இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்
இது என்னன்னு பாக்கரீங்களா? கண்டிப்பா என்னோட பாங்க் பாலன்ஸ் இல்ல..
இது சென்ற வருடம் (2008) NRI மக்கள் இந்தியாவிற்கு அனுப்பிய பணம் (Remittance by NRIs to India).
உலக வங்கியின் அறிக்கையின் படி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 2008ல் இந்தியாவிற்கு அனுப்பியது $ 52 பில்லியன். உலகிலேயே இதில் இந்தியாவிற்கு
முதலிடம், இரண்டாம் இடத்தில் சைனா (40.6 Billion $) மற்றும் மூன்றாம் இடத்தில் மெக்ஸிகோ (சலவைக்காரி ஜோக் என்னான்னு யாராவது
சொல்லுங்களேன்)- 26.3 billion $.
Recession hit வருடத்திலும் NRI மக்கள் அனுப்பிய பணம் இந்தியப் பொருளாதாரத்துக்கு கண்டிப்பாக உதவியிருக்கும். பணத்தை அரசாங்கத்துக்கு யாரும்
தரவில்லை அவரவர் வீட்டுக்குத்தான் அனுப்பினர், ஆனால் அந்தப் பணம் சந்தையில் செலவிடப்படும் போது சந்தையின் முன்னேற்றத்துக்கும், வங்கிகளில்
சேமிக்கப்படும் போது வங்கிகளின் முன்னேற்றத்துக்கும் உதவியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அது மட்டுமில்லை, இந்தியாவின் Ever Increasing need for oil க்கு தேவைப்படும் அந்நிய செலாவணியை (Foreign exchange) தருவதில்
NRI களின் பங்கு மகத்தானது. NRI களின் அலப்பறை பற்றி போஸ்ட் போடும் மக்கள் ஏன் இதைப்பத்தி எழுதுவதில்லை??
ஐயா சாமிகளா, இனிமேலாவது, NRI கள் தண்ணி பாட்டில் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள்ன்னு சொல்லாதீங்க. தெரியாமத்தான் கேக்கறேன் - இந்தியாவில்
வாழும் இந்தியர்கள் யாரும் தண்ணி பாட்டில் வாங்குவதே இல்லயா? Aqua fina கம்பெனியெல்லாம் NRIகளை நம்பித்தான் இருக்குதா? NRI களைப் பழிக்கும்
எல்லோர் வீட்டிலும் கார்பொரேஷன் தண்ணிதான் குடிக்கறாங்களா?? அடுத்தவனை குத்தம் சொல்லும் முன் அவனிடம் உள்ள நல்ல குணங்களையும், தம்மிடம்
உள்ள குறைகளையும் பாருங்கள்.
டிஸ்கி: நான் எல்லா NRIகளும் நல்லவர்கள், அலப்பறையே செய்யவில்லை என்று கூறவில்லை, அப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால் Generalization செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.
தகவல் உதவி : Little India Magazine Sep 2009 & http://blogs.worldbank.org/peoplemove/india-is-the-top-recipient-of-remittances
Thursday, September 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
என்ன கோபம், திடீர் என்று NRI பற்றி எழுதியுள்ளீர்கள். தகவல் நன்றாக இருந்த்தது. நானும் ஒரு NRI என்பதால் எதற்காக இந்த பதிவு என்று அறிய ஆவல். நான் சென்னை சென்றால் இன்றும் அதே பஸ்சிலும் ஆட்டோவிலும் தான் செல்கிறேன். ரோட்டோர டீக்கடையில் சாப்பிடுகிறேன். வீட்டில் அதே corporation தண்ணீர் தான்.
வாங்க ரத்தின முத்து
பலரது பக்கங்களில் NRI களின் அலப்பறை என்று படித்துள்ளேன், என் கருத்தினை பின்னூட்டியும் இருக்கிறேன்.
சும்மா எல்லாரையும் Generalize பண்ணி எழுதுவதே வழக்கமாக இருக்கிறது.
2 நாள் முன்னர் இந்த செய்தியை படித்தேன். இதை ஏன் குற்ற்ம் சொன்னவர்கள் இதுவரை பாராட்டவில்லை என்ற வருத்தம்தான் என்க்கு.
மத்தபடி Spoken English, better communication, personality development என என் வழியில் போயிட்டே இருப்பேன்
தங்களின் கருத்து முழுக்க முழுக்க சரியே. பாராட்டுக்கள். மனதில் பட்டதை சரியென்றால் பதிவிடுங்கள்.
