Monday, December 28, 2009

நல்ல மேனேஜரின் நற்குணங்கள் நாலு - பாகம் 2

பாகம் 1 இங்கே காணலாம்.

போன பாகத்தில் என்னை பாதித்த மேனேஜர்களின் 4 நல்ல குணங்கள் பத்திப் பாத்தோம், இந்த பகுதியில் இன்னுமொரு 4 பாயிண்ட் பாக்கலாம்.

1. பாரபட்சம் காட்டாதீர்கள் :
As the famous saying goes "Employees don't intend to leave the company but their managers" மேனேஜர்களின் மீது மிக அதிகமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு - பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்பது. டீமில் யாருக்கும் ”Special Treatment” கொடுக்காதீர்கள். ஜால்ரா அடிப்பவர்கள் / ஜொள் விட அனுமதிக்கும் பெண்கள் /மேனேஜருக்கு பர்சனல் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு பாரபட்சம் காட்டுவது நீங்களே உங்களுக்கு குழி பறித்துக் கொள்வதற்கு சமம். நல்ல வேலையாட்கள் உங்கள் டீமில் தங்க மாட்டார்கள்.

பெண்களை இரவு ரொம்ப லேட்டாக ஆபிஸில் வேலை வாங்காமல் சீக்கிரம் அனுப்புவது பாரபட்சம் ஆகாது.

2. பாராட்டுங்கள் தாராளமாக: தவறுகளை சுட்டிக் காட்டும் போதும், திட்டுக்களையும் பிறருக்கு தெரியாமல் தனிமையில் செய்யுங்கள். டீமில் ஒருவர் செய்த நல்ல செயலை உடனடியாக பாராட்டுங்கள் அதையும் பொதுவில் செய்யுங்கள். Never mince words while appreciating. Appreciation email அனுப்பும் போது மொத்த டீமுக்கும் copy பண்ணி அனுப்புங்கள், முக்கியமாக மேனேஜ்மெட்டில் இருக்கும் ஒருவரையும் இமெயிலில் சேருங்கள்.அப்ரைசல் செய்யும் போதும் முதலில் ஒருவர் செய்த நல்ல விஷயங்களை சொல்லிவிட்டு பிறகு குறைபாடுகளை சொல்லுங்கள்- உங்கள் மீதான மதிப்பு கூடும்.

3. ஆபிஸ் நேரத்துக்குப் பின் அழைக்கும் போது அனுமதி கேளுங்கள்:

கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானது இது. ஆபிஸ் மட்டுமே வாழ்க்கையில்லை, எல்லோருக்கும் Personal Life உண்டு, ஆபிஸ் நேரத்துக்குப் பின் ஒருவரை தொந்தரவு செய்யும் உரிமை எந்த
மேனேஜருக்கும் இல்லை. முடிந்த வரை வேலை நேரத்துக்குப் பின் வேலை சொல்வதையோ / போன் பண்ணுவதையோ தவிருங்கள், தவிர்க்கமுடியாமல் அழைக்கும் பட்சத்தில் முதலில் அகால நேரத்தில் அழைத்தமைக்கு வருத்தம் தெரிவித்து விட்டு அவரால் பேச இயலுமா என்று கேட்டு விட்டு விஷயத்தைச் சொல்லுங்கள்.

4. Exit Interview :

Every good thing in life has an end, your mate's tenure in your team is no exception- இதனை எப்போதும் மனதில் வையுங்கள். டீமில் ஒருவருக்கு நல்ல வாய்ப்பு அமைந்து அவர் resign செய்தால் அவரை வாழ்த்தி அனுப்புங்கள். கண்டிப்பாக ஒரு Exit Interview
நடத்துங்கள். கம்பெனியில் / உங்கள் டீமில் சரியில்லாத விஷயங்கள் எவை என்று கேளுங்கள். ஏதாவது ஒன்றை மாற்றி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் அவர் எதை மாற்றுவார் என்று கேளுங்கள். அவர் உங்கள் பெயரை Manager's reference ஆக எப்போதும் பயன் படுத்தலாமென
சொல்லுங்கள்.

ஒரு மாசத்துக்கும் மேலாக எதுவும் கிறுக்கவில்லை, அப்படி இருந்தும் இந்தப் பக்கம் அடிக்கடி வந்து ஏன் கிறுக்கலைன்னு கேட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி..

ஒரு பத்து நாள் Florida, Bahamas Trip போயிட்டு வந்தேன், பயணக் கட்டுரை எழுதுற அளவுக்கெல்லாம் சரக்கு இல்லைங்க, எனவே படங்கள் போடுறேன் அடுத்த பதிவில்...

Friday, November 20, 2009

டெண்டுல்கர் - இப்பவாவது இவர இந்த உலகம் நம்புமா?

சச்சின் டெண்டுல்கர் - Probably இந்தியாவில் அதிகம் நேசிக்கப்பட்ட அதே சமயம் அதிகம் குறை கூறப்பட்ட பெயர்.

இன்னுமா இவன இந்த உலகம் நம்புதுங்கற ரேஞ்சில இருக்குற பல பேர நமக்குத் தெரியும், ஆனால் இன்னுமா இவரது திறமையில் சந்தேகம், இன்னுமா இவர இந்த உலகம் நம்பலன்னு சொல்லக்கூடிய வெகுசிலரில் சச்சினும் ஒருவர்.



இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவரது Match Saving Century க்கு அப்புறமாவது டெண்டுல்கருக்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துவார்களா? எத்தனையோ Match Winning Innings ஆடியிருந்தாலும் இந்த இன்னிங்க்ஸும் மிக முக்கியமான ஒன்று.
லோஷனின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கிய சச்சின் Critics இன் கூற்றையும் தவறென நிரூபித்திருக்கிறார். இனிமேலாவது சச்சின் முக்கியமான தருணங்களில் ரன் எடுப்பதில்லை / தனக்காக ஆடுகிறார், டீமுக்காக ஆடுவதில்லைன்னு சொல்றதையெல்லாம் நிறுத்துவார்களா பெரியவர்கள்??

சச்சினின் சாதனைகள் மிக அதிகம், எல்லாருக்கும் தெரிந்த விஷயங்களை மீண்டும் சொல்லி போர் அடிக்க விரும்பவில்லை, இதை மட்டும் பாருங்கள்
30,055 இண்டர்நேஷனல் ரன்கள், 88 சதங்கள், 144 அரை சதங்கள், டெஸ்ட் ஆவரேஜ் 54.79, ODI average 44.50 at a strike rate of 85.79. இதற்கு மேலும் ஒரு குழு ஆட்டத்தில் தனி நபரிடம் என்னதான் இந்த பாழப்போன விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.

நவ்ஜோத் சித்து சொன்னது போல - Statistics is like mini skirt, it reveals most of the things but not the most import thing. சச்சின் எண்களில மட்டுமல்லாமல் Attitude / Commitment போன்றவற்றிலும் மிக உயர்ந்து நிற்கும் ஒரு மனிதர். ஆஸ்திரேலியாவிற்கு
எதிரான ஷார்ஜா ஆட்டங்கள், தந்தை இறந்து சில நாட்களிலேயே விளையாடச் சென்றது, சிட்னி சென்சுரி இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

ஐந்தரை அடி கூட உயரம் இல்லாத ஒரு இந்தியர் இப்படி விஸ்வரூபம் எடுத்திருப்பதை நினைத்து பெருமை படுங்கள், குறை சொல்வதை நிறுத்துங்கள்..

AB, this lil prick is going to make more runs than you one day... ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மெர்வ் ஹூக்ஸ் ஆலன் பார்டரிடம் சச்சின் பத்தி சொன்னது - அவர் வாயில் சர்க்கரையை தூக்கி கொட்ட - அன்றே என்ன ஒரு நிதர்சனம்.....


If I've to bowl to Sachin, I'll bowl with my helmet on. He hits the ball so hard: Dennis Lillee. He is 99.5 per cent perfect. I'd pay to see him: Viv Richards.

நம்ம விமர்சகர்கள் விவியனைவிடவும் லில்லியை விடவும் அதிகம் கிரிக்கெட் பத்தி தெரிஞ்சவங்களா??

Monday, November 16, 2009

இண்டர்வியூ அட்டெண்ட் செய்வது எப்படி - பாகம் 2

பாகம் 1 இங்கே காணலாம்

போன பதிவில் இரண்டாம் பாகம் திங்களன்று எழுதறேன்னு சொல்லியிருந்தேன், சொன்ன சொல்படி இதோ இரண்டாம் பாகம் (அம்பி கண்டிப்பா காரித்துப்புவீங்கன்னு தெரியும், வாங்கிக்க கைநீட்டி நிக்கறேன்)

நேர்முகத்தேர்வுக்கு தயாராவது பற்றி பாத்துட்டு உள்ளே போவது வரை சொல்லி நிறுத்தினேன். இப்போ மேல பாக்கலாம்

* உள்ள போறதுக்கு முன்னால கைப்பேசியை கண்டிப்பா அணைக்கவும், இண்டர்வியூவுக்கு நடுவே உங்க செல்போன் “அட்டட்றா நாக்க முக்க”ன்னு பாடினா, இண்டர்வியூ கோவிந்தா..

*உள்ள போனவுடன் அங்கிருப்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை அவசியம்.

*கைகுலுக்குவதற்கு முதலில் நீளும் கை உங்களுடையதாக இருக்கட்டும், Give a Firm Handshake, that shows the confidence.


* In a group interview setting, make eye contact. 80% of the eye contact should be with the person that asked the question. Make sure you make eye contact with the others in the room as well.




*நாற்காலியில் முழுவதுமாக வசதியாக உட்காருங்கள், நாற்காலியின் முனையில் உட்காருவது மரியாதையின் அடையாளம் என்று எவன் சொன்னான்னு தெரியல, அது Lack of Confidence இன் அடையாளம். டேபிளின் மேல் கையை உன்றாதீர்கள், That is too casual. Crossing the legs is not an offense by any means, Be comfortable, thats the key..

* அஞ்சு முக்கியமான கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பதுன்னு இந்த பதிவில் பார்த்தோம், மத்த படி டெக்னிகல் கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிஞ்சத சுருக்கமா சொல்லுங்க. தெரியாத விஷயத்த தெரியாதுன்னு தெளிவா சொல்லுங்க. (உப்பு இருக்கான்னு கேட்டா புளி இருக்குன்னு சொல்லக்கூடாது)

Don't Beat around the bush, If you don’t know the answer do not try and fake it—simply say, “Manager’s name, I have not had the opportunity to work on that tool, but I have no problem facing challenges and I am a quick learner.” This would get you more points than beating around the bush. That Said, If you are asked about a specific technology and you have not used that tool but something similar or a competing tool explain what you have done with that similar tool.


