பல பேர் ரெஸ்யூமே எழுதுவது எப்படின்னும் இண்டர்வியூ அட்டெண்ட் செய்வது எப்படின்னும் டிப்ஸ் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோம்.
நானும் சில நாட்களில் எழுதப் போறேன். ஆனா இதெயெல்லாம் படிச்சிட்டு படிச்சதை சரியாக உபயோகப்படுத்தி வேல கெடச்சப்புறம் நீங்க செய்யற
வேலய விடுவதற்கு கஷ்டப்படக்கூடாதுன்னுதான் இந்த பதிவு.
மாமியார் செத்துப் போச்சு Iam the only one responsible for it என்று எழுதப்படும் லீவ் லெட்டர்கள் போல நான் பார்த்த Resignation letterகள்
நெஞ்சை நக்கும் விதத்திலும் Better Prospect என்ற காரணத்துடனும் இருக்கும். Resignation letter எழுதும்போது செய்ய வேண்டிய / செய்யக்கூடாத
சிலவற்றை எங்கு பார்க்கலாம்.
1. லெட்டர் சுருக்கமாக இருக்குமாறு அமைக்கவும்
2. கடிதத்தில் நீங்கள் எடுத்த முடிவு யோசித்து எடுக்கப் பட்ட முடிவு, மனமாற்றத்துக்கு வாய்ப்பில்லை என்பதை Diplomatic ஆக தெரியப்படுத்தவும்.
3. காரணம் சொல்லியே ஆக வேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை.
4. எப்போதும் உங்களின் Immediate Boss / Reporting manager க்கு லெட்டரை address செய்யுங்கள், அவரிடமே லெட்டரை கொடுங்கள்.
மேனஜரின் மேனஜரிடம் நேரடியாக போகாதீர்கள், Knowledge Transfer/ Relieveing date போன்றவற்றிற்கு உங்கள் மேனஜரிடம்தான் வர வேண்டும்.
5. நீங்கள் எந்த தேதியில் வேலையில் இருந்து விடுபெற விரும்புகிறீர்கள் என்பதைத் தெளிவாக குறிப்பிடவும், இதை மேனஜரின் சாய்ஸுக்கு விடாதீர்கள்.
6. வாய்ப்புக்கு நன்றி சொல்லுங்கள்.
7. ஆனால் நெஞ்சை நக்காதீர்கள், உலகிலேயே இதுதான் சிறந்த கம்பேனி என்று கதை விடாதீர்கள், அப்படி இருப்பின் நீங்கள் Resign செய்ய வேண்டி இருந்திருக்காது.
8. ஆபிஸில் இருக்கும் பியூன் முதல் முதலாளிவரை இருக்கும் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு நன்றி சொல்வது Resignation letter இல் அல்ல, அதுக்குன்னு ஒரு தனி இமெயில் அனுப்பனும்.
9. மேனேஜருக்கு ஒரு இமெயில் அனுப்பிவிட்டு பின்னர் அவரை சென்று சந்தியுங்கள், அவரும் ஓரளவுக்கு தயாராக இருப்பார். அந்த சந்திப்பில் Last day at work ஐ இருவருமாக முடிவு செய்து, அதனை லெட்டரில் குறிப்பிட்டு மேனேஜரின் கையொப்பம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
10. கடைசியாக நீங்கள் resign செய்யும் விஷயத்தை ஆபிஸ் முழுவதும் தம்பட்டம் அடிக்காதீர்கள், மேனேஜர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அனைவருக்கும் சொல்லுங்கள் / இமெயில் அனுப்புங்கள். IT யில் வேலை செய்பவராக இருந்தால் resign செய்வதற்கு முன் Client க்கு சொல்லாதீர்கள். Resign செய்த பின்னரும், Client க்கு நீங்கள் சொல்வதா இல்லை மேனேஜர் சொல்வதா எனபதை அவர் முடிவுக்கு விடுங்கள்.
இரு வாரங்களுக்கு முன் ஒரு நண்பரின் கேட்டதுக்காக, நான் எழுதிக் கொடுத்த லெட்டர் உங்கள் பார்வைக்கு
Hi Suresh அல்லது Dear Mr. Gates
Hope all is well with you.
