Monday, August 24, 2009

L1 விசா

நான் போன பதிவில் சொல்லியிருந்தது போல, இந்த பதிவில் L1 விசா பற்றிப் பார்க்கலாம்.
என்னதான் ஸ்டாலின் முதல்வர்கள் மாநாட்டுக்குப் போனாலும், அவர் துணை முதல்வர்தான்.அவர் செல்வதிலும் சில அனுகூலங்கள் இருக்க்த்தான் செய்கிறன. (முதல்வரின் பளு குறைவது, ஸ்டாலின் மற்ற தலைவர்களுடன் பழக வாய்ப்பு போன்ற சில). அது போலத்தான் H1B மற்றும் L1 விசாக்கள் - They bothare similar but not the same. இவை இரண்டும் அமெரிக்காவில் வேலை செய்யத் தரப்படுபவை. இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு, சில பல +/- உண்டு.L1 விசா பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முதல்ல, L1 விசான்னா என்ன என்று பார்க்கலாம், ரொம்ப டெக்னிகலா போகாம சொல்றேன். L1 என்பது Intra Company Transfer. ஒரு நிறுவனம், அமெரிக்காவிலும் வேறொறு நாட்டிலும் தன்னுடைய அலுவலகத்தை வைத்திருந்தால், அது தன்னுடைய ஊழியர்களை அமெரிக்க கிளைக்கு Transferசெய்து வேலை செய்ய வைக்கலாம். இதற்கு இருக்க வேண்டிய தகுதிகள் - Emplyee அந்நிறுவனத்தில் கடந்த மூன்றாண்டுகளில் ஒரு ஆண்டுக்கு குறையாமல் வேலை செய்திருக்க வேண்டும் மற்றும் அவர் Manager/Executive ஆகவோ Specialized Knowledge Staff ஆகவோ இருக்க வேண்டும்.
நீங்க விப்ரோ / இன்போசிஸ் போன்ற கம்பெனிகளில் வேலை செய்பவராக இருந்தால் L1 விசா எளிதாகப் பெற்று அமெரிக்கா வரலாம். இப்போதுள்ள நிலைமையில்L1 விசாவில் வருவது நல்லது, ஸ்டாம்பிங் செய்வது தேசி கன்ஸல்டிங்களின் H1B யை ஸ்டாம்பிங் செய்வதை விட எளிது.
இவை இரண்டுக்கும் என்ன ஒற்றுமை / வேற்றுமை என்னனனா, ரெண்டிலேயும் அமெரிக்காவில் வேலை செய்யலாம், H1B ல ஆறு வருஷம் வேலைசெய்யலாம், L1 ல ஏழு வருஷம் வேலை செய்யலாம், இரண்டிலும் Green Card Process செய்யலாம். ரெண்டுக்குமே apply பண்ணும் போது இங்கு அந்த நபருக்கு வேலை இருப்பதை உறுதி செய்யணும். H1B க்கு வருடாந்திர கோட்டா உண்டு L1 க்கு அது கிடையாது.
இப்போ ரெண்டுக்கும் உள்ள பிளஸ் மைனஸ் பற்றி பார்ப்போம். H1B ல எவ்வளவு தடவ வேணா வேலை மாறலாம் (புது Employerக்கு விசாவை மாற்றிக்கொள்ள வேண்டும்) ஆனா L1 ல அது முடியாது. L1 is specific to an employer. L1 ல இருக்கும் போது வேலை மாற நினைச்சா, ஏப்ரல் ஒண்ணாம் தேதி ஒரு Employer மூலம் H1B விண்ணப்பித்து அது Effective ஆகும் போது (அக்டோபர் 1) வேலை மாறலாம். L1 ல இருக்கும் மிகப்பெரிய + என்னன்னா, உங்கள் கணவனோ / மனைவியோ L2 இல் எந்த வேலை வேணா செய்யலாம், நீங்கள் H1B ல இருந்தால் அவர் H4 ல் இருப்பார், அதில் வேலை செய்ய முடியாது. உங்கள் கணவனோ / மனைவியோ career யை கெடுத்துக்கொண்டு அமெரிக்கா வர வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால்L1 உங்களுக்கு சிறந்த்து.(மேலதிக தகவல்கள் வேணுமுன்னா கேளுங்க சொல்றேன்)
பர்சனலாகவும், L1 ல அமெரிக்கா வந்து ஓரிரு வருஷங்களில் கொஞ்சம் செட்டில் ஆகி பின்னர் H1B க்கு மாறி Green Card Process பண்ணி நீண்ட நாள் இருப்பது நேரடி H1B ரூட்டை விட ஸ்மூத்தானது.
என்ன கம்பெனியில் சொல்லி L1 விசா விண்ணப்பிக்க கிளம்பிட்டீங்களா ? ஆல் தி பெஸ்ட்....
அதே டிஸ்கி மறுபடியும் : டிஸ்கி: The above mentioned are purely my personal opinion and not be used as a Legal Opinion in any manner. I suggest you to use your wisdom and consider your personal situation before making any decision.

17 comments:

ரவி said...

thanks for your comments. I will ask you to write these posts in tedujobs sites too. i will send you a invite.

sriram said...

வாங்க ரவி, முதல் வருகைக்கும், அழைப்புக்கும் நன்றி.
கண்டிப்பா எனக்கு தெரிஞ்சத எழுதறேன். அழைப்பை nsriram73@gmail.com க்கு அனுப்புங்க.