*The most important thing is to understand where it bleeds and be a bandage to the wound. Every hiring manager has a pressing need, you need to find that out and explain as you can solve his problem. Lot easier said than done but this is no rocket science if you do the following systematically.

The more questions you ask the Hiring Manager the more directions you will get.

Need to find out from the hiring manager what type of candidate he/she is looking for and what is the project all about-what are they trying to do (these are the driving directions)

Bring the interview into a conversation (not a ping pong interview). You can ask questions throughout the interview not just at the end.

Do not babble (repeat yourself or continue to talk about nonsense) and over talk, do not overpower the conversation Don’t ever interrupt the interviewer when they are speaking. Many times interviewer will ask a question and the candidate will go on and on and on in their answer and this is not a two way

*உதாரணங்களை ரெஸ்யூமேவிலிருந்து அடிக்கடி எடுத்துக்காட்டுங்கள், உதாரணமாக, Have you ever worked on Weblogic server? என்ற கேள்விக்கு Yes, I did, if you look the 2nd Project on my resume the பீரங்கி project at கோக்ரான் மேக்ரான் கம்பெனி, we built the பீரங்கி using Weblogic server, you can also see in my resume that I have used this in A,B,C projects..ன்னு பதில் சொல்லுங்க.

*இது மிக முக்கியமானது : When talking about previous assignments, use “I” instead of “we”.

*Use the White board when you feel the need, don't wait for someone to offer you the white board, ask for it.

*அந்தப் பக்கம் இருப்பவர்(கள்) கேள்விகளை முடிச்சிட்டா, விட்டா பொதும்னு ஓடி வந்துடாதீங்க. உங்களுக்கு கேக்க வேண்டியது அனைத்தையும் கேளுங்க (For Ex, what is the role of the person you are looking to hire, when do you intend to hire, what is the future of this person in the organization, what is the salary package offered etc)


Do not assume that you got the job-Do not make comments like “I look forward to working with you…” the hiring manager has not offered the job to you why are saying its going to be great working with them????

Do not ask the manager how you did?


At the end of the interview let them know 3 things:

1. Thank them for their time

2. Let them know that you are interested in the opportunity and you are confident in your abilities to do a great job

3. Indicate as when you can start working if the position is offered to you.


இண்டர்வியூக்கள் பத்தி முழுசாவெல்லாம் எழுதவது கடினம்... எனக்குத் தெரிந்த சில விஷயங்கள சொல்லியிருக்கேன், எப்படியிருக்குன்னு சொல்லுங்க Please feel free to share your views too..

Friday, November 6, 2009

இண்டர்வியூ அட்டெண்ட் செய்வது எப்படி:

ஒரு வாரமா ஆபிஸ்ல பயங்கர ஆணி, இந்தப் பக்கம் வரமுடியல, எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பீங்களே.. உங்கள அப்படியே விட்ற முடியுமா? அதனால அடுத்த
மொக்கையுடன் வந்து விட்டேன்..

இப்பொழுதெல்லாம் First level Phone Interview பழக்கத்தில் இருக்கு, அமெரிக்காவில் பெரும்பாலும் முதல் கட்டத்தேர்வு தொலைபேசியில் நடக்கிறது, இந்தியாவிலும் இந்த பழக்கம் ஆரம்பிச்சிருக்கு. முதல்ல இதப்பத்தியும் பின்னர் நேர்முகத்தேர்வு பற்றியும் பார்க்கலாம்.

Phone Interview : இதன் சாதகமான விஷயம் - Time Saving. ஒரு முப்பது நிமிட உரையாடலில் Employer- Prospective candidate பத்தியும் Candidate - Propective Employer / Postion பத்தியும் தெரிந்து கொள்ளலாம். பல நேரங்களில் இண்டர்வியூவுக்கு போன பின்புதான் அந்த வேலைக்கும் நமக்கும் ஒத்து வராதுன்னுதெரிய வரும்(Due to various reasons). இதுக்காக லீவு போட்டுட்டு லொங்கு லொங்குன்னு ஓடிப் போயிருப்போம்..

இதன் பாதகமான விஷயம் - You don't have your personality and your body language to compliment what you speak.
அதனால பேசும்போது ரொம்ப கவனமா இருக்கணும், சொல்லும் வார்த்தைகள் உங்க பர்சனாலிடிய பிரதிபலிக்கணும்.

செய்ய வேண்டியவை:

Take the call in a quiet place;speak up and speak clear – do not ramble and be articulate with your answers

Speak slowly but loudly. Check with the interviewer if you are audible and clear to him/ her.

Take the call from a reliable phone, make sure your cell phone is fully charged.

Disable the call waiting option on your cell phone.

Have a copy of your resume in front of you and the job description


கேட்கப்படும் கேள்வி புரியலன்னா, மறுபடியும் கேக்கச் சொல்லுங்க.

உரையாடலின் முடிவில் நீங்க கேட்பதற்கு கேள்விகள் தயாராக இருக்கட்டும் - What are the key skills required, When do they intend to hire,What is the project all about, what is the salary, ஆபிசில் பிளாக் எழுதலாமா/கூடாதா etc.