//NRI களின் அலப்பறை பற்றி போஸ்ட் போடும் மக்கள் ஏன் இதைப்பத்தி எழுதுவதில்லை?? ///
தெரிஞ்சா.. எழுத மாட்டாங்களா ஸ்ரீராம்?! :) :) :))
எனக்கென்னமோ... NRI-ஐ விட.. ஊரில் இருக்கறவங்க.. போடுற சலம்பல்தான்.. ஓவரா தெரியுது.
உதாரணத்துக்கு..., ஃப்ரியா செல்போன் தர்றாங்களேன்னு (வாங்க வக்கிலாமதான்), AT&T கிட்ட ரெண்டு வருசம் அக்ரிமெண்ட் போட்டு... நான் இங்க போன் வாங்கினா...,
50,000 ரூபா.. போட்டு.. என்னோட கசின்ஸ் எல்லாம்... ஊர்ல போன் வாங்கறாங்க.
கர்மம் பிடிச்சவனுங்க.. அப்பவும்.. மிஸ்ட் கால் கொடுத்து.. நம்மளதான் கால் பண்ண சொல்லுவாங்க. :)
சரியா சொன்னீங்க பாலா,
1. இந்த மேட்டரெல்லாம் இவனுங்க கண்ணுல படாது.
2. ஐயோ இன்னிக்கு இந்தியாவில இருக்கறவனுங்க பண்ணுற அலம்பல் சொல்லி மாளாது - எல்லாத்துக்கும் அமெரிக்காவை follow பண்ணனும் (pizza, burger, coke, american english, dating culture, etc) ஆனா அமெரிக்காவையும், எல்லா நாட்லயும் இருக்குற NRI களையும் திட்டணும்.
3. இப்போல்லாம் இந்தியாவிலிருந்து voip calls 3 - 4 ரூபாய்க்கு பண்ணலாம் ஆனா பண்ணமாட்டாங்க..
enna ivlo soundu thidirnu.. ungalai yaarum edho sollitanglo? ;)
nalla padhivu, ana enna contextla idhai solringa nu therinju irundha innum nalla irundhurukum (adhavadhu endha blog post/ yaar sonnadhuku edhir vinai idhu)..
mexico salavaikari joke oru imaginary vishayam nu ivlo naala nenachutu irundhen, ana ipo thaan recenta engayo oru sitela padichen.. adhu thana nu sujatha vandhu sonna thaan undu, though the joke does qualify to be "the salavaikarai joke" :O
ofc, enaku konjam neram kazhichu thaan purinjudhu, pinju moolai aache!
வணக்கம் ஸ்ரீராம். யாரும் என்.ஆர்..ஐக்களை அவ்வளவாக குறைச் சொல்வதில்லை. ஒரு சிலர் சொல்வதும் வேடிக்கை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிலர் செய்யும் அலம்பல், பலரையும் அப்படித்தான் நினைக்க செய்கின்றது.
பாலகுமாரன் அவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால், லாரி ஓட்டுபவர் மேல் தப்பில்லை என்றாலும், விபத்து எதாவது நடந்தால் முதலில் அடிவாங்குவது லாரி ஓட்டுபவராகத்தான் இருக்கும். மனுஷனுடைய சைக்காலாஜி அப்படி.. மேலே இருந்து ஓட்டுபவனைப் பார்த்து சற்று கோபம் வரத்தான் செய்யும்.
மேலும் ஒரு விசயம் சொல்லுகின்றேன், ஆட்டோ ஓட்டுபவர்களில் எத்தனை நல்லவர்கள் இருக்கின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு, நாம் எல்லோரையும் சேர்த்துதானே திட்டுகின்றோம். அது மாதிரித்தான் இதுவும்.
லூஸ்ல விட வேண்டிய விசயங்கள்.
அலோ
எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன்.
“ஒண்ணு”
இப்போ சீரியஸ் : இந்த பதிவு யார் பதிவுக்கும் எதிர் வினையில்லை. என்னைத் தாக்கி யாரும் பதிவு போடும் அளவுக்கு நான் பிரபலமும் இல்லை.
சும்மா உசுப்பேத்திவிட்டு ஒத வாங்க வச்சிடாதீங்க.