Every good thing in life has an end and my stay at Mannar & Co is no exception.
Writing this letter/ email to convey that I have decided to move on in my life, I have accepted a position
elsewhere and would like to get relieved from my current position with Mannar & Co. Considering the
current scenario and my personal priorities / career goals, I had to take this decision.
Would like to thank you for all your support so far and I would need your support in making
this exit smooth. I will do the Knowledge transfer and hand over things to someone in the
next 2 weeks and would like to get relieved from this project on 25th Sept 2009. If needed,
I can help my back fill remotely without any benefits.
I have not informed Bill Gates (Client Manager) about this yet, Please let me know if I have to inform him too.
Once again, thank you very much for providing this wonderful opportunity, I really enjoyed
working here, it was a tough decision to leave this but I had to take it to achieve my
personal / career goals. Hope you understand. Please let me know the next steps.
Hoping to cross career path with you in future, I remain thanking you
regards
kaipulla
இந்த லெட்டர் பத்து நிமிஷத்தில அவசர கதியில் எழுதியது, இன்னும் மெருகேற்றலாம். Your tips are welcome.
அப்புறம், இதை படியுங்க
Porkodi goes to office everyday to read and write blogs,isn't it? இந்த வாக்கியத்தில் ஒரு தவறு இருக்கிறது (சொல் குற்றம்
மட்டுமே, பொருள் குற்றம் இல்லை) அது என்னான்னு சொல்லுங்க பாப்போம், இது பற்றி அடுத்த அழாகா ஆங்கிலம் பகுதியில் பாக்கலாம்...
Monday, September 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
///////
Porkodi goes to office everyday to read and write blogs,isn't it? இந்த வாக்கியத்தில் ஒரு தவறு இருக்கிறது (சொல் குற்றம்
மட்டுமே, பொருள் குற்றம் இல்லை)
////////
கடந்த.. 2-3 வாரமா... நான் இதை மட்டுமே செய்வதால்... இதில் எந்த குற்றமும் இல்லை.. இல்லை.. இல்லை... .என உறுதியுன் கூறுகிறேன்.
அய்யா.... மேலே.. போட்ட கமெண்ட் என்னோடது தானுங்க. பாஸ்வேர்ட் மறந்து போச்சி. அதான் அனானியா... அவதாரம்.. எடுத்துட்டேன்.
-ஹாலிவுட் பாலா
வாங்க பாலா
பாஸ்வேர்ட் மறந்து போச்சி- என்னாதிது சின்னப்புள்ளத்தனமா இருக்கு..
வரம்பு மீறாத வரை நிஜமான அனானிகளும் என் தளத்தில் Welcome.
அந்த வாக்கியத்தில் ஒரு சொல் குற்றம் கண்டிப்பா இருக்கு, அது பற்றி அடுத்த பதிவில்...
நல்ல பதிவு. 3 வருடங்களுக்கு முன் இதைப் படித்திருந்தால் ஒரு நல்ல resignation லெட்டர் நானும் எழுதியிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. நான் எழுதிய resignation லெட்டரை தனி மெயிலில் அனுப்பியுள்ளேன். பார்த்து ஏதாவது மார்க் போடுங்கள்.
தங்கள் வாக்கியத்தில் தவறு கண்டுபிடிக்கும் அளவுக்கு நமக்கு ஆங்கில ஞானம் இல்லை. ஒவ்வொரு பதிவிலும் இது போல் ஒரு டெஸ்ட் வைத்து அடுத்த பதிவில் அந்த வாக்கியத்தில் இருக்கும் தவறை விளக்கினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
//Porkodi goes to office everyday to read and write blogs,isn't it? //
It should be porkedi not porkodi.. :)))
எனக்கு பாஸ்வேர்டு நியாபகம் இருக்கு, ஆனா ஜி-மெயில் லாகின் பண்ண சோம்பல். பாருங்க என் பெயர் எல்லாம் போட்ருக்கேன். :)
வாங்க ரத்தின முத்து,
தாங்கள் அனுப்பிய மடலுக்கு பதில் அனுப்பி விட்டேன். மார்க் போடுற
அளவுக்கெல்லாம் நான் என் தகுதியை
இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை.
