Monday, August 31, 2009

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க- பகுதி 2:

பகுதி 1 படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த பதிவில் மேலும் சில தவிர்க்க வேண்டிய தவறுகளைப் பற்றிப் பார்க்கலாம்

1. Freegift : Gift என்றாலே அது கண்டிப்பாக Free ஆகத்தான் இருக்க வேண்டும், காசு கொடுத்து வாங்கினால் அது Gift ஆக இருக்க முடியாது

இந்த வார்த்தை விளம்பங்களில் அதிகம் உபயோகிக்கப் படுகிறது. பொருள் X வாங்கினால் பொருள் Y free ஆகக் கிடைக்கும் என்றோ அல்லது ஒரு பொருள்

Gift ஆகக் கிடைத்தது என்றோ கூறினால் போதும். Freegift என்பதை தவிர்க்கவேண்டும்.

2. I can't able to do this : can't உம் able உம் அடுத்தடுத்து வருவது சரியல்ல. I can't do this என்றோ I am not able to do this என்றோ சொல்ல வேண்டும். நண்பர்கள் நிறைய பேர் can't able என்று கூறக்கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய தவறுகளில்
இதுவும் ஒன்று.

அடுத்த இரண்டு தவறுகள் நான் தில்லியில் வாழ்ந்த போது கேட்டிருக்கிறேன், தமிழகத்தில் அதிகம் கேட்டதில்லை.

3. I gave the test / interview yesterday: Interview, Test, Exam இதையெல்லாம் கொடுக்க (give) முடியாது, I wrote my final
exam yesterday, I attended an Interview yesterday என்றுதான் சொல்ல வேண்டும்.

4. தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது, Myself Sriram என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன், இதுவும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.
I am Sriram என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல, Mr. X இடம் Mr.Sriram போன் பண்ணேனுன்னு சொல்லுங்க அல்லது ஸ்ரீராம் சார் போன்
பண்ணேன்னு சொல்லுங்க என்றும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். Mr / Sir போன்ற மரியாதை விகுதிகள் மற்றவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் போது
உபயோகப் ப்டுத்த வேண்டியவை, நமக்கு நாமே திட்டத்தில் சேராது...

5.இந்தியாவின் அனைத்து பகுதியினரும் பாகுபாடில்லாமல் செய்யும் தவறு இது: ஒருவர் பெயரைக் கேட்கும் போது, ரொம்ப polite ஆகக் கேட்பதாக நினைத்துக்
கொண்டு What is your Good Name? என்று கேட்கக்கூடாது. பெயரில் நல்ல பெயர், கெட்ட பெயர் என்று எதுவும் கிடையாது.
What(i)s your name (i உச்சரிப்பு கிடையாது- whats your name) என்று கேட்க வேண்டும், Polite ஆ கேப்பேன்னு அடம் பிடிச்சா May I
know your name
என்று கேட்கலாம்.

அழகா ஆங்கிலம் பகுதி 1 க்கு நல்ல ரெஸ்பான்ஸ், பகுதி இரண்டும் உங்களுக்கு பிடிச்சிருக்குமுன்னு நம்பறேன்.போரடிக்கும் போது சொல்லுங்க நிறுத்திக்கறேன்.
அப்புறம் வேற டாபிக்ல மொக்க போடுறேன்....

69 comments:

ஷைலஜா said...

/5.இந்தியாவின் அனைத்து பகுதியினரும் பாகுபாடில்லாமல் செய்யும் தவறு இது: ஒருவர் பெயரைக் கேட்கும் போது, ரொம்ப polite ஆகக் கேட்பதாக நினைத்துக்
கொண்டு What is your Good Name? என்று கேட்கக்கூடாது. பெயரில் நல்ல பெயர், கெட்ட பெயர் என்று எதுவும் கிடையாது.
What(i)s your name (i உச்சரிப்பு கிடையாது- whats your name) என்று கேட்க வேண்டும், Polite ஆ கேப்பேன்னு அடம் பிடிச்சா May I / Can I
know your name என்று கேட்கலாம்.//


>>>ஆனா ஸ்ரீராம் பலபேரு whats yr good name? எனக்கேட்பதால் நானும் இப்படித்தான் கேட்கிறேன் தவறென இப்போ புரிகிறது நன்றி.

sriram said...

ஷைலஜா அக்கா : உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது.
You are welcome....

ஷைலஜா said...

sriram said...
ஷைலஜா அக்கா : உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது.
You are welcome
<<<<<<<<<<<,'

'புல்'லரிக்குதா ? தோட்டத்துலயா உக்காந்திருக்கீங்க?:)

கடமை உணர்ச்சி?:)

hello brother! any UK? (உள்குத்து):

just kidding!

sriram said...

யக்கோவ்..
நம்ம உ பி ச டுபுக்கார் இங்கிலாந்தில் தான் இருக்கிறார்...

பாலா said...