எழுத ஒக்காந்த போது, 52 பில்லியனப் பத்தி பெருமையா எழுத மட்டுமே நெனச்சேன். எழுத எழுத குணா கமலின் கவித மாதிரி கொட்டிடேன் (மானே தேனே எல்லாம் போட்டு)
வாங்க பொற்கொடி,
முதல் பத்திக்கு ஏற்கெனவே பதில் சொல்லிட்டேன். Context லாம் ஏதும் இல்ல. குறைகளைக் பூதக்கண்ணாடி வைத்துக் காணும் கண்களுக்கு நல்லது தெரியலயேன்னு ஒரு ஆதங்கம்தான்..
அந்த் ஜோக் இருக்கும் லின்க் தனிமடலில் அனுப்புங்களேன்.. சுஜாதா கடைசி வரையில் பப்ளிக்கில் சொல்லவே இல்லை.
வாங்க ராகவன்
ஒட்டு மொத்தமாக எல்லா NRI க்குளும் அலம்பல் பண்ணுவதாக கூறுவதும் எல்லா பிராமின்களும் தீண்டாமையை கடைபிடிப்பதாகக் கூறுவதும் ஒரே
Gross Generalization பலர் பதிவில் பார்த்திருக்கிறேன்... எனவே தான் இந்த தார்மீக கோபம்.
ஒரு நல்ல ஆட்டோக்காரரிடமும் இந்த தார்மீக கோபத்தைக் காணலாம்.
டிஸ்கி : நானும் இன்று வரை ஆட்டோக்காரர்களை ஏமாற்றுக்காரர்கள் என்றும் போலீஸ்காரர்களை லஞ்சப்பேர்வழிகள் என்றும் Generalize செய்வது வழக்கம், இன்று முதல் மாறினேன்...
<<<
உலக வங்கியின் அறிக்கையின் படி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 2008ல் இந்தியாவிற்கு அனுப்பியது $ 52 பில்லியன். உலகிலேயே இதில் இந்தியாவிற்கு
முதலிடம்
>>>
ஒத்துக்கிறோம்
<<<
Recession hit வருடத்திலும் NRI மக்கள் அனுப்பிய பணம் இந்தியப் பொருளாதாரத்துக்கு கண்டிப்பாக உதவியிருக்கும்.
>>>
இதையும் ஒத்துக்கிறோம்
<<<
ஐயா சாமிகளா, இனிமேலாவது, NRI கள் தண்ணி பாட்டில் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள்ன்னு சொல்லாதீங்க. தெரியாமத்தான் கேக்கறேன் - இந்தியாவில்
வாழும் இந்தியர்கள் யாரும் தண்ணி பாட்டில் வாங்குவதே இல்லயா? Aqua fina கம்பெனியெல்லாம் NRIகளை நம்பித்தான் இருக்குதா? NRI களைப் பழிக்கும்
எல்லோர் வீட்டிலும் கார்பொரேஷன் தண்ணிதான் குடிக்கறாங்களா?? அடுத்தவனை குத்தம் சொல்லும் முன் அவனிடம் உள்ள நல்ல குணங்களையும், தம்மிடம்
உள்ள குறைகளையும் பாருங்கள்.
>>>
கூல் கூல், எதுக்கு இப்ப டென்சன்...
ஆனாலும் NRI எந்த அலம்பலும் பன்னுறது இல்லையா? US ரிட்டன்னா ஆனா, அவரு பேசுற பேச்சு என்ன? நடக்குற ஸ்டைல் என்ன? அட ஏதாவது பேசுறன்னாலே... இந்த இந்தியாவிலே இப்படித்தான்... இப்படிதான் ஆரம்பிப்பாங்க...
சரி சரி நானும் எல்லா NRI யும் சொல்லப்பா :) ஹிஹி
வாங்க மஸ்தான் (பேரக்கேட்டாலே அதிருது இல்ல)
நான் டென்ஸ்ஷன் ஆகவே இல்ல.
இது ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடன்றி வேரல்ல..
நீங்க சொல்றத நான் ஒத்துக்கறேன். வெளிநாட்ல இருக்கறவங்க்ள விட அவங்கள பாக்க போயிட்டு வந்த சில (நல்லா கவனிங்க சில) பெற்றோர் பண்ற அலப்பறையை பாத்திருக்கீங்களா??
இந்தியாவில் இருந்து கொண்டு அமெரிக்கா அப்படி சிங்கப்பூர் இப்படின்னு சொல்றவங்களையும் சில பேரையும் (மறுபடியும் சில) எனக்குத் தெரியும்.
