Saturday, December 11, 2010

நன்றி நண்பர்களே:

கடந்த ஏழு நாட்களாக என்னை தமிழ்மண முகப்பில் பொறுத்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த தமிழ் மண நிர்வாகிகளுக்கும் முக்கியமாக சங்கர பாண்டி ஐயாவுக்கும் மிக்க நன்றி.

டிசம்பர் 12 - தமிழ் நாட்டின் இரண்டாம் தீபாவளி - ரஜினியின் பிறந்த நாள். கமல் ரசிகனான எனக்கு இத்தினம் வேறு வகையில் முக்கியமானது. இன்று எங்களுடைய பதினோறாவது
ஆண்டு மணநாள்.

ஒரே ஒரு வாரம் என் மூஞ்சியை பொறுத்துக் கொள்ளுவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை உங்கள் மூலமாக உணர்ந்தபின், பதினைந்து வருடமாய் பின் தூங்கி முன் எழுந்து சகித்துக் கொண்டிருக்கும் என் சகதர்மினிக்கு இந்த பதிவில் நன்றி சொல்வது என் தலயாய கடமையாய் உணர்கிறேன். ஒரு வார கஷ்டத்தை அனுபவித்த நீங்களும் ஆட்சேபனை ஏதும் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். (நஞ்சப்பா...கடேசி பெஞ்சுல ஒராள் ஆட்சேபணையா புருவத்த சுருக்கறான் பாரு..அமுக்கிப் போடேய்)

சகதர்மினி, அவர், இவர், நன்றி என்றெல்லாம் கூவுவது எனக்கே ரொம்ப அன்னியப்பட்டாலும், மைக் பிடித்தால் கடமை தவறா மோகன் பரம்பரை என்ற வகையில்...பாஸ்டன் கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்... (அவர் இவர்ன்னு கூப்பிட்டா அடுத்த வூட்டு அம்மணியைக் கூப்பிடுற மாதிரி இருக்கு என்பதால் அவள் இவள்ன்னே செல்லமாய் கூப்பிடுக்கிறேன். பெண்ணியவாதிகள் ஓரமா குந்திகினு ஜோடா குடிங்கப்பா ப்ளீஸ்)

முதல் நன்றி பதினஞ்சு வருசத்துக்கு முன்ன சொன்ன காதலை ஏத்துக்கிட்டு, சரித்திரத்தில் நானும் ரவுடி என்று பதிவு செய்ய உதவியதற்காக.

அடுத்த நன்றி அடுத்த நாலு வருசத்தில் போட்ட சண்டைகளில் விட்டுக் குடுத்த மாதிரி நடித்து நான் பெரிய தாதா என்று அதே சரித்திரத்தை திருத்தி எழுதியதற்காக.

அப்பாலிக்கா கல்யாணத்துக்கும், அதுக்கும் மேல பதினோரு வருசமா என்னைப் பொறுத்துக் கொண்டதுக்கும், சென்னையை விட்டு வெளியே போக மாட்டேன் என கிணற்றுத் தவளையாக
இருந்த என்னை தில்லி ஆஃபரை எடுத்துக்கச் சொன்னதுக்கும்,என்னை அமெரிக்கா அழைத்து வந்ததுக்கும் அப்படின்னு ஒவ்வொண்ணுக்கா அவளுக்கு நன்றி சொல்லணும்னா, இன்னும்
ஒரு மூனு வாரம் நான் மட்டுமே தமிழ்மண ஸ்டாராக ஓட்டவேண்டியிருக்கும். (சங்கர பாண்டி ஐய்யா அப்பிடியே ஓடிப் போயிடுன்னு சொல்லிட்டார் அவ்வ்வ்வ்)

நான் இதுவரை எடுத்த முடிவுகளிலேயே மிகச்சிறந்த முடிவுகள் இரண்டு, ஒன்று என் இன்றைய மனைவியை 15 வருஷத்துக்கு முன்னர் காதலியாக்கிக் கொண்டது மற்றது 2002 இல் புதுதில்லிக்கு சென்றது. 'comfort zone'-ஐ விட்டு வெளியே வந்தால் தான் உலகம் எவ்வளவு பெரிசுன்னு தெரியும். "A ship is safe in harbor, but that's not what ships are for"ன்னு சும்மாவா சோக்கா சொன்னாங்க? நானும் என்னுடைய 'comfort zone'-ஐ விட்டு வந்தப்புறம்தான் என்னுள் பலப்பல மாற்றங்கள். நான் அன்று தயங்கிய போது என் மனைவி மட்டும் "போய்த்தான் பாக்கலாமே"ன்னு சொல்லாமல் இருந்திருந்தா இன்று நாங்கள் பல விசயங்களை அடைந்திருக்கவே முடியாது.