செய்யக்கூடாதவை:

உங்க நண்பரை விட்டு போன் இண்டர்வியூ எடுக்கச் சொல்லாதீங்க, நேரில் போகும்போதோ அல்லது வேலை கிடைத்த பின்னரோ மாட்டிக்குவீங்க.

Engage in a converation, Never make it a Monologue.

வளவளன்னு பேசாம ரத்தினச் சுருக்கமா பதில் சொல்லுங்க.

ஸ்பீக்கர் போனில் பேசாதீர்கள், கேட்பவருக்கு தெளிவா கேக்காது, உங்க பக்கத்தில் இருக்கும் சின்ன சத்தம் கூட அவருக்கு பெரிசா கேக்கும்.

As much as the Hiring Manager interviews the candidate, the candidate should also interview the client. இரண்டு பக்கமும் கேள்விகள் முடிந்ததும், நன்றி சொல்லி Next Steps பத்தி கேளுங்க.

போனை வைப்பதற்கு முன் மறக்காம மேனஜிரின் இமெயில் ஐடி வாங்கி அவருக்கு ஒரு Thank You note அனுப்புங்க.


இப்போ நேர்முகத்தேர்வு :

முதல் கட்டம் - நேர்முகத்தேர்வுக்கு முந்தைய நாள்: Failure to Plan is Planning to fail - இது வேறெதுக்கு பொருந்துதோ இல்லயோ இண்டர்வியூவுக்கு ரொம்ப பொருந்தும். ஒரு இண்டர்வியூவுக்கு போகும் முன் கொஞ்ச நேரம் செலவழிச்சு பிளான் பண்ணா வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

மொதல்ல இண்டர்வியூ நடக்கும் நேரம், இடம், யார் என்பதையெல்லாம் ஒன்றுக்கு இரண்டு முறை கன்ஃபர்ம் செய்து கொள்ளுங்கள், முடிந்த வரை காலை நேரத்தில் இண்டர்வியூ வைத்துக் கொள்ளுங்கள், நீங்களும் ஃப்ரெஷ் ஆக இருப்பீர்கள், மேனேஜரும் நல்ல மூடில் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

கம்பெனியின் வலைதளத்துக்கு சென்று ஒரு மணி நேரம் செலவிடுங்கள். company history,Products and service offerings, latest announcements, கம்பெனி பத்தி கடைசியாக பேப்பரில் வந்த செய்தி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு இண்டர்வியூவில் நடு நடுவே சொல்லி அசத்துங்க.

டெக்னிகல் வேலையாக இருந்தால் Job Description தெரிந்து கொண்டு உங்களோட திறமை / அனுபவம் எவ்வாறு அதனுடன் ஒத்துப் போகிறதுன்னு
ஒரு 4-5 லைன் மனப்பாடமாக வையுங்கள்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும் யாருடனாவது அறிமுகம் இருந்தால் அவருடன் பேசி அந்த கம்பெனியில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் Qualification/Skills பத்தி தெரிஞ்சிக்கோங்க.

அப்புறம் ரொம்ப முக்கியமா, இண்டர்வியூவுக்கு அணியப் போகும் உடை, Shoe, Matching Socks எல்லாம் சரிபாத்து ராத்திரியே எடுத்து வைத்து விடுங்கள்.காலையில் ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்.

இரண்டாம் கட்டம்:

இண்டர்வியூவுக்கு போவதற்கு உங்களிடம் உள்ள சிறந்த உடையை தேர்ந்தெடுங்கள். அதுக்காக என்கிட்ட இருக்குறதிலேயே சிறந்த டிரெஸ் பச்ச கலர் பேண்டும்
செவப்பு கலர் சில்க் ஜிப்பாவும் சொல்லிட்டு அதயெல்லாம் போடக்கூடாது. என்னோட சாய்ஸ் Navy Blue Matt Finish Pant, White Shirt, Red tie and Navy Blue Blazer. கருப்பு பேண்ட் வெள்ளை சர்ட் கண்டிப்பாக கூடாது.





டை பத்தின சில விஷயங்கள் - Pant க்கு மேட்சிங்காக டை அணிவது ப்ரிட்டிஷாரின் பழக்கம், Shirt க்கு மேட்சிங்காக டை அணிவது அமெரிக்க வழக்கம்.
கல்யாணம் ஆகாதவர்கள் பெல்ட் வரையும், கல்யாணம் ஆனவர்கள் பெல்ட்டை தாண்டி (கொஞ்சம்) வருமாறும் டை அணிவது உலக வழக்கம்.

ஷீ - குனிஞ்சு பாத்தா முகம் தெரியணும் (தொப்பை மறைக்காம இருந்தா) அந்த மாதிரி பாலீஷ் போட்டு இருக்கணும். Pointed Black leather shoe with lace -இதுதான் நம்ம சாய்ஸ் எப்பவும். இன்னொறு முக்கியமான விஷயம், சாக்ஸ் பேண்ட் கலரில் இருக்க வேண்டும், கருப்பு ஷீவுக்கு வெள்ளை சாக்ஸ் கூடவே கூடாது, இந்த காம்பினேஷன் போட்ட ஒரே பிரபலம் மைக்கேல் ஜாக்ஸன் என்பது கூடுதல் தகவல்.