அந்த வாக்கியத்தில் உள்ள தவறை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.(will try to do that in a day or two)
//இது போல் ஒரு டெஸ்ட் வைத்து அடுத்த பதிவில் அந்த வாக்கியத்தில் இருக்கும் தவறை விளக்கினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று கருதுகிறேன்.//
நல்ல கருத்து, முடிந்த வரை முயல்கிறேன். நான் ஒரு On the Spot ஆசாமி, எதயும் முன்னரே எழுதி பின்னர் polish பண்ணி இடுவதில்லை.
நாளை என்ன எழுதப்போகிறேன் என்று இதுவரை யோசித்ததில்லை. (இன்று தவிர) இனிமேல் 2-3 போஸ்ட் எழுதி வைக்கணும், அப்பத்தான் நாளை போஸ்ட் செய்யப்போகும் தலைப்பு பத்தி Hint கொடுக்க முடியும்.
டெஸ்ட்ன்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவர்...
It should be porkedi not porkodi.. :)))
அம்பி, உஙகளுக்கு பொற்கொடிய வம்புக்கு இழுக்கலேன்னா தூக்கமே வரதா?
ஆமா பதிவு பத்தி சொல்ல ஒண்ணுமே இல்லயா? அவ்வ்வ்வ்வ்
ambi mattum illai, boston kooda rooadla pora saniyana thooki baniyankulla thaan poduven nu otha kalla nikringa.. naan enna panradhu? :P
Sol kutram 1- Porkodi goes home everyday to sleep - this is the sole true sentence that applies for the last 4 weeks and the next 4 weeks :)))(note: enaku indha life styleum pidichuruku!)
Sol kutram 2- Obviously, I do other things apart from blogs - Actual work, eating all the fruits I brought from home, making green tea, brushing my plaits and looking into the mirror, listening to songs, playing ping pong.. sari niruthikaren :)
Actually, mele sonnadhu ellam Sol kutram + porul kutram :)
Neenga kudutha sentence ipdi irundhu irukanum - "Sriram goes to office everyday to read and write blogs, isn't he? (or doesn't he is also fine, acc to me.)"
டென்சன் ஆவாதீங்க பொற்கொடி (பாருங்க நான் பொற்கேடின்னு சொல்லவே இல்ல)
அந்த வாக்கியத்தில் இருக்கும் சொற்குற்றம் - அடுத்த இடுகையில்..
பொருத்திருங்கள்..
indha economyla resignation letter romba usefula irukum nu nenachu ezhudina madhri irukku.. hmmmm.. ennai mattum illama en company mudhalaliyaiyum edho client manager nu kindal pannadhai kannapinnavena kandithu naan velinadappu seigiren. nandri vanakkam!
Mudhalla neenga sol kutram illama ezhudunga, "poRuththu" periya 'Ra', sinna 'ra; illai :P vandhutaru vadhyaru.. :P :P
ஓ.. பில் கேட்ஸ் கம்பேனியிலா வேல செய்யுறீங்க பொற்கொடி, சொல்லவே இல்ல....
வாங்க தமிழ் டீச்சர், அப்படியே செய்யறேன் இனிமேல்...
டீச்சர் அப்புறம் ஒரு விஷயம், அது வல்லின “ற” மற்றும் இடையின “ர”
சின்ன ர & பெரிய ற இல்ல..
Porkodi goes to office everyday to read and write blogs,isn't it?
should it be " Porkodi goes to office everyday to read and write blogs,doesn't she?"
Great tips... keep up the good work Sri.
நட்புடன்,
ராஜ்.
வாங்க ராஜ்
மிகச்சரியா சொன்னீங்க.
எனக்கு தெரிந்த பலர் உபயோகிக்கும் ஒரே Question Tag Is it not?
இது பத்தி இன்னும் அடுத்த பதிவில் எழுத எண்ணியுள்ளேன்.
Thanks for the appreciation
நல்லது :).
அடுத்த பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
ராஜ்.
ஐயோ, வேலை விட இவ்வளவு பெரிசாவா கடிதம் எழுதணும். நான் எழுதியது இவ்வளவுதாங்க..
Dear Sir,
I, resign.
Raghavan
இது எப்படி இருக்கு?