விதிவிலக்குகள் என்றுமே விதியாகாது.
ஆமா யாருமே 52 பில்லியன் $ பத்தி பெருமைப் பட மாட்டேங்கறீங்க, எல்லாரும் ஏன் இந்த தண்ணி பாட்டில் மேட்டரையே பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க..
Jai Hind...
அய்யய்யோ நான் தண்ணி பாட்டல் மேட்டருக்கு வரவே இல்லை. :)
உண்மையில் ரெம்ப பெருமையாத்தான் இருக்கு ஸ்ரீராம்... $52B சும்மாவா...
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்
நலல் பதிவு
கேபிள் சங்கர்
வாங்க யூத்து கேபிளாரே,
இதுக்கு கும்முராங்க, இன்னும் விரிவா எழுதுனா, என் முதுகு தாங்கதுங்க...
NRI க்களுக்கு பணம் ஒன்றும் மரத்தில் காய்க்கவில்லை. உங்களால் ஆயிரம் டாலர் சம்பாதித்துக்கொடுக்கமுடியும் என்றால் தான் வெள்ளைக்காரன் உங்களுக்கும் $100 சம்பளம் கொடுப்பான். சொந்த பந்தங்களை, சில சமயம் பொண்டாட்டி பிள்ளைகளை கூட விட்டு விட்டு நமக்கு பிடித்த உணவுகளைக் கூட பூசிக்க முடியாமல் கஷ்டப்பட்டு சம்பாதித்து, பார்த்துப் பார்த்து சேர்த்து இந்தியா அனுப்பும் காசு இங்கே எப்படி செலவழிக்கப் படுகிறது என்பதை யாராவது எழுதுங்களேன்.
வாங்க அனானி நண்பரே, பேரையாவது சொல்லலாமே.
ஆமா நீங்க NRI களுக்கு ஆதரவா? எதிர்ப்பா? உங்க கமெண்ட படிச்சா சரியா தெரியல, புதசெவி..
’’ உங்களால் ஆயிரம் டாலர் சம்பாதித்துக்கொடுக்கமுடியும் என்றால் தான் வெள்ளைக்காரன் உங்களுக்கும் $100 சம்பளம் கொடுப்பான். ’’
இது உலகில் உள்ள எல்லா முதலாளிகளுக்கும் பொருந்தும் - நம்ம மளிகை கடை அண்ணாச்சி முதல் பில் கேட்ஸ் வரை.
பின்ன வர்ற 1000$ லாபத்தையும் தொழிலாளிக்கேவா குடுப்பாங்க..
ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கணும், முதலாளிகள் முதல் போட்டு RISK எடுக்கறாங்க எனவேத்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள். தொழிலாளி வர்க்கம் (என்னையும் சேர்த்துத்தான்) Job security ஐ முக்கியமாக் நினைப்பதால் குறைந்த அளவே சம்பாதிக்க முடிகிறது.
பின்னூட்டத்தின் இரண்டாம் பாகம் பற்றி என்க்கு கருத்து ஏதும் இல்ல, ஏன்னா என் குடும்பத்தார் ஆடம்பர செலவு செய்வதில்லை.
//பின்னூட்டத்தின் இரண்டாம் பாகம் பற்றி என்க்கு கருத்து ஏதும் இல்ல, ஏன்னா என் குடும்பத்தார் ஆடம்பர செலவு செய்வதில்லை.//
பதிவு மட்டும் எப்படி மொத்த NRI க்கும், ஏன் மொத்த இந்தியாவுக்குமே எழுதியிருக்கீங்க. உங்க குடும்பத்தில நடக்கிறத மட்டும் எழுதவேண்டியது தானே?
இட்லி கிடைக்காமல் கஷ்டப்படும் என்.ஆர்.ஐகளை பற்றி ரெண்டு வரி சோகமான பீலிங் லைனை சேர்த்திருக்கலாம் பதிவில். அவ்வ்.
அன்பின் அனானி
என் பதிவில் 2 விஷயங்கள் சொல்லி இருந்தேன். ஒண்ணு 52$ பில்லியன் மேட்டர் மற்றொன்று குறை சொல்பவர் கண்களுக்கு இது தெரியவில்லயா என்ற ஆதங்கம்.
