Saturday, December 11, 2010

மழை - சிறுகதை

நாலு நாளா பெஞ்ச மழையில சென்னை ஒரே வெள்ளக் காடா இருந்தது. எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது.

"அதெல்லாம் இல்ல மல்லிகா! நம்ம ரோட்டில அவ்வளவா தண்ணி நிக்கல.. வீட்ல எல்லாம் போட்டது போட்ட படி கிடக்கு. இன்னிக்கு லீவ் போடாம வந்துட்டு போயிடு!"

".."

"என்ன சின்னக் குழந்தையா? பெரியவன் சரவணனுக்கு லீவ் தானே! அவன ரெண்டு மணிநேரம் பாத்துக்கச் சொல்லிட்டு வந்துரு மல்லிகா. அத்தனை பாத்திரம் கிடக்கு! துணி தோய்க்கணும், வெள்ளிக்கிழமை வீட்டையும் கண்டிப்பா தொடைக்கணும். என்னை கூட லீவு போடாம ஆபிஸ் வரச் சொல்லிட்டாங்க. சீக்கிரமா வந்துரு மல்லிகா.. "

".."

"இதுக்குத்தான் செல்போன் வச்சிருக்குற வேலைக்காரியெல்லாம் வேணாம்னு சொன்னேன், நீங்கதான் ஹாஸ்பிட்டல்ல வேலை செய்யுற ப்யூனின் சம்சாரம்னு சொல்லி வேலைக்கு வச்சீங்க!!" என்று புலம்பிய படியே செல்போனை கீழே வைத்தாள் அனுசுயா. டாக்டர் கேசவன் பிறந்ததே ஹிந்து பேப்பர் படிக்கத்தான் என்பது போல அதில் மூழ்கி இருந்தார்.

"ஏதாவது காதில வாங்கினாத்தானே" என்றவாறே புலம்பலைத் தொடர்ந்தாள்.. " குடிசை ஒழுகுது, குழந்தைக்கு உடம்பு சரியில்ல,பெரிய பையனுக்கு லீவுன்னு மட்டம் போடறதுக்கு எக்கச்சக்க சாக்கு!! கண்டிப்பா சொல்லிட்டேன் வேலைக்கு வந்தே ஆகணும்னு!" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். கம்புயூட்டர் கேம்ஸில் ஆழ்ந்திருந்த வைகுந்த் ஆச்சர்யமாய் அம்மாவைப் பார்த்துக் கேட்டான்.

"இப்போ தானேம்மா ஆபிஸுக்கு போன் பண்ணி லீவ் சொன்னே அதுக்குள்ள மல்லிகா ஆண்டிகிட்ட வேலைக்குப் போகணும்னு சொல்றியே என்ன ஆச்சுமா?"

"அதெல்லாம் உனக்குப் புரியாது வைகுந்த்! வேலைக்காரிக்கெல்லாம் ரொம்ப இடம் கொடுக்கக் கூடாது, இரு உனக்கு காம்ப்ளான் கொண்டு வர்றேன், குடிச்சிட்டு கம்புயூட்டர் கேம்ஸ் விளையாடு" என்று சொல்லிக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். அங்க பாத்தா வைகுந்த் கேமை மூடி வச்சிட்டு ரெயின் கோட்டை மாட்டிக் கொண்டு இருந்தான்.

"எங்கடா கிளம்புற? வெளியில தண்ணி வெள்ளமா ஓடுது! அதுல போனா ஜுரம் வந்திடும் ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே விளையாடு."

"இதே மழையும் தண்ணியும் மல்லிகா ஆண்டிக்கும் அவங்க பசங்களுக்கும் உண்டு தானேம்மா? நீ வேற சின்ன பாப்பாவையும் சரவணனையும் வீட்ல தனியா விட்டுட்டு ஆண்டியை வேலைக்கு வரச் சொல்லிட்ட! சரவணனுக்கும் என் வயசு தானேம்மா ஆகுது? அவன் மட்டும் எப்படிம்மா தனியா சின்ன பாப்பாவைப் பாத்துப்பான், நான் போயி ஆண்டிய இங்க அனுப்பறேன். அவங்க வேலை செஞ்சு முடிச்சு வர்ற வரைக்கும் நானும் சரவணனும் சின்ன பாப்பாவோட விளையாடிக்கிட்டு இருக்கோம், போற வழியில் பாப்பாவுக்கு ஒரு சிரப் பாட்டிலும் வாங்கிட்டு போறேன். நீதானம்மா பொய் சொன்னா உம்மாச்சி கண்ணைக் குத்திடும்னு சொல்லித் தந்திருக்க. இப்ப நீயே பொய் சொல்லியிருக்க, நான் போயி சரவணனுக்கு ஹெல்ப் பண்ணா சாமி உன் கண்ணை குத்தாதில்ல..?"