டிரெஸ் பண்ணி முடிச்சாச்சா? நேரத்துக்கு கெளம்பி இண்டர்வியூ நேரத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு கம்பெனியை அடையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.அப்பத்தான் ரிலாக்ஸ்டா வண்டியை நிறுத்திவிட்டு, உடைகளை மறுபடி ஒருமுறை நேர்த்தி செய்துவிட்டு, செக்யூரிட்டியை தாண்டி வரவேற்பரைக்கு குறித்த நேரத்துக்கு அஞ்சு நிமிஷம் முன்ன போக முடியும்.

உள்ளாற போன பின்பு என்ன செய்யணும்னு அடுத்த பகுதியில் பாக்கலாம்.. திங்களன்று எழுத கண்டிப்பாக முயல்கிறேன்..

Sunday, October 25, 2009

பார்த்தவை கேட்டவை ரசித்தவை - 1

கூட்டாஞ்சோறு பதிவு எழுதலன்னா, பதிவர்ன்னு யாரும் ஒத்துக்க மாட்டாங்கன்னு அசரீரி சொல்லுச்சு, சரி சாமி குத்தம் ஆகிப்போயிடக் கூடாதேன்னு நானும் களத்தில தொபுக்கட்டீர்னு குதிச்சுட்டேன். எவ்வளவோ செஞ்சிட்டோம், இதயும் செய்ய மாட்டோமான்னு ஒரு தெனாவட்டு தான்.

இப்பவே ஒரு டிஸ்கி போட்டுக்கறேன், பா கே ர வரிசை, என்(ண்)ணங்கள்/ கொத்து பரோட்டா / நான்வெஜ் & சாண்ட்விச்/ கிச்சடி இன்ன பிற போல நல்லா இருக்குமான்னு தெரியல, விரைவில் அவற்றின் இன்றைய தரத்தை அடைய முயல்கிறேன்(அதுக்குள்ள அவிங்க இன்னும் நல்லா எழுதுவாங்கல்ல). நானெல்லாம் எழுதறேங்கறதே காமெடிதான், அதனால காமெடியெல்லாம் எழுதமாட்டேன், என்னோட கிரியேட்டிவிடி லெவல் எனக்கு நல்லா தெரியுங்கறதால கவுஜயும் எழுதமாட்டேன், அப்பாடான்னு நீங்க பெருமூச்சு விடறது இங்கன கேக்குது...


மொதல்ல ஒரு சுய தம்பட்டம்: இரண்டாவது முறையா நான் பதிவு எழுத ஆரம்பித்து ரெண்டு மாசமும் சில நாட்களும் ஆச்சு, இதுவரை 6500 ஹிட்ஸுக்கு மேல வந்திருக்கு, அழகா ஆங்கிலம் தொடருக்கு நல்ல வரவேற்பு இருக்கு. பழகின பாவத்துக்காக எல்லா இடுகைகளையும் படிச்சு பின்னூட்டம் போடறவங்க பலர். இதுவரை வந்த / படித்த / பின்னூட்டம் போட்ட, போடாத அனைவருக்கும் நன்றி. தமிழ் மணத்தில கடைசி மூணு இடுகைகளுக்கு முன்னாடி யாரும் ஓட்டு போட்டதில்ல, கடைசி மூணுக்கு மொத்தம் ஏழு வோட்டு போட்ட புண்ணியவாண்களுக்கு நன்றி. இதுவரை நெகடிவ் வோட்டு விழாததுதான் பெரிய ஆச்சரியம். தமிலிஷ்ல வரும் மக்கள் ரொம்ப நல்லவங்க, இதுவரை போட்ட பதிவுகள் எல்லாத்தையும் பிரபலமாக்கிட்டாங்க..இதுவரை 54 பேர் பாலோயர்ஸா இருக்காங்க, எல்லாருக்கும் நன்றி.

பிளாக்கின் ABCD சொல்லிக்கொடுத்த வெட்டிப்பயல் பாலாஜிக்கும், தமிலிஷில் இணைக்க உதவி செய்த ஹாலிவுட் பாலாவுக்கும் Thanks a tonne guys.

இவனப்போயி எழுதச் சொன்னோமேன்னு வருத்தப்படும் டுபுக்கு அண்ணாச்சியே - ஆட்டோ அனுப்பறதுன்னா இவிங்க ரெண்டு பேரு வீட்டுக்கும் அனுப்புங்க -
They are the culprits, They spent their valuable time in creating this disaster...

Spending ன்னு சொன்னதும் ஒரு விஷயம் நியாபகத்துக்கு வருது. In today's world,Everyone is trying hard to make the ends meet. வரவுக்குள்ள செலவு செய்வது எப்படின்னு தெரிஞ்சிக்கிறது பெரிய விஷயமா இருக்கு. Need எது Want எதுன்னு சரியா கண்டுபிடிச்சு செலவு பண்ணா, சில பல செலவுகளை கட்டுப்படுத்தலாம். ஒரு சின்ன கணக்கு - இருக்குற டிவி பொட்டியா தூக்கிப் போட்டுட்டு LCD டிவி வாங்கணும்னு ஒரு ஆசை. அதன் விலை $ 1000. மேலோட்டமா பாத்தா ஆயிரம் டாலர் மாதச்சம்பளத்தில் ஐந்தில் ஒரு பாகமோ, பத்தில் ஒரு பாகமோ (Depending on one's salary) இருக்கும், எனவே வாங்கி விடலாமுன்னு தோணுது. ஒரு பேச்சுக்கு ஐந்தில் ஒரு பாகம் என்று வச்சுப்போம். When you dig deeper,அதன் விலை $1500க்கு சமம். எப்படின்னு பாக்கறீங்களா? முதல்ல 5% Sales Tax சேத்தா அதன் விலை $ 1050. இந்த ஆயிரத்து ஐம்பது டாலர் செலவு செய்வதற்கு நான் 1500 டாலர் சம்பாதிக்கணும், அப்பத்தான் 30% இன்கம் டாக்ஸ் போக என் கையில் 1050 டாலர் வரும். நாம சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் அரசாங்கம் 33% எடுத்துக்குது (By way for Direct and Indirect taxes). இந்த மாதிரி யோசிச்சா பல விஷயங்களுக்கு நாம கொடுக்குற விலை ரொம்ப அதிகமா தெரியும். தேவையான அளவு சம்பாதிப்பது முடிவில்லா மாரத்தான் ரேஸ் மாதிரி, ஒடிக்கிட்டேதான் இருக்கனும்..