புதுதில்லியில் இருக்கும் போது ஒரு நாள் நான் திடீரென்று "வேலையை விட்டு விட்டு பிசினஸ் செய்யப்போறே"ன்னு சொன்ன போது அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. சில
மாதங்களுக்குப் பிறகு "Business is not my cup of tea, I am getting back to work"ன்னு சொன்னபோதும் ஒன்றும் சொல்லலை. வேறொருவராய் இருந்தால் "நான் அன்னிக்கே சொன்னேனே கேட்டானா பாவி மனுஷன் "- பாட்டு ஆரம்பமாகியிருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள சில ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு பண உதவி செய்யவேண்டும் என்பது என் கனவு. அது பற்றி சொன்ன போது "எவ்வளவு பணம் குடுக்கப் போற?...எப்படி..?"
என்றெல்லாம் மருந்துக்கு கூட கேட்கவில்லை. இப்போதும் நான் என் குடும்பத்தாருக்கு பணமோ / கிப்ஃடோ குடுக்கும் போது "இவ்வளவுதான் குடுக்கப் போறியா, அவங்களுக்கு இது
போதுமான்னு கேட்டியா - வேணும்னா இன்னும் கொஞ்சம் கொடுக்கலாமே" என்பதைத் தவிர வேறு தர்க்கம் ஏதுவும் அவர் செய்து கேட்டறியேன். எத்தனை பேர் மாமியாருக்கும்
நாத்தனாருக்கும் கணவன் பணம் கொடுக்கும் போது இப்படி சொல்வார்கள் என்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். நண்பர்களுக்கு பல தடவை பண உதவி செய்து சில சமயம் நஷ்டப்
பட்ட போதும் கூட இன்றளவில் நான் செய்யும் உதவிகளை அவர் ஆட்சேபித்து ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.

இதற்கெல்லாம் மேல் அவருக்கு அமெரிக்காவிற்கு ட்ரான்ஸ்பர் ஆகிய போது, நானும் எல்2 விசாவில் அவர் கூடவே வந்து இங்கு வேலை தேடிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.
வந்த அடுத்த மாதமே எனக்கு வேலை கிட்டியதென்றாலும், அந்த முப்பது நாளும் நான் சம்பாதிக்கவில்லையே என்று கவலைப் பட்டுவிடக்கூடாதே என்று அவர் கையில் இருந்த பணம் எல்லாவற்றையும் என் கையில் குடுத்து, வங்கிக் கணக்கின் ஆன்லைன் ஆப்ரேஷனையும் என்வசம் ஒப்படைத்து, அவர் செலவுக்குக் கூட என்னிடம் பணம் வாங்கிச்சென்ற அவரின் அன்பையும், பாசத்தையும் நினைத்து நெகிழ்ச்சியோடு ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

என்னுலகத்தில் அவள் ஒரு முக்கிய அங்கம், அவளுக்கு உலகமே நான் தான். இப்பேற்பட்ட பெருமையை அளித்த அவளுக்கு இந்நன்னாளில் என் வாழ்த்துகளும் நன்றியும்.

இந்த நட்சத்திர வாரம் என் மணநாளில் முடியுமாறு வாய்ப்பை வழங்கிய தமிழ் மண நிர்வாகிகளுக்கும், ஊக்கமளித்த உங்களுக்கும் நன்றி..

அடுத்து வரும் தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி உங்களிடமிருந்து "என்றும் அன்புடன்" விடை பெறுகிறேன் நண்பர்களே...

51 comments:

சிவராம்குமார் said...

திருமண நாள் வாழ்த்துக்கள்!