ஸ்ரீராம்.. பகுதி 1-ற்கான லிங்க் சரியா கொடுக்கலை. கொஞ்சம் மாத்திடுறீங்களா?! :)

நான் ததக்கா பிதக்கா இங்க்லிபீஜு தான் பேசுவேன். ஆனா இதுவரைக்கும் நீங்க சுட்டிக்காட்டின தப்பை பண்ணியதில்லை(ன்னு நினைக்கிறேன்).

இருந்தாலும் அடுத்த பகுதிகளுக்கு வெய்டிங்!!! :)

sriram said...

வாங்க பாலா, யாரு நீங்களா ததக்கா பிதக்கான்னு பேசுரது?? ஆனாலும் இவ்வளவு தன்னடக்கம் ஆகாது...
லின்க் மேட்டர் - பாக்கறேன்..

sriram said...

சரி பண்ணிட்டேன் பாலா, சுட்டிக்காட்டியதற்கு நன்றி

ஷைலஜா said...

//sriram said...
யக்கோவ்..
நம்ம உ பி ச டுபுக்கார் இங்கிலாந்தில் தான் இருக்கிறார்...

///

UK க்கு இப்படி பதிலா?:) ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்!
யா. ஒ. கா. வ,
பூ.ஒ கா. வ:)

sriram said...

யக்கா
’’யா. ஒ. கா. வ,
பூ.ஒ கா. வ:)// அப்படின்னா என்னா?
நான் கொஞ்சம் அப்பாவி, இதெல்லாம் புரியாது, வெளக்கவும்

When it is high time said...

It is rare among Tamil bloggers to see someone writing on how to ...in English.

You must be encouraged. A lot of blog-readers have encouraged you. Mine would be superfluous, I am afraid.

In this blog post and the earlier one, you have pointed out some common errors. On most of them, I have difference of opinion. But to write all will make this Comments area itself a kind of blog post - encroached by me.

I will open a blog of my own where, I will take one by one your 'errors' and post my comments apropos.

This does not mean all that you have pointed is erroneous. Only a few. But, among the respondents, including the member by name Tharumi who, I come to know, was a prof of English formerly, have posted comments here, which deserve to be responded differently.

I am waiting for some more blog posts from you on the same subject so that I may get awful lot of things to say.

Congrats, Sir

Anonymous said...

nalla padivu, nandri

sriram said...

Thanks Sword fish for taking out time to read my posts and for posting your comment.
Not to flirt, but I could not help saying that you have a great command over the language, English..
As I have already mentioned,I am not a Shakespeare but someone who studied in Tamil Medium and studied English as my second language..
As you have pointed out, there are not many (in the tamil blog world) to write about this and I decided to bell the cat to a. share what I know (should I say what I have thought as correct) and b. to bring out people like you who have mastered the language to teach everyone including me.
Eagerly waiting you to start a blog on this... can you please inform me at nsriram73@gmail.com once you do so?
தவறுகளை சுட்டிக்காட்டினால் தன்யனாவேன்...

ஷைலஜா said...

sriram said...
யக்கா
’’யா. ஒ. கா. வ,
பூ.ஒ கா. வ:)// அப்படின்னா என்னா?
நான் கொஞ்சம் அப்பாவி, இதெல்லாம் புரியாது, வெளக்கவும்

August 31, 2009 7:52
>>>>>>>>>>>>>>>>>>>>>.
ஸ்ரீதம்பியே! யான்னா யானை பூன்னா பூனைன்னு மட்டும் க்ளூ தர இப்போ முடியும் மற்றவை லஞ்சுக்குப்பிறகு!

sriram said...

புரிஞ்சிருச்சு யக்கோவ்..

அமுதா கிருஷ்ணா said...

no bore..waiting for next class..

sriram said...

நன்றி அமுதா
நேரம் ஒத்துழைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்

இராகவன் நைஜிரியா said...

அண்ணே ஸ்ரீராம் அண்ணே...

உங்க கிட்ட இருந்து நிறைய விசயம் கத்துகிறேன் அண்ணே...

ரொம்ப டாங்ஸ் அண்ணே...

sriram said...

வாங்க ராகவன் ஜி
நான் அண்ணனும் அல்ல (ரொம்ப சின்னப்பையண்ணே நான்)
உங்களுக்கெல்லாம் கத்துக் கொடுக்குற அளவுக்கு விஷய ஞானமும் போதாது.
நான் கத்துக்கிட்டதை பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோஷம், அவ்வளவுதான்...

இராகவன் நைஜிரியா said...

// sriram said...
வாங்க ராகவன் ஜி
நான் அண்ணனும் அல்ல (ரொம்ப சின்னப்பையண்ணே நான்)
உங்களுக்கெல்லாம் கத்துக் கொடுக்குற அளவுக்கு விஷய ஞானமும் போதாது.
நான் கத்துக்கிட்டதை பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோஷம், அவ்வளவுதான்... //

சரிங்க தம்பி அண்ணே...

நானும் பெரிய ஆள் இல்லீங்க. நீங்க பகிர்ந்து கொள்ளும் விசயம் எனக்கு பிடிச்சு இருக்கு. கற்றுக் கொள்ளவும் செய்கின்றேன்.