நாங்களும் கடந்த மூணு நாளா மாரத்தான் மாதிரி தினமும் ஒரு ஆங்கிலப் படங்கள் பாக்கறோம்(காரணமேயில்லாம). மூணு படங்களுமே எனக்கு பிடித்திருந்தன. Management, Bride Wars & The Proposal. மூணு படங்களுமே வித்தியாசமான படங்கள் (நம்மூர் டைரடக்கர்கள் சொல்வது போல
வித்தியாசமான இல்ல), அனைத்துமே ரெண்டு பேருக்குள்ள நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்கள்.ஒரு படம் ரெண்டு நண்பிகளுக்கு இடையில் நடக்கும் சண்டையைப்
பத்தியும் ரெண்டு படங்கள் வேலை செய்யுமிடத்தில் வரும் காதலைப் பத்தியும் சொல்லும் படங்கள். கெடச்சாப் பாருங்க, பிடிக்கும்..

வேலையப்பத்தி இன்னொறு விஷயம் : Looks like the tough times are over in US Job Market. நல்ல முன்னேற்றம் தெரியுது.
வேலையில்லாம இருந்த பல பேருக்கு வேலை கெடச்சிருக்கு. இன்னும் டிமாண்டை விட சப்ளை அதிகமாக இருப்பதால், Salary / Billing Rate குறைவாத்தான் இருக்கு, வேலை இல்லாமல் இருப்பதை விட இது எவ்வளவோ மேல். அமெரிக்காவில் Core Java மக்கள் யாராவது ப்ராஜக்ட் தேடிக்கொண்டு இருந்தால் எனக்கு தனி மடல் இடுங்கள். மத்த டெக்னாலஜி மக்களும் தொடர்பு கொள்ளுங்க, என்னால முடிஞ்சத செய்யறேன்.

அப்புறம் பதிவர் பாலராஜன் கீதா, ஆங்கிலத்தில் பிறர் செய்யும் தப்பையெல்லாம் அப்புறமா திருத்தலாம், மொதல்ல ஒன் தமிழ திருத்திக்கோன்னு ஒரு விஷயத்த கொட்டு கொட்டி சொல்லிக் கொடுத்தாங்க. “முயற்சிக்கிறேன்” - தவறு, “முயல்கிறேன்” என்பதே சரி.. நன்றி பாலராஜன் கீதா...

அப்புறம், இந்த மாதிரி பதிவுகள்ல A ஜோக்ஸ் சொல்லாமப் போனா உம்மாச்சி கண்ணக் குத்திடும், எனவே ரெண்டு ஜோக்ஸ் இங்க

1. அவள் ஒரு பேரழகி, அவள் கால்கள் Divine. நம்மாளுக்கு அவ மேல ஒரு இது வந்திடுச்சி, அவ கிட்ட போய் சொன்னான்
Nice legs, when do they Open?

2. முதலிரவில் கணவனைப் பாத்து மனைவி சொன்னாள் - பாத்து மெதுவா செய்யுங்க ஏன்னா I am still a vigin. கணவனுக்கு அதிர்ச்சி, ஏன்னா அவள் மூணு முறை விவாகரத்தானவள். கணவன் எப்படின்னு கேட்ட போது மனைவி சொன்னாள் “Well, my first husband was a gynecologist and all he wanted to do was look at it. My second husband was a psychiatrist and all he wanted to do was talk about it. Finally, my third husband was a stamp collector and all he wanted to do was...


நெக்ஸ்ட் மீட் பண்றேன்...

Wednesday, October 21, 2009

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க - பகுதி 6

முந்தைய அ ஆ பகுதிகளை இங்கே காணலாம்.

என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குறிய பாஸ்டன் ஸ்ரீராம் வணக்கத்துடனும் தீபாவளி வாழ்த்துக்களுடனும் உஙகளை மொக்கை போட அடுத்த போஸ்டுடன் வந்து விட்டேன் (தீபாவளி லீவில் அடுத்தடுத்து தமிழ் படங்கள் பாத்தா இப்படித்தான் எக்குத்தப்பா வரும்)

அ ஆ ஐந்தாம் பாகத்தில் சொன்னா மாதிரி இந்த பகுதியில் singlular/Plural Form இல்லாத வார்த்தைகள் பற்றி எழுத நெனச்சிருந்தேன், ஆனா அவை பற்றி எழுதிக் கொடுக்க மண்டபத்தில ஆளில்லாத காரணத்தினால், இந்த பதிவில் உபயோகத்தில் இருக்கும் சில தவறான / ஆங்கிலத்தில் இல்லாத/Native Speakers of English உபயோகிக்காத வார்த்தைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

பல பேரின் பேச்சிலும் எழுத்திலும் அகராதியில் இல்லாத வார்த்தைகளைப் பார்த்திருக்கிறேன், English has adapted many words / Phrases for other languages ஆனா First First மாதிரி தப்பெல்லாம் adaptability யில் வராது. அப்படி சில வார்த்தைகளையும் அவற்றுக்கான சரியான வார்த்தைகளையும் இப்போ பாக்கலாம்.