Porkodi (பொற்கொடி) said...

yaaay!!!! (இது எதுக்குன்னு உங்களுக்கு அப்புறம் சொல்றேன். Happy anniversary!!!

yaaaaaaay!!!!! (இது ஸ்டார் ஆனதுக்கு..)

yaaaaaaaaaaaaaayy!!!!! (இது நீங்க நினைக்கறதுக்கே தான்..)

Porkodi (பொற்கொடி) said...

tamilmanam doesnt show it yet?

Savitha said...

வாழ்த்துக்கள். ஆமா நீங்க எல் ௨ விசாவில் சென்று கிரீன் கார்டுக்கு மாறிய கதை சொல்லுங்க.

ராமலக்ஷ்மி said...

இனிய மணநாள் வாழ்த்துகள்:)!

pichaikaaran said...

தமிழ் மணத்தில் மட்டும் அல்ல...எங்கள் மனத்திலும் இடம் பிடித்து விட்டீர்கள்

பத்மநாபன் said...

ஸ்ரீ க்கும் உங்கள் ஸ்ரீமதிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ...வாழ்க பல்லாண்டு இனிய காதல் தம்பதியராய் ....
தமிழ்மண சிறப்பு வாரத்தை இனிதாக நடத்தி சென்றதற்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

ஆங்கில பயிற்சி மற்றும் அமெரிக்க விபரங்களை அவ்வப்பொழுது பகிரவும் ...

ஜோதிஜி said...

விடைபெறும் நேரத்தில் என் முதல் வாழ்த்துகள்.

மணநாள் வாழ்த்துகள்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால்...................

iniyavan said...

ஸ்ரீராம்,

நீங்கள் எழுதியதிலேயே எனக்கு பிடித்த இடுகை இதுதான்.

காரணம், உங்கள் மனைவிக்கு நன்றி சொன்னவிதம் என்னை கவர்ந்தது.

Sathish Kumar said...

மண நாள் வாழ்த்துக்கள்...தம்பதியர்க்கு...!
மன நிறைவான பதிவு....ஸ்ரீராம்!

sriram said...

நன்றி சிவா

நன்றி பொற்கொடி

நன்றி சவிதா, என் விசா கதையைத்தான் ரெகுலரா சொல்லிக்கிட்டு இருக்கேனே

நன்றி ராமலஷ்மி

நன்றி பார்வையாளன்

நன்றி பத்மநாபன்

நன்றி ஜோதிஜி

நன்றி உலக்ஸ்

நன்றி சதீஷ்

Subhashini said...

ஸ்ரீ உன் பதிவுகளிலே இதுதான் பெஸ்ட் ஒரு அழகான கவிதை மாதிரி இருக்கு. மணநாள் வாழ்த்துக்கள் உங்க இருவருக்கும்
அன்புடன்
சுபா

Chitra said...

டிசம்பர் 12 - தமிழ் நாட்டின் இரண்டாம் தீபாவளி - ரஜினியின் பிறந்த நாள். கமல் ரசிகனான எனக்கு இத்தினம் வேறு வகையில் முக்கியமானது. இன்று எங்களுடைய பதினோறாவது
ஆண்டு மணநாள்.


...HAPPY ANNIVERSARY! :-)

vasu balaji said...

மணநாள் ஸ்டார் வாழ்த்துகள் ஸ்ரீராம்:)

கபீஷ் said...

Happy Anniversary SriRam
Lucky you :)

Kanchana Radhakrishnan said...

மணநாள் வாழ்த்துக்கள் உங்க இருவருக்கும்.

Ravichandran Somu said...

இனிய திருமண் நாள் வாழ்த்துகள்.

அருமையான பதிவு...

வாழ்க வளமுடன்!

வருண் said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள், ஸ்ரீராம்! :)

Jackiesekar said...

ஸ்ரீ இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

இப்படியும் பொண்டாட்டிக்கு ஐஸ் வைக்கலாம் என்று கத்து கொடுத்த குருவுக்கு கோடி நமஸ்காரம்..