உங்க மொத கமண்டில் அந்த பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது என்ற தொனி தெரிந்தது. எனக்கு அந்த மாதிரி அனுபவம் இல்லன்னு சொன்னேன், அவ்வளவுதான்.
எதப் பத்தி எழுதணும்னு நான் முடிவு செஞ்சுக்கறேன், அதற்கு உதவி ஏதும் தேவைப்பட்டால் சொல்லி அனுப்புறேன்.
முதல்ல உண்மையான முகத்துடன் வாங்க
வாங்க ரவி...
ஆமாம் தேடு ஜாப்ஸ்ல எழுத அழைப்பு அனுப்பறேன்னீங்களே.. அப்புறமா எழுதினது பிடிக்கலயா...
’’இட்லி கிடைக்காமல் கஷ்டப்படும் என்.ஆர்.ஐகளை பற்றி ரெண்டு வரி சோகமான பீலிங் லைனை சேர்த்திருக்கலாம் பதிவில். அவ்வ்.’’
உங்க பீலிங்ஸ் புரியுது ரவி, இந்த பதிவு வெளிநாட்டில் நமக்கு இருக்கும் கஷ்டங்கள் பத்தி இல்ல, அதெல்லாம் போட்டா ஒரு தொடர் பதிவு தேவைப்படும்.
நீங்க அனுப்பின பணத்தினால தான இங்கு விலை வாசி தாறுமாறா ஏறிப்போய் கிடக்குங்கிறத பத்தி அங்க இருக்கிற உங்களுக்கு என்ன தெரியும்.
ஒரு சாமனியனுக்கு சொந்த வீடு என்பது கனவாகிப்போக காரணம் இந்த காசுதான் என்பது ஏன் உங்களைக்கு இன்னும் உறைக்கவில்லை.
இங்கு வாழ தேவைக்கு அதிகமா பணம் வரும் போது, ஆடம்பரங்களுக்காவும், கெளரவத்திற்காகவும் 100 ரூபாய் சேலையை 1000ரூபாய் கொடுத்து வாங்கி பீற்றிக்கொள்ள காரணம் நீங்கள் அனுப்பும் பணம்தான்.
நீங்கள் பணம் அனுப்பவதற்கு முன்னர் நம் நாட்டில் பணத்தின் தேவை குறைவாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது நிலமை என்ன என்பது விவரம் அறிந்த அணைவருக்கும் தெரியும்.
தேவை அதிகம் இருப்பதால், இல்லாதவர்கள் கொடுக்கும் காசுக்கு ஓட்டுப்போடும் அவலம் நம் நாட்டில் இருக்கிறது.
ஆகா அனானி, இதுவரைக்கும் நீங்க சொன்னதுக்கெல்லாம் காரணம் இந்தியாவில் IT ல வேலை செய்யறவங்கதான்னு சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன், இது புது மேட்டரா இருக்கே...
முகம் காட்டுவதில் இன்னும் என்ன தயக்கம் நண்பரே...
//ஆகா அனானி, இதுவரைக்கும் நீங்க சொன்னதுக்கெல்லாம் காரணம் இந்தியாவில் IT ல வேலை செய்யறவங்கதான்னு சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன், இது புது மேட்டரா இருக்கே...
முகம் காட்டுவதில் இன்னும் என்ன தயக்கம் நண்பரே...//
NRI அதிகமானதிற்கு காரணமே IT தானே. பெரும்பாலான IT ஆட்களின் கனவே NRI ஆவது தானே?
ஆனால் இப்பிரச்சனைக்கு மூல காரணமே NRI பணம்தான்.
நண்பரே! நான் NRI மக்களை குறை கூறவில்லை. ஆனால் எந்த வகையில் முதலீடு செய்தால் நம் நாடு முன்னேறும் என்பது போன்ற அறிவு அவர்களிடையே இல்லை. சற்று ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே அது புரியும்.
அனானி ஐயா
“NRI அதிகமானதிற்கு காரணமே IT தானே. பெரும்பாலான IT ஆட்களின் கனவே NRI ஆவது தானே?” -
முதல்ல உங்க டார்கெட்ட செட் பண்ணிக்கோங்க - ஏன்னா NRI மக்கள்ல IT மக்கள் ஒரு பகுதிதான் - ஏராளமானோர் NON IT நான் உள்பட. IT யில் வெளிநாடு செல்வது 10-15 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தது, ஆனால் மற்ற துறையினர் பல ஆண்டுகளாக NRI ஆக இருக்கின்றனர்.