இதில் பெரியவங்க, சின்னவங்க வேறு பாடு இல்லீங்க. உண்மையைத்தான் சொல்லுகின்றேன்.

sriram said...

தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ராகவன் ஜி. உங்க ஊக்கம் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கும்

Dubukku said...

மிக உபயோகமான பதிவு. வெட்டியா என்ன மாதிரி ஜொள்ளாம...பயனுள்ள பதிவா போடறீங்க...இதெல்லாம் போரே இல்லீங்கோவ்...தொடர்ந்து பதியுங்கள்.

sriram said...

வாங்க டுபுக்கு ரங்கா,
தொலைபேசிய போது சொன்னாமாதிரி
நமக்கு காமடி /க்ரியேடிவ் மூளை கிடையாது, இந்த மாதிரி ஏதாவது போட்டுத்தான் பக்கங்களை நிரப்பணும், பிடிச்சிருந்தா கண்டிப்பா கண்டினியூ பண்றேன்

Floraipuyal said...

//
1. Freegift : Gift என்றாலே அது கண்டிப்பாக Free ஆகத்தான் இருக்க வேண்டும், காசு கொடுத்து வாங்கினால் அது Gift ஆக இருக்க முடியாது

இந்த வார்த்தை விளம்பங்களில் அதிகம் உபயோகிக்கப் படுகிறது. பொருள் X வாங்கினால் பொருள் Y free ஆகக் கிடைக்கும் என்றோ அல்லது ஒரு பொருள்

Gift ஆகக் கிடைத்தது என்றோ கூறினால் போதும். Freegift என்பதை தவிர்க்கவேண்டும்.
//

gift என்பது நமக்கு தெரிந்தவர்களுக்கு நாம் அன்புடன் அளிப்பது. freegift - இலவசமல்ல. நமக்கு இலாபமளித்தவர்களுக்கு நாம் அளிப்பது. காட்டாக நீங்கள் என்னிடம் எதையாவது வாங்கினால் நான் உங்களுக்குத் தருவது freegift. அதுவே நீங்கள் என் நண்பர் என்பதால் உங்களுக்குத் தருவது gift.


//
I gave the test / interview yesterday: Interview, Test, Exam இதையெல்லாம் கொடுக்க (give) முடியாது, I wrote my final
exam yesterday, I attended an Interview yesterday என்றுதான் சொல்ல வேண்டும்.
//

I took / gave a test / an exam / an interview. என்பவையே சரி. நாம் தேர்வு வைத்தால் I gave a test. நாம் தேர்வு எழுதினால் I took a test. அதுவே நாம் மற்றவருக்கு நேர்முகத் தேர்வு நடத்தினால் I took an interview. நம்மை மற்றவர் சோதித்தால் I gave an interview.


//
Mr. X இடம் Mr.Sriram
//
Mr. / Mrs. / Miss இவை குடும்பப்பெயர்களுக்கு மட்டுமே. நமக்குப் பொருந்தாதென்றாலும் தெரிந்து கொள்வது நல்லது. Barrack Obama - Mr. Obama. முதற்பெயர் சொல்லி அழைத்தால் வெறும் Barrack.


//
May I / Can I know your name?
//
May I என்பது மட்டுமே சரி. Can I know your name என்றால் "என்னால் உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ள முடியுமா?" என்று பொருள். பொதுவாக இப்படிக் கேட்டால் பெயர் வராது - may be என்று தான் பதில் வரும்.


சும்மா கொற கண்டுபுடிக்கிறேனா? தப்பாத் தெரிஞ்சா விட்டுருங்க :):)

sriram said...

வாங்க FloraiPuyal (அப்படின்னா என்னங்க)
free gift : வியாபாரிகள் நமக்குத் தருவது, Free items மட்டுமே, அவற்றை Freegift என்று கூற முடியாது.
Igave an interview : This gives me (us) something to ponder over. நான் இதைப்பற்றி படித்து / கேட்டுப்
பார்க்கிறேன், நீங்களும் பாருங்கள், அனைவரும் தெளிவடையலாம்
இந்த Mr. விஷயம் சிக்கலானது - சிக்கல் விஷயத்தில் இல்லை. நம் (தமிழக) சமூகத்தில் உள்ளது. இதைப் பற்றி அடுத்த
பகுதியில் எழுதணும்னு நினைச்சேன், சொல்லிட்டீங்க..

Can I know your name : I stand myself corrected, Can you tell me your name / May I know your name
என்றுதான் கேட்க வேண்டும், இப்போதே மாற்றிவிடுகிறேன். This makes me think about another mistake - how can I go there?
உங்களுக்கு புரிஞ்சிருக்கும்..

நான் எதுவும் தப்பா நினைக்கலீங்க.. இது ஒரு Forum, இங்கு யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். உங்களால் என் ஒரு
தவறு திருத்தப்பட்டு இருக்கிறது, மேலும் ஒரு சந்தேகம் பிறந்துள்ளது, Confustion will lead to Clarification...
அடிக்கடி வாங்க, அப்பத்தான் என்னோட உளறல்களில் உள்ள தவறுகள் தெரிய வரும்...