அதே போல் தினமும் உன்னை பதிவு எழுத வைத்த தமிழ்மணத்துக்கு என் நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள். மனைவி அமைவதெல்லாம் கண்டிப்பாக இறைவன் கொடுத்த வரம்தான்.
வெகு அழகான உணர்ச்சி பூர்வமான, இதயம் தொட்ட பதிவுக்கு நன்றி.

sriram said...

நன்றி சித்ரா

தாங்க்ஸ் பாலாண்ணா

நன்றி கபீஷ், கண்டிப்பா நான் லக்கிதான்

நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

நன்றி ரவிச்சந்திரன்

நன்றி வருண்

தேங்க்ஸ்டா ஜாக்கி, ஐஸ் எல்லாம் வைக்கல, உண்மையைத்தான் சொன்னேன். பொண்டாட்டியை ஐஸ் வைக்க உனக்கு சொல்லி வேற கொடுக்கணமாக்கும்?
ஆமாடா சங்கர பாண்டி ஐயாவாலத்தான் ஏழு நாள்ல ஒன்பது பதிவு எழுதினேன்.

நன்றி வல்லிம்மா.

அமுதா கிருஷ்ணா said...

HAPPY ANNIVERSARY.

sriram said...

நன்றி அமுதா கிருஷ்ணா

a said...

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!!!!!

அரசூரான் said...

பாஸ்ஸ்ரீ, இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

ஆதி மனிதன் said...

திருமண நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ ராம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளத்தை விசிட் செய்தபோது ஒரு மனநிறைவான பதிவை படிக்க நேர்ந்தது.

sriram said...

நன்றி யோகேஷ்

நன்றி அரசூரான்

நன்றி ஆதிமனிதன்.

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்

ILA (a) இளா said...

நன்றி! வணக்கம்! அண்ணனுக்கு சோடா குடுங்கப்பா!

Rajaram said...

Happy anniversary wishes..Really nice way to thank the partner for their sacrifice & motivation. Kannadasan summava sonnar "Manaivi amaivadellam iraivan kodutha varam..."...

Varum kodutha iraivannukum Nanri

Cheers, Rajaram

Dubukku said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள் ஸ்ரீராம். நேத்திக்கு ரொம்ப பிசியா இருந்திருப்பீங்க அதான் இன்னிக்கு சொல்றேன் (என்ன தான் நியாபகம் வைச்சிகிட்டாலும் மறந்து போயிட்டேங்கிறத எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு பாருங்க).

Anyway hope you both had a great time. இன்னமும் பல்லாண்டு சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

செ.சரவணக்குமார் said...

நெகிழ்ச்சியான பதிவு. தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை வாசித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நட்சத்திர வாரம் முடிந்துவிட்டாலும் தொடர்ந்து எழுதவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

திருமண நாள் வாழ்த்துகள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்னுலகத்தில் அவள் ஒரு முக்கிய அங்கம், அவளுக்கு உலகமே நான் தான்.//

மணநாள் வாழ்த்துகள்.

உலகமே இனி புது வரவால் மாறிடும் இருவருக்கும்..

அட்வான்ஸ் வாழ்த்துகள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Happy Anniversary..................

Wonderful post...ippadi nanri sollavum oru manasu venume... great... both...

பிரதீபா said...

இத்தன மகிழ்ச்சியா நீங்க உங்க காதல் மனைவியப் பத்தி சொன்னது பாராட்டக்கூடிய விஷயம் , உங்க மனைவிக்கும் பெருமையா இருக்கும். வாழ்த்துக்கள்.

sriram said...

நன்றி சி.பி. செந்தில்

சோடா சிபாரிசுக்கும், படிக்காமலே போட்ட பின்னூட்த்துக்கும் நன்றி இளா

நன்றி ராஜாராம்

நன்றி வாத்யார், எல்லாம் உங்க ஆசீர்வாதம்..

நன்றி SSK, கண்டிப்பா தொடர்ந்து எழுத முயல்கிறேன்

நன்றி சாந்தி, ஓரிரு நாட்களில் தொடர்பு கொள்கிறேன்

நன்றி புவனாக்கா

நன்றி பிரதீபா

Deekshanya said...

chancey illa.
You are lucky to get her as a wife, and so is she to get you as her better half.
Nalla eluthi irukinga. loved the bit after you started addressing her as "aval". Keep writing!
And wishes to celebrate many many more years of togetherness!