”எந்த வகையில் முதலீடு செய்தால் நம் நாடு முன்னேறும் என்பது போன்ற அறிவு அவர்களிடையே இல்லை. ”
இது கருத்து, ஒருவர் எல்லாத்துறைகளிலும் வல்லுனராக இருக்க முடியாது, NRI களின் Investment Knowledge கம்மியாக இருக்கு, அதற்கு இந்திய அரசாங்கம் வழி செய்திருக்கலாம் (Guiding the NRIs as how to and where to Invest in India) அது போகட்டும், நீங்கள் ஏன் சிறந்த இன்வெஸ்ட்மெண்ட்கள் பற்றி உங்கள் பிளாக்கில் எழுதக்கூடாது? நாங்கள்ளாம் படிச்சு பய்னடைவோமே..
சும்மா ஆங்கிலம் தப்பா பேசராங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காம, நான் எனக்கு தெரிஞ்ச தவறுகளையும் திருத்தங்களையும் என் பக்கத்தில் சொல்லிக்கிட்டு வர்றேன்,
Come lets join and make constructive criticism.
பிரபல பதிவரானதுக்கு முதலில் வாழ்த்துக்கள். வெரி குட். பாக்க ரெம்ப சந்தோஷமா இருக்கு. :))
//அந்த் ஜோக் இருக்கும் லின்க் தனிமடலில் அனுப்புங்களேன்.. //
அந்த மெயிலை அப்படியே பார்வேடு பண்ணவும். என்னது யாருக்கா? :))
ஆன்சைட் போனவங்க எல்லாம் NRIனு அழைக்கப்படுவாங்களா?
நாட்ல குண்டூசி, புண்ணாக்கு விக்கறவன் எல்லாம் தொழிலதிபர்னு சொல்லிட்டு திரியறாங்க பா!
அம்பி
உங்க ஒரு லைன் ஜோக் நல்லாருக்கு
அப்புறம், சலவைக்காரி ஜோக்கோட லிங்க் கெடச்சா கண்டிப்பா அனுப்பறேன்.
Anonymous said...
ஆன்சைட் போனவங்க எல்லாம் NRIனு அழைக்கப்படுவாங்களா?”
அனானி அன்பரே, 6 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வெளிநாட்டில வசித்தால் NRI status என்று படித்ததாக நியாபகம்.
B1 ல (business visa to USA) onsite போறவங்க எல்லாம் NRI கெடயாது.
சந்தேகம் தீர்ந்ததா?
//முதல்ல உங்க டார்கெட்ட செட் பண்ணிக்கோங்க - ஏன்னா NRI மக்கள்ல IT மக்கள் ஒரு பகுதிதான் - ஏராளமானோர் NON IT நான் உள்பட. IT யில் வெளிநாடு செல்வது 10-15 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தது, ஆனால் மற்ற துறையினர் பல ஆண்டுகளாக NRI ஆக இருக்கின்றனர்.//
நீங்கள் இந்த துறையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வளைகுடா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளைத்தவிர்த்து மேற்கத்திய மற்றும் ஜ்ரோப்பிய நாடுகளில் உள்ள NRI களில் 70 சதவிதம் பேர் IT ஆளுங்கதான் எனபது கூட உங்களுக்கு தெரியாதா என்ன?
"Anonymous said...
நீங்கள் இந்த துறையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வளைகுடா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளைத்தவிர்த்து மேற்கத்திய மற்றும் ஜ்ரோப்பிய நாடுகளில் உள்ள NRI களில் 70 சதவிதம் பேர் IT ஆளுங்கதான் எனபது கூட உங்களுக்கு தெரியாதா என்ன?"
Mr. X (உங்கள அனானின்னு பல தடவை சொல்றது பிடிக்கல - உங்கள் விவரங்கள் வேண்டாம் - பேரை மட்டுமாவது சொல்லுங்கள்)
முதல்ல இந்த விவாதத்தை ஆரோக்கியமாக கொண்டு செல்வத்ற்கு நன்றி. உங்க குடும்பத்தில் நடப்பதைப் பற்றி எழுதுங்களேன்னு சொன்னதுக்கு கொஞ்சம் சூடாக பதில் அளித்து விட்டேன், அதுக்கு ஒரு Sorry.