பரிசல்காரன் said...

இவ்ளோ உருப்படியா எழுதற உங்களுக்கு ஏதாவது பண்ணணுமே பாஸூ...

பண்றேன்...

sriram said...

///பரிசல்காரன் said...
இவ்ளோ உருப்படியா எழுதற உங்களுக்கு ஏதாவது பண்ணணுமே பாஸூ...///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பரிசலையே impress பண்ணுற அளவுக்கா நான் எழுதறேன்??
நம்பமுடியவில்ல்ல்ல்ல்லை....
நன்றி கிருஷ்ணா...
நேரம் கிடைக்கும் போது படியுங்க, சுவாரசியமா எழுத முயற்சிக்கிறேன்

பரிசல்காரன் said...

பண்ணீட்டேன்.

என் வலைப்பூல வந்து பார்த்து என்னான்னு கண்டுபிடிங்க!

sriram said...

கிருஷ்ணா...
பேனா பதிவுக்கு நான் போட்ட கமெண்டுக்கு பதிலை எதிர்ப்பார்த்திருந்தேன், இதை எதிர்பார்க்கவே இல்ல, நன்றி என்பது மிகச்சிறிய வார்த்தை, ஆனால் இதைத்தவிர வேறேதும் இப்போது என்னிடமில்லை...
உங்களுடைய Recognition க்கு அருகதை உடையவனாக இருக்க முயற்சி செய்கிறேன்....

Floraipuyal said...

//
FloraiPuyal (அப்படின்னா என்னங்க)
//
Florida மாகாணத்தை நாங்கள் florai என்றழைப்பது வழக்கம். இம்மாநிலம் புயல்களுக்குப் பெயர் போனதால் floraipuyal.

Freegift என்பது ஒரு அமெரிக்கச் சொலவடை. இங்கு இலவசம் என்ற பொருள் நேரடியாக வராது. நீங்கள் இதை வாங்கியதால் அல்லது நீங்கள் எனக்கு இவ்வளவு காலம் உழைத்ததால் உங்களுக்கு நான் தரும் பரிசு என்ற பொருள் மட்டுமே. free items / free samples போன்றவை உங்களை ஒரு பொருளை வாங்கத் தூண்டுவதற்காகத் தருவது. gift என்பது நான் உங்களுக்கு அன்பளிப்பாகத் தருவது.

give an interview - நான் உங்களுக்கு பதில் சொல்வது.. பேட்டி கொடுப்பது. பொருள் கொடுப்பது போல் அல்ல
take an interview - நான் உங்களைக் கேள்வி கேட்பது.. பேட்டி எடுப்பது போல்
attend an interview - நான் கேள்வி கேட்டேனா அல்லது பதில் சொன்னேனா என்பதைக் கூறாமல் நான் அங்கு இருந்தேன் என்ற பொருளில் வருவது.

//
how can I go there?
//
இதில் என்ன தவறென்று நினைக்கிறீர்கள்? புரியவில்லை.

Floraipuyal said...

//
I stand myself corrected
//
I stand corrected :):)

sriram said...

////how can I go there?
//
இதில் என்ன தவறென்று நினைக்கிறீர்கள்? புரியவில்லை.///

நாளையே சொல்ல முயற்சிக்கிறேன்

sriram said...

I stand myself corrected
//
I stand corrected :):)

I Stand Corrected
I Stand Corrected
I Stand COrrected
இம்போசிஷன் எழுதினால் தான் மனதில் நிற்கும்..

Jackiesekar said...

Mr / Sir போன்ற மரியாதை விகுதிகள் மற்றவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் போது
உபயோகப் ப்டுத்த வேண்டியவை, நமக்கு நாமே திட்டத்தில் சேராது...

இப்படி பட்ட சவாரஸ்யத்தோடு சொன்னால் ரொம்ப அழகா இருக்கு ஸ்ரீ

sriram said...

நன்றி ஜாக்கி, இன்னும் சுவாரசியத்தோடு சொல்ல முயற்சிக்கிறேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுவாரஸ்யமாகவும் பயனாகவும் இருக்கிறது இரண்டு பகுதிகளும்

தொடர்ந்து எழுத விழைகிறேன்.

ambi said...

தொர இங்க்லீசெல்லாம் பேசுது! :))

Jokes apart,

ஸ்ரீராம், உங்க வீட்டுக்கு இப்ப தான் வந்தேன். எல்லா பதிவையும் படிச்சாச்சு (வேணும்னா கேள்வி கேளுங்க). :))

அடுத்த பதிவு எப்ப வரும்?னு எதிர்பாக்க வெச்சுட்டீங்க.

. said...

நல்லா இருக்கு.

நண்பா ஒரு கேள்வி! ஆமா உங்க உத்தேசம் என்ன, தப்பு குறைச்சு ஆங்கிலம் சொல்லித்தருவதா.! ???

அப்போ 'அழகா ஆங்கிலம்...' என்பதை மாற்றி 'சரியா ஆங்கிலம்.... எனலாமா. த‌லைப்பில்.

