employee is morally or mentally attached. I still cherish my working with TVS where I learned a lot

Sorry for the long comment..
Cheers, Rajaram

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice post...

Generally, people think being loyal (not love) is sticking to a place for longer. To me loyal is give your utmost until you work there and move on when there is no scope for further development and learning

I assume this makes sense... sometimes I got comments from people "iva oru edathula thanga maatta", which is what people think being loyal. My answer is "I'm much more loyal than people working there for 20 years and don't do their work"

Thanks

Nila said...

I think it is not too late to comment on this post.

I used to think I "love" my company until one time it failed to recognize my contribution due to various reasons. That day I realized I did not love my company as such but loved the way it has treated me thus far and the growth+earning opportunities it gave me. I still love these aspects about being with my company but like other people said it is wise to do your best of what you are entrusted till you are employed and switch if you have a better opportunity. Of course that is what the company expects; to keep its employee happy and satisfied so that they give their best. But if an employee thinks he is not happy, better go elsewhere where you are convinced that "the company keeps you happy".

Two reasons why some people are under the illusion that they love their company
1) They like the way they are treated - personally, financially etc., which is good. It is a personal preference.
2) They convince themselves saying so because of the fear of getting out of the comfort zone and finding another job!

I am sure that anyone who "loves" their company will never choose to stay with the same company during its hard times to offer support unless it is his/her OWN company :)

Sorry for the lengthy post...hope i made some sense...

Nila said...

One more point - By saying "company" different people mean totally different things.
1) Direct reporting Manager
2) Colleagues/peer in the team
3) Top management and their decisions
4) All or combinations of the above

So what they love differs as well.