coming to your point, Though I dont have the data to authenticate, I think your estimation of 70% NRIs are being IT professionals in the western world is high. I have never been to Europe, but in US, I see so many Doctors, Phds and business men who are Indians (or Indian origins - those who have been here for a very long time and got their citizenship)
உங்கள் 70% கணக்கை சரியென்றே வைத்துக் கொண்டாலும், (”வளைகுடா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளைத்தவிர்த்து” )
இவர்களையும் சேக்கும் போது, NRI மக்களின் எண்ணிக்கையில் IT மக்களின் எண்ணிக்கை 50% கீழே போய்விடும். நிலமை இப்படி இருக்கையில் NRI எல்லாம் IT மக்கள் என்று எப்படி கூற முடியும்.
//(சலவைக்காரி ஜோக் என்னான்னு யாராவது
சொல்லுங்களேன்)//
மெயிலில் சொல்கிறேன்!
வாலு,
கண்டிப்பா இமெயிலில் அனுப்புங்க..
அப்பாடா, இன்னொருத்தர் அனுப்பறேன்னு சொல்லிட்டாரு.. என் தலை தப்பிச்சுது! :)
அம்பி, உங்க தங்கமணிக்கு தானே? நீங்க கேட்டீங்கன்னு சொல்லி அனுப்பிச்சுருக்கேன், சயங்காலம் சீக்கிரமா வீட்டுக்கு போங்க :D
ராஜ.நடராஜன் ஐயா எங்கே? அவர் சொன்னதுக்காக இன்னிக்கு work from home பண்ணி தமிழ்ல தட்டச்சறேன்! ஒரு ட்ரீட் தரணும் இதுக்கு அவரு.. ;)
பொற்கொடி,
சொன்னவர் இன்னும் சோக்கை அனுப்பவில்லை, நீங்களாவது அனுப்புங்க
ராஜ நடராஜன் பாத்தாருன்னா சந்தோஷப்படுவாரு, ஆமா இணைப்பு பாலமா இருந்த எனக்கு ட்ரீட் ஏதும் கிடையாதா?
அங்கிள், அது என்ன என்னை மாதிரி குட்டி பசங்க சொல்ற ஜோக்கா? அதை நான் படிச்ச உடனேயே "சர்ர்ர்ர்ர்"னு ரப்பர் வச்சு அழிச்சுட்டேன் என் brainல இருந்து :)
இவ்ளோ கேக்கறீங்களே, கொஞ்சம் என் கடைல இருக்க ஜோக்கை படிக்க வரலாம்ல? நானே எல்லா வீட்டுக்கும் எத்தனை தடவை நடந்து போய் கும்மி அடிக்கறது, கால் வலிக்காதா? கொஞ்சம் கூட சின்ன பொண்ணுங்கற கரிசனமே இல்ல.
(கவனிக்க: நான் இங்க வர்றதுனால, நீங்களும் வரணும்னு எல்லாம் சொல்லலை, அப்பப்போ தலையை காமிங்கன்னு தான் சொன்னேன்.. :D )
பொற்கொடி, ஜோக் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு போங்க, ஒத்துக்கறேன், அதுக்காக “அங்கிள்”ன்னெல்லாம் சொல்லிகிட்டு, என்ன இது சின்னப்புள்ளத்தனமா...
உங்க கடைக்கு நான் அடிக்கடி வர்றேன், போன பதிவுக்கு கூட பின்னூட்டம் போட்டேனே, புது பதிவு பாத்தேன், எனக்கு லிங்க் தெரியல, என்னான்னு பாருங்க, இல்லன்னா லிங்க எனக்கு தனிமடல் அனுப்புங்க
(கவனிக்க: நீங்க இங்க வர்றதுனால, நானும் வர்றேன்னு எல்லாம் சொல்லலை, அப்பப்போ கண்டிப்பா வருவேன்னு தான் சொன்னேன்.. :D )
அப்புறம் இன்னொறு முறை அங்கிள்ன்னு சொல்லாதீங்க, அப்புறம் என்னோட ரசிகைகள் உங்கள சும்மா விட மாட்டாங்க, இந்த முறை எனக்காக உங்கள மன்னிக்க சொல்லிடறேன்...
ஸ்ரீராம் பதிவு நன்றாக உள்ளது
எல்லாவற்றிலுமே நல்லது / கெட்டது சரிவிகிதமா கலந்துதான் இருக்கு!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரம்யா
சரியா சொன்னீங்க
Post a Comment