நல்ல ஆழமான விசயத்த சொல்றீங்க. இன்றைய காலக் கட்டாயம் இது.

இல்லேன்னா சப்ப மூக்கு காரன பின்னுக்கு தள்ளிட்டு, சர்வதேச காச அள்ளுறது நம்ம மொழி அறிவு தானே.

உங்களுக்கு ஆங்கிலம் நல்லா தெரியும் போலயும் தெரியுது. அதனால ஒரு வேண்டுகோள்.

மொழி ஆளுமை முதல் படி, கேட்பவர் மதி மயங்கி 'நல்லா தெரியுதேய்யா' என்பது . மனதில் நினைப்பதை உணர்ச்சியை அப்படியே சொல்ல முடிவது உச்சம்.

முதல் படி சில வார்த்தை பதங்களில் முடிந்து விடுகிற வேலை. 'சோ நைஸ் ஆஃப் யூ' போல ஒரு இருபது வாக்கிய பயன்பாடுகளை சொல்லிவிட்டால் கேட்பவர் பிரமிப்பார் அல்லவா.

ஏன் என்னைப் போன்ற‌ சாமான்ய‌ர்க‌ளுக்கும் உத‌வும் வ‌கையில் ஒரு ப‌ட்டிய‌ல் இட‌லாமே.

சீக்கிர‌ம் முடிக்காம‌ ந‌ல்லா ரேஞ்சுல நீட்டி எழுதுங்க‌.

வாழ்த்துக்க‌ள்.

கண்மணி/kanmani said...

Useful..asking for good name is not only being polite just giving respect too.is it wrong?
Free gift is like 'nadu center' haha.
If a teacher conducts a test how to say 'conduct' or give?

sriram said...

நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
உங்களுக்கெல்லாம் பிடித்த மாதிரி எழுத் முயற்சிக்கிறேன்

sriram said...

வாங்க படுக்காளி
1. உத்தேசம் எல்லாம் ஒண்ணும் பெரிசா இல்லீங்க.. உண்மைய சொல்லணும்னா எனக்கு Creative மூளை கிடையாது, அதனால் கதை/ காமெடி எல்லாம்
எழுத் முடியாது, ஆனா எழுத ஆசை, எனவே நான் தேர்ந்தெடுத்த வழி - Write about facts.. விசா, Spoken English, Resume பத்தியெல்லாம்
எழுதறேன்.
முன்னரே சொன்னா மாதிரி நான் தமிழ் மீடியம், எனக்கு Grammer தெரியாது, அதனால சரியான்னு பேர் வைக்கல, மேலும் live / living
போன்ற எடுத்துக்காட்டுகளில் பாத்தீங்கன்னா, living in boston என்பதில் தவறு கிடையாது ஆனால் அப்படி பேசுவது அழகல்ல / மரபல்ல.. எனவே
அந்த பேர் (இருங்க மூச்சு விட்டுக்கறேன்)

2. நன்றி

3. சரியா சொன்னீங்க, இப்போ அவன் அதுக்கும் ஆப்பு வைக்க ஆயத்தமாகிக்கொண்டு இருக்கிறான் (எவ்வளவு ‘அ”)

4. அப்படியெல்லாம் தப்பா நெனைக்காதீங்க.. ஏற்கெனவே ரெண்டு பேர் காறி துப்பி விட்டார்கள் (Sword fish and Floraipuyal), எனக்குத் தெரிந்த
சிலவற்றை எழுதறேன், அதிலேயும் correction யாராவது சொன்னா எனக்கும் லாபம்தானே..

5. உங்க கேள்வி புரிஞ்சா மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு - கொஞ்சம் விளக்கமா கேக்கறீங்களா??

6. வாழ்த்துக்கு நன்றி..

sriram said...

வாங்க அம்பி,
பெரியவங்க எல்லாம் இந்த பக்கம் வர்றது பற்றி ரொம்ப சந்தோஷம்..
‘’(வேணும்னா கேள்வி கேளுங்க)’’ இந்த தாமிரபரணி குசும்புதான் அண்ணன் / தம்பி ரெண்டு பேர்கிட்டயும் எனக்கு பிடிச்சது.
’’அடுத்த பதிவு எப்ப வரும்?னு எதிர்பாக்க வெச்சுட்டீங்க’’ இது எப்படி- பிகர் பாக்க போகும் போது நம்மை விட சுமாரான நண்பனை கூட்டிக்கிட்டு போறா
மாதிரி - அதே நேரத்தில் நீங்களும் பதிவு போட்டால், என்னோட மொக்கையை விட உங்க காமெடி பரவாயில்லன்னு ஹிட் எல்லாம் உங்க பக்கம் வருமுன்னு
பிளானா

sriram said...

வாங்க கண்மணி
good name என்று கேட்பது ஆங்கில வழக்கில் கிடையாது. Respect effect எல்லாம் நாமா நினைச்சிக்கிட்டது. அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.
what is your good name, where are you living? what did you do yesterday night? where are you going today evening?
You will be coming to office tomorrow no? என்றெல்லாம் ஒரு Britain காரரிடம் கேட்டு அவரின் Reaction பார்க்க வேண்டும்,
வேணும்னா நம்ம டுபுக்கு ரங்காவை அவர் பாஸிடம் கேக்கச்சொல்லலாம்...

