Thursday, August 13, 2009

வேரறுக்கப்பட வேண்டிய(வை)வர்கள்

கடந்த ஞாயிறு ஜெயா டி வி யில் ஒளிபரப்பான மக்கள் அரங்கம் நிகழ்ச்சியை பார்த்தேன்.
அதில் பேசிய இரண்டு பேர்களின் பேச்சைக் கேட்டு இவ்வளவு கேவலமாகக் கூட மக்களால் நடந்து கொள்ளக் கூடுமா என்று கொதித்தேன். சமூகம் மற்றும் ஒரு தனி மனிதரின் வக்கிரங்களால் எவ்வளவு இம்சிக்க முடியும் என்பதற்கு இவர்களுக்கு நடந்த கொடுமைகளே சாட்சி. ஜாதி மற்றும் லஞ்சம் என்று நான் வெறுக்கும், கடுமையாக எதிர்க்கும், வேரறுக்க நினைக்கும் விஷயஙகளைப் பற்றி கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது, என்னால் இதற்கு எதுவும் செய்ய் முடியவில்லை என்று நினைக்கும் போது, வெட்கம் பிடுங்கித் தின்கிறது.
1)அ.இராஜ மாணிக்கம் திருச்சி மாவட்டத்தின் ஒரு கடை கோடி கிராமத்தை சேர்ந்தவர், MA,M.Phil, B.ED என்று தன் பெயருக்குப்பின்னால் ABCD யை குலுக்கிப் போட்டு வைத்திருப்பவர். இவர் அண்ணன் ஒரு BSC பட்டதாரி. இவர்களைத் தவிர அந்த கிராமத்தில் ஒரே ஒருவர் தான் பட்டதாரி.இருந்ந்தாலும் இவருக்கும் இவர் குடும்பத்தினரையும் கிராமத்தில் யாரும் மரியாதையாக நடத்துவது கிடையாது. காரணம் என்ன தெரியுமா? இராஜ மாணிக்கத்தின் தந்தை ஒரு வெட்டியான். இவர்களின் ஜாதியை காரணம் காட்டி இவர்களை இன்னும் கீழ்த்தரமாகவே நடத்துவதாக சொல்கிறார். இந்த கிராமத்தில் இன்னும் இரட்டை குவளை முறை இருப்பதாகவும் சொல்கிறார். ஊரிலேயே மிக அதிகம் படித்த இவரை மதிக்காமல் தாங்கள் படிக்காமலே பெற்ற பட்டங்களை (ஜாதி)பெயருக்கு பின்னால் அலையுதுங்க இந்த ஊர் மாக்கள்.

2)அடுத்து பேசியவர் துறையூரை சேர்ந்த விவசாய குடும்பத்து சரண்யா என்ற பெண். பணமில்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தியவர்.விவசாயிகளுக்கான அடையாளஅட்டை கிடைத்தால் படிப்பதற்க்கு சலுகைகள் கிடைக்கும் என்று கேள்விப் பட்டு, தாசில்தாரிடம் சென்று கேட்டிருக்கிறார். அப்போது அந்த தாசில்தார், இந்த பெண்ணுக்குஒரு லட்ச ரூபாய் கிடைக்க வழி சொல்லி இருக்கிறார். சரண்யாவின் தந்தை விபத்தில் இறந்ததால் குடும்பத்திற்கு 1 லட்சம் கிடைக்கும் என்றும் அதற்கு தனக்கு 50,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்க,சரண்யா அதற்கும் சம்மதித்து, பணம் வரும் போது கழித்துக்கொள்ளுங்கள் என்றிருக்கிறார்.அந்த தாசில்தாரோ பணம் முன்னமே வேண்டும் என கூறி உள்ளார். சரண்யாவும் அவரது குடும்பத்தாரும் முட்டி மோதிப் பார்த்து விட்டு, கலெக்டர், முதலமைச்சர் என்று பலரிடமும் Escalate செய்தும் பலன் பூஜ்யம். 2 கலெக்டர்கள் போட்ட ஆணைகளையும் அவர் மதிக்க வில்லை. இதுக்கெல்லாம் சிகரம் வச்சா மாதிரி ஒரு விஷயம்- சரண்யா அவரிடம் மீண்டும் சென்று தன் நிலைமையை விளக்கி இருக்கிறார். அதற்கு அந்த ராட்சசி, உனக்கு படிக்கனும்னா “தொழில்” செய்து படிச்சிக்கோ என்று வழி காட்டியுள்ளார். அந்தப் பெண் பாவம், நானாயிருந்தால் நீயும் “தொழில்” செஞ்சுத்தான் படிச்சு வேலைக்கு வந்தியான்னு கேட்டிருப்பேன்.
இந்த மாதிரி ஜாதி வெறி பிடித்து,லஞ்சப்பித்து பிடித்து அலையும் நாய்களைக் கண்டால் கொதிக்குது. இதுங்க போகும் போது என்னத்த கொண்டு போகப் போகுதுங்க...வாழும் போது 4 பேருக்கு நல்லது செய்யலேன்னாலும், கெடுதல் செய்யாம இருக்கலாம் இல்ல....
நான் ’இந்நாட்டின் பிரதமரானால்’ ன்னு கட்டுரை எழுத விரும்பவில்லை. ஆனால்,எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் இந்த மாதிரி ஈனப்பிறவிகளிக்கு மிக அதிகமானதண்டனை தர வழி செய்வேன்.
நான் இன்னும் “இந்தியன்” என்பதில் பெருமையுடன் இருக்கிறேன், இந்த நாதாரிகள் அதுக்கு வேட்டு வச்சிரும் போலருக்கு...
இங்க ஒரு விஷயததை சொல்லியே ஆகணும், Visu Educational Trust இந்தப் பெண்ணுக்கு இருபதாயிரம் கொடுத்து படிப்பை தொடர உதவி உள்ளது.விசுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
BTW, H1B Visa பத்தின முதல் பதிவை நாளை போட முயற்சிக்கிறேன்.