Cheers
Deeksh

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

ILA (a) இளா said...

//படிக்காமலே போட்ட பின்னூட்த்துக்கும் நன்றி இளா//
கண்டுபுடிச்சது எப்படின்னு இப்பத்தாங்க தெரியுது. சே.. எனக்கே மனசு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. மன்னாப்புங்க(எதுக்குன்னு உங்களுக்கும் தெரியுமே)

hari raj said...

Best Wishes Sriram!!

Hari Rajagopalan

Nila said...

Congratulations Sriram Sir!
It is interesting to know how a man likes very simple things about his wife. Well written!

எல் கே said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். தாமதமான திருமண நாள் வாழ்த்துக்கள்

தமிழ் அனானி said...

ய்யாய்ய்ய்ய்ய்ய்... யாரு மேன் எங்க ஜாக்கி அண்ணனை... ‘டா’ போட்டு பேசறது??


நெஞ்சுல மாஞ்சா இருந்தா.. ஜாக்ஸன்வில் வந்து பாரு மேன்..!!

ரொம்ப... ரொம்ப... லேட்டான திருமண நாள் வாழ்த்துகள்..!! :) :) :)

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும்.

ஜலீலா

தக்குடு said...

நான் ஒரு முட்டாப்பய நாட்டாமை! எவ்ளோ லேட்டா வந்துருக்கேன் பாருங்கோ! மொதல்ல ரெண்டுபேருக்கும் அடியேனோட வாழ்த்துக்கள். நம்பினா நம்புங்க நாட்டாமை, பதிவை படிக்கும் போதே மனசு ரொம்ப நெகிழ்ந்து போயிடுத்து..:) என்ன ஒரு பெருந்தன்மையான மனசு அந்த அக்காவுக்கு!னு எனக்கு நானே சொல்லிகிட்டேன். அந்த கப்பல் பழமொழியும் எனக்கு ரொம்ப பிடிக்கும், பெங்களூர்ல என்னோட முதல் கம்பெனிலேந்து கடைசியா 2500 பேருக்கு அனுப்பின மெயில் அதுதான்.

Vasagan said...

Sri Ram
innaiku than unnudyia blog vanthaen athuvum inntha postyai parthavudan chooma padichu poka manasuvaravillai. Namalai mathri oruthanaa intu intha comment.
oru namabanaka intru ( eaan kalyana naalil muttum than valthanuma unkal mathri thampathikaluku enndrum kalyana naal than.) pol enndrum irruvarum vallaka.

Anbudan
Sankar

சாமக்கோடங்கி said...

எனது அண்ணன் (முன்னர் ஒரு தமிழ் ப்ளாக் வைத்து இருந்தார்), தற்போது பாஸ்டன் அருகே தான் இருக்கிறார்.. மெயில் ஐடி தந்தால் அறிமுகம் செய்ய வசதியாக இருக்கும்... அவரும் தமிழ் படிப்பதில் ஆர்வம் மிகுந்தவர்..

சாமக்கோடங்கி said...

இவ்வளவு கவிதைத்துவமாக மனைவியை நேசிக்கிறீர்கள் என்றால் அவர் மிகவும் கொடுத்து வைத்தவரே .. அதே போல இவ்வளவு பரிவான மனைவியைப் பெற்றமையால் நீரும் கொடுத்து வைத்தவரே... மிகவும் தாமதமான திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.. இதே போன்றதொரு பதிவை இன்னும் முப்பது வருடங்கள் கழித்து எதிர்பார்ப்பேன்.. உங்களிடமிருந்து..

அன்புடன்
சாமக்கோடங்கி..

TamilTechToday said...

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வணக்கம்..வாழ்த்துக்கள் ஸ்ரீ!

Anonymous said...

Hi,
I enjoy reading your blog, though I did not comment so far.

Please accept my congratulations on the arrival of your beautiful daughter. May all the Dad's rejoice in getting daughters and the world will be a better place.

And I want to appreciate you for being lucky to have a soul partner in wife.

But I would say that your wife too is a lucky lady, to have her husband appreciate her to the world!

Enjoy!