Floraipuyal said...

//
Free gift is like 'nadu center' haha.
//
freegift என்பது ஒரு oxymoron.. நேரெதிர் என்பது போல். இது இலவசம் கிடையாது.

//
அப்படியெல்லாம் தப்பா நெனைக்காதீங்க.. ஏற்கெனவே ரெண்டு பேர் காறி துப்பி விட்டார்கள் (Sword fish and Floraipuyal)
//
என்னங்க இப்படிச்சொல்லிட்டீங்க? நானும் தமிழ் மிடையம் தான். NCBHல தமிழ் வழி பொத்தகங்களை வாங்கித்தான் பொறியியலே தேறினேன்.

அமெரிக்கர்கள் பொதுவாவே கொஞ்சம் குசும்பு புடிச்சவங்க. நேரடியா நம்ம குறைகளைச் சொல்ல மாட்டாங்க. அப்புறம் பின்னாடி விழுந்து விழுந்து சிரிப்பாங்க. நான் இந்த நாட்டுக்கு வர்ர வரைக்கும் எனக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது. இங்க கத்துக்கிட்டதாலயோ என்னவோ எனக்கும் நம்ம மக்கள் பேசும் போது உடனே தவறுகள் தெரியுது.

//
what is your good name, where are you living? what did you do yesterday night? where are you going today evening?
You will be coming to office tomorrow no?
//
இதையெல்லாம் கேட்டு அவங்க கேலி பேசுறது பொறுக்காம நம்ம மக்களுக்கு இங்க பாடம் நடத்திக்கிட்டு இருக்கேன். பதிவு எழுதத்தான் நேரம் கிடைக்கல இப்படி உருப்படியா எழுதுற உங்கள மாதிரி யாருக்காவது பின்னூட்டம் போட்டா நம்ம மக்கள் நாலு பேரு ஒழுங்கா கத்துக்குவாங்களேன்னு தான்.

good name என்பது வழக்கில் இல்லாத ஒன்று. இந்தியின் தாக்கத்தினால் இந்திய ஆங்கிலத்தில் ஏற்பட்டதென்று எண்ணுகிறேன். இது போல தவிர்க்க வேண்டிய இன்னொன்று kindly.

Floraipuyal said...

பசிபிக்ல இருக்கீங்களா? 3 மணி நேரம் முன்ன காட்டுது?

sriram said...

வாங்க Floraipuyal, நான் பாஸ்டன்ல இருக்கேன்.
உங்க பேரைச் சொல்லலாமே, ஆணா பெண்ணான்னு கூடத் தெரியாம பேசிக்கிட்டு இருக்கேன் (தெரிஞ்சு ஆவப்போவது ஒண்ணுமில்ல சும்மா ஒரு General Knowledge).
கிளாஸ் எடுக்கும் நீங்களே Blog ல எழுதலாமே. நானும் இத்த விட்டுடு வேறெதாவது மொக்க போட்ப்போவேன்.
விருப்பமிருந்தால், என் தளத்திலேயே எழுதலாம் (உங்க பேர்ல தான் வரும்)

Floraipuyal said...

என்னோட பேரு மணிவண்ணன். ஏற்கனவே மணி மணிவண்ணன்னு ஒருத்தர் கலிபோர்னியாவில இருந்து எழுதறாரு. அவரு வலையுலகத்தில ரொம்ப பிரபலம்கறதால அவர்னு நெனச்சி நெறய பேரு என்கிட்ட பேசத் தொடங்கிட்டாங்க. எதுக்கு வம்புனு நான் ஒரு புனைப்பெயர் வச்சிக்கிட்டேன்.

நேரம் கிடைக்கறது தான் பெரிய விசயம். ஏற்கனவே கொத்தனார் என்னை விக்கிப்பசங்க ல எழுத கூப்பிட்டு நான் இன்னும் எழுதாததால என் மேல கொலவெறியோட இருக்காரு. நீங்க எழுதுங்க. நான் அப்பப்போ நேரம் கிடைக்கும் போது வந்து ஒரு பின்னூட்டம் போட்டுக்கறேன்.

sriram said...

நன்றி மணி, எனக்கு lead கொடுத்தீங்கன்னா, (spoken english / resume / email etiquette) நான் எழுதறேன்.

வெட்டிப்பயல் said...

Good One...

sriram said...

Thanks Balaji (Vettipaiyal)
Post about email etiquette is coming tomorrow, hope you will come back and enjoy that one too

வெட்டிப்பயல் said...

//sriram said...
Thanks Balaji (Vettipaiyal)
Post about email etiquette is coming tomorrow, hope you will come back and enjoy that one too
//

Liked your ulkuthu :)

sriram said...

யப்பா பாலாஜி
அதில சத்தியமா உள்குத்து ஒண்ணும் இல்ல, நம்புப்பா...
அது சும்மா ஒரு வெளம்பரந்தேன்...