ஒரு கணத்தில் பத்தே வயதான வைகுந்த் அனுசுயாவுக்கு ஞானியாகத் தெரிந்தான். அடுத்த நிமிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாள் அனுசுயா.

"ஆமாம் மல்லிகா நாந்தான் பேசறேன், இல்ல இல்ல ஆபிஸுக்கு மறுபடியும் போன் பண்ணி லீவ் சொல்லிட்டேன், நீ ஏதாவது
வண்டி பிடிச்சு சரவணனையும், சின்ன பாப்பாவையும் கூட்டிக்கிட்டு இங்க வந்திடு, ஐயா டாக்டர்தானே பாப்பாவை அவரிடம் இங்கேயே காட்டி மருந்து கொடுத்திடலாம்! நீ வேலையெல்லாம் முடிக்கறதுக்குள்ள நான் சமையலை முடிச்சிடறேன். நீங்க இங்கேயே சாப்பிட்டுக்கலாம், நீ பாவம் ஒழுகுற குடிசையில என்ன சமைக்க முடியும்? வைகுந்தும்,சரவணனும் சாயங்காலம்
வரைக்கும் விளையாடிக்கிட்டு இருக்கட்டும், அப்புறமா நிங்க வீட்டுக்குப் போய்க்கலாம்.."

மறுமுனையில் மாற்றத்துக்கு காரணம் புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள் மல்லிகா.


டிஸ்கி : மொதோ முறையா கதை மாதிரி ஒண்ணு எழுத முயன்றிருக்கிறேன்.கேவலமா இருக்கா ரொம்பக் கேவலமா இருக்கான்னு சொன்னீங்கன்னா அடுத்த முறை ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

22 comments:

vasu balaji said...

ரொம்பவே நல்லாத்தானிருக்கு. :)

arasan said...

நல்லா இருக்குங்க.. தொடருங்கள்..

வாழ்த்துக்கள்..

Subhashini said...

ரொம்ப அழகான முயற்சி ஸ்ரீராம். குழந்தைகள் சில சமயம் நமக்கு குருவாக மாறி விடுவார்கள். கதை அருமையாக இருக்கு
அன்புடன் சுபா

செ.சரவணக்குமார் said...

எழுத்து நடை சிறப்பாக இருக்கிறது நண்பா. இப்பிடியான நல்ல முயற்சிகள் தான் பின்னாளில் நீங்கள் எழுதப்போகும் மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்கும். வாழ்த்துகள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

Porkodi (பொற்கொடி) said...

//எழுத்து நடை சிறப்பாக இருக்கிறது நண்பா. //

adhe adhe! :)

Chitra said...

டிஸ்கி : மொதோ முறையா கதை மாதிரி ஒண்ணு எழுத முயன்றிருக்கிறேன்.கேவலமா இருக்கா ரொம்பக் கேவலமா இருக்கான்னு சொன்னீங்கன்னா அடுத்த முறை ரிஸ்க் எடுக்க மாட்டேன்.


.....ச்சே, ச்சே.....அப்படியெல்லாம் இல்லை. நல்லாவே இருக்குதுங்க.

sriram said...

நன்றி பாலாண்ணா

நன்றி அரசன்

நன்றி சுபாஷிணி

நன்றி SSK

நன்றி கேடியக்கா

நன்றி சித்ரா

பத்மநாபன் said...

இயல்பாக அழகாக இருக்கிறது கதை..இக்கதையில் போல் குழந்தைகள் விவரமாகவும் இருக்கிறார்கள்...சில சமயங்களில் விவகாரமாகவும் இருக்கிறார்கள்...

அரசூரான் said...

பாஸ்ஸ்ரீ, கதை அருமைங்க. நட்சத்திர வார மணி மகுடத்தில் இந்த பதிவு ஒரு வைரக்கல்.

a said...

ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீராம்.........

Rekha raghavan said...

சிறுகதை அருமை. எழுத எழுத உங்களுக்கே பிடிபடும். தொடருங்கள்.

sriram said...

நன்றி பத்மநாபன், ஆமா அப்படித்தான் இருக்காங்க

நன்றி அரசூரான், இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?