Jackiesekar said...

எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தலை... எதாவது கேமரா மேனுக்கு அசிஸ்டென்ட் ஆகற வாய்ப்பு அமெரிக்காவிவுல கெடெச்சா சொல்லுங்க...

sriram said...

வருகைக்கு நன்றி ஜாக்கி.
நீ கேட்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரிய வில்லை. நீ டைட்டில் கார்டில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை, அப்புறம் ஒரு நாடென்ன, பல நாடுகளுக்குப் போகலாம்.
ஆமாம், இதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லைன்னு யார் சொன்னது.
அயர்லாந்து சென்றவருக்கு அமெரிக்க அழைப்பு வரலாம், அப்படி வரும்போது H1B க்கு பதிலாக L1 விசாவில் வந்தால், நீ L2 விசாவில் வந்து கலக்கலாம்.
நான் அப்படித்தான் வந்தேன்

Jackiesekar said...

உங்க வாய் முகூர்த்தம் சாரி உங்க கீ போர்டு டைப் முகூர்த்தம் நல்லதா நடந்தா சரிதான்.... ஆனால் இது போன்ற விசா விஷயங்களுக்கு உங்கள் பதிவை நிச்சயம் பரிந்துரைப்பேன்...

Jackiesekar said...

சாத்தியம் இல்லை என்பது எனக்கு தெரியும்... தமிழில் கடைத்த கேமராமேன்கள் அளவுக்கு ஹாலிவுட் அவ்வளவு பரிட்சயமில்லை... இப்போது படம் விமர்சனம் எழுதும் போதுதான் நான் சில பேரை நினைவில் வைத்து இருக்கின்றேன்...

தன்னம்பிக்கையாய் பதில் சொன்ன உங்களுக்கு என் நன்றிகள்..

sriram said...

நன்றி ஜாக்கி
தன்னம்பிக்கை எனக்கு கொஞ்சம் அதிகம், மிகக் குறைந்த qualification வைத்துக்கொண்டு கொஞ்சமாவது சாதித்தற்கு அதுவே காரணம்.
நான் சொன்னது வெறும் நம்பிக்கை அல்ல. கண்டிப்பாக வாய்ப்பு இருக்கு

Anonymous said...

// L1 ல ஏழு வருஷம் வேலை செய்யலாம்,//

L1-A (for managers) is 7 years & L1-B (for engineers) is 5 years.

sriram said...

நன்றி அனானி உங்க clarification க்கு
உங்க பேரையாவது சொல்லலாமே

வால்பையன் said...

அமெரிக்கா வர வாய்ப்பில்லாவிட்டாலும் தெரிந்து கொள்வது நல்லது தானே!

ரொம்ப நன்றி தல!

sriram said...

வாங்க வால்பையன். நானும் எனக்கு வாய்ப்பே இல்லைன்னு தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன், வாய்ப்பு வரும் வரை. தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. Information is Wealth

Dubukku said...

அருமையான தகவல்கள் நிறைய பேருக்கு உபயோகமாய் இருக்கும் !! அப்படியே இதுல நிறைய பேர் பண்ணுகிற டகால்ட்டி வேலைகளையும் பத்தி எழுதுங்களேன்

sriram said...

வாங்க டுபுக்காரே,
பெரியங்க எல்லாம் என் பக்கத்து வர ஆரம்பிச்சிட்டீங்க... ரொம்ப சந்தோஷம்.
விசாவில் (IT மக்கள்) ரொம்ப டகால்டி வேல செய்வதில்லன்னு நினைக்கிறேன்.
அதெல்லாம் ரெஸ்யூமிலேத்தான்.

12+4 வருஷ கல்வி இருந்தா H1B கிடைச்சுடும், ஒரு வருஷம் கம்பெனியில் வேலை செஞ்சிருந்தா L1 கிடைச்சிடும் (I mean the approval, stamping is at the mercy of visa officer)
ஒரு சில டுபாக்கூர் university களின் certificate ஐ ஒத்துக்கொள்வதில்லை என்று கேள்வி.
H4 ல் வீட்டில் இருக்கும் Female Folks டெஸ்டிங் கோர்ஸ் படிச்சுட்டும், IT ன்னா என்னன்னு தெரியாத என்ன மாதிரி ஜடங்களும் SAP course படிச்சிட்டு H1B ல உலா வருவது சகஜம்.

மேலும், இங்கு M.S படிக்க வரும் மாணவர்கள், படிப்பு முடிந்த பின் business analyst ஆகவோ SAP Professional ஆகவோ (6-8 வருஷ ரெஸ்யூமே) அவதாரம் எடுத்து விடுவார்கள். Non IT பத்தி (Ex. Saravana Bhavan Visa Scam or Artists scam etc) எனக்கு அவ்வளவா தெரியாது.
இதில் ஒரு பதிவு போடும் அளவுக்கு சரக்கு இல்லை.

blogpaandi said...

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி. மேலும் பல நல்ல பதிவுகளை இட வாழ்த்துக்கள்.

sriram said...

நன்றி பிளாக்பாண்டி

Anonymous said...

tooo good sir, just visited your blod thru "vettipayal" blog.. nice and very informative.. Will take a feed of yours.. so that I can track ur new updates.. I loved this post vey much... Keep up the Good work..
http://tamilanin.wordpress.com

ரவி said...

sent invite. பாருங்க ஸ்ரீராம்...