Porkodi (பொற்கொடி) said...

என்னவோ காறி துப்புறதுனு பாத்துட்டேன்.. அதான் ஆஜர்! :)

Porkodi (பொற்கொடி) said...

//Mr / Sir போன்ற மரியாதை விகுதிகள் மற்றவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் போது
உபயோகப் ப்டுத்த வேண்டியவை, நமக்கு நாமே திட்டத்தில் சேராது...//

எந்த உலகத்துல இருக்கீங்க பாஸூ.. நமக்கு நாமே மருவாதை குடுக்கலேன்னா எவன் குடுப்பான்னேன்? :))

Nice series!

வேற டாபிக்ல மொக்கை போடுறேன்னா என்ன அர்த்தம், இதுவும் மொக்கைனு சொல்ல வர்றீங்களா? ஏங்க மொக்கைன்னா என்னனு தெரியாதா உங்களுக்கு..? உங்களுக்கு "அழகா தமிழ் பேசலாம் போங்க"னு நான் ஒரு சீரிஸ் எழுத போறேன் ;-)

sriram said...

ஆகா என் நல்ல உள்ளமே, என்னே உங்க கருணை பொற்கொடி...
அடுத்தவங்களுக்கு (மெயினா எனக்கு) ஒரு கஷ்டம்னா என்னா சந்தோசஷம்...

sriram said...

Porkodi (பொற்கொடி) said...
எந்த உலகத்துல இருக்கீங்க பாஸூ.. நமக்கு நாமே மருவாதை குடுக்கலேன்னா எவன் குடுப்பான்னேன்? :))///

சரிங்க ஆபிசர்

''Nice series!'' டாங்ஸ்ஸு

''உங்களுக்கு "அழகா தமிழ் பேசலாம் போங்க"னு நான் ஒரு சீரிஸ் எழுத போறேன் ;-)''

அப்படியெல்லாம் நீங்க செஞ்சுடாம இருக்க (இந்த உலகத்த) நான் என்ன செய்யனும்முன்னு சொல்லுங்க செஞ்சிடறேன்..

Porkodi (பொற்கொடி) said...

இப்போ அம்பியை விட நீங்க தான் நிஜமாவே இம்சையை வருந்தி வருந்தி கூப்பிட்டு இருக்கீங்க.. :)

முன்னாடி போஸ்டுல தம்பினு என்னவோ சொல்லிருக்கீங்களே யாரு அது? நான் உங்களுக்கு எல்லாம் அடுத்த ஜெனரேஷன் தெரியும்ல... உங்களை விட 12 வயசு பயலாஜிக்கலாவும், 34 வயசு சைக்கலாஜிக்கலாவும் சின்னவ நானு.. டுபுக்கு அங்கிள் ப்லாக்ல என் கூட பாண்டி ஆடினீங்களேனு தான் சும்மா போறேன் இப்போ..

வேணும்னா குழந்தை, இல்லனா குட்டி பொண்ணு அதுவும் இல்லன கொடி இத்தோட நிப்பாட்டிக்குங்க.. ஆமா.

அப்புறம் கருணையின் திருவுருவமான நான் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான், நோ பாரபட்சம் :)))

sriram said...

சேச்சே உங்களப்போயி இம்சைன்னு சொல்வேனா நான். கேடின்னு சொல்றவங்களுக்கு ம்ட்டும்தான் நீங்க இம்சை..
என் வயசு உங்களுக்கு எப்படித்தெரியும்??
34 வயசு சைக்கலாஜிக்கலாவும் சின்னவ நானு.-- புதசெவி..
//வேணும்னா குழந்தை, இல்லனா குட்டி பொண்ணு அதுவும் இல்லன கொடி இத்தோட நிப்பாட்டிக்குங்க.. ஆமா.//
சொரிங்க சாரி செரிங்க ஆபிசர் மேடம்...
’’அப்புறம் கருணையின் திருவுருவமான நான் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான், நோ பாரபட்சம் :))//
சொன்னாங்க ஊர்ல...

Porkodi (பொற்கொடி) said...

neenga thaan unga profile la 35 nu solirkinga.. :)))) adhuve marandhu pochu na oru velai adhu 53a irukumo? :P adhan psychologically, ungalai vida 34 vayasu chinnaval nu sonnen.. ;)

sriram said...

பொற்கொடி
அவ்வ்வ்வ், வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல

Porkodi said...

freeya vidunga sriram.. arasiyal vazhkaila idhellam sagajam thane.. ;)

ambi said...

என்னால இப்படி எல்லாம் உருப்படியா எழுத முடியாதனால தான் மொக்கை போட்டுட்டு இருக்கேன். :))

(சந்தேகத்துடன்)என்னைய வெச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலையே? :p

ambi said...

//what did you do yesterday night? where are you going today evening?
//

இந்த ரெண்டு கேள்வியே போதும், சீட்டு டர்ர்ர்ர்னு கிழிஞ்சுரும். :))

ambi said...