இந்த ஆங்கிலபுதிருக்கு, நாளைக்கு நீங்க விடை சொல்லும் போது பதில் தெரிஞ்சுகிறேன்.
பொற்கொடி,
நீங்க சொன்னது பாதி கரெக்ட், isn't he என்பது தவறு, doesn't he ன்னு சொன்னீங்க பாருங்க, அங்கதான் நிக்கறீங்க..
நீங்கல்லாம் போயிட்டா நான் ஸ்கூல இழுத்து மூடிட வேண்டியதுதான், கோச்சிக்காம நாளைக்கு வாங்க...
ராகவன் ஜி
உங்க லெட்டர் சூப்பர், இத்த விட ரத்தின சுருக்கமா யாராலும் எழுத முடியாது
isn't he ennoda pala velinaatu friends thavaramal use panranga.. Apparently, in the slang tongue, they can also take the sense, Sriram is going to office. so, they use isn't he! endha country.region la ipdi arambichudhu nu romba naala araichi panitu irukken, answer thaan kidaikala.
பொற்கொடி, அழகா ஆங்கிலம் முதல் பகுதி படிங்க, ரெகுலரா செய்யுற விஷயத்துக்கு, sriram is going to office ன்னு வராது, sriram goes to office ன்னு தான் வரும்.
நெறய பேர் சொல்றாங்கன்னு நீங்க சொல்றது சரிதான், ஆனா அது தப்பு..
Out of the 30 comments, 22 are from you and me. Nama urupaduvom nu nenakringa? ;)
P.S: "Out of the 30 comments, 22 are from you and I" nu kooda sollalam nu sonna othupingla?
Anonymous said...
///////
Porkodi goes to office everyday to read and write blogs,isn't it? இந்த வாக்கியத்தில் ஒரு தவறு இருக்கிறது (சொல் குற்றம்
மட்டுமே, பொருள் குற்றம் இல்லை)
////////
கடந்த.. 2-3 வாரமா... நான் இதை மட்டுமே செய்வதால்... இதில் எந்த குற்றமும் இல்லை.. இல்லை.. இல்லை... .என உறுதியுன் கூறுகிறேன்.//
நான் வேலைக்கு சேர்ந்ததிலிருந்தே இதை தான் செய்வதால் ஒரு குற்றமும் இல்லை என கூவி கொள்கிறேன்!
வாங்க வாலு
நீங்க ஆபிஸ்ல செய்யுறதுதான் ஊருக்கே தெரியுமே. நான் சொன்னது சொல் குற்றம், பொருள் குற்றம் அல்ல
Grammar, letter writing lam marandhu poi romba naal aachu. Thanks for teaching again. :)
//நீங்கல்லாம் போயிட்டா நான் ஸ்கூல இழுத்து மூடிட வேண்டியதுதான், கோச்சிக்காம நாளைக்கு வாங்க//
அட மழையிலும் கொட பிடித்து கொண்டு வருவோம்
லீவே போடமாட்டோம் கரெக்டா வந்துடுவோம் ஆனா கேள்வி மட்டும் கேட்கக்கூடாது....
ரொம்ப பயனுள்ள பதிவு.
மன்னார்&கோ, பில்கேட்ஸ் நல்லாயிருக்கு...
வாங்க மித்து
அதுக்குத்தான் இந்த மாதிரி பதிவுகள்.
refresh பண்ணிட்டீங்களா
நன்றி ஜலீலா
கண்டிப்பா வாங்க
கேள்விக்கு ஏன் டென்ஷன் ஆகறீங்க?
பதிலையும் நாந்தான் சொல்றேனே...
Sorry for my bad english. Thank you so much for your good post. Your post helped me in my college assignment, If you can provide me more details please email me.
அனானி அன்பரே
உங்களுக்கு உதவியா இருந்ததில் சந்தோஷம்.
இன்னும் என்ன டீடெய்ல் வேணும்? உங்க இமெயில் ஐடி என்னிடம் கிடையது. nsriram73@gmail க்கு இமெயில் அனுப்புங்க, பதில் சொல்றேன்
//Porkodi goes to office everyday to read and write blogs,isn't it? //
it shoud be
orkodi goes to office everyday to read and write blog
am i right annaa?
Post a Comment