நன்றி யோகேஷ்

நன்றி ரேகா

எம். சேகர் said...

வணக்கம்.
வாழ்த்துகள்..
சின்ன சம்பவம்.
நேர்த்தியான நடை.
கதை களம், கதை கரு யதார்த்த வாழ்வின் பின்னனி...
நல்ல முயற்சி..

மழை
மழைக்குள் ஒரு மழை...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

mmm...kalkkareenga...dhool...

blogpaandi said...

அருமையான சிறுகதை. வாழ்த்துக்கள். மேலும் பல நல்ல கதைகளை பதிவு செய்யவும்.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அது எப்படிங்க முதல் கதைங்கிறீங்க. ஆனால் சூப்பரா எழுதிறீங்க.

கதை எதார்த்தமாக இருக்கிறது.

இது தான் உங்கள் தளத்த்ற்கு முதன் முதலில் வருகிறேன், ஆனால் உங்கள் கமெண்டுகளை பார்த்து இருக்கிறேன். தொடர்ந்து வருவேன். தொடர்ந்து கதையும் எழுதுங்கள் (ஹி ஹி கதை படிக்கிறது எனக்கு பிடிக்கும்)

sriram said...

நன்றி ஹாஜா மைதீன்

Jayasree said...

இந்த சின்ன குழந்தைங்க பெரியவங்க கண்ண கேட் கணக்கா தொறந்து வைக்கிற கதைய எத்தினி பேரு எத்தினி தபா சொல்வீங்க.. ஷபா!! குமுதம் ஒரு பக்க கதை படிப்பதை நிறுத்தவும். மிச்ச போஸ்ட் எல்லாம் நல்லாவே இருக்கு. நிஜ அனுபவங்கள நல்லா பதிவு பண்றீங்க. தொடருங்க. கதை மட்டும் வேணாம். கண்ண கட்டுது :)

sriram said...

Thanks Jayasree for the honest opinion. I am not a creative person, I know pretty well that I cannot write anything creative. Tried this one for the tamilmanan week.

இனிமே கதை எழுதுற ரிஸ்க் எல்லாம் எடுக்க மாட்டேன், நானுண்டு என் விசா / கம்யூனிகேசன் / Personality Development / Career Development மேட்டர்களுண்டு என்று இருந்திடறேன்.

Jayasree said...

ஹய்யோ என்ன இப்டி சரண்டர் ஆயிடிங்க. எழுதாதீங்கனு சொல்ல வரல. நிறைய வாசிக்கணும். உங்ககிட்ட மொழி இருக்கு, நடை இருக்கு, கரு அதான் கொஞ்சம் கூர்மையாகனும். Haven't come across a humble creator in a long time. Pleasantly surprised. வாழ்த்துக்கள்.

sriram said...

//Jayasree said...
ஹய்யோ என்ன இப்டி சரண்டர் ஆயிடிங்க. எழுதாதீங்கனு சொல்ல வரல. நிறைய வாசிக்கணும். உங்ககிட்ட மொழி இருக்கு, நடை இருக்கு, கரு அதான் கொஞ்சம் கூர்மையாகனும். Haven't come across a humble creator in a long time. Pleasantly surprised. வாழ்த்துக்கள்.//

ஜெயஸ்ரீ.. சரண்டரெல்லாம் ஆகவில்லை, நான் க்ரியேட்டரும் கிடையாது. சபையடக்கமெல்லாம் இல்லை, இதை பலமுறை பலரிடம் சொல்லியிருக்கிறேன். க்ரியேட்டிவிட்டிக்கும் எனக்கும் ரொம்பத் தூரம்.
அதனால்தான் ஒழுங்கா மரியாதையா கதையை மூட்டை கட்டிவிட்டு எனக்கு வருவதை எழுதறேன்னு சொன்னேன்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

மனம் திறந்து... (மதி) said...

நாட்டாமை: உங்க நட்சத்திர வாரப் பதிவுகள் அனைத்தையும் சுவைத்தேன்...மணநாள் பதிவு மனதைத் தொட்டது!

நம்ம கடைப் பக்கம் ஒரு விசிட்டு குடுங்கோ! டுபுக்கு தல, கேடியக்கா, பாவை இவங்கல்லாம் வந்து வாழ்த்திட்டு போயிட்டாகளே!

இன்னைக்கே வந்தா எல்லாருக்கும் வடை உண்டு...உண்டு...உண்டு!


கடை விலாசம் (என் முதல் பதிவு) இதோ: http://thirandhamanam.blogspot.com/2011/01/blog-post_27.html