//பொற்கொடி
அவ்வ்வ்வ், வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல//

இப்ப தெரியுதா ஸ்ரீராம், அந்த பொண்ணை ஏன் நான் கேடின்னு விளிக்கறேன்னு? (ஹிஹி ஓணம் எபஃக்டு) :))

ambi said...

ஹலோ பாஸ் என்ன இது கமண்ட் மாடுரேஷன் எல்லாம்?

பாஸ்டனுக்கு யாராவது அதுக்குள்ள ஆட்டோ அனுப்பிடாங்களா? :))

sriram said...

ஆமா பொற்கொடி, விழுப்புண்கள் தானே வீரனுக்கு அழகு..
all in the game..

sriram said...

வாங்க அம்பி
கண்டிப்பா உங்கள வச்சு கீமடி ஏதும் பண்ணலீங்க
உங்க அண்ணனை அந்த கேள்விகளை அவர் பாஸ் கிட்ட கேக்க சொல்லுங்க
நல்லா புரியுது - கேடி மேட்டர்
comment moderation : எல்லாம் ஒரு Safety க்குத்தான்.நானெல்லாம் உங்கள மாதிரி “பிரபல பதிவர்” இல்லன்னாலும்
Safe ஆ இருக்குறது நல்லதுதானே..

வால்பையன் said...

// I gave the test / interview yesterday: Interview, Test, Exam //

ஒருவேளை அது have ஆக இருக்குமோ!?

sriram said...

வால்பையன் said...
// I gave the test / interview yesterday: Interview, Test, Exam //

ஒருவேளை அது have ஆக இருக்குமோ!

இல்ல தல, I gave the test ன்னு நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன்

When it is high time said...

ரொமப நாளா நான் இந்தப்பக்கம் வரலே.

நீங்கள் எழுதியதைப்பார்த்தேன்.

//...who studied in Tamil Medium and studied English as my second language..//

நானுந்தான் தமிழ் மீடியம். நம்புவீங்களான்னு தெரியாது. எனக்கு, ஆங்கில alphabets சரியாகத்தெரியாம கல்லூரியில் முத்லாண்டு முதநானிலேயே வகுப்பறையில் அவமானப்படுத்தப்ப்ட்டேன். நம்ப்றீங்களா? ஆசிரியர் சொன்னார் தனியாக: ‘உன்னை அழவைக்க நான் கேட்கலப்பா...சும்மா வரிசையாகக்கேட்டுக்கொண்டே வந்தேன் நீ மாட்டிக்கிட்ட” நான் சின்னவூர். என்ன மாத்ரித்தான் முக்கால்வாசிப்பசங்க....எகனாமிக்ஸ்க்கு அல்லது ஹிஸ்டரிக்குப் போய்ரலாமா...அங்கே தமிழ்மீடியமும் உண்டு’ என நினைக்க, இன்னொரு ஆசிரியர் சொன்னார்: ‘நீ சயன்ஸ்...இங்கே கிராமர் பக்காவா பாக்கமாட்டாங்க..சமாளிச்சுக்கலாம்.’
சமாளித்தேன்.

//Eagerly waiting you to start a blog on this... can you please inform me at nsriram73@gmail.com once you do so?
தவறுகளை சுட்டிக்காட்டினால்//

கண்டிப்பாக. ஆனால் எனக்கும் ஆங்கிலம் தகராறுதான். Not confident fully.

I shall, however, tackle some of the errors our friends have made here, in their responses and also, a few in your main blog posts, but I will do it prefixed with a strong disclaimer namely, 'Please get it verified from a competent English teacher you know'.

எப்படியிருக்கு. அப்புறம், உங்கள் பாராட்டுகளுக்கு. தொடர்ந்து எழுதவும்.

Never mind what this fish or that fish says..!

சும்மா போக மனசில்லே. ஏதாவது tips சொல்லிட்டுப்போனாலென்ன?

சரி..ஒரு tips.

I have observed the word, 'however' used at the start of a sentence.

Take my own sentence above: "I shall, however,.....you know"

Notice I have used 'however' not at the start. but inside. Yes, careful users of English language prefer to use 'however' only inside the sentence, not at the start.

Try it. You will find many people like Sriram congradulating you on your command of English.

The use of 'however' does not come under grammar proper but under 'style'.

Also, you may have read a lot of 'how to use 'will' and 'shall'.

Take the same sentence of mine and observe how both 'shall' and 'will' have been used by me:
The 'shall' is just to indicate a simple future; and follows the grammar rule namely, First Person Singular gets attached with 'shall' to indicate simple future. No more sense is added there other than simple future.

The 'will' used in my sentence, indicates my strong will or determination, that is, I will use a disclaimer.

In the ultimate analysis, dear Sir, English should be 'felt' in order that you write with extreme clarity and effect.

In the sentence, I say, 'tackle'. Because, the verb is used to indicate I am not that much confident to be your English teacher.

“Myself unholy, from myself unholy,
To the sweet living of my friends I look;
Eye seeing doves bright counter to the rook.”


Thank you.

Disclaimer: I dont know North Amercian variety of English language. All that I have written here is based on my British English training. As someone has correctly pointed out, only that variety is taught at schools and colleges in India.