1. Co-Brother : சகோதரிகளை மணந்த இரண்டுஆண்களின் உறவு முறையை சொல்ல இந்த வார்த்தை தென்னிந்தியாவில் மட்டும் பயன்படுத்தப் படுகிறது. இந்த மாதிரி ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது. Brother in Law என்பதே சரி..

2. Cousin Brother/Sister : உறவு முறையில் இன்னொரு தவறான வார்த்தை.Cousin is a relative with whom one shares a common ancestor. அண்ணன், அக்கா, தம்பி, தங்கைகளுக்கு பிறந்தவர்கள் அனைவரும் இடையில் இருக்கும் உறவு முறை Cousin. Aunt எவ்வளவுதான் பாசம் காட்டினாலும் Aunt Mother ஆக முடியாது. அதே போல, எவ்வளவுதான் சகோதரத்துவம் பேணினாலும் Cousin அண்ணனாவோ தங்கையாவோ ஆக முடியாது. He/She is my Cousin என்றுதான் சொல்லவேண்டும்.

3. Prepone : மிக அதிகமா உபயோகப் படுத்தப் படும் இன்னோரு தவறான வார்ததை. ஒரு காரியம் நடக்க குறித்த நேரத்தில் நடக்காமல் தள்ளிபோனால் அது Postponement, அதுவே குறித்த நேரத்துக்கு முன்னரே நடந்தா அது Advancement. Prepone என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது. I advanced my trip to USA by a week என்பதே சரி..

4. Roundtana : இந்த மாதிரி ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் இல்லாததால்,ஸ்பெல்லிங் சரியா தப்பான்னு கூடத் தெரியல. "Round About" எப்படி தமிழகத்தில் மட்டும் மருவி ரவுண்டானா ஆச்சுன்னு தெரியல. இனிமேலாவது Round About என்று சொல்லிப் பழகுவோம்.

5. Eversilver : இப்படி ஒரு உலோகம் இருந்தால் அது வெள்ளியை (Silver) விட விலை உயர்ந்த்தாக இருக்க வேண்டும், ஏன்னா அதுதான் Eversilver ஆச்சே.. Stainless Steel என்பதே இதன் சரியான பெயர். இது எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் பேசும் போது எவர்சில்வர் டம்ப்ளர் என்றுதான் சொல்கிறோம்.

அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்னு சொல்லாம, இனிமேலாவது இந்த மாதிரி ஆங்கிலத்தில் இல்லாத வார்த்தைகளை உபயோகிப்பதை நிறுத்துவோம்.

உண்மைத்தமிழன் குறும்படம் எடுக்கவும் கதை எழுதவும் தான் சவால் விட்டிருந்தார், அவர் அளவுக்கு நீண்ண்ண்ண்ட பதிவுகள் எழுத இல்லை, எனவே இங்க நிறுத்திக்கிட்டு அ ஆ பே வாங்க அடுத்த பகுதியில் சில தவறான வார்த்தை உபயோகஙகள் பத்திப் பாக்கலாம்...

Friday, October 16, 2009

நல்ல மேனேஜரின் நற்குணங்கள் நாலு:

மேனேஜராக ஆவது நம்மில் பலரின் நெடுநாள் கனவு. மேனேஜராக ஆகிவிட்டால் வேலை செய்ய வேண்டாம் என்று பலரைப் போல் நானும் நினைத்தது ஒரு காலம். இந்த மேனேஜர் நாள் முழுவதும் கம்ப்யூட்டரின் முன்னால் ஒக்காந்து வேலை ஏதும் செய்வதில்லை என்று நினைத்திருக்கிறேன். நான் மேனேஜராக ஆன பின்புதான் அது எவ்வளவு கடினமான வேலை என்று புரிந்தது. Middle Management இல் வேலை செயவதைப் போல கஷ்டம் வேறில்லை.
மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் அடி விழுவது போல மேனெஜ்மெண்டிடமும் அடி வாங்கணும், டீமில் வேலை செய்வர்களிடமிருந்தும் இடி வாங்கணும். யாரிடமும் நல்ல பேர் கிடைக்காது.