15 comments:

Jackiesekar said...

உண்மை ஸ்ரீஇது தமிழகத்தில் பரவலாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.. இப்போதெல்லாம் சில மக்கள் வெறுத்து போய் லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் தகவல் சொல்லி பழிக்கு பழி வாங்கி விடுகின்றார்கள்...

இப்படி காசு வாங்கும் நாய்களை, பின்பக்கத்தில் துணி இலலாமல் மலேசிய கசையடி கொடுக்கவேண்டும்

அன்புடன்
ஜாக்கி

Raju said...

நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.
விசுவை எவ்வள‌வு பாராட்டினாலும் தகும்.

sriram said...

நீ சொல்வது உண்மைதான் ஜாக்கி, ஆனால் கிராமத்து மக்களுக்கு இந்த விஷயத்தில் விழிப்புணர்வு கொஞ்சம் கம்மிதான்.

sriram said...

ஆமாம் டக்லஸ், விசு கண்டிப்பாக பாராட்டுக்கு உரியவர் தான்.

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

tharman said...

in tamilnadu - telunku karnadaka keralian are more than thamil people so the vakkirapuththi they use against poor thamils i saw when i visit south india.

sriram said...

வாங்க தர்மன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீங்க சொல்வது உண்மையா இருக்கலாம், அது பற்றி எனக்கு தெரியாது, நான் சொல்ல வந்தது, சாதி மற்றும் லஞ்சம் ஒழிய வேண்டும் என்பதே

சீமாச்சு.. said...

ஸ்ரீராம்,
எழுத ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் !!

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !!!

sriram said...

வாங்க சீமாச்சு ஐயா..
உங்க முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
வழக்கம் போல “நீ”ன்னே சொல்லாம, அது என்ன “ங்க”

வெட்டிப்பயல் said...

கருவிப்பட்டை வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி போல... சூப்பர் :)

sriram said...

ஆமா தல, சூப்பரா வேல செய்யுது,
இதே மாதிரி ஒவ்வொண்ணா சொல்லிக் கொடுத்து, சீக்கிரமா என்னையும் உங்கள மாதிரி “பிரபல” பதிவரா மாத்திடுங்க.

Cable சங்கர் said...

/இதே மாதிரி ஒவ்வொண்ணா சொல்லிக் கொடுத்து, சீக்கிரமா என்னையும் உங்கள மாதிரி “பிரபல” பதிவரா மாத்திடுங்க.
//

அதுசரி.. உங்களுக்கும் அந்த இம்சை ஆரம்பிச்சிருச்சா..:)

கேரளாவில் தமிழர்களை முக்கியமாக சுற்றுலா பயணிகளை மிக கேவலமாய் நடத்துகிறார்கள். அங்குள்ள செக் போஸ்ட் அதிகாரிகள். இது நான் கண்கூடாக பார்த்த உண்மை.

ஜாதி பிரச்சனை என்பது.. தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் வட மாநிலங்களில் இது மிகவும் அதிகம். என்று கேள்விபட்டிருக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

நீங்க கூறிய ஜெயா டிவி நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்.

ரொம்ப கொடுமையானது அந்த தாசில்தார் கூறிய வார்த்தைகள்தான். ஒரு பெண்ணே ஒரு பெண்ணைப் பார்த்து இவ்வளவு கொடுமையாக கூறியது மன்னிக்க முடியாத குற்றம்.

ஜாதி கொடுமை இன்னும் எவ்வளவு காலத்திற்கு நடக்கும் என்று புரியவில்லை.

விசு ட்ரஸ்ட் மூலம் அந்த பெண்ணிற்கு பணம் கொடுத்ததற்கு, விசுவிற்கு எனது வணக்கங்கள்.

sriram said...

வாங்க ராகவன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இந்த ஜன்மங்களை என்ன செய்தால் தகும்? இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பற்றி கேக்கும் போது, பத்திக்கிட்டு வருது.

Dubukku said...

ஹூம் நான் சொல்ல வந்ததை மேலே எல்லாரும் அல்ரெடி சொல்லிவிட்டார்கள். இந்த மாதிரி அராஜகம் பண்ணுறவங்களுக்கு கசையடி தான் குடுக்கனும்.

sriram said...

அப்படியே செஞ்சிடலாம் டுபுக்காரே, நாமெல்லாம் புலம்ப மட்டும் தான் லாயக்கு, வேறு எதுவும் செய்ய மாட்டோம்