கொஞ்சம் கொசுவத்தி சுத்தினா,2002 ல் என் முதல் விமானப் பயணம் சென்னையிலிருந்து தில்லிக்க்கு. ஒரு சின்ன Sales Team க்கு மேனேஜராக இருந்தவனை Branch Manager ஆக ஆக்கி தில்லிக்கு பத்தி விட்டாங்க கம்பேனியில். அந்த பயணத்திற்கு நான் என்னுடன் எடுத்துச் சென்ற புத்தகம் அப்துல் கலாம் ஐயாவின் “அக்னி சிறகுகள்”. I got the best managerial tip from that book, “Take the blame for a failure and give away the credit for success" என்பதுதான் அது. ஒரு முறை ஏவுகணை கடலில் விழுந்த போது APJ ஐயா வேலை செய்த நிறுவனத்தின் தலைவர் (தவான் என்று நினைக்கிறேன்) சொன்னாராம், இன்று பத்திரிக்கையாளர்களை நான் எதிர்கொள்கிறேன் - I will take the responsibility for this failure என்று. அதே ப்ராஜக்ட் வெற்றி அடைந்த போது, அதே தலைவர் APJ விடம் சொன்னாராம் - Go and take the press meet, it is your success என்று. அன்றிலிருந்து முடிந்தவரை இதனை கடை பிடித்து வருகிறேன். நான் ஒரு நல்ல மேனேஜரா இல்லயான்னு எனக்குத்
தெரியாது, ஆனால் ஒரு Successful Manager என்று சொல்ல முடியும்.

இந்த பதிவில் ஒரு நல்ல மேனேஜருக்கு இருக்க வேண்டிய நாலு குணங்களைப் பற்றி பார்ப்போம்.

1. Set a right example and be a Leader (Not a Manager)

Always remember that anything and everything what you do is being watched and imitated by your team members.


MBA விலோ அல்லது ஏதோ ஒரு Workshop லோ ஒக்காந்து நல்ல மேனேஜரா இருப்பது எப்படின்னு கத்துக்க முடியாது. நீங்க நல்ல மேனேஜரா இருக்கணும்னா ஒங்களுக்கு ஒரு நல்ல மேனேஜர் அமையணும். அவர் செய்யுறதை காப்பி அடிச்சு அதில் உங்களது ஸ்டைலை சேர்த்தால் நல்ல மேனேஜராக ஆகலாம். அதேபோல, உஙகள் டீமில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் உங்களை ரோல் மாடலாக பார்க்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் கவனிக்க படுகிறது என்பதை நினைவில் வைத்திருங்கள். இந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன், எனக்கு
சரியான நேரத்தில் அரவிந்த் என்று ஒரு மிகச்சிறந்த மேனேஜர் அமைந்தார். நான் இன்றைக்கும் Tips தேவைப்படும் போது அணுகுவது அவரைத்தான். ஒரு மேனேஜர் எப்படி இருக்கணும்னு அவரிடமிருந்தும் எப்படி இருக்கக் கூடாது என்பதை அதற்கு முன் வேலை செய்த மேனேஜரிடமிருந்தும் கத்துக்கிட்டேன்.

எல்லாரும் நேரத்துக்கு ஆபிசுக்கு வரணும்னு நெனச்சா, மொதல்ல நீங்க நேரத்துக்கு ஆபிசுக்கு போகணும். இந்த ரூல் எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்.

2. Call them Colleagues :
அரவிந்திடமிருந்து நான் கற்ற பாடங்களில் இதுவும் ஒன்று.

I hate the word Subordinate.Team Mate அல்லது Colleague
என்று அறிமுகப் படுத்துங்கள். யாரையும் இவர் எனக்கு கீழே வேலை செய்கிறார் என்று சொல்லாதீர்கள்.

Be a part of the team as a Leader and don't Boss around. Team Mates அனைவரையும் உங்களை பேர் சொல்லி அழைக்க வற்புறுத்துங்கள். Sir என்று அழைப்பதை தடை செய்யுங்கள். என்னுடைய டீம் மேட்ஸ் என்னை விளித்தது "Hi Sri" என்றுதான். This goes a long way in creating a bondage...

3. Don't give them fish to eat, Teach them how to Fish:

மறுபடியும் அரவிந்த் புராணம். நான் அவரிடம் ஒரு Problem கொண்டு சென்றால் அவர் எப்போதும் சொல்வது - ஸ்ரீராம், Problem இருக்குன்னு மட்டும் சொல்லாதே, அதுக்கு மூணு solution யோசித்துக் கொண்டு வா, அதில் எது சிறந்தது என்று சொல்கிறேன். அப்போல்லாம் எனக்கு பத்திக்கிட்டு வரும், யோவ் எனக்கு மூணு Solution தெரிஞ்சா நான் ஏன் உங்க கிட்ட வர்றேன்னு கத்தத் தோணும். I realized lot later that he was preparing me to live on my own and not be a Parasite.

Teach them how to fish, if you keep feeding them, they will die of hunger after you...

4. Don't shock them into changes:

மாற்றம் ஒன்றே நிலையானது, ஆனால் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்து விடாது. When facing change, Communicate as early in the process as possible. Remember that your team mates are a few steps behind you in the acceptance cycle. Give them a reasonable
amount of time to adjust.


எல்லா விரல்களும் ஒரே அளவில் இருப்பதில்லை. Resistance to change ஒருவருவருக்கும் ஒவ்வொரு மாதிரி, அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள்.

மக்கள்ஸ், இதப் பத்தி எழுத ஆரம்பித்த போது ரைமிங்கா நற்குணங்கள் நாலுன்னு தலைப்பு வச்சி நாலு பாயிண்ட் எழுதணும்னு நெனச்சேன், எழுதும் போது
இன்னும் நாலு பாயிண்ட் தோணிச்சு, பதிவு ரொம்ப பெரிசா போகாம இத்தோட நிறுத்திக்கறேன்,பிடிச்சிருந்தா சொல்லுங்க, அடுதத பாகத்தில் இன்னொரு
நாலு பாயிண்ட் எழுதறேன்.